சர்ச்சை சாமியாரான நித்தியானந்தா பல பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபலமான சாமியாராக வலம் வந்த நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா உடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோவால் சர்ச்சையில் சிக்கினார்.
இதைத் தொடர்ந்து அவரை பற்றி பெண்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தபடி இருந்தன.
ஆனால் அதையெல்லாம் தன் காதில் வாங்கிக் கொள்ளாத நித்தியானந்தா தனது வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்.
நீண்ட காலமாக இவரைப் பற்றிய செய்திகள் ஏதும் வெளியாகாத நிலையில், தற்போது அவர் தன் கெட்-அப்பை மாற்றி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண்கள் பலருடனும் நெருக்கமாக இருக்கும் அவருடைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
புதுவருட தினத்தில் வவுனியா, நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற குழு மோதலையடுத்து மோட்டர் வண்டி ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
வவுனியா, நெடுங்கேணி, கற்குளம் சந்தியில் புதுவருட தினமான ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவரின் மோட்டார் வண்டி ஒன்றுக்கு தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கூட்டமைப்பின் நெடுங்கேணி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ம.செந்தூரன் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணையை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவா் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதான அம்பிகைபாலன் ஜெகதீஸ்வரி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளாா்.
தற்கொலை செய்யும் முன் அவர் எழுதியதாக சந்தேகிப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், கணவன் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும், அவர் திரும்பி வரவில்லை எனவும் தனது காணியை விற்று தான் பெற்ற கடன்களை செலுத்துமாறும், தனது இறுதி கிரிகைகள் முடிந்ததும் பிள்ளைகளை சிறுவர் விடுதியில் சேர்த்துவடுமாறும் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணவனால் கைவிடப்பட்டுள்ள குறித்த பெண்ணுக்கு 12 மற்றும் 3 வயதில் பெண் பிள்ளைகளும், எட்டு வயதில் ஒரு மகனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புதுகுடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் உள்ள பிரம்மாண்ட பங்களாவான Shire Hall ஒரு பவுண்டிற்கு விற்கப்பட்டிருக்கிறது.
பிரித்தானியாவின் வேல்ஸ் மாநகரில் அமைந்திருக்கும் பிரம்மாண்டமான பங்களா Shire Hall. இது மிகவும் உலகபுகழ் பெற்றது. இது ஒரு காலத்தில் நீதிபதிகள் ஓய்வெடுக்கும் மாளிகையாக இருந்து வந்தது.
Shire Hall தற்போது 190 வயதை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. நீதிபதிகள் இதை ஓய்வெடுக்கும் பங்களாவாக சுமார் 46 ஆண்டுகளுக்கு முன்னர் வரை பயன்படுத்தினர். அதன் பின்னர் இந்த கட்டிடம் ஒரு தொண்டு நிறுவனத்திடம் ஒரு பவுண்ட்டிற்கு விற்கப்பட்டிருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் மியூசியமாக மாற்றப்பட்ட அந்த மாளிகையை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இனி அந்த சுற்றுலா வருவாய் முழுக்க அந்த தொண்டு நிறுவனத்திற்குச் செல்லும் என கூறப்படுகிறது.
மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு கிடைத்த பேரதிஷ்டம் தொடர்பான சம்பவம் ஒன்று கற்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கிலத்தின் கழிவு அல்லது அம்பர் எனப்படும் அரியவகை பொருள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 34 கிலோ கிராம் நிறையுடைய அம்பர் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதனை எடுத்து வந்த மீனவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த மீனவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த மீனவர்களினால் கொண்டுவரப்பட்ட அம்பர் எனப்படும், திமிங்கிலத்தின் கழிவு ஒரு கிலோ கிராம் ஒரு கோடிக்கும் அதிகம் என கூறப்படுகின்றது.
அம்பர் எனப்படும் இந்த திமிங்கில கழிவுப் பொருளைக்கொண்டு வாசனைத்திரவியம், மருந்துப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறக்கின்ற ஒவ்வொரு புது வருடத்திலும், ஏதேனும் வித்தியாசமான, புதுமையான சம்பவங்கள் இடம்பெறுமா என அனைவரும் எதிர்பார்ப்பது வழமையான ஒன்று.
இவ்வாறான நிலையில் ஆண்டின் ஆரம்பத்திலேயே வித்தியாசமான சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அதுவும் விமான போக்குவரத்தில் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான UA890 என்ற போயிங் விமானம் 2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தனது பயணத்தை ஆரம்பித்து, 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி தரையிறங்கியுள்ளது.
