வீட்­டுக்­குள் கணவன் மனை­வி­யாக வாழும் நண்­பர்கள்!!

தமி­ழ­கத்தில் ஆண்கள் இருவர் வீட்­டுக்குள் தம்­ப­தி­க­ளா­கவும் ஊருக்குள் நண்­பர்­க­ளா­கவும் வாழ்ந்து வரு­கின்­றனர். இது குறித்து இவர்கள் தமி­ழகத்தி­­லி­ருந்து வெளிவ­ரு­கின்ற விகடன் சஞ்­சி­கை­க்கு தெரி­வித்­துள்­ளனர். அதி­லி­ருந்து…

பெரம்­பூரில் பஸ் நிலை­யத்தை ஒட்­டி­யி­ருக்கும் சிறு வீட்டில் வசிக்­கி­றார்கள் ராஜாவும், ஜோனும். வெளியில் நண்­பர்­க­ளாக அறி­மு­க­மா­கி­யுள்ள இரு­வரும் வீட்­டுக்குள்ளே தம்­ப­தி­க­ளாகத் தான் வாழ்ந்து வரு­கி­றார்கள். ராஜா அம்மன் பக்தர். கழுத்தில் மஞ்சள் கயிறு தொங்­கு­கி­றது.

சமையல் தொடங்கி, சகல வேலை­க­ளையும் ராஜா தான் செய்­வாராம். பெயரை, தன் கண­வ­னுக்­காக ராஜ சுலோ­க் ஷனா என மாற்றி வைத்துக் கொண்­டி­ருக்­கிறார்.

“பத்து வய­சி­லேயே எனக்­குள்ள பெண்மை இருக்­கி­றதை நான் புரிஞ்­சுக்­கிட்டேன். ஆனா, அதை எப்­படி வெளிக்­காட்­டு­ற­துன்னு தெரி­யலே. வீட்­டுல சொல்­லக்­கூ­டிய நிலையும் இல்லை.

எனக்கு ஒர் அக்கா, ஒரு தங்­கச்சி. அவங்க வாழ்க்கை பாதிச்­சி­டு­மேங்­கிற பயம். எல்லா உணர்­வையும் மன­சுக்­குள்­ளேயே வச்சு தச்­சுக்­கிட்டு நடைப்­பிணம் போல வாழ்ந்­துக்­கிட்­டி­ருந்தேன்.

என்னை மாதி­ரியே சில சகோ­த­ரிங்க தொடர்பு கிடைச்­சுச்சு. என்­னால அவங்­கள மாதிரி குடும்­பத்தை விட்­டுட்டு சுதந்­தி­ரமா போக முடி­யலே. படிப்பு ஏறலே. ஒரு நிறு­வ­னத்­தில ஓபீஸ் போயாக வேலைக்குச் சேர்ந்தேன். எல்­லா­ருமே என்னைத் தவறா பார்த்­தாங்க.

பேசு­னாங்க. பேண்ட் சட்டை போட்­டுக்­கிட்டு ஆம்­பி­ளையா உல­வி­னாலும், மன­சுக்­குள்ள பரி­பூ­ர­ண­மான ஒரு பெண்ணா தான் இருந்தேன்.

அபி­ராமி தியேட்­டர்ல மூணு வருஷம் முன்­னாடி தான் இவங்­களைப் பாத்தேன். மத்­த­வங்க பார்த்த பார்­வைக்கும், இவங்க பார்த்த பார்­வைக்கும் நிறைய வித்­தி­யாசம் தெரிஞ்­சுச்சு. உங்க பேர் என்­னன்னு கேட்­டாங்க. சொன்னேன். சினி­மாவைப் பார்க்­காம என்­னையே பார்த்து சிரிச்­சுக்­கிட்டு இருந்­தாங்க.

