குப்பையில் வீசப்பட்ட லொத்தர் சீட்டு ஒன்றுக்கு இலங்கை மதிப்பில் ஏறக்குறைய ஒன்றே கால் கோடி ரூபா பரிசு விழுந்த சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.ஜோவேன் ஜொனிசன் (37) என்ற பெண் லொத்தர் சீட்டு வாங்கும் பழக்கம் உடையவர். சிறு சிறு பரிசுகளும் அவருக்குக் கிடைத்திருக்கின்றன.
கடந்த 28ஆம் திகதி அவர் வாங்கிய ஒரு சீட்டுக்கு பரிசு எதுவும் கிடைக்காததால் அதைக் குப்பையில் வீசிவிட்டார். ஆனால், மூன்று நாட்களின் பின் கடந்த 31ஆம் திகதி, புதிய சீட்டொன்றை வாங்கச் சென்றவருக்கு ஆச்சரியம் + அதிர்ச்சி காத்திருந்தது.
ஆறுதல் பரிசுக்குரிய டிக்கெட்டுகள் குறைவாக இருந்தமையால் ஒட்டு மொத்த ஆறுதல் பரிசான சுமார் 66 ஆயிரம் பவுண்ட்கள் அவர் வாங்கியிருந்த சீட்டுக்குக் கிடைத்திருந்தது.
இதைக் கண்டதும் பதைபதைத்துப் போன ஜோவேன், தனது வீட்டுக்கு அருகே இருந்த குப்பைத் தொட்டிக்கு தலைதெறிக்க ஓடிச் சென்றார். தெய்வாதீனமாக நத்தார் விடுமுறையால் குப்பை அள்ளப்படாததால், தொட்டியில் இருந்த குப்பைகளைக் கிளறி அந்த அதிர்ஷ்டச் சீட்டைக் கண்டெடுத்தார்.
பரிசுப் பணத்தை வாங்கிவிட்ட மகிழ்ச்சியில் இருக்கும் ஜோவேன், தனது பதினைந்து வருடக் காதலரைத் திருமணம் செய்யப் போகிறாராம், இரண்டு குழந்தைகளுடன்!
வவுனியா பன்றிக்கெய்தகுளத்தில் மரணமான தாய் மற்றும் மகனின் சடலம் பிரேத பரிசேதனையின் பின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிக்கெய்தகுளத்தில் நேற்றைய தினம் வீட்டுக்கிணற்றில் இருந்து 30 வயதான சதீஸ்வரன் சுதாசினி மற்றும் அவரது மகனான 7 வயதுடைய சதீஸ்வரன் டினோஸன் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன், அப்பகுதி மரண விசாரணை அதிகாரி பார்வையிட்டதன் பின்னர் சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
அங்கு சென்றிருந்த வவுனியா மாவட்ட உத்தியோகப்பற்றற்ற நீதிபதி அன்ரன் புனிதநாயகம் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன் பிரேத பரிசோதனைக்கும் உத்திரவிட்டிருந்தார்.
இந் நிலையில் குறித்த பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு வருடமாக பிரிந்து கற்சிலை மடுவில் வாழ்ந்துவந்ததாகவும், அண்மையில் மகனின் பிறந்த தினத்தையொட்டியே பன்றிக்கெய்தகுளத்திற்கு வந்து மகனின் பிறந்த தினத்தினை வெகு சிறப்பாக கொண்டாடியிருந்ததுடன் கணவருடன் சுமூகமாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந் நிலையில் மரணம் சம்பவிப்பதற்கு முன்தினம் இரவு வயிற்றுப்பகுதியில் வலியுள்ளதாக தெரிவித்த ச.சுதாயினி வைத்தியரை பார்க்க வேண்டும் என கணவரிடம் கேட்டுள்ளார்.
கணவரும் சம்மதம் தெரிவித்திருந்ததுடன் கோவிலுக்கும் செல்ல வேண்டும் என மனைவியிடம் தெரிவித்துவிட்டு தான் பணிசெய்யும் விநியோக வாகனத்தில் கிளிநொச்சி சென்று வருவதாக தெரிவித்து குறித்த பெண்ணின் கணவர் கிளிநொச்சி சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரிவந்துள்ளது.
அத்துடன் வீட்டில் அவர்களுடன் வாழ்ந்து வந்த சதீஸ்வரனின் தாயார் கிராம சேவகரிடம் பதிவொன்றினை மேற்கொள்வதற்கான சென்றிருந்துடன் தந்தையார் அருகில் உள்ள தோட்டத்தில் பணி செய்து வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்த சதீஸ்வரனின் தாயாரே இருவரையும் காணாது தேடிய நிலையில் இருவரும் கிணற்றில் சடலமாக காணப்பட்டதையடுத்து அயலவர்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் இருவரும் புதிய ஆடைகள் அணிந்திருந்ததாகவும் எனவே இருவரும் எங்காவது பயணமொன்றினை மேற்கொள்வதற்கு தயாராகியிருந்த நிலையில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதா அல்லது கோவிலுக்கும் வைத்தியரையும் பார்வையிடவும் செல்ல வேண்டும் என கணவர் கூறிவிட்டு சென்றமையினால் அவர்கள் புதிய ஆடைகளுடன் அணிந்திருந்தனரா என்பது தொடர்பிலும் விசாரணைகளில் ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை இருவரது சடலமும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மரணம் சம்பவித்த விதம் தொடர்பான இறுதி அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.
