பிரேசிலில் தேவாலயத்தில் இருக்கும் பாதிரியார் ஐந்து வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் Montes Claros என்ற ஊரில் இளம் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்தார்கள்.
அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகள் இருக்கிறாள், அந்த சிறுமி தினமும் அருகில் உள்ள தேவாலயத்திற்கு சென்று Joao de Silva (54) என்னும் பாதிரியாரிடம் ஆங்கிலம் பயில்வது வழக்கமாகும்.
ஆனால் சில தினங்களாக அந்த சிறுமி அந்த பாதிரியாரிடம் பாடம் படிக்க செல்ல மாட்டேன் என அடம் பிடித்துள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுமியின் வரைதல் புத்தகத்தை எடுத்து அவளின் பெற்றோர் ஏதேச்சையாக பார்த்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அதில் ஒரு சிறுமி பயத்துடன் படுத்திருப்பது போலவும் அவளிடம் ஒரு ஆண் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சி செய்வது போலவும் வரையப்பட்டிருந்தது.
இதே போல ஆறு புகைபடங்களை அந்த சிறுமி வரைந்திருந்தார். எல்லாமே ஒரு ஆண் சிறுமியிடம் தவறாக நடந்து கொள்வது போன்ற புகைப்படங்கள் ஆகும்.
உடனே நடந்ததை உணர்ந்த அந்த சிறுமியின் பெற்றோர் அந்த பாதிரியார் குறித்து பொலிசாரிடம் புகார் அளித்தனர்.
உடனே அந்த சர்ச்சுக்கு விரைந்த பொலிசார், குறித்த பாதிரியாரை கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போக்கோ ஹரம் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிய இளம்பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டது பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
போக்கோஹரம் பயங்கரவாதிகளிடம் இருந்து பல முயற்சிகளுக்கு பின்னர் தப்பிய 17 வயது நைஜீரிய இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீருடன் விவரித்துள்ளார்.
நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் உள்ள இவரது வீட்டில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு குறித்த இளம்பெண் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டார்.
குறித்த பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டு பின்னர் அந்த கூட்டத்தில் மொருவர் தம்மை திருமணம் செய்து கொண்டதாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னரே தமது வாழ்க்கையில் கொடுமைகள் பல நடந்தேறியது என்று அவர் கண் கலங்கி விவரித்துள்ளார்.
திருமணத்திற்கு முன்னர் ஒரு வேலைக்காரி போன்று நடத்தப்பட்டுள்ளார். அனைத்து பணிவிடைகளையும் செய்து முடித்த பின்னரும் ஓய்வுக்கு நேரம் இருக்காது என்றார் அவர்.
பயங்கரவாதிகளுக்கு உணவு சமைக்க வேண்டும், அவர்கள் உண்டு முடித்த பின்னர் அனைத்து எச்சில் பாத்திரங்களையும் சுத்தப்படுத்த வேண்டும். அதன் பின்னரே உணவு அருந்த வேண்டும்.
திருமணத்திற்கு பின்னர் கணவருக்கு மட்டுமே பணிவிடை செய்தால் போதும் என்று கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னரே கொடுமைகள் தொடங்கியது என்றார்.
குறித்த நபரை திருமணம் செய்துகொள்ள தமக்கு விருப்பமே இல்லை என்றபோதும் தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறும் அவர்,
அந்த நபர் தொடர்ந்து சித்திரவதைக்கு தம்மை ஆளாக்கியதாக குறிப்பிட்ட அந்த இளம்பெண், பாலுறவுக்கு மறுத்த போதெல்லாம் தம்மை வன்புணர்வுக்கு உள்ளாக்கினார் என்றார்.
மட்டுமின்றி தம்மை அவர் தேவை இன்றி கடுமையாக தாக்கி வந்தார் எனவும், எத்தனை நாள் எத்தனை முறை அவர் என்னை தாக்கினார் என்பதற்கு கணக்கில்லை என்றார்.
அதுமட்டுமின்றி, போக்கோ ஹரம் பயங்கரவாதிகளால் தண்டிக்கப்படும் கொடூர நிகழ்வுகளையும் தங்களை பார்க்க நிர்பந்தித்து வந்ததாகவும் குறிப்பிட்டார்.
அதில் கல்லால் அடித்து கொல்லுதல், கழுத்து துண்டித்து கொல்லுதல் அல்லது சித்திரவதைக்கு ஆளாக்குதல் உள்ளிட்டவைகள் ஒரு பொழுதுபோக்கு போல அவர்கள் தினசரி நிறைவேற்றி வந்துள்ளதாக இவர் தெரிவித்துள்ளார்.
