உலகின் முன்னணி சமூக வலையமைப்பான பேஸ்புக் நிறுவனம், போலித் தகவல்களை பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய புதிய வசதி ஒன்று பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பேஸ்புக்கில் பதிவாகும் பதிவுகள் தொடர்பில் முறைப்பாடு செய்யும் வசதி தற்போது பேஸ்புக் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் சில போலித் செய்திகள் பேஸ்புக் ஊடாக பதிவேற்றப்படுவதாக பயனர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம், கடந்த மாதம் பரவலாக அதன் பயனர்களால் விமர்சிக்கப்பட்டது.
போலி செய்திகளை தடுக்கும் நோக்கில் புதிய அம்சங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பேஸ்புக் வழிமுறைகள் எதிர்காலத்தில் மாற்றமடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போலி செய்திகளை சேர்ப்பதற்காக “it’s a fake news story” என்ற அம்சத்தை சேர்க்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் உயிரிழந்த இலங்கை இளைஞரின் சடலம் இன்று (16) இலங்கையில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை வீதி, தேவபுரம், முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு எனும் முகவரியை சேர்ந்த சந்திரன் சிறிஸ்கந்தராஜா (வயது 23) என்பவரே இவ்வாறு மலேசியாவில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, இன்றைய தினம் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இளைஞரின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
மலேசியாவில், சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் டிசம்பர் 10ஆம் திகதி இரவு தொலைப்பேசி அழைப்பு மூலம் இறந்த தகவல் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையில் சொகுசு பேரூந்தொன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் ஒருவருக்கு சொந்தமான பேரூந்து சிவன் கோயிலடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு இரண்டு மணியளவில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் பேரூந்து முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை கடந்த 02 ஆம் திகதி நள்ளிரவு திருகோணமலை கண்டி வீதி 4 ஆம் கட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு தனியார் பேரூந்தும் தீக்கிரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய கனடா கிளை பெருமையுடன் மிகவும் வெற்றிகரமாக நடத்திய 2016ஆண்டின் குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏராளமான விருந்தினர்கள் பங்குபற்றிய விழாவாக நடந்தேறியது.
பழைய மாணவிகள் மிகவும் சுறுசுறுப்புடன் நிகழ்ச்சிகளை நடத்தி சென்றவிதம் மிகவும் பெருமைகொள்ள வைத்தது. வள்ளுவர் கூறியது போல “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்”. எல்லா மக்களும் பிறப்பால் சமமே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.
வள்ளுவர் கூறியது போல மாணவிகள் யாவரும் தங்களது பொறுப்பினை பெருமை சேர்க்கும் விதத்தில் மிகவும் சிறப்பாக நடாத்தி முடித்தமை விழாவின் வெற்றிக்கு வழிசமைத்தது. பலர் குடும்ப சகிதமாக வந்திருந்தமை பாராட்டுதல்களுக்குரியதாகும்.
ஏராளமான வர்த்தக பிரமுகர்கள் இந்த விழாவின் வெற்றிக்கு முழுமையான நிதி அனுசரணையை வழங்கியிருந்தார்கள். நடந்த நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக தயாரிக்கப்பட்டு அனைவரினதும் பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டது.
சகல பங்குபற்றிய அங்கத்தவர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசில் பொருட்களும் வழங்கப்பட்டன. நடனம், சங்கீதக் கதிரை, பேச்சுப்போட்டி, பாடல் நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான ஏராளமான போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்று விருந்தளித்தது.
பரிமாறிய உணவு வகைகள் மிகவும் சிறப்பாக இருந்தது. அனுசரனையாளர்கள் சிறப்பான முறையில் கௌரவிக்கப்படடார்கள். ஊடகவியலார்கள் பலத்த கரகோசத்தின் மத்தியில் தங்க பட்டி அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்படடார்கள். இறுதியில் மாணவிகள் அனைவரும் சேர்ந்து குழுரீதியிலான புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.