வாழைப்பழம் மிக எளிதாக கிடைக்கக் கூடியது. அதிக சத்து உள்ளது. இதில் உள்ள நார்சத்து மற்றும் பொட்டாசியம் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாழைப்பழத்தின் வகைகளும், அதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என சிலர் சொல்வார்கள். சிலர் வாழைப்பழம் உடல் எடையை குறைக்கும் என்பார்கள். எதுதான் சரி என நாமும் சற்று குழம்பியிருக்கோம். உண்மையில் எல்லாவகை வாழைப்பழங்களும் ஒரே மாதிரி பண்பை பெற்றவை அல்ல. சில வாழைப்பழம் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.இன்னும் சில வாழைப்பழங்கள் வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். இப்படி எதிர்மறையான பண்பை பெற்றுள்ளன. உடல் எடையை குறைக்க அல்லது அதிகரிக்க எந்த மாதிரியான வாழைப்பழத்தை சாப்பிடலாம் என பார்க்கலாம்.
வாழைப்பழ சத்துக்கள்
ஒரு வாழைப்பழத்தில் 108 கலோரி உள்ளது. இது 18 கிராம் கார்போஹைட்ரேட்டிற்கு சமமானது. இதில் அதிகளவு பொட்டாசியம். எல்லா விட்டமின் மற்றும் மற்ற தாதுப் பொருட்கள் உள்ளன.
உடல் எடையை குறையச் செய்யும் வாழைப்பழங்கள்
செவ்வாழை, பூவம் பழம், மற்றும் கற்பூரவள்ளி, மொந்தம் பழம் ஆகிய பழங்கள் உடல் எடையை குறைக்கச் செய்யும். ஏனென்றால் இவற்றில் அதிக அளவு பி6 மற்றும் நார்சத்து இருப்பதால் இவைகள் உடலில் கொழுப்புகளை குறைக்கும்.
உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் வாழைப்பழங்கள்
மலை வாழைப்பழம், நேந்திரம் பழம் ஆகியவற்றில் அதிக கலோரி இருக்கிறது. இவை 10 சதவீதம் அதிக பொட்டாசியம் சத்தை உள்ளடக்கியது. அவற்றிலுள்ள அதிகப்படியான குளுகோஸ் கிளைகோஜனாக மாற்றப்பட்டு தசைகளில் சேமிக்கும்போது தசைகளுக்கு வலிமை தரும். உடல் எடை கூடும். இதனை மில்க் ஷேக் மற்றும் சலட்டாக சாப்பிடும்போது உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
வாழைப்பழத்தை எப்படி சாப்பிடலாம், வாழைப்பழத்தில் சுவையான ஸ்மூதி செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. அதுபோலவே மற்ற பழங்களுடன் கலந்து சாப்பிடும்போது உடலில் அதிக சக்தி உண்டாகும்.
பிரபல நடிகை அமலாபால் தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளும் பிஸியாக நடித்து வருகிறார். திருமண வாழ்க்கை தோல்வியில் முடிய, சினிமா வாழ்க்கை மீண்டும் வெற்றிகரமாக துவங்கியுள்ளார், தற்போதே வி ஐ பி 2, வடசென்னை, திருட்டு பயலே போன்ற சில படங்களை கமிட் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில் இவர் அச்சயான்ஸ் என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கண்ணன் இயக்க, ஜெயராம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அமலா பால், அனு சித்தாரா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். மேலும் இப்படம் மூலம் அமலா பால் பாடகி அவதாரம் எடுக்கிறார்.
ஆம், இந்த படத்தில் அவர் பாடல் ஒன்றை பாடுகிறார். அதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். இதே போல் இயக்குனர் சுசியும் திருட்டு பயலே படத்துக்காக ஒரு பாடலை படி தருமாறு கேட்டுள்ளாராம், அமலா பால் ஓகே சொல்லியுள்ளதாக தகவல்.
அஜித் தற்போது தல-57 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திற்காக காத்திருக்கின்றார். இன்னும் சில தினங்களில் இந்த படத்தில் கடைசிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.இந்நிலையில் என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்த பார்வதி நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித் குறித்து பேசியுள்ளார்.