இனி தமது வாழ்க்கை தனக்கான குடும்பத்தினருடன் மட்டுமே என்றும் வேறொரு நபரை திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கை ஒன்றை துவங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரேசிலில் படுகொலை செய்யப்பட்டவரின் தலையை சககைதிகள் கால்பந்து போல் உதைத்து விளையாடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் பிரேசில் நாட்டின் போர்டாலிசா மாகாணத்தில் உள்ள கைதிகள் சிறையில் படுகொலை செய்யப்பட்டவரின் தலையை சககைதிகள் கால்பந்து போல் உதைத்து விளையாடியுள்ளனர்.
பிரேசிலில் நிதி திரட்டுவதற்காக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் Primeiro Comando da என்ற கும்பல் மூலம் கொடூமரான தாக்குதல்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் இறந்ததாகவும், காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
நாட்டில் வன்முறை தூண்டியதன் விளைவாக 20 பேர் கடந்த வாரம் கொலைசெய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் Primeiro Comando da கும்பல் சிறையில் இருந்த தங்கள் எதிரி ஒருவரை வெட்டி சாய்த்து விட்டு இரத்ததில் மிதந்த அவரது தலையை கால்பந்து போல் உதைத்து விளையாடிய மிருகத்தனமான செயல் பிரேசிலில் சிறைசாலையில் அரங்கேறியுள்ளது.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பிரேசில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் செல்வ செழிப்புடன் வாழ வேண்டி இளம்பெண்ணின் தலையை வெட்டி நரபலி கொடுத்த மந்திரவாதி பொலிசாரிடம் சிக்கியுள்ளான்.
கொல்கத்தாவில் மேற்கு மிட்னாபூர் பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் கடந்த புதன்கிழமை தலை இல்லாது இளம்பெண்ணின் சடலம் கிடந்துள்ளது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலைப் பெற்ற பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டுள்ளனர்.
மேலும், பெண்ணின் சடலத்திற்கு அருகில் ஏதோ பூஜை, சடங்குகள் நடந்திருப்பதற்கான தடயங்களை கணடறிந்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த பொலிசார் அந்த பகுதியில் பில்லி, சூனியம் போன்ற சடங்குகளில் ஈடுபட்டு வந்த ராமபதா மன்னா என்பவனை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
செல்வசெழிப்பை பெறுவதற்காக அந்த இளம்பெண்ணை கடவுளுக்கு நரபலி கொடுத்ததாக பில்லி, சூனியம் வைக்கும் ராமபதா ஒப்புக் கொண்டுள்ளான்.
மேலும், அந்த பெண்னை சாலையில் பார்த்ததாகவும், தனது மந்திர சக்தி மூலம் அந்த பெண்ணிற்கு உள்ள பிரச்சனைகளை தீர்த்து செல்வ செழிப்பை கொடுப்பதாக உறுதியளித்து அந்த பெண்ணை மயக்கி அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளான்.
இதையடுத்து, மந்திரவாதி ராமபதாவினை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், இறந்த பெண் யாரென்று தேடி வருவதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் குடும்ப சூழ்நிலையால் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்ட போது அண்ணன் படிப்பை தொடர தம்பி தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. தற்கொலைக்கு முன்பு வீடியோ எடுத்த நிகழ்வு பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூர், செட்டியாஅகரம் பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன், மல்லிகாதேவி. இவர்களுக்கு தினேஷ்குமார், சந்தோஷ்குமார் என இரண்டு மகன்கள்.
ரகுநாதன், கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தினேஷ்குமாரும், சந்தோஷ்குமாரும் காரப்பாக்கத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்தனர். சந்தோஷ்குமார், 9ம் வகுப்பு படித்தார்.
இந்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் ரகுநாதன், வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்ப சென்னை ஆழ்வார்திருநகர் சிக்னலை கடந்தார். அப்போது விபத்துக்குள் சிக்கி அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டுக்குள் முடங்கினார்.
இதனால் இரண்டு மகன்களின் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதன்காரணமாக சந்தோஷ்குமார், பத்தாம் வகுப்புக்கு செல்லவில்லை. இந்த சூழ்நிலையில் கடந்த 4.8.2016ல் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார் சந்தோஷ்குமார்.
இதுகுறித்து மல்லிகாதேவி கூறுகையில், “சந்தோஷ்குமார், நன்றாக படிப்பான். கல்வி கட்டணம் 30 ஆயிரம் ரூபாயை செலுத்தவில்லை என்று பள்ளி நிர்வாகத்தில் தெரிவித்தனர். இதனால் அவனை அரசு பள்ளியில் சேர்க்க டி.சி.யை கேட்டோம்.
