வவுனியா பெண்ணுக்கு 12 வருடங்களின் பின்னர் கிடைத்த அதிஷ்டம்!!

12 ஆண்டுகள் சம்பளம் இன்றி சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக கடமையாற்றிய இலங்கைப் பெண் ஒருவருக்கு, சுமார் பதின்மூன்றரை லட்சம் ரூபா நிலுவைச் சம்பளம் வழங்கப்பட்டது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரள நேற்று இந்தப் பெண்ணுக்கு நிலுவைச் சம்பளத்தை வழங்கியிருந்தார்.

வவுனியாவை பிறப்பிடமாகக் கொண்டவரும், தமிழக அகதி முகாமில் வாழ்ந்து வந்தவருமான கோடீஸ்வரி செல்லமுத்து என்ற 35 வயதான பெண் ஒருவருக்கு இவ்வாறு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

1981ம் ஆண்டு வவுனியாவில் பிறந்த கோடீஸ்வரி, வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போர் காரணமாக 1985ம் ஆண்டு பாட்டியுடன் தமிழகத்தின் திருவண்ணாமலை அகதி முகாமில் வாழ்ந்து வந்துள்ளார்.

முகாமில் வாழ்ந்து வரும் காலப்பகுதியில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட கோடீஸ்வரி இரண்டு பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 2003ம் ஆண்டு தாய் தந்தையை பார்ப்பதற்காக இலங்கை வந்த கோடீஸ்வரி, மருதானையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனமொன்றில் போலி ஆவணங்களை வழங்கி முஸ்லிம் பெண் என்ற அடிப்படையில் சவூதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

2004ம் ஆண்டு ஜனவரி மாதம் சவூதி சென்ற கோடீஸ்வரிக்கு முதல் மூன்று மாதங்களின் பின்னர் சம்பளங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

கடந்த ஒக்டோபர் மாதம் நாடு திரும்பிய கோடீஸ்வரி, சம்பள நிலுவைப் பற்றி இலங்கை வருவதற்கு முன்னதாக சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதரகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய அதிகாரிகள் அவருக்கு சேர வேண்டிய சம்பள நிலுவைப் பணத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

கோடீஸ்வரிக்கு இலங்கையில் உறவுகள் எவரும் இல்லை என்பதனால், பயணத்துக்கான ஆவணங்களைத் தயாரித்து அவரை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சேலை அணிய ஆசைப்­பட்ட கொரிய யுவ­தியின் உடலை வரு­டிய ஆடை விற்­பனை நிலைய ஊழியர் கைது!!

உல்­லாசப் பய­ணி­யாக இலங்கை வந்­துள்ள கொரிய யுவதி ஒருவர், நுவ­ரெ­லியா நக­ரி­லுள்ள ஆடை விற்­பனை நிலையம் ஒன்றில் உடை­மாற்றிக் கொண்­டி­ருந்த போது அவ­ரது உடம்பை வரு­டி­ய­தாக கூறப்­படும் நபர் ஒருவரை நுவ­ரெலியா பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இலங்கைப் பெண்­களை போன்று சேலை அணிந்து பார்க்கும் ஆசையில் 24 வய­தான மேற்­படி கொரிய யுவதி நுவரெ­லி­யா­வி­லுள்ள பிர­பல ஆடையக ­மொன்­றுக்கு சென்று சேலை ஒன்­றினை கொள்­வ­னவு செய்துள்ளார்.

இலங்கை கலா­சா­ரத்­துக்­க­மைய தான் சேலையை அணிய விரும்­பு­வ­தா­கவும் தனக்கு சேலை அணி­விப்­ப­தற்கு உதவி புரி­யு­மாறும் அந்த யுவதி குறித்த ஆடை விற்­பனை நிலைய முகா­மை­யா­ள­ரிடம் தெரி­வித்­துள்ளார். இத­னை­ய­டுத்து அம்­மு­கா­மை­யாளர் ஆடை­ய­கத்­தி­லுள்ள ஊழி­ய­ரொ­ரு­வரை அழைத்து சேலையை அணி­விக்க யுவ­திக்கு உதவி புரி­யு­மாறு தெரி­வித்­துள்ளார்.

