இடி, மின்னல் ஆபத்து! அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

94ac1bf5d24198f4c5f7fdfbdd632379
இலங்கையின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை காற்று தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.உலக வெப்ப அதிகரிப்பினால் வடக்கு, தெற்கு அரைக்கோளங்களில் இருந்து வரும் காற்று சந்திக்கும் பகுதியில் ஏற்படும் தாழமுக்கம் இலங்கையின் வளிமண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இடியுடன் கூடிய மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது இடைப்பருவப்பெயர்ச்சி காலநிலை ஆகும். மாலை இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை மின்னல் ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.75 -100 மில்லிமீற்றர் வரையிலான மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்று மின்னல் இடியுடன் கூடிய மழை தொடரும் என்று அறிவித்துள்ளது.

தற்போது உலகின் சூழல் பிரச்சினையான புவிவெப்பமடைதல் காரணமாக இயற்கை விபத்துக்களின் அதிகரிப்பும் சமநிலையின்மையும் அதிகரித்து வருகின்றது.மக்கள் பாதுகாப்பாக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் சிரேஷ்ட வானிலை ஆய்வாளரும் முன்னாள் வானிலை அவதான நிலையப் பணிப்பாளருமான கே.ஆர்.அபயசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இலங்கையில் கடும் வறட்சி நிலவி வந்ததன் பின்னர் கன மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலவச wi-fi வேலைத்திட்டம் ஆரம்பம்!!

free-wifi-at-seymour-motel
இலங்கையில் இலத்திரனியல், அரச நடவடிக்கைகளுக்கு தேவையான, வேகமான, பாதுகாப்பான மற்றும் இலவச wi-fi சேவைக்கான புதிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இத்தகவல் அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் அரச நடவடிக்கைகளுக்கு தேவையான 2.0 வலையமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக ஹரின் பெணார்ந்துவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சரியான திசையில் செல்கிறது : ஐரோப்பிய ஒன்றியம்!!

eu-president-large

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்க தேவையான கூடிய உதவிகளை இலங்கைக்கு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் யோன் க்ளோட் யோன்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸ்சில் பார்ளிமெண்ட் மாளிகையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே யோன்கர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டு இணைந்து ஏற்படுத்தியுள்ள இணக்க அரசாங்கத்தின் ஊடாக இலங்கை சரியான திசையில் நோக்கி சென்றுக்கொண்டுள்ளது எனவும் யோன்கர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களை வெகுவாக பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய நல்லாட்சியை மிகவும் சரியான மற்றும் உரிய முறையில் முன்னோக்கி கொண்டு செல்வதன் மூலம் ஐரோப்பிய சமூகத்திடம் மாத்திரமல்லது சர்வதேச சமூகத்தின் நம்பிக்கை இலங்கை வென்றெடுக்க முடியும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் 15 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

lady-doctor-com3528யாழ்ப்பாணம் கீரிமலை பிரபல பாடசாலையில் 15 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.கீரிமலை நகுலேஸ்வரா வீதியை சேர்ந்த அரியசேகரம் தர்ஷிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.குறித்த சிறுமி மனவிரக்தி காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சிறுமி வீட்டின் அறை ஒன்றில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், சிறுமியின் சடலம் தற்போது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

வடமராட்சி மண்ணில் எழுந்தருளிய வல்லிபுர ஆழ்வார்!!(படங்கள்)

வடமராட்சி – வல்லிபுராழ்வார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சமுத்திரத்தீர்த்தம் (15.10.2016) பிற்பகல் 5 மணிக்கு வங்கக்கடலில்  இடம்பெற்றது . அதன்போது   திருமால் மணலில் எழுந்தருளிய காட்சியை  வேலணையை சேர்ந்த சுகுமார்   என்ற இளைஞன்   மிக தத்ரூபமாக   உருவாக்கியிருந்தார்.
14642163_354910054849454_8410703976140869777_n 14650330_354633541543772_4369506216670275738_n 14670654_354633641543762_8453804402450868452_n 14720353_354633724877087_2904940662990540585_n 14720534_354633614877098_3265955861976129501_n 14721531_354910494849410_2418251435994954053_n-1 14721531_354910494849410_2418251435994954053_n 14725462_354633558210437_3683183976252272864_n 14732219_354633711543755_7106080019493682616_n

நடிகையின் சர்ச்சைக்குரிய மரணம் : இறுதிச்சடங்கில் கொலையாளி பங்கேற்றாரா?

act

இலங்கையின் பிரபல நடிகையான கவீஷா அயேஷானி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார்.

