வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் இரண்டு நூல்கள் வெளியீடு!!

 
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் இரண்டு நூல்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (26.11.2016) காலை 10.00 மணிக்கு பீடாதிபதி கு.சிதம்பரநாதன் தலைமையில் ‘விவசாயமும் உணவுத் தொழில் நுட்பவியலும்’ மற்றும் ‘கேசரம்’ எனும் கவிதை நூலும் வெளியிடப்பட்டன.

பிரதம விருந்தினராக மூத்த எழுத்தாளர் தமிழ்மணி மேழிக்குமரன் அவர்கள் பங்கேற்றிருந்தார்கள். இரா.கேஸ்வரனின்.. ‘கேசரம்’ கவிதை நூலுக்கான நூலாராய்வுரையினை தமிழாசிரியர் வே.முல்லைத்தீபன் நிகழ்த்தினார்.

தொடர்ந்து நான்கு மாணவர்கள் சேர்ந்து தொகுத்திருக்கும் ‘விவசாயமும் உணவுத் தொழில்நுட்பவியலும்’ எனும் நூலுக்கான விமர்சன உரையினை கல்வியியற் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பார்த்தீபன் அவர்கள் வழங்கினார்கள்.

நிகழ்வுக்கான வரவேற்புரையினை க.அஜிந்தன் நிகழ்த்த, நன்றியுரையினை ந.பிரசாந்த் அவர்கள் நிகழ்த்தினார்.

கல்லூரியின் உப பீடாதிபதிகள், கல்வியியலாளர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் எனும் பெருந்திரளானவர்கள் கூடியிருக்க மேற்படி இரண்டு நூல்களும் சிறப்பாக வெளியிடப்பட்டன.

15207810_1821921474730850_1042902232_n 15211735_1822051061384558_1766568072_n 15226346_1821921388064192_970314586_n 15226418_1821921308064200_1471408241_n 15228086_1821921458064185_1579679008_n 15240068_1821921361397528_1357608895_n

திருமணமாகும் ஆண்களிடம் இருக்க வேண்டிய 20 இலட்சணங்கள்!!

man

திருமணம் என்று வந்துவிட்டாலே முதலில் ஜாதக பொருத்தம் பார்பார்கள், பிறகு குடும்பத்தை பற்றி விசாரிப்பார்கள். இதற்க்கெல்லாம் மேல் ஆண் மற்றும் பெண்ணிடம் நல்ல இலட்சணங்கள் இருக்கின்றனவா என்று பார்ப்பார்கள். இந்த இலட்சணங்களில் அழகும் ஒரு பங்கு வகித்தாலும். அதற்கு மேலானவை நிறைய இருக்கின்றன.

தைரியமும், பொறுமையும்

தைரியமும், பொறுமையும் இருக்க வேண்டும். எந்த ஒரு சூழலிலும் இந்த இரண்டையும் இழந்துவிட கூடாது. அது பெரிதாக இருந்தாலும் சரி, சிறிதாக இருந்தாலும் சரி.

கவனம்

வாழ்க்கையில் எல்லா தருணத்திலும் கவனமுடன் இருக்க வேண்டும். எடுக்கும் முடிவுகளிலும், ஈடுபடும் செயல்களிலும் கவனமாக இருத்தல் அவசியம்.

நல்ல நோக்கம்

நல்ல நோக்கங்கள் இருக்க வேண்டும். அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும்.உடல் மற்றும் சமூக ஆரோக்கியம் கொண்டிருக்க வேண்டும்.

தளர்ந்துவிடக் கூடாது

எந்த ஒரு தருணத்திலும் தளர்ந்து விட கூடாது. கடுமை, தீர்வுக் கிடைக்கவில்லை போன்ற காரணம் கூறி நகர்ந்து விட கூடாது. கடிமையாக வேலை செய்ய தயங்க கூடாது.

பகிர்தல்

குடும்பத்துடனும், நண்பர்களுடனும் பகிர்ந்துக் கொள்ளும் பண்பு இருக்க வேண்டும். அது உணவாகவோ, மகிழ்ச்சியாகவோ, பணமாகவோ எதுவாக இருப்பினும்.

காதும், இதயமும்

சொற்களுக்கு காதையும், உணர்வுகளுக்கு இதயத்தையும் எப்போதும் தயங்காமல் கொடுப்பவனாக இருக்க வேண்டும். எதையும் முழுமையாக செய்ய வேண்டும்.

அபாயம்

ஆபத்து / அபாயங்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டும். இந்த சூழல்களை எப்படி கையாள வேண்டும் என்ற மனோப் பக்குவம் இருக்க வேண்டும்.