இதில் ‘அஜித் சார் எனக்கு மிகப்பெரும் நடிகர் என்பது தெரியும், ஆனால், அவர் ரேஸர் என்று எனக்கு தெரியவில்லை, காரில் நாங்கள் அமர்ந்தவுடன் “உறுதியாக பிடித்துக்கொள்ளுங்கள்” என்றார்.அதை தொடர்ந்து அவர் காரில் செய்த ஸ்டண்ட் எனக்கு மரண பயத்தை கொடுத்தது’ என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக கேரள மாநிலத்தில் பாடசாலை படிப்பை தொடர முடியாத திருநங்கைகளுக்கான பாடசாலை திறக்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் சமூகத்தில் பல கருத்துக்களுக்கும், வெறுப்பிற்கும் ஆளாவதன் விளைவாக, எண்ணிக்கையில் சுமார் பாதியளவு திருநங்கைகள் தங்கள் பாடசாலை படிப்பை நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவில் “சஹாஜ்” சர்வதேச பாடசாலை திருநங்கைகளுக்கான முதல் பாடசாலையாக தொடங்கப்பட்டுள்ளது. 25 – 50 வயதுடைய 10 பேருக்கு அந்த பாடசாலையில் இடம் வழங்கப்படவிருக்கிறது. இப்பாடசாலையில் சேரும் நபர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்காக தயார்படுத்தப்படுவார்கள், பொதுவாக 15 – 16 வயதினர் 10 ஆம் வகுப்பும், 17 – 18 ஆம் வயதினர் 12 ஆம் வகுப்பு பயில்வார்கள்.
பள்ளியின் முதல்வரான திருநங்கை ஆர்வலர் விஜயராஜா மல்லிகா, “திருநங்கைகள் சமூகத்தில் நல்லதொரு பணிகளை பெறவும் மரியாதையுடன் வாழவும் அவர்களை இப்பள்ளி தயார்படுத்தும்” என தெரிவித்துள்ளார். “இதுவரை வந்த 14 விண்ணப்பங்களில் நாங்கள் 6 பேருக்கு இடம் வழங்கியுள்ளோம் அனைவரும் ஆணிலிருந்து பெண்ணாக மாறியவர்கள். பத்து இடங்களில் ஒன்றை பெண்ணிலிருந்து ஆணாக மாறியவர்களுக்கும் மேலும் ஒன்றை மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கியுள்ளோம்”. என்றும் அவர் தெரிவித்தார்.
திருநங்கைகள் புறக்கணிப்பிற்கு எதிரான கொள்கையை கடைப்பிடித்த முதல் இந்திய மாநிலமான கேரளாவில் இந்த பாடசாலை திறக்கப்பட்டுள்ளது. அந்த கொள்கையின் படி திருநங்கைகளுக்கு சிறப்பு கல்வி மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவச பாலின மாற்று அறுவை சிகிச்சை வழங்கப்படும்.
மாணவர்களுக்கான உணவு, தங்கும் வசதி மற்றும் படிப்பிற்கான செலவை ஏற்றுக் கொள்ளும் நபர்களை ஏற்பாடு செய்திருப்பதாக பாடசாலையின் ஒருங்கிணைப்பாளார்கள் தெரிவித்துள்ளனர். கல்வி பயில வரும் மாணவர்களை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் ஆசிரியரும் திருநங்கையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் திருநங்கை கல்லூரி முதல்வரான மனபி பந்தோபாத்யேய் தனது பாலின அடையாளத்தால், மாணவர்களும், சக ஆசிரியர்களும் பரபரப்பை ஏற்படுத்துவதாக கூறி ராஜிநானாமா செய்த சம்பவத்தை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2 மில்லியன் திருநங்கைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது; மேலும் 2014 ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கும் சம உரிமை இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் திருமணம் செய்து கொள்ளவும் சொத்து உரிமையை பெறவும் அவர்களுக்கு உரிமை உள்ளது என்றும் பணி மற்றும் கல்வி நிலையங்களில் சிறப்பு இட ஒதுக்கீடுகளை பெறவும் அவர்களுக்கு உரிமையுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது ஒரு புறம் இருக்க திருநங்கைகளை நோக்கிய கிண்டல் மற்றும் அவதூறுகள் பேச்சுக்களும் பரவலாக நடைபெற்றுதான் வருகிறது.
பல திருங்கைகள் குடும்பத்தை விட்டு வெளியே துரத்தப்படுகின்றனர், அவர்களுக்கு பணிகள் மறுக்கப்படுகிறது மேலும் பாலியல் தொழிலுக்கும், பிச்சை எடுப்பதற்கும் அல்லது திருமண நிகழ்வுகளில் ஆடும் சூழலுக்கும் அவர்கள் தள்ளப்படுகின்றனர். “பாடசாலைக்கான இடத்தை தேடுவது பெறும் சவாலாக இருந்தது எனவும் யாரும் அவர்களின் இடங்களை தர தயாராக இல்லை” எனவும் மல்லிகா தெரிவிக்கின்றார்.