அவரின் உயிரிழப்பு விபத்து எனத் தெரிவிக்கப்பட்ட போதும், அது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சந்தேகத்திற்கு பிரதான காரணமாக விபத்து ஏற்பட்ட காரில் உயிரிழந்த நடிகையுடன் இன்னொரு இளைஞர் இருந்ததாக அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகை பூதவுடலக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காயமடைந்த நிலையில் இளைஞர் ஒருவர் வருகை தந்துள்ளார்.

இவ்வாறு காயமடைந்த வந்த இளைஞரே விபத்து இடம்பெற்ற வாகனத்தில் கவீஷாவுடன் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் கவீஷாவின் பிறந்த நாள் விழா இடம்பபெற்ற சந்தர்ப்பத்தில் அங்கும் இந்த இளைஞரை காண முடிந்துள்ளதுள்ளது. இந்

நிலையில் தலையில் காயங்களுடன் கவீஷாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு குறித்த இளைஞர் வருகைத்தந்துள்ளார். அத்துடன் கவீஷாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தர்கள் பலர் இந்த இளைஞரிடம் சென்று கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடிகை கவீஷா அயேஷானி ஓட்டிய வாகனத்தில் இருந்த மற்றைய நபர் தொடர்பில் மீரிஹான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தேசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவிக்கு சிறப்பான வரவேற்பு!!

1

வவுனியா வடக்கு கனகராயன் குளம் மகாவித்தியாலய மாணவி நாகராசா ரிலக்சினி வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளமைக்காக நேற்று (18.10.2016) அவருக்கு கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டியில் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய வவுனியா வடக்கு கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவி நாகராசா ரிலக்சினி 21 வயதிற்கு உட்பட்டவருக்கான குண்டு எறிதல் போட்டியில் 9.76 மீற்றர் தூரத்தில் குண்டு எறிந்து தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வடமாகாணத்திளற்கும் வவுனியா மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வவுனியா கனகராயன் குளம் ஆரம்ப பாடசாலையில் இருந்து ஏ வீதி வழியாக குறித்த மாணவியை வாகனத்தில் ஏற்றி பான்ட் வாத்திய இசை முழங்க மாணவர்களின் கரகோசத்துடன் கனகராயன் குளம் மகாவித்தியாலயத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு மாணவியையும் அவரது பெற்றோர் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இதேவேளை, குறித்த மாணவியின் குடும்பம் இறுதிப் போரின் போது இடம் பெயர்ந்து யுத்த அவலங்களை முழுமையாக சுமந்து மீள்குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

02 2 3

ஒரு புகைப்படத்தால் டீக்கடைகாரருக்கு அடித்த அதிஷ்ரம்!!

pakistan

பாகிஸ்தானில் டீக்கடை ஒன்றில் வேலைபார்த்து வந்த நபர் ஒருவருக்கு அவரது அழகிய கண்கள் மூலம் மொடலாகுவதற்கான வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வரும், இவரின் கருவிழிகள் நீல நிறத்தில் இருக்கும். வசிகரீக்கும் கண்கள் போன்ற இருப்பதால், இந்த கடைக்கு டீ குடிக்க வந்த நபர் ஒருவர் இவரை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது, பலரும் இவரின் புகைப்படத்தை பார்த்து, இந்நபருக்கு மொடலாகுவற்கான அனைத்து தகுதிகளும் இருக்கின்றன.

டீக்கடையில் வேலை பார்ப்பதைவிட, இவர் மொடல் துறையில் வேலை பார்க்கலாம் என பல்வேறு தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதன் மூலம் இந்த புகைப்படம் வைரலானது.

தற்போது, இந்த புகைப்படத்தின் மூலம் இவரை மொடலாக ஒப்பந்தம் செய்வதற்காக பல்வேறு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இலங்கையர்களுக்கு கிட்டியுள்ள அரிய சந்தர்ப்பம்!!

gem

வியட்நாமில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் அசங்க வெலகெதர இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இந்நதிலையில், வியட்நாமின் பூகோள ரீதியிலான வரைப்படங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் கூறியுள்ளார்.

இதன் ஊடாக இரத்தினக்கல் அகழ்வதற்கான இடங்களை அடையாளம் காண்பதற்கு வியட்நாம் இலங்கைக்கு வாய்ப்பளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும், இலங்கையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு வியட்நாமுடன் இணைந்து தொழில் புரிவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ள பிரித்தானிய பவுண்ட் : காரணம் என்ன?

pounds

பிரித்தானியாவின் பவுண்ட் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியதை தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அமெரிக்க டொலருக்கு எதிரான பிரித்தானிய பவுண்ட் மதிப்பு 20 வீதமாக குறைந்துள்ள, அதேவேளை, யூரோவுக்கு எதிராக19 வீதமாக குறைந்துள்ளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் பிரித்தானிய மக்கள் இம்முறை சுற்றுலா பயணத்தை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சுற்றுலா பயணம் மேற்கொள்வதன் மூலம் அதிகளவான பவுண்ட்களை செலவு செய்ய நேரிடும் என பிரித்தானிய மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 150,000 பிரித்தானியர்கள் நியூயோர்க் செல்வும், அதேவேளை, பாடசாலை விடுமுறையை முன்னிட்டு 300,000 பேர் Canary தீவிற்கு தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா செல்வார்கள்.

