வவுனியாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று (20.01.2017) மாலை 4 மணியளயவில் ஒன்றிணைந்த இளைஞர்கள் தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா மாவட்ட இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகர் சந்திரகுலசிங்கம் மோகன், சிறீ ரெலோ கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் கார்த்திக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மாட்டு இனங்களைப் பாதுகாப்போம், தடை அதை உடை, ஜல்லிக்கட்டு நம் இனத்தின் அடையாளம், காப்போம் காப்போம் மாட்டைப்பாதுகாப்போம், தமிழகத்திற்காக ஈழம் ஈழத்திற்காக தமிழகம், போன்ற வாசகங்களுடன் கோசங்களை எழுப்பியவாறு பெருமளவான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

நூற்றுக்கு மேற்ப்பட்ட இளைஞர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவுக்கான நெடுந்தாரகை புதிய படகு சேவைகள் ஆரம்பம்!(படங்கள்)

நெடுந்தாரகை புதிய படகுச் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டது. பயணிகள் நன்றி தெரிவிப்பு.

யாழ்.நெடுந்தீவுக்கான நெடுந்தாரகை படகுச்சேவை இன்றுமுதல் குறிகாட்டுவானிலிருந்து மாகாண சபைகள் மற்றும்உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிதிப் பங்களிப்பில் நெல்சிப் திட்டத்தின் கீழ் 150 மில்லியன் ரூபா செலவில் இந்த நெடுந்தாரகை படகு உருவாக்கப்பட்டுள்ளது. 80 பயணிகள் பயணிக்கக்கூடிய போதிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது இதற்கான இயந்திரமும் இந்தி யாவில் இருந்து தருவிக்கப்பட்டு குறித்த படகினில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரம செயலாளர் பத்திநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைசி கட்சிசன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் , வடக்குமாகாண சபை உறுப்பினர்களான பரஞ்சோதி, விந்தன் கனகரத்தினம், மற்றும் கடற்படை அதிகாரிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப் புதிக கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுவது நெடுந்தீவு மற்றும் குறிகாட்டுவான் மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கமைய இச்சேவை, பூர்த்தி செய்யப்பட்டமை அம் மக்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

   nedu

உடல் பருமனால் இப்படி ஒரு ஆபத்து உள்ளதா?


ஆண் மற்றும் பெண், ஆகிய இருபாலருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை தான் அதிகப்படியான உடல் பருமன்.ஒருவர் தங்களின் உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை வைத்து இல்லாமல் அதற்கு அதிகமான உடல் எடையுடன் இருந்தால், அதை உடல் பருமன் என்று கூறுவார்கள்.ஆனால் இப்படி அதிக உடல் எடை வைத்திருந்தால், நமக்கு பலவித நோய்களின் தாக்கம் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?

உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள்

நமது அன்றாட உணவு பழக்க வழக்கத்தில் கொழுப்பு மற்றும் அதிக சர்க்கரை நிறைந்த கார்போஹைட்ரேட் போன்ற உணவு வகைகள் மற்றும் குறைந்த உடல் உழைப்பு, தைராய்டு சுரப்பி பிரச்சினை, ஜீன் மற்றும் ஹார்மோன் குறைபாடு போன்ற காரணங்களினால் தான் நமக்கு அதிக உடல் பருமன் ஏற்படுகிறது.
நமது உடம்பில் இருக்கும் பாங்கிரியாஸ் என்ற இன்சுலின் கணையத்தில் இருந்து சுரக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த இன்சுலின் எதிர்ப்பு நிலையில் உடலில் உள்ள திசுக்கள் இன்சுலினை பயன்படுத்தாமல், ரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலினை அதிகரிக்கச் செய்வதால் நமது உடம்பில் கொழுப்புகள் அதிகமாகி ஊளைச் சதையை ஏற்படுத்துகிறது.நமக்கு ஏற்படும் அதிகப்படியான உடல் எடையானது, நம்முடைய வயது, மரபணு, மனஅழுத்தம், உடற்பயிற்சியின்மை போன்றவையும், சில குடும்ப வம்சங்களின் மரபணுக்கள் காரணமாக அதிக உடல் எடை அதிகரிக்கிறது.
உடல் பருமன் பிரச்சனையால் ஏற்படும் நோய்கள்

நமக்கு அதிகப்படியான உடல் எடை அதிகரித்து விட்டால், ரத்த அழுத்தம், இதயம் படபடப்பு, கல்லீரல் பாதிப்பு, பித்த குறைபாடு, நீரிழிவு, மூட்டு வலி, மனச்சிதைவு, சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவை உடல் பருமனால் ஏற்படும்.