“நாங்கள் 700 பேரை அணுகினோம்; 51 வீடுகளை அணுகினோம் அனைவரும் மறுத்துவிட்டனர். அவர்கள் நாங்கள் பாலியல் தொழில் செய்வதற்காக இடம் பார்க்கிறோம் என நினைத்துக் கொண்டதாக தெரிகிறது”. என்று கூறுகிறார் மல்லிகா. தற்போது இப்பாடசாலை மாணவர்கள் கேரளாவிலிருந்து வருகின்றனர். ஆனால், இம்முயற்சி கேரள மாநிலத்தை தாண்டியும் வரவேற்கபடும் என மல்லிகா நம்புகின்றார்.
“முதலில் இந்த பள்ளி ஒரு சோதனை முயற்சியாக பார்க்கப்படுகிறது பிறகு வெற்றியடைந்தால் வசதிகளை விரிவுப்படுத்தி இந்தியா முழுவதும் அதிக மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவர்” எனவும் அவர் தெரிவித்தார். “கேரளாவில் 25,000 திருநங்கைகள் உள்ளனர் மேலும் அதில் 57 சதவீதம் சமூக சூழலால் பாடசாலை படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்டவர்கள், அனைவருக்கும் ஒரு சரியான தங்குமிடம் கிடைக்க வேண்டும் என்று திருநங்கைகளுக்கான கொள்கைகளில் கூறப்பட்டுள்ளது”.
திருநங்கை ஆர்வலர் கல்கி சுப்ரமணியம் இந்த பள்ளியை திறந்து வைத்தார். “இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்” என்று அவர் தெரிவித்தார்.
சந்தையில் ஸ்மார்ட் போன்கள் அதிகமாக விற்கப்பட்டாலும், மக்கள் விரும்புவது செல்ஃபி எடுப்பதற்கு நல்ல மொபைல் வேண்டுமென்று தான்.ஆம், இப்போதெல்லாம், கைப்பேசியின் பின்புற காமெராவை யாரும் அதிகமாக பயன்படுத்துவதில்லை. எல்லாம் முன்பக்க காமெராவினால் எல்லாம் செல்ஃபி மையமாகிவிட்டது.
இந்நிலையில், முன்னனி ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான vivo வருகிற 23 ஆம் திகதி ஒரு புத்தம் புதிய vivo v5 plus கைப்பேசி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.இந்த கைப்பேசியானது, செல்ஃபி பிரியர்களை கவர்வதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. ஆம் இரண்டு முன்பக்க கமெராவுடன் அறிமுகமாக உள்ளது.
இது, கடந்த நவம்பர் மாதம் வெளியான Vivo V5 யை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனவும், V5 யை விட விலை அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
Vivo V5 Plus இன் சிறப்பம்சங்கள்:
இரட்டை சிம் வசதி
5.5 இன்ச் திரை
பேட்டரி சக்தி 3000 mAh
ரேம் வசதி 4GB
ஃப்லாஷ் வசதி கொண்ட13mp பின்பக்க காமெரா
20mp முன்பக்க காமெரா
நடைமுறை உலக பயணத்தில் முக்கியமான தொரு கேள்வி அடுத்த உலக யுத்தத்திற்கு இலங்கை வித்திடுமா? இப்போதைக்கு வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இது உச்சரிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கின்றது.உலகத்தோடும், கடந்து வந்த சம்பவங்களின் அடிப்படையிலும் இலங்கையை தொடர்பு படுத்தி பார்க்கும் போது இந்த கூற்றுக்கு இலங்கையின் பெயரும் அடிபட செய்கின்றது.
உலக அளவில் பலரையும் கவர்ந்துள்ள 16ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டிரடாமஸ் என்பவரது கணிப்புகள் இன்றும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் இருக்கின்றது.காரணம் அப்போது 1555 ஆம் ஆண்டு இவர் எதிர்வு கூறியவை 2016ஆம் ஆண்டு அப்படியே நடந்தது. எப்படி இது சாத்தியம் என விஞ்ஞானிகளும் திக்கு முக்காடி போய் உள்ளதோடு, நடுங்கவைக்கும் விடயமாக உள்ளது 2017 தொடர்பில் அவர் கூறியுள்ள கணிப்புகள்.
உதாரணமாக அமெரிக்காவின் அதிபர் மாற்றமடைவார் என்று அவர் கணித்ததோடு ஒபாமாவே கடைசிஅதிபர் என்றார். அதிபர் மாறி விட்டார் ஆனால் கடைசி அதிபர் மட்டும் இன்னும் நிறைவேறவில்லை காரணம் ட்ரம்ப் இருக்கின்றார் இன்னும்.இயற்கைப் பேரிடர்கள், பேரழிவுகள், கடல் கொந்தளிப்புகள், நில நடுக்கங்கள் வெள்ளப்பெருக்குகள் அதிக அளவில் ஏற்படும் ஆண்டாக 2016 அமையும் எனவும் கணித்தார். இவையும் நடைபெற்றது என்பது தெரிந்த விடயமே.
