திரு­மணம் செய்­வ­தாகக் கூறி காத­லியை நண்­பர்­க­ளுக்கு விருந்தாக்­கிய காத­லன்!!

ab

காத­லியை திரு­மணம் செய்­வ­தாக அழைத்துச் சென்று நண்­பர்­க­ளுக்கு விருந்­தாக்­கிய காதலன் மற்றும் நண்­பர்­களை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். தமி­ழ­கத்தின் கன்­னி­யா­கு­மரி மாவட்டம் குழித்­து­றை பகு­தியைச் சேர்ந்­தவர் பிரிஜித் என்ற சுரேஷ் (27).

இவர் அப் ­ப­கு­தியில் ஆட்டோ மற்றும் வேன் சார­தி­யாக பணி­பு­ரிந்து வந்­துள்ளார். இவ­ரது வேனில் நாகர்­கோ­வி­லி­லுள்ள கல்­லூ­ரியில் திக்­க­ணங்­கோடு பகு­தியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அடிக்­கடி பயணம் செய்­துள்ளார்.

இதனால், அந்த மாண­விக்கும் சுரே­ஷுக்கும் பழக்கம் ஏற்­பட்­டது. நாள­டைவில் இது காத­லாக மாறி­யது. இதற்­கி­டையில் மாண­வியை திரு­மணம் செய்து கொள்­வ­தாக சுரேஷ் ஆசை வார்த்தை கூறி­யுள்ளார்.

அதனை நம்பி மாண­வியும் வீட்டை விட்டு வெளி­யேறி சென்­றுள்ளார்.
இத­னை­ய­டுத்து இரு­வரும் பல இடங்­க­ளுக்கு சென்று சுற்றித் திரிந்­துள்­ளனர்.

அதன் பின்னர் அவர்கள் இரு­வரும் நாகர்­கோவில் சென்­ற­போது, அங்கு இரவில் தங்க இட­மில்­லா­ததால், சுரேஷின் நண்பர் தினேஷ் மற்றும் கோபால் ஆகியோர் வட­சேரி பகு­தி­யி­லுள்ள விடு­தியில் அறை எடுத்து கொடுத்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து இரு­வரும் அன்­றி­ரவு ஒன்­றாக தங்­கி­யுள்­ளனர். அடுத்­த நாள் காலையில் திரு­ம­ணத்­திற்­கான ஏற்­பா­டுகள் செய்ய வேண்­டு­மென கூறி மாண­வியின் நகை­களை வாங்­கி­யுள்ளார்.

அதனை அடகு வைத்து தாலி உள்­ளிட்ட பொருட்­களை வாங்கி வரு­கிறேன் என்று கூறி வெளியே சென்றுள்ளார் தினேஷ். இத­னை­ய­டுத்து அந்த விடு­திக்குள் அவ­ரது நண்­பர்கள் தினேஷ், கோபால் ஆகியோரும் சென்­றுள்­ளனர்.

சுரேஷின் காதலி தனி­யாக இருந்தபோது அவ­ரது நண்­பர்கள் கத்தி முனையில் மிரட்டி பாலியல் வல்லுற­வுக்­குட்­ப­டுத்­தினர். இதற்கி­டையே சுரேஷின் இன்­னொரு நண்­பரும், விடு­தியின் பக்­கத்து அறையில் தங்கி இருந்­த­வ­ரு­மான ஞான­பி­ர­வினும் சுரேஷின் காத­லியை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.

இந்­நி­லையில் தான் மாண­விக்கு, காத­லனே தன்னை நண்­பர்­க­ளுக்கு விருந்­தாக்­கி­யது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷின் காதலி சுரேஷ் மற்றும் அவர்­களின் நண்பர்க­ளுடன் தகராறில் ஈடு­பட்­டுள்ளார்.

இதற்­கி­டையில் கடந்த 13ஆம் திகதி முதல் இம்­மா­ணவி திடீ­ரென மாய­மா­னதை அடுத்து, அவர் காணாமல் போய்­விட்­ட­தாக மாண­வியின் பெற்­றோர்கள் பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து பொலிஸார் பல இடங்­களில் மாண­வியை தேடியுள்­ளனர். ஆனால், மாண­வியை எங்கு தேடியும் கிடைக்­க­வில்லை. இந் நி­லையில் நாகர்­கோவில் வட­சேரி பகு­தி­யி­லுள்ள ஒரு விடு­தியில் இளம் பெண்ணும், சில இளை­ஞர்­களும் தக­ராறு செய்­வ­தாக வட­சேரி பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்ததைய­டுத்து பொலிஸார் அங்கு சென்று பார்த்த போதுதான் மாய­மான மாணவி இவர்தான் என தெரிய வந்­தது.

