வவுனியா செட்டிகுளம் மக்கள் தீர்வு கிடைக்குவரை உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

 
வவுனியா செட்டிக்குளம் அடம்பன்குளம் பிரதேச மக்கள் இன்று (15.12.2016) செட்டிக்குளம் வீதியிலுள்ள அம்மன் ஆலயத்திலினுள் காலை 8.30 மணி தொடக்கம் தொடர் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது கிராமத்திற்கு வழங்கப்படவிருந்த வீட்டுத்திட்டம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் இவ் வீட்டுத்திட்டம் வேறு கிராமத்தினை நோக்கி செல்வதாகவும் தெரிவித்து இக் கிராமத்தை சேர்ந்த 22 குடும்பத்தை சேர்ந்தவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தேர்தல் காலங்களில் மட்டுமா தெரியும்? , எமது மதிப்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களே எங்கள் கிராமம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? எமது கிராமத்திற்கான முடிவு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஐயா வருகை தந்து எமக்கு உறுதியளிக்க வேண்டும் என பல்வேறு பாதாதைகளை தாங்கிய வண்ணம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் சோலைவரி அறவிடும் நடவடிக்கை ஆரம்பம்!!

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக சோலைவரி அறவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர்.தயாபரன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் முன்வந்து சோலைவரியை செலுத்த முன்வர வேண்டும், வவுனியா நகரசபைக்கு வருமானம் கிடைத்தால் மட்டுமே எமது நகரத்தினை அழகுபடுத்த முடியும் எனவே நிலுவையிலுள்ள வருமானவரி, சோலைவரியினை அறவிடுவதற்கு எமது உத்தியோகத்தர்கள், நடுக்கட்டல் உத்தியோகத்தர்கள் புதிதாக இணைக்கப்பட்டு வீடுவீடாகச் சென்று நிலுவையிலுள்ள சோலைவரிப் பணத்தினை அறவிடும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும்,

கிட்டத்தட்ட 40 மில்லியன் ரூபாய்க்கு மேல் சோலைவரிப் பணம் நிலுவையிலுள்ளதாகவும் இப்பணத்தினை செலுத்தும் பட்சத்தில் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதியினை மேலும் அழகுபடுத்த முடியும் என்றும் சோலைவரியினை செலுத்தும் கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதுடன் சோலைவரி யினை செலுத்தத்தவறின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நகரசபை செயலாளர் மேலும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற பெரும் போராட்டமே நடத்திய அமெரிக்கா!!

பிர­பா­க­ரனைக் காப்­பாற்ற அமெ­ரிக்கா பெரும் முயற்­சித்­தது என்றும் இதற்­காக இலங்­கையை மிரட்­டவும் செய்­தது எனவும் புதிய புத்­தகம் ஒன் றில் பர­ப­ரப்பு தகவல் வெளி­யாகி யுள்­ளது.

தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக் கத் தலைவர் பிர­பா­கரன் மற்றும் தள­ப­திகளை யுத்த களத்தில் இருந்து பாது­காப்­பாக வெளி­யேற்ற கடைசி நேரங்­களில் அமெ­ரிக்கா போராட்டம் நடத்­தி­ய­தா­கவும் இந்தப் புத்­த­கத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பிர­பா­கரன் உள்­ளிட்ட தள­ப­தி­களை காப்­பாற்ற அமெ­ரிக்­காவும் நோர்­வே யும் முயற்­சித்­தன. இதை இந்­தியா எதிர் த்­தது. இந்­தி­யாவின் எதிர்ப்பை தமி­ழக தலை­வர்­களும் ஆத­ரித்­தனர் என்று இந்­தி­யாவின் முன்னாள் தேசிய பாது­காப்பு செயலர் சிவ்­சங்கர் மேனன் தம்­மு­டைய புத்­த­கத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.

இந்த நிலையில் அமெ­ரிக்கா வெளி­யு­ற­வுத்­துறை அதி­கா­ரியும் கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூது­ர­கத்தில் பணி­யாற்­றி­ய­வ­ரு­மான டயா கேமேஜ் “Tamil Tigers’ Debt to America: US Foreign – Policy Adventurism & Sri Lanka’s Dilemma” என்ற தலைப்பில் ஒரு புத்­தகம் எழு­தி­யுள்ளார்.