இதுவே பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினை, மார்பக புற்றுநோய், இடுப்பு, கை, கால், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

எடையைக் குறைக்கும் கை மருந்துகள்

முருங்கை இலைச் சாற்றை தினமும் இரண்டு வேளைகள் 2 டீஸ்பூன் அளவு குடிக்கலாம். மேலும் துளசி இலைச் சாற்றைச் சூடாக்கி, அதனுடன் சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.

தினமும் நமது உணவில் அடிக்கடி புடலங்காயைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இலந்தை மரத்தின் இலையைத் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை அந்தத் தண்ணீரைக் குடித்து வர வேண்டும்.
சிறிதளவு கொள்ளைச் சுத்தம் செய்து தினமும் அதை ரசம் வைத்து, அதனுடன் கல் உப்பை சேர்த்து கலந்து ஒரு நாளைக்கு 3 வேளைகள் குடித்து வர வேண்டும்.
ஓமத்தை நன்கு வறுத்துப் பொடி செய்து, அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட எளிதில் உடல் எடை குறையும். மேலும் அவரை இலையை உலர்த்தி இடித்துத் தூளாக்கித் தேனில் குழைத்துத் தினமும் சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
கல்யாண முருங்கை பொடியைத் தினமும் காலையில் உணவுக்குப் பின் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்கும். மேலும் சிறிதளவு மோர், கேரட் ஆகியவற்றை அரைத்துத் தினமும் குடித்து வரலாம்.
வாழைத் தண்டுசாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு ஆகிய மூன்றில், ஏதாவது ஒன்றைக் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறையும்.

பிறப்பால் இல்லாவிடடாலும் உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் தமிழச்சி தான்- நயன்தாரா!!

நாளுக்கு நாள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கான அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. மதுரை அலங்காநல்லுரிலும், சென்னை மெரினா கடற்கரையிலும் இளைஞர்களின் கூட்டம் தன்னெழுச்சியாக அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இந்நிலையில் தமிழர்களின் கலாச்சார மற்றும் பண்பாட்டு அடையாளங்களை மீட்பதற்காக நடைபெற்றும் இந்த தலைமையில்லாத வித்தியாசமான போராட்டத்திற்கு திரையுலகினரும் தங்களின் ஆதரவை அளித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து முன்னணி நடிகையான நயன்தாராவும் இதற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்தஅறிக்கையில்,‘இளைய தலைமுறையின் பலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு விட்டது. கடந்த சில நாட்களாக தமிழகம் கண்டு வரும் எழுச்சி, வரலாற்றில் இல்லாதது என்று சொல்லலாம். இந்த தருணத்தில் பிறப்பால் இல்லாவிட்டாலும், உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் இந்த மாநிலத்தை சேர்ந்தவள் என்னும் பெருமை என்னை தலைநிமிர வைக்கிறது. இளைய தலைமுறையின் இந்த போராட்டம் அமைதியான முறையிலே நடப்பது நம்மை பெருமைப்பட வைக்கிறது.

நான் தமிழ்நாட்டில் பிறந்திருக்காவிட்டாலும் எனக்கு ஒரு அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் பெற்று தந்தது இந்த தமிழ் மண்ணும், தமிழ் மக்களும்தான். இந்த உணர்ச்சிகரமான போராட்டத்தில் அவர்களோடு நான் உறுதுணையாக நிற்பேன் என்பதை உறுதியாக சொல்லி கொள்கிறேன். அவர்களுடன் என்னுடைய குரலும் இணைந்து நம் கலாச்சாரத்துக்கு எதிரான அந்த அந்நிய நாட்டு நிறுவனத்துக்கு நம் பலத்தை காட்டும் என நம்புகிறேன்.

அவர்களின் பொய்யான வாதத்தை உண்மை என்று நம்பிய நமது நீதி மற்றும் அரசு துறைகளுக்கும் நம் குரல் கேட்கும் என நம்புகிறேன். ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் எடுத்து இருக்கும் இந்த உணர்ச்சிகரமான நடவடிக்கை நிச்சயமாக தமிழக கலாச்சாரத்தின் பெருமையை உலகமெங்கும் ஒலிக்க செய்யும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எத்தனை தடைகள் வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொண்டு, தங்களின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று தொடர்ந்து இந்த இளைஞர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஒரு சராசரி குடிமகளாக நான் அவர்களின் ஒற்றுமைக்கும், தைரியத்திற்கும் தலை வணங்குகிறேன். இவர்களின் இந்த முயற்சி, தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டை, எந்தவித காலதாமதமும் இன்றி மீண்டும் தமிழகத்தில் நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. நாடெங்கும் ஜல்லிக்கட்டு முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம்.’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

23 வருடங்களின் பின் தந்தையைக்கண்ட இன்ப அதிர்ச்சியில் இளைஞன் பலி!!

