ஹைதராபாத்தில் தனக்கு தானே மயக்க ஊசி போட்டுக் கொண்டு மருத்துவ மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா மருத்துவ பல்கலைகழகத்தில் முதுகலை மருத்துவம் முதலாமாண்டு படித்து வருகிறார் 27 வயதான ஸ்ரவனி என்ற அந்த இளம்பெண்.
நேற்று இரவு 7 மணி அளவில் ஸ்ரவனிக்கு அவருடைய அம்மா தொலைப்பேசியில் அழைத்துள்ளார். ஆனால் அவர் தொலைப்பேசியை எடுக்காததால், அவருடைய அறைத் தோழிக்கு ஸ்ரவனியின் அம்மா போன் செய்து ஸ்ரவனி போனை எடுக்காதது குறித்து தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அறைக்கு திரும்பிய ஸ்ரவனியின் தோழி அறை உள்புறமாக தாளிடப்பட்டதை அறிந்துள்ளார். பின்னர் ஜன்னல் வழியாக பார்க்கும் போது, ஸ்ரவனி அறுவை சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் மயக்க மருந்தை, ஊசி மூலம் தனது கை நரம்பில் செலுத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அறையின் கதவை உடைத்து, ஸ்ரவனியை மருத்துவனையில் சேர்த்துள்ளனர். ஆனால் ஸ்ரவனியை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ள காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஸ்ரவனி காதலித்த இளைஞரை திருமணம் செய்து கொள்ள அவரது பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ புத்தர் சிலை ஒன்றின் மீது கால்வைத்த நிலையில் புகைப்படம் ஒன்றை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார்.
புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள தொட்டியொன்றில் தனது காலை வைத்திருப்பது போன்ற புகைப்படமொன்றை தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இலங்கையில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்களாகிய சிங்களவர்களின் மதமான பௌத்த மதத்தின் கடவுளாக வழிபாடும் இந்த வேளையில் இவரின் பதிவானது, சிங்களவர்கள் மத்தியில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.
குறித்த செயலினை கடுமையாக கண்டிப்பதாக வெளிநாட்டு செய்திப்பிரிவுகள் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த செய்தியால் இலங்கையில் உள்ள ரொனால்டோவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தன்னை 4 ஆண்கள் கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர் என பொய்யாக முறைப்பாடு செய்த யுவதி ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றமொன்று 12 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 25 வயதான லெய்ஹா ஆர்ட்மென் எனும் யுவதிக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனது வீட்டுக்கு அருகில் முகவரியொன்றை தேடி வந்த இனந்தெரியாத கறுப்பின ஆண்கள் நால்வர் தன்னை கார் ஒன்றில் கடத்திச் சென்றதாகவும் பின்னர் தன்னைக் கட்டிவைத்துவிட்டு, அவர்கள் நால்வரும் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகவும் தன்னை தாக்கியதாகவும் இவர் கூறினார்.
இரத்தம் தோய்ந்த நிலையில் தான் கட்டிவைக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்தும் புகைப்படமொன்றையும் இவர் தனது காதலருக்கு அனுப்பிவைத்தார்.
தன்னை விடுவிப்பதற்காக கடத்தல் குழுவினர் கோரும் கப்பத்தொகையை அவர்களிடம் கொடுக்குமாறும் தனது காதலரிடம் லெய்ஹா ஆர்ட்மென் கோரினார்.
இறுதியில், கடத்தல் குழுவினர் தன்னை வாகனத்தில் ஏற்றி வந்து வீட்டுக்கு அருகில் கைவிட்டுச் சென்றதாகவும் அதன்பின் வைத்தியசாலைக்கு தான் சென்றதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தினர். எனினும், இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்பது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது. தான் பொய் கூறியதாக லெய்ஹா ஆர்ட்மென் ஒப்புக்கொண்டார்.
அதையடுத்து பொய்யான முறைப்பாடு செய்ததாக குற்றம் சுமத்தி லெய்ஹாவுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி, 600 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் மழை பொழிந்த பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அதன் 2ஆம் பாகம் இன்னும் பிரம்மாண்டமாய் உருவாகி வருகிறது.
ஏறத்தாழ ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அடுத்த வருடம் ஏப்ரலில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் வியாபாரம் இப்போதே சூடுபிடித்துள்ளது.
‘பாகுபலி 2’ படத்தின் ஹிந்தி விநியோக உரிமையை கரண் ஜோஹர் மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.
அதோடு அதன் செனல் ரைட்ஸும் எந்த தென்னிந்திய படத்திற்கும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய விலையில் வாங்கப்பட்டிருக்கிறதாம்.