பின்னர் மாணவி அளித்த முறைப்­பாட்டின் பேரில் வேன் சாரதி சுரேஷ், அவ­ரது நண்­பர்கள் தினேஷ், கோபால் மற்றும் ஞானபிரவின் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் மாணவியின் காதலன் சுரேஷ், கோபால், தினேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

15 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை திருடிய மூதாட்டி : காட்டிக் கொடுத்த கமெரா!!

capture

சென்னையைச் சேர்ந்த வாய் பேச முடியாத மூதாட்டி ஒருவர் நகை திருட்டில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திராவில் இருந்து திருமணத்திற்காக சென்னை வந்திருந்த சைலஜா என்பவர், சென்னையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றிற்கு துணி எடுக்க சென்றுள்ளார். இவர் தனது பையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கம் வைர நகைகைளை வைத்திருந்துள்ளார்.

ஜவுளிக்கடையை விட்டு வீட்டிற்கு சென்ற சைலஜா தனது பையை திறந்துபார்த்தபோது தனது நகைகள் காணமால் போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து உடனடியாக ஜவுளிக்கடை மற்றும் அந்தப்பகுதியில் தீபாவளிக்காக பொருத்தப்பட்டுள்ள 200 சி.சி.டி.வி கமெராக்களின் பதிவுகளை பொலிசார் துல்லியமாக ஆராய்ந்தனர்.

அப்போது பச்சை நிற சேலை அணிந்த ஒரு பெண், சைலஜா அருகில் வருவதும், பிறகு அங்கிருந்து செல்வதுமாக இருந்தது தெரியவந்தது. அந்த பச்சை நிற சேலை அணிந்த பெண்ணின் நடவடிக்கைகள் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.

தொடர்ந்து ஒவ்வொரு சி.சி.டி.வி கமெரா பதிவிலும் அந்த பெண்ணை கண்காணித்தனர். ஒருகட்டத்தில் சைலஜாவிடம் அதிகமாக நெருங்கிய அந்தப்பெண், எதையோ எடுத்துக் கொண்டு அங்கிருந்து நைசாக நழுவிச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து பொலிசார் விசாரணையை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த பெண், மயிலாப்பூரை சேர்ந்த மேரி என்று தெரிந்தது. அவரைப்பிடித்து பொலிசார் விசாரித்த போது நகைகளைத் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரைக் கைது செய்த பொலிசார் வைர நகைகளையும் மீட்டனர்.

இவர் வாய்பேசமுடியாதவர் என்ற காரணத்தால், இந்த குறைபாட்டினை வைத்து திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

செல்லும் இடமெல்லாம் 4G WiFi : அறிமுகமாகின்றது புதிய சாதனம்!!

wifi

இன்றெல்லாம் இணையப் பாவனைக்காக அதிகளவில் WiFi தொழில்நுட்பத்தினையே பயன்படுத்தி வருகின்றனர்.

இதனைக் கருத்தில்கொண்டு பல்வேறு தொலைத் தொடர்பாடல் வலையமைப்பு சேவையை வழங்கிவரும் நிறுவனங்கள் 4G தொழில்நுட்பத்தினை WiFi ஆக மாற்றும் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளன.

எனினும் இவை ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் தனித்துவமானதாகவே காணப்படும்.

ஆனால் தற்போது 100 வகையான நாடுகளுள் பயணிக்கும்போது எந்தவொரு வலையமைப்பிலிருந்தும் 4G சமிக்ஞையை WiFi சமிக்ஞையாக மாற்றக்கூடிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

GeeFi எனும் இச் சாதனத்தின் ஊடாக அதிகபட்டசம் ஒரே தடவையில் 10 சாதனங்களை இணைக்க முடியும்.

இதேவேளை இச் சாதனத்தினை பயன்படுத்துவதற்கு ரோமிங் வசதி அவசியம் இல்லை என்பதுடன் வரையறையற்ற (Unlimited) இணையப் பாவனையை மேற்கொள்ளவும் முடியும்.