ஆயுள் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளிவந்த தன் தந்தையை இருபத்து மூன்று ஆண்டுகளின் பின் கண்ட இன்ப அதிர்ச்சியில் இளைஞர் ஒருவர் மரணமானார்.கொலை ஒன்றுடன் தொடர்புடையது நிரூபிக்கப்பட்டதையடுத்து 1996ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஹசன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருடைய மகன் சஜித்துக்கு ஒரு வயது.

தண்டனைக் காலத்தில் ஒருபோதும் பிணையில் வெளிவரவோ, குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கவோ ஹசன் முயற்சிக்கவில்லை. தொலைபேசி மூலமே குடும்பத்தினரின் சுகத்தை விசாரித்து வந்தார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் 17ஆம் தேதி அவர் விடுதலையானார். அவரை வரவேற்பதற்காக சிறைச்சாலையின் வெளியே அவரது உறவினர்கள் காத்திருந்தனர். ஹசன் அவர்கள் அருகே சென்று கட்டியணைத்துத் தனது அன்பை வெளிப்படுத்தினார்.

தன் தந்தையைக் கண்ட உற்சாக மிகுதியில் இருந்த சஜித், திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே சரிந்தார். இதைக் கண்ட ஹசன் மற்றும் அவரது உறவினர்கள் உடனடியாக சஜித்தை அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். எனினும், அதீத சந்தோஷத்தால் ஏற்பட்ட மாரடைப்பினால் சஜித் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

23 ஆண்டு காலம் பிரிந்திருந்த தன் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழக் கற்பனை செய்திருந்த ஹசன் இதனால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார்.தந்தையின் விடுதலைக்குப் பின் திருமணம் செய்துகொள்ள சஜித் எண்ணியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நீர்த்தேக்கத்திற்குள் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புத்தர் சிலை!!

சீனாவில், நீர்த்தேக்கம் ஒன்றைச் சீரமைக்கும் பணியின்போது 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புத்தர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அந்த நீர்த் தேக்கத்துக்கு பாரிய மின் கதவு ஒன்றைப் பொருத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக நீர்த்தேக்கத்தின் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டது.

முதற்கட்டமாக அங்கிருந்த நீரில் பத்து மீற்றர் அளவு குறைக்கப்பட்டது. நீரின் அளவு குறையக் குறைய புத்தர் சிலையொன்றின் தலைப்பகுதி தெரியத் தொடங்கியது. இதைக் கண்ட ஒரு கிராமவாசி அது குறித்து அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினார். இதையடுத்து அந்த நீர்த்தேக்கத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி நடத்தினர். அதில், இந்த புத்தர் சிலையுடன், கோவில் ஒன்றின் தளப் பகுதியையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த புத்தர் சிலை சுமார் பன்னிரண்டடி உயரம் கொண்டது. நீர்த்தேக்கம் அமைந்துள்ள பாறையின் உட்புறமாக, பாறையைக் குடைந்து இந்தச் சிலை செதுக்கப்பட்டுள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள இந்த புத்தர் சிலையானது சீனாவை ஆண்ட ‘மிங்’ வம்சத்தவர்களது காலப்பகுதியில் – அதாவது, கி.பி.1368-1644 காலப்பகுதியில் – வடிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அடியில் கோயில் தளம் ஒன்றும் காணப்படுவதால், அக்காலப் பகுதியில் இது ஒரு வழிபாட்டுத் தலமாக விளங்கியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.சீனாவில், நீருக்கு அடியில் இருந்து தோன்றியுள்ள இந்த புத்தர் சிலை தமது நாட்டுக்கு ஒரு நல்ல அறிகுறியாக இருப்பதாக அந்நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இந்த நீர்த்தேக்கத்துக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து போக ஆரம்பித்துள்ளனர்.

இளைஞனை கத்தி முனையில் அச்சுறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய யுவதி கைது !!