குறித்த விமானம் 2017ஆம் ஆண்டு பயணத்தை ஆரம்பித்து 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி சென்பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவிலிருந்து அமெரிக்கா சென்ற விமானமே இவ்வாறு சென்பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நேர வித்தியாசமே இந்த நிலைக்கு காரணமாகும்.
குறைந்த செலவில் செயற்கை சுவாச இயந்திரமொன்றை இலங்கை மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இந்த செயற்கை சுவாச இயந்திரத்தை இலகுவில் எடுத்துச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுராதபுரம் போதான வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்களில் ஒருவரான டொக்டர் துலான் சமரவீரவே இவ்வாறு நவீன சுவாச இயந்திரத்தை கண்டு பிடித்துள்ளார். தனது கண்டு பிடிப்பு பற்றி கூறுகையில்..
வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம் செய்யும் வரையில் இந்த புதிய கருவியின் மூலம் சுவாசம் வழங்கப்பட முடியும்.
வைத்தியசாலை ஒன்றிலிருந்து மற்றுமொரு வைத்தியசாலைக்கு நோயாளியை காவிச் செல்லும் போது நோயாளர் காவு வாகனத்தின் பற்றரியில் இந்த இயந்திரத்தைப் பொருத்தி செயற்கை சுவாசத்தை நோயாளிகளுக்கு வழங்க முடியும்.
தற்போது பலூன் போன்ற ஓர் இயந்திரத்தை நோயாளர் காவு வண்டியில் செல்லும் மருத்துவர் அல்லது தாதி அழுத்தி அழுத்தி சுவாசத்தை வழங்க வேண்டியிருக்கின்றது.
4-5 மணித்தியால பயணம் என்றால் இவ்வாறு தொடர்ச்சியாக அழுத்தி அழுத்தி செயற்கை சுவாசம் வழங்குவது சிரமமான காரியமாகும்.
பிரதான வைத்தியசாலையில் செயற்கை சுவாச இயந்திரங்கள் காணப்படுகின்றன. எனினும் இது போன்று இடம் நகர்த்த கூடிய இயந்திரங்கள் கிடையாது.
மேலும் செயற்கை சுவாச இந்திரமொன்றை கொள்வனவு செய்ய 8 முதல் 17 லட்சம் வரையில் செலவாகும்.
நான் உருவாக்கியுள்ள இந்த இயந்திரத்திற்கு வெறும் 15000 ரூபா மட்டுமே செலவாகியுள்ளது. எனவே இந்த இயந்திரத்தை உருவாக்கி வைத்தியசாலைளுக்கும் நோயாளர் காவு வண்டிகளுக்கும் வழங்கப்பட முடியும்.
இந்த இயந்திரத்தை உருவாக்க அரசாங்கத்தின் தலையீட்டுடன் சுகாதார அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நான் கோருகின்றேன்.
நான் கண்டுபிடித்த தொழில்நுட்பம் மற்றும் ஏனைய உதவிகளை வழங்க தயாராக இருக்கின்றேன்.
கைகளினால் இயக்கக்கூடிய செயற்கை சுவாச இயந்திரத்தை பயன்படுத்துவது மிகவும் சிரமமானது என்பதனை அனுபவ ரீதியாக அறிந்து கொண்டதனால் இவ்வாறு, புதிய இயந்திரமொன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன் என டொக்டர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.
கைபேசி வாங்கிய 30,000 ரூபாவை அடைக்க சிறுவனை இளை ஞர் ஒருவர் கடத்தி கொலை செய்த சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் ஆரணி அருணகிரி சத்திரத்தை சேர்ந்தவர் தாமோதரன். வங்கி அதிகாரி. இவரது மகன் யுவராஜ் (12). இவர் அதே பகுதியில் இருக்கும் நகராட்சி பாடசாலையில் தரம் 8 இல் படித்து வருகிறார்.
முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி டிசம்பர் 6ம் திகதி முதல் 8ம் திகதி வரை 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் யுவராஜ் வீட்டிலேயே இருந்துள்ளார். கடந்த 8ம் திகதி விடுமுறை நாளில் வீதியில் விளையாடி கொண்டிருந்த யுவராஜ் மாயமாகியுள்ளார்.
இதனையடுத்து பெற்றோர் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் வழக்குப்பதிவு செய்து ஆரணி நகரிலுள்ள அனைத்து கண்காணிப்பு கமராக்களின் காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் கடந்த 10ம் திகதி விவசாய கிணற்றில் யுவராஜ் சடலமாக மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சிறுவனின் இடுப்பு பகுதியில் கயிற்றால் கல் கட்டப்பட்டிருந்தது. எனவே, சிறுவன் கொலை செய்யப்பட்டு கல்லால் கட்டி கிணற்றில் வீசியது தெரியவந்தது.