எனினும், அமெரிக்க டொலருக்கு எதிராக பிரித்தானிய பவுண்ட் மதிப்பு பாரிய விலை சரிவை சந்தித்துள்ளதனால் தமது, வாழ்வாதாரம் கருதி இதுபோன்ற சுற்றுலா பயணங்களை பிரித்தானிய மக்கள் புறக்கணித்துள்ளனர்.

120 அடி உயரத்தில் இருந்து விழுந்த நாயகன்!!

hero

நடிகர் விஜய்கார்திக் தற்போது ராம்சஞ்சய் இயக்கத்தில் அதாறு உதாறு என்ற படத்திற்காக க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் அராத்து, தமிழ் தெழுங்கு ஆகிய இரு மொழிகளில் ஷிவானி ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன.

அதாறு உதாறு படப்பிடிப்பிற்காக இறுதிக்கட்ட சண்டை காட்சிக்காக வடசென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு கதாநாயகன் விஜய்கார்திக் 20 க்கும் மேற்பட்ட வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இன்று நடந்த படபிடிப்பில் 120 அடி உயரத்தில் இருந்து கதாநாயகன் தாவும் காட்சி படமாக்கபட இருந்ததாகவும் ஸ்டன்ட் மாஸ்டர் தவசிராஜ் அது ரிஸ்கான ஷாட் என்பதால் அதற்கு டூப் ஸ்டன்ட் நபர் வைத்து எடுக்க திட்டமிடபட்டிருக்கிறது.

ஆனால் விஜய்கார்திக் அந்த காட்சியில் தனக்கு டூப் வேண்டாம் என்று கூறி அந்த காட்சியில் அவரே உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். துரதிஷ்டவசமாக கால் இடறி 120 அடி உயரத்தில் இருந்து விழுந்து சுயநினைவற்ற நிலையில் கிடந்துள்ளார். பதறிய படபிடிப்பு குழுவினர் அருகில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அவருக்கு கால் முறிவு மற்றும் உடலில் காயங்கள் உள்ளதாகவும் பதற்றம் காரணமாக மயக்கமாக உள்ளதாகவும் மருத்துவர் அவரை ஒரு வார ஓய்வில் இருக்கும் படி அறிவுருத்தியுள்ளனர். அவர் விரைவில் குணமடைந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று அதாறு உதாறு படக்குழுவினர் தெரிவித்தனர்.

சிசிடிவில் பதிவான ஆவி : பீதியைக் கிளப்பும் காணொளி!!(வீடியோ)

aavi

பல வாகனங்கள் மோதியும் எதுவும் ஆகாமல் ஒரு ஆவி உருவம் வீதியை கடந்து செல்லும் வீடியோ வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது.

பொதுவாக கடவுள் நம்பிக்கைப் போலத்தான் ஆவி, பேய் மற்றும் பிசாசு ஆகியவற்றின் மீது நம்பிக்கைக் கொண்டிருப்பது. அது அவர் அவர் நம்பிக்கையைப் பொறுத்தது.

ஆவி வீடியோக்கள் யூடியூப்பில் கொட்டிக் கிடக்கின்றன. சிலவற்றை பார்க்கும் போதே அது பொய்யாக ஜோடித்தது என்று நமக்கு தெரிந்து விடும். ஆனால், சில வீடியோக்கள் நிஜத்திற்கு அருகில் இருப்பது போல் தெரியும். அதுபோல் டில்லியில் உள்ள வீதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான ஒரு ஆவி உருவம் தொடர்பான வீடியோ இணையத்தில் உலா வருகிறது.

டில்லியில் உள்ள ஒரு வீதியில், அதிகாலை 2.11 மணி அளவில் ஒரு கறுப்பு உருவம் நடந்து செல்கிறது. அப்போது அந்த வீதி வழியாக செல்லும் ஒரு லொரி, அந்த உருவத்தின் மீது மோதுகிறது. ஆனால், அந்த உருவத்திற்கு எதும் ஆகவில்லை. அதன்பின்னும் அந்த உருவம் தொடர்ந்து நடக்கிறது. அதன்பின் 2 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை அந்த உருவத்தின் மீது மோதி கடந்து செல்கிறது.

