மணப்பெண் தப்பியோட்டம் : குடும்பத்தார் அனைவரும் தற்கொலை!!

sucide

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வெள்ளனூரை சேர்ந்தவர் சச்சிதானந்தம் (வயது 50) வியாபாரி. இவரது மனைவி சுஜாதா (42). இவர்களது 2-வது மகள் லட்சுமி (23). இன்று காலை திருப்பணித்துறை ரயில்வே தண்டவாளம் அருகே 3 பேரும் நின்றனர்.

அப்போது திருவனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு செல்ல கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் கோவை நோக்கி வந்தது. திடீரென 3 பேரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

3 பேரின் உடல்களும் சில அடிதூரம் இழுத்துச் சென்றது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது 3 பேரின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக சிதறி கிடந்தது. இது குறித்து திருப்பணித்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை செய்து கொண்ட சச்சிதானந்தத்தின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவரது மூத்த மகள் ஜோதிலட்சுமிக்கு கடந்த மாதம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதன்பின்னர் ஜோதிலட்சுமி திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

திருமணம் நிச்சயம் செய்த பின்னர் வேறு வாலிபருடன் ஓட்டம் பிடித்து காதல் திருமணம் செய்திருக்கலாம் என்று தெரியவந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் சச்சிதானந்தம் குடும்பத்தை பற்றி கேவலமாக பேசினர். அவமானம் அடைந்த சச்சிதானந்தம் தனது மனைவி, மகளுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

உடல் பாகங்களை சேகரித்த பொலிசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

மின் வெட்டு நேரம் குறைப்பு!!

power

கடந்த 15ம் திகதி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இலங்கையில் மின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்றில் இருந்து (17) எதிர்வரும் 21ம் திகதி வரை காலை இரண்டரை மணித்தியாலங்களும் இரவு ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபை அறிவித்தது.

எனினும், குறித்த நேரத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, காலை ஒரு மணித்தியாலமும் மாலை அரை மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மகாவலி நீர்த்தேக்கத்தில் இருந்து நீரைப் பெற்று அதனை மின் உற்பத்திக்கு பயன்படுத்தவுள்ளமையே இதற்கு காரணம் என, அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவில் நுண்நிதி கடன் நிறுவனங்களை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!

 
நுண்நிதி கடன் கொடுக்கும் நிறுவனங்களை மூடுமாறு கோரி வவுனியாவில் இன்று(17.10.2016) காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இடம்பெற்றது.

மத்திய பேரூந்து நிலையத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் நுண்நிதி நிறுவனங்களுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

ஆண்கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் கருத்துத் தெரிவிக்கையில், கிழமைகளில் பெறப்படும் கடன்களினால் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும் துர்ப்பாக்கிய நிலையில் தாம் வாழ்ந்து வருவதாகவும், அரசாங்கம், வடமாகாணசபை இதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவித்து இன்றைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்கள்.

நுண் நிதிக் கடன் ஒரு தூக்குக்கயிறு, யுத்தத்தில் துப்பாக்கி நல்லாட்சியில் நுண் கடன், கடன் கொடுத்து பட்டினி போடாதே, போன்ற வாசகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்கள்.

1 img_1543 img_1544 img_1545 img_1546 img_1547 img_1548 img_1549 img_1551 img_1552 img_1558 img_1559 img_1560 img_1561 img_1562 img_1565 img_1566 img_1567 img_1568

பிரபல தடகள வீரரின் மகள் சுட்டுக் கொலை!!

killed

அமெரிக்க தடகள வீரர் டைசன் கே-வின் 15 வயது மகள் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரர் டைசன் கே. இவர் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் சாதனை பல புரிந்துள்ளார்.

இந்நிலையில் தடகள வீரர் கே-வின் 15 வயது மகள் அமெரிக்காவின் கெண்டக்கியில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக லெஸிங்டன் பொலிஸார் கூறுகையில், உணவு விடுதி ஒன்றில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கே-வின் மகள் டிரினிடி கழுத்தில் குண்டடிப்பட்டது என்று தெரிவித்தனர்.

பின்னர் குண்டடிபட்ட நிலையில் டிரினிடி கே அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதனைடையே தனது மகள் டிரினிடி துப்பாக்கி குண்டடிப்பட்டு உயிரிழந்ததை டைசன் கே தொலைக்காட்சி மூலம் உறுதி செய்துள்ளார்.

