வவுனியா வைத்தியசாலைக்கு வெளிமாவட்டங்களிலிருந்து வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கடந்த வருட பிற்பகுதியிலிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு வெளிமாவட்டங்களிலிருந்து குறிப்பாக பதவியா, ஹெப்பிட்டிகொல்லாவ, தமுத்தேகம, அனுராதபுரம் போன்ற பகுதிகளிலுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்வதைக்காணக்கூடியதாக உள்ளது.

வவுனியா வைத்தியசாலைக்கு வருவதற்கு அதிக நேரம் எடுத்தாலும் உடனடியாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்வதற்கு வசதியாக உள்ளதாகவும் அனுராதபுரம் வைத்தியசாலைக்குச் சென்றால் வைத்தியர் வரும்வரை காத்திருக்கவேண்டியுள்ளதாகவும் நீண்ட வரிசையிலிருந்து மருந்து எடுத்துக் கொண்டு வீடு செல்ல பல மணிநேரம் செல்வதாகவும்,

வவுனியாவிற்கு வந்தால் உடனடியாக வைத்தியரை பார்வையிட்டு தமக்கான சிகிச்சைகளை பெற்றுக்கொண்டு உடனடியாக செல்வதற்கு சந்தர்ப்பம் உள்ளதால் வவுனியாவிற்கு வந்து சிகிச்சை பெற்றுவருதாகவும் இதனால் தமக்கு அதிக நேரம் மிகுதியாக இருப்பதாகவும், வவுனியா வைத்தியசாலையில் அதிகளவான பெரும்பான்மை இனத்தவர்கள் பணிபுரிவதால் மொழி ரீதியில் எவ்வித தாமதமும் ஏற்படுவதில்லை என்று வெளிமாவட்டங்களிலிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் 71மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தகுதி!!

அண்மையில் வெளியாகிய க.பொ.த (உயர்தர) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலத்தில் 71மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தெரிவாகியுள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் க.சிவநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வர்த்தகபிரிவில் சாந்தகுமார் கனகேஸ்வரி A2B சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 31வது இடத்தினையும் வேலாயுதம் கிருயா 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 54வது இடத்தினையும் நாகராஜன் நிரோஜன் 2AC சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 57வது இடத்தினையும் கலைப்பிரிவில் தேவராசா சுரேக்கா 2AC சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 49வது இடத்தினையும் மனோராஜ் தட்சாயினி 2AB சித்திகளை பெற்று 52வது இடத்தினையும் அறிவலகன் சந்திரமதி ABC சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 59வது இடத்தினையும் சிவகுமார் சிந்துஜா ABC சித்திகளை பெற்று 51வது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கலைப்பிரிவில் 60மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியதில் 30 மாணவர்கள் சித்தியடைந்ததுடன் வர்த்தக பிரிவில் 43 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியதில் 32மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

103 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இதில் 71மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் மயிரிழையில் தப்பிய கிரிக்கெட் வீரர்!!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷபுர் ஷத்ரான் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் தூப்பாக்கிச் சூடு நடத்தியதில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஷபுர் ஷத்ரான்(29). கடைசியாக அயர்லாந்து அணிக்கெதிராக கடந்த ஆண்டு ஜூலை 12ம் திகதி சர்வதேச போட்டியில் விளையாடிய நிலையில் தற்போதும் அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு தனது சகோதரரை அழைத்துக் கொண்டு காபூலில் உள்ள பக்ராமி பகுதி அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது காரை வழிமறித்த சில மர்ம நபர்கள் காரின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில், பல குண்டுகள் காரை தாக்கிய போதும், மயிரிழையில் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பியுள்ளனர்.

இதுவரை, ஷபூர் மீது தாக்குதல் நடத்தியதற்கு எந்த குழுவோ அல்லது தனி நபரோ பொறுபேற்கவில்லை என்ற போதும், ஷபூர் ஷத்ரான் மீது ஏற்கனவே இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளன என்று கூறப்படுகிறது.

பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் என்று தெரியுமா?

நமது உடல் பாகங்களில் பல்லி விழுந்தால் என்னென்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ளுங்கள்,

தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்

தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்

நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி

நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்

வயிறின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி

வயிறின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்

முதுகு : இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை

முதுகு : வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்

கண் : இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்

கண் : வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்

தோல் : இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி

தோல் : வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி

பிருஷ்டம் : இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்

திருமணம் முடிந்த முதல் நாளில் இதையெல்லாம் உங்கள் மனைவியிடம் பேச வேண்டாம்!!

