தாய்லாந்தின் மன்னரை அவமதித்த பெண்ணுக்கு கிடைத்த தண்டனை!!

tailand

சமீபத்தில் காலமான தாய்லாந்தின் மன்னரை அவமதித்ததாக எழுந்த புகாரை அடுத்து பெண் ஒருவரை மன்னரின் புகைப்படத்தின் முன்பு மண்டியிட வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக தாய்லாந்தில் ஆட்சியில் இருந்தவர் காலமான மன்னர் பூமிபோள் அதுல்யதேஜ். இவர் தாய்லாந்தை ஏழ்மை நிலையில் இருந்து மீட்டு வந்தது மட்டுமின்றி பல வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் மன்னர் பூமிபோல் காலமானல். அவரது நினைவாக ஒரு மாத காலம் தாய்லாந்தில் துக்கம் அனுசரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் தாய்லாந்தின் பெரும்பாலான பகுதிகள் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. அங்குள்ள பொதுமக்கள் கறுப்பு உடை அணிந்து துக்கம் அனுசரித்து வருகின்றனர்.

இதனிடையே நீண்ட ஒரு மாத காலம் துக்கம் அனுசரிப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்களிடையே முணுமுணுப்பு எழுந்துள்ளது.

இது மன்னரை அவமதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மன்னருக்கு மரியாதை செலுத்துவதாக கூறி தாய்லாந்த் மொத்தமும் கடை மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டு காணப்படுவதால் வருவாய் இழப்பு ஏற்பட்டு, பொருளாதார மந்த நிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதுகாரணமாகவே பொதுமக்கள் குறித்த துக்க அனுசரிப்புக்கு எதிராக கருத்து கூற தொடங்கியுள்ளனர். இது அதிகாரிகளுக்கு தெரிய வரவே பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அவரை பொதுமக்கள் முன்னிலையில் காலமான மன்னரின் புகைப்படத்தின் முன்பு மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா நலம் பெற வேண்டி பிரபல நடிகை செய்த காரியம்!

varalaxmi

தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் என பலர் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

அதன் பயனாக தற்போது ஜெயலலிதா நல்ல நிலையில் உள்ளதாகவும், ஓரிரு வார்த்தைகள் அவ்வப்போது பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்பதற்காக பிரபல திரைப்பட நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகரான விவேக் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிப்பாடு ஒன்றை நடத்தினார். இந்த சிறப்பு வழிப்பாட்டில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட 27 வகையான படையல்களை வைத்து வழிபட்டார்.

அவரைத் தொடர்ந்து தற்போது நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரான நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் தனது அம்மாவுடன் கேரளாவில் உள்ள கண்ணூர் அகத்தியர் ஆஸ்சிரமத்தில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜை ஒன்றை நடத்தியுள்ளார்.

50000 ரூபாவிற்கு சிசுவை விற்ற தாய் உள்ளிட்ட மூவர் கைது!!

police

50000 ரூபாவிற்கு சிசு ஒன்றை விற்பனை செய்த தாய் உள்ளிட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சட்டத்திற்கு புறம்பான முறையில் 11 நாளான சிசுவொன்றை வளர்ப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 50000 ரூபா பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

காலி பொலிஸாரினால் குறித்த சிசுவின் தாய், அவரது தாய் மற்றும் உதவி நபர் ஒருவர் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 வயதான சிசுவின் தாய் முறையாக திருமணம் செய்து கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரசவத்தின் பின்னர் சிசு வீட்டுக்கு கொண்டு வரப்படாமை குறித்து உறவினர்கள் விசாரித்து அது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிசுவை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தவர் குறித்த பெண்ணுடன் இரகசிய தொடர்பினை பேணியவர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யூரோப்பியன் சம்பியன் கராத்தே போட்டியில் ஈழத்துச் சிறுமி சாதனை!!

11

2016ஆம் ஆண்டுக்கான யூரோப்பியன் சம்பியன் கராத்தே போட்டி இத்தாலி நாட்டில் கடந்த 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற்றது.

இதில் பத்து வயதுப் பிரிவில் காட்டா போட்டியில் ஈழத்து சிறுமி ஒருவர் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

லண்டனில் வசிக்கும் சிவகுமார் அகல்யா என்ற சிறுமியே இரண்டாம் பெற்றுள்ளார். இந்நிலையில், தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்த அச்சிறுமி,

தனக்கு கற்பித்த ஆசான்களாலும், பெற்றோர்களாலும் தனது விடாமுயற்சியான பயிற்சியாலும் கிடைத்த வெற்றி என அச்சிறுமி கூறியுள்ளார்.

