பொய்யான செய்திகளை வெளியிடும் இணையங்கள் : வவுனியாவில் சட்டத்தரணிகள் பணிபுறக்கணிப்பு!!

img_1741

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி நீதவான் தொடர்பாக பொய்யான செய்திகள் இணையதளங்களில் வெளியாகியதையடுத்து சட்டத்தரணிகள் இணையதளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரி இன்றைய தினம் வவுனியாவிலும் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பொய்யான செய்திகளை வெளியிடும் இணையதளங்களை தடை செய்யுமாறு கோரி இதற்கான தீர்வினை அரசாங்கம் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப் பணிப்புறக்கணிப்பால் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த சகல வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு 10 லட்சம் ரூபாய் உடையில் வந்த நடிகை!!

tv

பொலிவுட் கதாநாயகிகள் அவர்களது உடை விடயங்களில் கூடுதல் அக்கறை எடுத்து கொள்வது வழக்கம். எந்தவெரு பட விழாக்கள், பேஷன் ஷோக்கள் போன்றவற்றில் ரசிகர்களை கவர விதவிதமான ஆடைகள் அணிந்து வருவார்கள்.

இதற்காக ஒவ்வொருவரும் பிரத்யேகமாக ஆடை வடிவமைப்பாளர்களை வைத்துக்கொள்வது உண்டு. சல்மான்கானின் ‘பிக்பாஸ் 10’ தொலைக்காட்சி நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தீபிகா படுகோனேவை அழைத்து இருந்தனர்.

அப்போது அவர் ஹொலிவுட் நடிகைகள் அணியும் பால்மெயின் ஆடையை அணிந்து வந்திருந்தார். கருப்பு நிறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் அது உருவாக்கப்பட்டு இருந்தது. பிரான்ஸ் நாட்டில் இந்த ஆடையை வடிவமைத்து இருந்தனர்.

இந்த ஆடையின் விலை 10 லட்சம் ஆகும். தீபிகா படுகோனே ஹாலிவுட் படமொன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டாசு கிடங்கில் தீ விபத்து : எட்டுப் பேர் பலி!!

fire

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.

தீ விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பெண்கள் உட்பட எட்டுப் பேரே இவ்வாறு பலியாகியுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

பட்டாசுக் கிடங்கில் இருந்து லொரியில் பட்டாசுகளை ஏற்றிய போது, ஊராய்வு காரணமாக பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் பட்டாசுகளை ஏற்றிக் கொண்டிருந்த எட்டுத் தொழிலாளிகள் காயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஏழ்வர் உயிரிழந்ததாக செய்திகள் வௌியாகியுள்ளன.

மேலும் ஒரு தொழிலாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து, 25 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர். விபத்து நேரிட்ட பட்டாசு கிடங்குக்கு அருகே இருந்த ஸ்கேன் மையத்தில் இருந்தும் நோயாளிகள் வேகமாக வெளியேற்றப்பட்டனர்.

வவுனியாவில் மாணவ குழுக்களுக்கிடையே மோதல் : ஒருவர் வைத்தியசாலையில்!!

வவுனியா தரணிக்குளத்தில் நேற்று (19.10.2016) மதியம் 2.20 மணியளவில் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்ப்பட்ட மோதலில் மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா தரணிக்குளத்திலுள்ள பிரபல பாடசாலையில் கல்விபயிலும் தரம் 12 மாணவக் குழுக்களுக்கும் அதே பாடசாலையில் கல்விபயிலும் தரம் 9 மாணவனுக்குமிடையில் நேற்று (19.10.2016) பாடசாலை முடிவடைந்த பின்னர் சிறிய சலசலப்பு ஏற்ப்பட்டுள்ளது.

இச் சலசலப்பு மோதலாக மாறி அருகே காணப்பட்ட குளிர்பான போத்தலால் தாக்கப்பட்டு பாடசாலை மாணவர் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டு (பாடசாலை சீருடையுடன்) வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளர். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் தொடர்பு கொண்ட போது,

பாடசாலை மாணவர்கள் மதுபோதையில் அந்த மாணவனை தாக்கியுள்ளதாகவும் எனவே அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் மருத்துவ அறிக்கையுடன் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

வவுனியா நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் மாணவர்களின் பெற்றோர் ஒன்று கூடியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் பெற்றோர்களுடன் கலந்துரையாடினார்.