இரகசியங்கள்

இரகசியங்கள் காக்க தெரிந்திருக்க வேண்டும். அனைவருக்கும் உண்மையாக இருக்க வேண்டும். உள்ளொன்றுமாக, புறமொன்றுமாக இருத்தல் கூடாது.

விடா முயற்சி

வாழ்க்கையின் எல்லா தருணத்திலும் பொறுமையும், விடா முயற்சியும் கொண்டிருக்க வேண்டும். அது உறவாக இருபினும் சரி, வேலையாக இருப்பினும் சரி.

நல்லவை, கெட்டவை

தேவையற்றதை மறக்கவும் கற்றிருக்க வேண்டும். வேண்டாதவற்றை எண்ணி எண்ணி வருந்தும் குணம் இருத்தல் கூடாது. அதே போல நல்லவற்றை / நல்லவர்களை மறந்துவிடவும் கூடாது.

பணிவு

பணிவாக நடந்துக் கொள்ள வேண்டும். பணம், வெற்றி காரணம் காட்டி அகம்பாவம் வெளிப்படுத்த கூடாது. அகம்பாவம் நல்லறிவு, சிறப்புகள் போன்றவற்றை அழிக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

இலட்சியம்

இலட்சியம் கொண்டிருக்க வேண்டும், தன்னை சுற்றி இருப்பவர்களிடம் தாழ்மையுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.

திறமை

தன்னிடம் திறமை இருக்கிறது என்பதற்காக, தன்னால் சாதிக்க முடியும் என்பதற்காக, மற்றவர்களை தாழ்த்தி மதிப்பிட கூடாது.

ஆரோக்கியம்

உணவு மீதும், ஆரோக்கியத்தின் மீதும் பெரும் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். தன்னை சுற்றி இருப்பவர்களையும் இது சார்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்.

சோம்பேறித்தனம்

தூங்கிக் கொண்டே இருக்கும் மலை பாம்பாக இருக்க கூடாது. சோம்பேறியாக இருக்க கூடாது. சுறுசுறுப்பாக செயற்படக் கூடிய நபராக இருக்க வேண்டும்.

கர்வம்

தான் உயர்ந்த நிலையில் இருந்தாலும், பெரியவர்கள், முன்னோர்கள், சான்றோர்கள் அனைவருக்கும் மதிப்பளிக்க தெரிந்த குணம் இருக்க வேண்டும்.

ஏமாற்றுதல்

தன்னை விட வலுவற்றவன் என்பதால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர்களை ஏமாற்றுதல், பணம் பிடுங்குதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட கூடாது.

பின்வாங்குதல்

எந்த தடங்கல் வந்தாலும், தான் விரும்பும் நபர்களிடம் / வேலையில் இருந்து பின்வாகும் குணம் இருக்க கூடாது.

பொறுமை இழத்தல்

தன்னை உசுப்பி பார்க்க விஷமிகள் செய்யும் சித்து விளையாட்டுக்கு எல்லாம் தன் பொறுமை இழக்க கூடாது. சரியாக விசாரிக்காமல், தன் நண்பர்கள், குடும்பத்தினர் மீது சந்தேகப்படக் கூடாது.

கனவு

தன் கனவுகளைவிட்டு ஒருபோதும் நகர்ந்துவிட கூடாது. நல்லவை மீதான நம்பிக்கை இழக்க கூடாது.

இலங்கையில் பாரிய தொழிற்சாலையை அமைக்கும் வோக்ஸ்வொகன் நிறுவனம்!!

COLMA, CA - NOVEMBER 18: The Volkswagen logo is displayed on the front of a brand new Volkswagen car at Serramonte Volkswagen on November 18, 2016 in Colma, California. Volkswagen announced plans to lay off 30,000 workers in an effort to boost profits in the wake of the recent emissions scandal. (Photo by Justin Sullivan/Getty Images)

வோக்ஸ்வொகன் வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை நடவடிக்கைகளை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் குளியாப்பிட்டியவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வோக்ஸ்வொகன் தொழிற்சாலை எப்போது இலங்கையில் ஆரம்பிக்கப்படும் என பலர் கேட்கின்றனர். எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாதத்தில் மேலும் பல தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் நாட்டின் பிரதான இரண்டு கட்சிகள் இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கத்தை வலுவடைய செய்வதற்கு அடிக்கல் வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

கட்சிகள் இரண்டு இணைந்தமையின் மூலம் நிலையான அரசாங்கம் ஒன்று உருவாகியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அதில் நன்மையை பெற்று நாட்டில் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பழுத்த வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!!

banana

பழ வகைகளில் மிகவும் சத்துக்கள் நிறைந்த பழங்களில் வாழையும் ஒன்று. இதனால் பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு இது தீர்வாகவும் உள்ளது.