12

பிரான்சில் இலங்கை தமிழர் ஒருவர் படுகொலை : நான்கு இலங்கையர்கள் கைது!!

france

பிரான்ஸ் நாட்டில் வைத்து இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி பிரான்சில் உள்ள ஒபேவில்லியேவில் (Aubervilliers – Seine-Saint-Denis) எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 16ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்த கொலை சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க இலங்கை தமிழ் இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த கொலை சம்பவம் தொடர்பில் நான்கு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த கொலைக்கான முழுமையான விபரங்கள் இது வரையிலும் தெரியவில்லை. ஆனால் ஒரு மோதலின் முடிவிலேயே, இந்தப் படுகொலை நடந்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மோதல்கள் இடம்பெற்றமைக்கான அடையாளங்கள் கொலை இடம்பெற்ற வீட்டில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், பொபினி நீதிமன்றத்தின் பணிப்பில், கொலைக்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நாடு திரும்பும் அகதிகளுக்கு 2000 பவுண்ஸ் நிதி : பிரித்தானியா அறிவிப்பு!!

britan

பிரித்தானியா அகதிகள் தொடர்பான நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் நாட்டை விட்டு வெளியேறும் அகதிகளுக்கு 2000 பவுண்ட்ஸ் வழங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளை நோக்கி அகதிகள் படையெடுக்க தொடங்கியுள்ள நிலையில், பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள் அகதிகள் தொடர்பில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவை விட்டு வெளியேற இணக்கம் தெரிவிக்கும் அகதிகளுக்கு தலா 2000 பவுண்ட்ஸ் நிதி வழங்கப்படும் என்ற தகவலை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தலைமையிலான அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விடயம் தொடர்பில் அந்நாட்டு உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இது வரையான காலப்பகுதியில் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள குறித்த திட்டத்தின் கீழ் 529 அகதிகள் நிதியுதவி பெற்று வந்துள்ளனர்.

அகதிகள் பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கோ, தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கோ அல்லது சொந்த நாட்டில் சுய தொழிலை ஆரம்பிப்பதற்கோ இந்த நிதி பயன்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானியா அகதிகள் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரிய கரடியை வீட்டில் வளர்க்கும் தம்பதி!!

1

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பாரிய கரடியொன்றை தமது வீட்டில் வைத்து வளர்க்கின்றனர்.

சுமார் 1,500 இறாத்தல் (680 கிலோ­கிராம்) எடை கொண்­ட­தாக இந்த கரடி உள்­ளது. எனினும், இக்­ கரடியுடன் இவர்கள் கொஞ்சி விளை­யா­டு­கின்­றனர்.

இவ்­வாறு கர­டி­க­ளுடன் பழ­கு­வது ஆபத்­தா­னது. ஆனால், கொவால் ஸ்க் என்­ப­வரும் அவரின் மனைவி சுசானும் 23 வரு­டங்­க­ளாக இக்­ க­ர­டியை வளர்த்து வரு­கின்­ற­னராம்.

நியூயோர்க்­கி­லுள்ள காய­ம­டைந்த மற்றும் கைவி­டப்­பட்ட மிரு­கங்­க­ளுக்­காக இத் ­தம்­ப­தி­யினர் நடத்தும் காப்­ப­கத்­துக்கு, போத்­தலில் பால் குடிக்கும் குட்­டி­யாக இக்­க­ரடி கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது கொவால்ஸ்க் அதனை முதன்­மு­தலில் கண்டார்.

அதன்பின் அக் ­க­ரடிக் குட்­டியை அவர் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்க்க ஆரம்­பித்தார். “உங்­க­ளுக்கு நேரம் இருந்தால், நாள் முழு­வதும் அத­னுடன் விளை­யாடலாம்.

அதிஷ்­ட­வ­ச­மாக இந்த கரடி தனது எடையை மற்­ற­வர்கள் மீது பிர­யோ­கிப்­ப­தில்லை. உங்கள் மீது அது சரிந்தால் பிரச்­சினை ஏற்­ப­டலாம்” என கொவால் ஸ்க் தெரி­வித்­துள்ளார்.

இந்த கர­டிக்கு ஜம்போ என பெயரி­டப்­பட்­டுள்­ளது. தவிர, மேலும் 10 கரடி­க­ளையும் இத் ­தம்­ப­தி­யினர் தமது வீட்டில் வளர்க்கின்றனர். இவை தவிர காயமடைந்த வாத்துகள், மான் போன்றவற்றுக்கும் இவர்கள் புனர் வாழ்வளித்துள்ளனர்.