மத்திய கிழக்கு நாடுகள் 2016ஆம் ஆண்டு பற்றி எரியும் கணித்ததும் நடந்தது கடந்த 4 வருடங்களாக மத்திய கிழக்கு பற்றி எரிந்து கொண்டு தான் இருக்கின்றது.அதே போல விமானங்கள் விபத்துக்கு உள்ளாகும், காணாமல் போகும் என்றும் அவர் கணித்தது கூட அப்படியே நடந்தது ஆச்சரியம் தான்.துருவப் பகுதிகள் உருகும் 2016இல் நடக்கும் என நாஸ்டிரடாமஸ் கணித்தது இன்னொரு முக்கிய அம்சம் துருவப் பகுதிகள் மூழ்கும் என்பது. உலக அளவில் வெப்பமயமாதல் அதிகரித்து வருவதாக ஏற்கனவே விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.
அதே போன்று வரலாறு காணாத வெப்ப நிலையும் 2016ஆம் ஆண்டு பதிவாகியமையும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.அதே போன்று 2017 தொடக்கம் உலகம் அழிவை சந்திக்க ஆரம்பமாகும் என்றும், ஈராக் போர்தான் உலக அழிவுக்கான முதல் படி என்றும் அவர் கூறியுள்ளார்.சிரியா யுத்தம் தொடர்பிலான பார்வைகள் தற்போது மாற்றமடைந்து, அமெரிக்கா ரஷ்யாவிற்கு இடையே தொடர்ந்து வரும் பனிப்போரை வெளிப்படுத்தும்.வகையில் இரு நாடுகளும் பூசலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளையே இப்போது வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றது காணக் கூடியதாகவே இருக்கின்றது.
ஏற்கனவே மாயன் காலண்டரில் கூட இப்படி உலகம் அழியும் என்று கூறப்பட்டு அது பொய்யாகிப் போன காரணத்தினால் அது தொடர்பில் பெரிதாக பேசப்படுவதில்லை.என்றாலும் இவருடைய மூன்றாம் உலக யுத்த கணிப்பில் ஒரு சிறிய நாடு மூன்றாம் உலக யுத்தத்திற்கு வித்திடும் என்று கூறியுள்ளார்.இவர் இங்கு குறிப்பிட்டது இஸ்ரேலை என்றே பல ஆய்வாளர்களின் கூறும் கருத்து. ஆனாலும் அது இலங்கையாக இருக்குமா? என்ற சந்தேகமே இப்போது வலுப்பெற்றுள்ளது.
காரணம் அமொிக்காவும், சீனாவும், இந்தியாவும் கூட இலங்கை கடற்பரப்புகளையும் துறைமுகங்களையும் ஆக்கிரமிக்கும் நோக்கோடு செயற்படுகின்றன.பொருளாதார ரீதியான அபிவிருத்தி செயற்பாடுகளாக இவை நோக்கப்பட்டாலும் கூட அடுத்த பக்கம் ஒரு நாட்டுக்குள் வல்லரசுகள் போட்டியிடுவது ஆபத்தானது. பொருளாதார யுத்தம் போராகவும் மாறலாம்.
அமெரிக்காவின் நோக்கம் திருகோணமலை துறைமுகத்தை கையகப்படுத்துவதே என்ற எண்ணம் கூட தோன்றுகின்றது.அதே போன்று இப்போதைய நிலவரப்படி அடுத்து அமெரிக்கா என்ன செய்யும் என்பது கூட தெரியாத நிலையே தொடருகின்றது, அதே போல் வல்லரசுகளும் கூட பகிரங்கமான போர் ஒத்திகையிலும் கூட ஈடுபட்டு வருகின்றது.ஆக மொத்தம் என்றோ நாஸ்டிரடாமஸ் கணித்து விட்டவை நடந்து கொண்டு வர, 2017ஆம் வருடம் தொடர்பில் அவர் கூறியவை நடந்து விடுமா?
அது மட்டும் அல்லாமல் அனைத்து வகையிலும் 2017 என்பது ஆபத்தான வருடமாகவே நோக்கப்படுகின்றது. ‘Planet X: The 2017 Arrival’ எனும் ஆய்வுப் புத்தகத்தின் மூலம் David Meade என்பவர் ஓர் இருண்ட கிரகம் பூமி மீது 2017இல் மோதும் என்றும் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியானதொரு செய்தியே.இதன்படி உலக அழிவின் ஆரம்பமா இந்த 2017 என்பது கூட இப்போது அச்சத்தை ஏற்படுத்தும், நடுங்கவைக்கும் விடயமாக பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.ஆனாலும் மக்களுக்கு இது தொடர்பில் வெளிப்படுத்தப்படுவதில்லை.
