ரயில் பாதையில் நடந்து செல்வதனால் ஒரு மாதத்தில் 30 பேர் உயிரிழப்பதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் பி.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
வருடத்துக்கு இந்த எண்ணிக்கை 360ற்கும் அதிகமாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், ரயில் பாதைகளில் நடந்து செல்வது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த பாதையில் நடந்து செல்வோர் பிடிக்கப்பட்டால் அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
விமான பயண கட்டணங்கள் இந்த வருடத்தில் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமான நிலையத்தில் விமான பயணம் அல்லது கப்பலில் பயணம் மேற்கொள்ளும் போது, செலுத்த வேண்டிய வரி (Airport tax) இந்த மாதம் முதல் 50 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தமாகும்.
அதற்கமைய இதுவரை 30 அமெரிக்க டொலராக காணப்பட்ட இந்த விமான நிலை வரி, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் திகதியில் இருந்து 50 டொலர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
2016 வரவு செலவுத்திட்ட யோசனை மூலம் இந்த வரி 25 முதல் 30 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கப்பட்டிருந்தன.
இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் போது டிக்கட்டிற்காக செலுத்த வேண்டிய கட்டணம் 3000 ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, விமான பயண பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா இராசேந்திரங்குளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட விக்ஸ்காடு என அழைக்கப்படும் கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக தெரியவருகிறது.
பல்வேறு இடங்களிலிருந்து யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து அகதிகளாக வவுனியாவிற்கு வந்த மக்கள் அகதிமுகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் வசித்துவந்த நிலையில் 2008ம் ஆண்டு பற்றைகளும் முட்செடிகளும் நிறைந்து காணப்படும் விக்ஸ்காடு என அழைக்கப்படும் பகுதியில் சுயமாகக் குடியேறியிருந்த நிலையில் யுத்தம் முடிவடைந்து பின்னரான காலப்பகுதியில் அம் மக்களுக்கான வாக்குரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்றையதினம் திடீரென விக்ஸ் காட்டு கிராமத்திற்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள் அம் மக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளதுடன், காடு வெட்டியதாக கிராம மக்கள் மீது குற்றஞ்சாட்டி நாளைய தினம் வவுனியாவில் அமைந்துள்ள வனத்துறையினரின் அலுவலகத்திற்கு வருமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையிலே இன்று இராசேந்திரன்குளம் விக்ஸ் காட்டுப் பகுதியில் வசித்து வரும் 30 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (02.01.2017) காலை 9 மணியளவில் அரசாங்க அதிபர் எம்.பி.றோஹன புஸ்பகுமார தலைமையில் அரச ஊழியர்கள் சத்தியப்பிரமாண நிகழ்வுகள் இடம்பெற்றது.
தேசியக்கொடியேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சமய மதத் தலைவர்களின் ஆசிச் செய்தியினையடுத்து அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமானம் இடம்பெற்றது.
மாவட்ட செயலகத்தின் அனைத்து நிர்வாகக் கிளைகளில் பணபுரியும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு தமது சத்தியப்பிரமாணத்தினை மேற்கொண்டனர்.
வவுனியாவில் இன்று (02.01.2016) மாலை 5 மணியளவில் சிறுமி ஒருவரை கடத்தும் முயற்சி வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து முறியடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,
சமூகவலைத்தளம் மூலமாக தொடர்பினை மட்டக்களப்பிலிருந்து ஏற்படுத்திய இளைஞர் ஒருவர் சுந்தரபுரம் பகுதியிலுள்ள 16 வயது சிறுமியுடன் தொடர்பினை ஏற்படுத்தி பல காலமாக பழகிவந்துள்ளார்
தொடர்ந்து அச் சிறுமியை இன்று (02.01.2016) மாலை வவுனியா பேரூந்து நிலையத்திற்கு வருமாறு குறித்த இளைஞன் அழைத்துள்ளார். குறித்த சிறுமியும் இளைஞனின் வார்த்தைக்கு இணங்கி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உடுதுணிகளை எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.