இச் சாதனத்தில் 5,000 mAh மின்கலம் இணைக்கப்பட்டுள்ளதுடன், நீண்ட நேரம் செயற்படக்கூடியதாகவும் இருக்கின்றது.

தற்போது Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இச் சாதனத்தின் விலையானது 110 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இறந்த காதலனுக்கு காதலி செய்த தியாகம் : இன்றைய காலத்திலும் இப்படியும் ஒரு காதல்!!

love

அவுஸ்திரேலியாவில் விபத்தில் இறந்த காதலனின் உயிரணு மூலம் காதலி ஒருவர் கருத்தரித்து குழந்தை பெற காத்துக்கொண்டிருக்கிறார்.

அவுஸ்திரேலியாவின் தெற்கு குவீன்ஸ்லாந்தில் உள்ள தூவேம்பா பகுதியை சேர்ந்த ஜோஷ்வா டேவிஸ், அய்லா கிரஸ்வெல் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர்.

இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்களுக்கு திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ஜோஷ்வா சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து ஜோஷ்வாவின் நினைவு எப்போதும் இருக்க வேண்டும் என்று அய்லா, அவரது காதலன் உயிரணு மூலம் குழந்தை பெற முடிவு செய்தார்.

இரு வீட்டினரும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். விளையாட்டு வீரர்கள் தங்களை உயிரணுக்களை அதற்கான வங்கியில் சேமித்து வைப்பது போல் ஜோஷ்வாவும் சேமித்து வைத்திருந்தார்.

எனவே அய்லா அவரது காதலன் உயிரணு மூலம் கருவை சுமக்க முடிவு செய்துள்ளதாகவும், அதன் மூலம் 3 குழந்தைகள் பெற உள்ளதாகவும் நீதிமன்றத்தில் முறையிட்டு அனுமதி பெற்றார்.

அதோடு ஜோஷ்வா உயிரணு கருத்தரிக்க உடைய சக்திகள் உடையதாக உள்ளது என்று மருத்துவர்கள் அதை பரிசோதித்து தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தனது காதலன் உயிரணு மூலம் குழந்தை பெற காத்துக்கொண்டிருக்கிறார் அய்லா.

கோவிலில் வைத்து பெண்ணை சரமாரியாக வெட்டிய மர்ம நபர் : கமராவில் சிக்கிய கொடூரக் காட்சி!!

vettu

கர்நாடகாவில் உள்ள கோவிலில் வைத்து பெண் ஒருவரை மர்ம நபர் கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோலார் பகுதியில் உள்ள கோவிலிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், Kotilingeshwara கோவில் நிர்வாகி குமாரி என்ற பெண்ணே தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட சந்தோஷ் என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கிட்டதட்ட 12 முறை கத்தியால் தாக்கப்டட் குமாரி தலை மற்றும் கைகளில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிசார் கூறியதாவது, குமாரி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான சந்தோஷ் என பொறியாளரே இத்தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக சந்தோஷ் குமாரி மீது தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

ஜெயலலிதா உடல்நிலை : 10 நாட்களாக வெளியாகாத அப்பலோ அறிக்கை: அதிர வைக்கும் காரணம்!!

jeyalalitha

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை கடந்த 10 நாட்களாக வெளியாகதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

அறிக்கைகளே வதந்திகள் பரவ காரணமாகி போனதால், இனிமேல் முதல்வரின் உடல் நிலை குறித்து அறிக்கைகள் எதுவும் வெளியிட வேண்டாம் என சசிகலா தரப்பு அப்பல்லோ நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த தகவல் அடங்கிய மருத்துவமனையின் அறிக்கையை வெளியிட வேண்டாம் என உத்தரவிட சசிகலாவுக்கு யார் அதிகாரமளித்தது என பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இரண்டு வயதுக் குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரன்!!

abuse

சென்னையில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன், இரண்டு வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்துள்ள பெருங்குடி கள்ளுகுட்டி என்ற திருவள்ளுவர் நகரிலேயே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

குறித்த நகரை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகளை நேற்று முன்தினம் காணவில்லை.

வீட்டிலிருந்தவர்கள் குழந்தையை தேடிய போது, அருகில் இருக்கும் வீட்டில் கைகள் கட்டிய நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.

ரத்தத்துடன் மீட்கப்பட்ட குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், உறவினர்கள் வீட்டிற்கு வந்த விஜி என்ற இளைஞன் தான் குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது.