பொதுவாக நாம் வாகனங்களில் சாலையில் செல்லும் போது, சிறிய கல் இருந்தால் கூட அது நமக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தும்.
அப்படி இருக்கும் போது ரயில் தண்டவாளத்தில் மட்டும் ஏராளமான கற்கள் நிரம்பிக் கடக்கும். ஆனால் அது ரயில் வண்டிகள் செல்லும் போது, எந்த விதமான இடையூறுகளையும் ஏற்படுத்துவதில்லை.
அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று நம்மில் பலபேர்கள் யோசித்து இருப்போம்.
எனவே ரயில் தண்டவாளத்தில் அதிகமாக கற்கள் நிரம்பி இருப்பதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
ரயில் தண்டவாளத்தில் ஜல்லிக் கற்கள் அதிகமாக இருக்க என்ன காரணம்?
தண்டவாளத்தில் செல்லும் ரயில் அதிக எடையுடன் இருக்கும். மேலும் ரயில் வண்டிகள் வேகமாக செல்வதால், அழுத்தம் அதிகம் இருக்கும். எனவே தண்டவாளங்கள் விலகாமல் இருப்பதற்கு, தண்டவாளங்களில் ஜல்லிக்கற்கள் அதிகமாக போடப்பட்டுள்ளது.
அதிக வெப்பம், நிலஅதிர்வு மற்றும் கடினமான வானிலையின் போதும் ரயில் தண்டவாளங்கள் சுருங்கவும் விரியவும் செய்யும். இதனால் தண்டவாளங்கள் விலகாமல் தடுப்பதற்கு, தண்டவாளங்களில் கற்கள் அதிகமாக நிரப்பப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளத்தில் செல்லும் போது, மரத்தின் விட்டங்கள் மூலம் ரயில் வண்டிகள் வழுக்காமல் தடுப்பதற்கு, கூர்மையான கற்கள் போடப்பட்டுள்ளது.
நீரின் தேக்கத்தால் தண்டவாளங்கள் மூழ்காமல் இருப்பதற்கு, ரயில் தண்டவாளங்களில், ஜல்லிக் கற்களை வைத்து உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
களைகளின் வளர்ச்சி மற்றும் இதர தாவரங்களின் வளர்ச்சியின் காரணமாக தண்டவாளங்களில் செல்லும் ரயில் வண்டிகளுக்கு இடையூறு ஏற்படாமல் தடுப்பதற்கும், தண்டவாளங்களில் அதிகமாக ஜல்லிக் கற்கள் போடப்பட்டுள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் இன்று (15) முச்சக்கர வண்டி ஒன்று 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 04 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
லிந்துலை பாமஸ்ட்டன் பகுதியிலிருந்து லிந்துலை வைத்தியசாலை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் இரண்டு பெண்களும், 18 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரும் சாரதியுமே காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் தொழிலாளிகளின் உரிமைகளுக்கான மையத்தின் இணைத் தலைவியும் பாலியல் தொழிலாளியுமான பி.மகேஸ்வரி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
எமது தொழிலை சட்ட ரீதியாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அங்கீகரிப்பதனால் பாலுறவு சார் நோய்கள் குறிப்பாக எச்.ஐ.வீ போன்ற நோய்களை கட்டுப்படுத்த முடியும்.
பாலுறவு சார் நோய் கட்டுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு, பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குவதன் மூலம் தீர்வு காண முடியும்.
இலங்கையின் பாலியல் தொழிலாளிகள் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். ஏனென்றால் அந்த நாடுகளில் பாலியல் தொழில் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வெளிநாடுகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு திரும்பும் தொழிலாளிகளுக்கு பாலுறவு சார் நோய்கள் தொற்றியிருக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.
எமது பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாது எம்மை உதாசீனம் செய்வதனையே எல்லோரும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
எம்மை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விளக்க மறியலில் இரண்டு வாரங்கள் தடுத்து வைத்தால் எமது பிள்ளைகளுக்கு யார் உணவு வழங்குவது?
