வவுனியாவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை!!

 
வவுனியா மாவட்டத்தின் கால்நடை வைத்திய நடமாடும் சேவை இன்று (18.10.2016) காலை 9 மணிக்கு வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

வடமாகாண விவசாய கால் நடைகள் அமைச்சர் பொ.ஜங்கரநேசன கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்துவைத்தார்.

இந்நிகழ்வில் கால்நடை பண்ணைகளை பதிவு செய்தல், விலங்கு நோய்களுக்கான மருத்துவ சேவை, ஆண். பெண் நாய்கள், பூனைகளுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சை, விலங்கு நோய்த் தடுப்பு மருந்து வழங்கல் செல்லப்பிராணிகளுக்கு விசர்நாய்த் தடுப்பு, கோழிகளுக்கான கொள்ளை நோய், கம்டபோறா, கோழி அம்மை, மாடுகளுக்கான கருங்காலி நோய், கால்வாய், நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் வழங்கல், விலங்குகள் இனப்பெருக்க சேவை, விவசாய, கால்நடை காப்பறுதி சேவை, வங்கிச் சேவை,

கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கத்தின் சேவை, கால் நடை பண்ணை உபகரணங்கள், உள்ளீடுகளை உற்பத்திசெய்யும் கம்பனிகளின் சேவை, தனியார் கால்நடை உற்பத்தி பொருட்கள் விற்பனை போன்ற சேவைகளும் இடம்பெற்றது.

வடமாகாண சபையினால் குறித்து ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு வாழ்வாதார உதவிகளும், விவசாய உள்ளீடுகள் என்பன் அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், வடமகாணசபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, ம.தியாகராசா, ஜெயதிலக, அமைச்சின் செயலாளர் ப.சத்தியசீலன், மற்றும் கால்நடை திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

_mg_1576_1 _mg_1585 _mg_1588 _mg_1589 _mg_1590 _mg_1594 _mg_1595 _mg_1597 _mg_1599 _mg_1600 _mg_1603 _mg_1604 _mg_1605 _mg_1609 _mg_1612 _mg_1617 _mg_1618 _mg_1619 _mg_1621 _mg_1623 _mg_1626 _mg_1627 _mg_1629 _mg_1631

நடிக்க மாட்டேன் – சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு!!

qkmjvnfdbgbje

நடிகர் சிவகார்த்திகேயன் ‘ரெமோ’ படவிழாவில் தனக்கு சிலர் தொல்லை கொடுப்பதாக மேடையிலேயே அழுதபடி புகார் கூறினார். தான் நடித்த ரஜினி முருகன், ரெமோ படங்களை திரைக்கு வர விடாமல் இடையூறு செய்ததாகவும் குற்றம் சாட்டினார். இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. சிவகார்த்திகேயன் புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிவித்தார்.

நடிகர் சங்க தலைவர் நாசர் கூறும்போது, “மூன்று தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயன் தங்கள் படங்களில் நடிக்க முன்பணம் கொடுத்து இருப்பதாக புகார் கூறி உள்ளனர். ஆனால் சிவகார்த்திகேயன் இதனை மறுத்து உள்ளார். சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களையும் சிவகார்த்திகேயனையும் அழைத்து இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றார்.

தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் தேனப்பன் கூறும்போது, “ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தனது படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு கொடுத்து இருப்பதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுபோல் தயாரிப்பாளர்கள் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவிஸ் மதன் ஆகியோரும் தங்கள் படங்களில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு சம்பள முன்பணம் கொடுத்து இருப்பதாகவும் தற்போது அவர் நடிக்க மறுப்பதாகவும் புகார் அளித்துள்ளனர். சிவகார்த்திகேயனிடம் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இந்த நிலையில் 2 புதிய படங்களில் நடிக்க தன்னை வற்புறுத்துவதாகவும் அந்த படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் நடிகர் சங்கத்துக்கு சிவகார்த்திகேயன் கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

“என்னிடம் கால்ஷீட் கேட்டு 2013-ல் தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவிஸ் மதன் ஆகிய 3 பேர் அணுகினார்கள். இதில் ஞானவேல்ராஜா படத்தில் நடிப்பதற்கு மட்டும் ஒப்பந்தம் போடப்பட்டது. மற்ற இருவரின் படங்களில் நடிக்க வாய்மொழியாகவே பேசப்பட்டது. இதற்காக அவர்களிடம் சம்பளத்துக்கான முன்பணம் எதுவும் நான் வாங்கவில்லை.