அதில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் தொடர்­பான அமெ­ரிக்­காவின் நிலைப்­பாடு விரி­வாக விவ­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்த நாட்­களின் போது பிர­பா­கரன் மற்றும் தள­ப­தி­களைக் காப்­பாற்ற அமெ­ரிக்கா பெரும் முயற்சி எடுத்­தது குறித்து இந்த நூலில் விவ­ரிக்­கப்­பட்­டுள்­ளது. பாது­காப்பு வல­யங்கள் என அறி­விக்­கப்­பட்ட பகு­தி­களின் மீது இலங்கை இரா­ணுவம் தொடர்ந்தும் தாக்­குதல் நடத்தக் கூடாது எனவும் அமெ­ரிக்கா எச்­ச­ரித்­த­தா­கவும் அதில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கி­றது.

ஒரு கட்­டத்தில் இலங்கை மீது சர்­வ­தேச நிதியம் மூல­மான நெருக்­கடி தடை­க­ளையும் அப்­போ­தைய வெளி­யு­றவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஏற்­ப­டுத்தி பணிய வைக்­கவும் முனைந்தார் எனவும் அந்த நூலில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில் என்­னதான் விடு­தலைப் புலி­களை பயங்­க­ர­வாத அமைப்­பாக தடை செய்­தி­ருந்­தாலும் அந்த அமைப்­பினால் அமெ­ரிக்­கா­வுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என கரு­தி­யது. அதே நேரத்தில் இலங்­கையை இரண்­டாகப் பிரிக்­கவும் அமெ­ரிக்கா விரும்­ப­வில்லை. தமிழர் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம் உயிர்ப்­புடன் இருக்க வேண்டும் எனவும் அமெ­ரிக்கா விரும்­பி­யது எனவும் அந்தப் புத்­த­கத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை இந்­திய முன்னாள் பாது­காப்பு ஆலோ­சகர் சிவ் சங்கர் மேனனின் Choices: Inside the Making of India’s Foreign Policy என்ற நூலில் இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது பிர­பா­க­ரனை காப்­பாற்ற அமெ­ரிக்­காவும் நோர்­வேயும் முயற்­சித்த போது அதனை இந்­தியா எதிர்த்­தது என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது

இந்­திய மத்­திய அர­சாங்­கத்தின் எதிர்ப்­பினை தமி­ழக அர­சியல் தலை­வர்கள் தனிப்­பட்ட ரீதியில் வர­வேற்­றனர். இந்­தி­யாவில் வாழும் தமிழ்த் தலை­வர்­களை பௌதீக ரீதியில் இல்­லாமல் செய்­வதன் மூலமே பிர­பா­கரன் தமி­ழீ­ழத்தை உரு­வாக்­குவார் என்­ப­தனை தமி­ழக அர­சியல் தலை­மைகள் புரிந்து வைத்­தி­ருந்­தனர்.

இலங்­கையில் தமிழ் அர­சியல் தலை­மை­களை புலிகள் கொலை செய்­தி­ருந்­தனர். இலங்கை விவ­கா­ரத்தில் இந்­திய மத்­திய அர­சாங்­கத்­திற்கும் தமி­ழக மாநில அர­சியல் தலை­மை­க­ளுக்கும் இடையில் முரண்­பா­டுகள் காணப்­ப­டு­வ­தாக வெளியில் தென்­பட்­டாலும், இரண்டு தரப்­புக்­களும் ஒரே வித­மான கொள்­கை­களை பின்­பற்­றின .திரா­விட முன்­னேற்றக் கழ­கமும் அனைத்து இந்­திய அண்ணா திரா­விட முன்­னேற்றக் கழ­கமும் ஒரே வித­மான கொள்­கை­க­ளையே பின்­பற்­றின. ராஜீவ் காந்­தியின் கொலையின் பின்னர் ஒட்டு மொத்த இந்­தி­யாவும் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் தொடர்பில் ஒரு­மித்த நிலைப்­பாட்­டுடன் செயற்­பட்­டது.

வெற்றி எட்டிப் பிடிக்கும் தூரத்தில் காணப்­பட்ட தரு­ணத்தில் தமி­ழீழ விடு­தலைப் புலித் தலை­மை­களை பாது­காப்­பாக வெளி­யேற்­று­வ­தற்கு மஹிந்த ராஜ­பக்ஸ இணங்­க­வில்லை. மேற்­கு­லக நாடுகள் அதற்கு முயற்­சித்­தன.

