பசு மீது துப்பாக்கிச் சூடு : துப்பாக்கி கண்டுபிடிப்பு!!

 
கன்றுத்தாச்சிப்பசுவொன்று இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் அக்கரைப்பற்று சாகாமப்பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

சாகாமத்திற்கும் முரணாவட்டைக்கும் இடைப்பட்ட வெளியில் இச்சம்பவம் நேற்று அதிகாலை சம்பவித்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.

வேளாண்மையை மேய்ந்ததாகக்கூறி இப்பசு சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அப்பகுதியில் விவசாயிகள் கால்நடைப்பண்ணையாளர்களிடையே முரண்பாடு வலுப்பெற்றிருப்பதாகத் தெரிகிறது.

இது தொடர்பில் திருக்கோவில் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜே.ஹேரத் ஸ்தலத்திற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அங்கு அவர் கால்நடையாளர் சங்கத்தலைவர் அ.முருகன், செயலாளர் சோ.புஸ்பராசா மற்றும் மிருகவைத்திய அதிகாரியையும் வரவழைத்திருந்தார்.

சற்றுநேரத்தில் விசேட அதிரடிப்படையினரின் துணைகொண்டு அப்பகுதியில் தேடுதல் நடாத்தப்பட்ட போது அங்கு சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும், ரவையும் மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பாக தமது கண்டனத்தைத் தெரிவிப்பதாக கால்நடை பாற்பண்ணையாளர் சங்கச்செயலாளரும் முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினருமான சோ.புஸ்பராசா தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசசெயலாளருக்குட்பட்ட பிரதேசத்திலமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான வட்டமடு மேய்ச்சல்தரையை பிரதேசசெயலாளர் காப்பாற்றித்தர வேண்டுமென அவர் மேலும் கேட்டுள்ளார்.

தாய்ப்பால் புரைக்கேறியதில் சிசு மரணம்!!

மட்டக்களப்பு ஏறாவூரில் தாய்பால் புரைக்கேறியதால் பிறந்து 33 நாட்களான சிசுவொன்று நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி தாமோதரம் வீதியைச் சேர்ந்த ரஜனிக்காந் சுஜித் என்ற சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த சிசு வாயின் மேல் உதட்டில் சிறிது காயத்துடன் பிறந்துள்ளது. தாயார் அக்குழந்தைக்கு பால் அருந்தக்கொடுத்து விட்டு உறங்க வைத்துவிட்டு முதலாவது பிள்ளைக்கு இரவு உணவு கொடுத்து வந்து பார்க்கும் போது சிசு மூச்சு எடுக்க சிரமப்பட்டுள்ளது.

உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவந்த போது சிசு உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தாய்ப்பால் புரைக்கேறியதில் ஏற்பட்ட மரணம் என அறிக்கை சமர்பித்து சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்மாவை புகழ்ந்த இந்த வாயால் : நடிகை விந்தியா எடுத்த அதிரடி முடிவு!!

நடிகை விந்தியா பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது, அந்த அளவுக்கு மேடைபேச்சுகளில் பிரபலமானவர். மற்ற கட்சிகளை வறுத்தெடுப்பத்தில் இவரை மிஞ்சி யாரும் இருக்க முடியாது.

இவரது பேச்சுகளை கேட்ட ஜெயலலிதா கார்டனுக்கு அழைத்து பாராட்டினார், அம்மாவின் தீவிர பக்தையாக மாறிய விந்தியா அரசியலில் புகுந்து விளையாடினார். ஆனால் இப்போது அம்மாவின் மறைவால் சோகத்தில் மூழ்கியுள்ளாராம்.

அம்மாவை புகழ்ந்த இந்த வாயால் சின்னம்மாவை புகழ்வதா? என அதிரடியாக முடிவெடுத்துள்ளாராம். அதாவது, அரசியலில் இருந்து விலகிக் கொள்ளப் போகிறாராம், அதுமட்டுமின்றி ஜெயலலிதாவை பற்றி புத்தகம் எழுதவும் முடிவெடுத்துள்ளாராம்.

சசிகலாவை அடுத்த பொதுச்செயலாளராக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அடிமட்ட தொண்டர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

அம்மா இருந்த இடத்தில் சசிகலாவை நினைத்துக்கூட பார்க்க முடியாது என கூறிவருகிறார்களாம்.

சமீபத்தில் நடிகை ஆனந்தராஜ்கூட, தற்போதைய சூழலில் நிதானம் தேவை, 6 கோடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலுள்ள இலங்கையர்களுக்கு ஓர் அறிவிப்பு : கடவுச் சீட்டுக்கள் மீளாய்வு!!

இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் தமிழர்களின் தேசிய அடையாளம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் சிலரின் கடவுச் சீட்டுக்கள் மீளாய்வு செய்யப்பட்டுவருகின்றன. இந்தியாவில் உள்ள திருச்சி கடவுச் சீட்டு பிராந்திய அலுவலகமே குறித்த சோதனையை மேற்கொண்டு வருகின்றது.

தங்களது அடையாளத்தை மறைத்து கடவுச் சீட்டு பெற்றுக்கொள்ளும் நபர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடவுச் சீட்டு விவகாரம் தொடர்பில் சந்தேகநபர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர் என்றும், திருச்சி கடவுச் சீட்டு பிராந்திய அலுவலகம் இந்த தகவலை தொகுத்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

தேசிய அடையாளத்தை மறைத்து கடவுச் சீட்டு பெறுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் சிலருக்கு இந்த பிரச்சினை தொடர்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றும் சிலர் இது தொடர்பில் விளக்கம் தெரிவித்துள்ளனர் என்றும் கடவுச் சீட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரியில் கோர விபத்து : பேருந்து – வான் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பரிதாப மரணம்!!

 
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து இன்று(17.12.2016) சனிக்கிழமை)மதியம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த அரச பேருந்து ஒன்றும் கொழும்பில் இருந்து சென்ற ஹயஸ் ரக வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

வானில் வந்த 7 பேர் உள்ளடங்களாக 10 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

வவுனியாவில் இடம்பெறவுள்ள சர்வதேச மாற்றாற்றல் உடையோர் தினவிழா!

எதிர்வரும்  திங்கட்கிழமை 19.12.2016 காலை 7.30 மணிக்கு வவுனியா பஸ் நிலையத்தில் ஆரம்பமாகவுள்ள மாவட்ட மட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவிற்கு இவர்கள் மீது விருப்புள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் ….!

மாற்றுத்திறனாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொள்வது மிக அவசியம் எனக்கருதுகிறோம் ….

.மாற்றுத்திறனாளிகளுக்கான அரச உதவி பெறும் குடும்பங்கள் தவறாது கலந்து கொள்வது மிக முக்கியமானது……

.பி.ப 1.30 மணிக்கு மதிய போசனத்துடன் நிகழ்வுகள் நிறைவுக்கு வரும் ….!

நீங்கள் பங்குபற்ற முடியாவிட்டாலும் பார்ப்பவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் உரிமையுடன் இந்நிகழ்வுக்கு அழைப்பு விடுத்து அனுப்பி வையுங்கள்..

எல்லோருமே கலந்து கொண்டு இவர்களுடன் செல்பி எடுத்துக்கொள்ளலாம்.

ஏனெனில் இவர்கள் சிறப்புத்திறனாளிகள் . இவர்கள் உங்களது வரவையும் ஆதரவையும் மட்டுமே வேணடி நிற்கின்றனர்.. இது சமூகம் சார்ந்த நிகழ்வு யாருமே விலகி நினைக்க எண்ணாது கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான கரம் கொடுங்கள் …!

நாங்கள் ஏற்பாட்டாளர்கள் மட்டுமே இதுவே உங்களுக்கான தனிப்பட்ட அழைப்பாக இருக்கட்டும்…இந்த ஒரு அரை நாள் பொழுதை இவர்களுக்காக செலவிடுங்கள்.

….நன்றி …
விழாக்குழு,!

வவுனியா  மாவட்ட  சமூக சேவைகள் அலுவலகம்

 

வவுனியா இடம்பெற்ற விபத்தில் ஓருவர் படுகாயம்!!

 
வவுனியா மன்னார் வீதி, குளுமாட்டுச்சந்தியில் இன்று (17.12.2016) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

இன்று (17.12.2016) நண்பகல்12 மணியளவில் மன்னார் வீதி குளுமாட்டுச்சந்தியில் மன்னார் வீதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கனரக வாகனத்துடன் அதன் பின்னால் பயணித்த இலக்கத்தகடு அற்ற புதிய பட்டா ரக வாகனம் அதற்க்கு முன்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கரவணடி மீது மோதியதில் முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டினை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியான தர்மராசா நந்தகுமார் (48 வயது) படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிசார் மற்றும் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இனிமேல் இந்தத் தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள்!!

நம் வீட்டில் உள்ள முன்னோர்கள் சில பழக்க வழக்கங்களை செய்யக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால் நாம் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் திரும்ப திரும்ப செய்து வருவோம், அது என்னவென்றால்,

அன்றாடம் ஆண்கள் மற்றும் பெண்கள் செய்யும் தவறுகள் என்ன?

நாம் உடுத்திய பழைய துணிகளை நமது வீட்டின் கதவுகளின் மீது போடக் கூடாது.

நமது உடம்பில் இருந்து உதிர்ந்த முடியையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கவே கூடாது அதை உடனே வெளியில் போட வேண்டும்.

ஒரே நேரத்தில், நம்முடைய இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது.

திருமணம் போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தவுடன் குளிக்க கூடாது.

நாம் சாப்பிடும் போது, உணவை உருண்டையாக உருட்டி சாப்பிடக் கூடாது.

நாம் அதிகமாக ஈரமான ஆடையை உடுத்தக் கூடாது. அதிலும் ஈர துணியை உடுத்திக் கொண்டு உணவு சாப்பிடக் கூடாது.

ஆண்கள் ஷேவ் செய்து கொள்வதற்கும் சிறிது நேரத்திற்கு முன்பு எதுவும் சாப்பிடக் கூடாது.

தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமை அன்று ஷேவ் செய்துக் கொள்ள கூடாது.

நம்முடைய இரண்டு கன்னங்களிலும், கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ அல்லது உட்கார்ந்து இருப்பதோ கூடாது.

கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசி இலையை பெண்கள் தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது.

பெண்கள் புடவை உடுத்தும் போது, முந்தானையை தொங்க விட்டு நடக்கக் கூடாது.

கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது, நமது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்

கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க வேண்டும்.

சுமங்கலி பெண்கள் தலை குளிக்கும் பொழுது சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில், பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்.

பெண்கள் கோலம் போடும் போது தெற்கு திசையை பார்த்து நின்று கொண்டு போடக் கூடாது.

திருமணத்திற்கு பின் பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று மெட்டிகள் அணியக் கூடாது.

கர்ப்பமான இருக்கும் பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக் கூடாது.

திருமணத்திற்கு பின் பெண்கள் குங்குமம் வைக்கும் போது, கிழக்கு திசையை நோக்கி, இரண்டு புருவத்தின் மத்தியிலும் உச்சந்தலையிலும் வைத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் அமாவாசை மற்றும் தவசம் ஆகிய நாட்களில் வீட்டு வாசலில் கோலம் போடக் கூடாது.

நிர்வாணமாக வீதியில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண் : காரணம் என்ன?

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் வீதியில் நிர்வாணமாக படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லிவர்பூல் நகர சாலையில், ஜாஸ்மின் என்ற பெண்ணே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் சாலையில் வரைந்திருந்து ஒரு பெரிய தட்டில் காய்களுக்கு இடையில் நிர்வாணமாக வான்கோழி போல் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மக்கள் கிறிஸ்துமஸ் விருந்தில் அசைவ உணவிற்கு பதிலாக சைவ உணவுகளை உண்டு மகிழ வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் விலங்கு உரிமைகள் அமைப்பான பீட்டாவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லீவர்பூல் மட்டுமின்றி பர்மிங்காம், மான்செஸ்டர் மற்றும் நியூகேஸில் நகரங்களிலும் மக்கள் மத்தியில் இதுபோன்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

பண்டிகையின் போது பெரும்பாலான மக்களின் உணவுக்காக கொல்லப்படும் பிராணிகளின் உணர்வை மக்கள் உணர வேண்டும் என்ற நோக்கத்திலே இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்தபட்டதாக பீட்டா குறிப்பிட்டுள்ளது.

ஆடையின்றி விமான நிலையம் வந்த நபரால் பரபரப்பு : வியக்க வைக்கும் காரணம்!!

தென்னாப்பிரிக்க நாடான மலாவியில் நபர் ஒருவர் வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்துகொண்டு விமான நிலையம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த சம்பவம் மலாவி விமான நிலையத்தில் நடந்துள்ளது. Greig Bannatyne என்ற அந்த நபர்தான் வெறும் உள்ளாடையுடன் விமானத்தில் பயணம் செய்யும் பொருட்டு விமான நிலையம் வந்தவர்.

தொண்டு நிறுவனங்கள் சார்பில் மலாவி ஏரியில் நீச்சல் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த போட்டியில் கலந்துகொள்ளும் பொருட்டு கிரேக் மலாவி வந்துள்ளார்.

விமானம் நிலையம் செல்ல குறித்த காலத்தில் பேருந்து வந்ததை அடுத்து இவருடன் கலந்துகொள்ளும் நீச்சல் வீரர்கள் உடனடியாக பேருந்தில் ஏறிக்கொண்டனர். ஆனால் இவருக்கு மாற்று உடை எடுத்து அணிந்துகொள்ளும் சாவகாசம் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார். இதனையடுத்து நீச்சலுக்கான ஆடையுடனே விமான நிலையம் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

4 மணி நேரம் தொடர்ந்து பேருந்து பயணம் செய்து விமான நிலையம் வந்து சேர்ந்த குழுவினரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்படும் போட்டி எனவும், விமானத்திற்கு தாமதமானதால் மட்டுமே கிரேக் உள்ளாடை மட்டுமே அணிந்து வர நேரிட்டது என விளக்கம் அளித்த பின்னரே அவரை உள்ளே அனுமதித்துள்ளனர்.

மட்டுமின்றி கடவுச்சீட்டு சரிபார்க்கும் அதிகாரிகள் இவரது விளக்கத்தை கேட்டு விமானத்தில் பயணிக்க அனுமதித்தாலும், விமானத்தில் செல்லும் முன்பு உரிய உடை அணிந்து செல்ல வெண்டும் என்று கண்டிப்புடன் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்த களேபரங்களுக்கிடையே தொண்டு நிறுவனம் சார்பில் கிரேக் அணி 2000 பவுண்டு தொகையை சேகரித்துள்ளனர்.

வேலைத் தேடிச் சென்ற இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை!!

டெல்லியில் நேற்று இரவு இளம்பெண் ஒருவர் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி தலைநகர் டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் பலாத்கார சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த நினைவு நாளை அனுசரிக்க உள்ள நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அங்கு அரங்கேறி உள்ளது.

நொய்டாவில் இருந்து இளம்பெண் ஒருவர் வேலை தேடுவதற்காக டெல்லி சென்றுள்ளார்.

அவர் வீட்டிற்கு செல்ல டாக்சிக்கு காத்திருந்த போது காருடன் வந்த நபர் ஒருவர் வீட்டிற்கு கொண்டு சென்று விடுவதாக அந்த பெண்ணிடம் கூறி அழைத்துச் சென்றார்.

அந்த பெண் காரில் ஏறியதும் காரை டிரைவர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு ஓட்டியுள்ளான். பின்னர் அந்த பெண்ணை மிரட்டி அவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

பாதிக்கப்பட்ட பெண் உதவி கேட்டு கத்தியபோது குறித்த நபர் பயந்து ஓடிவிட்டான். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த பொலிசார் பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை அதிகாரிக்கு சொந்தமான காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்காக கொந்தளிக்கும் சீமான் : இவர் கேட்பதிலும் நியாயம் இருக்கின்றது!!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்து 11 நாட்கள் ஆகிவிட்டன. அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. “முதல்வரின் மரணம் குறித்த அறிவிப்பு முதல் அடக்கம் செய்யப்பட்டது வரையில் அனைத்தும் துல்லியமான திட்டப்படியே நடந்தன. ஒரு சாதாரண மனிதனாக இவற்றைக் கடந்து போக முடியவில்லை” என குமுறுகிறார் சீமான்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆளும்கட்சியின் ஏழு நாள் துக்க அனுசரிப்பு நிகழ்வுகள் முடிந்து போய்விட்டன. புதிய முதல்வராக களத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவார் என அ.தி.மு.கவின் சீனியர்கள் பேசி வருகின்றனர்.

” 2020-ம் ஆண்டில் ஜெயலலிதா மரணம் அடைந்திருந்தால், இப்படி வேறு ஒருவரை முன்னிறுத்தும் வேலைகளைத் தொடங்கியிருக்க மாட்டார்கள். ஆட்சி நிறைவடைய இன்னும் நான்கரை ஆண்டு காலம் இருக்கிறது. அதுவரையில் இந்த அதிகாரத்தை விட்டுக் கொடுக்க இவர்கள் விரும்பவில்லை. அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள இவர்களை விட்டால் வேறு யாருமில்லை. தற்போது அதிகாரத்தில் இருக்கும் அதிகப்படியான அதிகாரிகளை இவர்கள்தான் நியமனம் செய்தார்கள். அதனால் அவர்கள் சொல்வதைக் கேட்டு கட்டுப்பட்டு நடக்கிறார்கள். மீதமுள்ள ஆட்சி காலத்தைப் பயன்படுத்தி எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்றுதான் பார்க்கிறார்கள்.

ஜெயலலிதா பிறந்தநாளன்று எவ்வளவு சுவரொட்டிகள் ஒட்டினார்கள்? அவர் இறந்தபோது எவ்வளவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன? அப்படியானால் இவர்கள் அனைவரும் பதவிக்காக இவ்வளவு காலம் நடித்துக் கொண்டிருந்தார்களா? அவர் இறந்த அடுத்த நொடியிலேயே காட்சிகள் மாறிவிட்டன.

ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார்கள். அவர் சிறையில் இருந்தபோது, ‘நம்மைப் பார்ப்பார்’ என்ற காரணத்துக்காக, அழுது புரண்டு ஒப்பாரி வைத்தவர்கள் எல்லாம் அமைதியாக இருந்தது ஏன்?” என ஆதங்கத்தோடு பேசத் தொடங்கினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தொடர்ந்து நம்மிடம் பேசினார்.

” முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. ‘ அவர் முழுக்க குணமாகிவிட்டார்; 15 நாளில் வீடு திரும்புவார்’ என்றார்கள். மேலும் 15 நாட்கள் என்றால் இன்னும் நன்றாகத்தானே குணமடைந்திருக்க வேண்டும். திடீரென்று உயிர் போகும் அளவுக்குப் பலவீனம் எப்படி ஏற்பட்டது? அப்படியானால் இதுவரையில் மருத்துவர்கள் தெரிவித்த கருத்துகள் தவறா? என் அம்மாவுக்கு வைத்தியம் பார்க்கிறேன் என்றால், யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். 75 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்திருக்கிறார். அவருக்காக ஓட்டுப் போட்ட ஒவ்வொருவருக்கும் அவரது உடல்நிலையைப் பற்றி அறிந்து கொள்ளும் உரிமை இருக்கிறது. ‘மருத்துவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார்’ என்று சொன்னார்கள். அதைப் படம் எடுத்து வெளியிட்டிருக்கலாம். அப்படி வந்திருந்தால் இந்தக் கேள்விகள் எழுந்திருக்காது.

அப்போலோவில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. பத்திரிகையாளர் சோவுக்கு வைத்தியம் பார்த்ததற்கான அடையாளமாக சிரின்ஜ் ஏற்றிய சுவடுகள் இருக்கின்றன. ஜெயலலிதாவுக்கு அப்படி எதேனும் சுவடுகள் தென்பட்டதா? அவரது கன்னத்தில் எம்பால்மிங் செய்ததற்கான குழிகள் இருக்கின்றன. அதைப் பார்க்கும்போதுதான் சந்தேகம் வலுப்பெறுகிறது. ஏன் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்கவில்லை?

எம்.ஜி.ஆர் சிகிச்சையில் இருந்தபோதுகூட அவர் தொடர்பான படங்கள் வெளியானது. ஜெயலலிதா விஷயத்தில் யாருமே அவரைப் பார்க்கவில்லை. ஆளுநரோ ராகுலோ யாருமே அவரைச் சென்று சந்திக்கவில்லை. ‘முழுக்க குணமாகிவிட்டார்’ என பிரதாப் ரெட்டி சொன்னது உண்மையா?

முழுக்க குணமான உடலில் திடீர் பழுது எப்படி வந்தது? இதற்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்? ‘அவருடைய வெற்றிக்கு சசிகலா துணையாக இருந்தார்’ என்கிறார்கள். இதை ஏன் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது, இந்தத் தலைவர்கள் தொலைக்காட்சிகளில் பேசவில்லை? ‘ அவர் செய்தது மிகப் பெரிய தியாகம்’ என்கிறார்கள்.

ஒருவருக்குத் தோழியாக இருப்பதே தியாகம் என்றால், இந்த நாட்டுக்காக செக்கிழுத்து, சொத்துகளை இழந்து கடைசி காலத்தில் மண்ணெண்ணெய் விற்று இறந்து போன வ.உசிக்கு என்ன பெயர்? செல்வந்தராகப் பிறந்து சொத்துகளை எல்லாம் ஏழை மக்களுக்குக் கொடுத்துவிட்டு காவி வேட்டி அணிந்து வாழ்ந்த முத்துராமலிங்கத் தேவருடைய தியாகத்துக்கு என்ன பெயர்? ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தேச விடுதலைக்காக சிறையில் இருந்தார் காமராஜர். அவரை நாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது?

ஜெயலலிதா உடலைப் பார்த்து, அப்பாவி மக்கள்தான் கதறியபடி நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்கள். ஓர் அமைச்சர் கதறியதைக்கூட கண்ணால் பார்க்க முடியவில்லை. ஓர் எம்.எல்.ஏ, ஒரு மாவட்டச் செயலாளர் என ஒருவராவது மொட்டை அடித்தார்களா? சாமி வரம் கொடுக்கும் வரையில்தான் நல்ல சாமி என நினைத்து இவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

உளவியல் ரீதியாக இந்த அமைச்சர்கள் எப்படி இதைக் கடந்து போகிறார்கள். அவர்களுக்கு நிம்மதியாகத் தூக்கம் வந்திருக்கலாம். அன்று இரவு முழுக்க என்னால் தூங்கவே முடியவில்லை. தூரத்தில் இருந்த நமக்கே இப்படி என்றால், அருகில் இருந்தவர்கள் ஜெயலலிதா இறப்பை, ஒரு பெரிய இழப்பாகவே காட்டிக் கொள்ளவில்லை. அப்படியானால், அவரது மரணம் முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. அப்படித்தான் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது.

1969 பிப்ரவரி 3-ம் தேதி அண்ணாதுரை இறந்து போனார். உடனே யாரும் பதவியேற்கவில்லை. தற்காலிக முதல்வராக நெடுஞ்செழியன் பதவியேற்றார். அவரை அடக்கம் செய்த பிறகே, முதலமைச்சராக கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார்.

எம்.ஜி.ஆர் இறந்தபோதும் தற்காலிக முதல்வராக நெடுஞ்செழியனை அறிவித்தார் ஆளுநர் குரானா. அதன்பிறகு கட்சி எம்.எல்.ஏக்கள் கூடி வி.என்.ஜானகியை தேர்வு செய்தார்கள்.

தற்போது ஜெயலலலிதா மரணத்துக்குப் பிறகு ஏழு நாள் துக்கத்தை அரசு அறிவித்தது. அதன்பிறகு, ஓ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டிருந்தால், எல்லாம் இயல்பாக நடந்திருக்கும்.

உயிர் போன அடுத்த நொடியில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பது என்பது என்ன மாதிரியான மனநிலை? அதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. ஒரு மனிதனாக தொலை தூரத்தில் இருந்து பார்க்கும்போது எப்படி நினைப்பது? ஒரு வீட்டில் துக்க காரியம் நடந்தால் ஓர் ஆண்டுக்கு எந்த நல்ல காரியமும் நடப்பதில்லை.

கமலஹாசன் செவாலியே விருதை வாங்கிக் கொண்டு வருகிறார். அந்த விருதை வாங்கியதற்காக கேரள முதல்வர் வாழ்த்தினார். ஜெயலலிதா வாழ்த்தவில்லை. ஆனால், ஜெயலலிதா உடல்நிலையைக் காரணம் காட்டி தன்னுடைய பிறந்தநாளைத் தள்ளிப் போட்டார் அவர்.

ரஜினிகாந்த், ‘பிறந்தநாளையே கொண்டாட வேண்டாம்’ என்றார். சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் தங்களுடைய நிகழ்வுகளை ரத்து செய்கின்றனர். ஜெர்மன் பயணத்தை ரத்து செய்தார் தமிழிசை. உங்களால் மட்டும் இறந்த அடுத்த நொடியில் எப்படி பதவியேற்க முடிகிறது ஓ.பி.எஸ்?

இந்தக் காட்சிகளைப் பார்க்கும் ஒரு மனிதன் எப்படிப்பட்ட மனநிலைக்கு ஆளாவான்? இருக்கும் வரையில் புரட்சித் தலைவி அம்மா, டாக்டர், தங்கத் தாரகை, இதய தெய்வம் என்றெல்லாம் அழைத்தீர்கள். இறந்தவுடன், செல்வி ஜெயலலிதா என்கிறார்கள். யார் மரணம் அடைந்தாலும், எப்படி நடந்தது என எல்லோரும் கேட்பார்கள்.

அதுபோன்ற ஒரு விசாரணைகூட வேண்டாம் என்றால் எப்படி? ‘அதிகாரம் மிக வலிமையானது’ என அம்பேத்கர் சொல்வார். ஆனால், அதிகாரம் மிகக் கொடுமையானது என்பது ஜெயலலிதாவின் இறப்பின்போதுதான் உணர முடிகிறது. ‘இறந்து போனவர் திரும்பி வரவா போகிறார்’ என திருநாவுக்கரசர் கேட்கிறார். அதையே நானும் கேட்கிறேன். ‘என் இனத்தையே போர் தொடுத்து அழித்த ராஜிவ்காந்தி திரும்ப வந்துவிடுவாரா?

ஜெயலலிதா அவர் உயிரோடு இருந்த வரையில், மத்திய அரசின் நீட் தேர்வு, சரக்கு சேவை வரி(ஜி.எஸ்.டி), உணவுப் பாதுகாப்பு மசோதா, உதய் மின் திட்டம் ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தார். காரணம். ‘மாநில உரிமைகளுக்காக நிற்கின்ற கட்சி அ.தி.மு.க. மாநில நலனை பாதிக்கும் இதுபோன்ற திட்டங்களை ஏற்க முடியாது’ என அறைகூவல் விடுத்தார் ஜெயலலிதா.

ஆனால், அவர் உடல் நலமில்லாமல் போனபோது, கட்சியின் பொதுக்குழு கூடி அறிவிக்காமல் முதல்வரின் அதிகாரங்களை ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கினார் ஆளுநர். அடுத்த ஒரு வாரத்தில் இந்த நான்கு திட்டங்களிலும் எதிர்ப்பில்லாமல் தமிழக அரசு இணைந்துவிட்டது. கட்சியின் தலைவர் எதிர்த்த ஒன்றுக்காக, பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஓ.பி.எஸ் கையெழுத்துப் போடுகிறார். ஒருவேளை அவர் சிகிச்சை முடிந்து மீண்டு வந்திருந்தால், இதையெல்லாம் எதிர்த்தது போல் நடித்தீர்களா எனக் கேள்வி கேட்டால், ஜெயலலிதாதான் பதில் சொல்லியிருக்க வேண்டும். அவர்கள் எதிர்த்த ஒன்றுக்கு கையெழுத்து போடுகிறீர்கள் என்றால், அவர் திரும்பி வர மாட்டார் என முடிவு செய்துவிட்டதாகத்தானே அர்த்தம்.

ஜெயலலிதா இறந்தபோது ஒரே நாளில் அடக்கம் செய்துவிட்டார்கள். அந்தக் குழியில் அதே அளவுக்கான சிமென்ட் கல் குறுகிய காலத்துக்குள் யார் தயாரித்தது? அதை பாலிஷ் போடுவதற்கு எவ்வளவு நாட்கள் தேவைப்பட்டிருக்கும்?

முதல்வரின் உடல் அளவுக்கு சந்தனப் பேழையை எங்கு தயார் செய்தார்கள்? மாலை நான்கரை மணிக்குள் சந்தனப் பேழையைத் தயாரிக்க முடியுமா? உடற்கூறு ஆய்வும் நடத்தப்படவில்லை. மருத்துவமனையில் சேர்த்த இரண்டாவது நாளிலேயே, அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மார்க் பதிவு செய்தார்கள். இப்போது அதே இடத்தில்தான் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கிறது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் இதுகுறித்தெல்லாம் கேள்வி எழுப்பாமல் எப்படிக் கடந்து போக முடியும்?

மிகுந்த வலியோடுதான் இந்தக் கேள்விகளை எழுப்புகிறேன். யாரிடமும் கேட்க வழியில்லாமல் எனக்குள் நானே கேட்டுக் கொள்கிறேன். இவ்வளவு காலம் ஒரு மனுஷியை நேசித்ததாகக் காட்டியது எல்லாம் வேடமா? ஒரேநாளில் வேறு ஒருவரின் படத்தை நெஞ்சுக்குள் எப்படி செருக முடிந்தது? இதை தூரத்தில் இருந்து பார்ப்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்” என வேதனையோடு பேசி முடித்தார் சீமான்.

-விகடன்-

யாழில் 17 வயது சிறுமியைக் காணவில்லை!!

யாழ். குரும்பசிட்டி கிழக்குத் தெல்லிப்பழைப் பகுதியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த 12ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோரால் தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகேந்திரன் வினித்தா எனும் குறித்த சிறுமி விட்டிலிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த சிறுமி தொடர்பில் இது வரை எந்த தகவலும் அறியப்படவில்லை என சிறுமியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தின்தொலைபேசி இலக்கமான 021 224 0222 அல்லது 0718591321 ,071 859 1321, என்றதொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

இரகசியத் தொடர்பை பேண மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

தன்னுடன் இரகசியத் வைத்திருந்த விவாகமான பெண்ணொருவர் தனது தொடர்பை முறித்துக்கொண்டதால் ஆத்திரமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் குறித்த பெண்ணை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

சந்தேகநபரான குறித்த பொலிஸ் அதிகாரி, பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து அந்தப் பெண்ணையும் அவரது இரு மகள்களையும் கத்தியால் குத்திக் காயப்படுத்தியுள்ளார்.

எனினும், குறித்த சந்தேகநபர் நேற்று வெலிக்கடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஹோமாகம பொலிஸில் பணியாற்றியவர் எனவும், இதற்கு முன் வெலிக்கடை பொலிஸில் பணியாற்றியபோது நாவல பிரதேசத்திலுள்ள 42 வயதான இந்தப் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிதுகாலத்தின் பின் அந்தப் பெண் தனது தொடர்பை முறித்துக்கொண்டதால் கோபமுற்ற சந்தேகநபர் இந்தக் கத்திக்குத்தில் ஈடுபட்டதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

பொலிஸ்மா அதிபரின் உத்தரவின்பேரில் இவரது பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், இவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஓமத்தைச் சாவடியை விடுவிக்க 6 ஏக்கர் காணியைக் கோரும் இராணுவம்!!

வவுனியா மாவட்டம் ஓமந்தையில் உள்ள சோதனைச்சாவடி அமைந்துள்ள 20 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதற்குப் பதிலாக இராணுவத்தினருக்கு வேறொரு இடத்தில் 6 ஏக்கர் காணி ஏ9 வீதியில் வழங்கப்படவுள்ளது. என வவுனியா மேலதிக மாவட்டச் செயலாளர் திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இறம்பைக்குளம் காணி உரிமையாளர்களுக்கும் மேலதிக மாவட்டச் செயலருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்.

ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த 20 ஏக்கர் காணியில் 6 ஏக்கர் காணியை மட்டும் எடுத்து மிகுதிக் காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் வெளியிட்டனர். ஏ – 9 வீதியில் 6 ஏக்கர் நிலம் வேண்டுமே என்று கேட்டனரே தவிர இந்தக் காணிதான் வேண்டும் எனக் கோரவில்லை.

அந்தப் பகுதியில் சுமார் 45 குடும்பங்களுக்குச் சொந்தமான காணி உள்ளதாகவும், கடந்த 23 ஆண்டுகளாக இராணுவத்தினர் வசமுள்ள அந்தக் காணிகளை விடுவிக்கவேண்டும் என்றும் உரிமையாளர்கள் கோரியிருந்தனர்.

இதனையடுத்து குறித்த விடயத்தை இராணுவத்தினரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அதற்கிணங்கவே இந்த சந்திப்பு மாவட்டச் செயலாளரினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

சோதனைச் சாவடி அமைந்திருந்த பிரதேசத்துக்கு அண்மையாக ஒரு நிலம் பாவனை இன்றி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் காணி தொடர்பில் பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு விவாதித்திருந்தோம்.

அவரின் கருத்துக்கு அமைவாக அது அரச காணி என்றால் அதனைப் படையினருக்கு வழங்கி விட்டு மக்களின் காணிகளை மக்களுக்கே வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்

இலங்கைப் பெண்ணை வெளிநாட்டில் விபசாரத்தில் ஈடுபடுத்திய இருவருக்கு கடூழியச் சிறை!!

26 வயதான விவாகமான இலங்கைப் பெண்ணொருவரை ஏமாற்றி வெளிநாட்டுக்கு அனுப்பி அங்கு அவரை பலவந்தமாக விபசாரத்தில் ஈடுபடுத்தினர் என்ற குற்றச்சாட்டின்பேரில் வழக்குத் தொடரப்பட்டிருந்த இருவருக்கு தலா ஒரு வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1,40,000 ரூபா நட்ட ஈட்டுடன் 2 ஆயிரம் ரூபா அபராதமும் செலுத்தவேண்டுமென அவிசாவளை மேல்நீதிமன்ற நீதியரசர் அமல் திலகரத்ன நேற்று உத்தரவிட்டார்.

இப்பாகமுவ, வேவல்யாய பிரதேசத்தைச் சேர்ந்த ரஞ்சித் பாலசூரிய மற்றும் சுகத் பண்டார பாலசூரிய எனும் இரு சந்தேகநபர்களும் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வசித்த விவாகமான பெண்ணொருவருக்கு வெளிநாடொன்றில் தொழில் பெற்றுத்தருவதாக ஏமாற்றி அங்கு அனுப்பியுள்ளனர்.

பின் அவரைப் பலவந்தமாக விபசாரத்தில் ஈடுபடுத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 2004 ஜனவரி 15ஆம் திகதி இந்த வழக்கு கடுவெல நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.

ஆரம்ப விசாரணைகளின் பின் அவிசாவளை மேல் நீதிமன்றத்துக்கு ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணை முடிவில் மேற்கூறிய தீர்ப்புகள் வழங்கப்பட்டன.