பழுத்த வாழைப்பழம் பழுக்காத பழத்தை விட ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. பழுத்த பழம் பழுக்காத பழத்தைவிட நார்ச்சத்து மிகுந்த ஆகாரமாகவும், வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்து காணப்படுகிறது.

சில ஜப்பானிய ஆய்வாளர்கள் கருத்துப்படி பழுத்த வாழைப்பழமானது பழுக்காத வாழையை விட அதிக வைட்டமின்களையும், புரோட்டீன்களையும், பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகளையும் உருவாக்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளதால் பெரும்பாலும் ஜப்பானிய மக்கள் நன்கு பழுத்த பழங்களை தங்கள் முக்கிய உணவாக உட்கொள்கின்றனர்.

பழுத்த வாழைப்பழத்தின் நன்மைகள்..

பெரும்பாலும் நன்கு பழுத்த வாழைப் பழங்களின் மீது கரும்புள்ளிகளை நீங்கள் கண்டிருப்பீர்கள். இது தீங்கான ஒன்று என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால் இந்த கரும்புள்ளிகள் டிஎன்எப் எனப்படும் டியூமர் நேசிரோசிஸ் பாக்டர் எனப்படும் ஒரு வேதிப்பொருளை வாழைப்பழம் உருவாக்குகிறது. இது உடம்பிலுள்ள அசாதாரணமான மற்றும் கேன்சர் செல்களை எதிர்த்துப் போராடக்கூடியது.

ஒரு கப் பழுத்த வாழைப்பழம் குறைந்தது சுமார் ௦.55 மிலிகிராம் அளவு வைட்டமின் பி6 கொண்டுள்ளது. இது ஒரு வளர்ந்த மனிதனுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் வைட்டமின் பி6 அளவில் 42 சதவிகிதம் ஆகும்.

தொடர்ந்து பழுத்த வாழைப்பழம் சாப்பிட்டுவருவது ரூமட்டாய்டு ஆர்த்தரைடீஸ், மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.

ஒரு பழுத்த வாழைப்பழத்தில் மனித உடலுக்கு சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் உள்ளது.

தினமும் ஒரு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டுவந்தால் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி (ஆஸ்டியோ போரோசிஸ்) மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

இதைத் தவிர பழுத்த வாழைப்பழத்தை உண்டுவந்தால் உடலில் புற்று நோய் செல்கள் உருவாவதை தடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

பழுத்த வாழைப்பழம் கொண்டுள்ள சரியான அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் சர்க்கரை நோய், இதய நோய்கள் மற்றும் வலிப்பு போன்ற நரம்பு அழற்சி குறைபாடுகளையும்கூடத் தடுக்கும்.

தினமும் பழுத்த வாழைப்பழம் உண்பதால் இதிலுள்ள அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்.

எனது கணவரை சாக விடுங்கள் : நீதிமன்றத்தில் முறையிடும் பிரித்தானியப் பெண்!!

dead

பிரித்தானியாவில் படுகாயமடைந்து கோமாவில் உள்ள முன்னாள் ராணுவ வீரரை கருணை கொலைக்கு உட்படுத்த வேண்டுமென கேட்டு அவரது மனைவி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் வாகன விபத்து ஒன்றில் படுகாயமடைந்த முன்னாள் ராணுவ வீரர் பால் பிரிக்ஸ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோமா நிலையில் உயிர் காக்கும் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

வளைகுடா போர் முடிந்த பின்னர் தாயகம் திரும்பிய 43 வயதாகும் பால் பிரிக்ஸ் உடனடியாக பொலிஸ் அணியில் சேர்ந்து சேவை புரிந்து வந்துள்ளார்.

இவர் பணியில் இருந்தபோது கடந்த ஆண்டு யூலை மாதம் வாகன விபத்தில் சிக்கி தலையில் கனத்த காயம் பட்டு கோமா நிலையில் உள்ளார். இந்த நிலையில் தமது கணவருக்கு அளித்துவரும் அனைத்து உயிர் காக்கும் சிகிச்சைகளையும் நிறுத்த வேண்டும் என்றும் அவரை கெளரவத்துடன் சாக அனுமதிக்க வேண்டும் என்று அவரது மனைவி லிண்சே கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் குறித்த வேண்டுகோளுக்கு மருத்தவகள் குழு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், மான்செஸ்டர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார் லிண்சே.