பிர­பா­கரன் நடை­முறைச் சாத்­தி­ய­மில்லா கொள்­கை­க­ளையும் அணு­கு­மு­றை­க­ளையும் பின்­பற்­றிய கார­ணத்தால் புலிகள் இயக்கம் அழிந்­த­துடன் அவரும் உயி­ரி­ழக்க நேரிட்­டது.

இறுதிக் கட்ட யுத்தம் இன்னும் தாம­த­மா­கி­யி­ருந்தால் உயிர்ச் சேதங்கள் மேலும் உயர்­வ­டைந்­தி­ருக்­கலாம். பொது­மக்கள் கொல்­லப்­பட்­டமை குறித்து விமர்­ச­னங்கள் எழுந்­தாலும், இவ்­வா­றான யுத்­தங்­களின் போது உயிர்ச் சேதங்­களை தவிர்க்க முடி­யாது.

200 பில்­லியன் டொலர் செலவு

தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்­திற்­காக 200 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் செல­வி­டப்­பட்­டுள்­ளது. 2009ஆம் ஆண்டில் நிறை­வ­டைந்த உள்­நாட்டு யுத்­தத்­திற்­காக இந்­த­ளவு தொகை செல­வி­டப்­பட்­டுள்­ளது. இந்த செல­வு­க­ளுக்குள் சந்­தர்ப்ப செலவு பற்­றிய விப­ரங்கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை.

தெற்­கா­சி­யாவின் மிகவும் வேக­மாக அபி­வி­ருத்தி அடைந்து வரும் பொரு­ளா­தா­ரங்­களில் ஒன்­றாக இலங்­கையின் பொரு­ளா­தாரம் காணப்­பட்­டது .

இடம்­பெற்ற மோதல்­களில் போரா­ளிகள் உள்­ளிட்ட இரண்டு தரப்­பிலும் 100,000 பேர் வரையில் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

இதில் 30000 முதல் 50000 வரையிலானவர்கள் பொதுமக்களாவர், 1155 பேர் இந்திய அமைதி காக்கும் படையினராவர்.

யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டிய வகையில் அமைந்ததிருந்தன. மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் யுத்த வெற்றியின் பின்னர் அதனை நல்லிணக்கத்தை நோக்கியோ சமாதானத்தை  நோக்கியோ நகர்த்த முயற்சிக்கவில்லை. சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய முனைப்புக் காட்டும் தமிழ்த் தலைவர்களும் இருக்கவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்.

-வீரகேசரி-

வவுனியாவில் இளைஞர்களுடன் புதிய அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல்!!

 
புதிய அரசியலமைப்பில் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பான விரிவுரைகளும் கலந்துரையாடலும் நேற்று முன்தினம் (13.12.2016) வவுனியா மாவட்ட அரச அதிபரின் கேட்போர் கூடத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் வளவாளர்களாக யாழ் பல்கலைக்கழகத்தின் சட்ட பீட விரிவுரையாளர் திருமதி.கோ.மதன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன், வட மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் திரு.தவராஜா ஆகியோர் விரிவுரைகளுடனான கருத்துகள் அறியும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரில் வீதி சமிஞ்சை விளக்குகளை பொருத்துமாறு கோரிக்கை!!

அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை குறைக்க வவுனியா நகரப்பகுதியில் பிரதான வீதிகளில் வீதி சமிஞ்சை விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய நெடுஞ்சாலை உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்லவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

வவுனியா நகரம் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பிரதான நகரமாகும். வடக்கிற்கான நுளைவு வாயிலாக காணப்படும் இந்த நகரினூடாக நாளாந்தம் பெருமளவிலான வாகனங்கள் பயணிக்கின்றன.

இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக முக்கிய சந்திகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன.

மேலும் இதனை கருத்தில் கொண்டு வவுனியா நகரில் காணப்படும் முக்கிய சந்திகளான மணிக்கூட்டுக்கோபுரச் சந்தி, வைத்தியசாலை சுற்றுவட்டம் மற்றும் கச்சேரி சுற்றுவட்டம் என்பவற்றில் வீதிபோக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கில் வீதி சமிஞ்சை விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

118 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கும் ஓர் ஆலமரம்!!

