கை, கால்களின்றி உலகை வலம் வரும் ஜெனிஸ் மெக் டேவிட் இலங்கை வருகை!!

ஜெனிஸ் மெக் டேவிட், ஜேர்மனைச் சேர்ந்த 25 வயதான ஊக்கமூட்டும் பேச்சாளர். தனது சக்கர இருக்கையிலேயே உலகை வலம் வருபவர்.

இயலாமையைப் பொருட்படுத்தாமல், தனி நபர்கள் தங்களது முழுத்திறனை அடைவது சாத்தியம் என்பதை நிரூபிக்கும் வகையில், அவர் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

ஜெனிஸ் மெக் டேவிட்டிற்கு பிறவியிலேயே கை, கால்கள் கிடையாது.

இந்நிலையில், இவர் தற்போது பல்கலைக்கழகம் செல்வதோடு, தனது காரில் உலகின் பல நாடுகளுக்கும் விஜயம் செய்து வருகின்றார்.

கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்திற்கு இன்று காலை வருகை தந்த ஜெனிஸ் மெக் டேவிட் நியூஸ்லைன் மற்றும் பத்திகட நிகழ்சிகளில் பங்குபற்றியிருந்தார்.

ஓஃப்லைனில் இருந்தாலும் உங்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கிறது பேஸ்புக்!!

பேஸ்புக் சமூக வலைத்தளமானது தனது பாவனையாளரின் ஒன்லைன் (Online) நடவடிக்கைகள் மட்டும் அல்லாது, ஓஃப்லைன் (Offline) நடவடிக்கைகளையும் கண்காணித்து, சில நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து தகவல் சேகரிப்பதாக ‘ப்ரோ பப்ளிகா’ எனும் செய்தித்தாளில் அதிர்ச்சித் தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் நீங்கள் நேரம் செலவழிக்கும் பொழுது அது உங்களது ‘ஒன்லைன்’ நடவடிக்கைகள் மூலம் உங்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கிறது என்பது நீங்கள் அறிந்த செய்தி. ஆனால், ‘ஓ ஃப்லைனில்’ இருக்கும் போதும் கூட அது உங்களைப் பற்றிய தகவல்களை வேறு சில நிறுவனங்கள் மூலம் சேகரிக்கிறது.

பேஸ்புக் தனது அல்காரிதங்கள் மூலம் பயனாளர்களைப் பற்றிய பல்வேறு தகவல்களை சேகரிக்கிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள் அடிப்படையில், பயனாளர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றனர். அவர்களைப்பற்றிய விபரங்கள் பேஸ்புக்குடன் தொடர்பில் உள்ள பல்வேறு விளம்பரதாரர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

இவ்வாறு கொடுக்கப்படும் தகவல்கள் மூலமாக அவர்கள் நமக்கு விளம்பரங்களை காண்பிக்கச் செய்கின்றனர். இந்நிலையில், தற்பொழுது மேலும் தனிப்பட்ட தகவல்களைத் திரட்டும் நோக்கில், பயனாளர்களின் சம்பளம் எவ்வளவு, எந்த கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்கள், எத்தனை கிரெடிட் கார்ட்கள் வைத்திருக்கிறார்கள் என்ற விபரங்கள் வரை வெளியிலிருக்கும் சில ‘வணிக ரீதியில் தகவல் விற்கும்’ நிறுவனங்கள் மூலம், பணம் கொடுத்து தகவல்கள் திரட்டப்படுவதாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பயனாளர்களின் வசதிக்காக சிறிய அளவில் மட்டும் தகவல்கள் திரட்டப்படுவதாக தனது தளத்தில் பேஸ்புக் தெரிவித்துள்ளது. ஆனால், இவ்வளவு அதிகமான தகவல்கள் அதுவும் ஓஃப்லைன் மூலமாக திரட்டப்படுவதைப் பற்றி பேஸ்புக் எதுவும் தெரிவிப்பதில்லை என்பது தவறானது என துறைசார் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு ஒரு விநாடி தாமதமாகப் பிறக்கின்றது!!