சிறுமி வீட்டிலிருந்து வெளியேறுவதாக தந்தைக்கு அயலவர்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. தந்தை உடனடியாக வவுனியா வர்த்தக நிலையத்தில் பணபுரியும் உறவினருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
பேரூந்து நிலையத்தில் சிறுமி பேரூந்தில் வந்து இறங்கியதும் குறித்த இளைஞர் பேரூந்து தரிப்பிடத்தில் சிறுமியை அழைத்துச் செல்லத் தயாராக இருந்ததையடுத்து காத்திருந்த உறவினர்கள் குறித்த இருவரையும் கடுமையாகத்தாகியதுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா ஒமந்தை பண்றிக்கெய்தகுளத்திலிருந்து இன்று (02.01.2016) காலை 11 மணியளவில் தாயும் மகனும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்தே, இளம் தாய் ஒருவரும் அவரது 7 வயது மகனும் இன்று இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கிராம அலுவலர் அலுவலகத்திற்கு சென்றிருந்த, உயிரிழந்த பெண்ணின் மாமியார் வீட்டிற்கு வந்து பார்த்த போது தாயும் மகனும் வீட்டில் இல்லாத நிலையில் அவர்களை தேடியுள்ளனர்.
இதன்போதே அவர்கள் இருவரும் சடலங்களாக கிணற்றில் காணப்படுவதை தேடியவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரின் உதவியுடன் குறித்த தாயும் மகனும் வீட்டின் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
30 வயதான சதீஸ்வரன் சுதாசினி மற்றும் 7 வயது அவரது மகன் சதீஸ்வரன் டினோஸன் என்பவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நைஜீரியா நாட்டில் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்ய முயற்சித்த 80 வயதுடைய வயோதிப பெண்ணினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ள மின்சார கம்பத்தில் ஏறிய வயோதிப பெண் மின்வடத்தினை பிடித்துள்ளார். அச்சமயத்தில் அதிஷ்டவசமாக அவ் மின்வடத்தில் மின்னோட்டம் இல்லாமையினால் அவர் உயிர் பிழைத்துள்ளார்.
பிறகு அப்பகுதியில் இருந்தவர்களின் முயற்சியினால் அவ்வயோதிப பெண் மின் கம்பத்தில் இருந்து கீழ் இறங்கியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கடந்த 10 வருடங்களாக பணியாற்றிய தென்கொரியாவைச் சேர்ந்த பான் கீ மூன் சேவை காலம் முடிந்த நிலையில் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் தனது பதவியிலிருந்து விடைபெற்றுள்ளார்.மேலும் நியூயோர்க்கில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் பேசியுள்ள பான் கீ மூன்,
2007 ஆம் ஆண்டிலிருந்து 2016 வரை தான் செய்த பணிகளை நினைவு கூர்ந்துள்ளதோடு எதிர்வரும் நாட்கள் தன்னை சாதாரண மனிதனாக மாற்றப்போவதாக தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அடுத்தா ஐநா பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த ஹெடோனியோ கட்டர்ஸ் விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியில்,
உலக மக்களை அமைதிக்காக வழிநடத்த திட்டமிட்டுள்ளதாகவும் எதிர்கால உலக சமாதானத்திற்கான தனது அயராத பணிகளை தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பெண்கள் அனைவரையும் அழகாக காட்டுவது அவர்களின் ஸ்லிம்மான இடை அழகு தான்.எனவே பெண்கள் தங்களின் இடையை எப்போதும் ஸ்லிம்மாக மற்றும் அழகாக பராமரிப்பதற்கு, தினமும் இந்த பயிற்சியை மட்டும் மறக்காமல் செய்து வந்தாலே போதும்.ஸ்லிம்மான இடை அழகை பெற என்ன செய்ய வேண்டும்?
முதலில் விரிப்பில் குப்புற படுத்து, காலின் முன் பாதத்தை தரையில் ஊன்றி, கைகளை முட்டி வரை மடக்கி தரையில் வைக்க வேண்டும்.
