தொலைதூர தாக்குதல் திட்டத்தில் வெற்றிபெறுமா வடகொரியா?

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தியில் தடை விதிக்கப்பட்டுள்ள தொலைதூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளின் தயாரிப்புகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளின் எதிர்ப்புகளை தாண்டியும், சர்வதேச உடன்படிக்கைகளை கண்டுகொள்ளாமலும், பெரும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் வடகொரியா அணுகுண்டு சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது.

வடகொரியா 2006ஆம் ஆண்டு முதலாக தொடர்ச்சியான அணுகுண்டு சோதனைகளை நடத்தி வருகின்றது. அவற்றோடு அணுகுண்டை விட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையையும் மேற்கொண்டது . இந்நிலையில் அந்நாட்டின் அணுகுண்டு பரிசோதனைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால் வடகொரியா எதையும் பொருட்படுத்துவதில்லை. அந்நாட்டின் பல்வேறு சோதனைகள் தோல்வியிலும் முடிந்துள்ளது.

இந்நிலையில் கிம் ஜாங் உன் தனது புத்தாண்டு செய்தியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தடை செய்யப்பட்ட தொலைதூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளின் தயாரிப்புகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். என சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

2011ம் ஆண்டு தந்தை உயிரிழந்த நிலையில் கிம் ஜாங் உன் ஜனாதிபதியானார். அவர் தனக்கு எதிராக செயற்படுபவர்களை கொன்று குவித்தும் வருகிறார். அத்தோடு எதிர்வரும் காலங்களில் அவர் அதிகளவான ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது!!

சுமார் இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 46 வயதுடையவர் என்பதோடு, கட்டாரில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்போது இரண்டு கிலோ 136 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறக்கும் புதிய ஆண்டிலாவது தமிழ்மக்களின் நம்பிக்கைகள் நனவாகட்டும் அமைச்சர் சத்தியலிங்கம்!!

பிறக்கும் புதிய ஆண்டிலாவது தமிழ்மக்களின் நம்பிக்கைகள் நனவாகட்டுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது புதுவருட வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

தமிழர்களின் கடந்த காலங்கள் துன்பகரமானவை. சுதந்திரத்திற்கு பின்னர் தமிழ்மக்கள் இந்த தேசத்தில் இரண்டாந்தர பிரஜைகளாகவே ஆளும் வர்க்கத்தினரால் நடாத்தப்பட்டு வந்துள்ளனர்.

நீண்ட வரலாற்றையும், கலாசாரத்தையும், மொழியையும் கொண்ட தமிழினம் கடந்த 68 வருடங்களாக நாட்டில் வாழுகின்ற ஏனைய இனங்களைப்போல சமமாக நடாத்தப்படவில்லை. இதனால் விடுதலைவேண்டி நமது இனம் சகலவழிகளிலும் தொடர்ச்சியாக போராடிக்கெண்டுதான் இருக்கின்றது.

எனினும் இன்று வரை தீர்வெதுவும் கிடைக்கவில்லை. நம்பிக்கையே வாழ்க்கையாக ஒவ்வொரு வருடமும் கடந்து செல்கின்றது. பிறக்கும் 2017ம் ஆண்டிலாவது தமிழ் மக்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய நிரந்தர சமாதானம் கிடைக்கட்டும். கருத்துவேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க இந்த ஆண்டில் திடசங்கற்பம் கொள்வோம் என அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் படகுத் தீ விபத்தில் சிக்கி 23 பேர் பலி 33 பேர் படுகாயம்!!

 
இந்தோனேசியாவில் தீவு பகுதியை நோக்கி 240 இற்கும் அதிகமான பயணிகளை ஏற்றி சென்ற படகில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 23 பேர் உயிரிழந்ததுடன் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தலைநகர் ஜகர்தாவின் வடபகுதியில் உள்ள முவாரே ஆங்கே துறைமுகத்தில் இருந்து இன்றுகாலை 240 இற்கும் அதிகமான பயணிகளை ஏற்றி சென்ற இயந்திரப் படகே விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்தப் படகு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திர பகுதியில் தீபற்றியுள்ளது , வேகமாக பரவிய தீயினால் 23 பேர் உயிரிழந்துள்ளனர், 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கடலோரக் காவல் படையினர் கடலில் நீந்தியபடி உயிருக்குப் போராடிய 100 இற்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டுள்ளனர். என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

படகானது தற்காப்பு அணிகளை குறைவாக கொண்டிருந்ததோடு, அனுமதித்த அளவை விட இருமடங்கு பயணிகளை ஏற்றிச்சென்றமையே விபத்தின் போது அதிகமானவர்கள் இறப்பதற்கு காரணமாகும். என அந்நாட்டு கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

செவ்வாய்க் கிரகத்தில் வீடுகள் : நாசா அறிவிப்பு!!

செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்கள், அங்கு நீண்ட நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலை மற்றும் காஸ்மிக் கதிர்வீச்சு ஆகியவற்றின் ஊடுருவலை தடுக்க வேண்டியுள்ளது.

எனவே செவ்வாய் கிரகத்தில் தங்கும் பொழுது, சுற்றுப்புற காரணிகளால் பாதிக்காமல் இருக்கும் வகையில் இருப்பிடம் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இருப்பிடம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் ”The Mars Ice Home” என்ற நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள யோசனைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, மிகப்பெரிய டோனட் வடிவிலான இருப்பிடத்தை உருவாக்க வேண்டும். இது பனி படர்ந்த நிலையில் தண்ணீருடன் இருக்க வேண்டும்.

எனவே இதனை செயல்படுத்துவது குறித்து பல்வேறு சாத்தியமான விஷயங்களை நாசா ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் மருந்தகங்களில் குருதிப் பரிசோதனைகளை மேற்கொள்ள தடை!!

இன்று முதல் அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு தனியார் மருந்தகங்களில் இரத்தப் பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பணிப்புரையின் பேரில் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் இரத்தப் பரிசோதனைகளை தனியார் பிரிவினரால் மேற்கொள்வதாக தெரியவந்தால், நாளை முதல் சம்பந்தப்பட்ட அரச வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளது.

டிசம்பர் மாதம் 31ம் திகதியளவில் அரசாங்கத்தினால் சகல பரிசோதனை கூட வசதிகளும் உள்ள வைத்தியசாலைகளுக்கு இரத்த பரிசோதனை செய்யும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இரத்த பரிசோதனைகள் அனைத்தையும் அந்தந்த வைத்தியசாலைகளிலேயே மேற்கொள்ள முடியும்.

அரச வைத்தியசாலைகளில் இரத்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு இடையூறு விதிக்கப்படுவதாகவும் இதன்காரணமாக தனியார் மருத்துவ நிலையங்கள் இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணங்கள் அறவிடப்படுவதாகவும் பொதுமக்களினால் விடுக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் காரணமாகவே குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் இன்று முதல் மாற்றம்!!

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வருடத்துக்கான வரவு செலவு திட்டம் கடந்த நவம்பர் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இவ்வருடத்துக்கான வரவு செலவு திட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவிற்கான நிர்ணய விலை 295 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவின் விலை 25 ரூபாவாலும் மண்ணெண்ணை லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை சீனி கிலோ ஒன்றின் விலை 2 ரூபாவாலும் நெத்தலி கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன. உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவாலும், பருப்பு கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவாலும் பயறு 15 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வருமான வரியின் சதவீதத்திலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு : ஜெயலலிதாவின் சமாதியில் விஷம் குடித்த தொண்டர்!!

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, நேற்று அதிமுக தலைமை அலுவலகம் வந்து பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை கண்டித்து, அதிமுக தொண்டர் சுவாதி ஆனந்த், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் விஷம் குடித்தார்.

அருகில் இருந்தவர்கள் உடனே அவரை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட சுவாதி ஆனந்த், திருவள்ளுர் மாவட்டம் காரனோடையைச் சோ்ந்தவர்.

இதேவேளை, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி கிராமத்தில் சசிகலாவை கண்டித்து அவரது உருமை பொம்மையை எரித்தனர்.

அறந்தாங்கி அருகே மறமடக்கி கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் மெய்யநாதனின் ஊர். இங்கு அதிமுகவுக்கு அதிக வாக்குகள் பதிவான கிராமம். இந்த கிராமத்தில் மறமடக்கி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கடைவீதி பகுதியில் 150க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். பின்னர் ஜெ. தீபாவிற்கு ஆதரவாக கோசமிட்ட நிலையில் சசிகலாவிற்கு எதிர்ப்பாக கோஷமிட்டனர்.

கூட்டத்தின் நடுவே மையப்பகுதியில் சசிகலாவின் உருவ பொம்மையை எரித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சசிகலாவை பொதுசெயலாளராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்கும் நிலையில் அதிமுக தொண்டர்கள் அதிகம் உள்ள மறமடக்கி கிராமத்தில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புத்தாண்டை வரவேற்ற 39 பேர் பலி!!

