உலகின் மிகவும் உயரமான பாலம் தென்மேற்கு சீனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கின் மேல் 570 மீற்றர் உயரத்தில் இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் மக்களின் பாவனைக்காக பாலம் திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 200 அடுக்கு மாடி கட்டடங்களின் உயரத்தில் இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெய்பான்ஜியங் பாலமானது சீனாவின் தென் மேற்கு மாகாணங்களான யுனான் மற்றும் குளோகு ஆகிய மாகாணங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.
குளோகு மாகாணத்தின் போக்குவரத்து அதிகார சபை இந்த பாலத்தை பராமரிக்கும் பொறுப்பினை வகிக்கின்றது.
2013 ஆம் ஆண்டில் நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட இந்த பாலத்தில் 1341 மீற்றர் நீளமான இணைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் சுமார் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
யாழ்.நகர மக்கள் தமது வீடுகளில் நாளாந்தம் சேரும் கழிவுகளை உக்கக்கூடிய கழிவுகள், உக்காத கழிவுகள் என தரம் பிரித்து வைப்பதன்மூலமே அவற்றை அகற்றுவது இலகுவாக இருக்குமென யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்தார்.
யாழ் மாநகர சபையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினுடைய ஏற்பாட்டில் மாநகர சபைகள் உள்ள இடத்தில் திண்மக்கழிவுகளை தரம் பிரித்து அகற்றுகின்ற செயற்திட்டம் நவம்பர் மதம் 2ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அந்தவகையில் நாடளாவிய ரீதியில் 23 மாநகர சபைகள் யாழ் மாநகர சபையும் ஒன்று என்றவகையில் நாமும் இந்தச் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
அந்த வகையில் பாசையூர், அரியாலை, நாவாந்துறை, நல்லூர், யாழ் நகரப்பகுதி, வண்ணார் பண்ணை, குருநகர் ஆகிய 7 வலயங்களிலும் இவற்றை ஆரம்பித்திருந்தோம். நவம்பர் மாதம் முதலாம் திகதி 7 வலயங்களிலும் திண்மக் கழிவுகளை தரம்பிரித்து அகற்றுகின்ற சிறிய முயற்சியுடன் ஆரம்பித்திருந்தோம். இதற்கு மக்களிடம் ஆதரவு அதிகமாகக் காணப்பட்டது.
திண்மக் கழிவு அகற்றல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை யாழ் மாவட்டத்தில் உள்ள 7 பாடசாலைகளில் ஆரம்பித்திருக்கின்றோம். எதிர்வரும் 2017 ஆம் ஆண்டில் திண்மக் கழிவுகள் அகற்றுகின்ற பணியை முழு வீச்சில் அமுல்படுத்தவுள்ளோம்.
திண்மக் கழிவு அகற்றும் செயற்பாட்டில் தண்டப்பணம் அறவிடும் முறையினையும் அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். இச்செயற்பாட்டிற்கு சுற்றுப்புறச் சூழல் பொலிஸார் தங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள்.
உக்கக்கூடிய திண்மக் கழிவுகளை காக்கைதீவில் உள்ள மீள்சுழற்சி மையத்திற்கு அனுப்புகின்றோம். அங்கு வீரியம் என்னும் மீள்சுழற்சி உரம் உற்பத்தியாக்கப்படுகின்றது. மொத்தமாக இதுவரைக்கும் 8,000 கிலோகிராம் பசளை உற்பத்தியாக்கப்பட்டுள்ளது. அவற்றினைப் பொதுமக்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்கின்றோம்.
உணவு உற்பத்தி உரிமையாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் ‘லஞ்சீற்”இனை பாவிக்காது இயற்கையான முறையில் வாழையிலைகளைப் பயன்படுத்துமாறு கூறியிருந்தோம். நாடளாவிய ரீதியில் 20 மைக்கிறோன் தடிப்புக்குக் குறைவான பொலித்தீன்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன.
வீதிகளில் திண்மக் கழிவுகள் கொட்டுகின்றபோது உக்கக்கூடியவையும் உக்காத கழிவுகளும் ஒன்றுடன் ஒன்று கலந்துவிடுகின்றன. இதனால் திண்மக் கழிவுகளை தரம் பிரிப்பது என்பது கடினமான காரியமாகக் காணப்படுகின்றன. இதனால் கழிவுகளைத் தரம் பிரிப்பவர்கள் பின்னிற்கின்றார்கள்.