இதயைடுத்து தலைமறைவாக உள்ள விஜியை பொலிசார் தேடி வருகின்றனர்.

இளவரசரின் தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றிய சவுதி அரசு!!

saudi

சவுதி அரேபியா நாட்டில் இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக அரசு குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் Turki bin Saud al-Kabir என்ற இளவரசர். கடந்த 2012ம் ஆண்டு டிசம்பவர் மாதம் நிகழ்ந்த ஒரு தகராறில் இளவரசர் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் இளவரசருக்கு சவுதி அரசு மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.

எனினும், அப்போது அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசருக்கு தான் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை அரசு வெளியிடவில்லை.

இந்நிலையில், சவுதி அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘கொலை குற்றம் நிரூபிக்கப்பட்ட இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குற்றம் புரிந்தது யாராக இருந்தாலும், சவுதி அரசு நீதியை நிலை நாட்ட தயாங்காது என்பதற்கு இந்நிகழ்வு ஓர் உதாரணமாகும்’ என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 1975ம் ஆண்டு அரசர் பைசலை திட்டமிட்டு கொன்ற குற்றத்திற்காக இளவரசர் Faisal bin Musaid என்பவருக்கு அப்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிறகு சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அரசு குடும்பத்தை சேர்ந்த இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இளவரசரின் இந்த மரண தண்டனையானது 2016ம் ஆண்டு முதல் நிறைவேற்றப்பட்ட 134-வது மரண தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.

கோஹ்லியுடன் என்ன பிரச்சனை : உண்மையை உடைத்த கம்பீர்!!

gautam-gambhir

இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீர், கோஹ்லியுடனான பிரச்சனை குறித்து விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து கம்பீர் கூறியதாவது, நானும், கோஹ்லியும் கிரிக்கெட்டை ஆக்ரோஷமாக விளையாடுவோம். இருவரும் தனித்தனியாக அணியை வழிநடத்தும் போது தீவிரமாக செயல்படுவோம்.

கருத்துகளில் மாறுபட்டாலும் அணியின் வெற்றிக்காக பாடுபடுவோம். இருவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்சனையும் இல்லை. களத்திலும் களத்திற்கு வெளியிலும் நாங்கள் நண்பர்கள் என கூறியுள்ளார்.

மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடாத வரை பாகிஸ்தானுடன் எந்த வித நேரடி கிரிக்கெட் போட்டியிலும் விளையாடக்கூடாது.

தற்போதைய சூழலில், அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது குறித்து சிந்திக்கக்கூட முடியாது. விளையாட்டை விட இந்தியர்களின் உயிரே முக்கியமானது என கூறியுள்ளார்.

97 பெண்களை மணந்த மதகுருவுக்கு மீண்டும் திருமணம்!!

mathakuru

நைஜீரியாவில் பிடா மாகாணத்தை சேர்ந்தவர் முகமது பெல்லோ அபுபக்கர். இவருக்கு 92 வயது ஆகிறது. மத குருவாக இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே 107 பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது.

அவர்களில் 10 பேரை விவாகரத்து செய்துவிட்டார். மீதமுள்ள 97 பெண்களுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறார். இவருக்கு 185 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் அவர் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. ஆனால் இதை அவர் மறுத்துள்ளார். திடீரென வீடியோவில் தோன்றிய அவர் தான் மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடன் குடும்பம் நடத்த இருப்பதாக அறிவித்தார்.

இது ஒன்லைன் மற்றும் சமூக வலை தளங்களில் வைரசாக பரவியுள்ளது.

கணவரை கொன்றுவிட்டு விடிய விடிய சடலத்தை கட்டிப் பிடித்து அழுத மனைவி!!

mur

சேலம் ஜங்சனை அடுத்த வெள்ளக்கல்பட்டியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது56). நிதி நிறுவனம் நடத்தி வந்த இவர் காங்கிரஸ் கட்சியில் விவசாய அணி மாநில துணை தலைவராகவும் இருந்தார். சதாசிவம் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இது குறித்து சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் ஜார்ஜ், சூரமங்கலம் உதவி கமி‌ஷனர் விஜய்கார்த்திக்ராஜா, இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சதாசிவத்தின் மனைவி தங்கம் (வயது 50) கணவரை உருட்டுக் கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை கைது செய்த போலீசார் சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட தங்கம் பல திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார். இதன் விவரம் வருமாறு..

