லண்டனில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் உணவு வாங்கிச் சென்று சாப்பிட்ட பதினைந்து வயதுச் சிறுமி உயிரிழந்ததையடுத்து இருவர் கைது செய்யப்பட்டனர்.
மேகன் லீ என்ற இந்தச் சிறுமி லங்கஷயரில் உள்ள ரோயல் ஸ்பைஸ் என்ற இந்திய உணவகம் ஒன்றில் உணவுப் பொதி ஒன்றை வாங்கிச் சென்றிருக்கிறார். அதை உண்ட அவருக்கு கடும் ஒவ்வாமை ஏற்பட்டது.
இதைக் கண்டு பதறிய அவரது உறவினர்கள் உடனடியாக மேகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், இரண்டு நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் அது பலனளிக்காததால் மேகன் உயிரிழந்தார்.
இதையடுத்து திட்டமிட்ட படுகொலை என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் குறித்த ஹோட்டலுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து தகவல் எதுவும் அறியத் தரப்படவில்லை.
உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என லங்கஷயர் பொலிஸார் தெரிவித்தனர்.
வியட்நாமில் இனிமேல் நோய் தாக்கமற்ற 18 வயது முதல் 60 வயதுவரையான அனைவரும் இரத்ததானம் வழங்க வேண்டுமென அனைத்து அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
வியட்நாமில் குறித்த பராயம் வந்தோர் அனைவரும் நாட்டிலுள்ள அலட்சியப்படுத்தப்பட்ட ரத்த வங்கிகளுக்கு தாங்கள் ரத்த தானம் செய்வதற்கான சட்ட வரைபை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் மற்றும் சட்டவரைபு பேரவை இணைந்து அறிமுகப்படுத்தியிருக்கிறது.
18-இல் இருந்து 60 வயது வரையான ஆரோக்கியமான நபர்கள் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது ரத்ததானம் செய்வதை இந்த சட்டம் கட்டாயமாக்கியுள்ளது.
கடந்த வருடம் மாத்திரம் வியட்நாமிலிருந்து சுமார் 4 இலட்சத்து 70 ஆயிரம் லீற்றர் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது.
இது அந்நாட்டு சனத்தொகையில் 1.2 வீதமாகும். இருப்பினும் நாட்டின் சனத்தொகையில் சுமார் 2 சதவீதமான ரத்ததானம் இருந்தால் மாத்திரமே உலக சுகாதார நிறுவனத்தின் கட்டளைக்கு ஈடாகும்.
நாடாளுமன்ற அனுமதி இன்னும் வழங்கப்படாத நிலையில், இந்த சட்டத்திற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளதுடன், இது மனித உரிமைகள் மீறலாக அமையும் சட்டமாகும் என்றும் சிலர் வாதிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இறந்தவர்களுக்காக வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமான சடங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டில் வசிக்கும் யானோமமி இன மக்கள் இறந்தவர்களின் சடலத்தை சூப் வைத்து குடிக்கின்றனர்.
யாரேனும் இறந்துவிட்டால் அவர்களைப் புதைப்பது அல்லது எரிப்பது ஆகிய இரண்டு முறைகள் தான் உலகளவில் அதிகமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
அப்படி எரிக்கப்பட்ட உடலில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலை இந்து மதத்தினர் ஆன்மீக அடிப்படையில் சில சடங்குகள் செய்து கடலில் கரைத்துவிடுவார்கள்.
ஆனால் பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டில் வசிக்கும் யானோமமி இன மக்களின் சடங்கு முறைகள் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இவர்கள் தங்களது இன மக்கள் இறந்துவிட்டால், அவர்களின் உடலை எரித்து, சாம்பல் மற்றும் எலும்பினை எடுத்து காய்கறிகள் போட்டு சூப் வைத்து குடிக்கிறார்கள். மேலும் தங்களுடைய இனத்தையே சாப்பிடுவதை பாரம்பரியமாக பின்பற்றி வருகிறார்கள்.