மற்றவர்களிடம் பேசும் போது இடம், பொருள், ஏவல் பார்த்து பேசுவது அவசியம், இதுவே பல பிரச்சனைகளை கிளப்பாமல் இருக்கும்.

இதேபோன்று திருமணம் முடிந்த தினத்தன்று உங்கள் துணைவியுடம் பேசக்கூடாத விடயங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

முதல் நாளில் மனைவியிடம் கேட்கக் கூடாத விஷயங்கள்

முதலில் பேசும் போதே தன் துணையிடம் தன்னுடைய அல்லது அவர்களின் பழைய வரலாறுகளை பற்றி கேட்கவோ, கூறவோ கூடாது. ஏனெனில் இது நமது முதல் அனுபவத்தை கெடுக்கும் காரணியாக இருக்கும்.

தன் துணையிடம் முதலில் பேசும் போது, தன்னைப் பற்றிய சுயபுராணம் பேசுவதை தவிர்த்து விட வேண்டும். ஏனெனில் இது நீங்கள் ஒரு சுயநலவாதி, அல்லது சுய தம்பட்டம் அடிப்பவர் போன்ற எண்ணங்களை அவர்களின் மனதில் விதைத்துவிடும்.

புதிதாக வந்த தனது மனைவியிடம், தங்களின் குடும்பத்தை பற்றி பெருமையாக கூறுவது, இது மட்டும் தான் பண்ணணும், இதெல்லாம் செய்யக் கூடாது என பெரிய பட்டியலை கூற வேண்டாம்.

திருமணம் முடிந்த முதல் நாளிலே தனது மனைவியிடம் உடலுறவு பற்றி பேசக் கூடாது. ஏனெனில் உங்கள் மீதான நல்ல பிம்பத்தை உடைப்பதுடன், பெண்களுக்கு அதிக அச்சத்தை ஏற்படுத்தும்.

தங்கள் மனைவியிடம் பணம் அதிகம் இருக்கிறது என்றும் அல்லது பொருளாதார கஷ்டத்தை வெளிப்படுத்துவது இரண்டுமே தவறானது. ஏனெனில் இவை இரண்டுமே எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கும்.

உங்களிடம் இருக்கும் எதிர்மறை எண்ணத்தை தாம்பத்தியத்தின் போது வெளிப்படுத்த வேண்டாம். மேலும் மனைவியிடம் பேசும் உரையாடலில் நீ, நான் என்ற பிரிவினை பேச்சுக்களை தவிர்த்து, நாம் என்ற வார்த்தை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

இயற்கையின் சீற்றத்தால் துவண்டுபோன 7 இலட்சம் தாய்லாந்து மக்கள் : 18 பேர் பலி!!

 
தெற்கு தாய்லாந்தில் கடந்த ஒருவாரமாக பெய்துவரும் கடுமழையால் 18 பேர் பலியாகிவுள்ளனர். சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிகப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தின் தெற்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 1000 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழை வெள்ளத்தினால் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளதுடன், வெள்ளத்தால் போக்குவரத்து வசதிகள் இல்லது மக்கள் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்டோரை மீட்கும் நடவடிக்கைகள் துரித முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன், குறித்த காலநிலை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பெற்ற மகளை கள்ளக்காதலுனுக்கு இரையாக்கி கொன்ற தாய் : உறைய வைக்கும் சம்பவம்!!

அமெரிக்காவில் தாய் ஒருவர் பெற்ற மகளை கள்ளக்காதலுனுக்கு இரையாக்கி கொன்று நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

Pennsylvania, Abington பகுதியிலே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 44 வயது சுலிவன், 41 வயது சாரா பாக்கர் ஆகியோரை பொலிசார் கைது செய்துள்னர்.

Sara Packer தனது கள்ளக்காதலனான Sullivanனுக்கு தனது 14 வயது ஊனமுற்ற மகள் கிரேஸ் பாக்கரை இரையாக்கி அதை ரசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பத்தன்று சுலிவன் கிரேஸ் பாக்கருக்கு அதிக மாத்திரைகள் கொடுத்துள்ளார்.

கிரேஸ் மயக்கமடைய அவரின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாலை ஓரத்தில் வீசியுள்ளனர்.

இதனையடுத்து தாய் சாரா பாக்கர், தனது மகளை காணவில்லை என பொலிசில் புகார் அளித்துள்ளார். மேலும், தனது மகள் உயிருடன் இருப்பதாக கூறி அவரை மீட்க நீதி வசூல் செய்துள்ளார்.