சதாசிவம் கடந்த சில வருடங்களாக பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்தார். இதில் அவருக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்ட நிலையிலும் தொடர்ந்து அவர் பங்கு சந்தையில் முதலீடு செய்தார்.

இது தவிர உறவினர்கள், நண்பர்கள் பலரிடம் சதாசிவம் கடன் வாங்கி வந்தார். இதை அறிந்த தங்கம், கணவரை கண்டித்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதை அறிந்த சதாசிவத்தின் மகள் பிரியா பெற்றோர் வீட்டிற்கு வந்து இருவரையும் சமாதானம் செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி இரவு சதாசிவம் தாமதமாக வீட்டிற்கு வந்தார். பின்னர் அவரது அறைக்கு சென்று தூங்க சென்றார். அப்போது அவருக்கும், தங்கத்திற்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.

இதில் கோபம் அடைந்த சதாசிவம், தங்கத்தின் வயிற்றில் காலால் எட்டி உதைத்தார். இதில் தங்கம் கீழே விழுந்து வயிற்று வலியால் அலறி துடித்தார். அப்போதும் விடாமல் சதாசிவம் அவரை சரமாரியாக தாக்கினார்.

இதில் கோபம் அடைந்த தங்கம் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என கேட்டார். இதனால் மேலும் கோபம் அடைந்த சதாசிவம் மீண்டும், மீண்டும் தங்கத்தை தாக்கினார்.

இதனால் தங்கம் அவரிடம் இருந்து தப்பி மற்றொரு அறைக்கு ஓடினார். அங்கும் சதாசிவம் சென்று தங்கத்தை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த தங்கம் அந்த அறையில் கிடந்த கட்டையை எடுத்து சதாசிவத்தின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் சதாசிவத்திற்கு பலத்த அடிப்பட்டது.

சிறிது நேரத்தில் அவர் அப்படியே மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கம் , சதாசிவத்தை தூக்கி சென்று வழக்கமாக சதாசிவம் படுக்கும் அறையில் படுக்க வைத்தார்.

பிறகு என்ன செய்வது என தெரியாமல் திகைத்த அவர் மற்றொரு அறையில் படுத்து இருக்கும் தனது மகளிடம் சொன்னால் திட்டுவாள் என எண்ணி அழுதபடி சதாசிவம் அருகில் அமர்ந்து இருந்தார்.

இதற்கிடையே சதாசிவம் இறந்து விட்டார். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த தங்கம் மற்றொரு அறையில் கிடந்த கயிற்றை எடுத்து வந்து சதாசிவத்தின் கழுத்தில் கட்டிவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார் என மற்றவர்களிடம் கூறி விடலாம் என நினைத்து கயிற்றை கட்டினார்.

பிறகு தங்கம் , சதாசிவத்தின் உடலை கெட்டியாக பிடித்து கொண்டு விடிய விடிய கதறி அழுதபடி இருந்தார். அதிகாலை 5 மணி அளவில் தங்கத்தின் மகள் பிரியா குழந்தைகளுக்கு உணவு கொடுக்க சமையல் அறைக்கு சென்றார்.

தனது தாயார் அழும் சத்தத்தை கேட்டு தந்தையின் அறைக்கு ஓடி சென்று பார்த்தார். அங்கு சதாசிவம் இறந்து கிடந்ததையும், அவரது கழுத்தில் கயிறு இருந்ததையும் பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது தங்கம் , மகளிடம் நள்ளிரவில் சதாசிவம் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தார். இது உண்மை என நம்பிய அவரும் ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தார்.

அடுத்த சில நிமிடங்களில் வீட்டுக்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர், சதாசிவத்தின் தலையில் ரத்த காயம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சூரமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சென்று சதாசிவத்தின் உடலை மீட்டு, தங்கத்தை கைது செய்தனர்.

சதாசிவம் கொலையில் ஒரு சில மணிநேரத்தில் துப்பு துலக்கி மனைவி தங்கத்தை கைது செய்த உதவி கமி‌ஷனர் விஜய்கார்த்திக்ராஜா மற்றும் போலீசாரை போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமார் பாராட்டினார்.

பணக்காரராக ஆசையா? இதை தெரிந்துகொள்ளுங்கள் !!

rupeesrilanmks
இன்றைய காலத்தில் யாருக்கு தான் பணக்காரராக வேண்டும் என்ற ஆசை இருக்காது. சமுதாயத்தில் நாம் அதிகமாக சம்பாதிக்க வேண்டுமானல் கடுமையாக உழைக்க வேண்டும்.

