பூமியை நோக்கி வரும் வால் நட்சத்திரம் : நாசா பரபரப்புத் தகவல்!!

எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் வால் நட்சத்திரம் ஒன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் NEOWISE என்ற அதிநவீன தொலைநோக்கி கருவியின் பயன்பாட்டை நாசா தொடங்கியது.
இக்கருவி மூலம் வானில் அன்றாடம் நிகழும் எரிக்கல் மற்றும் வால் நட்சத்திரங்களின் பயணங்கள் குறித்து நாசா கூர்ந்து கவனித்து வருகிறது.

via GIPHY

இந்நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் பூமிக்கு மிக அருகில் வால் நட்சத்திரம் ஒன்று கடந்து செல்ல உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

C/2016 U1 NEOWISE எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த வால் நட்சத்திரத்தை பைனாக்குலர் கருவி மூலமே பார்க்க முடியும். இந்த வால் நட்சத்திரத்தின் ஒளியானது பிரகாசமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மாலை நேரத்தில் பூமியை கடக்க உள்ள இந்த வால் நட்சத்திரத்தால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என நாசா அறிவித்துள்ளது.

பூமியை கடக்கும் இந்த வால் நட்சத்திரம் மெர்குரி கிரகம் வழியாக கடந்து செல்லும்.

மேலும், சூரிய குடும்பத்திலிருந்து வெகு தொலைவிற்கு பயணமாகும் இந்த வால் நட்சத்திரம் அதன் பிறகு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு அங்கு சுற்றி வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள் துப்பாக்கியுடன் பயிற்சி எடுக்கும் விடியோவை வெளியிட்டது ஐ.எஸ் தீவிரவாத இயக்கம்!!

பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்த பல சிறுவர்களை மூளை சலவை செய்து தீவிரவாதிகளாக்கி துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு பயிற்சி கொடுக்கும் வீடியோவை ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் வெளியிட்டுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் தற்போது வெளியிட்டுள்ள அதிர்ச்சி வீடியோவில், பாழடைந்த கட்டிடங்களும், மரங்களும் சூழ்ந்துள்ள ஒரு இடத்தில் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தங்கள் கையில் துப்பாக்கியை ஏந்தியுள்ளனர்.

அங்குமிங்கும் ஒடும் அவர்கள் ஒழிந்திருந்து எப்படி சுடுவது என பயிற்சி எடுக்கின்றனர் . மேலும் வெடிகுண்டு திரியை கொளுத்தி தூக்கி போட்டு வெடிக்க பயிற்சி எடுக்கின்றனர்.

பின்னர் அங்கு வரும் 30 வயதுமிக்க இளைஞர்களுடன் சிறுவர்கள் சேர்ந்து செல்வது போல அந்த வீடியோ காட்சியில் உள்ளது.

இந்த வீடியோவானது ஐ.எஸ் தீவிராவதிகள் அதிகம் நடமாடும் சிரியா நாட்டில் ஒரு இடத்தில் பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் வைரலாக பரவும் இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் சிறுவர்களை இப்படி மூளை சலவை செய்து தீய செயலுக்கு தயார்ப்படுத்துவது கண்டனத்துக்குரியது என கருத்து தெரிவித்துள்ளனர்.

கல்லூரி முதல்வராக இருந்த திருநங்கைக்கு நேர்ந்த விபரீதம்!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில் முதல்வராக நியமிக்கப்பட்ட திருநங்கை ஒருவர் தன்னுடைய பதவியை ராஜினமா செய்திருப்பது, திருநங்கைகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரியில் கடந்த 2015 ஆம் ஆண்டு திருநங்கையான மனாபி பண்டோபாத் யாய் முதல்வராக நியமிக்கப்பட்டார். ஒரு திருநங்கை கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டது மிகவும் பெருமையாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் மனாபி தன்னுடைய கல்லூரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பலருக்கும் முன்னுதாரனமாக இருந்த மனாபி திடீரென்று ராஜினாமா செய்திருப்பது, திருநங்கைகள் பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், புதுப்பெண்ணைப் போன்ற நிலையில் இருப்பதாக நினைக்கிறேன். திருமணமாகி வீட்டுக்கு வரும் புதுப்பெண்ணை வரவேற்பதும், ஒரு வருடத்துக்குப் பிறகு, அவளை கொடுமை செய்து எரித்துக் கொள்வார்கள்.