இந்நிலையில், வேட்டைக்காரர்கள் மர்மமான முறையில் கிடந்த உடலை குறித்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளளனர். பின்னர், உடலை மீட்டு ஆய்வு செய்ததில் அது கிரேஜ் பாக்கரின் உடல் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கிரேஸின் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட வந்த பொலிசாரிடம், சாரா பாக்கர் வீட்டில் வசித்து வந்த கரேன் என்ற பெண், தான் நேரில் கண்ட சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து, பொலிசார் இருவரையும் அதிரடியாக கைது செய்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ்லாந்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் 1884 பேர் பலி!!

சுவிஸ்லாந்தில் பனிச்சறுக்கு விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1884 என அந்நாட்டு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

சுவிஸ்லாந்தில் பனிச்சறுக்கு விளையாட்டின் போதி பனிச்சரிவில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சுவிஸ்லாந்து முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த இது போன்ற உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கடந்த 1936ம் ஆண்டு முதல் சுவிஸ் பப்ளிக் தொலைக்காட்சி பதிவு செய்து வருகிறது.

அண்மையில் அது வெளியிட்டுள்ள புள்ளி விபரம் பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1,884 என தெரிவித்துள்ளது.

50 ஆயிரம் ரூபா தண்டபணமா? : சாரதிகளே மிகுந்த அவதானம்!!

போதைப் பொருள் பாவனையுடன் வாகனத்தை செலுத்தும் சாரதிகளுக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்படுவதாயின் போதைப் பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிட வேண்டும்.

இது குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சாரதிகளுக்கு ஏறபட்ட தூக்கம் காரணமாகவே, அண்மையில் அதிகளவான வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், போதைப் பொருள் பாவனையுள்ளவர்கள், அதனைப் பயன்படுத்த தவறும் போதே அதிக தூக்கம் ஏற்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, போதைப் பொருள் பழக்கமுள்ள சாரதிகளுக்கு அதிக தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் அரசாங்கத்துக்கு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

முதல்வர் பதவி எனக்கே : சசிகலாவிடம் மல்லுக்கட்டும் நடராஜன்!!

முதல்வர் பதவியை தமக்கே விட்டுத் தர வேண்டும் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளதால் போயஸ் கார்டன் பங்களா களேபரமாகி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீருவது என்பதில் படுதீவிரமாக இருக்கிறார் சசிகலா. பதவி பேராசையால் சசிகலா, எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒருநாளாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இதனிடையே சசிகலா கணவர் நடராஜனிடம், நீங்களே முதல்வராகி விடுங்கள் என அரசியலில் குழப்பமான நிலையை மேற்கொண்டு வரும் ஒரு துண்டு தலைவர் தூபம் போட்டபடியே இருக்கிறாராம்.

அதாவது சசிகலா முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால் குடும்ப உறவுகள் அனைத்தும் ஆளுக்கு ஒரு அதிகார மையங்களாகி விடுவர், மத்திய அரசு உங்களை நசுக்க ஏதுவாகி விடும்; ஆகையால் நீங்கள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால் உங்கள் உறவுகளை நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஒரே அதிகார மையமாக செயல்படலாம் என்று அந்த தலைவர் தூபம் போட்டிருக்கிறார்.

அவரது இந்த கருத்தை மூத்த ஒரு அரசியல்வாதியும் ஆமோதிக்கிறாராம். நமக்கு வேண்டிய இரு தலைவர்களுமே இப்படி சொன்னால் சரியாக இருக்கும் என்பதால் இப்போது முதல்வர் பதவியை எனக்கே விட்டுத் தர வேண்டும் என சசிகலாவிடம் மல்லு கட்டியிருக்கிறார் நடராஜன்.

ஆனால் சசிகலாவோ, ஒருநாளாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீருவேன் என அடம்பிடித்து வருகிறாராம். இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் நடராஜன் அந்த துண்டு தலைவரிடம் புலம்பியிருக்கிறார்.

இருந்தபோதும் மத்திய அரசிடம் நான் பேச முயற்சிக்கிறேன்… நீங்கள் முதல்வரானால் மத்திய அரசுக்கு அனுசரணையாக நடந்து கொள்வீர்கள் என வாக்குறுதி தர முயற்சிக்கிறேன் என துண்டை இழுத்துப் போட்டு சபதம் போடாத குறையாக பேசினாராம் அந்த தலைவர்.

நடராஜனின் இந்த முயற்சி அதிமுக எம்எல்ஏக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.

1000 நாட்­­க­ளா­கியும் மீட்­கப்­ப­டாத நைஜீரிய மாண­வி­கள்!!