படம் முடிஞ்­சதும் “உன் போன் நம்­பரைக் கொடு”ன்னு கேட்டு வாங்­கி­னாங்க. மறுநாள் பேசி­னாங்க. உங்­க­ளுக்கு கல்­யாணம் ஆயி­டுச்­சான்னு கேட்டேன். இல்­லேன்­னாங்க. “அப்போ என்னைக் கல்­யாணம் பண்­ணிக்­கி­றீங்­களா?”ன்னு கேட்டேன்.

“காமெடி பண்­ணா­தடா… ரெண்டு பேரும் பிரண்ட்ஸா இருப்­போம்ன்னு சொல்­லிட்டு வச்­சுட்­டாங்க. ஆனா, என்­னால இருக்க முடி­யலே. ஒருநாள், அவங்க வீட்­டுல போய் நின்னேன்.. என்னைப் பார்த்­ததும் அதிர்ந்து போயிட்­டாங்க..”-
“எனக்கும் இவன் மேல ஈர்ப்பு இருந்­துச்சு.

ஆனா, இதை­யெல்லாம் வெளி­யில சொல்ல முடி­யுமா? வீட்­டுக்கு வந்­த­வனை பிரண்ட்னு சொல்லி அறி­முகம் செஞ்சேன். அதுக்­குப்­பி­றகு நிறைய வெளி­யில சுத்­துனோம். வித விதமா பரி­சுப்­பொ­ருட்­களை கொடுப்பான்.

அவங்க வீட்­டுக்கும் கூட்­டிக்­கிட்டுப் போவான். யாரும் எங்­களை சந்­தே­கத்­தோட பார்க்க மாட்­டாங்க. ஒரு­முறை, எனக்கு தாலி கட்­டியே ஆக­னும்ன்னு நின்னான். “வெளி­யில வரும்­போது கழட்டி வச்­சி­டனும்”ங்கிற உறு­தி­மொ­ழி­யோட நண்­பர்கள் முன்­னி­லை­யில தாலி கட்­டினேன்.

அதுக்குப் பின்னர், திருட்­டுத்­த­ன­மான வாழ்க்கை வேணான்னு முடிவு செஞ்சோம். இந்த வீட்டைப் பிடிச்சோம். வெளி­யில யாருக்கும் எங்க உறவு தெரி­யாது.

ஆனா, வீட்­டுக்­குள்ள நாங்க கணவன் மனைவி. எம்­மேல உயி­ரையே வச்­சி­ருக்கான் ராஜா. ஒரு பெண்­ணால இப்­ப­டி­யொரு வாழ்க்­கையை எனக்குத் தர முடி­யாது. என்னை உப­ச­ரிக்­கி­ற­தா­கட்டும், எனக்­கான தேவை­களை நிறைவு செய்­யி­ற­தா­கட்டும், அவ்­வ­ளவு சந்­தோ­ஷமா செய்வான்.

எங்க அப்பா, அம்­மாவை அத்தை மாமான்னு தான் கூப்­பி­டுவான். எனக்கு கல்­யா­ணத்தை இன்ட்ரஸ்ட் இல்­லைன்னு வீட்­டுல சொல்­லிட்டேன். ராஜா, நல்லா சமைக்கக் கத்­துக்­கிட்டான். மீன் குழம்பும், தோசையும் செஞ்சா, எண்­ணிக்கை மறந்து சாப்­பி­டலாம்…” என்­கிறார் ஜோன்.

“எனக்­காக, உற­வு­க­ளையே விட்­டுட்டு வாழ்க்­கையை அர்ப்­ப­ணிச்­சி­ருக்­காங்க. இவங்­க­ளுக்கு நான் வேற என்ன செய்ய முடியும்..? காலம் முழு­வதும் அவங்­களை கஷ்­டப்­ப­டாம வச்­சுக்­கனும்..” என்று நெகிழ்ந்து சொல்­கிறார் ராஜா என்­கிற ராஜ­சு­லோ­க்ஷனா.