பூமியின் ஒருநாள் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு நேரம் கணக்கிடப்படுகிறது. இதனை நாம் வானியல் நேரம் என அழைக்கிறோம்.

இதேபோல உலகம் முழுவதும் 400 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அணு கடிகாரம் மூலமும் நேரம் கணக்கிடப்படுகின்றது. இது மிகவும் துல்லியமானது. தற்போது அணு கடிகாரத்தைப் பின்பற்றியே உலகின் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது.

பொதுவாக பூமி ஒரே வேகத்தில் சுற்றுவது இல்லை. நிலவின் ஈர்ப்பு விசை, நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில நேரங்களில் வேகமாகவும் சில நேரங்களில் மெதுவாகவும் சுற்றுகிறது.

இதனால் பூமியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட வானியல் நேரத்திற்கும் அணு கடிகாரத்தின் நேரத்திற்கும் இடையில் நூலிழை வேறுபாடு இருந்து கொண்டே இருக்கிறது.

அதன்படி, 500 முதல் 750 நாட்கள் கால அளவில் வானியல் நேரத்திற்கும் அணு கடிகார நேரத்திற்கும் இடையே ஒரு விநாடி வேறுபாடு ஏற்படுகிறது.

இதனை ஈடு செய்ய உலகின் அணு கடிகாரங்களில் அவ்வப்போது ஒரு விநாடி கூடுதலாக சேர்க்கப்படுகிறது. இது லீப் விநாடி என்று அழைக்கப்படுகிறது. ஜூன் 30 அல்லது டிசம்பர் 31 ஆம் திகதிகளில் இந்த லீப் விநாடி சேர்க்கப்படும்.

கடந்த 1972 ஆம் ஆண்டில் லீப் விநாடி முதன்முறையாக அறிமுகமானது. அன்று முதல் இன்று வரை 26 முறை லீப் விநாடி சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் எதிர்வரும் 31 ஆம் திகதி லீப் விநாடி சேர்க்கப்படுகிறது.

எனவே, 2017 புத்தாண்டு பிறக்கக் கூடுதலாக ஒரு விநாடி நேரமாகும் என்று சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு (IERS) அறிவித்துள்ளது.

லீப் விநாடி குழப்பத்தைத் தவிர்க்க கூகுள் நிறுவனம் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.

அதன்படி கூகுளின் சேவர் கடிகாரம் ஒரு விநாடியை ஈடுகட்ட 20 மணி நேரம் சற்று மெதுவாகச் சுற்றும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி!!

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 206 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, போட் எலிசபெத்திலுள்ள செயின்ட் ஜோர்ச் பார்க் மைதானத்தில் கடந்த 26ம் திகதி ஆரம்பமானது.

முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென்னாபிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 286 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதனையடுத்து தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 64.5 ஓவர்களுக்கு மட்டுமே தாக்குப் பிடித்து 205 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்படி 81 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது.

தென்னாபிரிக்கா அணி 406 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை இடைநிறுத்துவதாக அறிவித்தது.

இதற்கமைய இலங்கைக்கு 488 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இலங்கை அணி துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.

எனினும் 281 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்ட இலங்கை அணி 206 ஓட்டங்களால் தோல்வியடைந்ததுள்ளது.

வவுனியாவில் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களினால் சம்பந்தனின் படம் எரிப்பு!!

 
வவுனியாவில் இன்று காலை 10.00 மணியளவில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஒன்றிணைந்து அடையாள உண்ணாவிரம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

மாலை 4 மணியளவில் முடிவுக்கு வந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனின் புகைப்படத்தினை தாங்கி பேரணியாகச் சென்று இறுதியில் அவரின் படம் எரியூட்டப்பட்டது.

இவ் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒப்பாரி வைத்தையும் காணக்கூடியதாக இருந்தது.

பெண்களை விட ஆண்களின் மூக்கு ஏன் பெரிதாக இருக்கின்றது என்று தெரியுமா?