தரம் பிரிக்காத திண்மக் கழிவுகளை வீடுகளுக்குச் சென்று பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இதனாலேயே வீதிகளில் குப்பைகளைக் கொட்டுகின்றனர். வீதிகளில் குப்பைகள் போடுவதற்கு ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டு வருகின்றது. இதுவரைக்கும் 40 நபர்களுக்கு தண்டப்பணம் அறவிட்டுள்ளோம்.
சில நபர்கள் இறந்த செல்லப்பிராணிகளையும் வீதிகளில் வீசிவிடுகிறார்கள். இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. இறந்த செல்லப்பிராணிகளின் உடல்களை சுகாதாரமான முறையில் அகற்ற வேண்டும்.
மேலும் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் வீடுகளில் பணம் பெற்றே கழிவுகளை அகற்றுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இது உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அத்தொழிலாளர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்காவில் அடுத்த வாரம் நடக்கவுள்ள இலத்திரனியல் நுகர்வோருக்கான கண்காட்சியில் LG நிறுவனம் மிதக்கும் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்யவுள்ளது.
ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் இலத்திரனியல் நுகர்வோருக்கான சந்தை அறிமுகப்படுத்தல் கண்காட்சிகள் இடம்பெறும்.
இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை குறித்த கண்காட்சிகளை லொஸ் வெகாஸ் நகரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த கண்காட்சியின் போது அறிமுகமாகவுள்ள மிதக்கும் ஸ்பீக்கரானது ப்ளுடூத் தொழிநுட்பத்தில் செயற்படக் கூடியதாகவும், இயக்கப்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு லீவியேஷன் ஸ்டேஷன் (leaviation station) எனும் கருவி வழங்கப்படும். அது அதிக காந்த சக்தியை கொண்டு ஸ்பீக்கர்களை சில சென்றி மீற்றர்கள் வரை காற்றில் மிதக்கச் செய்யும்.
இந்த ஸ்பீக்கர்களுக்கு LG pj9 எனப் பெயரிடப்பட்டுள்ளது. அத்தோடு இதற்கு தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கான மின்சாரத்தை சேமித்து வைக்க முடியும் என்பதோடு, leaviation station மூலம் மின்சாரம் வழங்கப்படும் வசதியை இது கொண்டுள்ளது என்பதே குறித்த ஸ்பீக்கர்களின் சிறப்பு எனலாம்.
இயந்திர மனிதனை திருமணம் செய்துக்கொள்ள அனுமதி கோரி பிரான்ஸ் பெண்ணொருவர் அந்நாட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
லிலீ என்ற இந்த பெண், கடந்த ஒரு வருடமாக தான் இயந்திர மனிதனுடன் காதல் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
இன்மவுட்டர் என்ற இந்த இயந்திர மனிதன் பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திர மனிதனுக்கு சாதாரண மனிதனின் உணர்வுகளை அறிந்து கொள்ள முடியும் என்பதுடன் அதற்கு பதிலளிக்கவும் முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், தனக்கும் இயந்திர மனிதனுக்கும் இடையில் உள்ள காதல் வேறு எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால், அதனை சட்டரீதியாக மாற்றும் அனுமதியை நீதிமன்றம் வழங்க வேண்டும் என லிலீ குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற இயந்திர மனிதன் தொடர்பான மாநாடு ஒன்றில் உரையாற்றிய பேராசிரியர் டேவிட் லெவி, 2050 ஆம் ஆண்டில் மனிதனும் இயந்திர மனிதனும் தம்பதிகளாக இருப்பார்கள் எனக் கூறியிருந்தார்.
அவர் கூறிய இந்த எதிர்வுகூறலை பிரான்ஸ் நாட்டு பெண் உண்மையாக்கியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் இந்த நிலைமை அதிகரித்தால், எதிர்காலத்தில் மனிதர்களுக்கு இடையிலான தொடர்புகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சம்சுங், அப்பிள் நிறுவனங்களின் வளர்ச்சியால் பின்நோக்கி சென்றது நொக்கியா. இந்நிலையில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க புதிய ஸ்மார்ட்போன்களை களமிறக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, நொக்கியா E1 மற்றும் நொக்கியா D1 ஆகிய பெயர்களில் புதிதாக நோக்கியா மொபைல்களை உருவாக்கி உள்ளது.
புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த நொக்கியா மொபைல்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நொக்கியா E1 மொடல் போனின் முன்பக்கத்தில் மிகவும் சென்சிட்டிவ் கீ பட்டன்கள் மற்றும் இரண்டு மொடல்களிலுமே LED பிளாஷ்லைட் உடன் கூடிய டிஸ்ப்ளே இருக்கும் என்று கூறப்படுகிறது.
நொக்கியா D1 மொடல் ஸ்மார்ட்போன் தற்போது வெளிவரும் மொடல்களுடன் ஒப்பிடும்போது எடை மற்றும் டிஸ்ப்ளே சைஸ் வித்தியாசமாகவும், பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் போனின் வலது புறத்தில் இரண்டு மாடல்களிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த இரண்டு மொடல்களும் அதிநவீன வசதிகளுடன் இருப்பதால், இதன் விலையும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் நொக்கியா மொடலுக்கு என்று அதிக ரசிகர்கள் இருந்து வருவதால், புதியதாக வெளிவர இருக்கும் நொக்கியாவின் E1 மற்றும் D1 மொடல்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்றில் கழிவறை பிரச்சனை ஏற்பட்டதால் விமானம் அவசரமாக வேறு நாட்டில் தரையிறங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரில் இருந்து பிரான்ஸ் நாட்டு தலைநகரமான பாரீஸிற்கு OpenSkies என்ற விமானம் நேற்று முன் தினம் புறப்பட்டுள்ளது.
விமானிகள் உள்பட 172 பயணிகளுடன் புறப்பட்ட இவ்விமானத்தில் திடீரென பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்த கழிவறையில் பிரச்சனை ஏற்பட்டதால் அதனை பயன்படுத்த முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், பயணிகள் சிலர் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என விமானிகளிடம் கூறியுள்ளனர்.
நிலைமையை உணர்ந்த விமானிகள் வேறு வழியின்றி ஐயர்லாந்து நாட்டிற்கு விமானம் திசை திருப்பப்பட்டது.
ஐயர்லாந்து நாட்டில் உள்ள Shannon விமான நிலையத்தில் தரையிறங்கியதும் பயணிகள் அங்குள்ள கழிவறையை பயன்படுத்தியுள்ளனர்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த பொறியாளர்கள் உடனடியாக விமானத்தில் உள்ள கழிவறை பிரச்சனையை சரி செய்துள்ளனர்.
பின்னர், பயணிகள் அனைவரும் மீண்டும் விமானத்தில் அமர்ந்த பிறகு சுமார் ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பிறகு விமானம் பாரீஸ் நகருக்கு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுவிஸ்லாந்தில் நாட்டில் 3வது மாடியிலிருந்து குதித்த தாயார் ஒருவர் திடீரென மாயமாக மறைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸில் உள்ள Graubunden மாகாணத்தில் 46 வயதான தாயார் ஒருவர் வசித்து வந்துள்ளார். கடந்த திங்கள் கிழமை அன்று Solothurn மாகாணத்தில் உள்ள தனது மகளை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இரவு நேரத்தில் இருவரும் உரையாடியபோது சுமார் 10.15 மணியளவில் திடீரென பால்கனி நோக்கி ஓடிய தாயார் அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.
இக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த மகள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
ஆனால், மகள் பால்கனிக்கு சென்று பார்த்தபோது கீழே அவரது தாயார் திடீரென மாயாமாக காணாமல் போயுள்ளார்.
சில நிமிடங்களுக்கு பிறகு அங்கு வந்த அம்புலன்ஸ் ஊழியர்கள் 3வது மாடியில் இருந்து குதித்த தாயாரை காணாமல் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், தாயார் தனது பணியை இழந்து விட்டதால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
எனினும், 3-வது மாடியில் இருந்து குதித்ததால் அவருக்கு நிச்சயம் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஏதாவது ஒரு மருத்துவரிடம் அவர் சிகிச்சை பெற செல்வார் என இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இரவு நேரத்தில் 3-வது மாடியிலிருந்து குதித்து திடீரென காணாமல் போன தாயார் குறித்து அடையாளங்களை வெளியிட்டுள்ள பொலிசார் அவரை பற்றிய தகவல் அறிந்தவர்கள் உடனடியாக காவல் துறைக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் உயிரிழந்ததில் பலருக்கு பலவித சந்தேகங்கள் உள்ளன. இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜோன்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற விடுமுறைக்கால பெஞ்ச் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயலலிதா மரணத்தில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்தது முதல் எந்த வித போட்டோவோ, வீடியோ ஆதாரமுமோ வெளியாகவில்லை, இதனால் தான் எனக்கும் சந்தேகம் எழுகிறது என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், நான் இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்தால் அது வேறு மாதிரி இருக்கும். ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து உடற்கூறு செய்து விசாரிக்க சொல்லுவேன்.
