தமிழைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை!!

aus

அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் செரிந்து வாழும் பகுதியான வெட்வோர்த்வில்லேயில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர் ஹக் மெக்டர்மோட்.

அவுஸ்திரேலியரான இவர், தமிழ் மொழியை அவுஸ்திரேலியப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு கல்வி அமைச்சரிடம் எழுத்து மூலம் முன்வைத்துள்ளார்.

சர்வதேசத்தில் சுமார் 70 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும் உலகின் தொன்மையான தமிழ் மொழியை பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம், தமிழர்களின் நீண்ட பெரும் பண்பாட்டையும் கலாசாரத்தையும் அனுபவிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல, அதுவொரு சிறப்பான கலாசாரம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழானது வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியாக இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழின் அருமையை உணர்ந்த அவுஸ்திரேலியரான ஹக் மெக்டர்மோட், எப்படியாவது தேசிய பாடத்திட்டத்தில் தமிழை சேர்த்துவிட வேண்டும் என தொடர்ந்து முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அவர் அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்திலும் உரையாற்றியுள்ளார்.

குவைத்தில் சட்டவிரோத உற்பத்தி நிலையம் நடத்திய இலங்கைப் பெண் கைது!!

kuwait1

குவைத்தில் இலங்கை பெண் ஒருவரினால் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பட்டதுடன் சந்தேக நபரான பெண்ணும் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபான பெரல்கள் 10, மதுபான போத்தல்கள் 400, மதுபானம் வடித்தலுக்கு உபயோகிக்க பயன்படும் 13 உபகரணங்கள் மற்றும் சில மூலப்பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் மலிவான விலையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கபெற்ற தகவல் கிடைத்தமையையடுத்து குவைத் நாட்டின் உள்ளக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் குழுவினரினால் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட அனைத்து மதுபானங்களும் அரசுடைமையாக்கப்பட்டதாக சந்தேகநபரான பெண்ணை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்பை மேற்கொண்ட மேஜர் ஜெனரல் அல்-டரா தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அரபு நாடுகளிலுள்ள பெரும்பாலான ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

kuwaitkuwait

லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் குஷ்பு!!

6c3f0033-92a8-4744-9772-c14e82ea0f9cotherimage
தமிழ் சினிமாவில் மார்க்கெட் இறங்கியவுடன் சின்னத்திரைக்கு நடிகைகள் வருவது வழக்கம்.அந்த வகையில் கடந்த சில வருடங்களாக ஆளுங்கட்சி தொலைக்காட்சியில் கேம்ஷோ ஒன்றை நடத்தி வந்தார். இவர் எதிர்க்கட்சியில் இணைந்ததால் வேறு தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் நிஜங்கள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.இது லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வரும் சொல்வதெல்லாம் உண்மை பாணியிலான குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சி தான்.

தமன்னாவால் பிரபல நடிகைகள் கடும் பீதி!!

mini-tamanna-bhatia-hot-images-8

தமன்னா தமிழ், தெலுங்கு என தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்து விட்டார்.ஹீரோயினாக நடித்து வரும் அவர் பாகுபலிக்கு பிறகு மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்து விட்டது.கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசுவாமி தனது மகன் நிக்கில் கவுடாவை நடிகராக பெரும் முயற்சி செய்து நிறைய பணம் செலவிட்டு ஜாக்குவார் படத்தின் மூலம் நாயகனாக மாற்றிவிட்டார்.

ஐட்டம் பாடலுக்கு ஆட இதுவரை 25 லட்சம் வாங்கிய தமன்னா, சார்மி, ஸ்ருதிஹாசன், காஜல் என யாரும் வாங்காத அளவுக்கு 75 லட்சம் வாங்கினார்.தற்போது இந்த வேட்டையில் தீவிரம் காட்டும் அவர் மேலும் இரு தெலுங்கு படத்தின் பாடல்களில் ஆட 1 கோடி ரூபாய் வாங்கி யுள்ளார்.

தங்களுக்கு வரவேண்டிய வாய்ப்பு அவர் பக்கம் போகிறதே என்றும் இவ்வளவு தொகை நமக்கு கிடைக்கவில்லையே என்றும் ஆதங்கத்தில் உள்ளனர் மற்ற நடிகைகள்.