19 வயது இளை­ஞனை கத்தி முனையில் அச்­சு­றுத்தி பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் 17 வயது யுவ­தி­யொ­ருவர் கைது­செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்க மிக்­சிக்கன் மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

சகினாவ் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த லெஸ்­ரினா மேரி ஸ்மித் என்ற மேற்­படி பெண், தனி­யாக சென்று கொண்­டி­ருந்த குறிப்­பிட்ட 19 வயது இளை­ஞனை கத்தி முனையில் தடுத்து நிறுத்தி அவனை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.அவர் மீதான குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­படும் பட்­சத்தில் அவர் ஆயுள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தெற்கை ஆட்டிப்படைத்த கொலைக் கும்பல் சிக்கியது. ஐவருக்கு விளக்கமறியல். ஒருவர் தடுப்புக்காவலில்!!

அண்மையில் தெற்கை உலுக்கும் விதமாக அம்பலாங்கொடை மற்றும் மீட்டியாகொட பகுதிகளில் இடம்பெற்று வந்த தொடர் மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் 6 பிரதான சந்தேகநபர்களை அம்பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். எல்பிட்டிய தீர்க்கப்படாத குற்றம் தொடர்பிலான விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளின் அடிப்படையிலேயே அப்பிரிவுக்கு உட்பட்ட அம்பலாங்கொடை பொலிஸ் குழுவினரால் இந்த திட்டமிட்ட கொலைக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இவர்களைக் கைதுசெய்ததாகவும் அவர்களிட மிருந்து கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரீ 56 ரக துப்பாக்கி உள்ளிட்ட மூன்று துப்பாக்கிகளும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களையும் கொலைக்கு பயன்படுத் தப்பட்டதாக நம்பப்படும் கார் ஒன்றையும் கைப்பற்றியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் களனி, மீட்டியாகொட மற்றும் ஹிக்கடுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களில் ஐவர் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் 48 மணி நேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2016.12. 05 ஆம் திகதி அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இடம்தொட்ட பகுதியில் வைத்து இளம் தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் அவர்களது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அதே குடும்பத்தின் தூரத்து சொந்தம் என கருதப்படும் பழ வர்த்தகர் ஒருவர் 2016.12.12 அன்று மீட்டியாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அந் நகரத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

இக்கொலைகள் தொடர்பில் பல்வேறு மட்ட விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கீழ் எல்பிட்டிய தீர்க்கப்படாத குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். இதன் காரணமாகவே சந்தேகநபர்கள் அறுவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து ரீ 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்ப டுத்தப்படும் தோட்டாக்கள் ஆறும் மீட்கப்பட்டுள்ளன. இதனைவிட மைக்ரோ ரக கைத்துப்பாக்கியும் அதற்கு பயன்படுத்தப்படும் ஒரு தோட்டாவும் ரிவோல்வர் ஒன்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 5 தோட்டாக்களும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந் நிலையிலேயே கைதான அறுவரும் நேற்று பலப்பிட்டி நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போதே ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் ஒருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெ டுத்துள்ளனர்.

ஜேர்மனியில் அறிமுகமான பேஸ்புக்கின் Fake News tool!!


சமூக வலைத்தளங்களின் வரிசையில் அசைக்க முடியாத அளவிற்கு முதலிடத்தில் திகழும் பேஸ்புக் ஆனது சமீப காலமாக பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றது.இதில் பாதகமான விடயங்கள் தொடர்பில் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

இதன்படி பொய்யாக பரப்பப்படும் செய்திகள் அல்லது தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கை செய்யக்கூடிய அல்லது ரிப்போர்ட் செய்யும் டூல் ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது.இந்த டூல் ஆனது முதன் முறையாக அமெரிக்காவில் மட்டுமே அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

காரணம், அங்கு இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தலின் போது பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன.எதிர்காலத்தில் இவ்வாறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் பேஸ்புக் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஜேர்மனியிலும் குறித்த டூலினை அறிமுகம் செய்துள்ளது.இதன்படி அமெரிக்காவிற்கு வெளியே முதன் முறையாக Fake News Tool அறிமுகம் செய்யப்படும் நாடாக ஜேர்மனி இடம்பிடித்துள்ளது.கடந்த டிசம்பர் மாதம் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த இந்த டூல் விரைவில் ஏனைய நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய வசதிகளுடன் புத்தெழுச்சி பெற தயாராகும் கூகுள் பிளஸ்!!


கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட சமூகவலைத்தளமான கூகுள் பிளஸினை பல மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.பேஸ்புக் வலைத்தளத்திற்கு போட்டியாக கூகுள் பிளஸிலும் பல்வேறு சிறப்பம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இப்படியிருக்கையில் விரைவில் புதிய வசதிகளுடனான பதிப்பு ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இப் புதிய பதிப்பில் வெவ்வேறுபட்ட திரைகளுக்கு ஏற்றவாறு ஒத்திசைவாக்கம் செய்யக்கூடிய வசதி, தரம் குறைவான கருத்துரைகளை (Comments) மறைக்கும் வசதி உட்பட மேலும் சில வசதிகள் புதிதாக தரப்படவுள்ளன.இவ் வசதிகள் உள்ளடங்கிய புதிய பதிப்பானது இம்மாதம் 24ம் திகதி முதல் பயன்பாட்டிற்கு வரும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய அஜித்!!

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான் இப்போது உள்ள கலைஞர்களுக்கு. இந்நிலையில் நடிகர் சங்கம் சார்பில் நடிகர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் இணைந்து நடிகர் சங்க போராட்டக் களத்திற்கு வந்துள்ளார்.

நிச்சயம் வெல்வோம்! மேத்யூஸ் நம்பிக்கை!!


இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.குறித்த போட்டிசென்சுரியனில் இன்று இரவு இலங்கை நேரப்படி 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி தென்னாபிரிக்கா அணியுடன், அந்நாட்டில் வைத்து இருபதுக்கு இருபது போட்டியொன்றில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.இந்த டி20 போட்டியில் பல புதிய முகங்களை எதிர்நோக்கவுள்ளோம், தென்னாப்பிரிக்காவுடனான இந்த போட்டியில் நாம் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையுள்ளது.

தென் தென்னாப்பிரிக்காவுடன் வெற்றிபெற பல புதிய வழிமுறைகளை கையான வேண்டியுள்ளது என இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலா மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இரு அணிகளும் மோதிக் கொண்ட 6 இருபதுக்கு இருபது போட்டிகளில் 4 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியும் , 2 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளது.இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 இற்கு 0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் வெடிக்காத நிலையில் இரண்டாம் உலகப் போர் குண்டு: அவசரமாக மூடப்பட்ட பாலங்கள்.. அச்சத்தில் மக்கள்!!


பிரித்தானியாவின் வாட்டேர்லோ மற்றும் வெஸ்ட் மினிஸ்டர் என இரண்டு முக்கிய பாலங்கள் திடீரென்று பொலிசாரால் மூடப்பட்டுள்ளது.பிரித்தானியாவின் மிகவும் பரபரப்பாக மற்றும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக காணப்படும் Waterloo மற்றும் Westminster பாலங்கள் திடீரென்று பொலிசாரால் மூடப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற பெரும்பாலான பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினர்.

அதன் வழியாக வந்த அனைத்து வாகனங்கள் சிறப்பு பாதைகள் வழியாக திருப்பி விடப்பட்டன.இது குறித்து பொலிசார் தரப்பில் கூறுகையில், இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், வெடிகுண்டு வெடிக்காமல் இந்த நதியில் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், அதன் காரணமாகவே இது போன்ற முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு பாலங்களும் இன்னும் 3 மணி நேரத்திற்கு திறக்கப்பட்டுவிடும் எனவும், மக்களின் பாதுகாப்புக்காவே இது போன்று மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு பாலங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்திவருவதாக கூறப்படுகிறது. பிரித்தானியாவில் நாசி ஜேர்மனியின் போர் காலங்களில் ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதலின் போது, தாக்கப்பட்ட வெடிகுண்டுகள் இன்னும் வெடிக்காத நிலையில் அந்நாட்டில் சில இடங்களில் இன்றளவும் கூட கண்டெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து பிரித்தானிய மக்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில், Waterloo பாலத்தில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு இன்னும் வெடிக்காத நிலையில் உள்ளதாகவும், அதை 72 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்துள்ளதாகவும் பதிவேற்றம் செய்துள்ளனர்.இதை பற்றி மக்கள் யாரும் கவலைப்படத்தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.மேலும் பாலம் மூடப்பட்டது பெரிதும் கஷ்டமாக இருப்பதாகவும், போக்குவரத்தால் பிரித்தானியா ஸ்தம்பித்து போகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளன.

பள்ளிக்கூட வகுப்பறையில் இளம் ஆசிரியை உட்பட 4 பேரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்! வீபரீத காரணம்!!


மெக்சிகோ நாட்டின் Monterrey நகரில் ஒரு புகழ்பெற்ற பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. எப்போதும் போல நேற்றும் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தது.அப்போது வகுப்பறையில் இருந்த மாணவன் Federico Guevara (15) தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சராமரியாக சுட்டுள்ளான்.