வவுனியா இராசேந்திரகுளம் பகுதியிலுள்ள விக்ஸ்காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் குடியேறியுள்ள 60 பேருக்கு மேற்பட்டோர் இன்று (03.01.2017) காலை 10.30 மணியளவில் வவுனியா வனத் திணைக்கள அலுவலகரைச் சந்தித்து தமக்கான காணி கோரிய மனுவினைக் கையளிக்கச் சென்றனர்.
அவர்களிடம் உரையாடிய வனத் திணைக்கள உத்தியோகத்தர் கே.டயிள்யூ. எஸ். எச். அமரவீர பின்வருமாறு தெரிவித்தார்..
35 தொடக்கம் 40வரையான குடும்பங்கள் கடந்த சில வருடங்களாக வன இலாகா திணைக்களத்திற்குச் சொந்தமான விக்ஸ்காட்டுப்பகுதியில் வீடுகட்டி, மின்சாரம் பெற்று வசித்துவருகின்றனர்.
தற்போது அவர்களைவிட வேறு சிலர் அங்கு வந்து சட்டவிரோதமான முறையில் வீடுகள் அமைத்து வருகின்றனர். இதற்கு இப்பகுதியிலுள்ள சிலர் முகவர்களாகச் செயற்பட்டு வருகின்றனர்.
அவர்களிடம் 20ஆயிரம் ரூபா அறவிட்டு அவர்களுக்கு அப்பகுதியில் காணி பிடித்துக் கொடுத்து வருகின்றார்கள் என்று எங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
எனவே இப்பகுதியில் முன்பு குடியேறிய குடும்பங்களைத் தவிர வேறு எவரும் புதிதாக சட்டவிரோதமாக குடியேறினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேலும் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட நெற்களஞ்சியசாலைகளில் இருந்து தென்பகுதிக்கு நெல் கொண்டு செல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரிசிஆலை உரிமையாளர்கள், பொதுமக்கள் களஞ்சியசாலையை முற்றுகையிட்டு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
வவுனியா பாவற்குளம் படிவம் 6 களஞ்சியசாலையிலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கை இன்று(01.03.2017) காலை இடம்பெற்றது.
வவுனியா, பாவற்குளம் படிவம் 6 நெற்களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் நெல்லினை தென்பகுதிக்கு கொண்டு செல்வதற்கு பாரவூர்திகள் வந்திருந்தின. இதனையடுத்து அங்கு ஒன்று கூடிய வவுனியா மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி ஆலைகளில் வேலை செய்வோர், பொது மக்கள் எனப்பலரும் எதிர்ப்பு தெரிவித்து களஞ்சியசாலையில் உள்ள நெல்லினை மாவட்ட அரிசி ஆலைகளுக்கு வழங்க வேண்டும் அல்லது அதனை குற்றி மாவட்டத்தில் உள்ள சதொச மற்றும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மூலம் எமது பகுதி மக்களுக்கு குறைந்த விலையில் அரிசியை கிடைக்கச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை குறித்த எதிர்ப்பு நடவடிக்கை குறித்து வன்னி மாவட்ட நாடபளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், அரசாங்க அதிபர் எஸ்.வி.ரோஹண புஸ்பகுமார உள்ளிட்டவர்களின் கவனத்திற்கு தொலைபேசி மூலம் கொண்டுவரப்பட்டதையடுத்து நெல்லினை ஏற்றுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என அவர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் இன்று(03) அறிவித்துள்ளன.இன்று முதல் ஏப்ரல் வரை பிற்பகல் 3 மணி மற்றும் காலை 9 மணிவரை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைக்கப்படுவதால் ஜனவரி 5 ஆம் திகதி முதல் 8 மணித்தியாலங்களுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு மாங்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையம் தினமும் காலை 8.30 மணி முதல் 4.30 மணிவரை திறந்து வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வருடத்தில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு விசேட ஓய்வூதிய திட்டம் வழங்கவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்றைய தினம்(02) இடம் பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக விசேடஓய்வூதிய திட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்.மேலும் வெளிநாடுகளில் கடந்த காலங்களில் குடியேறிய தொழிலாளர்கள் மற்றும், இவ்வருடம் வெளிநாடுகளை நோக்கி குடிப்பெயரும் பணியாளர்களின் நலத்திட்டம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துதல், போன்ற விடயங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
குருணாகல் கும்புகெட்டே பிரதேசத்திலிருந்து இப்பாகமுவ வரை பயணித்த மோட்டார் வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால் விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் வாகன சாரதியை பொல்கொல்ல வைத்தியசாலையில் அனுமதித்த வேளையில் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் தோடம்கஸ்லந்த பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து கும்புகெட்டே பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.மேலும், தெல்கொடை – கப்புகொடை கிரிதரை பாதையில் தொம்பை பிரதேசத்திலே இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் வண்டிப் பாதையில் மிதி வண்டி பயணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பலத்த காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க முற்பட்ட போது உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் தொம்பை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.இது குறித்து தொம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சுவிஸ் வங்கிகளில் கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைப்புச் செய்தவர்களின் இரகசியத்தை பாதுகாப்பதாக செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை இந்த மாதம் ஜனவரி 01ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.