ஆனாலும், எதுவும் ஆகாமல் நடந்து செல்லும் அந்த உருவம் சட்டென மறைந்து விடுகிறது. அந்த சிசிடிவி வீடியோவில் திகதி 15.08.2016 என்று காட்டுகிறது. அதை, தற்போது யாரோ இணையத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

விராட் கோஹ்லியின் காதலி யார் : சர்ச்சையை பரப்பியுள்ள சம்பவம்!!

virat

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே பிவண்டியிலுள்ள பாடசாலையொன்றின் பரீட்சை வினாத்தாளில் “விராட் கோஹ்லியின் காதலி யார்?” என்ற கேட்கப்பட்ட கேள்வி விமர்சனத்துதுக்குள்ளாகியுள்ளது.

குறித்த பரீட்சை வினாத்தாளில் “விராட் கோஹ்லியின் காதலி யார்?” என்ற கேள்விக்கு பதில்களாக அனுஷ்கா சர்மா, தீபிகா சர்மா மற்றும் தீபிகா படுகோன் என தரப்பட்டிருந்தன. அதில் ஒரு பதிலை மாணவர்கள் தெரிவுசெய்ய கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவர்களின் பொது அறிவை சோதிப்பதற்கான கேள்வி இதுவா? என சமுக ஆர்வாளர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதனால் குறித்த மாநிலத்தைச் சேர்ந்த கல்வி அதிகாரிகள் இது தொடர்பில் விசாரணை செய்து வருகின்றனர்.

வேலியே பயிரை மேய்ந்த கொடூர சம்பவம்!!

abuse

கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் 4 வயது சிறுமி ஒருவர் 70 வயது ஓய்வு பெற்ற பேராசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.

திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமாங்காடு, வஞ்சுவம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் முகமதுசாலி. 70 வயதான இவர் பக்கத்து வீட்டுடன் நல்ல நட்புடன் பழகி வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை பக்கத்து வீட்டில் உள்ள பெண் அவரது மூத்த மகளை பாடசாலையில் இருந்து அழைத்து வர சென்றுள்ளார்.

அப்போது அவரது 4 வயது பெண் குழந்தை வீட்டில் இருந்துள்ளது. இந்த நேரத்தில் அங்கு சென்ற பேராசிரியர் முகமதுசாலி அந்த 4 வயது சிறுமியை வீட்டின் முன்பக்கம் உள்ள கார் பார்க்கிங் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது.

இதனையடுத்து பாடசாலையில் இருந்து திரும்பி வந்த தாயிடம் சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் முகமதுசாலியை கைது செய்தனர். முகமதுசாலி அங்குள்ள தனியார் கல்லூரியின் தொண்டு நிறுவனத்திலும் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 கைகளுடன் அதிசய சிறுவன்!!

nepal

நேபாளத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் கவுரப் கரும். இவன் 3 கைகளுடன் பிறந்தான். 3வது கை அவனது நடுமுதுகில் இருந்து முளைத்து வளர்ந்து வருகிறது.

இதனால்அவன் தனது அன்றாட வாழ்க்கையில் மிகவும் அவதிப்படுகிறான், தூங்கும் போது மிகவும் சிரமப்படுகிறான். அவனது 3-வது கை முதுகு தண்டு வடத்தில் இருந்து உருவாகியுள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக தாயின் கருவில் இரட்டைக் குழந்தைகளாக உருவாகி அது முழு வளர்ச்சி அடையாமல் இருப்பதால் இது போன்று கைகள் உருவாகின்றன என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற விபரீதங்கள் 1500-ல் ஒரு குழந்தைக்கு அரிதாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

தேவையின்றி கூடுதலாக உருவாகியுள்ள அந்த கையை ஆபரேசன் மூலம் அகற்றுவது மிகவும் ஆபத்தானது. அதை அகற்றுவதன் மூலம் சிறுவனின் தண்டு வடத்தில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் பக்கவாதம் நோய் உருவாக பெருமளவில் வாய்ப்பு உள்ளது. எனவே அதை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஒரு பகுதி மக்கள் மத நம்பிக்கையில் மிகவும் ஈடுபாட்டுடன் திகழ்கின்றனர். கர்ப்பகாலத்தில் மருத்துவ சிகிச்சை, ஸ்கேன் பரிசோதனை செய்து கொள்ள அவர்களது மதகுருமார்கள் அனுமதிப்பதில்லை. அது போன்ற காரணங்களால் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 210 மில்லியன் யூரோ உதவி!!

eu

இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் 2020ம் ஆண்டுக்கு முன்னர் 210 மில்லியன் யூரோக்களை வழங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெல்ஜியத்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.