இ­த­னை­ய­டுத்து விற்­பனை நிலை­யத்­தி­லுள்ள ஆடை­மாற்றும் அறைக்கு கொரிய யுவ­தியை அழைத்து சென்று அவ­ருக்கு சேலை அணி­வித்து கொண்­டி­ருக்கும் போது அவ­ரது உடலை குறித்த ஊழியர் ஸ்பரிசம் செய்­துள்ளார்.

இது தொடர்­பில் கொரிய யுவதி 13 ஆம் திகதி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­த­த­னை­ய­டுத்து சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்டார்.

நுவ­ரெ­லிய பொலிஸ் தலை­மை­ய­கத்தின் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சேனக ஜய­சிங்­கவின் ஆலோ­ச­னைக்­க­மைய சந்தேக நபர் விசாரணைக்கு உட்படுத்தப்­ப­டு­வதுடன் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் நுவரெலியா மாவ­ட்­ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செக்குடியரசிடம் பெற்ற கடனை மதுபானமாக வழங்கும் கியூபா!!

பனிப்போர் காலம் தொட்டே கியூபாவானது உலகில் சிறப்புமிகு ரம் மதுபான தயாரிப்பை கொண்டு தனது நாட்டு கடன்களை அடைத்து வருகின்றது.

இதனடிப்படையில் செக் குடியரசு நாட்டிடம் பெற்ற பெருந்தொகை கடனையும் ரம் மதுபானத்தை கொண்டு செலுத்துவதற்கு தயாராகியுள்ளது. இதுபற்றி செக்குடியரசின் நிதிஅயமைச்சு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது,

கியூபா செக்குடியரசு என்பன கம்யூனிச வலய நாடுகளாக இருந்த காலத்திலிருந்தே கியூபாவானது சுமார் 276 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.

அக்கடன் தொகையை கியூபா எமது நாட்டுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது. செக் குடியரசானது கடந்த வருடம் மாத்திரம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கியூபாவிடம் இருந்து ரம் மதுபானங்களை இறக்குமதி செய்துள்ளது.

இதனடிப்படையில் மீதமுள்ள கடன் தொகைக்கும் ரம் மதுபானத்தை இறக்குமதி செய்ய செக்குடியரசு தீர்மானித்துள்ளது.

செக்குடியரசிற்கு பொருட்களாகவே கடன் திரும்பி கொடுக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் வடகொரியா செலுத்த வேண்டிய 10 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அந்நாடு ஜிங்செங் மூலிகை பொருட்களை கொடுத்தே அக்கடனை அடைத்தது.

செக் குடியரசில் ரம்மிற்கான தேவைபாடுகள் அதிகமாகவே இருக்கின்ற போது கடனை பணமாக வழங்கினால் சிறப்பானதாக இருக்கும் எனவும் செக்குடியரசின் நிதியமைச்சு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

1340 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம்!!

உலக வங்கி இலங்கைக்கு 1340 மில்லியன் அமெரிக்க டொலரை குறைந்த வட்டி அடிப்படையில் கடனை வழங்குவதற்கு அனுமதியளித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இரண்டு கட்ட நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலதிகமாக குறித்த தொகை வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமென நிதியமைச்சு அறிவித்துள்ளது.

சமுக வலையத்தளங்களுக்கு எதிராக புதிய சட்டம்!!

இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சைபர் குற்றத்தின் கீழ் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான சட்டங்கள் நாட்டில் காணப்படாத நிலையில் புதிய சட்டங்களை உருவாக்கி அதனூடாக நடவடிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14ம் திகதி மாயமான இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை!!