இந்நிலையில், இப்படம் குறித்த புதிய செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. இன்று முதல் 27ஆம் திகதி வரை நடைபெறும் 18 ஆவது மும்பை திரைப்பட விழா’வில் ‘பாகுபலி 2’ படத்தின் ஃபெர்ஸ்ட்லுக் போஸ்டர், மேக்கிங் வீடியோ, டீஸர், கிராபிக் நாவல் பிரிவியூ ஆகியவற்றை வெளியிடவிருக்கின்றனர்.
எதிர்வரும் 22 ஆம் திகதி மாலை 4 மணியளவில் இந்த நடைபெறவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முதல்முறையாக 360 டிகிரி மேக்கிங் வீடியோவையும் வெளியிடுகிறார்கள். வேர்ச்சுவல் ரியாலிட்டி என்றழைப்படும் விஆர் கண்ணாடிகளை அணிந்து பார்க்கும் வகையில் ‘பாகுபலி 2’ படத்தின் டீஸரையும் வெளியிடுகிறார்கள்.
அதிகரிக்கும் உணவு பழக்கம்,புகை,மாசுபாடு காரணமாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
புற்று நோயை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, அதுமட்டுமின்றி புற்றுநோயை கண்டறியவும் இந்நோய்க்கான சிகிச்சைகளும் அதிகம் செலவை ஏற்படுத்துகிறது.
புற்றுநோய் தொடர்பான சோதனைகளுக்கு பெரிய ஆராய்ச்சி கூடங்களையே மக்கள் நாட வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில் தற்போது புற்றுநோயைக் கண்டறியும் சுலபமான வழி முறையை வொஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த கருவியினை நம்முடைய ஸ்மார்ட் போனுடன் இணைத்து நம்மால் வீட்டிலேயே குறைந்த செலவில் புற்றுநோயை கண்டறிய முடியும்.
இந்த வழிமுறையின் மூலம் ஆய்வுக்கூடங்களின் தரத்திற்கு நிகராக புற்றுநோயின் பாதிப்பு குறித்த முடிவுகளை தெரிந்துக்கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருமண வைபவத்தில் அழைப்பிதழ் மூலமே, திருமண வீட்டாரின் செல்வச் சிறப்பை சிலர் வெளிகாட்ட எண்ணுவர்.
இதுவரை காலமும் நாம் பார்த்துள்ள மற்றும் அறிந்துள்ள ஆடம்பர அழைப்பிதழ் என்பது அதிக விலையிலானதாகவோ, அல்லது அழைப்பிதழுடன் சில மதிப்புமிக்க பொருட்களை வைத்து தருவது என இந்த வகையிலானவையாகவே இருந்து வருகிறது.
ஆனால், கர்நாடக செல்வந்தர் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழ் புது வகையாக வடிவமைத்துள்ளார்.
கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க தொழில் அதிபருமான ஜனார்தனன் ரெட்டி தான் இந்த அழைப்பிதழை உருவாக்கியுள்ளார்.
ஜனார்தன் ரெட்டியின் மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருக்கிறது, திருமணத்திற்கு அழைக்க இவர் ஒரு அழைப்பிதழ் பெட்டியையே கொடுத்து வருகிறார்.
குறித்த அழைப்பிதழ் பெட்டியை திறந்தவுடன் அதில் ஒரு திரையில் ஒரு நிமிடத்திற்கும் அதிகமாக ஓடும் ஒரு வீடியோ தோன்றுகிறது, அதில் ஒரு பிரத்தியோக பாட்டு ஒளிபரப்பாகிறது, அதில் முன்னாள் அமைச்சர் ரெட்டி, அவரின் மனைவி, மகன், மற்றும் மணப்பெண், மணமகன் ஆகியோர் தோன்றி திருமணத்திற்கு அழைக்கும் காட்சி ஒளிபரப்பாகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்போலோ மருத்துவமனைக்குள் பொலிஸாரின் பாதுகாப்பையும் மீறி நுழைந்த மர்மநபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆயிரம்விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 28 நாட்களாக அவர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால், அப்போலோ மருத்துவமனை பொலிஸாரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. குறிப்பாக ஜெயலலிதா சிகிச்சை பெறும் இரண்டாவது தளத்தில் யாரும் அனுமதியின்றி செல்ல முடியாது. நீண்ட விசாரணைக்குப்பிறகே சிகிச்சைக்குரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே மருத்துவமனைக்குள் நோயாளிகளும், பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஜெயலலிதா, அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அப்போலோ மருத்துவமனைக்கு வெளியில் அ.தி.மு.க தொண்டர்கள் தவமாய் காத்திருக்கின்றனர். மேலும், பத்திரிகையாளர்களும் அங்கு குவிந்துள்ளனர். ஜெயலலிதாவை சந்திக்க அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அப்போலோ மருத்துவமனை வளாகம் பரபரப்பான பகுதிகளில் ஒன்றாகி விட்டது.