இப்போது எனது மார்க்கெட் நிலவரம் உயர்ந்துள்ள நிலையில் அவர்கள் மூன்று பேரும் வந்து தங்கள் படங்களில் நடித்துக் கொடுக்கும்படி வற்புறுத்துகிறார்கள். ஞானவேல்ராஜாவிடம் ஒப்பந்தம் போட்டு இருப்பதால் அவர் படத்தில் நடித்துக் கொடுப்பேன். ஆனால் மற்ற இருவரின் படங்களிலும் நடிக்க முடியாது. அவர்களிடம் ஒப்பந்தம் எதுவும் போடவில்லை. இந்த பிரச்சினையை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறேன்.”இவ்வாறு சிவகார்த்திகேயன் கடிதத்தில் கூறி இருக்கிறார்.

இந்த கடிதத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் சங்கம் அனுப்பி வைத்து இருக்கிறது. இதன்மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

மின்தடையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை!!

dd883c3dc241deb905703e1ba3950f94_xl

மின்சக்தியின் தரம் தொடர்பிலான புதிய விதிமுறைகள் மற்றும் ஒழுங்குகளை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயலாளர் தமிந்த குமாரசிங்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் மின்சார நடத்தை நியமனங்கள் மற்றும் பாதுகாப்புத் தேவை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.இதில் மின்சார நடத்தை, ஒழுங்கு விதிகள் பாதுகாப்பு தரம், தொடர்ச்சியான பயன்பாட்டு தேவை மற்றும் முகாமைத்துவம் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மின்சார தடை மற்றும் மின்வலு காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களுக்கு நட்ட ஈடுகளையும், வினைதிறன்மிக்க சேவைகளையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் பல தீர்மானங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் விநியோக முறையில் ஏற்படும் தரப்பிரச்சினையினால் சாதனங்களுக்கு ஏற்படும் நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறினார்.மேலும், எதிர்காலத்தில் மின் வழங்களின் அதி உயர் நம்பகத்தன்மையுடன் பாதுகாப்பு மற்றும் வினைத்திறனான செயற்பாட்டை மேம்படுத்தும் அதேவேளை சேவைகளை திறமாக்கும் நோக்கிலும் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவற்றை மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிடியவினூடாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தமிந்த குமாரசிங்க சுட்டிக்காட்டினார்.உயர்வலு தொடர்பான பிரச்சினைகளுக்கு மின்வலு மற்றும் மின்சக்தி சேவையில் சட்ட ரீதியிலான விதிமுறைகள் உள்ளன.அவற்றை பாவனையாளர்களை பயன்படுத்துவதன் மூலம் நீதியானதும், நியாயமானதுமான முறையில் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சி புயலாக தர்மதுரை ஐஸ்வர்யா!!

aishwarya_rajesh_2935129g
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டகத்தி, ரம்மி என முக்கிய படங்களில் நடித்திருந்தாலும் காக்கா முட்டை படத்தின் மூலம் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர்.

தொடர்ந்து நடித்து வந்த அவர் தர்மதுரை படத்தில் அன்புசெல்வியாக நடித்து எல்லோரையும் ஈர்த்தவர்.கவர்ச்சியுடன் நடிக்க விரும்பும் இவருக்கு குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் வெற்றி பெறுவதால் இயக்குனர்கள் சென்டிமெண்டாக அதே கதாபாத்திரத்தை மட்டுமே இவருக்கு கொடுக்கிறார்கள்.

தற்போது மா.கா.பா உடன் கடலை படத்தில் நடித்து வரும் இவர் பயங்கர கவர்ச்சியுடன் படு ஆட்டம் போட்டுள்ளாராம். தொடந்து இது போல நடிக்க தீவிர ஆர்வம் காட்டுகிறார்.மேலும் இயக்குனர் அமீரின் படத்தில் புதியதாக ஒப்பந்தமான இவர் தீவிரமாக மதுரை தமிழ் கற்றுவருகிறாராம்.