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெண் பிள்ளைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகமாக காணப்படுகின்றது. எமது தொழிலை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதனால் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மகேஸ்வரி அடிக்கடி இந்தியாவிற்கு சென்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் சில பகுதிகளில் பாலியல் தொழில் சட்ட ரீதியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிராந்திய வலயத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது எச்.ஐ.வீ நோய்த் தொற்று இலங்கையர்களுக்கு பரவும் வீதம் மிகவும் குறைவாக காணப்படுகின்றது என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் லிஷ்ம நைஸ் எனும் ஒருவித தோல்நோய் தாக்கத்தின் காரணமாக அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண சுகாதார சேவை அதிகாரி ஹேமோ வீரகோன் இதனை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 2010ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிகளவான மக்கள் இந்த நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முதல் தடவையாக 1992ஆம் ஆண்டு லிஷ்ம நைஸ் நோய் வடமாகாணத்தில் ஹம்பலான்தொட பகுதியில் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், இதனை அறிந்துகொண்டு மக்கள் உரிய சிகிச்சை பெற்றுக்கொள்வதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, லிஷ்ம நைஸ் எனும் இந்த நோய் 98 நாடுகளில் பரவியுள்ளதாகவும், இந்த நோயினால் உலகம் முழுவதும் 14 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த நோய் தாக்கம் காரணமாக ஆண்டு தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பதாக தெரிவித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
எனவே, இது போன்ற தோல் நோய் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியரை அனுகி உரிய சிகிச்சையின் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டுபாயில் பிரித்தானிய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 3 மாதகால சிறை தண்டனை விதித்துள்ளது.
23 வயதான இந்திய இளைஞர் ஒருவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டுபாயில் இருந்து வெளிவரும் “கலீஜ் டைம்ஸ்’ செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் குறித்த இளைஞர், தனிமையில் இருந்த 35 வயதான பிரித்தானிய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
எனினும், பாதுகாவலர்களை அழைப்பேன் என பெண் எச்சரித்ததை அடுத்து குறித்த இளைஞர், தப்பித்து சென்றுள்ளதாகவும், பெண் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேகநபருக்கு எதிராக ஆதாரங்களை பொலிஸார் முன்வைத்ததையடுத்து, அவருக்கு 3 மாத சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதேவேளை, தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர், குறித்த இளைஞர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம் ஏற்பட்டுள்ளது. இது புயலாக மாறி தமிழகத்தில் கரையை கடக்கலாம் என்று கூறப்படுகிறது.
தென்கிழக்கு வங்கக் கடலில் தெற்கு அந்தமான் மற்றும் வடக்கு சுமத்ரா தீவுக்கு இடையே வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி வர்தா புயலாக மாறி, சென்னையில் கரையை கடந்தது.
இதன், தொடர்ச்சியாக வளி மண்டல மேலடுக்கில் நிலவும் காற்று சுழற்சியால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக குன்னூரில் நேற்று 100 மிமீ மழை பெய்துள்ளது.
நீலகிரி 70 மிமீ, தாராபுரம் 50 மிமீ, பீளமேடு, போளூர், கோவை 10மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்.
மேலும், அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் ஒரு காற்றழுத்தம் நேற்று மாலை உருவாகியுள்ளது. இது வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த நான்கு நாட்களில் தமிழக கடலோரப்பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காற்றழுத்தம் வலுப்பெற்று புயலாக மாறும் பட்சத்தில் ‘அஸ்ரி’ (Asiri) என்று அழைக்கப்படும். இந்த பெயரை இலங்கை நாடு சூட்டியுள்ளது.
பிரித்தானியாவில் மூன்று இளம் பெண்கள் குழுவாக சேர்ந்து இளம் கால்பந்து வீரரை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Cumbria பகுதியை சேர்ந்த Brogan Gillard (வயது 26), Paige Cunningham (வயது 22), Shannon Jones (வயது 20) ஆகியோரே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தன்று இரவு மூவரும் தங்கள் சந்தித்த 20 வயதான இளம் கால்பந்து வீரரை வீட்டிற்கு அழைந்து வந்துள்ளனர்.