இந்தநிலையில் இன்று பிற்பகல், அப்போலோ நுழைவு வாயிலில் பொலிஸாரின் பாதுகாப்பையும் மீறி, 37 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிரதான வாயிலை தாண்டி வேகமாக மருத்துவமனைக்குள் நுழைய முயன்றார். அந்த நபரின் நடவடிக்கையில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவரைப் பிடித்து பொலிஸார் விசாரித்தனர். அப்போது, அவர் தன்னுடைய பெயர் உமேஸ்ரெட்டி என்று தெரிவித்தார். அப்போலோவில் சிகிச்சை பெற செல்வதாக தெரிவித்தார். ஆனால் அவரது கையில் அ.தி.மு.க துண்டு இருந்ததால் பொலிஸாருக்கு உமேஸ்ரெட்டி மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அழைத்துச் சென்ற பொலிஸார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது உமேஸ்ரெட்டி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மாறி, மாறி பேசினார். இது பொலிஸாருக்கு உமேஸ்ரெட்டி மீதுள்ள சந்தேகம் அதிகரித்தது. இதனால் அவரிடம் தொடர்ந்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “உமேஸ்ரெட்டி, சிகிச்சை பெற செல்வதாக பாதுகாப்பில் நின்ற பொலிஸாரிடம் கூறி விட்டு உள்ளே நுழைந்துள்ளார். அவரது கையில் அ.தி.மு.க துண்டு இருந்ததைப் பார்த்தவுடன் அவரிடம் விசாரித்தோம். முதற்கட்ட விசாரணையில் அவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. முழு விசாரணைக்குப்பிறகே அவர் எதற்காக அப்போலோவுக்கு சென்றார் என்ற விவரம் தெரியவரும்” என்றார்.
அப்போலோவுக்குள் சர்வசாதாரணமாக நுழைந்த உமேஸ்ரெட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவர், ஜெயலலிதாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளே சென்றாரா என்ற கோணத்திலும் விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அங்கு அதிகரிக்கப்பட்டதுடன், போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கவனக்குறைவாக செயல்பட்ட பொலிஸாரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.
யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள பிரபல கடைக்கு முன்னால் இருந்த வயோதிபருக்கு நடந்த சோகம்.
சிலர் தவறுகள் விடுவது வழமை அதை செய்யாதவாறு அவர்களுக்கு எடுத்துரைப்பது பண்பு ஆனால் இரக்க மற்ற முறையில் நடந்து கொள்வது மனித பண்பு அல்ல….
யாழில் உள்ள உணவு சாலை ஒன்றின் முன் ஊனமுற்ற வயோதிபர் ஒருவர் இருப்பதனை கண்ட உணவக ஊழியர் ஒருவர் மோசமான முறையில் விரட்டியடித்திருந்தார்.
விலங்குகளை விடவும் மிக மோசமான குணம் எங்களுக்குள் உண்டு என்பதை மனிதர்கள் சிலர் நிரூபிக்கும் வண்ணம் செயல்கள்.
ஸ்வாதி, ராம்குமாரை சுத்தமாக மறந்து போனோம். ராம்குமார் மரணம் இனி தற்கொலை தான். இனி அந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்குமா என்பதும் சந்தேகமே.
இப்படி இருக்கையில் ராம்குமாருக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பிரான்ஸ் தமிழச்சி மீது நிறைய வழக்கு போடப்பட்டது. அதற்கும் அவர் அசரவில்லை.
முதல்வர் உடல் நிலை பற்றிய அவரின் மோசமான பதிவு பல தரப்பிலும் கண்டனம் செய்யப் பட்டது.
அதன் பின் அவர் முற்றிலும் அமைதியாகி விட்டார். அவர் ஏன் இப்படி திடீர் என்று சைலன்ட் ஆனார் என்று அனைவருக்கும் குழப்பம். இந்த விஷயமாக ஒரு தகவல் ஒன்று உலாவருகிறது.
அதாவது மத்திய அரசின் செல்வாக்கு மிக்க ஒருவர், பிரான்ஸ் தூதரகத்தை தொடர்பு கொண்டு மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்தாராம்.
தமிழச்சி பிரான்ஸ் நாட்டு குடி உரிமை பெற்றவர். அவர் இந்திய மற்றும் தமிழக உள் விவகாரங்களில் மூக்கை நுழைப்பதும், தேவையற்ற பதட்டத்தை உண்டு பண்ணுவதும் ஏற்றுக் கொள்ள முடியாது. விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்க..