கடந்த 14ம் திகதி மாயமான பட்டதாரி இளம்பெண், விடுதியில் பிணமாக கிடந்தது மயிலாப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, பேஸ்புக் காதலன் மற்றும் அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலாப்பூர் வி.பி. கோயில் தெருவை சேர்ந்தவர் எத்திராஜ். அப்பகுதியில் பழைய பேப்பர் கடை வைத்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள். இளைய மகள் நிவேதிதா (22), கடந்த ஆண்டு எம்.பி.ஏ படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

படிக்கும்போது நிவேதிதா ஒருவரை காதலித்து வந்ததாகவும், பல இடங்களில் இருவரும் சுற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 14ம் திகதி காலை ெபற்றோரிடம் தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறி வெளியே சென்ற நிவேதிதா மாலை வரை வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நிவேதிதா உடன் படித்த தோழிகள், உறவினர்கள் வீடுகளில் விசாரித்தனர். ஆனால், அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கடந்த 14ம் திகதி இரவு தந்தை எத்திராஜ் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூர் லஸ் கோனார் அருகே உள்ள ஒரு விடுதியில் உள்ள 210 எண் கொண்ட அறை கதவு வெகு நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைத்த விடுதி நிர்வாகிகள் மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக, போலீசார் விடுதிக்கு சென்று அறையை திறந்து பார்த்தனர். அப்போது உள்ளே 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரது கழுத்து மற்றும் உடலில் பல இடங்களில் சிறுசிறு காயங்கள் இருந்தன. கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், கடந்த 14ம் திகதி மாயமான நிவேதிதா படத்துடன் ஒப்பிட்டு பார்த்தபோது ெகாலை செய்யப்பட்டு கிடந்தது நிவேதிதா என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: முதற்கட்ட விசாரணையில், நிவேதிதா செல்போன் மற்றும் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தபோது, பேஸ்புக்கில் நண்பராக பழகிய ஒருவர், நிவேதிதாவுடன் செல்போனில் அதிக நேரம் பேசியது தெரியவந்தது. நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், பேஸ்புக் காதலன் தனது நண்பருடன் நிவேதிதாவை பார்க்க மயிலாப்பூர் வந்துள்ளார்.

அப்போது, அவர்களை தங்க வைப்பதற்காக நிவேதிதா விடுதியில் ரூம் புக் செய்துள்ளார். அதன்படி, கடந்த 14ம் திகதி விடுதியில் நிவேதிதா தனது காதலன் மற்றும் அவரது நண்பருடன் விடுதிக்கு வந்து பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளார். அறையில், நிவேதிதாவுடன் காதலன் வலுக்கட்டாயமாக உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர், தன்னுடன் வந்த நண்பருடன் உல்லாசமாக இருக்க கட்டாயப்படுத்தியபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இது வெளியே தெரிந்தால் பிரச்னை ஆகி விடும் என்று எண்ணிய காதலன் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து நிவேதிதாவை கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளனர். அறையில், நிவேதிதா அரை நிர்வாணமாக, கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதற்கான காயங்கள் உள்ளன. முதுகு பகுதியில் நகக் கீறல்கள் உள்ளன.

விடுதி அறையில் இருந்து முக்கிய தடயங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. நிவேதிதாவுடன் வந்த காதலன், அவரது நண்பர் யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இருவரையும் விரைவில் பிடித்து விடுவோம். நிவேதிதா கல்லூரியில் படிக்கும் போது மயிலாப்பூர் அம்பேத்கர் பால பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வாலிபர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடலில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அதன் பிறகுதான் பேஸ்புக் மூலம் மற்றொரு வாலிபரை நிவேதிதா காதலித்து வந்ததும் தெரியவந்தது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

திருமணம் வேண்டாம் : தலை தெறித்து ஓடும் நடிகைகள்!!

தமிழ் சினிமாவில் இன்று இருக்கும் நடிகைகள் பலர் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள்.

அப்போது பிரபலமான நடிகைகள் முதல் இப்போது கொடி கட்டிப்பறக்கும் நடிகைகள் வரை சிலர் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்கிறார்கள்.
சரி யார் அவர்கள் என்று கொஞ்சம் பின்னோக்கி செல்வோம்.