உடல் மற்றும் முகம், தலையில் இரத்த காயங்கள் இருந்துள்ளன. யுவராஜை கடத்திய பின்னர் கொலையாளி அடித்து, துன்புறுத்தி சித்திரவதை செய்திருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர்.
இதனிடையே சி.சி.ரி.வி காட்சியில் சிறுவன் யுவராஜை, வங்கி அதிகாரி தாமோதரனின் தூரத்து உறவினரான ஆரணியை சேர்ந்த ஜெயக்குமார் ( 24) என்பவர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றமை தெரியவந்தது.
ஜெயக்குமாரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை செய்ததில், சிறுவன் யுவராஜை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று ஜெயக்குமார் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து ஜெயக்குமாரை பொலி ஸார் கைது செய்தனர்.
இது குறித்து ஜெயக்குமார் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது, நான் ஒன்லைன் மூலம் செல்போன்களை விலைக்கு வாங்கி கூடுதல் விலை நிர்ணயித்து விற்பனை செய்து வந்தேன்.
செல்போன்கள் வாங்கியதில் எனக்கு 30,000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது.இந்த தொகையை நானே கடனாக தான் வாங்கி இருந்தேன். வீட்டில் கேட்டு பார்த்தேன் பணம் தரவில்லை.
அப்போது தான் எனது உறவினரான வங்கி அதிகாரி தாமோதரனின் ஞாபகம் எனக்கு வந்தது. அவரது மகனை கடத்தி மிரட்டினால் எனக்கு தேவையான 30000 பணம் கிடைக்கும் என திட்டமிட்டேன். அதன்படி சிறுவன் யுவராஜை ஆசை வார்த்தை கூறி மோட்டார் சைக்கிளில் கடத்தினேன்.
என்னால் மிரட்டி பணம் பறிக்க முடியவில்லை. பின்னர் மாட்டிக் கொள்வோம் என பயந்து சிறுவனை கொன்று வயிற்றில் கல்லை கட்டி கிணற்றில் வீசிவிட்டு தப்பினேன். விசாரணையை தொடக்கம் முதலே கண்காணித்தேன்.
முதலில் சிறுவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் நினைத்ததாக கேள்விப்பட்டேன். தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் நினைத்ததாக கேள்விப்பட்டேன்.
இதனால் நிம்மதியடைந்தேன். இந்த நிலையில் கமரா காட்சியை வைத்து பொலிஸார் என்னை பிடித்து விட்டார்கள் என கூறியுள்ளார்.
டுபாயில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு வாடிக்கையாக தொடர்ந்துவரும் ஒருவர் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பெண்களுடன் வருவதை கண்ட அவ்விடுதியின் வரவேற்பாளர், இதுதொடர்பாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் அளித்தார்.
இதையடுத்து, அவருடன் வந்திருந்த பெண்களை பொலிசார் பிடித்து விசாரித்தபோது, இந்தோனேசியா நாட்டில் இருந்து வீட்டுவேலை செய்வதற்காக துபாய்க்கு வந்த எங்களை வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் பணஆசை காட்டி, வேலை செய்யும் வீட்டிலிருந்து வெளியேறி வந்துவிடும்படி வலியுறுத்தியுள்ளனர்.
அப்படி வந்த பெண்களை இன்னொரு பெண்ணிடம் 4 ஆயிரம் திர்ஹம் பணத்துக்கு அவர்கள் விற்றனர். அவர்களை விலைக்கு வாங்கிய மற்றொரு பெண், அந்தப் பெண்களை பலவந்தப்படுத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.
வெவ்வேறு வாடிக்கையாளர்களுக்கு அவர்களை விருந்தாக்கியதன் மூலம் இந்த தரகு கும்பல் பெரிய தொகையை வருமானமாக சம்பாதித்துள்ளது என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் விபசார தரகர்கள் மூன்றுபேரையும் கைதுசெய்த துபாய் பொலிசார், அவர்கள் மீது கிரிமினல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணையின்போது பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் தலா ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
தண்டனை காலம் முடிந்து விடுதலையானதும், உடனடியாக அவர்களை துபாயில் இருந்து வெளியேற்றுமாறும் குடியுரிமைத்துறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இளையதளபதி விஜய் நடிப்பில், பரதன் இயக்கத்தில் பைரவா படத்தின் ட்ரைலர் நேற்று முன்தினம் வெளியானது. ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ட்ரைலரில் பல பஞ்ச் வசனத்தை இடம்பெற செய்துள்ளனர்.