அது போன்று தான் தன் கல்லூரியில் தொடர்ச்சியான போராட்டங்களால் தான் சோர்வடைந்துவிட்டேன். ஏராளமான நம்பிக்கையோடு உள்ளே வந்தேன், ஆனால் அவை எல்லாம் தளர்ந்து விட்டது.

தற்போது தோற்றுவிட்டதாக உணர்கிறேன் என்று மனம் உருகி கூறியுள்ளார். மேலும் இவர் முதல்வராக இருந்த போது கல்லூரியில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளின் போராட்டம் போன்றவை இவரது ராஜினாமாவுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2003ம் ஆண்டு பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்து கொண்ட மனாபி, அதே மாவட்டத்தில் விவேகானந்தா சடோபார்ஷிகி மகாவித்யாலா கல்லூரியில், பெங்காலி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் என்றும் கூறப்படுகிறது.

ஐரோப்பாவில் அழகு ராணியாக பட்டம் வென்ற இலங்கை யுவதி!!

2016 ஆண்டு ஐரோப்பிய இலங்கை அழகு ராணியாக (Miss Sri Lanka in Europe 2016) சபிதா தோமஸ் தெரிவாகியுள்ளார்.

இம்முறை ஐரோப்பாவின் இலங்கை அழகு ராணியாக தெரிவாகியுள்ள சபிதா தோமஸ் நீர்கொழும்பில் இருந்து ஐரோப்பா சென்ற பெண்ணாகும்.

தற்போது டென்மார்க்கில் வசிக்கும் அவர் நீர்கொழும்பு கெபுன்கொட பிரதேசத்தை சேர்ந்த மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்.

ஐரோப்பா முழுவதும் இலங்கை கொடியை நாட்டும் எதிர்பார்ப்பில் சபிதா தோமஸ் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபிதா தோமஸ் தமது குடும்பத்தினருடன் அடிக்கடி இலங்கை வந்து செல்வதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் வாழும் 170 வயதான முதியவர்?

இலங்கையில் 170 வயதுடைய நபர் ஒருவர் வாழ்வதாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆவணங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

முதியோர்களுக்கான தேசிய சபையினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டையின் அடிப்படையில் இந்த வயதெல்லை வெளியாகி உள்ளது.

தெல்தோட்டையில் வசிக்கும் முதியவர் ஒருவர் 1847.08.30 இல் பிறந்துள்ளார். இதன் அடிப்படையில் இவருக்கு தற்போது 170 வயதாகின்றது.

உண்மையில் 1946.09.30 ஆம் திகதி பிறந்த இவருக்கு, முதியோருக்கான தேசிய சபையினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையில், இவ்வாறு தவறுதலாக பதிவிடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இரு பிள்ளைகளின் தந்தையான இவர், சிறு வியாபாரம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றார்.

இருதய நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனக்கு உதவும் பொருட்டு வழங்கப்பட்ட அடையாள அட்டையிலேயே இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளதால்,அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் குறித்த அடையாள அட்டையில் காணப்படும் பிழை சீர்செய்யப்படும் நிலையில் குறித்த அடையாள அட்டை, மேலும் பிரயோசனமானதாக அமையும் என இவர் தெரிவிக்கின்றார்.

நியூஸிலாந்து தீவிபத்தில் மூவரை பலிகொடுத்த இலங்கையர் : 75 ஆயிரம் டொலர் நிதி சேகரிப்பு!!