ஜோன் – ராஜா போல, சென்­னையில் நிறைய தம்­ப­திகள் வாழ்­கி­றார்கள்” என்­கிறார் இந்­தியன் கம்­யூ­னிட்டி வெல்பேர் ஆர்­க­னி­சேஷன் இயக்­குநர் ஹரி­கரன். “ஒருபால் ஈர்ப்பு உள்­ள­வர்கள் பல்­வேறு மட்­டங்­களில் இருக்­கி­றார்கள். பெண் ஈர்ப்­பா­ளர்கள், ஆண் ஈர்ப்­பா­ளர்கள், திரு­நம்­பிகள் என பல­வ­கை­யினர் இருக்­கி­றார்கள்.

மேல்­தட்டு, அடித்­தட்டு வர்க்­கங்­களில் உள்ள ஒருபால் ஈர்ப்­பா­ளர்கள், தக்க இணை­க­ளோடு வாழும் நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. நடுத்­தர வாழ்க்­கையில் உள்ள ஒருபால் ஈர்ப்­பா­ளர்கள் தான் ஒருங்­கி­ணைப்பு இல்­லாமல் வாழ்­கி­றார்கள்.

இதுமாதிரியான வாழ்க்கை வெகுஜன சமூகத்திற்கு அதிர்ச்­சி அளிப்பதாகவே இருக்கும். ஆனால், இந்த விளைவை மாற்ற முடியாது. எனவே தகுந்த விழிப்புணர்வை உருவாக்குவது ஒன்றே நாம் செய்யக்கூடிய செயல்..” என்கிறார் ஹரிகரன்.

இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்த அதிரடி வசதி!!

புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோகளை பகிர்ந்துக்கொள்ளும் வசதியினை தரும் இன்ஸ்டாகிராம் தனது பல மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நேரடி ஒளிபரப்புக்களை செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

குறித்த இவ்வசதி தற்போது முதல் முறையாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள அனைத்து இன்ஸ்டாகிராம் பயனர்களும் இவ் வசதியினை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மேலும் வைரலான நேரடி ஒளிபரப்புக்கள், பிரபல்யமான நேரடி ஒளிபரப்புக்கள் என பல்வேறு வகைகளில் நேரடி ஒளிபரப்புக்களை தெரிவு செய்து பார்த்து மகிழும் வசதியினையும் அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பட்டரியில் இயங்கக்கூடிய அதிநவீன சொகுசுக் கார் அறிமுகம்!!

லூசிட் மோட்டார்ஸ் நிறுவனம், பட்டரியில் இயங்கக்கூடிய அதிநவீன சொகுசுக் காரை அறிமுகம் செய்துள்ளது. செடான் ரகத்தைச் சேர்ந்த இந்த காரின் விலை ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களாகும்.

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் இதனை லூசிட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

100 கிலோ வோட் திறன் கொண்ட பட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. 130 கிலோ வோட் பட்டரியும் பொருத்தத் திட்டமிட்டுள்ளதாக லூசிட் கூறியுள்ளது.

ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலமாக, 400 மைல் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
600 முதல் 1000 குதிரைத்திறன் கொண்டதாக இந்த கார் இருக்கும்.

2.5 நொடிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் என்ற வேகத்தை எட்டக்கூடிய சிறப்பம்சம் கொண்ட உலகின் முதல் பேட்டரி கார் இது எனவும் லூசிட் மோட்டார்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த காருக்கான பட்டரியை சாம்சங் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா செட்டிகுளம் மக்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் வீட்டுத்திட்டம் கிடைக்கவில்லை என்று உண்ணாவிரதம் மேற்கொண்ட மக்கள் உண்ணாவிரதத்தினைக் கைவிட்டுள்ளனர்.

இன்று(15.12.2016) காலை 8.30 மணிமுதல் வவுனியா செட்டிகுளம் பகுதியில் வீட்டுத்திட்டத்தில் அரச அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகவும் தற்போது கிடைத்த வீட்டுத்திட்டத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உண்ணாவிரத்தினை மேற்கொண்டனர்.