ஒரே ஒரு விஷயத்துக்காக அதிக பணம் செலவு செய்த நடிகைகள்!!

samantha-spoiled-shruti-dream-project

நடிகைகள் சினிமாவில் ஒரு நிலைக்கு வந்துவிட்டார்கள் என்றால் அடுத்து அவர்களுடைய டார்க்கெட் வீடு, கார் வாங்குவது தான்.பல நடிகைகள் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் வீடுகள் வாங்கியுள்ளனர். அதேபோல் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சமந்தா ஆகியோர் பல கோடிகளுக்கு கார் வாங்கியுள்ளனர்.

ஹன்சிகா பி.எம்.டபுள்யு 5 சீரிஸ் செடன் வாங்கியுள்ளார். அதோடு இவரின் அதிர்ஷ்ட எண் 9 என்பதால் அந்த எண்ணை வாங்க அதிக பணம் செலவு செய்துள்ளார்.அதேபோல் ஸ்ருதிஹாசன், சினிமாவில் நுழைந்ததில் இருந்து சொந்த காலில் நிற்பதையே அவர் விரும்புகிறார். சினிமாவில் சம்பாதித்த பணத்தில் அவர் ரூ.1½ கோடி செலவில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை வாங்கி இருக்கிறார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த சமந்தா இப்போது சமூக சேவைகள் செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார். பி.எம்.டபுள்யு எக்ஸ் 5 சீரிஸ் காரை ரூ.76 லட்சம் செலவில் வாங்கி இருக்கிறார். இவரும் அதிர்ஷ்ட எண் 9ஐ பெற பணம் செலவு செய்துள்ளார்.

கீர்த்தி சுரேஷின் அம்மா எடுத்த அதிரடி முடிவு?

image_seed_136_6394515_keerthi_11515t
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நாயகியாக வளர்ந்து வருகிறார். இவர் அடுத்தடுத்து விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கின்றார்.இந்நிலையில் இவரின் அம்மா மேனகா 80களில் முன்னணி ஹீரோயின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கூட நடித்துள்ளார்.

இவர் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார். இதன் முதற்க்கட்டமாக நடிகர் பிரதாப்புடன் ஒரு குறும்படத்தில் நடித்து வருகின்றார்.இதற்கு கீர்த்தி சுரேஷும் தன் பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து, போஸ்ட்டரை பகிர்ந்துள்ளார்.

பேய் மீது மோதிய வாகனங்கள்..! பீதியை கிளப்பும் சிசிடிவி வீடியோ!!

ghost-seen-walking-across-busy-main-road
இந்தியாவில் பேய் போன்ற உருவம் ஒன்று சாலையை கடந்து செல்லும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்து சம்பவம் தலைநகர் டெல்லி சாலையில் இருந்த சிசிடிவி கெமராவில் ஒன்றில் பதிவாகியுள்ளது.

குறித்த வீடியோவில், டெல்லியில் உள்ள ஒரு சாலையில், அதிகாலை 2.11 மணி அளவில் ஒரு கருப்பு உருவம் நடந்து செல்கிறது.அப்போது அந்த சாலை வழியாக செல்லும் லாரி, கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் வாகனங்கள் அந்த உருவத்தின் மீது மோதுகிறது. ஆனால், அந்த உருவத்திற்கு ஏதும் ஆகவில்லை. அதன்பின்னும் அந்த உருவம் தொடர்ந்து நடக்கிறது.