அதன் பின்தான் தமிழச்சி அமைதியானாராம். முகநூலில் பதிவுகளும் இடுவதில்லை. தமிழச்சி முதல்வர் விஷயத்தில் கிளப்பிய வதந்திகள் கொஞ்சம் ஓவர்தான்.
திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக மேக்கப் இல்லாமல், தன் மனைவியை பார்த்த கணவன் அதிர்ச்சியடைந்து விவாகரத்து கோரியுள்ளார்.
துபாயை சேர்ந்த 38வயது ஆணும் , 28வயது பெண்ணும் சிலநாட்களுக்கு முன்பு புதிதாக திருமணம் செய்து கொண்டனர். அந்தப் பெண் அதீத அழகுடன் இருக்கவே கணவனுக்கு பெருமை தாங்கவில்லை.
சந்தோஷமாகவே எல்லாம் முடிந்தது. ஹனிமூன் கிளம்பினர். இருவரும் குளிப்பதற்காக நீச்சல்குளத்திற்கு சென்று நன்றாக குளித்தனர். அப்போது கணவன் மனைவியின் உண்மையான முகத்தை பார்த்து அடையாளம் தெரியாமல், அதிர்ச்சியில் உறைந்துவிட்டாராம்.
அளவுக்கதிமான மேக்கப் சாதனங்களை பயன்படுத்தி தன்னை ஏமாற்றிவிட்டதாக விவாகரத்து செய்ய அவர் முடிவெடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் மனமுடைந்த அந்தப் பெண், உளவியல் நிபுணர் டாக்டர் அப்துல் அஜிசிடம் உதவிக் கோரிஇருந்தார்.
ஆனால் உளவியல் நிபுணரின் ஆலோசனையை அந்த நபர் கேட்பதாகவே இல்லை. தனது முடிவில் உறுதியாகவே இருக்கிறார். அந்த பெண் திருமணத்திற்கு முன்னர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததை மறைத்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
மேக்கப் போட்டு உண்மையான முகத்தை மறைத்து வந்த பெண், தன் கணவரிடம் பலமுறை உண்மையை சொல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது. இனி அவர்கள் சேர்வது கடினம் “என்று கூறுகிறார் உளவியல் நிபுணர்.
அதீத மேக்அப் வாழ்க்கைக்கே உலை வைத்துவிட்டது என்பதுதான் சோகம். இந்த சம்பவத்தை கல்ஃப் நியூஸ் செய்தியாக வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதால் அவர்களின் பெயர்களையும் அவர்கள் யார் என்பது பற்றியும் அந்த உளவியல் நிபுணர் தகவல் தெரிவிக்கவில்லை.
மக்கள் மத்தியில் இரத்ததானம் செய்தல் தொடர்பில் விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுகின்றது. இதனாலேயே நாடளாவிய ரீதியில் இரத்த வங்கிகளில் குருதித் தட்டுப்பாடு நிலவுகின்றது எனவும் வருகின்ற 2 தினங்களில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியில் காணப்படும் இரத்தங்கள் முடிவடையவுள்ளமையினால் அவசரமாக குருதியினை வழங்குமாறு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்..
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த வங்கி சேவை ஓரளவிற்கு திருப்திகரமாக காணப்படுகின்றது. எனினும்சில குருதிவகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
இதன்படி O,A,B போன்ற எதிர்மறை இரத்தவகைகளுக்கு கூடுதல் தட்டுப்பாடு நிலவுகின்றது.அதனை நிவர்த்தி செய்வதற்கு பொது மக்கள் முன்வரவேண்டும் எனினும் மக்களிடையே இரத்ததானம் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டினார்.
மேலும் இரத்ததானம் தொடர்பான விளக்கத்தினை பொதுமக்களுக்கு ஊடகங்களே வழங்க முன்வரவேண்டும் என்றும் மேலதிக தகவல்களை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியூடாக பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 18 – 60 வயதுக்குட்பட்ட 50 கிலோ நிறையுடைய ஆரோக்கிமான நிலையிலுள்ள சுகதேகி ஒருவரால் இரத்ததானம் செய்து கொள்ள முடியும் என்பதை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிலிப்பைன்சில் போராட்டக்காரர்கள் மீது பொலிசார் வாகனத்தை விட்டு தாறுமாறாக ஏற்றிய கொடூரக்காட்சி வெளியாகி உள்ளது.
அந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத் தளத்தை அப்புறப்படுத்தக்கோரி மணிலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இதையடுத்து ஆத்திரம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசாரின் வேனை தாக்கி சேதப்படுத்தினர்.
அப்போது பொலிசார் பொலிஸ் வேனை போராட்டக்காரர்கள் மீது ஏற்றி மோதி சென்றனர். இந்தக் காட்சி இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.