இந்த பயிற்சியை செய்யும் போது, நம்முடைய உடல் எடை முழுவதையும் கை முட்டி மற்றும் கால்களின் முன்பாதங்கள் தாங்கி இருக்குமாறு செய்ய வேண்டும்.பின் நமது தலையை தரையை பார்த்தபடி வைத்துக் கொண்டு மெதுவாக உடலை மேலே தூக்கி பின் கீழே இறக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 10 விநாடிகள் செய்து வர வேண்டும்.
மேலும் இந்த பயிற்சியை செய்யும் போது, உடலை வளைக்காமல், நேராக இருக்குமாறு செய்ய வேண்டும்.
தினமும் 5 நிமிடம் இந்த பயிற்சியை செய்து வந்தால், ஒரு வாரத்திலே நமது உடல் இடையின் அளவில் மாற்றம் ஏற்படுவதைக் காணலாம்.
குறிப்பு
இடையை அழகாக்கும் இந்த உடற்பயிற்சியை செய்யும் போது, வயிறு மற்றும் பின் தசையை, உறுதிப்படுத்தி, பின் தசைகள் மற்றும் கால்களின் தசைகளை கடினமாக்கி செய்ய வேண்டும்.
நடிகை நயன்தாராவுக்கு 2017 ம் ஆண்டும் ஒரு சிறந்த ஆண்டாக இருக்கப்போகிறது என்பதற்கு மாற்று கருத்தே இல்லை.’அறம்’, ‘டோரா’ மற்றும் ‘கொலையுதிர் காலம்’ – அவருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொண்ட கதைகளை வரிசையாக கமிட் செய்துவைத்துள்ளார் .
அடுத்து அவர் ஒப்புக் கொண்டுள்ள படமும் ஹீரோயின் ஓரியன்டட்தான். புதிய இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கும் இந்தப் படத்தை ஈராஸ் சவுத் நிறுவனம் தயாரிக்கிறது.
பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, மங்கோலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மங்கோலியாவில் படமாகும் முதல் படம் இதுதான். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார்.வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்தில் தனது உறவுகளைத் தேடி நாடு நாடாக அலையும் பெண் பத்திரிகையாளராக நடிக்கிறார் நயன்தாரா.
தொலைக்காட்சியில் இருந்து வந்து ஹீரோவாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.சென்ற வருடம் தனக்கு எப்படி இருந்தது என தற்போது அவர் தன் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சென்ற வருடம் அவருக்கு ரஜினி முருகன், ரெமோ ஆகிய இருபடங்களும் பெரிய வெற்றியை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.
இளையதளபதி விஜய்யின் தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நைனிகா. நடிகை மீனாவின் மகளான இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
இதில் பேசிய இவர், விஜய் அங்கிளும், தனுஷ் அங்கிளும் மிகவும் பிடிக்கும் என்றார். இவரது பிறந்த நாளையொட்டி தனுஷ் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.அப்போது நைனிகா என்கூட எப்போ நடிக்க போறீங்க என்று கேட்டதும் தனுஷ்கூ, உன்னுடன் நடிக்க நான் காத்துக்கொண்டிருக்கிறேன்டி கூடிய விரைவில் நடிக்கிறேன் என்றார்.
அவுஸ்திரேலிய டி20 அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் பொண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையேயான டி20 தொடர் பிப்ரவரி மாதம் 17 ஆம் திகதி மெல்போர்னில் தொடங்கவுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய டி20 அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் மற்றும் உதவி பயிற்சியாளராக ஜேசன் ஜில்லஸ்பி ஆகியோர் உள்ளனர்.இந்நிலையில், தற்போது இவர்களுடன் சேர்ந்து துணைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரிக்கி பொண்டிங் பணியாற்றுவார் என கிரிக்கெட் அவுஸ்திரேலியா (CA) தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பாக பான்டிங் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இரு தொடர்களுக்கு இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இந்த டி20 தொடருக்கு பின் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் அவுஸ்திரேலிய அணிக்கு இவர்கள் மூவரும் பயிற்சி கொடுப்பார்கள் என தெரிகிறது.