பெண்களை விட ஆண்களுக்கு அதிக அளவு பிராண வாயு தேவைப்படுவதால் ஆண்களின் மூக்கு அளவில் பெரிதாக இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மனித உடல் உறுப்புகளின் அமைப்பு பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுவாக பெண்களை விட ஆண்களின் மூக்கு பெரிதாக அமைந்திருப்பதன் காரணம் குறித்து மூன்று ஆண்டுகளாக ஆய்வு நடந்து வருகிறது. இந்த ஆய்வின் முடிவில் இதற்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளதாவது, பொதுவாக பெண்களை விட ஆண்களின் மூக்கு 10 சதவீதம் அளவில் பெரியது. ஆண்களின் உடல் அமைப்பில் சதை அதிகம் உள்ளது.

இதன் வளர்ச்சிப் பெருக்கத்திற்கு அதிக அளவு ஒட்சிஜன் தேவைப்படுகிறது. பெண்களின் உடலில், சதையை விட கொழுப்பு அதிகம் உள்ளது. ஆண்களை விட, பெண்களுக்கு சதை குறைவு என்பதால், அவர்களுக்கு ஆண்களை விட குறைந்த அளவிலான பிராண வாயு போதுமானது.

அதிக அளவு ஒட்சிஜனை உள்ளிழுப்பதற்காகவே ஆண்களின் மூக்கு பெரிதாக அமைந்துள்ளது. ஐரோப்பிய ஆண்கள் மற்றும் பெண்களின் மூக்கின் அளவுகளின் அடிப்படையின் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

நமது முன்னோர்களுக்கு பெரிய அளவிலான மூக்கு இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் தற்போதுள்ள தலைமுறையினருக்கு சிறிதாக உள்ளது. நம் மூதாதையர்கள் பெரிய உடல் அமைப்பை பெற்றிருந்தனர்.

அவர்களின் உடல் வளர்ச்சிக்காக அவர்களுக்கு அதிக அளவு ஒட்சிஜனை உள்ளிழுக்கும் பெரிய மூக்கு தேவைப்பட்டது. ஆனால், நம் உடல் அளவு சிறிதாக இருப்பதால், தற்போது நம் மூக்கு சற்று சிறிதாகவே அமைந்துள்ளது.

பொதுவாக பிறக்கும் குழந்தைகளின் மூக்கின் அளவில் பெரிய மாறுபாடுகள் இருக்காது. ஆண் பெண் குழந்தைகளுக்கு ஒரே அளவிலான மூக்கே காணப்படும். 11 வயது ஆகும் போது மூக்கின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும். 11 வயதைக் கடந்த சிறுவர், சிறுமியரிடம் மூக்கின் அளவில் உள்ள வேறுபாட்டை நம்மால் நன்கு காண முடியும் என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடு செல்ல முயற்சித்த இலங்கையர் இருவர் இந்தியாவில் கைது!!

போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு செல்ல முயற்சித்த போது, கல்கத்தா சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் இருவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு சென்றுள்ளதுடன் போலியான ஆவணங்களை பயன்படுத்தி அங்கு தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா விபத்தில் விமானப்படை வீரர் பலி!!

வவுனியா விமானப்படை தளத்தில் கடைமையாற்றும் அருனசாந்த 31 வயது என்கின்ற விமானப்படை வீரர் நேற்றைய தினம் விபத்தொன்றில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

நேற்றைய தினம் வருட இறுதி களியாட்ட நிகழ்வொன்றில் பங்கு பற்றிய விமானப்படை வீரர் மது போதையில் படைதளத்திற்குள் தனது இருப்பிடத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் ஸ்தலத்திலேயே பலியானதாக அறியப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொதுவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

12 வயதில் 90 வயது தோற்றமுடைய சிறுமி உயிரிழந்த பரிதாபம்!!