மரணம் என்ற ஒன்று நிகழக்கூடாது, அப்படி நிகழ்ந்தாலும் அவர்கள் தம்முடன் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என யானோமமி இனத்தவர்கள் நம்புகின்றனர்.
இறந்தவர்களின் சாம்பல் மற்றும் எலும்பில் சூப் வைத்துக் குடிப்பதால் அவர்கள் தம்முடனேயே வாழ்கிறார்கள் என்பது இம்மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
நாட்டில் நிலவும் குளிரான காலநிலை காரணமாக இன்புளுயன்சா நோய்த் தாக்கம் அதிகரித்துள்தாக சுகாதார தரப்பு தெரிவிக்கின்றது.
கர்ப்பிணிகள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு இன்புளுயன்சா நோய்த்தாக்கம் அதிகரிப்பதற்கான வாய்புகள் காணப்படுவதாக குடும்பநல சுகாதார பிரிவின் சமூக வைத்திய பிரிவின் வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்தார்.
காலநிலை மாற்றமடைந்து வருவதாகவும் இந்த குளிரான காலநிலையால் நாட்டில் நோய்த் தாக்கங்கள் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அண்மைக்காலமாக இன்புளுயன்சா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.
கர்ப்பிணித் தாய்மார்கள் சிறுவர்களையும் தாக்கும் இந்த வைரஸ் வயதானவர்களை தாக்குவதற்கு வாய்ப்புள்தாகவும் வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்தார்.
அத்துடன் சலி, இருமல் போன்ற நோய் அறிகுறிகள் அதிகம் ஏற்படும் என தெரிவித்துள்ள வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன, இவ்வாறான நிலைமைகள் குறித்து அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென் கொரியாவில் ஜப்பான் துணைத் தூதரகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள ‘பாலியல் அடிமைப் பெண்´ சிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டுக்கான ஜப்பான் தூதர் யாசுமாஸா நாகமினே மீள அழைக்கப்பட்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது.
பூஸன் துணைத் தூதரகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள பாலியல் அடிமைப் பெண்ணின் சிலை அகற்றப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் ராணுவத்தினரை மகிழ்விப்பதற்காக கொரிய தீபகற்பம், சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 2 லட்சம் பெண்களை பாலியல் அடிமைகளாக ஜப்பான் பயன்படுத்தியதாக வரலாற்று அறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
1910 ஆம் ஆண்டிலிருந்து, 1945-ஆம் ஆண்டு வரை கொரிய தீபகற்பம் ஜப்பானின் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்தபோது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக பதற்றம் நிலவி வந்தது.
இந்த நிலையில், இந்தப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தென் கொரியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக்கியதற்கு ஜப்பான் பொதுமன்னிப்பு கேட்டது.
மேலும், தற்போது உயிருடன் இருக்கும் முன்னாள் பாலியல் அடிமைப் பெண்களுக்கு 100 கோடி யென் (சுமார் ரூ.58 கோடி) இழப்பீடு வழங்குவதாகவும் ஜப்பான் ஒப்புக் கொண்டது. அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை விட்டுவிடுவதாக தென் கொரியாவும் ஒப்புக் கொண்டது.
இந்தச் சூழலில், தென் கொரியாவின் பூஸன் நகரில் அமைந்துள்ள ஜப்பான் துணைத் தூதரகம் முன்பு, பாலியல் அடிமைப் பெண்ணின் சிலையை ஜப்பான் எதிர்ப்பு அமைப்பின் நிறுவினர்.
இது 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தத்துக்கு எதிரானது என்று கூறி, ஜப்பான் எதிர்ப்பு தெரிவிக்கவே, அதிகாரிகள் அந்தச் சிலையை அப்புறப்படுத்தினர்.