கடுமையான உழைப்பிற்கு பின் நம்முடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள தொழிலின் நுணுக்கங்களை நாம் நன்றாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.எனவே நம்முடைய வாழ்வில் முன்னேறுவதற்கான மற்றும் வணிகத்தில் தங்களின் இடத்தை தக்க வைத்துக் கொள்வது எப்படி என்ற ரகசியத்தை தெரிந்துக் கொள்வோம்!

ஊதியம் மட்டுமே முழுமை அல்ல என்பதை நன்றாக தெரிந்துக் கொண்டு நம்முடைய வணிகத்தை நேர்மையான முறையில் தொடர வேண்டும்.மேலும் செயலற்ற மூலதனத்தில் இருந்து கிடைக்கும் வருமானம் என்பது உங்களின் செயலாற்றும் மூலதனத்தில் இருந்து வரும் வருமானம் விட அதி விரைவில் உங்களைப் பணக்காரராக மாற்றும் என்று கூறுகின்றார்கள்.

வர்த்தகத்தில் ஈடுபடும் போது, நாம் காலகட்டத்தை பார்க்காமல், காலம் மற்றும் நேரத்தை பயன்படுத்தி வர்த்தகத்தை தொடர வேண்டும். இதனால் நாம் விரைவில் பணக்காரராக மாறலாம்.நாம் எந்தவொரு செயல்களை புதிதாக தொடங்கும் முன் நமது திட்டங்கள் என்ன என்பதை மறக்காமல் ஒரு நோட்டில் எழுதிக் கொள்ள வேண்டும். வர்த்தகம் செய்யும் போதும் நமது திட்டங்களுக்கு ஏற்றது போல நடைமுறைப்படுத்த வேண்டும்.

நாம் வர்த்தக தொழிலில் ஒருசில பொருட்கள் வாங்கும் போது அதனுடைய விலைகளை நாம் என்றும் பார்க்க கூடாது, சமுதாயத்தில் அந்த பொருளின் மதிப்பு என்ன என்பதை மட்டுமே ஆராய்ந்துப் பார்க்க வேண்டும்.சொந்தமான வர்த்தகம் செய்யும் போது, அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்களின் அலுவலகத்திற்கு செய்யும் வேலைகளின் தரத்திற்கு ஏற்ப வருமானத்தை கொடுக்க வேண்டும்.

வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களின் பணத்தைப் பயன்படுத்தி உங்களுக்காக வேலை செய்ய பல மக்களைப் பணியில் அமர்த்தி சொத்து சேர்ப்பது ஒரு உறுதிப்படுத்தப்பட்ட செயல்முறை ஆகும். இங்கு வரிச் சட்டங்கள் தொழில் புரிபவர்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. இதுவே செல்வம் சேர்க்க உதவும் மிகவும் சக்தி வாய்ந்த சூத்திரமாக இருக்கிறது.

ஒரு யோசனையை உங்களிடமே வைத்துக்கொள்வது மற்றும் காகிதத்தில் அதை மாற்றுவதிற்கு இடையே உள்ள வித்தியாசமே ஒரு சிறந்த வெற்றியாளரை ஒரு சராசரி மனிதனிடமிருந்து பிரிக்கின்றது. நீங்கள் உங்களின் வெற்றியைப் பொருளுடன் சமன் செய்ய விரும்பினால் இதுவே உகந்த தருணம். உங்களின் இலக்குகள் அது சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம். அதைப் பேப்பரில் எழுதி வைக்க முயற்சி செய்யுங்கள்.

ஓயாமல் அழுத குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய் மாமன்!!

murded

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ள சந்தன்நகர் என்ற இடத்தை சேர்ந்தவர் திலீப் பாடியா. இவரது சகோதரிக்கு 3 வயது பெண் குழந்தை இருந்தது.

சகோதரி வெளியே செல்ல வேண்டியது ஏற்பட்டது. எனவே, தனது குழந்தையை மாமன் திலீப் பாடியாவிடம் ஒப்படைத்து பார்த்து கொள்ளும்படி கூறிவிட்டு சென்றார்.

ஆனால், தாயார் வெளியே போனதில் இருந்து அந்த குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. திலீப் பாடியா குழந்தையை சமாதானப்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சித்தார். ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை.