நியூஸிலாந்து ஒக்லேன்ட்டில் தனது மனைவி, மகன், மனைவியின் தாய் என மூன்று பேரை பறிகொடுத்த இலங்கையர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

கடந்த 22ஆம் திகதியன்று அதிகாலையில் அவரின் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தின் போது மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 47வயதான கைலேசன் தனபாலசிங்கம் என்ற இலங்கையர் 40 வீதமான தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சில நேரங்களில் அவர் கண்விழித்துபார்ப்பதாக அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த தீவிபத்து சம்பவத்தின்போது கைலேசனின் 11வயது மகள் மாத்திரமே உயிர்தப்பியுள்ளார்.

அவரின் அம்மா, தம்பி, அம்மம்மா ஆகியோர் தீக்கு பலியாகினர். அவர்களின் இறுதிக்கிரியைகள் அடுத்த வாரத்தில் இடம்பெறவுள்ளன.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட கைலேசனின் குடும்பத்துக்காக 75 ஆயிரம் டொலர் நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. அது உயிழந்த மூவரின் இறுதிக்கிரியைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றில்லாத டயர் கண்டுபிடிப்பு : இலங்கையர் ஒருவர் சாதனை!!

இலங்கையர் ஒருவர் உலகிலேயே முதல் தடவையாக காற்றில்லாத டயர் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். லங்கா இன்வென்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவரான தாஹிர் (மீலான்) மொகமட் என்பவரே இந்த நவீன சிந்தனையாளராவார்.

காற்றுக்குப் பதிலாக ஜெலி போன்ற ஒரு உறுதிமிக்க பொருள் டயரில் செலுத்தப்படுகிறது. இந்தப் பொருள் காற்று போல செயல்பட்டு பாதையில் செல்லும் போது ஏற்படக் கூடிய அழுத்தம் போன்றவற்றைத் தாங்கக் கூடிய சக்தி மிக்கதாக இருக்கிறது. இதனால், இந்த டயரில் துளைவிழாது. இதுதான் அதன் சிறப்பு அம்சம் என தனது கண்டு பிடிப்பு பற்றி தாஹிர் தெரிவித்தார்.

இந்த டயரை சர்வதேச ரீதியில் பிரபல்யப்படுத்த தாஹிர் திட்டமிட்டுள்ளார். இந்த டயர் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி அவர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சர்வதேச சமூகத்தின் முன்பாக இலங்கையின் தொழில்நுட்பத் திறன்களை வெளிப்படுத்தி வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழில்நுட்ப அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதே தனது நோக்கம் எனவும் அவர் கூறுகின்றார்.

தாஹிர் இதற்கு முன்பும் ஒரு சாதனையைப் படைத்திருந்தார். அது அவராகவே வடிவமைத்த வாசிக்கப் பயன்படும் மூக்குக் கண்ணாடியாகும்.

இது பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும், கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்குமென தயாரிக்கப்பட்டது.

இந்த மூக்குக் கண்ணாடியின் வில்லைகள் முன்னோக்கி நகரும் போது பெரிய உருவங்கள் சிறிதாகவும், பின்னோக்கி நகரும் பொது சிறிய உருவங்கள் பெருதாகத் தெரியும்படி வித்தியாசம் காட்டுகிறது. பாவிப்பவரின் வசதிக்கு ஏற்றவாறு இதை சரி செய்யவும் முடியும்.

மேலும் தூரத்தில் உள்ள ஒருவர் கடைகளில் காணப்படும் பெயர் பலகைகளையும் வாசிக்கக் கூடிய வசதி இதில் இருக்கிறது. அதாவது, ஒரு பொருளைத் தெளிவாக பார்க்கும் வரையில் இந்த விசேட மூக்குக் கண்ணாடியை நகர்த்தலாம்.

தண்ணீரில் அணிந்து நடக்கக் கூடியதும், பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தக் கூடியதுமான ஒரு சப்பாத்தையும் வடிவமைத்திருப்பதாகவும் தாஹிர் மேலும் தகவல் தருகிறார்.