ஏதுவும் ஆகாமல் நடந்து செல்லும் உருவம் திடீரென மறைந்து விடுகிறது. குறித்த நிகழ்வு இணையத்தில் வெளியாகி பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவைப் பார்க்க மோடி வராதது ஏன்..? கசிந்த உண்மை நிலவரம்!

jayalalitha
முதவ்வர் ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி இப்போதைக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வரவேண்டாம் என அதிமுக நிர்வாகம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் வெளியான தகவல் படி, நோய்த் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதால்தான் வெளியாட்கள் யாரையும் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் முதல் அனைவரும் முன்னெச்சரிக்கையான ஆடைகளுடன் வந்து செல்கிறார்களாம்.ஆளுநர் வித்யாசாகர் முதல் பா.ஜ.க தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட தலைவர்கள் அனைவரும் மருத்துவக் கட்டுப்பாடுகள் காரணமாகத்தான் ஜெயலலிதா தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வார்டை பார்த்து விட்டுச் சென்றுள்ளார்கள்.

இதனால் தான் பிரதமரின் வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது,முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக பார்க்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்த பின்னர், பிரதமர் மோடி அப்போலோ வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்றவர்களைப்போல மருத்துவர்களிடம் மட்டும் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு பிரதமர் செல்வது முறையல்ல என கூறியுள்ளார்.

காதலனை நம்பி திருமணம் செய்ய போன காதலி: நண்பர்களால் நேர்ந்த விபரீதம்!!

1-54
தமிழகத்தில் காதலியை திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(27). இவர் அப்பகுதியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இவர் கல்லூரி முடிந்ததும், சுரேஷ் என்பவரின் ஆட்டோ மூலம் வீட்டிற்கு செல்வதை பழக்கமாக வைத்துள்ளார். இதனால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இது நாளைடைவில் இருவருக்கும் காதாலாக மாற, பல்வேறு இடங்களுக்கு சுற்றி வந்துள்ளனர்.அதன் பின்னர் ஆட்டோ டிரைவர், அப்பெண்ணை திருமணம்செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வீட்டில் இருக்கு நகைகளை எல்லாம் எடுத்துவருமாறு கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பி இப்பெண்ணும் வீட்டில் இருந்த நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு பெற்றோருக்கு தெரியாமால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.வெளியேறிய அவர்கள் நாகர்கோவிலில் உள்ள லாட்ஜில் தங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் காலையில் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக தாலி வாங்கி வருவதாக கூறி வெளியில் சென்று விட்டார்.

அப்போது லாட்ஜின் பக்கத்து அறையில் இருந்த சிலர் இப்பெண் இருந்த அறைக்குள் வந்து கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆனால் அப்பெண் கூச்சலிட்டும் லாட்ஜில் இருந்த யாரும் வரவில்லை. அப்பெண்ணுக்கும், இவர்களுக்கு இடையே நடந்த தொடர் தகராறின் பேரிலே அருகில் இருந்தவர்கள் அப்பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.அதன் பின் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொலிசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ டிரைவர் அவர்களின் நண்பர் என்பதும் அவர் அழைத்ததின் பேரிலே தான் தாங்கள் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.இதை அறிந்த பொலிசார் ஆட்டோ டிரைவர் சுரேஷ், அவரின் நண்பர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படுக்கையிலிருக்கும் நோயாளிகளை பராமரிக்கும் செயற்திட்டம் வடமாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பம்!!

1

யுத்தம் மற்றும் விபத்துக்களால் காயமடைந்து சுயமாக நடமாடமுடியாது படுக்கையிலிருக்கும் நோயாளிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் விசேட செயற்திட்டமொன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசேட செயற்திட்டம் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான செயற்திட்டத்தை எமது மாகாணத்தில் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றோம். நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் எமது மாகாணம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் முற்றிலும் வேறுபட்டதாகவே உள்ளது.

அதனடிப்படையில் எமதுமாகாணத்தின் தேவை கருதி இவ்வாறான பிரத்தியேக திட்டங்களை ஆரம்பிக்வேண்டிய தேவை எழுந்துள்ளது. எமது மாகாணத்தில் இந்த கொடிய யுத்தத்தின் காரணமாக பல நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டு சுயமாக இயங்கமுடியாமல் வீடுகளில் உள்ளனர். இவர்களை கவனிக்க தற்போதுள்ள சுகாதார சேவையில் வசதிகள் இல்லை.