நைஜி­ரி­யாவில் போகோ­ஹராம் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளினால் கடத்தப்பட்ட பாட­சாலை மாண­விகள் 1000 நாட்கள் ஆகியும் இன்னும் விடு­தலை செய்­யப்­ப­டாத நிலை நீடித்து வரு­கி­றது.

கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நைஜீ­ரிய பாட­சா­லையில் படிக்கும் 200 க்கும் மேற்­பட்ட மாண­வி­கள் கடத்திச் செல்லப்பட்டனர்.

கடத்­த­லுக்கு பின்னர் மூன்று ஆண்­டு­களில் 21 மாண­விகள் மட்டும் இது­வரை விடு­தலை செய்­யப்­பட்­டனர். அதில் பலர் கற்­ப­மாக இருந்­தனர்.

கடத்­தப்­பட்ட மாண­வி­களை மீட்க நைஜி­ரிய அரசு உலக நாடு­களின் உத­வி­யோடு தீவிர முயற்சி செய்து வரு­கி­றது.

இந்­நி­லையில், போகோ ஹராம் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளால் கடத்­தப்­பட்ட மாண­விகள் 1000 நாட்கள் ஆகியும் இன்னும் விடு­தலை செய்­யப்­ப­டாத அவலம் நீடித்து வரு­கி­றது.

கிளர்ச்­சி­யா­ளர்­க­ளின் பிடியில் மீத­முள்ள 195 பாட­சாலை மாண­விகளை விரைவில் மீட்போம் போம் என நைஜீ­ரிய ஜனா­தி­பதி முகம்மது புகாரி நம்பிக்கை தெரிவித்தார்.

பாலியல் அடிமைகள் விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென் கொரிய மதகுரு தீக்குளிப்பு!!

தென் கொரி­யா­வா­னது இரண்டாம் உலகப் போர் கால­கட்­டத்தில் ஜப்­பானால் பாலியல் அடி­மை­க­ளாக நடத்­தப்­பட்ட பெண்கள் தொடர்பில் அந்­நாட்­டுடன் செய்து கொண்ட உடன்­ப­டிக்­கைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து தென் கொரிய பௌத்த மத­குரு ஒருவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்­டுள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்­தனர்.

குறிப்­பிட்ட 64 வயது மத­குரு சனிக்­கி­ழமை இரவு மத்­திய சியோலில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் முன்­னி­லையில் தென் கொரிய ஜனா­தி­பதி பார்க் கெயுன்–ஹை பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுத்­த­வாறு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதனால் கடும் தீக்­கா­யங்­க­ளுக்­குள்­ளா­கிய நிலையில் சியோல் தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட அவர், உயி­ருக்­கா­கப் போராடிக் கொண்­டி­ருப்­ப­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

சியோல் நகரில் அந்­நாட்டு ஜனா­தி­ப­திக்கு எதிர்ப்புத் தெரி­வித்து 11 ஆவது வார­மாக சனிக்­கி­ழமை எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­டன

ஜப்­பா­னுடன் மேற்­படி பாலியல் அடி­மைகள் தொடர்பில் இழப்­பீட்டு முன்­னேற்­பாட்டு உடன்­ப­டிக்­கை­யொன்றை கடந்த ஆண்டு செய்து கொண்­டதன் மூலம் ஜனா­தி­பதி பார்க் கெயுன்–ஹை இராஜத் துரோ­க­மொன்றை இழைத்­துள்­ள­தாக தீக்­கு­ளித்த மத­குரு குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

மேற்­படி கொரிய பெண்கள், ஜப்­பா­னிய போர் கால இரா­ணுவ விப­சார விடு­தி­களில் பணி­யாற்ற அந்­நாட்டு இரா­ணு­வத்­தி­னரால் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் கடந்த ஆண்டு இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் செய்­து­கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் ஜப்பான் நஷ்­ட­ஈட்டை வழங்கி மன்­னிப்பைக் கோரு­வதன் மூலம் அந்தப் பிரச்­சினை தொடர்­பான குற்­றச்­சாட்­டி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­டு­வ­தற்கு இணக்கம் காணப்­பட்­டது.

மேற்­படி உடன்­ப­டிக்கை ஜப்­பானால் போர் காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட குற்­றங்­க­ளுக்­காக அந்­நாட்டை பொறுப்புக் கூற­வைப்­ப­தற்கு போது­மா­ன­தாக இல்லை என அதன் எதிர்ப்­பா­ளர்கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.

பாலியல் அடிமைகள் தொடர்பான மேற்படி சர்ச்சையின் அங்கமாக தென் கொரியாவிலிருந்து தனது தூதுவரை ஜப்பான் கடந்த வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றதையடுத்து இரு நாடுகளுக்கு மிடையிலான பதற்றநிலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்பானியர்களின் பாரம்பரிய திருவிழா : வியப்பூட்டும் விசித்திர உருவங்கள்!!

 
வடக்கு ஸ்பெயினைச் சேர்ந்த பூர்விக ஸ்பானியர்களின் திருவிழாவையொட்டி அனேகமானோர் வித்தியாசமான தோற்றங்களில் அமைக்கப்பட்ட உடைகளுடன் ஆண்டின் முதாவது விழாவை வரவேற்றுள்ளனர்.

வடக்கு ஸ்பெயினின் சிலியோ நகரில் ஒவ்வொரு வருடமும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் லா விஜாநேரா எனும் கொண்டாட்ட நிகழ்வு கொண்டாடப்படுகின்றது.

குறித்த கொண்டாட்டங்களுக்காக சுமார் 60 ஆண்கள் வரையில் தனித்துவமானமுறையில் உருவாக்கபட்டுள்ள விசித்திர உருவங்களை கொண்ட ஆடைகளை அணிந்து பழைய வருடத்தின் நினைவுகளை மறந்து புதிய வருடத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் நகிழ்வாக கொண்டாடுகின்றனர்.

யாழில் ஏற்பட்ட வாகன விபத்தில் 2 பேர் காயம்!!

யாழ் – பருத்தித்துறை பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் 02 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கயேஸ் வாகனம் ஒன்றுடன் மணல் ஏற்றிச் சென்ற கன்டர் ரக வாகனட் மோதியமையினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சாரையடி பகுதியின் வழியாக மணல் ஏற்றி சென்ற கன்டர் ரக வாகனம் ஒன்றினை நிறுத்துவதற்காக பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிக்கப்படுகின்றது.

இதேவேளை, காயமடைந்தவர்களை வைத்திசாலைக்கு அனுமதிப்பதற்கு இளைஞர்கள் முயன்ற வேளை, மணல் ஏற்றி சென்றவர்கள் கயேஸ் வாகனத்திற்கே பொலிஸார் சுட்டதாக தெரிவித்து கைகலப்பில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகின்றது.

மேலும், கன்டர் வாகன சாரதி இதன் போது கைதுசெய்யப்படதாகவும் கன்டரில் வந்த மிகுதி பேர் தப்பியோடிதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

 
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (10.01.2017) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா தாண்டிக்குளம் இராணுவத்தினரின் உணவகத்திற்கு அருகில் இன்று காலை யாழ் வீதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிலில் பயணித்த ம.சயந்தன் என்ற 26வயது இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கில் கட்டுப்பாட்டினை இழந்து வீதியின் மறுபக்கம் புற்தரையினுள் சென்று விபத்துக் குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் வீதியில் போக்குவரத்து கடமையில் நின்றிருந்த போக்குவரத்துப் பொலிசார், பொதுமக்களின் உதவியுடன் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பல்துறை வெற்றியாளர்கள் கெளரவிப்பு!!

 
வவுனியாவில் கணனி மற்றும் ஆங்கில கற்கை நெறிகளை 15 வருடங்களாக வவுனியாவில் வழங்கி வரும் தனியார் கல்வி நிறுவனமாகிய Elite Computing and Business College – ECBC வவுனியாவின் 2015ம் ஆண்டிற்கான வெற்றியாளர்கள் என்ற அடிப்படையில் கடந்த ஞாயிறு(08.01.2017) அன்று வவுனியாவில் விருது வழங்கும் வைபவம் ஒன்றினை நடாத்தியது. இந் நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்வர்கள் கெளரவிக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன், கௌரவ விருந்தினராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சிற்றம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில்..
அரசியல் துறையில் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம்
எழுத்துத் துறையில் கலாநிதி அகளங்கன்
சொற்பொழிவுத் துறையில் தமிழருவி த.சிவகுமாரன்,
கல்வி நிர்வாகத் துறையில் அதிபர் எஸ்.அமிர்தலிங்கம் (விபுலானந்தா கல்லூரி),
விளையாட்டுத் துறையில் எ.அன்ரனி ரெக்ஸ்சன்
ஊடகத்துறையில் பீ.கார்த்தீபன்
கிராம சேவையாளர்களில் அனுரோசி (ஓமந்தை)
இசைத்துறையில் கந்தப்பு ஜெயந்தன்
சமூக சேவையில் எஸ்.சந்திரகுமார்
குறும்படத் துறையில் அ.மிதுனா
நடனத் துறையில் நா.செந்தூர்ச்செல்வன்
நாடகத் துறையில் எஸ்.துஜான்
பாடலாசிரியர் த.பிரதாபன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.