அப்போது கல்வி கட்டணத்தை செலுத்திய பிறகுதான் டி.சி தருவதாக சொல்லி விட்டனர். இதற்கிடையில் மாணவர் சேர்க்கை அரசு பள்ளியில் முடிந்து விட்டதால் இந்த ஆண்டு அவனால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அதே நேரத்தில் அவனது அண்ணன் அந்த பள்ளியில் பிளஸ் 2 படித்தான். ‘குடும்பத்தில் நிலவிய வறுமையால் அண்ணனுக்கு பீஸ் கட்டி படிக்க வையுங்கள். நான் அடுத்தாண்டு படித்துக் கொள்கிறேன்’ என்று சொன்னான்.
பெருந்தன்மையாக நடந்த அவனுக்குள் பள்ளி நடந்த சம்பவங்கள் மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. பீஸ் செலுத்தவில்லை என்று பள்ளி நிர்வாகத்தினர் அவன் மனம் பாதிக்கப்படும் வகையில் பேசியுள்ளனர்.
இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான். தற்கொலை செய்வதற்கு முன்பு அவனது தற்கொலைக்கான காரணத்தை வீடியோவாக செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளான். அந்த தகவல் இப்போதுதான் எங்களுக்கு தெரியவந்தது” என்றார் கண்ணீர் மல்க.
தற்கொலைக்கு முன்பு சந்தோஷ்குமார் பேசிய வீடியோ ஒரு நிமிடம் 45 நொடிகள் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் சந்தோஷ்குமாரின் மரண வாக்குமூலம் இது.
“என்னுடைய சாவுக்கு அந்த பள்ளிதான் காரணம். மேலும் தகவல் வேண்டும் என்றால் அம்மாவிடம் கேட்டுக்கொள்ளுங்கள். என்னால் பேச முடியவில்லை. அம்மா, அப்பா, அண்ணன் இனியாவது சந்தோஷமாக இருங்கள். சண்டை போடாமல் இருங்கள்.
எனக்கு சின்னதாக இரண்டு ஆசைகள் இருக்கின்றன. அதை முடிந்தால் பண்ணுங்கள். இல்லை என்றால் வேண்டாம். என்னுடைய உடல் ஒருநாள் கோயமுத்தூரிலும், இன்னொரு நாள் சென்னையில் இருக்கணும்.
அடுத்து ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி அவர், என்னைப் பார்க்க வரணும். என்னை நினைத்து அழாதீர்கள். குட் பாய் என்பதோடு சந்தோஷ்குமாரின் வீடியோவும், அவரது வாழ்க்கையும் முடிந்து விட்டது.
இதுகுறித்து எஸ்.ஆர்.எம்.சி போலீஸ் நிலையத்தில் கேட்டால், “மாணவன் சந்தோஷ்குமார் தற்கொலை குறித்து விசாரித்து வருகிறோம். அவரது வீடியோவில் பள்ளி பெயரை மட்டும் சொல்கிறார்.
அதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்தில் விசாரித்தால் இந்த கல்வி ஆண்டு முதல் சந்தோஷ்குமார் பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் அவனை பள்ளியிலிருந்தே நீக்கிவிட்டதாக சொல்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.
ரகுநாதன், மல்லிகாதேவியின் சொந்த ஊர் கோயமுத்தூர், சாய்பாபா காலனி. இதனால்தான் சந்தோஷ்குமார், தன்னுடைய உடலை கோயமுத்தூருக்கு கொண்டு செல்லுமாறு வீடியோவில் சொல்கிறார்.
இதுபோல அவரது தோழியை பார்க்க வர வேண்டும் என்றும் கூறுகிறார். இந்த இரண்டு ஆசைகளையும் சந்தோஷ்குமாரின் பெற்றோரால் நிறைவேற்ற முடியவில்லையாம்.
கேரளாவில் பறவையை காப்பாற்ற போனவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேராள மாநிலத்தைச் சேர்ந்தவர் முகேஷ் ஜெயின். பறவைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஜெயின் அப்பகுதியில் எந்த ஒரு பறவை அடிபட்டிருந்தாலும் உடனடியாக அதை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பார் அல்லது அவரால் முயன்ற அளவுக்கு சிகிச்சை அளித்தும் பார்ப்பார்.