திரிஷா – நயன்தாராவுக்கு போட்டியாக வந்தவர் நடிகை திரிஷா. பெரிய அளவில் காதல் கிசுகிசுக்களில் சிக்கவில்லை என்றாலும் சில நாட்களுக்கு முன் தொழிலதிபரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
கல்யாணம் போல நடந்தாலும் சில காரணங்களால் திருமணம் நின்றுபோனது. 33 வயதான இவர் இப்போதெல்லாம் திருமணமே வேண்டாம், சினிமாவே போதும் என அடம் பிடிக்கிறாராம்.

சதா – ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அந்நேரத்தில் அதிகமாக பேசப்பட்டார். சில படங்களில் தொடர்ந்து நடித்தாலும் பின் படங்கள் இல்லாமல் பாலிவுட் பக்கம் சென்றார். வடிவேலுவுடன் எலி படத்தில் நடித்த இவருக்கு தற்போது வயது 32.

நமிதா – மச்சான்ஸ் நடிகையான இவர் முக்கிய ஹீரோயினாக சில படங்களில் நடித்தாலும் கவர்ச்சி நடிகை என்றே சொல்லபட்டார். மார்கெட் இல்லாமல் மலையாளம் போன இவர் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். 41 வயதான இவர் கல்யாணம் என்றால் அரசியலில் குதிக்கிறேன் என்று கிளம்பிவிட்டார்.

கௌசல்யா – நடிகர் முரளியுடன் காலமெல்லாம் காதல் வாழ்க, விஜயுடன் ப்ரியமுடன் ஆகிய படங்களில் நடித்தவர் இப்போது சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார். 31 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

தபு – தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த இவர் 45 ஐ கடந்தாலும் இன்னும் கல்யாணம் செய்துகொள்ளவில்லை.

நக்மா – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்திக் ஆகியோருடன் படங்களில் நடித்த இவருக்கு ஒரு நேரத்தில் கிரிக்கெட் வீரர் கங்குலி மீது காதல் என சொல்லப்பட்டது. 41 வயதை கடந்தாலும் அரசியல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஷோபனா – ஒரு நேரத்தில் சினிமாவில் மிக உச்சத்தில் இருந்த நடிகை ஷோபனா பழம்பெரும் நடிகை பத்மினியின் மகள் என்பது அனைவருக்கும் தெரியும்.
வீட்டில் எவ்வளவோ கெஞ்சிய பெற்றோர் ஷோபனா திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் கல்யாணம் என்ற வார்த்தையையே விட்டு விட்டார்களாம்.
45 வயதாகும் ஷோபனா நடனத்தை கையிலெடுத்து அதிலே நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

வவுனியாவில் நடைபெற்ற நட்புறவை பேணுவதற்கான காற்பந்து சுற்றுப் போட்டியில் மன்னார் அணி வெற்றி!!

 
வவுனியாவில் சிறைச்சாலை மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள் குடியேற்றம் புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் அனுசரணையின் கீழ் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் நட்புறவைப் பேணுவதற்கான காற்பந்து சுற்றுப் போட்டி நேற்று(15.12.2016) வவுனியா தேசிய கல்லூரி வளாகத்தில் ஆரம்பமானது.

புனர்வாழ்வு ஆணையாளர் செயலகத்தின் மூலம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் இளைஞர்கள் பங்கு பற்றிய இந்த காற்பந்து சுற்றுப் போட்டிக்கு வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த 08 அணிகள் கலந்து கொண்டிருந்தன.

இதன் இறுதி போட்டி இன்று (16.12.2016) வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.

இறுதி போட்டியில் மன்னார் நகர அணியும் மன்னார் மாந்தை அணியும் மோதின. இதில் மன்னார் நகர அணி வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

இப் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு பணப்பரிசில்களும் வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டது.