2 3

சமந்தாவின் புதிய கன்டிஷன்!!

samantha

நாக சைதன்யாவுடன் அடுத்த ஆண்டு திருமணம் என்பதை உறுதி செய்துவிட்டார் சமந்தா. ஆனாலும் கூட அவரை சினிமாவில் நடிக்க இன்னமும் அணுகிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

கல்யாண பேச்சு வந்தும், முன்னணி ஹீரோயின்கள் லிஸ்டில் தான் இன்னமும் நீடிக்கிறார் சமந்தா. ஆனால், வரும் வாய்ப்புகளுக்கு அவர் போடும் ஒரே கண்டிஷன் நீண்ட காலத்துக்கு படப்பிடிப்பை இழுக்காமல் சீக்கிரம் முடிக்க வேண்டும்.

அப்படிபட்ட படமாக இருந்தால் மட்டும் வாங்க. இல்லாவிட்டால் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறாராம்.

அதாவது அடுத்த ஆண்டு மத்தியில் திருமணம். தனது எந்தவொரு கமிட்மென் டும் திருமணத்தை பாதித்துவிடக்கூடாது என்பது தான் இந்த கண்டிஷனுக்கு காரணம்.

இந்த காரணத்தால் தான் நீண்ட கால தயாரிப்பான ‘வடசென்னை’ படத்தில் இருந்து விலகினார். ஆனால், சிவகார்த்திகேயன் ஜோடியாக பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். காரணம் பொன்ராம் விரைவில் படத்தை முடித்துவிடுவார் என்பதால்.

நீரில் மூழ்கிய நபரை காப்பாற்றிய யானை : வியக்கவைக்கும் காணொளி!!

தாய்லாந்தில் உள்ள யானைகள் சரணாலயம் பகுதியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபர் ஒருவரை அங்கிருந்த யானைக்குட்டி காப்பாற்றும் காட்சி சமூக வலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மின் வெட்டு நேரம் குறைப்பு!!(முழு விபரம் இணைப்பு)

power

கடந்த 15ம் திகதி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இலங்கையில் மின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்றில் இருந்து (17) எதிர்வரும் 21ம் திகதி வரை காலை இரண்டரை மணித்தியாலங்களும் இரவு ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபை அறிவித்தது.

எனினும், குறித்த நேரத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, காலை ஒரு மணித்தியாலமும் மாலை அரை மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மகாவலி நீர்த்தேக்கத்தில் இருந்து நீரைப் பெற்று அதனை மின் உற்பத்திக்கு பயன்படுத்தவுள்ளமையே இதற்கு காரணம் என, அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் முழுமையான விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

இணைப்புக்கு இங்கு கிளிக் செய்க 

3313263421

மிகவும் உணர்ச்சிவசப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்- ஏன்?

25-1435214904-lakshmi-ramakrishnan-468
லட்சுமி ராமகிருஷ்ணன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். இவர் நல்ல நடிகை என்பதை தாண்டி மிகச்சிறந்த இயக்குனர் என்பதை தன் அம்மணி படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார்.

இந்நிலையில் அம்மணி படத்திற்கு பெரிய ப்ரோமோஷன், விளம்பரம் ஏதும் இல்லை, ஆனால், படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பாரட்டி வருகின்றனர்.விமர்சகர்கள் பலரும் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாட லட்சுமி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தன் நன்றியை எல்லோருக்கும் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த படம் மிகு குறைந்த திரையரங்குகளிலேயே ரிலிஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் படத்துக்கு பின் மீண்டும் கீர்த்திக்கு அடித்த ஜாக்போட் !!

keerthy-suresh-759
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த ரெமோ திரைப்படம் மிகப்பெரிய ஹிட். இந்நிலையில் இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக பைரவா படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடித்து வெளிவந்த அனைத்து படங்களும் ஹிட் அடிப்பதால் இவரை தேடி பல பெரிய பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது சூர்யா- விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகவுள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தியை தேர்ந்து எடுத்துள்ளது படக்குழு.

என்னுடைய அந்த விஷயம் கூட என் காதலனுக்கு தெரியும்- பிரபல நடிகை!!

samantha-during-maxcure-organ-donation-event-61857

சமந்தா, நாக சைத்தன்யா ஜோடி தான் இப்போது ஹாட் ஜோடீஸ். இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்ய இருக்கின்றனர்.இந்நிலையில் சமந்தா என்னுடைய கடந்த கால வாழ்க்கை கூட எனது காதலனுக்கு தெரியும் என கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசும்போது, நான் ஏன் மறைக்கவேண்டும், நாக சைத்தன்யாவுக்கு எல்லாம் தெரியும். என்னுடைய முந்தைய காதல் வாழ்க்கை என்னை எந்த விதத்திலும் பாதிக்காது. நாக சைத்தன்யாவுக்கும் இதுபோன்ற ஒரு காதல் முன்பு இருந்ததால் என் மனது அவருக்கு நன்றாகவே புரியும் என்கிறார் சமந்தா.