கணவனை திட்டிய மனைவிக்கு ரூ.48 லட்சம் அபராதம்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

Man being angry at woman and using violence

இத்தாலி நாட்டில் பெற்ற மகன் முன்னிலையில் பெண் ஒருவர் அவரது முன்னாள் கணவனை திட்டிய குற்றத்திற்காக அவருக்கு ரூ.48 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இத்தாலி தலைநகரான ரோமில் பெயர் வெளிடப்படாத கணவன் மற்றும் மனைவி இருவர் தங்களுடைய மகனுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், தம்பதிக்கு ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.எனினும், மகன் தாயாரிடம் வளர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் சட்டப்படி, பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்தாலும் கூட, அவர்கள் இருவரையும் நேரில் சந்திக்கவும், உறவை வளர்த்து கொள்ளவும் அவர்களின் பிள்ளைகளுக்கு உரிமை உள்ளது.ஆனால், இந்த சட்டத்திற்கு எதிராக தாயார் செயல்பட்டுள்ளார். தன்னுடைய மகன் முன்னிலையில் தனது முன்னாள் கணவரை கடுமையாக விமர்சனம் செய்து திட்டி வந்ததாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது.

இவ்வழக்கு குடும்ப நீதிமன்றத்திற்கு நேற்று வந்தபோது, ‘மகன் முன்னிலையில் முன்னாள் கணவரை கடுமையாக விமர்சனம் செய்வது மாபெரும் குற்றம்.இதனால் மகனுக்கும் அவரது தந்தைக்கும் உள்ள உறவில் பிளவு ஏற்படும். இதுபோன்று ஒரு சூழலை தாயார் ஏற்படுத்த முயல்கிறார்.

எனவே, முன்னாள் கணவரை திட்டிய குற்றத்திற்காக தாயாருக்கு 30,000 யூரோ(48,06,883 இலங்கை ரூபாய்) அபராதம் விதிப்பதாகவும், இனிவரும் காலத்தில் இதே குற்றத்தை தாயார் தொடர்ந்து செய்தால், அவரது மகனை முன்னாள் கணவரிடம் ஒப்படைக்க நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தங்க சிலையாக உருவெடுத்த மம்மி!!

625-0-560-350-160-300-053-800-668-160-90
புத்தமதத்துக்கு பெரும் பங்காற்றிய ஒரு துறவியின் சடலத்தை பதனீடு செய்து பின்னர் அதை தங்க முலாம் பூசிய சிலையாக மாற்றி அங்குள்ள கோவிலில் வைத்துள்ள நிகழ்வு சீனாவில் அரங்கேறியுள்ளது.

சீன நாட்டில் உள்ள குஹான்சூ நகரில் Chongfu Temple என்னும் ஆலயம் அமைந்துள்ளது. அங்கு Fu Hou என்னும் புத்த மத துறவி தன் இறுதிகாலமான 94 வயது வரை சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி வந்தார், அந்த துறவி கடந்த 2012 ஆம் ஆண்டு காலமானார்.

அவர் அந்த கோவில் தங்கியபடியே தன் வாழ்நாள் முழுக்க புத்த மதத்துக்கு ஆற்றிய சேவை பணியை கெளரவிக்கும் விதமாக ஒரு மிகப்பெரிய விடயத்தை செய்ய கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது.

அரக்கத்தனமான மருமகளால் வயோதிப மாமனாருக்கு நடந்த அவலம்!!

injured-old-man-300x225
மருமகள் தாக்கியதால், மாமனார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கேகாலை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.கேகாலை கரமுபான பிரதேசத்தை சேர்ந்த 83 வயதான நபரே மருமகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனக்கு கிடைத்த சொத்து போதவில்லை எனக் கூறி அவரது கழுத்தை காலால் மிதித்துள்ளதாக முதியவர் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முதியவர் தனது சொத்தை பகிரப்பட்ட விதம் அநீதியானது எனக் கூறி பிள்ளைகளின் மனைவிமார் தொடர்ந்தும் தன்னை திட்டி வருவதாக முதியவர் கூறியுள்ளார்.