 
கொலம்பியாவைச் சேர்ந்த 90 வயது தோற்றமுடைய 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Karen Ordonez கொலாம்பியாவைச் சேர்ந்த இவர் வினோதமான (progeria) நோய் தாக்கத்தினால் மிகவும் முதிர்ச்சியாக தென்பட்டார். இந்த வகையான நோய் உலகில் எட்டு மில்லியன் மக்களில் ஒருவருக்கு வரும் மிகவும் அரிதான நோய் என்று கூறப்படுகிறது.

இந்த நோய் வந்தவர்கள் மிகவு வயதானவர்கள் போல் காட்சி அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதன் படியே Karen Ordonez தன்னுடைய 12 வயதில் 90 வயது முதியவர் போல் காட்சி அளித்தார்.

இவருக்கு இந்த நோய் இவருடைய ஆரம்ப வயதில் ஏற்பட்டதாகவும், அதன் பின் அது படிப்படியாக அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.

இவருக்கு அடுத்த படியாக இந்த நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர் கொலாம்பியாவைச் சேர்ந்த Magali Gonzalez இவர் அண்மையில் தன்னுடைய 15வது பிறந்தநாளை கொண்டாடினார்.

மேலும், Karen Ordonezக்கு இந்த நோய் தாக்கம் மட்டுமின்றி கீழ்வாதம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் கூட இருந்துள்ளது. இவற்றை எல்லாம் மீறி வாழ்க்கையில் போராடி வாழ்ந்து வந்த Karen Ordonez உடல் நலப் பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ளார்.

பூமியை உடைத்துக்கொண்டு நுழைந்த பெரிய விண்கல்: கமெராவில் சிக்கிய காட்சி!!

பெரிய விண்கல் ஒன்று மூன்று துண்டுகளாக பிளந்துக் கொண்டு பூமியில் நுழைந்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி வியக்க வைத்துள்ளது.

பூமியில் விண்கல் விழுந்த இடத்தை குறித்த தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏனெனில் அது தங்கத்தை விட நாற்பது மடங்கு விலை உயர்ந்தது என கூறப்படுகிறது.

குறித்த வீடியோவில், பெரிய தீப்பந்துகள் பூமியை உடைத்துக்கொண்டு வானத்தில் ராக்கெட்டுகள் போல் வேகமாக செல்கிறது. ஆனால், அந்த விண்கல் விழுந்த இடம் மர்மமாகவே உள்ளது.

மெக்ஸிகோ எல்லை அருகே இந்த பெரிய விண்கல் விழுந்து வெடித்ததாக உள்ளுர் வாசிகள் கூறுகின்றனர். இந்த விண்கல் மெக்னீசியம் மற்றும் சோடியத்தால் ஆனது என நம்பப்படுகிறது.

கடந்து மூன்று மாதங்களுக்கு முன்பு 30 டன் எடையுள்ள உலகின் இரண்டாவது பெரிய விண்கல் அர்ஜென்டீனாவில் விழுந்தது நினைவுக் கூரதக்கது.

மகன் கண் முன்னால் மகளை கொடூரமாக குத்தி கொலை செய்த தாய்!!

எட்மோண்டன் நகருக்கு அருகில் உள்ள Sherbrooke என்ற பகுதியில் 50 வயதான தாயார் ஒருவர் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் கணவர் புற்றுநோயால் இருந்தது முதல் தாயார் ஒருவித மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மகன் மைக்கேல் சென்றுருந்த நேரத்தில் தாயாருக்கும் அவரது மகளான ரேச்சலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கடும் ஆத்திரத்தில் மூழ்கிய தாயார் கத்தியை எடுத்து மகளை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதே நேரத்தில் வெளியே சென்றுருந்த மகன் வீட்டிற்குள் நுழைய இக்காட்சியை கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த ரேச்சல்(21) துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தாயாரின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மகன் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து சென்ற பொலிசார் தாயாரை கைது செய்து அவரிடம் இருந்த ஆயுதத்தை கைப்பற்றினர்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தாயார் மன அழுத்தத்தில் இருந்ததால் கொலை நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தாயார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜனவரி 10-ம் திகதி நீதிமன்றத்தில் விசாரணை துவங்க உள்ளது.