குறித்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிரிக்ஸ் குறித்த மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து அரசு மருத்துவர் மற்றும் தனியார் மருத்துவர் அடங்கிய குழு ஒன்று நேரடி ஆய்வை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

அதில் பிரிக்ஸ் விவகாரத்தில் மேலும் நம்பிக்கை கொள்ள வகை இல்லை எனவும், அவர் மிகவும் வருந்தத்தக்க நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 17 மாதங்களாக பிரிக்ஸ் இதே நிலையிலேயே தொடர்வதாகவும் மருத்துவக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் இந்த வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பு நீதிபதிகளால் வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

பிரிக்ஸ் விபத்துக்குள்ளாக காரணமான 26 வயது இளம்பெண்ணிற்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி கடந்த யூலை மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

நூறாவது பிறந்த நாளை கொண்டாடிய இரட்டைச் சகோதரிகள் : பிறந்தநாள் விழாவில் நடந்த சுவாரஸ்யம்!!

birthday

பிரித்தானியாவில் இரட்டை சகோதரிகள் தங்களுடைய நூறாவது பிறந்தநாளை சக நண்பர்களுடன் கொண்டாடிய சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Worcestershire நகரத்தின் Stourport என்ற பகுதியில் வசித்து வருபவர்கள் தான் Irene Crump மற்றும் Phyllis Jones. இவர்கள் கடந்த ஞாயிறு அன்று தங்களுடைய நூறாவது பிறந்த நாளை தங்களுடைய குடும்பத்தார் மற்றும் சக நண்பர்களுடன் மிகவும் விஷேசமாக கொண்டாடியுள்ளனர்.

Irene Crump மற்றும் Phyllis Jones கடந்த 1916 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி பிறந்துள்ளனர். இதில் Phyllis Jones 25 நிமிடங்களுக்கு இடைவெளியில் பிறந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து Irene Crump கூறுகையில், இன்றைய நாள் தங்களுக்கு மிகவும் சிறந்த நாள் என்றும் இன்றைய நாள் தங்களுடைய வாழ்நாளில் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் 90 வது பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடியதாகவும், அதன் பின்னர் கடந்த ஆண்டு 99 வது பிறந்தநாளை கொண்டாடியதாகவும், தற்போது சதத்தில் வந்து நிற்பதாகவும் கூறியுள்ளார். இதை எட்டியதற்கு தங்களுடைய முறையான உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என்று கூறியுள்ளார்.

நாங்கள் இருவரும் எப்போதும் நெருக்கமாக இருப்போம் என்றும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் Jones தன்னை விட்டு சென்றுவிட்டதாகவும், அதன் பின்னர் உடல் நிலை சரியில்லை என்றவுடன் தன் அருகிலே இருந்து தன்னை கவனித்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

அன்று மட்டும் அவள் தன்னை கவனிக்காமல் இருந்திருந்தால் இன்று இது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார். அதே போன்று இவர்கள் இருவருக்கும் ஒரே நேர்த்தில் தான் வேலை கிடைத்ததும் என்றும் அதுவும் ஒரே நிறுவனம் என்பது தான் அதில் சிறப்பு என கூறியுள்ளார்.

இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. அதில் Irene கணவரின் பெயர் Samuel எனவும் இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு தன்னுடைய 90 வயதில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதே போன்று Phyllis Jones கணவரின் பெயர் Ray Jones எனவும் இவர் தன்னுடைய 91 வயதில் கடந்த 2006 ஆம் ஆண்டும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தனக்கு பரிசுப் பொருட்கள் எதுவும் வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக சிறப்பு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்தால் அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் இதை தான் பரிசுப் பொருட்களாக கேட்கவில்லை ஒரு நன்கொடையாக கேட்பதாக கூறியுள்ளனர். பிரித்தானியாவில் 6 ஜோடிகள் மட்டுமே இரட்டை சகோதரர்கள் மற்றும் சகோதரிகளாக இருப்பதாக கூறப்படுகிறது.

bd1

கணவருடன் நடைபயணம் மேற்கொண்ட பெண் : 300 அடி பள்ளத்தில் விழுந்து உடல் சிதறிய பரிதாபம்!!