இரவு விடுதி ஒன்றில் புத்தாண்டை கொண்டாடிய மக்கள் மீது கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்து வந்த தீவிரவாதி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இஸ்தான்புல்லில் உள்ள இரவு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென துப்பாக்கிச் சப்தம் கேட்டது. அப்போது ஆயுதங்களுடன் அங்கு வந்த தீவிராவதிகள் சரமாரியாக சுட்டத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை பார்த்தவர்கள் பதறியபடி ஓடினர். மேலும் சிலர் அருகில் இருந்த கடலுக்குள் குதித்து தப்பியுள்ளனர். இந்நிலையில் தாக்குதலில் தீவிரவாதிகளில் ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்ததாக அங்கு இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கியால் சுட்ட மற்றொருவர் இருட்டில் இருந்ததால் அடையாளம் தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். துருக்கியில் 2016ம் ஆண்டு மட்டும் 6 தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளது. மேலும் இதுவரை 220 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்கள் அனவரும் ஒற்றுமையாக வாழ வாழ்த்துகின்றேன் : வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான்!!

பிறக்கும் 2017ம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டில் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சாந்தி சமாதானமாக ஒன்றிணைந்து வாழ புதுவருடப்பிறப்பில் வாழ்த்துகின்றேன்.

நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு மக்களுக்கு கிடைத்து புதுவருடத்தில் ஒற்றுமையாகவும் நல்லிணக்கமாக சேர்ந்து வாழவும் மக்கள் எதிர்கொள்ளும் சுமைகள் நீங்கி செல்வச் செழிப்புடனும் பிறக்கும் புதுவருடத்தில் கல்விக்கலாச்சாரம் மேலோங்கி நாட்டில் நிலவுகின்ற நல்லிணக்கம் அனைத்து மக்களையும் சென்றடைந்து அனைவருக்கும் இறை ஆசி கிடைக்க பிறக்கும் புதுவருடத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்வடைகின்றேன்.

இவ்வாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கினைப்புக் குழு இணைத்தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளருமான கே.காதர் மஸ்தான் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு!!

 
வவுனியா கனகராஜன்குளம் சிவில் பாதுகாப்புக்குழுவின் ஏற்பாட்டில் புதுவருடத்தை முன்னிட்டு பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள், வறியமாணவர்கள். தாய் தந்தையை இழந்த பிள்ளைகள் எனத் தெரிவு செய்யப்பட்டு உதவிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று காலை 10.30 மணியளவில் வவுனியா கனகராஜன்குளம் மகாவித்தியாலயத்தில் கனகராஜன்குளம் சிவில் பாதுகாப்புக்குழுத் தலைவரும் பண்டிதமணி கணபதிப்பிள்ளை வித்தியலாய அதிபருமான திரு.சுபாஸ் தலைமையில் கனகராஜன்குளம் கலா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலா மன்ற மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் புளியங்குளம் பிரதேச வைத்தியசாலை உத்தியோகத்தர், வைத்தியர், கனகராஜன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி, சிவில் பாதுகாப்புக்குழு பொறுப்பதிகாரி, பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் சங்கம், என கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.

நிதி அனுசரணையினை பயஸ் விஜயபாலன் மரியாம்பிள்ளை வழங்கியிருந்தார். பெருமளவானவர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா நேரியகுளம் அஞ்சல் சேவையாளர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகத்தெரிவும்!!

 
வவுனியா நேரியகுளம் அஞ்சல் சேவையாளர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் நேரியகுளம் தபாலதிபர் தலமையில் நேரியகுளம் தபாலகத்தில் நேற்று (31.12.2016) சனிக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

இக் கூட்ட்டதின் போது அஞ்சல் சேவையாளர் நலன்புரி சங்கத்தின் புதிய நிர்வாகத்தெரிவுகளின் பிரகாரம் தலைவராக ஜனாப், எஸ்.எச்.எம்.ரகுமான், செயலாளராக ச.சசிக்குமார், பொருளாளராக தி.வினாயகம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

வவுனியா ஓமந்தையில் மரம் நடுகை!!

 
ஓமந்தை நாம்பன் குளத்தில் நேற்று முன்தினம் (30.12.2016) காலை 10.30 மணியளவில் நெல்சன் பவுண்டேசனால் மரம் நாட்டுகை நிகழ்வு இடம்பெற்றது.

நெல்சன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மரம் நாட்டுகை நிகழ்வானது சமூக நோக்கத்தோடு வவுனியா ஓமந்தை நாம்பன்குளத்தில் 200க்கு மேற்பட்ட மரங்களான காயா,முதிரை, மலைவேம்பு, கூழான், புளியமரம் போன்ற மரங்கள் கிட்டத்தட்ட 3ஏக்கர் நிலப்பரப்பில் இம் மரநடுகையானது இடம்பெற்றது.