அத்தோடு குறித்த முதியவரின் 7 ஆண் பிள்ளைகளில் ஒருவரின் மனைவியே முதியவரை தாக்கியுள்ளார்.தாக்குதலுக்கு உள்ளானவரின் மனைவி இறந்து விட்ட நிலையில் அவர் மகன் ஒருவரது வீட்டில் வசித்து வந்துள்ளார்.மேலும் முதியவர் தாக்கப்படும் போது அவரது பேரப்பிள்ளைகள் அவரை காப்பற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானில் தொழில் பெற்று தருவதாக கூறி ஏமாற்றிய நபர் கைது!!

arrest-1
ஜப்பானில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி பணம் மோசடி செய்த ஒருவரை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.கண்டியில் வைத்து இந்த நபரை விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி நபர்களிடம் தலா 13 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபரின் வீட்டை சோதனையிட்ட போது அங்கிருந்து 13 கடவுச்சீட்டுக்கள், வங்கி அறிக்கைகள். பிறப்பத்தாட்சி பத்திரங்கள் என்பவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஸ்மார்ட்போன்களின் பட்டரிகள் நூற்றுக்கணக்கான நச்சு வாயுக்களை வெளியேற்றுகின்றன!!

smartphone

மின்னூட்டம் (Charge) செய்து பயன்படுத்தக்கூடிய சாதனங்களால் ஏற்படும் பாதகங்களை பலர் அறிந்திருப்பதில்லை.

இவ்வாறு மின்னூட்டமேற்றி (சார்ஜ்) பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் போன்கள், டெப்லட்களில் உள்ள பட்டரிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அபாயகரமான வாயுக்கள் வெளியேற்றப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தீப்பற்றுதல் மற்றும் வெடித்தல் போன்ற பாதகங்களை மட்டுமே பாவனையாளர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால், அவற்றிலிருந்து வெளியாகும் நூற்றுக்கணக்கான நச்சு வாயுக்கள் தோலில் அரிப்பு, கண்களில் பாதிப்பு மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.

மின்னூட்டமேற்றிப் பாவிக்கக்கூடிய பேட்டரிகளில் உள்ள லித்தியம் மற்றும் கார்பன் மோனாக்சைட் போன்றவற்றினால் இந்த நச்சு வாயுக்கள் வெளியேற்றப்படுவதாக அமெரிக்காவின் NBC Defence மற்றும் சீனாவின் Tsinghua பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டெப்லட்களைப் பயன்படுத்துவோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டெப்லட்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பட்டரிகளில் இருந்து வெளியாகும் நூற்றுக்கும் மேற்பட்ட அபாயகரமான வாயுக்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதோடு சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் ஏற்படுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இவை வெப்பமடையும் போதும், சேதமடைந்த அல்லது நீண்டகாலம் ஆன பேட்டரிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் போதும் இந்த நச்சுவாயுக்கள் வெளியேறுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த பேட்டரிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது, 50 சதவீதம் மின்னூட்டம் ஏற்றினாலே அதில் இருந்து நச்சு வாயுக்கள் வெளியேறத் துவங்கி விடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

காஷ்மீரில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 22 பேர் பலி!!

kashmir

இந்தியாவின் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் வடக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள பள்ளதாக்கில் பஸ் ஒன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் பிரதேசத்திலிருந்து 60 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ரியாசி மாகாணத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

மேலும் பஸ் வீதியை விட்டு விலகி பள்ளதாக்கில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்தியாவில் காணப்படும் உட்கட்டமைப்பு மற்றும் முறையற்ற நகர திட்டமிடல் காரணமாகவே விபத்துக்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நீர் தடாகத்தில் விழுந்த பிரித்தானிய பிரஜை உயிரிழப்பு!!

uk

சீகிரிய பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் உள்ள நீரத் தடாகத்தில் விழுந்து பிரித்தானிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீர்த் தடாகத்தில் விழுந்திருந்த குறித்த நபரை கிம்பிஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்க முற்பட்டபோது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

83 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சீகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி!!

12

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அளவெட்டி கந்தரோடை பகுதியை சேர்ந்த சுகந்தராசா சுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசாகஜன் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்கள்.

கந்தரோடையில் இருந்து பல்கலைக்கழக விடுதிக்கு, அதிவேகமாக வந்து கொண்டிருந்த வேளையில் குளப்பிட்டி பகுதியில் உள்ள வீதியில் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேவேளை, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொதுமக்கள் இது தொடர்பாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், உயிரிழந்த இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

1113

Google Flights தரும் புதிய அதிரடி வசதி!!

google-flight

கூகுள் நிறுவனம் தனது பயனர்களுக்காக வழங்கிவரும் பயனுள்ள சேவைகளுள் Google Flights சேவையும் ஒன்றாகும்.