நாம் வாழும் இந்த உலகில் விசித்திரங்களுக்கும், வினோதங்களுக்கும் மட்டும் என்றுமே பஞ்சம் இல்லை. உலகின் ஏதோ ஒரு இடத்தில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

அந்த வகையில் இன்றும் ஒரு விசித்திர சம்பவம் பற்றி செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும் இது சற்று வித்தியாசமான சம்பவம் என்றே கூறவேண்டும்.

“கைதுகள்” உலகில் மனிதர்களையும், விலங்குகளையும், பறவைகளையும் கைதுசெய்வதை பார்த்திருக்கின்றோம், கேள்வியுற்றிருக்கின்றோம். ஆனால் ஒரு மரத்தை 118 வருடங்களாக கைது செய்து வைத்திருக்கும் விசித்திர சம்பவத்தை கேள்வியுற்றிருக்கின்றீர்களா?

கேட்பதற்கு நம்பமுடியாத விடயமாக இருந்தாலும் இது உண்மை. இந்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இருக்கும் மாவட்டமே “லண்டி கோட்டல்”. லண்டி கோட்டலில் இருக்கும் ஒரு இராணுவ முகாமில் தான் ஒரு ஆலமரம் 118 வருடங்களுக்கும் மேலாக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அப்படி என்ன காரணத்திற்காக இந்த மரத்தை சிறைப்பிடித்து வைத்திருக்கின்றனர் என்று தெரிய வேண்டுமா. அதற்கும் அவர்கள் கூறும் பதில் விசித்திரமாக இருக்கிறது.

பல வருடங்களுக்கு முன்னர் ஜேம்ஸ் ஸ்குவிட் என்பவர் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் .

குடிபோதையில் இருந்த இவர் “மரம் தன்னை நோக்கி வந்ததாக” கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த அதிகாரி. அந்த மரத்திற்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என அதை கைது செய்துள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து பல காலங்கள் கடந்த பிறகும் கூட இன்றளவும் அந்த மரம் சங்கிலிகளைக் கொண்டு கட்டி வைத்துள்ளார்கள்.

பிரிட்டிஷ் காலத்தில், இந்த ஆணையை மீறி யாரேனும் செயற்பட்டால், அவர்களுக்கும் இதே தண்டனை என பிரிட்டிஷ் அதிகாரி கண்டித்தும் இருந்தாராம். இதுதான் அந்த மரம் சிறைப்பிடிக்கப்பட்ட சோக கதை.

விசித்திரமான காரணத்தால் இந்த மரத்தை கைது செய்தமையால் இப்போது இந்த இடம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக மாறி இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வட கொரியாவில் நடைபெறும் கொடூரம் : கண்ணீர் விட்டு கதறும் குழந்தைகள்!!

வடகொரியாவில் குழந்தைகளை கடும் வெயிலில் இரும்பு தண்டவளப் பாதைகளில் உள்ள பழுதுகளை சரிசெய்ய வைப்பது, கற்களை உடைக்க வைப்பது போன்ற வேலைகளை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தும் செயல் பார்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வட கொரியாவின் தற்போதைய அதிபராக உள்ளவர் Kim Jong-un. இவர் அண்மையில் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஏவுகணைகள் மற்றும் அணுஅயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் Kim Jong-un தான் செய்வது தான் சரி என்பது போல் இது போன்ற சோதனைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் உலக நாடுகள் மத்தியில் தாங்கள் வலிமையானவர்கள் என்றும் குறிப்பாக அமெரிக்கா, தென்கொரியா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுவரை மூன்று சோதனைகளை செய்துள்ள அந்த அரசு நான்காவது அணு ஆயுத சோதனையை வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வட கொரியாவில் சுமார் ஐந்து முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகள் ஏராளமானோர் கடும் வெயிலில் அங்குள்ள இரயில்வே தண்டவாளங்களில் உள்ள பழுதுகளை சரி பார்க்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் அவர்கள் அங்குள்ள மலைகளை சிறிது சிறிதாக சுத்தியல் கொண்டு பெயர்த்து எடுக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாள் ஒன்றிற்கு அவர்கள் பத்து மணி நேரம் வரை வேலை செய்வதாக கூறப்படுகிறது.

இக்குழந்தைகள் வேலை செய்யும் இடம் அந்த நாட்டு அதிபர் Kim Jong-un இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு சில குழந்தைகள் வேலை செய்யும் போது வலி தாங்க முடியாமல் அழும் காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வடகோரியாவின் சர்வாதிகாரம் என்றும் மனித உரிமை மீறல்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் ஏற்படவுள்ள வான்முட்டும் அதிசயம் : ஆச்சரியத்தில் உலக நாடுகள்!!

