20 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவியுடன் பேசிய கணவன்!!

ஒரே வீட்டில் கடந்த 20 வருடங்களாக ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளாமல் தம்பதியினர் வாழ்ந்துள்ளனர் என்றால் அதனை நம்ப முடியுமா?இப்படியான கதைகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் அப்படியான சம்பவம் நடந்துள்ளதை அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாகியுள்ளது.இந்த தம்பதி ஜப்பானில் வசித்து வருகின்றனர்.ஒட்டாஹூ நட்டயாமா கடந்த 20 வருடங்களுக்கு பின்னர் தனது மனைவியுடன் பேசியதை அடுத்தே இந்த தகவல் வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்ட இவர்கள் சில குழந்தைகள் பிறக்கும் வரை மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர்.திடீரென ஒரு நாள் ஏற்பட்ட மனகசப்பால் நட்டயாமா மனைவியுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார். எனினும் பிள்ளைகளுக்கு எந்த குறையும் வைக்கவில்லை.

மனைவியும் கடந்த 20 ஆண்டுகளாக கணவருடன் பேசுவதை தவிர்த்துக்கொண்டார். ஒரே வீட்டில் வாழும் தமது தாயும் தந்தையும் பேசிக்கொள்வதை பிள்ளைகள் ஒரு நாள் கூட பார்த்ததில்லை.தனது மனைவி தனது பிள்ளைகளை அதிகமாக நேசிப்பதை பார்த்து தான் கவலையடைந்ததாக நட்டயாமா கூறியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட பொறாமையால், மனைவியுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் தனது செயல் குறித்து தற்போது வருந்துவதாகவும் இனிமேல் அப்படி நடக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

மாணவிகளின் உயிரையும் மானத்தையும் பாதுகாத்த அதிபர்!!

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச்சென்ற புகையிரதத்தில் வெளிநாட்டு பல்கலைகழக மாணவிகள் இருவரின் உயிரையும் மானத்தையும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ளஸ் பாதுகாத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

நேற்றிரவு குறித்த புகையிரதத்தில் மட்டக்களப்பில் தொண்டர் பணியாற்றுவதற்காக ஒருநாட்டின் பல்கலைகழக மாணவிகள் இருவர் வருகை தந்துள்ளனர். அவர்களை 6 இளைஞர்கள் கத்திமுனையில் சுற்றிவளைத்து சிறைப்பிடித்துக்கொண்டிருந்துள்ளனர். சுமார் 3 மணித்தியாலங்களாக இம்மாணவிகள் குறித்த குண்டர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு ஜீவமரணப்போராட்டத்தில் இருந்துள்ளனர்.

புகையிரதத்தில் பயணம் செய்த ஏனைய பயணிகளிடம் குறித்த யுவதிகள் உதவிகோரிய போதும் யாரும் உதவ முன்வரவில்லை. இத்தகவல் அதே புகையிரதத்தில் பயணித்த மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்சின் கவனத்திற்கு எட்டியுள்ளது. அதனையடுத்து உடனடியாக அரசாங்க அதிபர் புகையிரத திணைக்கள பணிப்பாளர் நாயகமான பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

அரை மணிநேரத்தில் சடுதியாக பணிப்பாளர் நாயகம் எடுத்த நடவடிக்கை காரணமாக புகையிரதம் நிறுத்தப்பட்டு பொலஸார் வரவழகைகப்பட்டு சம்பத்தப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுடன் யுவதிகள் பாதுகாப்பாக இரண்டாம் வகுப்புக்கு மாற்றப்பட்டு மட்டக்களப்பில் அவர்கள் செல்லும் இடத்திற்கு பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இத்தகவலை இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவமொன்றின்போது அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.அரசாங்க அதிகாரிகள் திறமையாக செயற்படுகின்றபோது உயிர்களைக்கூட பாதுகாக்கலாம் என்பது தெளிவான விடயம்.

வவுனியாவில் புதுவருடத்தை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள்!!

 
2017ம் ஆண்டின் புதுவருடத்தை முன்னிட்டு வவுனியா தவசிகுளம் பஜனை கோசப்பிரியர் மணிமண்டப குருசாமி பாபுசாமியின் தலைமையில் நேற்று (01.01.2017) காலை 11.30 மணிக்கு தவசிகுளம் ஞானவைரவர் கோயிலில் ஜயப்ப சாமியான பிரசாந்தன் சாமியின் சக்தி பூசை நடைபெற்றது.