அண்மையில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற ஒன்பதாவது உலகத் தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் இவர் கௌரவிக்கப்பட்டது. இங்கு குறிப்பிடத்தக்கது.

இவர் தனது கண்டுபிடிப்புக்களை அறிமுகப்படுத்தவென என்ற இணையத்தளம் www.lankainvention.com ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.

வவுனியாவில் இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மூன்றாம் ஆண்டு நினைவுப் பகிர்வு!!

 
வவுனியாவில் நேற்று (30.12.2016) இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மூன்றாம் ஆண்டு நினைவு பகிர்வை முன்னிட்டு ‘தண்ணீர் அனைத்து உயிர்களின் அடிப்படை உரிமை அது விற்பனை பொருளல்ல’ என்ற தொனிப்பொருளில் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு கருத்தப்பகிர்வு நடைபெற்றது.

சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் எதிர்காலத்தில் தண்ணீரைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு மற்றும் பல்தேசிய கம்பனிகள் தண்ணீரை விற்பனை பொருளாக மாற்றுவது, விவசாய நிலங்கள் மற்றும் குளங்களை பாதுகாக்க வேண்டிய தேவைகள் குறித்தும் கருத்துரைகள் நடைபெற்றது.

இலங்கையின் இயற்கை வேளான்மையும் நீர் மேலான்மையும் என்ற தலைப்பில் இலங்கையின் இயற்கை வேளான் விஞ்ஞானி கலாநிதி லயனல் வீரக்கோன், தண்ணீர் அனைத்து உயிர்களின் அடிப்படை உரிமை என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நா.தேவகிருஸ்ணன், நவ காலநித்துவத்தில் இலங்கையின் தண்ணீர் கொள்கை என்ற தலைப்பில் மக்கள் திட்ட ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் உபாலி லிவுலியதா, யாழ் குடாநாட்டின் குடிநீர் அரசியல் என்ற தலைப்பில் ஊடகவியலாளர் அ.ஜெயச்சந்திரன் மற்றும் வவுனியாவில் நிலத்தடி நீர் பாதிப்புக்கள் குறித்து சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் பேச்சாளர் சி.சதீஸ்குமார் ஆகியோர் உரையாற்றினர்.

டெங்குக் காய்ச்சலால் 5 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!!

டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த 5 வயது சிறுவன் கல்முனையில் உயிரிழந்த சம்பவம் டெங்கு நுளம்பு ஒழிப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் உணர்த்தி நிற்கின்றது.

காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட சிறுவனே தீவிர சிகிச்சைகளின் பின்னர் நேற்று முன்தினம் (29.12) உயிரிழந்துள்ளார்.

கல்முனை குடி 16 ஐச் சேர்ந்த அகமது அதீப் என்ற 5 வயது சிறுவனின் உயிரையே டெங்குக் காய்ச்சல் பறித்துள்ளது.

இதேவேளை, கடந்த மாதம் 14ம் திகதி சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 11 வயதான சிறுவன், டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

80 வயதுப் பெண் மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி!!

நைஜீரியாவில் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்ய முயற்சித்த 80 வயதுடைய வயோதிப பெண்ணினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொள்ள மின்சார கம்பத்தில் ஏறிய வயோதிப பெண் மின்வடத்தினை பிடித்துள்ளார். அச்சமயத்தில் அதிஷ்டவசமாக அவ் மின்வடத்தில் மின்னோட்டம் இல்லாமையினால் அவர் உயிர் பிழைத்துள்ளார்.

பிறகு அப்பகுதியில் இருந்தவர்களின் முயற்சியினால் அவ்வயோதிப பெண் மின் கம்பத்தில் இருந்து கீழ் இறங்கியுள்ளார்.

ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு சிவப்பு அறிவித்தல்!!