எனவேதான் இவ்வாறானவர்களை கவனிக்க 2014ம் ஆண்டு வவுனியாவில் வைகறை எனும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தை ஆரம்பித்தோம். எனினும் அந்த புனர்வாழ்வு நிலையத்தில் போதிய இடவசதிகள் இல்லை. மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறாக சுயமாக இயங்கமுடியாது படுக்கையில் இருக்கும் நோயளிகள் பலசிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவர்களில் பலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு வசதியற்றவர்களாக இருக்கின்றார்கள். எனவே அவர்களின் நலன்கருதியே இந்த செய்ற்திட்டத்தை ஆரம்பிக்கின்றோம்.

இந்த திட்டம் மாகாண நிதியிலோ அல்லது மத்திய அரசின் நிதியிலோ ஆரம்பிக்கவில்லை. அண்மையில் நான் கனடாவுக்க விஜயம் செய்தபோது புலம்பெயர் உறவுகளை சந்தித்தபோது நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன்.

புலம்பெயர் கொடையாளர்களின் உதவியுடன் உள்ளுரில் உள்ள தொண்டுநிறுவனங்களினூடாகவே இந்த செய்ற்திட்டத்தை முன்னெடுக்கின்றோம். எதிர்காலத்தில் இந்த செயற்திட்டம் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நடமாடும் குழு சேவையில் ஈடுபடும். அதில் மருத்துவ தாதி, உளநல ஆலோசகர், மற்றும் உதவியாளர் ஒருவர் இடம்பெறுவர். இவர்கள் நோயளிகளின் வீடுகளுக்கு களவிஜயத்தை மேற்கொண்டு சிகிச்சைகளை வழங்குவர் என்று தெரிவித்தார்.

1 cc dd z

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கல்விக்கண்காட்சி!!

 
திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் நேற்று (17.10.2016) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு முன்பள்ளியின் ஆசிரியர் திருமதி.மீரா குணசீலன் அவர்களின் தலைமையில் கல்விக்கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழ்த்தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான முத்தையா கண்ணதாசன் , ஆட்டோ சங்கத் தலைவர் சி.ரவீந்திரன், முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் இராசையா ரகுபதி ஆகியோருடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சுந்தரலிங்கம் காண்டீபன், உறுப்பினர் கெர்சோன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர் .

இந் நிகழ்விற்கு புளொட் அமைப்பின் பிரித்தானியா கிளை உறுப்பினர் தர்மலிங்கம் நாகராஜா (பொக்கன்) அவர்கள் நிதி அனுசரணை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 img_9582 img_96051 img_9605 img_9606 img_9607 img_9613 img_9614 img_9617 img_96301 img_96302 img_9630 img_9649 img_9661

வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் நடைபெற்ற பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்!!

 
வவுனியா விபுலாநந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் (16.10.2016) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை கல்லூரியின் அதிபர் திரு எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் வளர்ச்சியிலும், துரித அபிவிருத்தி பணியிலும் பழைய மாணவர்களை உள்வாங்கி, புது உத்வேகத்துடன் கல்லூரியை முன்னணிப் பாதையில் கொண்டுசெல்ல அமைதியான முறையிலும், ஆக்கபூர்வமான கருத்துக்களுடனும் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.

புதிய நிர்வாக சபையில் தலைவராக கல்லூரி அதிபர் எஸ்.அமிர்தலிங்கம் அவர்களும், உப தலைவராக எல்.சுரேந்திரசேகரன் , செயலாளராக எஸ்.சுரேந்தர், பொருளாளராக ரி.கார்த்திக், இணைச் செயலாளராக செல்வி எ.திபியா, உப செயலாளராக சாய் பிரசாத் அவர்களுடன் நிர்வாக சபை உறுப்பினர்களாக 14 பேரும், பிரிவு இணைப்பாளர்களாக 04 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 14591762_1216530151702116_4763016194010647851_n 14681612_1216530085035456_6480730471513431182_n 14691234_1216529848368813_2652343694507666585_o 14711478_1216529701702161_5628455191888610525_o 14712557_1216530271702104_6465780896257084779_o 14731105_1216529958368802_6851555067999920652_n

பெண்கள் ஆண்களிடம் காதலை சொல்ல தயங்குவது ஏன்?

propose

காதலை முதலில் சொல்வது ஆண்கள் தான், காதலித்தாலும் பெண்கள் வெளிப்படுத்தவே தயங்குவார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்,

பெண்கள் காதலை மறுப்பதற்கு முதல் காரணமாக இருப்பது அவர்களின் பெற்றோர்கள் தான். ஏனெனில் பெற்றோர்கள் தன்னுடைய காதலை ஒப்புக் கொள்ள மறுத்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் பெண்களிடம் அதிகமாகவே இருக்கின்றது.