எனினும் இன்று இரவு 8 மணியுடன் உண்ணாவிரத்த்தில் ஈடுபட்டவர்கள் தமது உண்ணாவிரத்தினைக் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

செட்டிகுளம் பிரதேச செயலாளருடன் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடுத்து கிடைக்கவிருக்கும் வீட்டுத்திட்டத்தில் வீடுகள் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளர் உண்ணாவிரத்திலிருக்கும் பகுதிக்குச் சென்று அப்பகுதி மக்களுடன் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் செய்தியினை தெரிவித்ததையடுத்து அமைச்சருடன் உண்ணாவிரதத்திலிருக்கும் மக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அமைச்சர் வாக்குறுதியளித்ததையடுத்து உண்ணாவிரத்தில் ஈடுபட்டவர்கள் தமது உண்ணாவிரத்தினைக் கைவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்தி  : வவுனியா செட்டிகுளம் மக்கள் தீர்வு கிடைக்குவரை உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

கிளிநொச்சியில் மது உற்பத்தி நிலையம் முற்றுகை!!

 
பெரியகுளம் – இரட்டைப்பனை பகுதியில் இயங்கிவந்த மது உற்பத்தி நிலையம் ஒன்று இன்று(15) பிற்பகல் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்ன தலைமையில் விசேட குழுவினரால் இந்த நிலையம் முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையம் தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்னனின் விசேட குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து குழுவினர் அந்த பகுதிக்கு சென்று சுற்றிவளைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் போது, சுமார் 55550ml மது, ஆறு பெரல்களில் இருந்த 674750ml கோடா மற்றும் மது உற்பத்தி செய்வதற்கான உபகரணங்கள் என்பன புளியம்பொக்கணை ,பெரியகுளம் இரட்டைப்பனை பகுதியில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

மேலும் இரு சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளதோடு மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நாளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கந்தளாயில் பிடிபட்ட பொன் நிற வௌவால்!!

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பனைமரக்குளம் (தல்கஸ்வெவ) பிரதேசத்தில் அரிய வகை வௌவால் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வௌவால் சோளம் பயிர் செய்யப்பட்டிருந்த சேனையில் காணப்பட்டுள்ளது. கடந்த பௌர்ணமி தினத்தில் பிடிபட்ட இந்த வௌவால் பொன் நிறமானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வௌவாலை பிடித்தவர்கள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கௌதமியை தாக்கினாரா கமல்?

கமல்ஹாசன் தற்போது சபாஷ் நாயுடு படப்பிடிப்பில் உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகின்றது.

இந்நிலையில் கமல் அவ்வப்போது தன் டுவிட்டர் பக்கத்தில் ஏதாவது கருத்துக்கள் தெரிவிப்பார்.
அப்படித்தான் சமீபத்தில் ஒரு கருத்தை கூறியுள்ளார், அவை எதற்கு என்று தெரியாமல் ரசிகர்களே குழம்பி போய் உள்ளனர்.

ஆனால் பலரும் இந்த பதிவிற்கு கீழ் இது கௌதமிக்காக தான், அவரின் சமீபத்திய செயல்களை கண்டிக்கும் விதம் தான் இந்த பதிவு என கூறுகின்றனர்.

கௌதமி மோடியை சந்தித்தது, ஜெயலலிதா மரணம் குறித்து சமீபத்தில் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

ஆண்டின் இறுதி பௌர்ணமியில் பூத்த அரியவகை மலர் : மகிழ்ச்சியில் மக்கள்!!

அநுராதபுரம் – மஹாமெலுனா பகுதி விகாரைக்கு அருகில் அரியவகை மலர் ஒன்று பாரிய அளவில் மலர்ந்துள்ளது.

இந்த மலர் சிங்களத்தில் “கடுபுல் மலர்” என அழைக்கப்படுகின்றது, இதனால் அந்தப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

பௌர்ணமி தினத்தன்று இந்த மலர் மலர்ந்துள்ளதாகவும், அனைவரும் இதை நாடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருடத்தின் இறுதி பௌர்ணமி தினத்தில் பூஜை வழிப்பாடுகளில் கலந்துக் கொள்ள வந்தவர்களுக்கு இந்த அரிய வகை மலரை காண முடிந்துள்ளது.