இப் பூஜையில் 40 க்கு மேற்பட்ட ஜயப்ப சாமிமார்களும் 100 மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேற்றுக் கிரகவாசிகளை சிறைபிடித்துள்ள அமெரிக்கா!!

 
காலத்திற்கு ஏற்ற நவீன மாற்றம் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. இப்போதைய நவீன பாதை உலகில் மறைக்கப்பட்டு வரும் பல மர்மங்களுக்கு பதில்கள் கிடைக்கப்பெற்று கொண்டு வருகின்றது.

வேற்றுக்கிரகங்கள் தொடர்பில் பல ஆய்வுகள் புதுப்புது வடிவில் செயற்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. 2017 முதல் வேற்றுக்கிரகங்களுடன் தொடர்பு கொள்ளும் முயற்சி கூட வேகமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

என்றாலும் இந்த வேற்றுக்கிரகவாசிகளை இது வரை பூமியில் நேரில் கண்டதற்காக அடித்துக் கூறும் ஆதாரங்கள் வெளிவரவில்லை. ஆனாலும் அவர்களுடைய பறக்கும் தட்டுகளை காட்டும் ஆதாரங்கள் மட்டும் ஏகப்பட்ட அளவில் கிடைக்கத்தான் செய்கின்றது.

இவ்வாறான ஓர் நிலையில் நான் அமெரிக்கா வேற்றுக்கிரகவாசிகளை சிறைப்பிடித்துள்ளதாகவும், அவர்களை தொடர்பு கொண்டு விட்டதாகவும், அவர்களின் தொழில் நுட்பங்களை கொண்டே சர்வதேசத்திற்கு ஆட்டம் காட்டிக்கொண்டு வருகின்றது என்றும் கூறப்படுகின்றது.

கற்பனைக்கு எட்டாத தொழில்நுட்பத்தோடு மிக மிக இரகசியமான வகையில் அமைக்கப்பட்டு உள் நுழையும் அனுமதி கூட கொடுக்கப்படாத ஓர் இடமே ஏரியா 51 எனப்படும் பகுதி.

1990 வரை அமெரிக்க அரசு இந்த இடத்தை வெளி உலகுக்கு கொண்டு வரவில்லை. மிகப் பெரிய இரகசிய இராணுவத்தளமான இது மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நெவேடாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

1955 – 1960 களில் உருவாக்கப்பட்ட இந்த மர்மத் தளம் ஆரம்பத்தில் (NTC) என அழைக்கப்பட்டது. மிக மிக நவீன தொழில்நுட்ப விமானங்கள் நவீன ஆயுதங்கள் , மிக மிக நவீன வெளி உலகுக்கு தெரியாத பல கண்டுபிடிப்புகள் இங்கு காணப்படுகின்றன.

இதன் காரணமாகவே இந்த இடம் மர்மமாக காணப்படுகின்றது. இந்த தளத்திற்கு மேலே விமானங்கள் கூட பறக்கத்தடை. உள்ளே நடக்கும் விடயங்களை பணியாளர்கள் கூட வெளியில் சொல்ல முடியாது என்பது கடுமையான சட்டம்.

பறக்கும் தட்டுகள் கூட இங்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வேற்றுக்கிரகவாசிகள் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பில் பல ஆதாரங்கள் வெளிவந்தாலும் அவற்றை அமெரிக்கா மறுத்து விட்டது.

மற்றொரு வகையில் 1969இற்கு பின்னர் இது வரையில் எவருமே நிலவில் கால் பதிக்க முயலவில்லை. இப்போதைய தொழில் நுட்பத்தில் இலகுவாக நிலவுக்கு சென்று வரலாம் ஏன் அந்த முயற்சியை எவரும் எடுக்க வில்லை என்பது மர்மமே.

அதற்கான விடை ஏரியா 51 இல் அமெரிக்கா வசம் இருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது முதல் நிலவுப் பயணத்தின் போது அங்கு வேற்றுக்கிரக வாசிகளை ஆம்ஸ்ரோங் குழுவினர் அவர்கள் கண்டதாகவும், இந்த விடயம் வெளிவராமல் மறைக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் அங்கிருந்து கொண்டு வந்த ஆய்வு மாதிரிகளில் அவை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அந்த அச்சம் காரணமாகவே நிலவுக்கு மீண்டும் பயணம் செய்ய எவரும் திட்டமிடவில்லை எனவும் கூறப்படுவதோடு.,

அந்த நிலவுப் பயணத்தை பொய் என நிருவிவிடவும் கூட முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. எவ்வாறானாலும் மீண்டும் சாத்தியப்படாத நிலவுப்பயணம் இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தி விட்டது.