இது குறித்து பொண்டிங் கூறியதாவது, லாங்கர், கில்லஸ்பியுடன் இணைந்து பணியாற்ற உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், மிகவும் திறமை வாய்ந்த வீரர்கள் அவுஸ்திரேலிய அணியில் உள்ளனர். இவர்களை கொண்டு வலுவான டி-20 அணியை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 8.7 கிலோ தங்கக் கட்டிகள் தமிழகத்தின் இராமநாதபுரம் அருகே கைப்பற்றப்பட்டுள்ளன.இலங்கையிலிருந்து இராமேசுவரம் வழியாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை மண்டல வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதன்படி அதிகாரிகள் சனிக்கிழமை நள்ளிரவு இராமநாதபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதன்போது உச்சிப்புளி ரயில்வே கடவு பகுதி வழியாக வந்த ஒரு காரில் சாரதியின் இருக்கைக்கு அடியில் இருந்து தலா 100 கிராம் எடையுள்ள 87 தங்கக் கட்டிகள் (8.7 கிலோ) கைப்பற்றப்பட்டுள்ளன.
24 கரட் சுத்தத் தங்கமான குறித்த தங்கக் கட்டிகள் அனைத்தையும், காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி, அவரது பெயர் முஜிபுர் ரகுமான் (31) என்பது மட்டுமே தெரியவந்தது என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், தங்கக் கட்டிகளை யார் கொடுத்து அனுப்பியது, கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார் என்று அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அத்துடன், இலங்கையிலிருந்து மீன்பிடி படகுகள் மூலம் இந்த தங்கம் இராமேசுவரம் கொண்டு வரப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏறாவூர் – தளவாய்க் கிராமத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சிறுவன் ஒருவர் திடீரென விழுந்து மரணித்தமைக்கு சுவாசக் குழாயில் பலூன் அடைத்ததே காரணம் என தெரியவந்துள்ளது.உடற் கூற்றுப்பரிசோதனையில் சுவாசக் குழாயை பலூன் அடைத்ததாலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தாண்டு தினத்தை வரவேற்பதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட தேவாலயத்தில் பலூன் ஊதி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.திடீரென மயங்கி விழுந்த குறித்த சிறுவனை உடனடியாக நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் உயிரிழந்த சிறுவனின் உடற்கூற்றுப்பரிசோதனை நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி ஸ்ரீராம் ஜெயக்கொடி மேற்கொண்ட உடற் கூற்றுப் பரிசோதனையின் போது, சிறுவன் ஊதி வெடித்துச் சிதறிய பலூனின் இறப்பர் துண்டுகள் சிறுவனின் சுவாசக் குழாயை இறுக அடைத்துக் கொண்டதாலேயே சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி மரணித்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய்க் கிராமத்தைச் சேர்ந்த தயாகரன் மதுஷான் என்ற சிறுவன் இவ்வாறு மரணித்திருந்தார்.இதேவேளை, விசாரணைகளின் பின்னர் குறித்த சிறுவனின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர்களுக்கு செவ்வாய் கிரகத்தில் நாகரிகமான உயிரினங்கள் வாழ்ந்தன என்பதை உறுதிப்படுத்தக் கூடிய சான்று கிடைத்துள்ளதாக நம்பப்படுகிறது.செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை போன்ற உயிரினம் வாழ்ந்தனர் என்பதை நம்பும் வகையிலான கரண்டி வடிவிலான மிகப் பெரிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட புகைப்பட காணொளி ஒன்றை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மோதிரங்கள், கையுறைகள் போன்ற பிற பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன.இவை செவ்வாயில் நாகரிகமான உயிரினங்கள் வாழ்த்தமைக்கான சிறந்த சான்றுகள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாயில் மிகப் பெரிய கரண்டி இருப்பது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இது அங்கு நாகரிகமான உயிரினம் வாழ்த்தமைக்கான சிறந்த சான்று எனவும் அவர் கூறியுள்ளனர்.