அங்குள்ள பிக்குகள் அந்த மலர்களை பரித்து பூஜை வழிப்பாடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரவில் மலர்ந்து வாசனை கொடுத்து விட்டு, இரவு நேரத்திலேயே வாடிப்போகும் அரிய வகை மலர் இதுவாகும்.

வவுனியாவில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா!!

 
தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா வவுனியாவில் இன்று (15.12.2016) காலை 9.30 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உள்ளுராட்சி உதவி அணையாளர் திரு. அசங்க காஞ்சன குமார, சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் எம்.இராதாகிருஸ்ணன், திருமதி.சுகந்தி கிஸோர்(வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை அரம்பித்து வைத்தனர்.

இன் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள், மாற்றுத்திறனாளி மாணவர்களின் நடனம் போன்றன இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இறுதியில் சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. நிகழ்வில் அதிபர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா ஓமந்தையில் மரக்கடத்தில் இளைஞன் கைது!!

 
வவுனியா ஒமந்தை கல்லுப்போட்டகுள காட்டுப்பகுதியில் இன்று (15.12.2016) காலை. 7.30 மணியளவில் மரக்கடத்திலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா ஒமந்தை அலைகல்லுபோட்டகுளத்திலிருந்து இன்று (15.12.2016) காலை 7.30மணியளவில் 42 பனை மரக்குற்றிகளை ஒமந்தைக்கு கடத்த முற்பட்ட சமயத்தில் ஒமந்தை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 26 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்திய போது 28.12.2016ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இம் மரக்குற்றிகளின் பெறுமதி ஒன்றரை லட்சமென பொலிஸார் தெரிவித்தனர்.

இப்படியும் குழந்தை பிறக்குமா : உலகின் முதல் அதிசய தாயார் இவர் தான்!!

உலகிலேயே முதன் முதலாக கருப்பப்பை திசுக்கள் நீக்கிய பிறகும் இளம்பெண் ஒருவர் ஆரோக்கியமாக குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய தலைநகரான லண்டனில் Moaza Al Matrooshi என்ற 24 வயதான பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார்.

இப்பெண் பிறந்த நாள் முதல் பிறப்புறுப்பு வழியாக அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்படும் நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்ட பிறகு அவர் பருவமடைவதற்கு முன்னதாக 9 வயதாக இருந்தபோது அவரது கருப்பையில் உள்ள சில திசுக்கள் நீக்கப்பட்டது.

பின்னர், இந்த திசுக்களை நைட்ரஜன் திரவத்தில் பனித்துகள்கள் போல் பதப்படுத்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக நிகழ்ந்த சிகிச்சைகளால் அப்பெண் பெரும் சிரமத்திற்கு உள்ளானர்.

இந்நிலையில், கடந்தாண்டு பதப்படுத்தப்பட்ட திசுக்களை மீண்டும் உயிர்ப்பித்து இளம்பெண்ணின் கருப்பையுடன் இணைத்து சிகிச்சை செய்யப்பட்டது.

இச்சிகிச்சையை தொடர்ந்து அவரது கருப்பையில் கருமுட்டைகள் வளர தொடங்கின. குழந்த பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் கணவன், மனைவி காத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கருப்பையில் முட்டைகள் ஆரோக்கியமாக வளர்ச்சி அடைந்ததை தொடர்ந்து நேற்று போர்ட்லாண்ட் மருத்துவமனையில் IVR மூலம் அப்பெண் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

மருத்துவ உலகில் முதல் முறையாக கருப்பை திசுக்கள் நீக்கப்பட்டு, பின்னர் அதன் மூலம் ஆரோக்கியமாக குழந்த பெற்றெடுத்து முதல் தாயார் என்ற பெயரை Moaza Al Matrooshi பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாய்த் தர்க்கத்தால் ஏற்பட்ட விபரீதம்!!