மேலும், ரேச்சலின் குடும்பத்திற்காக அப்பகுதி மக்கள் சுமார் 30 ஆயிரம் டொலர் வரை நிதி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியான காதலியை தூக்கி எறிந்த காதலன்!!

மேற்கு வங்க மாநிலத்தில் காதலன் ஒருவன் தனது காதலியை ஓடும் ரயிலில் இருந்து தூக்கிவீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Malda மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் என்று பொலிசாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் பொலிசார் அங்கு விரைந்து சென்று, அப்பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அளித்துள்ள புகாரில், எனது மகள் ஆஷிம் மண்டல் என்பவரை காதலித்து வந்தாள்.

எனது மகளை கர்ப்பமாக்கியி அவன், திருமணத்திற்கு மறுத்துவந்துள்ளான். ஆனால் எனது மகள் தொடர்ச்சியாக வற்புறுத்தி வரவே, அவளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான். அதன்படிய ஓடும் ரயிலில் இருந்து எனது மகளை தூக்கி எறிந்துள்ளான்.

இதில், எனது மகளின் இடது கை பறிபோயுள்ளது, மேலும் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறாள். இப்படி ஒரு கொடூர செயலை செய்த மண்டேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் தலைமறைவாகியுள்ள மண்டேலை பொலிசார் தேடி வருகின்றனர்.

கை, கால்களை கட்டி வீதியில் பெண்ணிற்கு நடந்த சித்திரவதை!!

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாலையில் கிடத்தப்பட்டிருந்தார். மனநலன் குறித்த விழிப்புணர்வும், மனித நேயமும் நம்மிடம் இல்லாமல் போனதை உணர்த்தியது இந்த சம்பவம்.

கோவை, சிவானந்தா காலனி அருகே மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் நடுவே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடத்தப்பட்டிருந்தார் அந்த இளம்பெண். கயிறை அவிழ்த்து விடுமாறு கதறி அழுதார் அந்த பெண்.

அருகில் இன்னொரு பெண்ணும் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். எதற்காக? யாரால் கட்டப்பட்டார்? எதற்கு இன்னொரு பெண் அழுகிறார் என யாராலும் யூகிக்க முடியவில்லை.

கட்டப்பட்ட பெண் தொடர்ச்சியாக கதறிக்கொண்டிருக்க… அருகில் அமர்ந்திருந்த பெண் அழுது கொண்டே இருந்தார்.

இதைப்பார்த்த சிலர், காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கை, கால்கள் கட்டப்பட்ட அந்த பெண்ணை கட்டுகளில் இருந்து விடுவித்தனர். அருகில் இருந்த பெண்ணிடம் விசாரித்த போது, அவர் கட்டப்பட்டிருந்த பெண்ணின் தாயார் தனலட்சுமி என்பது தெரியவந்தது.

கோவை கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமியின் மகளான பியூலா, கணவரால் கைவிடப்பட்டதாலும், பிறந்த குழந்தை இறந்து பிறந்ததாலும் மனச்சிதைவு ஏற்பட்டதாகவும், பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து பியூலா ஆக்ரோஷமாய் எல்லோரையும் கல்லை கொண்டு அடிப்பதால் இப்படி கட்டி போட்டு வைத்திருப்பதாக சொன்னார் தனலட்சுமி. தனது மகளை காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக பியூலாவின் தாயார் தனலட்சுமியிடம் பேசினோம். “மூணு வருஷத்துக்கு முன்னாடி என் பொண்ணுக்கு கல்யாணம் நடந்துச்சு. கர்ப்பமா இருக்கும் போது பொண்ணை விட்டுட்டு அவன் போயிட்டான். கொஞ்ச நாள்ல குழந்தையும் பொறந்துச்சு. ஆனா பிறந்த குழந்த இறந்து தான் பிறந்துச்சு. இந்த 2 சம்பவங்களால ரொம்பவே உடைஞ்சு போயிட்டா. பைத்தியம் மாதிரி கத்துவா. அப்படியே மனநலம் பாதிக்கப்பட்டவளாவே ஆயிட்டா.