இக் காற்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு சிங்கர் நிறுவனம் அனுசரணை வழங்கியதுடன், இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கான பரிசில்களை சிங்கர் வவுனியா மாவட்ட முகாமையாளர் M.R.M.நிஷாக், சிங்கர் வவுனியா கிளையின் முகாமையாளர் உதயகுமார் கஜதீபன் ஆகியோர் வழங்கினர்.

15 வருடமாக ஆண் குழந்தை இல்லை : மனைவியை கொடூரமாகத் தாக்கிய நபர்!!

இந்தியாவில் ஆண் குழந்தை இல்லை என்பதற்காக மனைவி மற்றும் மகளை கொடூரமாக தாக்கிய தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள Vasant Kunj பகுதியைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் குறித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இருப்பினும் அவருக்கு ஆண் குழந்தை மீது மிகுந்த ஈடுபாடு இருந்ததாக கருதப்படுகிறது.

ஆனால் திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், ஆண் குழந்தை இல்லாத நிலையில், ஆத்திரமடைந்த அவர் தன் மனைவி மற்றும் மகளை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி டெல்லியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருக்கும் நபர் இப்படி செய்திருப்பதுதான் பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அவர் மனைவியை தாக்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியதால், அவர் மீது எதிர்ப்புகள் கிளம்பி வருவதாக கூறப்படுகிறது.

இறக்கும் சில மணி நேரத்தில் காதல் திருமணம் செய்த தம்பதிகள் : மனம் உருகும் சம்பவம்!!

யுவொன்னே லாமஸ் என்ற பெண், தான் 11 வருடங்களாக காதலித்து வந்த ராவுல் ஹிநோஜோசா என்பவர் புற்றுநோயினால் பாதிகப்பட்டு சிலமணி நேரத்தில், இறந்து விடுவார் என்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துள்ளார்.

33 வயது நிரம்பிய ராவுல் ஹிநோஜோசாவுக்கு நாள்பட்ட லிம்ஃபோசைடிக் லுகேமியா உள்ளது. இதனால் இவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அமரில்லோ மருத்துவமனையில் படுக்கையில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

பின் புற்றுநோயின் தாக்கம் தீவிரமாகி, ராவுல் ஹிநோஜோசா இறக்கும் தருவாயில் இருக்கும் போது, தன்னுடைய கடைசி ஆசையாக தன்னுடைய காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

இதை அறிந்த ராவுலின் காதலி லாமஸ் மருத்துவமனையில், மருத்துவ ஊழியர்களின் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டார்.

பின் ராவுலின் இந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. திருமணம் முடிந்த 36 மணி நேரத்திலேயே ராவுல் இறந்துவிட்டார்.

தன் காதலன் ராவுலின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும். அவர் புன்னகையுடன் பூவுலகை அடைய வேண்டும் என்பதற்காக அவரை இறக்கும் தருணத்தில் திருமணம் செய்துக் கொண்டதாக லாமஸ் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

மாவிடிக்கும் இயந்திரம் கண்டுபிடித்த மாணவிக்கு வெள்ளிப் பதக்கம்!!

இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தினால் நடத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான புத்தாக்கப் போட்டியிலே இன்று(16) தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு-கல்குடா கல்வி வலயத்தைச் சேர்ந்த செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.

கொழும்பு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் போது தரம் 06 இல் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் புவனேசராசா நகுமி என்ற மாணவியினது மாவிடிக்கும் இயந்திரம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.

வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற இம்மாணவியை வித்தியாலய அதிபர் க.சிவலிங்கராஜா வாழ்த்தியதோடு அம்மாணவியை தயார்படுத்திய ஆசிரியை தயாமதி பிரேம்குமாருக்குப் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

பாடசாலை ரீதியாக விண்ணப்பித்ததன் அடிப்படையில் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவான குறித்த மாணவி இறுதிப் போட்டியில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

அத்துடன் கடந்த வருடம் நடைபெற்ற புத்தாக்க போட்டியிலும் இப்பாடசாலையின் தரம் 9 இல் கல்வி கற்ற மாணவன் ஜீவரெத்தினம் பிரதீபன் நீரூற்றும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தமைக்காக தேசிய மட்டத்தில் 5 ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டெங்கினால் பாதிக்கப்பட்ட 12 மாணவர்கள் அங்கொடை வைத்தியசாலையில் பரீட்சை எழுதுகின்றனர்!!