பின்னர், அவருக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து மயங்க வைத்துள்ளனர். பின்னர் மூவரும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு, அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் மூன்று பெண்களும் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட நபரின் பெயர் வெளியிடப்படவில்லை.
குற்றச்செயலில் ஈடுபட்ட மூன்று பெண்களையும் பாலியல் குற்றவாளிகள் என பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மூவருக்கும் அடுத்த மாதம் தண்டனை அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
பிரேசிலில் காதலன் ஒருவன் தனது காதலிக்கு மொட்டை அடித்து அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தல் கும்பலை சேர்ந்த நபர் ஒருவரே குறித்த வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
காதலி மற்றொரு நபருடன் சேர்ந்து தன்னை ஏமாற்றி வந்தது காதலனுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, தன்னை ஏமாற்றிய குற்றத்திற்காக காதலிக்கு மொட்டை அடித்து காதலன் அதிரடி தண்டனை வழங்கியுள்ளார். மேலும், அதை வீடியோவாக பதிவு செய்து பதிவிட்டுள்ளார்.
குறித்த வீடியோவில், நபர் ஒருவர் ஒரு பெண்ணை அமர வைத்து ட்ரிம்மர் மூலம் மொட்டை அடிக்கிறார். பின்னர், இரு புருவங்களையும் எடுக்கிறார்.
இதை சில நபர்கள் சுற்றி நின்று சிரித்துக்கொண்டே வீடியோவாக பதிவு செய்கின்றனர். பிரேசிலில் கடத்தல் குழுக்களில் தவறு செய்பவர்களுக்கு இது போன்ற தண்டனை வழங்குவது வழக்கம் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் டியூசனுக்கு படிக்க வரும் மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 3 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் சிவக்குமார் (25), ஈஸ்வரன் (26) மற்றொரு சிவக்குமார் (27). இவர்கள் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளனர்.
சரியான வேலை கிடைக்காத நிலையில் நண்பர்களான 3 பேரும் சேர்ந்து பாலக்கோடு மற்றும் தர்மபுரி நெசவாளர் காலனி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக டியூசன் சென்டர் நடத்தி வருகிறார்கள்.
இங்கு 10 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் டியூசனுக்கு வரும் மாணவிகள் சிலரை மயக்க மருந்து கொடுத்து சிவக்குமார் உள்பட சிலர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது.
இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
டியூசன் சென்டர் தொடங்கிய சில மாதங்களிலேயே சிவக்குமார் தனது காமசேட்டைகளை தொடங்கி உள்ளார். அழகாக இருக்கும் மாணவிகளுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதை வீடியோவாகவும் எடுத்து வைத்து மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்து போகும் மாணவிகளை தன்னுடைய காம இச்சைக்கு சிவக்குமார் அடிக்கடி பயன்படுத்தி உள்ளார்.
இதேபோல் அவருடைய நண்பர்களான மற்ற இரண்டு போரும் மாணவிகளை தங்களுடைய காம இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.
இப்படியாக இதுவரை 30க்கும் மேற்பட்ட மாணவிகளை ஆசிரியர்கள் என்ற போர்வையில் அவர்கள் சீரழித்துள்ளனர். தற்போது ஒரு மாணவி மூலம் அனைத்து விடயங்களும் வெட்ட வெளிச்சமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து குற்றவாளிகளான சிவக்குமார், ஈஸ்வரன் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய மற்றொரு நபரையும் பொலிசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
டியூசன் சென்டர் என்ற போர்வையில் கடந்த 2 வருடங்களுக்கும் மேல் சத்தம் இல்லாமல் அரங்கேறிய இந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பிரபல நடிகர் தனுஷ், தன்னுடைய மகன் தான் என்றும் அவரிடம் ஜீவனாம்சம் பெற்றுத்தருமாறு கோரி மேலூரைச் சேர்ந்த தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சிவகங்கை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டைம்கீப்பராக உள்ளவர் கதிரேசன். அவரது மனைவி மீனாட்சி. கடந்த 2002ம் ஆண்டு பிளஸ் 1 படித்துக் கொண்டிருந்த போது தங்களின் மகன் கலையரசன் தங்களை பிரிந்து சென்றுவிட்டதாகவும், அவர் தான் தனுஷ் என்ற பெயரில் படங்களில் நடிப்பதாகவும் கூறியிருந்தனர்.