இந்த ஆண்டின் முடிவடைந்துள்ள காலப்பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் விதமாக சூழலை வைத்திருந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

எதிர்காலத்தில் டெங்கு பரவும் விதமாக செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுப்பதாக சுகாதாரப் பணிப்பாளர் பாலித மஹிபால கூறினார்.

அது சம்பந்தமாக காணப்படுகின்ற சட்ட விதிமுறைகள் சம்பந்தமாக சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

வீதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கயிறு கழுத்தை இறுக்கி இளைஞர் பரிதாபமாகப் பலி!!

கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பேப்பர் போடச் சென்றபோது வீதியின் குறுக்கே போடப்பட்டிருந்த கயிறு கழுத்தை இறுக்கியதில் இளைஞர் பரிதாபமாக பலியானார். ஆத்திரம் அடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

சென்னை கேளம்பாக்கம் அருகே படூர் பகுதியை சேர்ந்தவர் துரைபாபு (65). இவர் ஓய்வுப்பெற்ற தபால் ஊழியர். இவர் பத்திரிகை முகவர். இவரது மகன் கெளரிசங்கர் (32). இவர் தந்தைக்கு உதவியாக இருந்தார். கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை 6.40 மணிக்கு கெளரிசங்கர் பைக்கில் பத்திரிகை போடச் சென்றார்.

அங்குள்ள அலுவலகம் மற்றும் பல்வேறு துறை பகுதிகளுக்கும் சென்று பேப்பர் போட்டார். பின்னர் அவர் ஐசியு வார்ட் பகுதியில் பேப்பர் போட்டுவிட்டு திரும்பினார். அப்போது வீதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கயிறு பைக்கில் சென்ற கெளரிசங்கரின் கழுத்தை சுற்றி இறுக்கியது.

கழுத்து அறுப்பட்டு ரத்தவெள்ளத்தில் விழுந்த கெளரிசங்கர், அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும் படூர் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். அவர்கள் மருத்துவமனையை முற்றுகை நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் போட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கமராவை ஆய்வு செய்து பார்த்தனர். ஐசியு வளாகத்துக்குள் கெளரிசங்கர் செல்லும்போது குறுக்கே கயிறு இல்லாமல் இருப்பதும், அவர் வெளியே வரும்போது கயிறு இருப்பதும் அந்த கயிறில் கெளரிசங்கர் சிக்கி இறப்பதும் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கெளரிசங்கரின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

11 வயது மகளை வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது!!

புத்தளம் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவரை முந்தலம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் குறித்த பாடசாலை மாணவியின் தந்தை என்றும் மற்றையவர் மாமா என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலை மாணவியின் தாய் வெளிநாட்டிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார். துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமி 11 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட சிறுமி தந்தையின் பாதுகாப்பின் கீழே வளர்ந்துள்ளார். தனது மகளை பக்கத்து வீட்டில் உள்ள இளைஞர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார் என குறித்த சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய மகளுடன் சென்றுள்ளார்.

மேலும், புத்தளம் மருத்துவமனையில் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளின் மூலம் இந்த சம்பவத்துடன் சிறுமியின் தந்தையும் தொடர்புப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்த துஸ்பிரயோகத்துடன் தொடர்புடைய மற்றைய நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பச்சிளம் குழந்தை முகத்தில் அசிட் வீச்சு : அதிர்ச்சி தரும் காரணம்!!

டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் 2 வயது ஆண் குழந்தையின் முகத்தில் அசிட் வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, Gurgaon நகரில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் திலீப்- திவ்யா தம்பதியினர் தங்களது 2 வயது குழந்தை ஆதித்யாவுடன் வசித்து வந்துள்ளனர்.

திவ்யா 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் இவர்களது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த ராஜா என்ற நபர் திவ்யாவின் மீது காதல் வயப்பட்டுள்ளார்.