11

பிரித்தானியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணவருடன் நடைபயணம் மேற்கொண்ட போது 300 அடி பள்ளத்தில் கிழே விழுந்து உடல் சிதறி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் கணவருடன் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழிப்பதற்காக போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள Madeira பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர்கள் குறுகிய மலைப்பகுதிகள் மற்றும் காண்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் Levada do Norte என்ற பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு பல இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள் 300 அடி உயரம் உள்ள Ribeira Brava என்ற பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது Eira do Mourao என்ற பள்ளத்தாக்கில் இருக்கும் பாலத்தின் மீது ஏறி அப்பெண் நடந்துள்ளார். அப்போது ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக அவர் நிலைதடுமாறி கிழே விழுந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த அப்பெண்ணின் கணவர் உடனடியாக அப்பகுதியில் உள்ள மீட்புப்படையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் சுமார் 4 மணி நேர தேடலுக்கு பின்னரே அவருடைய உடலை தேடி கண்டு பிடித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் அவ்வப்போது மழை பொழியும் என்றும் இதனால் பாலத்தின் மீது இருந்த ஈரத்தால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை காலை 11.30 மணி அளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இவருடன் வந்த கணவர் ஆஸ்திரியாவில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைபார்த்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் ஆஸ்திரியா நாட்டில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இப்பகுதிக்கு இதுவரை மூன்றுமுறை வந்துள்ளதாகவும், இது ஒரு மோசமான இடம் என்று எச்சரிக்கை பலகை வைத்துள்ளதை கண்டும், அஜாக்கிரதை காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று ஜெர்மனைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த மார்ச் மாதம் Funchal பகுதியில் இறந்ததாக கூறப்படுகிறது. இது போன்று பல சம்பவங்கள் இப்பகுதியில் நடந்துள்ளதால், இப்பகுதிகள் இந்த ஆண்டு முதல் கவனிப்பு வளையத்துக்குள் கொண்டுவருவதாக கூறப்படுகிறது.

12 13

மகனின் கள்ளக் காதலியை கொடூரமாக கொலை செய்த பெற்றோர்!!

love-issue

மகன் வேறு சமூகத்துப் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் அப்பெண்ணை கொடூரமாக கொலை செய்த பெற்றோர் 3 மாதத்திற்கு பின் சிக்கியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்லத்துரை. இவரது மனைவி சவுந்தர்யா(21).

இந்நிலையில், சவுந்தர்யா திடீரென்று மாயமாகியுள்ளார். இதனால், அவரது தாயார் தங்கம்மாள் கடந்த 23ம் திகதி பரமத்திவேலூர் பொலிசில் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில், மாயமான சவுந்தர்யாவுக்கும், பரமத்தி பகவதி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சூர்யா(24) என்பவருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து, பொலிசார் சூர்யா வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர் மனோகரன்- சுமதியை பிடித்து மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யாவுடன் தொடர்பில் இருந்த சவுந்தர்யா தன்னை மணந்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு சூர்யாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் சவுந்தர்யா தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், ஆத்திரத்தில் செய்வதறியாது இருந்த சூர்யாவின் பெற்றோர் சவுந்தர்யாவை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.

அதன்படி, கடந்த ஆக.14ல் தங்களது மகனுக்கு பதிவு திருமணம் செய்து வைப்பதாக, சவுந்தர்யாவிடம் ஆசை வார்த்தை கூறி பிள்ளைகளத்தூரில் உள்ள தங்களது செங்கல் சூளைக்கு அழைத்துச் சென்று, சவுந்தர்யாவை கட்டையால் சரமாரியாக அடித்துக் கொன்று உடலை அங்கேயே புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து, சூர்யாவின் பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கலவர பூமியான நடிகர் சங்க வளாகம்பி : நடிகர்களின் கார்கள் சூறை : வெளியான புகைப்படங்கள்!!

2

சென்னையில் நேற்று நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்கூட்டத்தில் நடந்த கலவரத்தால் நடிகர்களின் கார் மற்றும் அலுவலகம் தாக்கப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் சங்க பொதுக் குழு கூட்டம் பல எதிர்ப்புகளுக்கிடையே நடிகர் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பாதுகாப்புக்காக ஏராளமான பொலிசார் அங்கு குவிக்கப்பட்டி ருந்தனர்.

இந்த நிலையில் திடீரென்று இரு குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பில் எட்டியது. இதனையடுத்து பொலிசார் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர தடியடி நடத்தினர்.