இதை தனுஷும் அவரது தந்தையுமான கஸ்தூரி ராஜாவும் மறுத்து வருகின்றனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி நேரில் ஆஜராகுமாறு தனுஷுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில், பிரபல நடிகையான குஷ்பு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த நிகழ்ச்சியில் நாளை தனுஷை உரிமை கொண்டாடும் கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் கலந்து கொள்ள உள்ளனர். தனுஷ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் இவர்கள் கலந்துகொள்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
5000 ரூபா நோட்டை ரத்து செய்வதாக தாம் கூறவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் நாணயத் தாள்கள் ரத்து செய்த பிரச்சினைக்கு ஏதுவான காரணிகள் இலங்கையிலும் இடம்பெறுகின்றமையினால் அது குறித்து ஆராயப்பட வேண்டும்.
5000 ரூபா நோட்டுக்களை மத்திய வங்கி மீளப் பெற்றுக்கொள்ளும் என நான் கூறவில்லை. அண்மையில் நாடாளுமன்றில் நான் கூறிய இந்த விடயத்தை ஊடகமொன்று பிழையாக செய்தி அறிக்கையிட்டிருந்தது.
இவ்வாறு தேசிய விரோத செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என நான் திவயின பத்திரிகையிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலின் கையாட்கள் ரூபாவினை பெறுமதியிழக்கச் செய்ய முயற்சிக்கின்றனரா? இவ்வாறு பிழையான செய்திகளை வெளியிடுவதனால் நாட்டுக்கே பாதிப்பு ஏற்படக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றில் நிதி அமைச்சர் ஆற்றிய உரை பற்றிய செய்தியை தாம் மட்டுமல்ல மேலும் சில தேசிய பத்திரிகைகளும் செய்தி அறிக்கையிட்டிருந்தன என திவயின சுட்டிக்காட்டியுள்ளது.
மாவனல்ல நகரிலுள்ள வங்கி ஒன்றில் கடனை பெற்றுக் கொண்டு ஒரு வருட காலமாக அதனை மீளச்செலுத்தாமல் இருந்த பெண் ஒருவரை வங்கி முகவர் தேடிச்சென்ற போது அந்தப் பெண் குறித்த வங்கி முகவர் மீது விளக்குமாறினால் தாக்கி காயமடையச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஒன்றிலிருந்து கடன்பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் இருந்த பெண் ஒருவரை தேடி வங்கி முகவரொருவர் தனது உதவியாளரொருவருடன் அரனாயக்க, வெலிமன்ன பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அவரிடம் கடன் தவணைப்பணம் செலுத்த தவறியமை தொடர்பில் விசாரித்துள்ளனர்.
அதன்போது கோபமுற்ற அப்பெண் விலக்குமாறினால் வங்கி முகவரின் முகம் மற்றும் தோற்பட்டை பகுதிகளில் பலமாக தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் காயமுற்ற வங்கி முகவர், அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கேகாலை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான வங்கி முகவரின் தோற்பட்டை எலும்பொன்று முறிந்துள்ளதுடன் பற்கள் இரண்டு உடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
21 வயதான இவ்வங்கி முகவர் கடன்காரரைவிசாரிக்கும்போது அயலவர்களுக்கு கேட்கும் விதத்தில் சத்தமிட்டதனால் கடனாளியான பெண் கோபமுற்று தாக்குதல் நடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.