ஓபநாயக்க – தொலகந்த பகுதியில் இன்று (15.12) இருவருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அதிகரித்ததையடுத்து ஒருவர் மற்றைய நபரை கண்ணாடி போத்தல் ஒன்றை உடைத்து தாக்கியுள்ளார்.

படுகாயத்திற்கு உட்பட்ட நபரை பெல்மடுல்லை வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்து உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்குரெல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய காயமடைந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் கஹாவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து டன் கணக்கில் குப்பைகளை இறக்குமதி செய்யும் ஸ்வீடன்!!

வெளிநாடுகளில் இருந்து ஸ்வீடன் குப்பைகளை இறக்குமதி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்வீடன் நாட்டின் மின்சார உற்பத்தி பெருமளவு குப்பைகளில் இருந்தே மேற்கொள்ளப்படுகிறது. அங்குள்ள தனியார் நிறுவனங்கள் கழிவை எரித்தால் கூட அதிலிருந்து மின்சாரம் தயாரிக்க அரசாங்கத்திற்கு உதவ வேண்டும் எனும் கொள்கை செயற்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், உள்நாட்டில் கிடைத்த குப்பைகளை மறுசுழற்சி செய்து முடித்துவிட்ட ஸ்வீடன், தற்போது வெளிநாடுகளில் இருந்து டன் கணக்கில் குப்பைகளை இறக்குமதி செய்து அதிலிருந்து மின்சாரம் தயாரித்து வருகிறது.

இந்த நடைமுறையை ”மறுசுழற்சி புரட்சி” என வர்ணிக்கிறது ஐரோப்பா.

ஸ்வீடனில் ஆண்டுதோறும் மக்களால் கொட்டப்படுகின்ற குப்பைகளில் 99 சதவிகிதக் குப்பைகள் மறுசுழற்சிக்கும் இன்னபிற ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கும் செல்கின்றன.

2011 இல் வெறும் 97 சதவிகிதமாக இருந்த இந்த அளவை இப்போது 99 சதவிகிதமாக ஆக்கியிருக்கிறார்கள்.

சிறு­மி­க­ளுக்கு போதைப்­பொருள் கொடுத்து பாலியல் துஷ்­பி­ர­யோ­கம் : பெண்­ணுக்கு 9 வருட சிறை!!

சிறு­மி­க­ளுக்கு போதைப் பொருட்­களைக் கொடுத்து அவர்­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் குழு­வொன்றைச் சேர்ந்த பெண் ஒரு­வ­ருக்கு பிரித்­தா­னிய நீதி­மன்றம் 9 வருட சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது.

32 வய­தான லெய்லா கஸம் எனும் இப்­ பெண்ணும் அவரின் காத­ல­ரான போல் மைக்கல் சில்­வர்தோர்ன் (36) என்­ப­வரும் லண்­டனில் நடை­பெற்ற கேளிக்கை விருந்­தொன்­றின்­போது 15 வய­தான சிறு­மிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இவர்கள் கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்ட பின்னர் கடந்த மார்ச் மாதம் தலை­ம­றை­வா­கினர். ஸ்பெய்­னுக்கு தப்பிச் சென்ற லெய்லா கஸம், அங்­குள்ள பண்­ணை­யொன்றில் பணி­யாற்றி வந்தார்.

இதற்­கி­டையில் லெய்லா கஸ­மையும் போல் மைக்கல் சில்­வர்­தோர்­னையும் கண்­டு­பி­டிப்­ப­தற்கு உத­வு­மாறு பிரித்­தா­னிய பொலிஸார் கோரிக்கை விடுத்­தனர்.

இதை­ய­டுத்து, லெய்லா பணி­யாற்­றிய பண்­ணையின் உரி­மை­யாளர் அவரை அடை­யாளம் கண்டு அதி­கா­ரி­க­ளுக்கு தகவல் தெரி­வித்தார். அதன்பின் பிரிட்­ட­னுக்கு அழைத்துவரப்­பட்ட லெய்லா கஸ­முக்கு 9 வருட சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அவரின் காதலரான போல் மைக்கல் சில்வர் தோர்னை அதிகாரிகள் தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.