இதன் காரணமாகவே வேற்றுக்கிரக ஆய்வுகள் வலுப்படுத்தப்பட்டு கொண்டு வருகின்றது அதற்கான அடித்தளமே ஏரியா 51. இங்கு ஒளிக்கு நிகரான வேகத்தில் பயணிக்க ஆய்வுகள் நடைபெற்று கொண்டு வருவதாகவும் செய்திகள் உள்ளன.

இந்த மர்மத்தளம் மூலமாகவே உலகையே ஆட்டம் காணவைக்கும் தொழில் நுட்பத்தையும், ஆயுதங்களையும் அமெரிக்கா கொண்டு வருகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியோ வேற்றுக் கிரகவாசிகளின் தளமே நிலவு என்று கூறப்படுவதால் அதன் மீது மனித ஆக்ரமிப்புகள் செய்வதற்கு என்னமோ இன்றும் அச்ச நிலையே தொடருகின்றது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

புத்தாண்டில் பிரித்தானியாவில் பிறந்த முதல் குழந்தை இதுதான்!!

பிரித்தானியாவில் இந்த புத்தாண்டில் பிறந்த முதல் குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

பர்மிங்காம் நகரில் அமைந்துள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் குறித்த குழந்தை சரியாக 00.01 மணியளவில் பிறந்துள்ளது.

35 வயதான பார்தி தேவி மற்றும் அஷ்வானி குமார் ஆகியோருக்கு பிறந்த இந்த குழந்தைக்கு Ellina குமாரி என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர். குறித்த குழந்தை பிறந்தபோது 3.08கிலோ எடை இருந்ததாகவும் தற்போது பெருமை பொங்க செவிலியர்களும் பெற்றோர்களும் புத்தாண்டின் புதுவரவான குழந்தையை போட்டி போட்டு கவனித்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Handsworth பகுதியில் குடியிருந்து வரும் இந்த தம்பதிகள் நாளை அல்லது அடுத்த நாள் மருத்துவமனையில் இருந்து தங்கள் குடியிருப்புக்கு செல்வார்கள் என கூறப்படுகிறது.

நள்ளிரவில் குழந்தை பிறக்கலாம் என மருத்துவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்ததால் புத்தாண்டு கொண்டாட்டங்களில் நாட்டம் செல்லவில்லை எனவும், ஆனால் இந்த புத்தாண்டு தற்போது வாழ்நாளில் மறக்க முடியாத புத்தாண்டாக மாறியுள்ளது எனவும் குறித்த தம்பதிகள் பூரிப்புடன் தெரிவித்துள்ளனர்.

புலர்ந்த புத்தாண்டில் பிரித்தானியாவில் பிறந்த முதல் குழந்தை Ellina குமாரி என தெரிய வந்ததில் அகமகிழும் இந்த குடும்பம், குழந்தை பெரியவளானதும் இந்த நிகழ்வினை கண்டிப்பாக அவளுக்கு சொல்ல வேண்டும் என காத்திருக்கிறேன் என்றார் பார்தி தேவி.

தமிழருக்கு சேர் பட்டம் வழங்கி கெளரவித்த மகாராணி இரண்டாம் எலிசபெத்!!

பிரித்தானிய வாழ் தமிழரான சங்கர் பாலசுப்ரமணியனுக்கு சேர் பட்டம் வழங்கி பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கவுரவித்துள்ளார்.

சங்கர் பாலசுப்பிரமணியன்(59), சென்னையை சேர்ந்தவர். இவர் கடந்த 1966 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். அதன் பின்னர் இவரது குடும்பத்தினர் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இவர் பிரித்தானியாவிலும், அமெரிக்காவிலும் உயர் கல்வி பயின்றவர்.