இந்நிலையில் அப்பகுதியில் கழுகு ஒன்று மரத்தில் சிக்கித் தவிப்பதாக ஜெயினிற்கு தகவல் சென்றுள்ளது. ஜெயின் செல்ல முடியாத காரணத்தினால் தன்னுடைய நண்பரான மணியை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் மணி அங்கு சென்று பார்த்த போது கழுகு இறக்கையில் அடிபட்டு பறக்கமுடியாமல் அருகில் இருந்த குளத்தில் விழுந்துள்ளது. இதனால் உணர்ச்சிவசப் பட்ட குமார் குளத்தைப் பற்றி தெரியாமல், உடனடியாக குளத்தின் உள்ளே குதித்துள்ளார். ஆனால் அவர் குதித்த பகுதியே சேறு, சகதி என்பதால் அதில் மாட்டிகொண்ட அவர் அதில் இருந்து அவரால் மீளமுடியவில்லை.
அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆனால் கழுகு பத்திரமாக மீட்கப்பட்டது. உயிரிழந்த குமார் இதுவரை 100க்கும் மேற்பட்ட பறவைகளை காப்பாற்றியுள்ளார் எனவும் இதற்காக அவர் பணம் ஏதும் பெற்றுக்கொண்டதில்லை எனவும் முகேஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
களுத்துறை பண்டாரகம நகரில் உள்ள பைகள் விற்பனை செய்யப்படும் கடை ஒன்றில் பைகளை கொள்வனவு செய்வது போல் சென்ற மூன்று பெண்கள் அங்கிருந்த கைப் பைகளை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 4 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு கைப் பைகளை மிகவும் நூதனமான முறையில் கொள்ளையிட்டுள்ளனர்.
கடையில் வேலை செய்த ஊழியரை பெண்களுடன் வந்த கர்ப்பிணி பெண்ணே, கைப் பைகளை கொள்வனது செய்வது போல் விலைகளை விசாரித்து ஏமாற்றியுள்ளார்.
கர்ப்பிணி பெண் ஊழியருடன் பேச்சு கொடுக்கும் நேரத்தில் ஏனைய இரண்டு பெண்கள் பைகளை திருடும் காட்சி கடையில் இருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
2015ஆம் ஆண்டு இறுதியில் இருந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கை ரூபாவில் ஏற்பட்ட மாற்றம் என்னவென்பது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் இலங்கை ரூபாய் அமெரிக்கா டொலரிற்கு எதிராக 1.9 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் வெளிநாட்டு நாணயங்களின் மாற்று விகித அடிப்படையில், இலங்கை ரூபாய் யூரோவுக்கு எதிராக நூற்றுக்கு 3.0 வீதத்திலும், ஜப்பானின் யென்னுக்கு எதிராக நூற்றுக்கும் 1.5 வீதத்திலும், கனேடிய டொலருக்கு எதிராக நூற்குக்கு 5.8 வீதத்திலும், இந்திய ரூபாய்க்கு எதிராக நூற்றுக்கு 1.4 வீதத்திலும் குறைவடைந்துள்ளது.
இதேவேளை, இந்த காலப்பகுதியினுள் ஸ்ரேலிங் பவுண்ட்களுக்கு எதிராக நூற்றுக்கு 18.8 வீதத்திலும் இலங்கை ரூபாய் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு, புன்னைச்சோலையில் நேற்று 15 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அதேயிடத்தைச் சேர்ந்த கோபாலப்பிள்ளை விஜேகாந்த என்பவரை எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தையென்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளித்த பின்னர் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களிடம் கையளிக்குமாறு நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
Trinco Aid நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலங்கை தமிழ் சங்கம் அமெரிக்காவினுடைய நிதியுதவியில் தமிழரின் குரல் இணை அனுசரனையில் உளவள துறையில் நிபுணத்துவம் பெற்ற வைத்திய கலாநிதி எஸ்.சிவதாஸ் அவர்களால் பயிற்சிக் கருத்தரங்கு வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய உயர்தர மாணவர்களுக்கு இடம்பெற்றது.
பாடசாலை மாணவர்களின் இடைவிலகல், மாணவர்களின் தற்போதய போக்கு , வெளிநாட்டு மோகத்தால் கல்வியில் பின்னடைவு, பல்கலைக்கழக தெரிவிலுள்ள மாணவர்களின் வீழ்ச்சி என்பவற்றை நோக்கமாக கொண்டு இக் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் T.அமிர்தலிங்கம் வைத்திய கலாநிதி சுதாகரன் , சர்வதேச இந்து இளைஞர் பேரவை தலைவரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான சிவ.கஜேந்திரகுமார் பாடசாலையின் உளவள துணை ஆசிரியர் சிவாகரன் மற்றும் Trinco aid நிறுவனத்தின் ஸ்தாபகர் இராஜக்கோண் ஹரிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக் கருத்தரங்கில் சுமார் 35க்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கின் முடிவில் மாணவர்க ளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படடமை குறிப்பிடத்தக்கது.