இன் நிகழ்வில் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் கா.உதயராசா, வவுனியா மாவட்ட வனவள அதிகாரி ஜி.டி.ஜி.சரத்குமார, மத்திய சுற்றாடல் அதிகார சபை உதவி பணிப்பாளர் ஜி.ஏ.ஜெ. பாலசூரிய, சுங்கங்கள் பணியக மாவட்ட பிரதான பொறியியலாளர் கெ.என்.டிபிள்யூ.கே. விமலரத்ன, வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர் திருமதி.கிஷோர் சுகந்தி, ஓமந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.எஸ்.எ.சில்வா, கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

புத்தாண்டில் திருமகள் தரிசனம்!!

முக வசீகரத்தையும் பேரெழிலையும் பெற விரும்புவோருக்கு அதை அருளும் திருமகள், ஸௌந்தர்யலட்சுமியாக பூஜிக்கப்படுகிறாள். பதினாறு பேறுகளையும் தந்து மகிழ்ச்சியான இல்லறம் வேண்டுவோர் ஸௌபாக்கிய லட்சுமியை பூஜித்தால் அந்த பாக்கியங்களைப் பெறலாம்.

நமது பெயரும் புகழும் நல்ல முறையில் சமூகத்திற்கு தெரிய அருள் புரியும் லட்சுமி, கீர்த்தி லட்சுமி என வணங்கப்படுகிறாள். மனதிலும் உடலிலும் தைரியத்தைத் தந்து நாம் சந்திக்கும் சோதனைகளிலிருந்து விடுபட வீரலட்சுமி திருவருள் புரிகிறாள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற திருவருட்பாலிக்கும் லட்சுமி, விஜயலட்சுமி. வித்யாரண்யர், விஜயலட்சுமியின் திருவருளைப் பெற்றே செல்வவளம் பெற்று இந்து சமயம் தழைக்க அருளினார். வம்சத்தை வளர்க்கும் மழலைப்பேறு ஓர் அற்புத அனுபவம். எல்லா செல்வங்களையும் விட பெரிய செல்வம் மழலைச் செல்வம். அதை அருள்பவள் சந்தானலட்சுமி.

நாம் சமய சந்தர்ப்பத்திற்கேற்றாற்போல் புத்திக் கூர்மையோடு நடந்து கொள்ள அருட்பாலிப்பவள் மேதாலட்சுமி. நல்ல கூர்மையான புத்தியை அருள்பவள் இத்தயாபரி. நல்ல கல்வியறிவை அருள்பவள் வித்யாலட்சுமி. ஏடெடுத்து கவி எழுதும் புலவர்களின் நாவிலும் சிந்தையிலும் அமர்ந்தருள்பவள் இந்த லட்சுமி.

பல்வேறு காரணங்களால் மனவேதனையோடு வாழும் மாந்தர்களின் மனவேதனையை அகற்றி அவர்களுக்கு ஆனந்தத்தை அருளும் லட்சுமி, துஷ்டி லட்சுமி. துஷ்டி எனில் ஆனந்தம் என்று பொருள். நமது உடல் சாமுத்ரிகா லட்சணங்களோடு திகழவும் பார்ப்போரைக் கவரும் வண்ணம் புஷ்டியாக இருக்கவும் அருளும் லட்சுமி, புஷ்டிலட்சுமி. நிரந்தரமான சுகம் பேரின்பமே! அந்த ஞானத்தை நமக்கு அருட்பாலிப்பவள் ஞானலட்சுமி.

சன்யாசிகள் கூட இந்த ஞானலட்சுமியின் தயவை வேண்டி துதிக்கின்றனர். உடலிலும் மனதிலும் சக்தி, எதையும் சாதிக்கும் மனவலிமை போன்றவற்றை அருள்பவள், சக்திலட்சுமி. செல்வவளம், கல்விவளம் போன்றவை இருந்தாலும் ஒரு சிலருக்கு ஏதோ ஒரு கவலை அல்லது குழப்பம் மனதை உறுத்தி அமைதியைக் கெடுத்து வரும். அவர்களுக்கு அமைதி கிட்ட அருள்பவளே சாந்திலட்சுமியாக துதிக்கப்படுகிறாள். வீட்டிலும், வெளியிலும் செல்வம், செல்வாக்கோடு வாழ திருவருள்புரியும் லட்சுமி, சாம்ராஜ்ய லட்சுமிதேவி. ஆரோக்கியமே மகாபாக்கியம்.