இதனால் வெளிவரும் பெயர் பட்டியலில் இலங்கையர்கள் தொடர்பான தகவல்களும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைப்புச் செய்தவர்களின் இரகசிய ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை சுவிஸ் அரசாங்கம் அறிவிப்புச் செய்துள்ளதாகவும், இது தொடர்பான உடன்படிக்கையில் அந்நாட்டு அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கையர்கள் 200 பேருடைய கறுப்புப் பணம் சுவிஸ் வங்கிகளில் உள்ளதாக கடந்த வருடம் வெளியான பனாமா பத்திர தகவல்கள் மூலம் பகிரங்கமாக கூறியிருந்தது.எனினும் சம்பந்தப்பட்ட தகவல்களை சுவிஸ் அரசாங்கம் வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு அக்டோபரில் பூமியை சிதைக்கும் அளவில் ஒரு கிரகம் வந்து தாக்கும் எனவும் இந்த அழிவில் இருந்து தப்பிக்க பெரும் பணக்காரர்கள் இரகசிய அறைகளை கட்டத்துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘Planet X: The 2017 Arrival’ எனும் ஆய்வு புத்தகத்தை வெளியிட்ட David Meade என்பவர் குறித்த தகவலை உறுதிபட தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அந்த பேரழிவு நிகழப்போவதகவும், பூமி சின்னா பின்னமாக உடைவது உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி குறித்த தகவலை அறிந்த உலக பெரும் பணக்காரர்கள் அனைவரும் குறித்த பேரழிவில் இருந்து தப்பித்துக்கொள்ள இரகசிய அறைகளை இப்போதே அமைக்க துவங்கியுள்ளதாக David Meade ஆதாரங்களை சுட்டிக்காட்டுகிறார்.
குறித்த நிகழ்விற்கு அவர் கூறும் முதல் காரணம், வழக்கத்திற்கு மாறாக உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து எழும் நிலநடுக்கங்கள். பல பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் எழுவதற்கு முக்கிய காரணம், இயற்கை மக்களை எச்சரிக்கை விடுக்கிறது என்கிறார் David Meade.
அடுத்ததாக அவர் முன் வைக்கும் காரணம் புயல்கள். கடந்த சில ஆண்டுகளாக உக்கிர புயல்கள் தொடர்ந்து மனித இனத்தை வேட்டையாடி வருகிறது. குறிப்பிட்ட பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கு பின்னர் மிகவும் சக்தி வாய்ந்த உக்கிர புயல்கள் தாக்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும் பூமியில் உள்ள ஆழ்துளைகள் அனைத்தும் மிக வேகமாக பெரிதாகி வருவதாகவும், உஷ்ணக்காற்று மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறி வருவதாகவும், பருவ நிலையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மட்டுமின்றி பாலைவனம் சார்ந்த சில நாடுகளில் திடீரென்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதையும் மழையின் அளவு குறைந்து குளிரின் அளவு அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இப்படியிருக்க, ஆண்டு தோறும் இதுபோன்று புதிதாய் கிளம்பும் சில ஆய்வாளர்கள் பூமி இந்த ஆண்டு சிதையும், உலகம் சில நாட்கள் இருளில் மூழ்கும் என புது புது கருத்துகளை வெளியிட்டும், அந்த குறித்த காலத்தில் நிகழாமல் போவதும் வாடிக்கையாகவே நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச் செயலாளராக கடந்த சனிக்கிழமை சசிகலா நடராஜன் பொறுப்பேற்றுக் கொண்டதும், அவர் தனது அரசியல் அரங்கில் முதல் உரையையாற்றினார். அந்த உரையானது மிக சிறப்பாக தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு இருந்தது என்பதை அனைத்து அரசியல் பார்வையாளர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த உரை தயாரிக்கப்பட்டது என்று கூறப்படுவதற்கு முக்கிய காரணம், சசிகலா தனது உரையின்போது முழுக்க முழுக்க எழுதி வைத்த தாளை படித்துதான் பேசினார்.
ஜெயலலிதா சாவு குறித்த சர்ச்சைகள், பாஜகவின் தலையீடுகள், அதிமுக அடித்தட்டு தொண்டர்களை கவருதல் என பல தரப்பையும் நோக்கி நேரடியாகவும், மறைமுகமாகவும் சசிகலா பேச்சு அமைந்திருந்தது.