லண்டன் சிட்டி விமான நிலையத்தில் இரசாயனதாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பிரிட்டிஷ் எயர்வெயஸ் ஊழியர் 5 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களின் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மேலும் 26 பேர் அம்பியுலன்ஸ் வைத்திய சேவைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானநிலையத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன், விமான நிலையமும் அவசரமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக அந்த செய்திகளில் மேலும் தெரிவிக்கப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூடு மற்றும் விபத்துதொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 5 பொலிஸ் அலுவலர்களும் இன்று நீதிமன்றத்தில்ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
யாழ்ப்பாண நீதிவான் முன்னிலையில் அவர்கள் ஐந்து பேரும் ஆஜர் செய்யப்படவுள்ளதாகபொலிஸ் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் தமது உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளைசெலுத்தி சென்ற நிலையில் அவர்கள் மீது பொலிஸ் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இது சாதாரண விபத்து என்று கூறப்பட்டாலும் கூட, பிரதேச மக்கள், சம்பவம்இடம்பெற்ற போது துப்பாக்கி சூட்டு சத்தங்களை கேட்கக்கூடியதாக இருந்தது என்று சந்தேகம்வெளியிட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் பிரேத பரிசோதனையின் போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றமாணவரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தமை தெரியவந்தது.
இதனையடுத்து சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் என்று கூறப்படும் 5 பொலிஸார்கைது செய்யப்பட்டனர்அ
அவர்களின் பணிகளும் இடைநிறுத்தம் செய்யப்பட்டன.இந்தநிலையிலேயே அவர்கள் இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
இந்தியாவில் தங்கியிருந்த இலங்கை அகதிகளில் 25பேர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைநாடு திரும்புகின்றனர். சுய விருப்பத்தின் அடிப்படையில் அவர் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கானஉயர்ஸ்தானிகரத்தின் அனுசரணையுடன் நாடு திரும்புகின்றனர்.
மதுரை விமான நிலையம் ஊடாக அவர்கள் கட்டுநாயக்கவை வந்தடையவுள்ளனர். இந்த தகவல்களை மீள்குடியேற்றத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.
10 ஆண்களும் 15 பெண்களும் உள்ளடங்கியுள்ள இந்த அகதிகள், மன்னார், திருகோணமலை,வவுனியா, மாத்தளை மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களை சேர்ந்தவர்களாவர்.
இவர்களுக்கு ஐக்கிய நாடுகள் முகவரகம் இலவச விமானச்சீட்டுக்களை வழங்கியுள்ளது. அத்துடன் மீள் இணைப்பு கொடுப்பனவாக ஒருவருக்கு 75 டொலர்களும், போக்குவரத்துக்காக 19டொலர்களும் உணவு அற்ற தேவைகளுக்காக 75 டொலர்களும் வழங்கப்படவுள்ளன.
இதேவேளை இந்தியாவின் முகாம்களில் தங்கியிருப்பதாக கூறப்படும் 64 ஆயிரம் இலங்கைஅகதிகளில் 2011 முதல் இதுவரை 5140 பேர் சுய விருப்பத்தின்பேரில் தாயகம்திரும்பியுள்ளனர் என்று அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
ஸிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் சந்திமால் இக்குழாமில் இடம்பெறவில்லை. தினேஷ் சந்திமாலின் கைவிரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் முழுமையாக குணமடையாமையே இதற்குக் காரணம்.
இலங்கைக் குழாம் விபரம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கு ஆதரவாக இலண்டனில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக நேற்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
”ஆறு ஏழு தலைமுறையாய் மாடாய் நாம் உழைத்து ஆணி முனையில் கூட சொந்த காணியில்லை”, “திண்று கொழுக்கும் திமிங்கலங்கள் கூட்டு சேர்ந்து கொள்கை வகுக்கும்“, “எவனெவனோ சொகுசா வாழ எங்கள் உயிரை இங்கு மாய்த்தோம்“ என்று கோசங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும்,அவர்கள் கைகளில் மும்மொழிகளில் எழுதப்பட்ட வாசங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
வவுனியா செட்டிகுளம் வீரபுரம் மணிவாசகர் வித்தியாலயத்திற்கான வாயில்வளைவுக்கான அடிக்கல் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களால் அண்மையில் நாட்டிவைக்கப்பட்டது.
சுகாதார அமைச்சரின் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியில் அமைக்கப்படவுள்ள வாயில்வளைவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சரின் செயலாளர் திரு.ப.சத்தியசீலன், அமைச்சரின் இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.