அகதிகளே…எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்! அமைச்சரின் பகீர் அறிவிப்பு!!

625-0-560-350-160-300-053-800-668-160-90-1
பல்வேறு நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்து பிரான்ஸ் முகாம்களில் தங்கியிருப்பவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் மற்றும் அந்த முகாம்கள் முற்றிலுமாக மூடப்படும் என பிரான்ஸ் அமைச்சர் இமானுவேல் கூறியுள்ளார்.ஆப்ரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் போன்ற பல இடங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்த 5700க்கும் மேற்ப்பட்ட மக்கள் பிரான்ஸில் உள்ள Calais Refugee Camp-ல் தங்கியுள்ளனர்.

வேறு நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் சேற்றிலும், துயரத்தை அனுபவித்து கொண்டும் இங்கு வாழ தேவையில்லை என கூறியுள்ள அமைச்சர் இமானுவேல், அந்த மக்களெல்லாம் சீக்கிரம் வெளியில் அனுப்பபடுவார்கள் மற்றும் அவர்கள் தங்கியிருந்த முகாம்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் மூடப்படும் என கூறியுள்ளார்.இதனிடையில் பிரான்ஸில் இருக்கும் தொண்டு நிறுவனங்கள் பிரான்ஸ் அரசின் இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக அறிவித்துள்ளது.

2 டேபிள் ஸ்பூன் ரத்தத்துடன் பிறந்த அதிசய குழந்தை!!

625-0-560-350-160-300-053-800-668-160-90
இங்கிலாந்தை சேர்ந்த தம்பதியினருக்கு பிறந்த குழந்தையின் உடலில் 2 டேபிள் ஸ்பூன் அளவு மட்டுமே ரத்தம் இருந்துள்ளது. யோர்க்ஷிரே – ஐ சேர்ந்த Maria மற்றும் Chris தம்பதியினருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் Frankie Morrison என்ற குழந்தை பிறந்தது.

அறுவை சிகிச்சையின் மூலம் இக்குழந்தை பிறந்துள்ளது, குழந்தை பிறந்து 2 நாட்கள் ஆகியும் அதன் உடலில் எவ்வித அசைவும் இல்லை. குழந்தையின் உடலில் ரத்தம் போதிய அளவு இல்லை. வெறும் 2 டேபிள் ஸ்பூன் அளவு ரத்தம் மட்டுமே இருந்துள்ளது. மாறாக குழந்தையின் உடல் முழுவதும் தண்ணீரே நிரம்பியிருந்தது.குழந்தை உயிர்பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதன் பின்னர் குழந்தைக்கு சிறிதளவு ரத்தப்பரிமாற்றம் செய்யப்பட்டு, இரண்டு நாட்களுக்கு பின்னர் உடல் லேசாக அசைந்துள்ளது.

அதன்பின்னர், ஒவ்வொரு மாதமும் தாயிடம் இருந்து குழந்தைக்கு ரத்தப்பரிமாற்றம் செய்யப்பட்டது. இதுவரை சுமார் 37 ml ரத்தப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, இக்குழந்தைக்கு 12 மாதம் ஆகிவிட்டது. குழந்தை தற்போது நலமாக இருந்தாலும், அவளின் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியவது அவசியம்.

ரத்தப்பரிமாற்றம் செய்த காரணத்தினால், எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், மிகவும் கவனமாக பார்த்துக்கொள்கிறோம். உயிர்பிழைப்பதே கடினம் என்ற நிலையில், அறுவை சிகிச்சை மூலம் இக்குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என தாய் Maria கூறியுள்ளார்.

பாலியல் துஸ்பிரயோகம் : ஒரே நேரத்தில் 17 பேர் கைது!!

abuse

பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 17 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய குறித்த 17 சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த முறைப்பாட்டிற்கு அமைவாக ஹக்மன, மஹியங்கனை, வெல்லவாய, நவகமுவ, கொட்டாவ மற்றும் அதுருகிரிய பிரதேசங்களில் வைத்து ஒரே நேரத்தில் 17 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு முறைப்பாட்டினை வழங்கியிருந்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.