இதில் கட்சி தலைமைக்கு தான்தான் தகுதியான நபர் என்ற வாதத்தை முன் வைக்கும் வரிகளும் முக்கிய இடம் பிடித்திருந்தது.
அதிலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாதான் ஜெயலலிதாவின் வாரிசாக வர வேண்டும் என்று அதிமுக அடிமட்ட தொண்டர்கள் பலர் கோரிக்கை வைத்துவரும் நிலையில், அவரைவிட தானே தகுதியானவர் என்பதை உணர்த்த வாதங்களை முன் வைத்தார் சசிகலா.
“அக்கா கோட்டைக்கு போய்ட்டீங்களா.. அக்கா மதியம் சாப்பாட்டுக்கு என்ன செய்யனும்..” என்றெல்லாம் தான் ஜெயலலிதாவிடம் கேட்பது வழக்கம் என குறிப்பிட்ட சசிகலா,
தான்தான், ஜெயலலிதாவின் நலம் விரும்பி என்பதை அந்த இடத்தில் பதிவு செய்தார். மேலும் 29 வயதில் ஜெயலலிதாவிடம் தோழியாக இணைந்ததாகவும்,
தற்போது தனக்கு 62 வயது என்பதையும் பேச்சில் சுட்டிக் காட்டி தனது இளமை ஆயுட் காலம் முழுவதையும், ஜெயலலிதாவின் நலனுக்காகவே ‘தியாகம்’ செய்ததை போன்ற தோற்றத்தை பேச்சு உருவாக்கியது.
“கனி தெரியும், காய் தெரியும் இலை தெரியும், பூ தெரியும் வேர் தெரியாது..” என்று பேசிவிட்டு சில வினாடிகள் பேச்சை நிறுத்தினார் சசிகலா.
ஜெயலலிதா வெற்றிக்கான அந்த வேர் தான்தான் என்பதை குறிப்பால் உணர்த்திய சசிகலா, பேச்சை தொடரும்போது, அந்த வேர் கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்கள் என சொல்லி முடித்தார்.
ஆனால் அவர் பேச்சை நிறுத்திய வினாடிகளில், திடீரென ஆவேசமாக கரகோசங்களை எழுப்பிய அதிமுக நிர்வாகிகள், அவரது பேச்சின் உள் அர்த்தத்திற்கு அங்கீகாரம் கொடுத்துவிட்டிருந்தனர்.
சில வினாடிகள் பார்த்தவர்கள், சில முறை சந்தித்தவர்கள், சில நிமிடங்கள் பேசியவர்களுக்கே, ஜெயலலிதாவின் மறைவு அதிர்ச்சியை கொடுத்திருக்குமானால், 33 ஆண்டுகள் கூடவே இருந்த எனக்கு எப்படி இருக்கும் என்று பேசிய சசிகலா, தனக்குத்தான் ஜெயலலிதா மீது அதிக உரிமை உள்ளது என்பதை வெளிப்படையாகவே கூறிவிட்டார்.
இந்த வாதங்கள் அனைத்தையும் சசிகலா, தீபாவுக்கு கொடுத்த சிக்னல்களாகவே பார்க்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஏனெனில் தான்தான் ஜெயலலிதாவுடன் 33 ஆண்டு காலம் வாழ்ந்து, சாப்பாடு முதல்கொண்டு எல்லாவற்றையும் பங்கிட்டு கொண்டதாகவும், வேறு யாரும் அவருடன் இருந்திருக்கவில்லை என்பதும் தீபாவுக்கான சிக்னல்தான் என்கிறார்கள்.
சில வினாடிகள் பேசிக்கொண்டவர்களே ஜெயலலிதா இறந்ததற்காக அதிர்ச்சியடைகிறார்கள் என்றால்… என்று கூறியதன் மூலமும் அதை உறுதி செய்துள்ளார் சசிகலா.
மேலும் ஜெயலலிதாவை போன்ற குரல், தோற்றம் கொண்டவர் தீபா என்பதால் அவரது வடிவத்தில் ஜெயலலிதாவை அதிமுக அடிமட்ட தொண்டர்கள் நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவே, ஜெயலலிதாவை போன்ற பச்சை நிற சேலை, சிகை அலங்காரம், பொட்டு, அவரது கார், எம்ஜிஆர் பாடல் வரிகளை சுட்டிக் காட்டுவது என சகலத்தையும் பிரயோகப்படுத்தியுள்ளார் சசிகலா என்கிறார்கள்.
தீபாவுக்கு பெரும் சவால் முன் வைக்கப்பட்டாகிவிட்டது. இதை தீபாவால் தனது அத்தையை போன்ற தீரத்தோடு சமாளிக்க முடியுமா? அல்லது, ஒதுங்கி நிற்பாரா என்பதை காலம்தான் உலகத்திற்கு எடுத்துச் சொல்லும்.