மேலும் பாலசுப்பிரமணியன் அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் அடுத்த தலைமுறை மரபணு வரிசைமுறையை கண்டுபிடிக்கும் பணியில் முக்கியபங்கு ஆற்றி இருக்கிறார். குறிப்பாக சமீபத்தில் இவர் புற்றுநோயில் மரபணு பங்களிப்பை புரிந்து கொள்வதில் பங்களிப்பும் செய்துள்ளார்.

ஆங்கிலப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மருத்துவ வேதியியல் துறையில் சங்கர் பாலசுப்பிரமணியனின் சாதனைகளை பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் கவுரவித்து அவருக்கு கவுரவமிக்க சர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளார்.

ஓருதலைக்காதலால் நடந்த விபரீத சம்பவம்!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தலைக்காதல் காரணமாக கல்லூரி பேராசிரியையை, நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியை சேர்ந்த லின்சி(26) என்பவர் அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தேவாலத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த லின்சியை, நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

இரத்தம் சொட்ட சொட்ட தரையில் வீழ்ந்த லின்சியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையில் தப்பி ஓட முயன்ற அந்நபரையும் பொலிசில் பிடித்து ஒப்படைத்துள்ளனர்.

லின்சியை கத்தியால் குத்திய வாலிபரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் சின்னத்துறையை சேர்ந்த பிஜூ(27), மீன்பிடி தொழிலாளி என்பது தெரியவந்தது.

மேலும் அவர் லின்சியை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு தலை காதலால் பேராசிரியை கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவனை ஏமாற்றி கள்ளக்காதலனுக்கு அல்வா கொடுத்த பெண் பொலிஸ் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!!

தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லாவண்யா(27). இவர் கடந்த 23 ஆம் திகதி பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் மர்ப நபர்கள் இரண்டு பேர் அவர் மீது அசிட் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இதனால் வழிதாங்க முடியாமல் துடிதுடித்த அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதன் பின்னர் பொலிசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பிரபாகரன் என்பவரை சந்தேகத்தின் பேரில் அழைத்து பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் கூறிய வாக்குமூலம் தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், தனக்கும் லாவண்யாவுக்கும் வீடு வாங்குவது தொடர்பாக பழக்கம் ஏற்பட்டதாகவும், அதுவே நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அவர் லாவண்யாவுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் 28 லட்சம் ரூபாய்க்கு வீடும் வாங்கி கொடுத்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில் லாவண்யா திடீரென்று அவருடன் பேச்சுவார்த்தையை குறைத்துள்ளார். இதனால் பிரபாகரன் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் அவர் தன் நண்பர் ஒருவரிடம் லாவண்யா தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவள் பலருடன் தொடர்பு வைத்திருக்கிறாள் என்றும் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இருவருக்கும் தகராறு முற்றியதால், லாவண்யா அவர் அண்ணன் வீட்டிற்கு தனியாக சென்றுள்ளார். இதை அறிந்த பிரபாகரனின் ஆட்கள், அவர் மீது அசிட்டை வீசி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

மேலும் அசிட் வீசப்பட்ட லாவண்யாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது என்றும் அவர் கணவரின் பெயர் சுரேஷ் எனவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புது வருடத்தில் மனைவிக்கு கணவரால் நடந்த சோகம்!!

அதுருகிரிய – பொரளுகொடபார பிரதேசத்தில் இன்று அதிகாலை வீடு ஒன்றில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளம் பெண் சாப்பிட்டு கொண்டிருந்த போது அவரை அவரது கணவரே கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு ஒன்றின் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு கொண்டாட்டம் : மகன் உள்ளிட்ட 12 பேரை சுட்டுத்தள்ளிய பாசக்கார தந்தை!!

பிரேசில் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தந்தை ஒருவர் ஆத்திரத்தில் தமது மகன் உள்ளிட்ட 12 பேரை சுட்டுத்தள்ளிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் காம்பினாஸ் நகரில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் குடியிருந்து வரும் 41 வயதான இசமார பில்லர் என்பவர் தமது கணவர் சிட்னே ராமிஸ்(46) என்பவரை பிரிந்து தமது மகனுடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் மகனை தமக்கு விட்டுத்தருமாறு சிட்னே பலமுறை தமது முன்னாள் மனைவியிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளார். ஆனால் எக்காரணம் கொண்டும் மகனை விட்டுத்தர முடியாது என இசமாரா உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதனிடையே இன்று இசமாரவின் இல்லத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது துப்பாக்கியுடன் நுழைந்த சிட்னே அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் இசமரா மற்றும் அவர் மகன் உள்ளிட்ட 12 பேர் சம்பவயிடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடி திடிக்க உயிரிழந்துள்ளனர்.