இந்த களேபரத்தினிடையே நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸின் கார் தாக்கப்பட்டதாகவும், சென்னை வடபழனியில் உள்ள நடிகர் விஷாலின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவருடைய சொகுசு கார்களும் அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

1

நான்கு கணவர்களுக்கு அல்வா கொடுத்து இளைஞருடன் வாழ்ந்து வந்த பெண்மணி!!

lady

தமிழகத்தில் இளம்பெண் ஒருவர் நான்கு கணவர்களை ஏமாற்றி ஐந்தாவதாக இளைஞர் ஒருவருடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் திருச்சி பகுதியின் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.

இவர் மாலதி(23) என்பவரை அண்மையில் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திடீரென்று திருப்பூரைச் சேர்ந்த வினோத் என்பவர் மாலதியை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அவரை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாலதியிடம் பொலிசார் விசாரணை நடத்துகையில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில், இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிவந்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டீபன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இதனால் இருவருக்கும் குழந்தைகள் பிறந்துள்ளது. இதன் காரணமாக இருவரும் வேளாங்கன்னிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த டீக்கடைக்காரரான நவநீதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இது நீடிப்பதற்காக மாலதி ஸ்டீபன் உடன் தகராறில் ஈடுபட்டுவிட்டு, நவநீதனுடன் வாழ்ந்து வந்துள்ளார். வேளாங்கன்னியில் வாழ்ந்து வந்து கொண்டிருந்த போது நாகையைச் சேர்ந்த ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக நவநீதனை உதறித்தள்ளிவிட்டு நாகையைச் சேர்ந்த இளைஞரிடம் ஓட்டம் பிடித்துள்ளார். இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்ற இளைஞருடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

வினோத் மீது கொண்ட மோகத்தினால் நாகையைச் சேர்ந்த இளைஞரை ஏமாற்றி விட்டு வினோத்தை நான்காவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய வாழ்க்கை சுமார் ஒன்றரை வருடம் அருமையாக சென்றுள்ளது. அப்போது கோவிலுக்கு செல்வதற்காக இருவரும் திருச்சி சமயபுரம் சென்றுள்ளனர்.

அப்போது வினோத் நண்பனான அசோக் இவர்களுடன் சென்றதால், அசோக்கிற்கும், மாலதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மாலதி வினோத்தை விட்டு பிரிந்து அசோக் வீட்டிற்கு வந்து ஒருவாரம் தங்கியுள்ளார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் அசோக்கிற்கும் மாலதிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இது குறித்த தகவலை எப்படியோ அறிந்த வினோத் அசோக்கிடம் சென்று மாலதியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதன் பின்பு தான் அவர்கள் பொலிசில் புகார் செய்துள்ளனர். மேலும் பொலிசார் மாலதியின் மற்ற 3 கணவர்களிடமும் கடந்த 2 நாட்களாக விசாரணை செய்துள்ளனர். இறுதியாக கணவன்கள் வினோத்தும் அசோக்கும் மாலதியை ஏற்று கொள்ளாததால் மாலதி சொந்த ஊருக்கு போவதாக கூறியுள்ளார். இதையடுத்து மாலதிக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கின்றது : சமந்தா!!

samantha

சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று நடிகை சமந்தா கூறினார்.  நடிகை சமந்தா இதுகுறித்து அளித்த பேட்டியில்..

“ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஆதரவு இல்லாத ஏழைகளுக்கு ஒதுக்கி அவர்களுக்கு உதவ வேண்டும். சமூக சேவைகளில் நிறைய பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள் அந்த பட்டியலில் எனது பெயரும் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சமூகத்தில் எல்லோருமே சம்பாதிக்கிறார்கள். சிலருக்கு லட்சங்களிலும், இன்னும் சிலருக்கு கோடிகளிலும் வருமானம் வருகிறது.

சம்பாதிக்கும் தொகை அனைத்தும் தனக்கே சொந்தம் என்று நினைப்பது சுயநலம். அந்த பணத்துக்கு மதிப்போ மரியாதையோ கிடையாது. அதில் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு பிரித்து கொடுப்பதில்தான் பொது நலமும் சந்தோஷமும் இருக்கிறது. சமூகத்தில் நிறைய மக்கள் அடிப்படை வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை தூக்கி விட வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தால் அனைத்தையும் தானே சாப்பிட வேண்டும் என்று சுயநலமாக சிந்திக்காமல் ஏழைகளுக்கும் கொடுத்து உதவ வேண்டும். அப்படி உதவினால்தான் தன்னிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு உயரும். சமூக சேவைகள் செய்யும் போது கிடைக்கும் திருப்தியே தனி. மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்வதில் கிடைக்கும் சந்தோஷத்தை நான் அனுபவபூர்வமாக உணர்ந்து இருக்கிறேன்.