ஜெயலலிதா மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் உள்ள நிலையில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்?
ஏனெனில் ஜெயலலிதா சிகிச்சை விவரம் மத்திய அரசுக்கு முழுமையாக தெரியும். அப்படியிருந்தும் மத்திய அரசு வாயை திறக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
இதன் பின்னர் வழக்கு விசாரணையை ஜனவரி 9ம் திகதிக்கு ஒத்தி வைத்தார். இது விடுமுறைக்கால பெஞ்ச் என்பதால் அன்று வேறு பெஞ்ச் வழக்கை விசாரிக்க உள்ளது.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு விமானத்தில் செய்த அடாவடிச் செயல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் சூரிச் நகரில் இருந்து United Airlines விமானத்தில் அமெரிக்க தலைநகரமான வாஷிங்டனுக்கு அண்மையில் புறப்பட்டுள்ளார்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். பின்னர், இருக்கையில் அமராமல் அங்கும் இங்கும் தள்ளாடி நடந்து திரிந்துள்ளார்.
பயணியின் செயலை விமானப்பணிபெண்கள் கண்டித்துள்ளனர், மேலும், இருக்கையில் அமருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், இதனை கண்டுக்கொள்ளாத அந்நபர் கையில் மது பாட்டிலை எடுத்துக்கொண்டு விமானத்தின் பின்பகுதிக்கு சென்றுள்ளார்.
மேலும், அங்கு சென்று மதுபாட்டிலை திறந்து மது அருந்த முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பணிப்பெண்கள் அவரை தடுக்க முயன்றுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த நபர் கையில் வைத்திருந்த மதுபாட்டிலால் அவர்களை தாக்க முயன்றுள்ளார். நிலைமையை உணர்ந்த விமானக் குழுவினர் அவரை தூக்கிச்சென்று இருக்கையில் அமர வைத்து கட்டிப் போட்டுள்ளனர்.
சில மணி நேரத்திற்கு பிறகு விமானம் வாஷிங்டன் நகரில் தரையிறங்கியதும் அவரை பொலிசார் கைது செய்தனர்.
மேலும், விமானத்தில் தகராறில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக United Airlines விமானத்தில் வாழ்நாள் முழுக்க பயணம் மேற்கொள்ள தடை விதிப்பதாக அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
வடகொரியாவில் கிம் ஜோங் யுன்னின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கிம் ஜோங்-யுன் பதவியேற்று ஐந்து ஆண்டுகள் ஆகிறது. சர்வாதிகாரியான கிம், கடுமையான சட்டங்கள் பிறப்பிப்பதில் பெயர் போனவர். கிம்மின் 5 வருட ஆட்சி காலத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார் என தென் கொரிய தேசிய பாதுகாப்புத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.
வட கொரியாவில் 2011ம் ஆண்டிலிருந்து 340 பேருக்கு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களில் 140 பேர் மூத்த அரசாங்க அதிகாரிகள். அதிலும் ஒருவர் அரசு கூட்டத்தின்போது தூங்கியதற்காக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த தகவல் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் ஆபத்தான மனிதர் என்று கிம் ஜோங்-யுன்னுக்கு பட்டப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வவுனியா கண்டி வீதியிலிருக்கும் பிரபல்யமான ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக கடந்த இரண்டு தினங்களாக புதுவருடத்தை முன்னிட்டு விலைக்கழிவில் ஆடைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்த இரண்டு தினங்களாக இங்கு வரும் பொதுமக்களுக்கு ஆடைகள் விற்பனைக்கு வழங்கப்படவில்லை. இன்று மாலையும் இப்பகுதிக்கு ஆடைகளை கொள்வனவு செய்வதற்குச் சென்றபோதும் அனுமதி வழங்கப்படவில்லை.
அங்கு பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவருடன் தொடர்பினை ஏற்படுத்தியபோதும் வெளியே காத்திருக்கும் மக்களுக்கான சாதகமான பதில் கிடைக்கவில்லை.