தொடர் துப்பாக்கி சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வானவேடிக்கை என முதலில் கருதியுள்ளனர். பின்னரே அது துப்பாக்கி சத்தம் எனவும், சம்பவம் நடந்த குடியிருப்பு நோக்கி விரைந்தும் உள்ளனர்.

இதனிடையே தகவலறிந்து வந்த பொலிசார் காயமடைந்து உயிருக்கு போராடிய 15 நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர்களை உடல்களை மீட்டு உடற்கூறு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவத்தின்போது 2 பேர் அங்கிருந்து தப்பி குளியல் அறைக்குள் புகுந்து உயிர் தப்பியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்தப்படுவதன் முன்னர் பதிவு செய்த ஓடியோ பதிவு ஒன்றை தமது மகனது காரின் உள்ளே வைத்துள்ளார். அதில் நடக்கவிருக்கும் சம்பவத்திற்கு மன்னிப்பும் கோரியுள்ளார் அந்த பாசக்கார தந்தை.

உயர்தர பரீட்சை பெறுபேறுகனைத் தாமதித்தல் மாணவர்களுக்கு செய்யும் அநீதி : இலங்கை ஆசிரியர்கள் சங்கம்!!

இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளைத் தாமதித்தல் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியென இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜனவரி 12ஆம் திகதியளவிலேயே பரீட்சை முடிவுகள் வெளியாகுமெனத் தெரிவித்திருக்கிறார்.

சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் தோற்றிய பிரயோகப் பரீட்சையின் பெறுபேறுகள் தாமதமாவதால் முழுப் பெறுபேறுகளும் தாமதமாகவுள்ளதாக அவர் தெரிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாதென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

யாழ்ப்பாணம் – இந்தியாவுக்கு இடையில் 32 வருடங்களின் பின்னர் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்!!

32 வருடங்களின் பின்னர் இன்று முதல் யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கு இடையில் பயணிகள் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள திருவாதிரை திருவிழாவில் கலந்துக் கொள்வதற்கு வடக்கு மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த சேவை முன்னெடுக்கப்படுகிறது.

இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை குறித்த திருவிழா இடம்பெறவுள்ளது. வட மாகாணத்தின் 2000 பக்கதர்கள் அதில் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பயண கட்டணம், விசா கட்டணம் ஆகியவைகள் பக்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால் இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு குறித்த கப்பல் சேவைக்கான அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த சேவை நீண்ட காலம் செயற்படுத்தும் ஒன்று அல்ல என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் வடக்கிற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை 3 தசாப்த்தங்களின் பின்னர் இன்று ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன் ஊடாக நிஜமான முத்த பரிமாற்ற உணர்வு!!

ஸ்மார்ட் கைப்­பே­சி­களின் ஊடாக, நிஜத்தில் முத்­த­மொன்று கொடுக்கும் போது உண்­டாகும் உணர்­வினை ஏற்­ப­டுத்தும் வகையில் முத்­தங்­களை பரி­மா­றக்­கூ­டிய புதிய கைத்­தொ­லை­பேசி துணை உப­க­ரணம் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இது முற்­றிலும் உண்­மை­யா­னதும் நம்­ப­மு­டி­யா­த­து­மான கண்­டு­பி­டிப்­பாகும். லண்­ட­னி­லுள்ள பல்­க­லைக்­க­ழ­க­மொன்றில் கல்வி கற்­று­வரும் எமா யென் சென் என்ற மாணவி ஒரு­வ­ரினால் இவ்­வ­கை­யான முத்தப் பரி­மாற்ற உப­க­ரணம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த உப­க­ர­ணத்­துக்கு ‘KISSENGER’ என அவர் பெய­ரிட்­டுள்ளார்.

தற்­போது இந்த கண்­டு­பி­டிப்பு பரீட்­சார்த்த மட்­டத்தில் காணப்­ப­டு­கின்ற போதிலும் மிகவும் விரை­வாக இதனை முழு­மைப்­ப­டுத்­த­வுள்­ள­தாக சென் தெரி­வித்­துள்ளார்.