    20161020_142856   img_1735

இந்தத் தூண் விழுந்தால் உலகமே அழிந்துவிடும்!!

pillor

இந்து மதத்தின் சில உண்மைகளும், அமானுஷ்யங்களும் இன்றும் கூட அறிவியல் ரீதியாக பதில் தெரியதா புதிராக தான் காணப்படுகின்றது. அவ்வாறான ஓர் இடம் தான் மகாராஷ்டிராவில் காணப்படும் “ஹரிஷ்சந்திரகட் கோயில்”

6ம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்ட ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு அருகில் “கேதாரேஷ்வர்” என்ற ஆச்சரிய குகையினை காணலாம்.

குகைக்கு உள்ளே சென்றால் நம்மால் நீரினால் சூழப்பட்ட 5 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்தை பார்க்கலாம்.

அதுமட்டுமல்லாது சிவலிங்கத்தை சுற்றி காணப்படும் நீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் காரணத்தினால் இதை கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினம் தான். மேலும் மழைக்காலங்களில் இக் குகையை சென்றடைவது கணிப்புக்கு மீறிய விடயமே.

சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப் பெற்றுள்ளன. இவை “சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம்” ஆகிய நான்கு யுகங்களை தெளிவு படுத்துவதாக கூறபடுகின்றது.

ஒவ்வொரு யுகமும் முடிவடையும் சந்தர்பத்தில் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போதைய 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்து உலகம் அழிந்துவிடும் என நம்பப்பட்டு வருகின்றது.

இலங்கை வந்த பிரித்தானிய பிரஜை விமானத்தில் பரிதாமாக மரணம்!!

emirates

டுபாயில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த பிரித்தானியா பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பறந்து கொண்டிருந்த விமானத்தில் குறித்த பிரஜை நேற்று உயிரிழந்ததாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா விசா மூலம் இலங்கை வந்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த ஜோன் ஸ்டுவட் பின்கல் என்ற 72 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.650 என்ற விமானத்தில் நேற்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்குவதற்காக பறந்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த பிரித்தானிய பிரஜையை விமான ஆசனத்தினுள் நீண்ட நேரம் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குழப்பமடைந்த விமான ஊழியர்கள், அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் விமான மலசலகூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.

என்னுடைய சாதனையை இவர்கள் தான் முறியடிப்பார்கள் : அடித்துச் சொல்லும் முரளிதரன்!!

muralitharan

இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவரின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு எதிரணி மட்டையாளர்கள் அவ்வளவு சிரமப்படுவார்கள்.

அது மட்டுமில்லாமல் தனது 133 வது டெஸ்ட் போட்டிகளிலே 800 விக்கெட் வீழ்த்திய முதல் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் தான். இவர் ஓய்வு பெற்ற பிறகு இவருடைய இடத்தை நிரப்புவதற்கு சரியான வீரர்கள் இன்னும் இலங்கை அணிக்கு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது இலங்கை அணியின் சிறப்பான சுழற்பந்து வீச்சாளராக ஹெராத் உள்ளார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த முரளிதரன் தன்னுடைய சாதனையை முறியடிப்பதற்கு இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதில் இந்திய அணியைச் சேர்ந்த அஸ்வினுக்கும், பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த யாசிர் ஷாவையும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய அணியைச் சேர்ந்த அஸ்வின் சிறப்பாக பந்து வீசி வருகிறார். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ஆசிய கண்டத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்.

அவருடன் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன் விளையாடிய அனுபவம் உள்ளது என்றும், முதலில் அவர் பிட்சின் தன்மையை அறிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல் துல்லியமாக பந்து வீசும் திறமை கொண்டவர். அவர் தன்னம்பிக்கை கொண்டவர் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தன்னை ஒரு பந்துவீச்சாளராக மட்டுமில்லாமல் சிறந்த பண்முக ஆட்டக்காராகவும் திறமையை நிரூபித்து வருகிறார். அவருடைய துடுப்பாட்டத்தில் மூலம் இந்திய அணி சில தோல்விகளில் இருந்து தப்பியுள்ளது எனவும் சில போட்டிகளில் வென்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அஸ்வினைப் போன்று பாகிஸ்தானைச் சேர்ந்த யாசிர்ஷாவும் சிறப்பாக பந்து வீசுவதாகவும், அஸ்வின் மற்றும் யாசிர்ஷா இவர்கள் தற்போது செயல்படுவது போல் செயல்பட்டால் தன்னுடைய சாதனையை இவர்கள் எளிதில் எட்டிவிடுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளார்.