ஏழைகள் பசியை தீர்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை. சமூக சேவைகளில்தான் எனக்கு மன அமைதி கிடைக்கிறது. உதவிகள் செய்யும்போதுதான் நம்மீதே நமக்கு அளவு கடந்த மரியாதை ஏற்படுகிறது. இந்த விஷயத்தை நான் தெரிந்து வைத்து இருப்பதால்தான் சமூக சேவைகளில் ஆர்வமாக ஈடுபடுகிறேன்.” இவ்வாறு சமந்தா கூறினார்.

ஆண்மையை பறித்தால் பெண்களை தொட தைரியம் வராது!!

meera

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ‘பத்து கல்பனாக்கள்’ என்ற மலையாள படத்தில் மீரா ஜாஸ்மின் நடித்து உள்ளார். அந்த படம் விரைவில் வெளியாக இருப்பதையொட்டி கேரள மாநிலம், கொச்சி நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த மீரா ஜாஸ்மின், மேற்கண்டவாறு கூறினார்.

கற்பழிப்பு குற்றங்களை தடுக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பாலியல்ரீதியாக பெண்களை தாக்குபவர்களுக்கு வலிமிகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும். இதைப்போன்ற நபர்களுக்கு ஆண்மைத்தன்மையை நீக்குவது ஒன்றுதான் சரியான வழியாக இருக்க முடியும்.

அப்படி தண்டிக்கப்பட்ட பின்னர், தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருபெண்ணை தொடுவதற்கான தைரியம் அவர்களுக்கு வராது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பேட்டியின்போது அவருடன் நடிகர் அனூப் மேனன், பெரும்பாவூர் என்ற இடத்தில் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்ணின் தாயார் ஆகியோர் உடனிருந்தனர்.

ஜப்பான் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சங்கு வியாபாரி கைது!!

rape

கேரள மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகிறார்கள். திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் மற்றும் விழிஞ்ஞம், சிறையின் கீழ் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கடலில் நீராடியும், சூரிய குளியல் செய்தும் மகிழ்கிறார்கள்.

கேரளாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிகளிடம் அத்துமீறும் சம்பவங்களும் பாலியல் பலாத்காரங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 4 வெளிநாட்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோவளம் வந்த ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணி பாலியல் பலாத்காரம் செய்யப்பட் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோவளம் கடற்கரையில் சங்கு வியாபாரம் செய்து வருபவர் தேஜாபவார் (வயது 26). இவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இவரது கடைக்கு 35 வயது மதிக்கத்தக்க ஜப்பான் நாட்டையைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் வந்து சங்கு மற்றும் பொருட்களை வாங்கினார்.

அதன் பிறகு அந்த பெண் தான் தங்குவதற்கு அறை வசதி செய்து தர முடியுமா? என்று தேஜாபவாரிடம் கேட்டுள்ளார். அவரும் தான் தங்கி உள்ள அறைக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளார். பிறகு உணவு வாங்கி வருவதாக வெளியில் சென்ற தேஜாபவார் சிறிது நேரம் கழித்து அங்கு வந்தார்.

பிறகு அந்த சுற்றுலா பயணியை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணை தனது அறையில் இருந்து விரட்டி விட்டு அவர் சென்று விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜப்பான் நாட்டு பெண், தான் பாலியல் பலாத்காரம் பற்றி கோவளம் கடற்கரை பொலிசில் புகார் செய்தார். பொலிசார் விசாரணை நடத்தி தேஜாபவாரை கைது செய்தனர். அவர் இதுபோல வேறு சுற்றுலா பயணிகளிடம் அத்துமீறி நடந்து உள்ளாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

கேரள சுற்றுலா தளங்களில் இதுபோன்ற அத்து மீறல்கள் அதிகரித்து இருப்பதால் பொலிசார் கண் காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிரா அமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!

sl

சிம்பாபேவில் இடம்பெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் இலங்கையை எதிர்கொண்ட சிம்பாபே அணி நாணயசுழற்சியை வசப்படுத்தி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய களமிறங்கிய அந்த அணி சார்பில் எந்தவொரு வீரரும் அரைச்சதம் கூட பெறாத நிலையில் வௌியேறினர்.

இதன்படி 36.3 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த சிம்பாபே, 160 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை சார்பில் ஜெப்ரி வெண்டசே மற்றும் எசெல குணரத்ன ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை சாய்த்தனர்.