அனைத்தும் இருந்தும் ஆரோக்கியம் இல்லையெனில் என்ன பயன்? அந்த ஆரோக்கியத்தை அளிப்பவள் ஆரோக்கிய லட்சுமி. சுவர் இருந்தால் சித்திரம் எழுத முடியும் என்பார்கள். நம் உடல் நல்ல முறையில் இயங்க நல்ல உணவு அவசியம். அந்த உணவை அருள்பவள் அன்னலட்சுமி. மாபெரும் சக்ரவர்த்திகளாக திகழ்ந்த மன்னர்கள் அனைவரும் ராஜ்யலட்சுமியை உபாசித்தே அந்த பதவிகளைப் பெற்றனர். குபேரனின் செல்வ வளங்களில் உறைந்து தன்னை வழிபடும் பக்தர்களுக்கு குபேர செல்வத்தை அருளும் லட்சுமி குபேரலட்சுமி என போற்றப்படுகிறாள்.

வீட்டிற்கு வாழ வந்த மருமகள்களை கிரஹலட்சுமி என பெரியோர்கள் போற்றுகின்றனர். முக்தியைத் தந்தருளும் லட்சுமி மோக்ஷலட்சுமி என துதிக்கப்படுகிறாள். இவளே உலகப்பற்று எனும் மாயா பாசங்களை ஞானம் எனும் வாளால் வெட்டி வீழ்த்தி முக்தியை அளிக்க வல்லவள். சகல சௌபாக்கியங்களும் கிட்டி அனைத்து பிரச்னைகளும் தீர்ந்திட திருவருள் புரிபவள் 16 திருக்கரங்களுடன் கூடிய அஷ்ட தசபுஜ மகாலட்சுமியாவாள்.

நீங்கள் குண்டாவதற்கு காரணம் இதுதான்!!

உடல் எடை அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணம் தவறான உணவுமுறைகளை பின்பற்றுவதே ஆகும். நம் உணவில் புரதச்சத்து குறைவாகவும், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு அதிகமாகவும் இருக்கின்றன. ஆனால், இவையால் கூடும் கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

அளவுக்கு, உடல் உழைப்பு இல்லை. இதனால், வயிற்றைச் சுற்றி எளிதில் கொழுப்பு செல்கள் ஒன்று சேர்ந்துவிடுகின்றன. தொப்பை வந்துவிடுகிறது.

தவறான நேரத்தில் சாப்பிடுவது, முறையற்ற தூக்கம் போன்ற மோசமான வாழ்வியல் முறையும், உடல் எடை அதிகரிக்க முக்கியமான ஒரு காரணம். சிலருக்கு, சிறு வயதிலேயே தோன்றும் மன அழுத்தமும் உடல் எடை அதிகரிக்க ஒரு காரணம்.

உடல்பருமன் யாருக்கு ஏற்படும்?

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி பழக்கம் இல்லாதவர்கள்.
அதிக அளவு நொறுக்குத்தீனி சாப்பிடுபவர்கள்.
மூன்று வேளையும் அதிக அளவு கார்போஹைட்ரேட்(அரிசி வகை உணவுகள்) உணவுகளைச் சாப்பிடுபவர்கள்.
மன அழுத்தம் உள்ளவர்கள்.

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் யார் : மத்யூஸ்!!

தென்னாபிரிக்க இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 206 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் இலங்கை அணியின் தோல்விக்கான காரணத்தை அணித்தலைவர் மத்யூஸ் வெளியிட்டுள்ளார். இரண்டு இன்னிங்சிலும் இலங்கை வீரர்கள் தவறான ஷொட்களை தெரிவு செய்து துடுப்பாடியதே அணியின் தோல்விக்கான காரணம் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்தபோது..

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக ஓட்டங்கள் சேர்ப்பது மிக கடினம். திறமையாக செயல்பட்டே ஓட்டங்களை சேர்க்க முடியும்.
ஓட்டங்கள் பெற சில வாய்ப்புகளே உள்ளன. தளர்வான பந்து வரும் வரை வீரர்கள் காத்திருந்து துடுப்பாட வேண்டும். தென்னாபிரிக்க வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.

இலங்கை வீரர் மென்டிஸ் புத்திசாலித்தனமாக துடுப்பாடினார். பிரச்சனையிலிருந்து அணிக்கு திரும்பியுள்ள பந்து வீச்சாளர் சமீர முழு திறனில் இல்லை என மத்யூஸ் தெரிவித்துள்ளார்.