8 வயது மகனை கொலை செய்த கொடூர தாய் : அதிர வைக்கும் பின்னணிக் காரணம்!!

mother-killed-8-years-son

இத்தாலியில் இளம் பெண் ஒருவர் தனது 8 வயது மகனை கொடூரமாக கொலை செய்து உடலை பொட்டல் காட்டில் புதைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் சிசிலி பகுதியில் குடியிருந்து வருபவர் வெரோனிக்கா. இவரது மகன் லாரிஸ் தான் கொல்லப்பட்ட சிறுவன். இவருக்கும் இவரது மாமனாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் அவருடன் வெரோனிக்கா பாலியல் உறவில் ஈடுபட்டதை சிறுவன் லாரிஸ் தெரிந்து கொண்டதால் அவனை கொலை செய்ததாகவும் வெரோனிக்கா தெரிவித்துள்ளார்.

ஆனால் தனது மருமகளுடன் அப்படி ஒரு எண்ணம் தமக்கு இல்லை என்றும் அவர் பொய் சொல்கிறார் எனவும். உண்மையான காரணத்தை விசரணை அதிகாரிகள் கண்டு பிடிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டுமின்றி தமது மருமகள் மீது இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்க இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவத்தின்போது தமது மகனை காணவில்லை என்று வெரோனிக்கா தேடியுள்ளார். சிறுவனை எவரோ கடத்தி சென்றுள்ளதாக அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி சிறுவனை பாடசாலையில் காலை நேரம் கொண்டு விட்டதாகவும், ஆனால் மலையில் பாடசாலை சென்று தேடியபோது சிறுவன் அங்கு இல்லை எனவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் பொலிஸார் இவர் கூறிய கதையை நம்பவில்லை. காரணம், பாடசாலையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமெராக்களில் அதுபோன்ற காட்சி எதுவும் குறித்த நாளில் பதிவாகவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். தமது மாமனாருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமே தாம் மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாகவும், அருகாமையில் உள்ள பொட்டல்காட்டில் உடலை புதைத்துள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

ஆனால் வெரோனிக்காவின் மாமனார் இந்த குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ளார். தமக்கு மிகவும் பிடித்தமான தமது பேரனை தாம் இழந்து விட்டதாகவும், குறித்த சம்பவம் தொடர்பாக தம்மீது அபாண்ட பழியை சுமத்துவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் வெரோனிக்காவின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்!!

rajani

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்கா மீண்டும் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தில் அவர் நடித்துக்கொண்டு இருந்த போது குடும்பத்தினருடன் திடீரென்று அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார்.

அங்கு 2 மாதங்கள் ஓய்வு எடுத்தார். அப்போது அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

கடந்த ஜூலை மாதம் சென்னை திரும்பிய அவர் 2.0 படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டு நடித்து வந்தார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் திடீரென்று மீண்டும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு மருத்துவமனையில் சில நாட்கள் அவர் தங்கி இருந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

யாழில் நடந்த விபத்தில் இருவர் வைத்தியசாலையில்!!

a

யாழ் தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 10.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், குறித்த விபத்து காரணமாக சில மணிநேரம் போக்குவரத்து தாமதமானது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சிறு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு செல்ல முற்பட்டவேளையில் கே .கே .எஸ் வீதி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த விபத்தில் காயமடைந்த இரு வாகனங்களின் சாரதியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

a1

136 ஆண்டுகளின் பின்னர் கடந்த செப்டம்பர் மாதத்தில் கூடுதல் வெப்பம் பதிவு!!

thermometer in the sky, the hot weather

136 ஆண்டுகாலத்தின் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் மிக அதிக வெப்பமான மாதமாகப் பதிவாகியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள சுமார் 6300 வானிலை ஆய்வு மையங்களில் பதிவு செய்யப்பட்ட வெப்ப அளவுகளின் அடிப்படையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவுகளின்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து 11 மாதங்களில் எடுக்கப்பட்ட வெப்ப அளவுகளின்படி செப்டம்பர் மாதத்திலேயே அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.