இதனால் உச்சக்காட்ட கோபம் அடைந்த திலீப் பாடியா குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இது தொடர்பாக பொலிசில் புகார் செய்யப்பட்டது. பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பேஸ்புக் மெசன்ஜரில் கேம்ஸ் விளையாடுவது எப்படி?

fb_1
சமூக வலைதளங்களில் முன்னணி வகிக்கும் பேஸ்புக்கின் மெசன்ஜர் செயலி தான் அதிகம் பேர் உபயோகிக்கும் மெசேஜ் செயலியாக திகழ்கிறது. அதில் மறைந்திருக்கும் விளையாட்டுகளை எப்படி செலக்ட் செய்து விளையாடுவது என்பதை தற்போது பார்ப்போம்.

கூடைப்பந்து

இதை விளையாட முதலில் பேஸ்புக் மெசன்ஜர் செயலியை ஒப்பன் செய்து விட்டு நமது நண்பர்களுக்கு பேஸ்புக் Chatல் கூடைபந்து Emojiயை அனுப்ப வேண்டும். பின்னர் அந்த Emojiயை tap செய்தால் இதை விளையாட ஆரம்பித்து விடலாம்.

கால்பந்து

நாம் யாருடன் கால்பந்து விளையாட்டை பேஸ்புக் மெசன்ஜர் மூலம் விளையாட விரும்புகிறோமோ அவர்களுக்கு அந்த கால்பந்து Emojiயை Chatல் அனுப்ப வேண்டும். மேலே கூடைப்பந்துக்கு சொன்னது போலவே Emojiயை tap செய்து இந்த சூப்பரான கால்பந்து விளையாட்டை நமது நண்பர்களுடன் விளையாடி மகிழலாம்.

சதுரங்கம் (Chess)

மூளைக்கு அதிக வேலை தரும் இந்த சதுரங்க ஆட்டத்தை விளையாட நாம் யாருடன் விளையாட விரும்புகிறோமோ அந்த Text Boxல் @fbchess என டைப் செய்ய வேண்டும்.

பின்னர் ஸ்கீரினில் சதுரங்க ஆட்ட போர்ட் தெரியும் அது மூலம் நம் ஆட்டத்தை தொடங்கலாம். நமக்கு இந்த ஆட்டத்தில் சந்தேகம் ஏதும் ஏற்பட்டால் @fbchess help என டைப் செய்தால் அது நமக்கு உதவி செய்யும்.

மிகுந்த மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்!!

lxnnhpuwkeerthy-suresh
ரஜினிமுருகன், ரெமோ மூலம் வெகு சீக்கிரமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த கீர்த்தி சுரேஷ் தனது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் இன்று கொண்டாடிருக்கிறார்.மலையாளம், தமிழ் சினிமாவிலிருக்கும் பிரபலங்கள், நண்பர்கள் , உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதனால் மகிழ்ச்சியான கீர்த்திக்கு, சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்ததால் மிகுந்த சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் இருக்கிறாராம்.தற்போது சூர்யாவுடன் TSK வில் பணியாற்றுவது மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார். இரட்டிப்பு மகிழ்ச்சியால் இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறாராம் கீர்த்தி!

சர்ச்சை கேள்விகளுக்கு விளக்கம் சொன்ன ஸ்ருதிஹாசன்!!

shruti-hassan
ஸ்ருதிஹாசன் செய்கைகளை அன்றாட விமர்சனம் செய்து ஏதாவது செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.சமீபத்தில் அவர் வெளியிட்ட BE THE BITCH குறும்படம் பலரையும் சர்ச்சையான கேள்விகளை கேட்க வைத்துள்ளது. இதற்காக அவர் விளக்கமளித்துள்ளார்.

தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில் நான் பெண்களை பற்றி இந்த படத்தில் தவறாக எதையும் சொல்லவில்லை.நம்மை சுற்றி சமூகத்தில் நடக்கும் விஷயங்களை இதில் காட்டியுள்ளேன். மனதில் நினைத்த விஷயங்களை அப்படியே சொல்லியிருக்கிறேன்.

இதனால் என்னை பெண்ணியவாதி என்கிறார்கள். நான் அது வல்ல. தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறேன்.என் நண்பர் மற்றும் அப்பா கமல் இருவருமே பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடியவர்கள் என குறிப்பிட்டார்.இந்த படம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.