இலங்கையின் உயரமான கட்டிடம் என்றால் கொழும்பில் உள்ள 40 மாடியிலான உலக வர்த்தக மையமே நினைவிற்கு வரும்.

இதேபோன்று நான்கு மடங்கு உயரமான கட்டிடம் ஒன்று உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாம் நினைத்து கூட பார்க்க முடியாத மிக உயரமான கட்டிடம் ஒன்று இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

2017ஆம் ஆண்டில் நிர்மாணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஆயத்தமாகும் WCC அல்லது World Capital Centre என்ற கட்டிடம் தொடர்பிலான தகவல்களே தற்போது வெளியாகியுள்ளது.

625 மீற்றர் கொண்ட இந்த கட்டிடத்தில் 117 மாடிகள் நிர்மாணிக்கப்படவுள்ளது. இலங்கையின் உயரமான கட்டிடம் என கூறப்படும் உலக வர்த்தக மையத்தின் நீளம் 152 மீற்றராகும்.

அதேபோன்று தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரம் 350 மீற்றராகும். அதனை தவிர கொழும்பில் ஆங்காங்கே நிர்மாணிக்கப்படும் அல்லது நிர்மாணிப்புகளை ஆரம்பித்துள்ள அனைத்து கட்டிடங்களுமே 300 மீற்றர் நீளத்திற்குள் நிறைவடைகின்றது.

அப்படி என்றால் இந்த 625 மீற்றரிலான WCC கட்டிடம் எவ்வளவு பெரியதென தற்போது சிந்தித்துக் கொள்ள முடியும்.

அதேபோன்று WCC கட்டடம் உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட கட்டிடமாகும். WCC கட்டிடம் 800,000 சதுர அடியாகும். கோபுரமாக பார்த்தால் உலகின் அதிக சதுர அடிகளை கொண்ட கட்டிடம் இந்த WCC கட்டிடமாகும்.

கட்டி முடித்த பின்னர் இலங்கையின் மிகப்பெரிய கட்டிடமாக மாறும் WCC கோபுரம், உலகின் உயரமான கட்டிடங்களில் 9வது இடத்தை பிடித்துக் கொள்ளும்.

முழு உலகிற்கும் தெரியும் வகையில் இலங்கை வானில் ஏறும் இந்த கட்டிடம் இலங்கையின் பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றமடையும்.

முழுமையான கொழும்பு நகரம் போன்று கடலும் அழகாக தெரியும் வகையில் நிர்மாணிக்கப்படுகின்ற WCC கோபுரத்தில் 7 நட்சத்திர ஹோட்டல், வீட்டுத்தொகுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் உட்பட பொருளாதார கேந்திர நிலையத்திற்கு அவசியமான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும்.

வங்கிகள், கல்வி நிறுவனங்கள், மாநாட்டு மண்டபங்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்றவைகளுக்காக 50 பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள WCC கோபுரத்தின் உள் 3000 கடைகளை கொண்ட இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக மையமும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் அதிநவீன பாதுகாப்பு வசதியுடன் கார் அறிமுகம்!!

இலங்கையில் புதிய வகையான அதிநவீன கார் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

XC90, V40, S60, XC60 போன்ற மாதிரி கார்களை அறிமுகம் செய்து விருது பெற்ற வோல்வோ கார்ஸ் நிறுவனம், வோல்வே S90 என்ற புதிய மாதிரி கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ரேடார் கருவியை அடிப்படையாக கொண்ட பாதுகாப்பு அமைப்பினை குறித்த கார் கொண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வால்வோ S90 காரானது உலக அங்கீகாரம் பெற்றுள்ளதுடன் அண்மையில் ஜெனிவாவில் இடம்பெற்ற மோட்டர் காட்சியில் விருதையும் பெற்றுள்ளது.

குறித்த வோல்வோ காரில் பல அதிநவீன வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளமை சிறப்பம்சமாகும்.

இருளில் மூழ்கும் ஈஃபிள் கோபுரம் : காரணம் என்ன?

உலக அதிசயங்களில் ஒன்றாக காணப்படும் ஈஃபிள் கோபுரம் இன்று இருளில் மூழ்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நகர முதல்வர் ஆன் இல்தாகோ இதனை தெரிவித்துள்ளார்.