க.பொ.த. சாதா­ரண தரப்­ப­ரீட்­சைக்கு தோற்­றி­யுள்ள மாண­வர்­களில் 12 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்­பட்டு அங்­கொடை தொற்று நோய் வைத்­தி­ய­சா­லையில் ­அனும­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வாறு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள பரீட்­சார்த்­தி­க­ளுக்­காக அவ்­வைத்தியசாலையிலேயே பரீட்சை நிலை­ய­மொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, டெங்கு நோயா­ளர்கள் எண்­ணிக்கை அதி­க­ரிப்பில் சிறி­ய­ள­வி­லான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

நேற்­று­வரை 47, 900 டெங்கு நோயா­ளர்கள் பதி­வா­கி­யுள்ள நிலையில் 77 பேர் டெங்­கினால் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்­திட்­ட­மா­னது தொடர்ந்தும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.

அதற்­க­மைய முப்­ப­டை­யினர், பொலிஸார், சிவில் பாது­காப்பு படை­யினர் மற்றும் சுகா­தார சேவையாளர்கள் ஒன்­றி­ணைந்து புகை விசி­றுதல் மற்றும் வீடு­களை பரி­சோ­தனை செய்தல் போன்ற நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கடந்த 4 நாட்­க­ளினுள் நாட­ளா­விய ரீதியில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்­டத்­துக்­க­மைய 77,728 வீட்டு சூழல்கள் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இதன்­போது, டெங்கு நுளம்பு குடம்­பிகள் காணப்­பட்ட 1140 சுற்றுச் சூழல் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. இவற்றில் 9188 இடங்­களை சுத்தம் செய்­யப்­பட நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் 2,882 வளா­கங்­க­ளுக்கு அறி­வித்­தல்கள் மற்றும் இவ்­வா­றான குடம்­பிகள் பெரு­கத்­தக்க சூழலை வைத்­தி­ருந்த 616 பேருக்கு வழக்கும் தொட­ரப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, இம்­முறை க.பொ.த. சாதா­ரண தரப்­ப­ரீட்­சைக்கு தோற்­றி­யுள்ள மாண­வர்­களில் 12 பேர் டெங்கு நோயினால் பீடிக்­கப்­பட்டு அங்­கொடை தொற்று நோய் வைத்­தி­ய­சாலை (ஐ.டி.எச்.) இல் அனுமதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வாறு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள பரீட்­சார்த்­தி­க­ளுக்­காக அவ்­ வைத்தியசாலையி­லேயே பரீட்சை நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாணவர்களது உடல்நிலை தொடர்பில் வைத்தியர்கள் தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொண்டுவருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை : நாட்டில் வறட்சியான காலநிலை தொடரும்!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் வறட்சியான வானிலை எதிர்வரும் இரு நாட்களுக்கு தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல இடங்களில் மழை ஏற்படலாம். மேல் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.

இந்நிலையில் இடியுடன்கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்தகாற்று வீசக்கூடும். மின்னலினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காக பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி : கருப்புப் பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள்!!

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் ஆரம்பமாகியுள்ளது.

கடந்த 4 போட்டிகளில் மூன்றை வென்றதன் மூலம் ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, இந்தப் போட்டியிலும் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

1992-93-ல் அசாருதீன் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இன்றளவும் சாதனையாக உள்ளது.

இந்தத் தொடரின் முதல் போட்டி சமநிலையில் நிறைவடைந்த நிலையில், அதன்பிறகு விளையாடிய 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி கண்டுள்ளது.