ஏற்கனவே பைரவா டீசர் பல சாதனைகளை படைத்தது. அதே போல் டிரைலரும் சாதனை படைத்து வருகிறது. தற்போது கிடைத்த தகவல் படி பைரவா ட்ரைலர் 24 மணி நேரத்தில் 3 .5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதுவரை மற்ற எந்த டிரைலரும் நிகழ்த்தாதே சாதனையை பைரவா ட்ரைலர் 24மணி நேரத்தில் நிகழ்த்தியுள்ளது.
போக்குவர்த்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படவுள்ளதாக உத்தேசி்க்கப்பட்ட 25,000 ரூபா அபராதம் விரைவில் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வௌியிட்டார்.
மோட்டார் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்ட அபராதத்தை விரைவில் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்த பொலிஸ்மா அதிபர் அதன் பின்னர் தராதரம் பாராது அபராதத்தை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
குறித்த அபராத நடைமுறை கட்டாயமானது. தவறிழைப்போருக்கு எதிராகவே அபராதம் விதிக்கப்படும்.
வீதி ஒழுங்குகளை மதித்து அவற்றை முறையாக கடைப்பிடித்து, சட்ட ரீதியாக வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எந்தவித இன்னல்களும் ஏற்படாது என அவர் குறிப்பிட்டார்.
புதுவருட தினத்தன்று(01.01.2017) வவுனியா கற்குழிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குழு மோதல் தொடர்பில் நான்கு பேரைக் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா கற்குழி பகுதியில் உள்ள இரு குழுக்களுக்கிடையில் முரண்பாடுகள் இருந்துள்ளது. புதுவருட தினத்தன்று ஒரு குழுவினர் தமது வீட்டில் பாட்டு போட்டு ஆடிக் கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த மற்றுமோர் குழுவினர் அங்கு வந்து பாட்டு போட்டு ஆடிக் கொண்டிருந்தவர்களுடன் முரண்பட்டுக் கொண்டதுடன் வாள், கம்பிகள், பொல்லுகளால் அவர்கள் மீது தாக்கவும் முயற்சித்தனர்.
இதனையடுத்து குறித்த வீட்டில் இருந்த பெண்கள் அதனை சமரசம் செய்ய முயற்சித்துள்ளனர். இதன்போது அங்கு வந்த இளைஞர்கள் வீடு புகுந்து தாக்க முற்பட்ட போது இடம்பெற்ற கைகலப்பில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய வவுனியா பொலிசார் வாள்வெட்டு, குழுமோதல் தொடர்பில் நான்கு பேரை நேற்று திங்கள் கிழமை (02.01.2017) கைது செய்துள்ளதுடன் மேலும் மூவரை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.
இதுவரை மனித கண்கள் பார்த்திருக்காத அசாதாரண காட்சிகளை ஆளில்லா விமானங்கள் அபாரமாக எடுத்துள்ளன.
உட்டாவில் மோபில் உள்ள குன்றின் மீது மலை ஏறும் வீரர் ஒருவர் ஏறிக் கொண்டிருக்கும் எழுச்சியூட்டும் புகைப்படத்தை மேக்ஸ் சீகல் படம் பிடித்துள்ளார்.
பனிமூட்ட கூட்டத்தில் சிக்கியிருக்கும், இத்தாலியின் அம்பிரியாவில் உள்ள அசிசி புனித பிரான்சிஸ் தேவாலயம். தேவாலயத்தின் கோபுரங்களை அஸ்தமிக்கும் சூரியனின் கதிர்கள் குளிப்பாட்டும் கண்கொள்ள காட்சி.
வெள்ளை ஆட்டு மந்தை கூட்டம் ருமேனியவின் வயல்வெளிகளில் சிதறி காணப்படும் காட்சி.
மேற்கு அவுஸ்திரேலியாவில், அந்தி சாயும் நேரத்தின் போது, கேபிள் கடற்கரையோரம் நடந்து செல்லும் ஒட்டகங்களின் நீண்ட நிழல்கள் கேரவனை போல தோற்றம் அளிக்கும் காட்சி.
ரியூனியன் தீவில் பொங்கிக் கொண்டிருக்கும் எரிமலையின் ஆச்சரியவான்வழிக் காட்சி
கிரான் கேனாரியாவில் உள்ள பிளேயா டி அமடோரெஸ்ஸின் கோடை காலத்தில் தாள முறைப்படி அமைந்திருப்பதை போல தோன்று குடைகள் மற்றும் படுக்கைகள்.