இதற்கமைய இலங்கைக்கு 161 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பில், ஆரம்ப வீரர்கள் அவ்வளவாக கைகொடுக்காத போதும், குஷல் மென்டிஸ் மற்றும் உபுல் தரங்க ஆகியோர் தலா 57 ஓட்டங்களை விளாசினர்.

இதன்படி 37.3 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 166 ஓட்டங்களைப் பெற்று, ஆறு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

வவுனியாவில் மாவீரர் தின நிகழ்வு : பாரளுமன்ற உறுப்பினரிடம் ஒருவர் வாக்குவாதம்!!

 
வவுனியா நகரசபைக்கு முன்பாக அமைக்கப்பட்ட பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட மாவீரர் மாதிரிக்கு இன்று 27.11.2016 மாலை 6.05 மணிக்கு சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் திரு.ராஜ்குமார், வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா, முன்னாள் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கி.தேவராஜன், கையளிக்கப்பட்ட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி திருமதி. ஜெயவதனா, மற்றும் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மலர் அஞ்சலியையடுத்து ஈகச்சுடரினை சிவசக்தி ஆனந்தன், பிரஜைகள் குழுவின் தலைவர் இணைந்து ஏற்றி வைத்தனர். ஈகச்சுடர் ஏற்றும்போது வணக்கம் சொல்லி வணங்குகின்றோம் எங்கள் வீரர் உங்கள் மலர்பாதம் எனும் பாடலுடன் உணர்வு பூர்வமான ஆரம்பமானது. அஞ்சலி செலுத்திய உறவினர்களின் கதறலுக்கு மத்தியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஆரம்பமான சமயத்தில் பொதுமகன் ஒருவர் அஞ்சலி செலுத்தப்பட்ட இடத்தில் பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்குவாதப்பட்டார். யுத்தத்தில் மாவீரர்களாக இறந்தவர்களின் புகைப்படம் இங்கு வைத்து அஞ்சலி செலுத்தவில்லை இதுவரை மக்களுக்கு இந்த அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள். அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்றார்கள் செய்தார்களா? என பாராளுமன்ற உறுப்பினரிடம் கேள்வி எழுப்பினார்.

1 dsc_0004 dsc_0005 dsc_0008 dsc_0015 dsc_0016 dsc_0017 dsc_0018 dsc_0019 dsc_0020 dsc_0022 dsc_0023 dsc_0024 dsc_0027 dsc_0031 dsc_0034 dsc_0035 dsc_0038 dsc_0039 dsc_0040 dsc_0042 dsc_0043 dsc_0045 dsc_0046 dsc_0047 dsc_0048 dsc_0050 dsc_0051 dsc_0052 dsc_0053 dsc_0056 dsc_0057 dsc_0058 dsc_0060 dsc_0061 dsc_0062 dsc_0064 dsc_0067 dsc_0068 dsc_0069 dsc_0070 dsc_0071 dsc_0073 dsc_0074

வவுனியா சுந்தரபுரத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற கார்த்திகை 27 நினைவேந்தல்!!

 
வவுனியா சுதந்திரபுரத்தில் கார்த்திகை 27 நாள் நினைவேந்தல் நிகழ்வு இம்முறை உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு சாந்த நாயகி நற்பணி மன்ற உறுதுணையுடன் அநீதிக்கும், அடக்குமுறைக்குமான அமையத்தின் ஏற்பாட்டில் முகவும் எழுச்சிபூர்வவாமாக கொண்டாடப்பட்டது. இன் நிகழ்வில் சந்திரகுமார் கண்ணன், மாணிக்கம் ஜெகன், செ.சபாநாதன், மாவீரர் குடும்பங்கள் போன்ற பலரும் கலந்து கொண்டிருந்தனர்..

தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று கார்த்திகை 27 நாள் நினைவேந்தல் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற வேளையில் நினைவேந்தல் நிகழ்வை இறை ஆசியுடன் ஆரம்பித்து பின்னர் நினைவேந்தல் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு இந் நாளில் உயிர் நீத்த அனைத்து உறவுகளுக்கும் அக வணக்கம் செலுத்தியுள்ளனர்.

இருபது மாவீரர் குடும்பங்களுக்கான உணவுப்பொதிகள் மற்றும் தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

1 img_2428 img_2433 img_2485 img_2486 img_2488 img_2489 img_2491 img_2492 img_2494 img_2663 img_2667 img_2672 img_2676 img_2677 img_2679 img_2693 img_2697 img_2698 img_2699 img_2701 img_2702