எனினும், இரண்டாம் உலகப் போரின்போது போர்க் குற்றங்களில் ஈடுபட்டோருக்காக அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய யாசுகுனி போர் நினைவகத்தில் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கடந்த மாதம் அஞ்சலி செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து, பாலியல் அடிமைப் பெண் சிலையை பூஸன் துணைத் தூதரகம் முன்பு நிறுவ தென் கொரிய அரசு அனுமதி வழங்கியது.
தனது காதலர் கிழங்குப் பொரியல் (சிப்ஸ்) முழுவதையும் உட்கொண்டுவிட்டார் என்ற ஆத்திரத்தில் காதலரை பெண்ணொருவர் கத்தியால் குத்திய சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.
லன்காஷயர் பிராந்தியத்தின் பிளக்பர்ன் நகரைச் சேர்ந்த 34 வயதான டியென் மார்கரெட் கிளேட்டன் எனும் பெண், தனது காதலர் சிமோன் ஹில் சகிதம் தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
அவ் வீட்டில் தம் இருவருக்கும் வழங்கப்பட்ட கிழங்குப் பொரியல் முழுவதையும் தனது காதலர் உட்கொண்டமை தொடர்பாக அவருடன் டியென் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த வாக்குவாதம் முற்றியநிலையில், காதலர் சிமோன் ஹில்லை, டியென் கத்தியால் குத்தினார். இதனால் சிமோன் ஹில்லின் தோளில் காயம் ஏற்பட்டது.
அவ் வேளையில் டியென் மதுபோதையில் இருந்தார் எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் டியென் மார்கரெட்டுக்கு 26 வார சிறைத் தண்டனை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக செயற்படுத்தபப்ட்டு வந்த ‘ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” (ஜனபதிட கியன்ன) என்ற இணையத்தளத்தினுள் ஊடுருவி அதிலிருந்து தகவல்களை பெற்று அதனை ஊடகவியலாளரொருவருக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேக நபரிடமிருந்த கணினி துணைச்சாதனங்கள், தகவல்கள் என்பவற்றையும் இரகசிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அஹங்கம, கதலுவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு குறித்த இணையத்தளத்தினுள் பிரவேசித்துள்ளார். இந்த இணையத்தளம் மக்களின் நேரடி முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பொதுமக்களினால் அனுப்பப்படும் பிரேரணைகள், மனுக்கள், தனிப்பட்ட குரல்பதிவுகள் மற்றும் கடிதங்கள் போன்ற இலட்சக்கணக்கான தகவல் கோப்புகள் குறித்த இணையத்தளத்திலிருந்து சந்தேக நபரினால் திருடப்பட்டுள்ளது.
இச்சந்தேகநபரினால் களவாடப்பட்ட இந்த கோப்புகள் ஊடகவியலாளரொருவருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த தகவல்கள் காணமல்போயுள்ளமை குறித்து ஜனாதிபதி செயலகம் கடந்த 7ஆம் திகதி இரகசிய பொலிஸாருக்கு அறிவித்திருந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் இந்த தகவல்கள் தனிப்பட்ட நபரொருவரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
அம்மின்னஞ்சல் முகவரிக்கு குறித்த தகவல்களை அனுப்பியிருந்த மின்னஞ்சல் முகவரியை இனங்கண்டுள்ளனர்.
இந்த மின்னஞ்சல் முகவரிக்குரிய அஹங்கம, கதலுவ பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரான இளைஞரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய போது அவர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான் லால்பண்டார உத்தரவிட்டார்.
ஜனாதிபதியின் உதவிச்செயலாளர் சமீர கன்னங்கர பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டுக்கமைய இரகசிய பொலிஸ் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் என்.கே.சேனாரத்ன இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
இது தொடர்பில் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, தான் எவ்வித சிரமமுமின்றி குறித்த இணையத்தளத்தினுள் ஊடுருவியதாகவும், அந்த இணையத்தளத்தினுள் காணப்படும் பொதுமக்களின் மனுக்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்காமை குறித்து தெரியப்படுத்தவே தான் இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு திருடப்பட்ட தகவல்கள் இலத்திரனியல் ஊடக நிறுவனமொன்றில் பணிபுரியும் ஒருவரது உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இதேவேளை, அண்மையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவி, உயர்தரப்பரீட்சையினை ஒத்திவைக்குமாறு அதிலுள்ள தரவுகளை மாற்றி மிரட்டல் விடுத்திருந்த பாடசாலை மாணவரொருவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்பட்டார்.