இதன் ஊடாக வெளிநாட்டு பயணங்களின்போது அவசியமான விமான போக்குவரத்து அட்டவணைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இச் சேவையை மொபைல் சாதனங்களில் பெற்றுக்கொள்வதற்கென விசேட அப்பிளிக்கேஷனும் உருவாக்கி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது குறித்த அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு ஒன்றினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இப் புதிய பதிப்பில் பல்வேறு விமான சேவைகளும் ஒவ்வொரு நாட்டுக்குமான பயணங்களுக்கு அறவிடும் கட்டணங்களை தெரிந்துகொள்ள முடியும்.

தவிர இக் கட்டணங்களை ஒப்பிட்டு குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்கும் நிறுவனங்களை தெரிந்துகொள்ளும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக பல டொலர்கள் வரை மீதப்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

2வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து!!

Tim Southee of New Zealand is congratulated for taking the return catch to get Indian captain Mahendra Singh Dhoni wicket during the 2nd One Day International between India and New Zealand held at the Feroz Shah Kotla stadium on the 20th October 2016. Photo by: Shaun Roy/ BCCI/ SPORTZPICS

 

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. டெஸ்ட் தொடரையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து இன்று இரண்டாவது போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பை தெரிவு செய்ததையடுத்து நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய மார்டின் குப்தில் 2வது பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய அணித்தலைவர் வில்லியம்சன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டாம் லேதமுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

லேதம் 46 ஓட்டங்களும், வில்லியம்சன் சதம் கடந்து 118 ஓட்டங்களும் குவித்தனர். அடுத்து களமிறங்கிய ரோஸ் டெய்லர், அண்டர்சன் இருவரும் தலா 21 ஓட்டங்கள் பெற்றனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் எடுத்தது.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் பும்ரா, அமித் மிஸ்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 243 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அதிகபட்சமாக கேதர் ஜாதவ் 41 ஓட்டங்களும், அணித்தலைவர் டோனி 39 ஓட்டங்களும், பாண்டியா 36 ஓட்டங்களும், ரஹானே 28 ஓட்டங்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் டிம் சவுத்தி 3 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட், மார்ட்டின் குப்தில் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆட்டின் வயிற்றில் மனித உருவில் ஆட்டுக் குட்டி!!

aadu

தமிழகத்தில் ஆடு ஒன்றின் வயிற்றில் மனித உருவில் குட்டி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
நர்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் 15 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.

இதில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கரு உண்டான ஆடு குட்டி போடமால் இருந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை குறித்த ஆடு நிலைதடுமாறி விழுந்துள்ளது. உடனே உரிமையாளர் மணி ஆட்டின் வயிற்றை கழித்து பார்த்தபோது மனித உருவில் ஆட்டு குட்டி இருந்துள்ளது.

இதை பார்த்து விவசாயி மணி அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், சில நிமிடங்களுக்கு பிறகு குட்டி இறந்துள்ளது. இச்சம்பவம் கிருஷ்ணகிரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பெண்ணின் உறவினர்களால் மணமகன் படுகொலை : திருமணத்திற்கு சில நிமிடங்கள் முன்பு நடந்த சோகம்!!

murder

தெலங்கானா மாநிலத்தில் திருமணத்திற்கு சில நிமிடங்கள் முன்பு மணப்பெண்ணின் உறவினரால் மணமகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 24 வயதான அனில் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் இடையே சில ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்துள்ளது.

இவர்களின் இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதும் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். ஆனால் இவர்களின் இந்த முடிவுக்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் மணமகனின் உறவினர்களின் துணையுடன் இருவரும் புறநகர் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெண்ணின் உறவினர்கள் திருமணத்திற்கு சில நிமிடங்கள் முன்பு மணமகனை கத்தியால் தாக்கி சம்பவயிடத்திலேயே கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

மட்டுமின்றி மணமகனின் தந்தையையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் அவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இதனிடையே அந்த கும்பல் மணபெண்ணை அங்கிருந்து அழைத்து சென்றுள்ளது. இத்தகவல் அறிந்து வந்த பொலிஸார் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.