பலமுறை அவரிடம் சென்று தனது காதலை தெரியப்படுத்திய ராஜா, நாம் இருவரும் யாருக்கும் தெரியாமல் ஓடிப்போய்விடலாமா என கேட்டுள்ளார். இதனால் கோபம் கொண்ட திவ்யா, இதுகுறித்து தனது கணவர் திலீப்பிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் திலீப்பிற்கும், ராஜாவிற்கும் வாய்த்தகராறு ஏற்படவே, அந்த இருப்பிடத்தை விட்டு திலீப் குடும்பத்தினர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்று 1 வருடம் கடந்துவிட்டபோதிலும் ராஜாவால் திவ்யாவை மறக்க முடியவில்லை. மேலும் திவ்யாவின் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையும் மனதில் இருந்த காரணத்தால், நாம் உதாசீனப்படுத்தப்பட்டுவிட்டோமே என கோபம் கொண்டுள்ளார்.

இதனால், திவ்யாவின் 2 வயது மகன் ஆதித்யாவை டிசம்பர் 12 ஆம் திகதி கடத்தி அவனது முகத்தில் அசிட் வீசி ஊரின் ஒதுக்குப்புறத்தில் தூக்கிவீசியுள்ளார். சிறுவயது குழந்தை என்றுகூட பாராமல் இந்த கொடூர செயலை செய்துள்ளார்.

குழந்தையை காணவில்லை என பரிதவித்த திலீப் இதுகுறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார். சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்கள் கடந்துவிட்ட நிலையில், குற்றுயிராய் கிடந்த ஆதித்யாவின் உடல் பொலிசாரல் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது, ஆதித்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தாய் மீது ஆசை கொண்ட காரணத்தால், பச்சிளம் குழந்தையை இப்படி கொடூரமாக தண்டித்த ராஜாவை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பேஸ்புக் பயனாளர்களுக்கு அறிவுறுத்தல்!!

2016ம் ஆண்டு சமூக வலைத்தளங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சுமார் 2,200 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலை தெரிவித்துள்ளது.

வேறு நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி போலி பேஸ்புக் பக்கங்கள் திறக்கப்படுகின்றமை தொடர்பிலேயே அதிக இணைய முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

தனிநபர்கள் தங்களின் பேஸ்புக் ஊடாக முறைப்பாடு பதிவு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேஸ்புக்கில் தங்கள் புகைப்படங்களை வெளியிடும் போது பாதுகாப்பு கருதி “நண்பர்களுக்கு மாத்திரம்” என்ற தேர்வினை தெரிவு செய்து புகைப்படங்களை பதிவிடுமாறு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முறை போலி கணக்குகளில் வேறு நபர்களின் புகைப்படம் செல்கின்றமை மற்றும் பிழையான நபர்களுக்கு புகைப்படம் செல்வதனை தவிர்ப்பதற்கும் உதவியாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா – மன்னார் மாவட்ட எல்லைக் கல் விசமிகளால் உடைப்பு!!

 
வவுனியா மாவட்டத்தையும் மன்னார் மாவட்டத்தையும் எல்லைப்படுத்தும் அடையாளக் குறியீட்டுக்கல் திட்டமிட்டு விசமிகளால் சில தினங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்டுள்ளது.

பிரமணாளங்குளம் – மடு பிரதான வீதியில் பிரமணாளங்குளத்தில் இருந்து 9.5 கிலோமீட்டர் தூரத்தில் வவுனியா மாவட்டத்தின் பெரியதம்பனை அமைந்துள்ளது.

அதனையடுத்து மன்னார் மாவட்டம் பெரிய பண்டிவிருச்சான் அமைந்துள்ளது. இவ்விரு பகுதிகளுக்குரிய மாவட்டங்களை பிரித்துக் காட்டும் அடையாளக் குறிக் கல்லே திட்டமிட்டு விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, இந்தப் பகுதியில் உள்ள வவுனியா மாவட்டத்திற்குரிய நிலப் பகுதிகள் மன்னார் மாவட்டத்திற்குள் கையகப்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அதன் ஒரு கட்டமாகவே இது உடைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.