மும்பையில் நடைபெற்ற 4-ஆவது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்ற உற்சாகத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது விராட் கோலி தலைமையிலான அணி.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி, துடுப்பாட்டத்தைச் தேர்வு செய்தது. இந்திய அணியில் புவனேஸ்வர், ஜெயந்த் யாதவுக்குப் பதிலாக இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

போட்டி தொடங்கும் முன்பு இரு அணி வீரர்களும் ஜெயலலிதாவின் மறைவுக்காக இரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் இரு அணி வீரர்களும் தங்கள் கைகளில் கருப்புப்பட்டை அணிந்து விளையாடுகிறார்கள்.

உலகின் மிக மோசமான சிறைச்சாலை இது தான் : அதிர வைக்கும் புகைப்படங்கள்!!

 
சர்வதேச அளவில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் மோசமான பராமரிப்புடன், அளவுக்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ள காட்சிகள் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதியான Rodrigo Duterte அந்நாட்டில் போதை பொருள் கடத்தலை தடுக்க கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறார்.

கடந்த யூலை மாதம் முதல் போதை பொருள் கடத்திய குற்றங்களுக்காக பலருக்கு மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனினும், பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்ட காரணங்களுக்காக கைது நடவடிக்கையும் அந்நாட்டில் அதிகரித்து வருகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட நபர்களை கொத்தடிமைகளுக்கும் கீழ்த்தரமாக சிறைகளில் அடைத்து வைக்கும் கொடுமை அங்கே நிகழ்ந்து வருகிறது.

குறிப்பாக, Quezon நகர சிறைச்சாலையில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் தலா 30 கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும்.

ஆனால், தற்போதைய நிலவரப்படி இச்சிறை அறைகள் ஒவ்வொன்றிலும் 130 கைதிகளுக்கு மேல் அடைத்து வைக்கப்படுகிறார்கள்.

ஒட்டுமொத்த அறைகளிலும் 800 கைதிகள் மட்டுமே அடைத்து வைக்க வேண்டும். ஆனால், கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தற்போது இச்சிறைச்சாலையில் 3,000 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இரவில் தூங்கும்போது கால்களை நீட்டிக் கூட படுக்க முடியாது. சில நேரங்களில் ஒருவர் மீது ஒருவர் படுத்து தூங்கும் அவலமும் அங்கு நிகழ்ந்து வருவது பெரும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.

வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் உதவிகள்!!

 
வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்து கொண்ட முன்னாள் போராளிகளுக்கு இன்று (16.12.2016) வவுனியா நகரசபை மைதானத்தில் வைத்து அவர்களின் சுயதொழில்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், புனர்நிர்மானம் மற்றும் புனர்வாழ்வு காரியலாயம் மூலமாக வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான தையல் இயந்திரங்கள், கோழிக்குஞ்சுகள் சுயதொழிலுக்காக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் ஆலோசனைகளுக்கு அமைவாக புனர்வாழ்வு பணியகப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக, பிரிகேடியர் யூ. எஸ்பி.தர்சனலியனகே, சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹக புஸ்பகுமார ஆகியோர் கலந்து கெண்டனர்.

இந்துமத அலுவல்கள் அமைச்சின் அனுரசணையின் கீழ் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்து கொண்டவர்களுக்கிடையிலான வவுனியா, மனனார், மாவட்டக் கழகங்களுக்கிடையிலான நட்புறவினை மேம்படுத்தும் வகையில் காற்பந்தாட்ட இறுதிப் போட்டியும் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் இறுதியாக மூன்று முன்னாள் போராளிகளும் ஒருவருட புனர்வாழ்வுப் பயிற்சி பெற்ற செல்லப்பா சிவநாதன் வயது 43 மட்டக்களப்பு, தியாகராசா முரளிதரன் வயது 31 அம்பாறை, கணபதிப்பிள்ளை அமரசிங்கம் வயது 38 வாழைச்சேனை ஆகிய போராளிகள் இன்று சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.