பிரெஞ்சு பாலிநேஷியாவில் உள்ள ஹுஹைன் தீவில் நகரும் பனை மரங்கள் சூழப்பட்டு இருக்க ஒரு இளஞ்ஜோடி ஒன்றாக படுத்திருக்கும் காட்சி.
ஜப்பானில் இபராக்கி தலைமையகங்களை பசுமையான இயற்கை பகுதியை பார்த்தபடி காட்சி தரும் உஷிகு டைபுட்சுவின் பிரம்மாண்ட வெண்கல சிலை.
பிரெஞ்சு பாலிநேஷியன் கடற்கரைகளின் சொர்க்கமாக கருதப்படும் பகுதியில் தற்செயலாக நடுவானில் பறந்து கொண்டிருந்த பறவையை படம் பிடித்துள்ள ஓர் ஆளில்லா விமானம்.
டிரான்சில்வேனியாவில் உள்ள ஷிகிஸோயெரா தான் டிராக்குலா என அறியப்படும் விளாட் தி இம்பேலெரின் பிறப்பிடம். இந்த புகைப்படம், அவர் தன்னுடைய இரவு நேர பயணங்களின் போது எதை பார்த்திருப்பார் என்பதை என்று நினைக்க தோன்றுகிறது.
ரியோ டி ஜெனிரோவில் உள்ள கோபகபானா கடற்கரையில் அமைந்துள்ள அற்புதமான கிராபிக் நடைபாதையில் பாதசாரிகள் நடந்து செல்ல அதற்கு பொருத்தமாக பனைமரங்கள் அமைந்துள்ளன.
போலந்து கடற்கரையில் மணல் முகடுகள் முழுவதும் நீண்ட நிழல்களையும், ஈர்க்கக்கூடிய வடிவங்களையும் அடிவானத்திலிருந்து குறைந்த தூரத்தில் உள்ள சூரியன் உருவாக்கிய காட்சி.
நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து ஆர்ப்பரிக்கும் நீர் கீழ் நோக்கி செல்ல அதனை ஆளில்லா விமானம் பதிவு செய்த அற்புதம்.
இந்தியாவின் குண்டூரில் கடல் போல சிதறிக்கிடக்கும் மிளகாயில் தனி ஒரு வெள்ளை புள்ளியாக விவசாயி மட்டும்
ரஷ்யாவில் அட்ஸிகார்டக் மலைப்பகுதி மீதான ஓர் உறைந்த இடத்தில் பனிச்சறுக்கு வீரர்களின் சாகச பயணம்.
வெர்னாஸ்ஸா என்ற இத்தாலிய கடற்கரை நகரில் பிரகாசமாக காட்சியளிக்கும் கட்டடங்களின் அழகிய காட்சி.
அனைத்து புகைப்படங்களையும் Dronestagram வெளியிட்டுள்ளது
கோவையில் கஞ்சப்பள்ளி கிராமத்தில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து கொண்டு இருந்தபோது, அங்கு பறந்து வந்த மயில் அபிஷேகத்தை முழுவதும் பார்த்துக் கொண்டு இருந்த காட்சியானது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள கஞ்சப்பள்ளி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த வீர ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது.
வீர ஆஞ்சநேயர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். முன்னதாக வீர ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பறந்து வந்த மயில் ஒன்று ஒவ்வொரு திரவியங்களால் வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேக பூஜைகள் நடைபெறுவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தது. அங்கு கூடியிருந்த பக்தர்களை பரவசமடையச் செய்தது. இவ்விழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பிரேசில் நாட்டில் சிறைக்குள் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 60 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டின் அமேசான் மாகாணத்தில் மனாஸ் நகரில் போதை பொருள் விற்கும் கும்பலை அடைத்து வைக்கும் சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்தச் சிறையில் இன்று திடீரென கலவரம் ஏற்பட்டது.
சிறைக் கைதிகள் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல், பெரும் கலவரமாக மாறியது. இதில் கைதிகள் ஒருவருக்கொருவர் கண்மூடித்தனமாக தாக்கிக்கொண்டனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த சிறப்பு பாதுகாப்பு படையினர், கைதிகள்மீது தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இருப்பினும் இருதரப்பினரும் சரமாரியாக தாக்கிக்கொண்டதில் சுமார் 60 கைதிகள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த மோதலில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் யோசனையில் திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே நிதி அமைச்சர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தங்களை மேற்கொண்டு இந்த வருடத்தில் மீண்டும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வீதி விதிகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சரால் யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.