கடந்த இரண்டு தினங்களாக பொதுமக்கள் காத்திருப்பதுடன் அரச, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் நெடுநேரம் காத்திருக்கின்றமையை காணக்கூடியதாக உள்ளது.
இலங்கை தொலைத்தொடர்பு சேவையான சிறீலங்கா ரெலிகொம் இணைய சேவைகள் மற்றும் ரெலிகொம் தொலைபேசி இணைப்புக்களுக்கான (லாண்ட் லைன்) SLT- SLT உள்ளக அழைப்புக்கள் புத்தாண்டுப் பரிசாக 01.01.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று முழுவதும் இலவசம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அன்றைய தினத்திற்குரிய சேவைக்கடடணம் கட்டணப்பட்டியலில் சேராது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை ஒரு நாள் மட்டும்தான்.
அன்றைய தினத்திற்கான அதிகூடிய Data பாவனை எல்லை 500GB ஆக இருக்கும் எனவும் சிறீலங்கா தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் , கட்சியின் பொதுச் செயலாளராக மறைந்த தமிழக முதல்வரான ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலாவை நியமனம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், இன்று (வியாழக்கிழமை) காலையில்அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் கட்சியின் பொதுக்குழு நடைபெற்றது. காலை 8 மணி முதல் பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்துக்கு வரத் தொடங்கினர்.
காலை 9 மணி அளவில் முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு வருகை புரிந்தார்.
பின்னர். 9.30 மணி அளவில் தொடங்கிய தொடங்கிய அதிமுக பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மறைந்த தமிழக முதலைமைச்சர் ஜெ. ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரங்கல் தீர்மானத்தின் போது அஇஅதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன், அதிமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் தம்பித்துரை, தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்பட 23 பொதுக்குழு உறுப்பினர்களால், மறைந்த தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான வி. கே. சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானங்கள் நிறைவேறிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ”அஇஅதிமுகவின் பொதுச் செயலாளராக வி. கே. சசிகலாவை நியமிக்க கட்சியின் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனை வி.கே. சசிகலாவுக்கு தெரியப்படுத்த நாங்கள் இப்பொது போயஸ் கார்டன் இல்லம் செல்கிறோம்” என்று கூறி விட்டு அங்கிருந்து போயஸ் கார்டன் புறப்பட்டுச் சென்றார்.
பெண் இராணுவச் சிப்பாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த ஒன்றரை வருடங்களாக தேடப்பட்டு வந்த இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் பாதுக்க பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஹாத்துடுவ பிரதேசத்தில் பெண் இராணுவச் சிப்பாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ள சந்தேக நபர், இதற்கு முன்னர் 10 யுவதிகளுடன் பழகி வந்துள்ளார்.
சந்தேக நபர் இந்த யுவதிகளின் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு அவர்களை கைவிட்டுச் சென்றுள்ளார்.
இதேவேளை, சந்தேக நபர் காரணமாக யுவதி ஒருவர் கர்ப்பமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொழிலில் ஈடுபட்ட மூன்று ஆபிரிக்க பெண்களுக்கு சார்ஜா குற்றவியல் நீதிமன்றம் தலா மூன்றாண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண்களின் தண்டனை காலம் முடிந்த பின்னர் அவர்களை நாடு கடத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பெண்கள் நைஜீரியாவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் 2 லட்சம் திராம்களை கொள்ளையிட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
எமிரேட்ஸ் பொலிஸார் இந்த பெண்களை கைது செய்ய ஒற்றர் ஒருவரை பயன்படுத்தியுள்ளனர். ஹொட்டல் ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த போதே பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
உகண்டாவை சேர்ந்த 27,32 மற்றும் 35 வயதான பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
பொலிஸார் மூன்று பெண்களிடம் விசாரணைகளை நடத்தியுள்ளதுடன் தாம் தினமும் 50 முதல் 100 வரையான ஆண் வாடிக்கையாளர்களை கையாண்டுள்ளதாக அவர்களில் இரண்டு பெண்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
அத்துடன் மற்றைய பெண் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூறும் அளவுக்கு ஞாபகம் இல்லை எனக் கூறியுள்ளார்.
வாடிக்கையாளர் ஒருவரிடம் இந்த பெண்கள் 50 திராம்களை கட்டணமாக அறவிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் வழக்கு விசாரணைகளின் பின்னர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.