உண்மையாக காதலிக்கும் பெண்கள் தான் விரும்பிய காதலனையே திருமணம் செய்துக் கொண்டு வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே இந்த பெண்களின் விருப்பத்திற்கு தடைகள் ஏதேனும் வந்துவிட்டால், வீட்டில் பார்ப்பவரை திருமணம் செய்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் வந்துவிட்டால் என்று நினைத்தது தன்னுடைய காதலை சொல்லாமலே மனதில் மறைத்து விடுகிறார்கள்.

நமது சமுதாயம் மற்றும் ஒருசில பெற்றோர்கள் சாதி, மதம் ஆகியவற்றை பார்த்து காதலுக்கு தடைகள் கூறுவதால், பெண்கள் தாங்கள் விரும்பியவரை மணம் செய்து கொள்ள முடியாத சூழ்நிலைகள் ஏற்படுகிறது. இந்த மாதிரியான பிரச்சனைகள் இருப்பதால் பெண்கள் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

ஆண்களில் ஒருசிலர் காதலித்து, அவர்களின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்தால், பிறகு தன்னை விட்டு சென்று விட்டால் என்ன செய்வது என்ற பயத்தினாலும் பெண்கள், அதிகமாக ஆண்கள் கூறும் காதலை மறுப்பதுடன் அதிகமாக யோசிக்கிறார்கள்.

வளையக்கூடிய புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்!!(காணொளி)

p2

தற்போதெல்லாம் மிகவும் மெலிதான தோற்றம் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகமாகிவிட்டன.

அடுத்த கட்டமாக வளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இம் முயற்சியின் பயனாக தற்போது கனடாவிலுள்ள குயீன்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள Human Media Lab இல் பணியாற்றும் குழு வளையும் கைப்பேசியின் மாதிரி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

Whammy Phone என அழைக்கப்படும் குறித்த ஸ்மார்ட் கைப்பேசியானது OLED தொழில்நுட்பத்தினைக் கொண்டதும், 1920 x 1080 Pixel Resolution உடையதுமான திரையினைக் கொண்டுள்ளது.

நேற்று ஜப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெற்ற Human-Computer Interaction நிகழ்வில் இக் கைப்பேசியின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

குறித்த விளக்கம் தொடர்பான வீடியோ காட்சி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இக் கைப்பேசியின் ஏனைய சிறப்பம்சங்கள் உட்பட அறிமுகமாகும் திகதி தொடர்பான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

p1

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த டோனி!!

dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி தலைவர் மகேந்திர சிங் டோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றி டோனி தலைமையில் இந்திய அணி பெறும் 108வது வெற்றியாகும். இதன்மூலம் சர்வதேச அளவில் அதிக வெற்றிகள் பெற்ற 2வது அணித்தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் டோனி.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் 165 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

அலன் போடர் (107), குரோஞ்ச் (99), பிளம்மிங் (98), ஸ்மித் (92) ஆகியோர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

உலகில் பாதுகாப்பில்லாத நாடுகள் இவைகள் எவை தெரியுமா? பட்டியல் வெளியானது!!

dangour

உலக பொருளாதார அமைப்பு “Global Travel And Tourism” என்ற பெயரில், உலகளவில் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

குறித்த நாட்டில் நிலவும் அபாயகரமான சூழ்நிலைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற நாடுகள்

நைஜீரியா
கொலம்பியா
ஏமன்
பாகிஸ்தான்
வெனிசுலா

பாதுகாப்பான நாடுகள்

பின்லாந்து
கட்டார்
ஐக்கிய அரபு நாடுகள்
ஐஸ்லாந்து
ஒஸ்திரியா