கிஸெஞ்சர் எனப்­படும் இந்த உப­க­ர­ணத்தை ஸ்மார்ட் கைப்­பே­சி­களில் பொருத்­தி­யதன் பின்னர் அதன்­மூலம் முத்­த­மிட முடியும் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

தற்­போதை கால­கட்­டத்தில் காத­லர்கள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் கைப்­பே­சி­களின் மூலம் முத்­தத்­தினை பரி­மாற்­றிக்­கொண்­டாலும் அது வெறும் ஒலி வடி­வத்­தி­லேயே காணப்­படும் எனவும் இந்த உப­க­ர­ணத்தில் காணப்­படும் உணரி அதா­வது சென்ஸர் மூலம் உணர்ச்­சி­க­ர­மா­ன­தான முத்­தப்­ப­ரி­மாற்­றத்­தினை மேற்­கொள்­ள­ மு­டி­யு­மெ­னவும் அதன்­போது நிஜத்தில் முத்­தத்தை பெறு­வ­தனை போன்று உண­ர ­மு­டி­யு­மெ­னவும் சென் தெரி­வித்­துள்ளார்.

எனினும் இந்த உப­க­ர­ணத்தின் குறைப்­பா­டொன்­றாக கரு­தப்­ப­டு­வது, இது ஐபோன் கைப்­பே­சி­க­ளுடன் மாத்­தி­ரமே உப­யோ­கிக்க கூடி­ய­வா­றாக வடி­வ­மைக்கப் பட்டுள்ளமையாகும்.

எவ்வாறாயினும் எதிர்காலத்தில் ஏனைய ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களும் பயனடையும் விதத்தில் இதனை மாற்றியமைப் பதற்கான முயற்சிகளை மேற் கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்க அரசாங்கம் தீர்மானம்!!

வறிய பாடசாலை மாணவ மாணவியருக்கு இலவச மதிய உணவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வறுமையில் வாடும் பாடசாலை மாணவ மாணவியருக்கு இலவசமாக காலையில் பாலும் மதியம் உணவும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கொழும்பு ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்..

பாடசாலை மாணவ மாணவியருக்கான புதிய காப்புறுதி திட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளது. தனியார், அரச பாடசாலைகள் என பேதம் பாராட்டாது அனைத்து பாடசாலை மாணவ மாணவியருக்கும் மருத்துவ காப்புறுதி வழங்கப்பட உள்ளது.

சுமார் ஒரு லட்சம் ரூபா வரையிலான காப்புறுதி தொகை வழங்கப்பட உள்ளது.காப்புறுதி வழங்குவதற்காக இந்த ஆண்டில் 2700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வறிய பாடசாலை மாணவர்களுக்கு மாகாண மட்டத்தில் காலணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

வசதிகள் குறைந்த 1500 பாடசாலைகளுக்கு மின்சாரம், நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கல்வி அமைச்சிற்கு 7000 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பறந்­து­ கொண்­டி­ருந்த ஹெலி­யி­ருந்து நபர் ஒரு­வரை வெளியில் தள்ளி கொலை செய்தேன் : பிலிப்பைன்ஸ் ஜனா­தி­பதி!!

பறந்­து­கொண்­டி­ருந்த ஹெலி­கொப்டர் ஒன்­றி­லி­ருந்து நபர் ஒரு­வரை தான் வெளியே தள்ளி கொன்­ற­தாக பிலிப்பைன்ஸ் ஜனா­தி­பதி ரொட்­றிகோ டுவார்ட்டே கூறினார் என பத்­தி­ரி­கை­யொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

பிலிப்­பைன்ஸில் போதைப் பொருள் கடத்­தல்­கா­ரர்கள், விற்­ப­னை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக அதி­ரடி நடவடிக்கை மேற்­கொண்டு வரு­பவர் ஜனா­தி­பதி டுவார்ட்டே.

போதைப் ­பொருள் விற்­ப­னையில் ஈடு­பட்­ட­தாக கூறப்­படும் நூற்­றுக்­க­ணக்­கானோர் சுட்­டுக் ­கொல்­லப்­பட்­டுள்­ள­துடன் ஏரா­ள­மா­னனோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இது தொடர்­பான அமெ­ரிக்கா முத­லான நாடுகள் மற்றும் மற்றும் ஐ.நாவின் கண்­ட­னங்­க­ளையும் ஜனா­தி­பதி ரொட்­றிகோ டுவார்டே புறக்­க­ணித்து வரு­கிறார்.