புலவர் வீடியோ வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அழகான காதல் பாடல்தான் என் இனிய காதலே.
இப் பாடலுக்கான கதை மற்றும் பாடலுருவாக்கத்தினை விஷ்னுவரதன் மேற்கொண்டுள்ளார். மேலும் வின்சன் சிவாவின் இசையிலும் பாடல் வரியிலும் மல்லாவி மைந்தன் நிரோசனின் குரல் மற்றும் தயாரிப்பிலும்ந ரேஷ் மற்றும் தனுஷாவின் அழகிய நடிப்பிலும் மலைநாட்டு சாரலில் அழகாக பாடலாக்கப்பட்டுள்ளது.
கேட்டு மகிழுங்கள் உங்கள் இவர்களது கன்னி முயற்சிக்கு உங்கள் ஆதரவினையும் வழங்குங்கள் உறவுகளே..
ஜுனியர் மிஸ்டர் சிறிலங்காவாக தெரிவாகி புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.
இலங்கை உடற்கட்டு சம்மேளத்தினால் நடாத்தபட்ட 2016 ஆம் ஆண்டு மிஸ்டர் ஸ்ரீலங்கா போட்டியில் புஸ்ஸல்லாவயை சேர்ந்த இந்து தேசிய கல்லூரியின் மாணவன் மாதவன் இராஜகுமாரன் என்பவரே 2016 ஆம் ஆண்டிற்கான ஜுனியர் மிஸ்டர் ஸ்ரீலங்காவாக தெரிவாகியுள்ளார்.
35 போட்டியாளர்களை பின்தள்ளி குறித்த இளைஞன் இந்த பட்டத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக மலையக இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் பல்வேறு சாதனைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
இருந்த போதும் அவர்களுக்கான சந்தர்ப்பங்களும், உதவிகளும்¸ வாய்ப்புக்களும் கிடைக்காத காரணத்தினால் பல சாதனையாளர்கள் தோட்டங்களில் முடங்கி கிடக்கின்றனர்.
வாய்ப்பு கிடைத்தால் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல சாதிக்க பிறந்தவர்கள் என்ற எடுத்துக்காட்டை கூறுகின்றார் இந்த இளைஞர்.
2015 ஆம் ஆண்டும் இதேபோன்றொரு பட்டத்தை குறித்த இளைஞன் பெற்றிருந்தார். இம்மாணவன் புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியில் உயர்தரம் (12) உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த இளைஞனின் வெற்றிகள் தொடர்பான விபரங்கள்
• 2014 – கண்டியில் நடைபெற்ற திறந்த அனைத்து பிரிவினர்களுக்கான ஆணழகர் போட்டியில் மூன்றாம் இடம்.
• 2015 – கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்காக ஹங்வெலயில் நடந்த போட்டியில் முதலாம் இடம்.
• 2016 – தேசிய ரீதியில் நடைபெற்ற மிஸ்டர் நோவிஸ் உடற்கட்டு போட்டியில் 3 ஆம் இடம்.
• கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 2016 தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான திறந்த ஆணழகர் போட்டியில் முதலாம் இடம்.
• தற்போது விமானபடை விளையாட்டு குழுவிற்கும் தெரிவாகி உள்ளார்.
இந்த தொடர் வெற்றிகள் தொடர்பாக மாதவன் ராஜ்குமாரனிடம் வினவிய போது,
இப்போட்டியில் வெற்றி பெற உதவிய எனது பெற்றோர்களான பரமேஸ்வரி மாதவன்¸ இந்து தேசிய கல்லூரி அதிபர்¸ உட்பட ஆசிரியர்கள் கண்டி பவர் ரீ கிரியேட் சென்டர் உரிமையாளர் பாக்கியராஜ் ஐயா அவர்களுக்கும் எனது நன்றிகள்.