இதில் வகுப்பாசிரியை உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் அவர்கள் மயங்கி கீழே விழுந்தனர்.மற்ற மாணவர்கள் வகுப்பறையிலிருந்த பெஞ்சுக்கு அடியில் ஒளிந்து கொண்டனர். சிலர் வெளியில் தப்பித்து ஓடினார்கள்.

பின்னர் மாணவன் Federico தன் கையிலிருந்த துப்பாக்கியால் தன்னையே சுட்டு கொண்டு கீழே இரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளான்.பின்னர் அங்கு வந்த பொலிசார் எல்லோரையும் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.இது குறித்து பொலிசார் கூறுகையில், தன்னையே சுட்டு கொண்ட மாணவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளான். மற்றவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Federico என்னும் இந்த மாணவனுக்கு மனநல கோளாறு இருந்துள்ளது. அதற்காக அவன் மருத்துவ சிகிச்சையில் இருந்துள்ளான்.துப்பாக்கி அவனுக்கு எப்படி கிடைத்தது மற்றும் இந்த கொலை வெறி தாக்குதலுக்கு வேறு எதாவது காரணமா என விசாரித்து வருகிறோம் என பொலிசார் கூறியுள்ளார்கள்.

அமரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்கிறார் டொனால்ட் டிரம்ப்!!

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப்பை ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக வரவேற்றனர். பதவியேற்பு விழாவை முன்னிட்டு , டிரம்ப் நேற்று இரவு தனது குடும்பத்தாருடன் நேற்று வெள்ளை மாளிகையின் அருகே உள்ள ஃப்ளேர் ஹவுஸில் தங்கினார். அதற்கிடையில் அவர் நேற்று லிங்கன் மெமோரியல் ஹாலில் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக வரவேற்றனர். இதில் இசை நிகழ்ச்சிகள், திரைப்பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் டிரம்ப் குடும்பத்தார் கலந்து கொண்டனர். ஆனால் அவர் மகன் Barron இதில் கலந்து கொள்ள வில்லை என கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் போது பேசிய டிரம்ப், இந்த தருணத்தில் தனது மனைவி Melania விக்கு நன்றி சொல்வதற்கு கடமை பட்டுள்ளதாகவும், அவர் ஒரு கடவுள் என்றும் புகழ்ந்து தள்ளினார்.

இதனால் அரங்கே கலைகட்டியது. அதன் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு புனித ஜான் எபிஸ்கோயல் தேவாலயத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் டொனால்ட் டிரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சரவையில் இடம்பெறுவோர் பங்கேற்கிறார்கள்.

டிரம்ப் – ஒபாமாபின்னர் காலை 9.30 மணிக்கு வெள்ளைமாளிகையின் தெற்கு போர்டிகோவில் டிரம்ப் உள்ளிட்டோருக்கு, அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி ஆகியோர் சிறப்பு தேநீர் விருந்தளிக்கிறார்கள்.இதைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் டிரம்ப், துணை அதிபராக பொறுப்பேற்கும் பென்ஸ் ஆகியோரை ஒபாமா, விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்வார். அமெரிக்க நேரப்படி காலை 11 மணியளவில் பதவியேற்வு விழா தொடங்கும்.

சரியாக நண்பகல் வாக்கில் அதிபராக டிரம்ப், துணை அதிபராக பென்ஸ் மற்றும் அமைச்சர்கள் பைபிள் மீது ஆணையிட்டு, பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க காங்கிரஸ் குழு உறுப்பினர்களுடன் டிரம்ப் மதிய உணவு விருந்தில் பங்கேற்பார். பின்னர் அதிபராக முதல் உரை நிகழ்த்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க ஸ்டாலின் திடீர் கைது!!


தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்த போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும், திரைதுறையினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று ரயில் மறிப்பு போராட்டம் நடத்தும் என அறிவித்திருந்தது.

அதன்படி திமுக வின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் தமிழகமெங்கும் அந்த கட்சியினர் ரயில் நிலையங்களில் ரயில் மறிப்பு போராட்டத்தில் தற்போது ஈடுப்பட்டு வருகிறார்கள்.அதன்ப்படி திமுகவின் செயல் தலைவரும், தமிழகத்தின் எதிர்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட அவரையும், அவருடன் இருந்த ஏராளமான தி.மு.கவினரையும் பொலிசார் தற்போது கைது செய்துள்ளார்கள்.