டாவோ நகர மேய­ராக தான் பதவி வகித்த காலத்தில், போதைப் ­பொருள் விற்­ப­னை­யா­ளர்­களைத் தேடி பொலி­ஸா­ருடன் இணைந்து முற்­று­கையில் ஈடு­பட்­ட­துடன் போதைப் பொருள் விற்­ப­னை­யாளர் ஒரு­வரை சுட்­டுக்­கொன்­ற­தா­கவும் சில வாரங்­க­ளுக்கு முன்னர் ஜனா­தி­பதி டுவார்ட்டே கூறி­யி­ருந்தார்.

இந்­நி­லையில், பறந்­து­ கொண்­டி­ருந்த ஹெலி­கொப்டர் ஒன்­றி­லி­ருந்து நபர் ஒரு­வரை வெளியே தள்­ளி­ய­தா­கவும் ஜனா­தி­பதி டுவார்ட்டே செவ்­வி­யொன்றில் கூறி­ய­தாக பிலிப்பைன்ஸ் பத்­தி­ரிகை ஒன்று செய்தி வெளி­யிட்­டது.

ஹெலி­கொப்டர் ஒன்றில் தான் பயணம் செய்­த ­போது அந்த ஹெலி­கொப்­டரை கடத்­து­வ­தற்கு முயன்ற நபர் ஒரு­வ­ரையே இவ்­வாறு தான் வெளியில் தள்­ளி­ய­தா­கவும் ஜனா­தி­பதி டுவார்ட்டே கூறி­யுள்ளார்.
தேவை­யானால் மீண்டும் அவ்­வாறு செய்­வ­தற்கும் தான் தயார் எனவும் அவர் கூறி­யுள்ளார்.

நீங்கள் ஊழல் பேர்­வ­ழி­யானால், உங்­களை ஹெலி­கொப்­டரில் ஏற்றி, தலை­நகர் மணி­லா­வுக்குச் செல்லும் வழயில் ஹெலி­கொப்­ட­ரி­லி­ருந்து வெளியில் தள்­ளுவேன் என அவர் கூறியதாகவும் மேற்படி பத்திரிகை தெரிவித்தது.

ஆனால், இவ்வாரம் மீண்டும் அவரிடம் இது குறித்து வினவப்பட்ட போது, அக்கூற்றை நிராகரிக்கும் வகையில் அவர் பதிலளித்துள்ளார்.

கைத்­தொ­லை­பே­சி­க­ளுக்­காக விசேட கழி­வறை கட­தாசி : ஜப்பானிய விமான நிலைய கழி­வ­றை­களில் அறி­முகம்!!

 
கைத்தொ­லை­பே­சி­க­ளுக்­கான கழி­வறை கட­தாசி ஜப்­பானில் அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது. டோக்கியோ நக­ரி­லுள்ள நரீட்டா சர்­வ­தேச விமான நிலையத்தின் கழி­வ­றை­களில் இந்த ஸ்மார்ட்போன் டொய்லெட் பேப்பர் சுருள்கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன.

ஜப்­பா­னிய டெலிகொம் நிறு­வ­ன­மான என்.ரி.ரி. டெகோமோ எனும் இந்­நி­று­வ­னமே கைத்­தொலைபே­சி­க­ளுக்­கான நவீன கழி­வறை கட­தா­சி­களை பொருத்­தி­யுள்­ளது.

ஸ்மார்ட்போன் ஸ்கிறீன்­களில் அதிக கிரு­மிகள் பர­வி­யி­ருப்­ப­தாக ஆய்­வு­களில் கண்­ட­றி­யப்­பட்­ட­தை­ய­டுத்து, மக்கள் தமது ஸ்மார்ட்­போன்­களை சுகா­தா­ர­மாக பாது­காத்­துக்­கொள்­வ­தற்­காக ஸ்மார்ட்போன் டொய்லெட் பேப்­பர்­களை தயா­ரிக்கும் யோசனை முன்­வைக்­கப்­பட்­டது.

நரீட்டா சர்­வ­தேச விமான நிலை­யத்தின் கழி­வ­றை­க­ளுக்கு எதிர்­வரும் மார்ச் 15 ஆம் திகதிவரை தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன் டொய்லெட் பேப்பர்கள் விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.