மேலும் நுவரெலியா எப்சலூட் ஜிம் உரிமையாளரும்¸ பயிற்றுவிப்பாளருமான அமில தர்மதிலக ஐயா, இப்போட்டிக்கான தொடர்ச்சியாக அனுசரனை வழங்கிய கொழும்பு ஜனதா ஸ்டீல் உரிமையாளர் வாசுதேவன் ஐயா அவர்கள்¸ கொழும்பு டையன் ஸ்டீல் ஹாட்வெயார் உரிமையாளர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் தைப்பொங்கல் தினத்திற்கு முன்தினமான எதிர்வரும் வெள்ளிக்கிழமை(13.01.2017) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்படும் விடுமுறை தினத்திற்று பதிலாக எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை இடம்பெறும் என வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினமான 12 ஆம் திகதி பௌர்ணமி தின விடுமுறை நாளாக உள்ளதாலும், எதிர்வரும் 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினமாக அமைந்துள்ளதை கருத்திற் கொண்டும் வெள்ளிக்கிழமை (13) பாடசாலை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா சிதம்பரபுரம் வன்னிக்கோட்டம் பகுதிக்கு பொறுப்பாக இருக்கும் கிராமசேவையாளரை இடமாற்றம் செய்யுமாறு தெரிவித்து இன்று (10.01.2017) காலை 10.30 மணியளவில் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து பொது நோக்கு மண்டபத்தில் வைத்து வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் ம. ஆனந்தராஜிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.
அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள், தமது பகுதிக்குப் பொறுப்பாக இருக்கும் கிராம சேவையாளர் சிறந்த சேவையினை வழங்கவில்லை எனவும் மாறாக தனக்குத் தேவையானவர்களுக்கு முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும் தமது கிராம நலனில் அக்கறையற்றுச் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
மகஜரினைப் பெற்றுக்கொண்ட ம.ஆனந்தராஜ் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக தனக்கு உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அண்மையில் இப்பகுதி மக்களினால் வீடு பெற்றுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களிடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் சென்று கலந்துரையாடி பொருத்து வீடுகள் பெற்றுக் கொடுப்பதற்கு வவுனியா பிரதேச செயலாளருடன் கலந்துரையடியதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.
மறுபடியும் இன்று குறித்த பகுதியில் கடமையாற்றும் கிராமசேவையாளரை இடமாற்றம் செய்யுமாறு தெரிவித்து விடிவெள்ளி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் மனுக்கொடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா விபுலாநந்தா கல்லூரியிலிருந்து 67மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதாக கல்லூரியின் அதிபர் சு.அமிர்தலிங்கம் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கலைப்பிரிவில் மனோகரன் அபிராமி 2AB சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 19வது இடத்தினையும் லோஜிதா சர்வேஸ்வரன் 2AC சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 33வது இடத்தினையும் ஞானமுத்து அபிறாஜிதன் ABC சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 44வது இடத்தினையும் நாகரெட்ணம் அஜித்குமார் 2AC சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 45வது இடத்தினையும்,
கணிதப்பிரிவில் சிவஞ்ஞானசுந்தரம் கிரிசாந்தன் ABC சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 8வது இடத்தினையும் தவனேந்திரன் றேனுஜன் B2C சித்தியினைப் பெற்று 23வது இடத்தினையும் நாகானந்தக்குமாரன் அஜித்குமார் 2BC சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 13வது இடத்தினையும்,
விஞ்ஞானப் பிரிவில் சிவனேசன் கோபிதன் A2B சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 19வது இடத்தினையும் தர்மராஜா நிதுசன் A2B சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 22வது இடத்தினையும் முருகானந்தம் விதுஷன் 2BC சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 33வது இடத்தினையும்,
வர்த்தகப்பிரிவில் முருகானந்தம் லிதீபன் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 7வது இடத்தினையும் விஜயரட்ணம் கிரிஸ்யான்றாமி 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் மாவட்ட ரீதியில் 16வது இடத்தினையும், இக்றேசியல் டோனியல் பிறவின்ரன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 21வது இடத்தினையும் கனநாதன் கலைச்செல்வன் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில்19வது இடத்தினையும் பெற்றுள்ளனர்.