அதாவது, 0.91 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் பதிவாகி இருந்தது.

இது 1951 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரையிலான செப்டம்பர் மாத சராசரி வெப்பத்தை விட அதிகமாகும்.

இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் தான் அதிக வெப்பமான மாதமாகப் பதிவாகி இருந்தது.

சிகிரியா ஓவியங்களை பாதுகாக்க இத்தாலியில் இருந்து விசேட பதார்தம்!!

sigriya

சிகிரியா ஓவியங்களை பாதுகாப்பதற்காக இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிக விலை கொண்ட இரசாயண பதார்த்தத்தை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சீகிரிய ஓவியங்கள் தொடர்பில் ஆய்வில் ஈடுபட்ட இத்தாலிய ஓவிய பாதுகாப்பு நிபுணர்களால் இந்த இரசாயண பதார்த்தம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கம் தெரிவித்துள்ளது.

குறித்த இரசாயண பதார்த்தத்தை பயன்படுத்துவதன் மூலம் ஓவியங்களில் காணப்படும் தெளிவற்ற தன்மை குறைத்து, அவற்றின் இயல்பு தன்மையை தொடர்ந்தும் பாதுகாக்க முடியும் என தொல்பொருள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இரசாயண பொருளை அடுத்த வாரம் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீகிரிய ஓவியத்தை பார்வையிடும் இடத்தை விரிவுப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் தொல்பொருள் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

பழைய சாரதி அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்ய தீர்மானம் : புதுப்பிக்குமாறு அறிவுறுத்தல்!!

dl

பழைய சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் சாரதிகளுக்கு தரவுகள் அடங்கிய நவீன ஸ்மார்ட் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது சுமார் 11 இலட்சம் பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் காணப்படுவதாக வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜயத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இந்த சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்து புதிய ஸ்மார்ட் சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தினை பெறுவதற்கு மருத்துவ பரிசோதனை அறிக்கை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலத்தில் சாரதிகள் தவறிழைக்கும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பான பதிவுகளை கோவைப்படுத்த இதன் மூலம் நடவடிக்கை எடுக்கமுடியும் என்பதுடன் போக்குவரத்து விதி முறைகள் மீறப்படுவதை குறைக்க முடியும் எனவும் வாகன போக்கவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜயத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

ஆபத்தை ஏற்படுத்தும் குறட்டை!!

kurttai

சிறிது காலம் முன்பு வரை குறட்டையை ஒரு நோயாகவே கருதவில்லை. குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தால் அவரை லேசாக தொட்டு பக்கவாட்டில் படுக்கவைத்துவிடுவார்கள். அவர்களும் சிறிது நேரத்தில் குறட்டை விடுவதை தவிர்த்துவிடுவார்கள்.

இவர்கள் தூக்கம் கெடாது. ஆனால் தற்போது குறட்டையைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, குறட்டை ஒரு நோய் என்றும், உயிருக்கே ஆபத்தை வரவழைக்கக்கூடிய ஒரு விடயம் என்றும், எம்முடைய உறக்கத்தின் போது சுவாசிக்கின்ற காற்றானது இயல்பாக சென்று வரவில்லை என்பதன் அறிகுறி தான் இது என்றும் கண்டறிந்துள்ளனர்.

மூக்கு வழியாக தொடங்கும் சுவாசமானது இறுதியில் நுரையீரல் வரை சென்று திரும்பவேண்டும். இடையில் எங்கேனும் தடைப்பட்டால் அவை குறட்டையாக மாறக்கூடும். பெரும்பாலும் கழுத்துப்பகுதி, உள்நாக்கு, நாக்கின் அடிப்பகுதி ஆகிய பகுதியில் ஏற்படும் தடையே குறட்டையாக மாறுகிறது.