சிரிய நாட்டு மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கிலும், அந்நாட்டு மக்கள் யுத்த சூழ்நிலையில் இருந்து வெளிவரவேண்டும் என்பதற்காகவும் ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரிய நாட்டில் இடம்பெறும் உள்நாட்டு யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், பலரும் நாட்டை விட்டு வெளியேறிவருன்றனர்.

இந்நிலையிலேயே, இன்றைய தினம் ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அனைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த இரண்டு நாட்களாக ஈஃபிள் கோபுர ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக பொது மக்களின் பார்வைக்காக ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை : டெங்கு நோயினால் மரணங்கள் அதிகரிக்கும் ஆபத்து!!

நாட்டில் டெங்கு நோய் தொற்று காரணமாக 47,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் டெங்கு நோய் பிரிவின் ஆய்வுக்கமைய குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தைக் காட்டிலும் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பன் மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கடந்த வருடம் டெங்கு நேயாளர்களின் எண்ணிக்கை 29,777 பேராக காணப்பட்ட நிலையில் இவ்வருடம் 47,834 பேராக அதிகரித்துள்ளதாக அந்த நிறுவளம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் டெங்கு தொற்றினால் இவ்வருடம் மாத்திரம் 77 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களே டெங்கு நோய்க்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் டெங்கு நோய் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் : பிரான்ஸ் முழுவதும் தீவிர பாதுகாப்பு!!

பிரான்ஸ் நாட்டில் பண்டிகை காலம் நெருங்கி வருவதால் மக்கள் அச்சமின்றி இருப்பதற்காக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை அந்நாட்டு உள்துறை அமைச்சர் புரூணோ லீ ரோக்ஸ் தெரிவித்துள்ளதாக மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால், பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுமாராக 3000க்கும் மேற்பட்ட பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுத்தப்பட இருக்கின்றனர். விடுமுறை காலம் என்பதால் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அதிக பாதுகாப்பு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அத்துடன் பிரான்ஸ் நாட்டு மக்கள் அனைவரும் விடுமுறை காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக புரூணோ லீ ரோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரான்ஸ் நாட்டில் இந்த ஆண்டு தேசிய விடுமுறை கொண்டாட்டங்களின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் கடந்த இரு ஆண்டுகளில் 230க்கும் அதிகமானோர் தீவிரவாத தாக்குதல்களில் பலியாகியுள்ளனர்.

மேலும், பிரான்சில் அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், ஜூலை மாதம் வரை அவசர நிலை பிரகடனம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலைக்குள் கத்தி ஊடுருவிய நிலையில் வைத்தியசாலைக்கு நடந்து சென்ற இளைஞர்!!

கத்­தியால் குத்­தப்­பட்ட நபர் ஒருவர், தலைக்குள் ஊடு­ரு­விய கத்­தி­யுடன் வைத்­தி­ய­சா­லைக்குச் சென்ற சம்­பவம் தென் அமெ­ரிக்க நாடான பெருவில் இடம்­பெற்­றுள்­ளது.

கெம்போஸ் ஒயார்ஸ் எனும் 28 வய­தான இளைஞர் டெக்ஸி சார­தி­யாக பணி­யாற்­று­பவர். இவரை ஹென்றி சல்­டனா சௌஸா எனும் நபர் கத்­தியால் குத்­தி­ய­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இச்­ சம்­ப­வத்­தின்­போது கெம்போஸ் ஒயார்ஸின் தலையின் பின்­புறம் கத்தி ஊடு­ரு­வி­யது. எனினும், கத்தி தலையிலிருந்த நிலை­யி­லேயே அவர் வைத்­தி­ய­சா­லைக்கு நடந்துசென்றார்.

பல மணித்­தி­யால சத்­தி­ர­சி­கிச்­சையின் பின்னர் ஒயார்ஸின் தலையிலிருந்து அக்கத்தி அகற்றப்பட்டது.

விமானத்தில் மேலாடையை கழற்றிவிட்டு சிகரெட் பற்ற வைத்த பயணி : விமானத்துக்குள் இருப்பதை மறந்துவிட்டாராம்!!

துபாய் நோக்கி பறந்­து­கொண்­டி­ருந்த விமா­ன­மொன்றில் பய­ணி­யொ­ருவர் தனது மேலா­டையை கழற்­றி­விட்டு, சிகரெட் ஒன்­றையும் பற்றவைத்த சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.