கணிதப்பிரிவில் 08மாணவர்களும், உயிரியல் பிரிவில் 07மாணவர்களும், கணிதப்பிரிவில் 24 மாணவர்களும் வர்த்தகப்பிரிவில் 28மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கான தகுதியினை பெற்றுள்ளனர்.
அது மட்டுமல்லாது கடந்த வருடத்தினை விட இவ் வருடம் எமது மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
வவுனியா, செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் உள்ள குறித்த ஆலயத்தின் முன்றலில் இருந்த மாதா சொரூபம் நேற்று மாலை விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக அவ்வாலயத்தின் குரு ஜெயபாலன் குரூஸ் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த இடத்தை சென்று பார்வையிட்ட செட்டிகுளம் பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
பொங்கல் நெருங்கும் வேளை வவுனியாவில் சீனியின் விலை கூடியிருப்பதாலும் நுகர்வோர் பாதுகாப்பு சபையின் கட்டுப்பாட்டு விலை காரணமாகவும் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக சிறு வியாபாரத்தில் ஈடுபட்டிருப்போர் விசனம் வெளியிட்டனர். இது குறித்து கருத்து தெரிவித்த வியாபாரி ஒருவர்..
சிறு வியாபாரிகள் வவுனியா நகரில் சீனி கொள்வனவு செய்யும்போது 95 ரூபா வீதம் ஐந்து கிலோகிராம் சீனி மாத்திரமே பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் மூடையாக சீனி பெற்றுக்கொள்ள வேண்டுமானால் கிலோவுக்கு 104 ரூபா வீதம் செலுத்த வேண்டும் என்பதுடன் அதற்கான விலைப்பற்றுச்சீட்டு வழங்க முடியாது என சீனி மொத்த வியாபாரிகள் தெரிவிப்பதாகவும் அதன் காரணமாக நுகர்வோர் பாதுகாப்பு சபையின் கட்டுப்பாட்டு விலையாகிய 95 ரூபாவிற்கு விற்பதற்கு தங்களிடம் போதியளவு சீனி இல்லையென்றும் இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியாது இருப்பதுடன் தைப்பொங்கல் நெருங்கிவரும் இவ்வேளையில் சீனிக்கான செயற்கையான தட்டுப்பாடு பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதன் காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு நடவடிக்கை மேற்கோள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
அண்மையில் வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 53 மாணவர்கள்கள் பல்கலைக்கழகத்திற்கான தகுதியினை பெற்றுள்ளதாக பட்டானிச்சூர் முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ்ரம்சின் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்..
தொழிநுட்பப்பிரிவில் அகிலா 2BC சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 7வது இடத்தினையும் சங்கா அசிஸ் சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 11வது இடத்தினையும்,
வர்த்தகப்பிரிவில் ஜெகதிஸ் கண்ணா 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 10வது இடத்தினையும் நஸ்மிலா 2AB சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 17வது இடத்தினையும் சாஸிதா பர்வீன் A2B சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 61வது இடத்தினையும்
கலைப்பிரிவில் முகமட் கபில் ABC சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 80வது இடத்தினையும், கணிதப்பிரிவில் ஸ்பாக் ABC சித்திகளையும் பயாஸ் 3C சித்திகளையும்
விஞ்ஞானப்பிரிவில் சஸ்மிதா 3B சித்திகளையும், ரிஸ்வான் 2BC சித்திகளையும் சப்னா 3C சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதுடன் 53 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர் என அவர் தெரிவித்தார்.