இந்த குறட்டை தூக்கத்தை கெடுக்கிறது. இதனால் தூக்கமின்மை பிரச்சனைக்கு முதலில் முகங்கொடுக்கவேண்டியதிருக்கும். இதனால் சோர்வு ஏற்படும். பகலில் தூங்கவேண்டும் என்ற எண்ணம் உருவாகும். பணிகளும், பணித்திறனும் பாதிக்கப்படும். உடலுக்கு தேவையான ஓய்வும், தூக்கமும் கிடைக்கவில்லை என்பதன் அறிகுறியாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம். இதனால் குறட்டைக்கு கண்டிப்பாக சிகிச்சை அவசியமாகிறது.

மருத்துவர்கள் குறட்டை விடும் நோயாளிகளுக்கு முதலில் ஸ்லீப் ஸ்டடி என்ற ஒரு சோதனையை செய்வார்கள். இந்த சோதனை மூலம் உறக்கத்தில் அவர்களின் இரத்த அழுத்தம், பல்ஸ் ரேட், ஓக்ஸிஜன் பயன்படுத்தும் அளவு ஆகியவற்றை கண்டறிவார்கள். குறிப்பாக எத்தனை மணித்தியாலங்களுக்கு அவர்களுக்கு ஓக்ஸிஜன் குறைகிறது என்பதை கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.

அதற்கேற்ற வகையில் மருத்துவ சிகிச்சைகள் இருக்கும். இதனை அலட்சியப்படுத்தினால் இதயம் தொடர்பான கோளாறுகள் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். ஒரு சிலர் குறட்டைக்கு உரிய சிகிச்சை எடுக்க மறுத்ததால் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவங்களும் உண்டு.

இவர்களில் ஒரு சிலருக்கு டைனமிக் எம்ஆர்ஐ என்ற பரிசோதனையும் மேற்கொள்வதுண்டு. இதனடிப்படையில் குறட்டைக்கு சத்திர சிகிச்சை மூலமாகவும் தீர்வு கிடைக்கிறது. சத்திர சிகிச்சை மூலமாக குரல்வளையத்தை சற்று பெரிதாக்கி, குறட்டையை இல்லாது செய்வார்கள். அல்லது காற்று உள்ளே சென்று வெளியே வருவதற்கான அடைப்பை இல்லாது செய்துவிடுவார்கள். சத்திர சிகிச்சையை விரும்பாதவர்களுக்கு ஹீ பொப் என்றொரு கருவியைப் பொருத்திக்கொண்டு உறங்கவேண்டும். இந்த கருவி காற்றை வேகமாக அனுப்பி குரல்வளையத்தை பாதிக்காமல் பாதுகாக்கிறது. இதனால் ஓக்ஸிஜன் தங்குதடையின்றி சென்று வரும்.

காட்டு யானை தாக்குதலில் இராணுவ வீரர் பலி!!

elephant-attack

மட்டக்களப்பு புணானை 23 ஆவது படைப்பிரிவு இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ உத்தியோகஸ்த்தர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை புணானை காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

கோப்ரல் திசநாயக்கா வயது (45) என்ற இராணுவ உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

இராணுவத்தினருக்கான மேலதிக பயிற்சிகள் காட்டுப் பகுதியில் இடம்பெற்றபோது அவ்வழியினால் வந்த காட்டு யானை பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்களை தாக்குவதற்காக துரத்தியபோது ஏனைய வீரர்கள் ஓடி தப்பியுள்ளதாகவும் குறித்த வீரர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

இவரது சடலம் வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை இப்பகுதியில் யானைகளின் அட்டகாசம் அதிகமாக காணப்படும் பிரதேசமாகும்.கடந்த காலங்களில் இப்பகுதியில் குடி மக்களின் வீடுகள், வீதியால் செல்லும் வாகனங்கள் வயல் காவல் குடிசையில காவல் பார்க்கும் விவசாயிகள் என பலரும் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இனி மின்வெட்டு இல்லை!!

light

இன்றில் இருந்து மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் குறித்த அனல் மின் நிலையத்தின் ஒரு மின் பிறப்பாக்கி (generator) திருத்தப்பட்டுள்ள நிலையில் மின்வெட்டை திட்டமிட்டபடி அமுல்படுத்தத் தேவையில்லை என, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.