மது போதையிலிருந்த அந் ­நபர், தான் விமா­னத்தில் இருப்­பதை மறந்­து­விட்­டாராம். ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸை தள­மாகக் கொண்ட எமிரேட்ஸ் நிறு­வ­னத்தின் விமா­ன­மொன்­றி­லேயே இச் ­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பிளைட் ஈகே 020 எனும் இவ்­ வி­மானம், கடந்த வெள்­ளிக்­கி­ழமை இங்­கி­லாந்தின் மன்­செஸ்டர் நக­ரி­லி­ருந்து துபாய் நோக்கி சென்­றது. இதன்­போது பயணி ஒருவர், இடுப்­புக்கு மேல் தனது ஆடை­களை கழற்றிக் கொண்­ட­துடன் சிகரெட் ஒன்­றையும் பற்ற வைத்தார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

6 மணித்­தி­யா­லங்கள் கொண்ட இப்­ ப­ய­ணத்தின்போது, தான் சிகரெட் புகைத்த­தாகக் கூறப்­ப­டு­வதை அந் ­நபர் நிரா­க­ரித்தார். எனினும், அவரின் ஆச­னத்தில் சிகரெட் பக்கெற் ஒன்று ஊழி­யர்­களால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தான் விமா­னத்தில் இருப்­பதை மறந்­து­விட்­ட­தா­கவும் தனது நட­வ­டிக்­கைக்­காக மன்­னிப்பு கோரு­வ­தா­கவும், தலைமை விமா­னி­யிடம் அப்­ ப­யணி தெரி­வித்தார். மேற்­படி விமா­ன­மா­னது உலகின் மிகப் பெரிய பய­ணிகள் விமா­ன­மான எயார் பஸ் 380 ரகத்தைச் சேர்ந்த விமானம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இரு தளங்­களைக் கொண்ட இவ் ­வி­மா­னத்தில். மேல் தளத்­தி­லுள்ள மது­பானக் கூடத்­துக்குச் சென்று அதிக மது­பானம் அருந்­தி­ய­தா­கவும், ஒரு கட்­டத்தில் மது­பானம் அருந்­து­வதை நிறுத்­து­மாறு விமான ஊழி­யர்கள் அறி­வு­றுத்­தி­ய­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவர் மன்­செஸ்டர் நக­ர­வா­சி­களின் உச்­ச­ரிப்­பு­ட­னான ஆங்­கி­லத்தில் உரத்த சத்­­தத்தில் பேசிக்கொண்டிருந்ததாக சக பயணியொருவர் தெரிவித்துள்ளார். விமானம் தரையிறங்கியவுடன் ஏனைய பயணிகள் வெளியேறியபோது, மேற்படி பயணி விமான ஊழியர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கங்காருவை விழுங்கிய மலைப்பாம்பு!!

 
கங்காரு ஒன்றை மலைப் பாம்பு விழுங்கும் காட்சி அவுஸ்திரேலியா வில் கோல்வ் மைதானமொன்றில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கெய்ன்ஸ் நகரிலுள்ள கோல்வ் மைதானத்தில், கடந்த சனிக்கிழமை பலர் கோல்வ் விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கங்காரு ஒன்றை முழுமையாக விழுங்குவதற்கு மலைப் பாம்பு முயற்சித்ததைக் கண்டு கோல்வ் போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

3 அடி நீளமான மலைப் பாம்புடனான போராட்டத்தில் மேற்படி கங்காரு தோல்வியடைந்து, இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

துரித சதுரங்க போட்டியில் இலங்கைக்கு தங்கம் வென்றுக்கொடுத்த சிறுமி!!

உலக பாடசாலைகள் பங்கேற்கும் துரித சதுரங்க (fast chess) போட்டியில் இலங்கையின் விசாக வித்தியாலயத்தைச் சேர்ந்த ஹேஷா மிச்சலா பல்லி என்ற மாணவி 9 வயதுக்குட்பட்டோர் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

துரித சதுரங்க போட்டிகள் ரஸ்யாவின் சொச்சி நகரில் இடம்பெற்றுவருகின்றது. குறித்த போட்டியில் பங்குகொண்ட போதே இவர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈரானில் இடம்பெற்ற 9 வயதுக்குற்பட்ட ஆசிய சதுரங்க போட்டியில் ஹேஷா ஒரு தங்கப்பதக்கம் உட்பட 3 பதக்கங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.