திமிங்கிலங்களுடன் அழகு ராணிகள் நீந்தியதால் சர்ச்சை!!

மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ராணி போட்­டியில் பங்­கு­பற்றும் அழ­கு­ரா­ணி­களை சுறாக்­க­ளுடன் நீந்த அனு­ம­தித்­தமை தொடர்­பாக சர்ச்சை ஏற்­பட்­டுள்­ளது.

2016 மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ராணி (பிர­பஞ்ச அழ­கு­ராணி) போட்டி பிலிப்­பைன்ஸில் நடை­பெ­ற­வுள்­ளது. இப்­போட்­டியில் பங்­கு­பற்றும் பல நாடு­களின் அழ­கு­ரா­ணிகள் பலர் பிலிப்­பைன்ஸில் சுற்­று­லாவில் ஈடு­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில், இவர்­களில் 12 அழ­கு­ரா­ணிகள் பிலிப்­பைன்ஸின் செபு மாகா­ணத்­தி­லுள்ள ஒஸ்லொப் நகர கடற்­ப­கு­தியில், சுறாக்­க­ளுடன் பார்­வை­யி­டு­வ­தற்­காக போட்டி ஏற்­பாட்­டா­ளர்­களால் அழைத்துச் செல்­லப்­பட்­டனர்.

ஒஸ்லொப் மாந­கர சபையும் மிஸ் யூனிவர்ஸ் அமைப்பும் இணைந்து இச்­ சுற்­று­லாவை ஏற்­பாடு செய்­தி­ருந்­தன. சிறிய திமிங்­கி­ல­மொன்­றுடன் பிலிப்பைன்ஸ் அழ­கு­ராணி மெக்ஸைன் மெதினா நீந்தும் புகைப்­ப­டங்­களும் வெளி­யா­கின.

இவ் ­வி­டயம் விமர்­ச­னங்­க­ளுக்கு வழி­வ­குத்­துள்­ளது. அழிந்­து­வரும் நிலை­யிலுள்ள இனத்தைச் சேர்ந்த திமிங்­கில சுறா எனும் சுறாக்­க­ளுடன் நீந்­து­வ­தற்கு அழ­கு­ரா­ணி­களை அனு­ம­தித்­தமை நெறி­மு­றை­களை மீறிய ஒரு நட­வ­டிக்கை என சுற்­றாடல் பாது­காப்பு ஆர்­வ­லர்­களும் முன்னாள் அழ­கு­ரா­ணி­களும் விமர்­சித்துள்­ளனர்.

மனிதத் தலை­யீ­டுகள் கார­ணமாக இச்­ சு­றாக்­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. திமிங்­கிலச் சுறாக்­க­ளுடன் மனிதர்கள் நீந்துவது நீண்ட காலமாக விமர்சிக் கப்படுகிறது. இதை ஒரு சுற்றாடல் சுற்றுலாத் திட்டமாக கருத முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகளின் திருமணப் பரிசாக ஏழைகளுக்கு 90 வீடுகளைக் கட்டிக்கொடுத்த தொழிலதிபர்!!

இந்தியாவின் மராட்டியத்தில் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணத்தை முன்னிட்டு 90 ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.

மராட்டியத்தின் அவுரங்கபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அஜய் முனாத் என்பவரே தன் மகளின் திருமணப் பரிசாக வீடற்றவர்கள் 90 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.

ஆடை நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் அஜய், சுமார் 1.5 கோடி செலவில் இந்த வீடுகளை நிர்மாணித்துள்ளார்.

சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வீடுகளைப் பெறுபவர்கள் ஏழையாக இருக்க வேண்டும், குடிசையில் வசிப்பவராக இருக்க வேண்டும், போதைக்கு அடிமையாகாதவராக இருக்க வேண்டும் எனும் மூன்று நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன.

இதன் அடிப்படையிலேயே பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தனது மகளின் திருமண வைபவத்தை சிறப்பிக்க, இந்த தந்தை மேற்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது.