ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாக பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு பொதுமக்கள், பாடசாலை மாணவர்களின் நலன் கருதி வவுனியா கிடாச்சூரிக்கான இ.போ. ச. போக்குவரத்துச் சேவையினை பெற்றுத்தருமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு அப்பகுதி மக்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நேற்று (09.01.2017) பிற்பகல் 1 மணியளவில் வவுனியா கிடாச்சூரி சேவையினை உத்தியோக பூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹன புஸ்பகுமாரவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இ.போ.ச சாலையினால் ஒரு நாளைக்கு மூன்று சேவையினை வவுனியா கிடாச்சூரிக்கு வழங்க உள்ளதாக சாலை முகாமையாளர் டி.எம்.எஸ்.சொய்சா தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், இ.போ. ச சாலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
தற்போது வவுனியா கிடாச்சூரிக்கான சேவையினை தனியார் பேரூந்துக்களே மேற்கொண்டு வருகின்றதுடன் அதில் பெருமளவானவர்கள் பேரூந்திற்கு வெளியேயும் மேலேயும் இருந்து பயணம் செல்வதையும் படத்தில் காணலாம்.
அண்மையில் வெளியான கல்வி பொதுத்தர உயர்தர பரீட்சையில், கண் பார்வையில் கோளாறு உள்ள மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
காலி மாவட்டத்தில் கலை பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய தனுஷி மல்லிகாராச்சி என்ற மாணவி முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.
குறித்த மாணவி தெளிவான கண் பார்வையற்ற நிலைமையில் இந்த பெறுபேறுகளை பெற்றமையே விசேட அம்சமாகும்.
Braille system எனப்படும் பார்வையற்றவர்களுக்கான முறையை பயன்படுத்தியும் மாணவி பரீட்சை எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எனைய மாணவர்களை போன்று சாதாரண முறையில் பரீட்சை எழுதிய தனுஷி, தனது கண்களுக்கு மிகவும் அருகில் புத்தகத்தை அல்லது பரீட்சை தாள்களை கொண்டு சென்றால் மாத்திரே அவரால் பார்க்க முடியும்.
அவர் கற்கையின் போது புத்தகத்தை கண்ணுக்கு மிகவும் அருகில் சென்றே கற்றுள்ளார்.
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் எவ்வளவு தடைகள் ஏற்பட்டால் அதனை தாண்டி வெற்றி பெற வேண்டும் என்பதற்கு தனுஷி ஒரு சிறந்த உதாரணமாகியுள்ளார்.
இலங்கையில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் நாமக்கல் பரமத்தி கிராமத்தில் வசித்து வரும் டிசாதானா, இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியின் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இலங்கையில் இருந்து யுத்த வடுக்களையே சுமந்து சென்ற இந்த சிறுமி சாதிக்க முடியாதா என்ற ஏக்கத்துடன் இசையின் மூலம் தனது கால்தடத்தினை பதிக்கின்றார்.
அந்த வகையில் முதலில் காத்திருப்பு பட்டியல் (வெய்ட்டிங் லிஸ்டில்) வைத்திருந்த நடுவர்கள் இரண்டாவது முறை இவரது பாடலினை கேட்டதுடன் அந்த சிறுமியிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
தனது இசை பயணத்திற்க்காக தினமும் 20 கிலோமீற்றர் சென்று கற்கும் இச் சிறுமி, இந்த பாடல் நிகழ்ச்சி போட்டியில் அடுத்தடுத்த சுற்றுக்களில் ரசிகர்களையும் நடுவர்களையும் தனது இசையால் கட்டிப்போட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் மக்கள் கருத்திட்டத்தில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் செட்டிக்குளம் பிரதேச செயலகப்பிரிவில் கணேசப்புரம் விளையாட்டு மைதான புனரமைப்பு நிறைவு பெற்று இளைஞர்களிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வு நேற்று இளைஞர் கழக தலைவர் செ. னோஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இளைஞர் சேவை அதிகாரி இ.சசிகரன், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சங்கரன் சசிகுமார், மாவட்ட சம்மேளனத் தலைவர் கா.கிரிதரன் மற்றும் செட்டிக்குளம் பிரதேச அனைத்து சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
டெக்ஸ்டொப் கணணிகள் அறிமுகமாகிக்கொண்டிருந்த தருணத்தில் மடிக்கணணிகளின் வருகையானது பெரிய புரட்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு பிரதான காரணமாக அளவில் சிறியதாகவும், இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியதாகவும் இருந்தமை ஆகும். அப்படிப்பட்ட மடிக்கணணயில் தற்போது மற்றுமொரு புரட்சி ஏற்படவுள்ளது.
அதாவது பொக்கெட்டிலே வைத்துச் செல்லக்கூடிய அளவிற்கு 7 அங்குல அளவுடைய மடிக்கணணி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
GPD Pocket எனும் குறித்த கணணியை பிரபல நிறுவனமான GPD வடிவமைத்துள்ளது.
இக் கணணியானது IPS தொழில்நுட்பத்தினைக் கொண்ட Gorilla Glass 3 தொடுதிரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் Intel Atom x7-Z8700 Cherry Trail Processor, பிரதான நினைவகமாக 4 GB RAM, 7,000 mAh மின்கலம் என்பனவற்றுடன் 128 GB சேமிப்பு நினைவகத்தினையும் உள்ளடக்கியுள்ளது.
அடுத்த மாதமளவில் அறிமுகமாகவுள்ள குறித்த மடிக்கணணியானது Windows 10 அல்லது Ubuntu 16.04 Linux இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கின்றது.
எனினும் இதன் விலை தொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
காதலில் வெறுப்படைந்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண் ஒருவரை கூகுள் காப்பாற்றியுள்ளது. கடந்த சில தினத்துக்கு முன்னர் யுவதியின் தற்கொலைக்கு உதவிய கூகுள், இன்று இன்னொரு பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளது.
இந்தியாவின் உத்தர பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணின் காதலர் பெற்றோர் கொடுத்த அழுத்தம் காரணமாக காதலியை கைவிட முடிவு செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த அந்த இளம்பெண் தற்கொலை செய்ய முடிவு செய்து கூகுளில் வழி தேடியுள்ளார்.
இதில் என்ன சுவாரஷ்யம் எனில் இதுபோன்ற தேடலுக்கு கூகுள் வழிகாட்டுவதற்கு பதிலாக தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வருவதற்காக தொலைபேசி எண்களையே காட்டியுள்ளது. இதை அறியாத அந்த பெண் அதில் கிடைத்த ஒரு எண்ணை தேர்வு செய்து அழைப்பினை மேற்கொண்டுள்ளார்.
அவரது தொலைபேசி அழைப்பை எடுத்த நபர் ஒருவர் அப்பெண்ணிடம் பரிவுடன் பேசி தனது அலுவலகத்திற்கு அழைத்து அந்த பெண்ணிற்கு ஆலோசனைகள் கூறியதோடு மகளிர் காவல் நிலைய பெண் காவல் அதிகாரியிடம் ஒப்படைத்து மேலும் கவுன்சிலிங் வழங்குமாறும் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த பெண் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டுவிட்டதாகவும், அவருடைய காதலரை அழைத்து அவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் இன்று (09.01.2017) இரவு 8.30 மணியளவில் இரு விளையாட்டுக் கழகங்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் காற்பந்தாட்ட வெற்றிக்கிண்ண போட்டியில் இன்று மாலை 7 மணியளவில் சூடுவெந்தபுலவு வளர்மதி விளையாட்டுக்கழகத்திற்கும் பட்டானிச்சூர் ஏ.பி.சி விளையாட்டுக்கழகத்திற்கும் இடையே போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே ஏற்ப்பட்ட முறுகல் கைகலப்பாக மாறி ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இப் போட்டியினை தொடர்ச்சியாக நடாத்த முடியாமையினால் போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வடமாகாணத்தின் பாடசாலை உணவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் வருடாந்த ஆரம்பவிழா இன்று(09.01.2017) வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திருமதி. கி.நந்தபாலன் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா மற்றும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண விவசாய அமைச்சரும் பதில் முதலமைச்சருமான பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உலக உணவுத்திட்டத்தின் ஆசிய பசுபிக்பிராந்தியத்தின் இயக்குநர் டேவிட் கற்குட், உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிரண்டா பேட்டன் ஆகியோருக்கு நினைவுப்பரிசில்கள் பாடசாலை மாணவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
வடக்குமாகாணவிவசாய அமைச்சு பிரதி பிரதம செயலாளர் திருமதி. சரஸ்வதி மோகநாதன், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் க.ராதாகிருஸ்ணன், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதானால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள் என்று தமிழர்களின் பாரம்பரியம் மிக்க வீர விளையாட்டை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன் மீண்டும் குரல் எழுப்பியுள்ளார்.
பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று தொடங்கியது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றுவரும் இந்த கருத்தரங்கில் இன்று நடிகர் கமல்ஹாசன் தனது கலையுலக பயணம் தொடர்பாக பேசினார்.
பின்னர் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என பெருகிவரும் ஆதரவுக் குரல் தொடர்பாக தலைமை செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், தமிழர்களின் பாரம்பரிய மரபுசார்ந்த வாழ்க்கையில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏறுதழுவுதல் என்றழைகப்பட்டது. ஏறுதழுவுதல், அதாவது காளைகளை அணைத்துப் பிடித்தல் என்ற இந்தப் போட்டியின் நேரடி பொருளை காயப்படுத்துதல் என நாம் தவறாக புரிந்துகொள்ள கூடாது என்று குறிப்பிட்டார்.
ஆனால் இந்த விளையாட்டில் காளைகளுக்கு காயம் ஏற்படுகிறது, அடிபட்டு ரத்தம் வடிகிறது என்றெல்லாம் பிராணிகள் வதை சங்கத்தினர் குற்றம்சாட்டி வருகிறார்களே.. என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அப்படியானால் பிரியாணிக்கும் நாம் தடை விதிக்க வேண்டும் என்றார்.
ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு நேரிடையாக பதிலளித்த கமல்ஹாசன், நிச்சயமாக, அது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று தெரிவித்தார்.
தாவரங்களுக்கும் உயிர் உண்டு, அவை மனிதர்களுடன் உணர்வுபூர்வமாக உறவாடுகிறது. அவற்றுக்கும் வலியை அறியும் உணர்ச்சி உள்ளது என்று தாவரவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் தெரிவித்திருந்தார் என்பதற்காக நாம் எலுமிச்சை பழத்தை வெட்டாமல் இருந்து விட்டோமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆனால் ஜல்லிக்கட்டின்போது காளைகள் காயப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம்.. என்ற நிருபரை இடைமறித்த கமல்ஹாசன், ஆம், எனக்கு தெரியும். நான் ஜல்லிக்கட்டில் விளையாடி இருக்கிறேன். இந்த விளையாட்டில் இறங்கி காளையை தழுவிய வெகு குறைந்த அளவிலான நடிகர்களில் நானும் ஒருவன் என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளை வெற்றி பெற்றதா அல்லது, அதனுடன் மோதியவர் வெற்றி பெற்றாரா என்ற பேச்சுக்கே இடமில்லை. காளையை தழுவிப்பிடித்தபடி நீங்கள் எவ்வளவு நேரம் தரையில் உருண்டு தாக்குப் பிடிக்கிறீர்கள் என்பதுதான் இந்த விளையாட்டின் முக்கிய அம்சம்.
தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் தொடர்பான நிறைய விடயங்களை நினைவுப்படுத்தும் இந்த வீரவிளையாட்டை தமிழன் என்ற முறையில் நான் நேசிக்கிறேன், ஆதரிக்கிறேன்.
இந்த விளையாட்டில் காளைகள் காயப்படுத்தப்படுவதோ, வெட்டப்படுவதோ, கொல்லப்படுவதோ இல்லை. அவ்வாறு இருந்தால் இதற்கு தடை விதிக்கலாம், ஜல்லிக்கட்டு நீக்கப்படலாம்.
ஆனால், காளைகள் மோதியதால் நேர்ந்த விபத்து மரணங்களைவிட, தற்போது இருசக்கர வாகன விபத்துகளால் பெருகிவரும் மரணங்களைப் பற்றியும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று விளக்கம் அளித்தார்.
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று (09.01.2017) மாலை 6மணியளவில் மோட்டார் சைக்கிள் துவிச்சக்கரவண்டியில் சென்ற சிறுவனை மோதித்தள்ளியதில் சிறுவன் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கை பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக இன்று மாலை 6 மணியளவில் தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சென்றுவிட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுவன் 6ம் ஒழுங்கையில் திரும்ப முற்படுகையில் அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் (பீல்ட் பைக்) பிரகாஸ் பிரிந்தன் என்ற 15வயது சிறுவன் மீது மோதியதில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் அதிக வேகமாக சென்ற காரணத்தினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அவ்விடத்திலிருந்து மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் தலைமறைவாகி விட்டதாகவும், எனினும் அவர் செலுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கத்தினை வைத்து அவரை கைது செய்ய முடியும் என நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் காதலியை பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டிய காதலனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள எஸ்சக்ஸ் நகரில் Atlanta Hammond(21) என்ற இளம்பெண் வசித்து வருகிறார். தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவங்களை தற்போது ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இதே நகரை சேர்ந்த இஸ்லாமியரான Halil Cetinkayali(30) என்பவரை கடந்த 2013ம் ஆண்டு சந்தித்து காதல் வயப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசிக்க தொடங்கியுள்ளனர். இவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
பின்னர், நாட்கள் செல்ல தன்னுடைய காதலியை அவர் தொடர்ச்சியாக சித்ரவதை செய்து வந்துள்ளார். காதலியை அடிக்கும்போது ஏற்படும் காயங்களை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதுமட்டுமில்லாமல், காதலியை மிரட்டி அவரை பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நாள் காதலி இணையத்தளத்தில் ஒரு தகவலை தேடியபோது அவருடைய காதலன் பொலிசாரால் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி என தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து நான் பிரிந்து செல்கிறேன் என காதலி கூறியபோது, ‘என்னை விட்டு சென்றால் இந்த ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்’ என மிரட்டியுள்ளார்.
இதனால் வேறு வழியில்லாத காரணத்தினால் அவருடன் இளம்பெண் கடுமையான சித்ரவதைகளை சகித்துக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
ஆனால், காதலின் சித்ரவதை மிக மோசமானதை தொடர்ந்து ஒரு நாள் வீட்டை விட்டு தப்பிச் சென்று பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இளம்பெண்ணின் புகாரை பெற்ற பொலிசார் முன்னாள் காதலனை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
நபர் மீதான அனைத்து குற்றங்களும் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நீதிமன்றம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று இளம்பெண்ணை கடத்தி சென்று கூட்ட வன்புணர்வுக்கு இரையாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தின் பாக்பட் மாவட்டத்தில் குறித்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் அத்துமீறி நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல் குறித்த பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளது.
பின்னர் அப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தினுள் இளம்பெண்ணை கடத்தி சென்ற அந்த கும்பல் அங்கு கூட்ட வன்புணர்வுக்கு இரையாக்கியுள்ளது.
இதில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அந்த பெண்ணை கொடூரமாக தாக்கியதுடன் அவரது காதையும் கத்தியால் வெட்டி வீசியுள்ளனர் அந்த கொடூர காமுகர்கள்.
இதனிடையே தமது மகளின் அழுகுரல் சத்தம் கேட்டு பதட்டமடைந்து ஓடிச்சென்று தடுக்க முயன்ற தாயாரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது.
மட்டுமின்றி சம்பவம் நடந்த பின்னர் அதே நாள் அந்த கும்பல் திரும்ப வந்து இளம்பெண்ணையும் தாயாரையும் மிரட்டி விட்டு சென்றுள்ளது. இதனால் பயந்த அவர் கடந்த 4 ஆம் திகதி நடந்த சம்பவத்தை எவரிடமும் தெரிவிக்கவோ பொலிசில் புகார் அளிக்கவோ துணிவின்றி பயத்துடன் இருந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்து அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இவர் கடந்த ஆண்டின் மிகச் சிறந்த வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் என்ற இரண்டு ஐ.சி.சி விருதுகளுக்கு தெரிவாகியுள்ளார்.
இந்நிலையில், ராஜம் கண் மருத்துவமனையில் நடந்த கண் தானம் விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்ற அஸ்வின், தன் கண்களை தானம் செய்வதாக அறிவித்து அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
இது குறித்து, அவர் கூறியுள்ளதாவது, கண்தானம் செய்வது என்பது எனது மனைவி ப்ரீத்தியின் கனவு. ஒவ்வொரு குடிமகனும் இதை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நான் என் கண்களை தானம் செய்கிறேன். நீங்களும் கண்தானம் செய்யுங்கள் என்று அஸ்வின் தனது விழிப்புணர்வு பிரசாரத்தில் ரசிகர்களிடம் வற்புறுத்தி உள்ளார்.
கண்டி முறுதலாவ பிரதேசத்தில் ஒரே வீட்டில் வசித்துவந்த சகோதரிகள் குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது தங்கையின் கணவரினால் மணிக்கட்டுடன் வெட்டி வேறாக்கப்பட்ட மூத்த சகோதரியின் கையை பெரும் சிரமத்துக்கு மத்தியில் பேராதனை வைத்தியசாலையின் வைத்தியர்கள் சத்திர சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக மீள பொருத்தியுள்ளனர்.
கண்டி தெஹியங்க முறுத்தலாவ பிரதேசத்தில் வசித்து இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 10 வருடங்களான போதிலும் அவர்களுக்கு குழந்தையில்லாமையினால் சொந்தவீட்டில் மனைவியின தந்தையுடன் தனிமையில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் மேற்படி பெண்ணின் தங்கை திருமணம் முடித்து கணவன், பிள்ளைகளுடன் அப்பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.
இதனையடுத்து தனது உடன் பிறந்த தங்கை என்பதனால் இவரை வாடகை வீட்டிலிருந்த அழைத்து வந்தது அவருடைய வீட்டிலேயே குடியேற்றியுள்ளார்.
இவ்வாறு குடியேறி சுமார் 2 மாதங்கள் கழிந்த நிலையில், தான் தற்காலிகமாக குடியிருக்கும் வீட்டினை கைப்பற்றிக்கொள்ளும் பொருட்டு தங்கையின் கணவர் திட்டம் தீட்டியுள்ளார்.
இந்நிலையில், சம்பவ தினத்தன்று கருத்து வேறுபாடு காரணமாக இரு குடும்பத்தாரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அதன்போது தங்கையின் கணவர் கத்தியொன்றை எடுத்து தனது மனைவியின் சகோதரியின் கையை துண்டித்ததுடன் அதனை தடுக்கவந்த தனது மனைவியையும் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் கை துண்டிக்கப்பட்ட பெண்ணை அழைத்துக்கொண்டு அவரது கணவர் உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்துவிட்டு அவரை பேராதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். அத்துடன் காயமடைந்த அவரது தங்கை கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
துண்டாக்கப்பட்ட மணிக்கட்டுக் கீழாகவுள்ள கையை வீட்டின் சமையறை “சின்க்” இல் போட்டுவிட்டு வந்திருந்தமையினால், பேராதனை வைத்தியர்கள், இப்பெண்ணின் தந்தையை வீட்டுக்கு அனுப்பி துண்டிக்கப்பட்ட கைப்பகுதியை எவ்வாறேனும் பாதுகாப்பான முறையில் கொண்டு வருமாறு கூறி அனுப்பியுள்ளனர்.
அதன்பின்னர், கொண்டுவரப்பட்ட கைத்துண்டை பாரிய சிரமத்துக்கு மத்தியில் பேராதரனை வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை வைத்தியர் குழுவினர் பொருத்தியுள்ளனர்.
கைபொருத்தப்பட்டு மூன்று நாட்களினுள் இரத்த ஓட்டம் குறித்த கையின் ஊடாக இடம்பெற்றதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
எனினும் அவர் தற்போதுவரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பேராதனை வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, சந்தேக நபரான தங்கையின் கணவர் பேராதனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கண்டி நீதிவான் மன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையம் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பேராதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமல் ஆரியவங்ச தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலர் துணையுடன் நேற்று பொலிசில் புகார் தெரிவித்ததை அடுத்து தாயாரையும் அந்த இளம்பெண்ணையும் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிசார், இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்பது மட்டுமல்ல, விசாரணை நடைபெற்று வருவதாக மழுப்பல் பதிலை அளித்துள்ளனர்.