கடந்த 2 மாசமா ரொம்ப மோசமா நடந்துக்க ஆரம்பிச்சா. திடீர் திடீர்னு ஆக்ரோஷமா நடந்துக்குவா. அக்கம்பக்கதுல யாரையாவது பார்த்தா கல் எடுத்து வீசுவா. நான் வாடகை வீட்டுல இருக்கே. இவ இப்படி பண்றதால வீட்டை காலி பண்ணச் சொல்றாங்க. வீட்டை காலி பண்ணீட்டு நான் என்ன பண்ணுவேன்?. வீட்டுலயும் வைச்சுக்க முடியலை.

கவர்மென்ட் ஆஸ்பிட்டல் கூட்டீட்டு போனாலும், மாத்திரை கொடுத்து துரத்தி விட்டுடுறாங்க. தனியார் காப்பகத்துல வைச்சு பராமரிக்க எங்கிட்ட வசதியும் இல்லை. மகளை வெளியே கூட்டீட்டு போயிடுங்கனு வீட்டு ஓனர் சொன்னதால வெளியில கூட்டீட்டு வந்துட்டேன். ரொம்ப ஆக்ரோஷமா நடந்துக்கறா என்ன செய்யறதுன்னே தெரியலை. அதான் கட்டி போட்டு வைச்சுட்டேன். எப்படியாவது என் மகளை காப்பகத்துல சேத்து காப்பாத்துங்கப்பா,” என்றார் கண்ணீர் மல்க.

இதையடுத்து அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி பியூலாவை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மனநல பிரிவில் சேர்த்து, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்ளும் நாம் மனநல பாதிக்கப்பட்டவர் என்றால் விலகியே நிற்கிறோம். மனநல பாதிப்பு குறித்த விழிப்புணர்வும், மனித நேயமும் நம்மிடம் இல்லாமல் இருப்பதை வெளிப்படையாக உணர்த்தி விட்டது இந்த நிகழ்வு.

பணம் தர மறுத்த மனைவி : தனக்குத் தானே தீவைத்து தற்கொலை செய்த கணவன்!!

தனது மனைவியிடம் பணம் கேட்டு தர மறுத்தமையின் காரணமாக தனக்கு தானே கணவன் தீ மூட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

35 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு தற்கொலை செயதுகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி மரண விசாரனை அதிகாரியிடம் சாட்சியமளிக்கையில், உயிரிழந்த தனது கணவனும் தானும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டோம்.

மேசன் தொழில் செய்து வரும் தனது கணவருக்கு குடி பழக்கம் உண்டு. இதன் காரணமாக தாம் இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு.

கடந்த 24ஆம் திகதி மது போதையில் வந்த தனது கணவர் தன்னிடம் பணம் தருமாறு கேட்டார். எனினும், தான் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்தையடுத்து தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டார்.

எனினும், அவரை காப்பாற்றி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்திருந்த போதிலும், சிகிச்சை பலன் இன்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உடல் வளர்ச்சியில்லாததால் பிளாஸ்ரிக் கூடையில் வசித்த 19 வயதான நைஜீரிய யுவதி காலமானார்!!

கை, கால்கள், முறை­யாக வளர்ச்­சி­ய­டை­யா­ததால் பிளாஸ்திக் கூடை­யொன்றில் அமர்ந்­த­வாறு வசித்து வந்த 19 வய­தான யுவ­தி­யொ­ருவர் கடந்த ஞாயி­றன்று உயி­ரி­ழந்துள்ளார்.

நைஜீ­ரி­யாவின் கெனோ எனும் கிரா­மத்தை சேர்ந்த ரெஹ்மா ஹருனா எனும் இவர் பிறக்கும் போது ஆரோக்­கி­ய­மா­னவர் போன்றே தென்­பட்டார்.

ஆனால், 6 மாத குழந்­தை­யாக இருந்­த­போது அவரின் உடல் வளர்ச்சி திடீ­ரென நின்­றது. அரி­தான நோய் ஒன்றின் கார­ண­மாக ரெஹ்­மாவின் உடல் வளர்ச்சி பாதிக்­கப்­பட்­டது. அவரின் கைகள், கால்கள் இயங்­க­வில்லை. இதனால், பதின்மர் வய­தான போதிலும் ரெஹ்­மாவை பிளாஸ்திக் கூடையில் வைத்தே அவரின் பெற்றோர் பரா­ம­ரித்­தனர்.

ரெஹ்­மா­வுக்கு தம்மால் முடிந்­த­வரை அவர்கள் துணை­யாக இருந்­தனர். பிளாஸ்திக் கூடையில் வைத்து கிராமம் எங்கும் அவரை அழைத்துச் சென்­றனர்.

தனது உடல்­நி­லைக்கு மத்­தி­யிலும் ரெஹ்மா மகிழ்ச்­சி­யா­ன­வ­ராக காணப்­பட்டதுடன் 10 வய­தான தனது இளைய சகோ­த­ர­னுடன் அவர் நெருக்­க­மா­ன­வ­ராக இருந்தார்.

தினமும் ரெஹ்­மாவை தான்­ வீட்­டி­லி­ருந்து வெளியே அழைத்துச் சென்­ற­தாக அவரின் சகோ­தரன் பஹாத் தெரி­வித்­துள்ளார்.

“எனது பெற்றோர் மிகவும் உத­வு­கின்­றனர். எனக்குத் தேவை­யா­ன­வற்­றை­யெல்லாம் அவர்கள் வழங்­கு­கின்­றனர் ” என இவ்­வ­ருட முற்­ப­கு­தியில் ரெஹ்மா ஹருனா தெரி­வித்­தி­ருந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று ரெஹ்மா உயிரிழந்தார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இருளில் மூழ்கப்போகும் இணைய உலகம் : 31ம் திகதி நடக்கப்போவது என்ன?

புவி தன்னைத்தானே சுற்றிவர 24 மணி நேரம் எடுக்கின்றது. இது அனைவருக்கும் தெரிந்திருக்க கூடிய ஒன்று. எனினும், பல ஆண்டுகளாக சுற்றும் போது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு விநாடியை இழந்திருக்கும் அல்லது அதிகரித்திருக்கும்.

அதாவது புவி தன்னைத்தானே சுற்றிவர 24 மணி நேரமும் ஒரு விநாடியும் எடுக்கும் அதனை லீப் நேரம் என குறிப்பிடுவார்கள்.

இந்நிலையில், எதிர்வரும் 31ம் திகதி புவி தன்னை சுற்றிவர 24 மணி நேரமும் ஒரு விநாடியும் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நள்ளிரவு 12 மணிக்கு 61 விநாடிகள் காட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக அனைத்து கணினிகளும் 60 விநாடிகளை மையமாககொண்டு இயங்குகின்றது. தற்போது ஒரு விநாடி அதிகரித்துள்ளதன் காரணமாக அனைத்து கணினிகளும் திடீரென நின்று போககூடிய (ஷெட் டவுன் ஆககூடிய) வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் இதனை கண்டறிந்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 31ஆம் திகதி அனைத்து எண்முறை (digital) கடிகாரங்களும் 61 விநாடிகளை காட்டவேண்டியுள்ளது.

இதன் காரணமாக கணினிகள் பலவும் நிலைத்தடுமாறி நின்றுவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், இணைய உலகம் இருளில் மூழ்கிப் போகலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை சரிசெய்யும் வகையில் இன்று முதல் நானோ விநாடிகளை (விநாடியை 60 பிரித்தால் மைக்ரோ விநாடி, அதனை 60ல் பிரித்தால் நானோ விநாடி) கழிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து கணினிகள் மற்றும் இணையம் சார்ந்த அனைத்து சாதனங்களும் இதற்கான மேம்படுத்தலை (அப்டேட்) தாமாகவே செய்துகொள்ள அப்பிள், மைக்ரோசொப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் சீர்செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2000ஆம் ஆண்டும் இது போன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்ததாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.