டிரினிடி உயிரிழந்த சம்பவத்தை கேள்வியுற்ற விளையாட்டு பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் ஆதரவையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

கைதியை கொலை செய்து உணவாக்கிய சக கைதிகள்: அதிர்ச்சி தரும் காரணம்!!

kaithi

வெனிசுலாவில் ஒரு மாத காலம் தொடர்ந்த சிறை கலவரத்தில் கைதி ஒருவரை கொடூரமாக கொலை செய்து சக கைதிகள் உணவாக்கியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுலாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் Táchira Detention Center எனப்படும் சிறையில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கு கொள்ளை சம்பவம் ஒன்றில் தொடர்புடைய கைதி ஜுவான் கார்லோஸ்(25) சிறை வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் 8-ஆம் திகதி பார்வையாளர்கள் மற்றும் காவலர்கள் என 10 நபர்களை சிறைக் கைதிகளில் சிலர் சிறை பிடித்துள்ளனர். குறிப்பிட்ட சிறையானது வெறும் 120 கைதிகள் மட்டுமே தங்கவைக்க கூடிய வசதிகளுடன் கூடியது. ஆனால் குறித்த சிறையில் 350 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

காவலர்கள் மற்றும் பார்வையளர்களை கடத்திச் சென்ற கும்பலுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் திடீரென்று கலவரம் வெடித்தது. 3 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்த கலவரத்தில் மனித மாம்சம் உண்ணும் ஒரு கைதியால் ஜுவான் கார்லோஸ் கொல்லப்பட்டு உடல் சிதைக்கப்பட்டு உணவாக்கப்பட்டதாக அவரது தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

மனித மாமிசம் சாப்பிடும் நபர் ஒருவரை கடந்த 1999 ஆம் ஆண்டு குறித்த சிறையில் அடைத்து வைத்திருந்தனர். கலவரத்தை பயன்படுத்திய அந்த நபர் மேலும் 40 சக கைதிகளுடன் இணைந்து ஜுவான் கார்லோஸ் உள்ளிட்ட 3 பேரை சிறைக்குள் வேறொரு பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர்.

அந்த பகுதியில் வைத்து ஜுவான் உள்ளிட்ட 3 பேரையும் கொன்று உணவாக்கியுள்ளனர்.

இச்சம்பவங்களை நேரில் பார்த்த நபர் ஒருவர் இதை ஜுவானின் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதே சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜுவானின் தந்தை தமது மகனின் எலும்பு துண்டையாவது தமக்கு அளித்தால் அதை வைத்து மத சடங்குகளை மேற்கொள்வேன் என கோரிக்கை விடுத்துள்ள போதிலும், அதிகாரிகளால் இதுவரை அவைகளை மீட்டுத்தர முடியவில்லை.

ஒரு காலத்தில் எண்ணெய் வளம் மிகுந்த நாடாக திகழ்ந்த வெனிசுலா தற்போது பொருளாதார வீழ்ச்சியில் சிக்குண்டு, அடிப்படை உணவுக்கும் பொருட்களுக்கும் பொதுமக்கள் கலவரம் செய்யும் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.

மின்தடை மூன்றரை மணித்தியாலங்களாக அதிகரிப்பு!!

power

கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களை தவிர்த்து நாட்டின் ஏனைய பகுதிகளில் தினசரி மூன்றரை மணிநேரம் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி காலை 8.00 மணிமுதல் 10.30 வரையான இரண்டரை மணித்தியாலமும், மாலை 6.00 மணியில் இருந்து 10.00 மணிக்குள் ஒரு மணி நேரமும் இவ்வாறு மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

மருத்துவமனைகள் அமைந்துள்ள பிரதேசங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் விநியோகம் தடை செய்யப்படமாட்டது என மின்சார சபை தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்தி : இன்று முதல் 2 மணித்தியாலங்கள் மின்சாரத் தடை!!

ஜெயலலிதாவை பார்க்க வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் : அப்பல்லோவில் குவிந்த கூட்டம்!!

rajani

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் திகதி முதல் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்டு தலைமையிலான மருத்துவர் குழுவும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழுவும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவர்களின் ஆலோசனைகளின் பேரிலே அப்பல்லோ மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூர் மருத்துவர்கள் இன்று வரவிருப்பதாக செய்திகள் உலா வந்தன.

இந்நிலையில் தமிழக முதல்வர் அவர்களின் உடல் நிலை குறித்து அறிவதற்காக, தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா இன்று மாலை 6.35 மணி அளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் வருவது யாருக்கும் தெரியாது எனவும் ரகசியமாக வைக்கப்பட்டது எனவும், அவர்கள் வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன்னர் தான் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனை வந்த அவர்கள் அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரிடம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலைகுறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. அதன் பின் பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் நேரடியாக காரில் ஏறிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

200 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல்!!

visam

மேற்கு வங்க மாநிலத்தில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்கு வங்க மாநிலத்தின் வட பகுதியில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம் பூடான் நாடு வழியாக அவ்வப்போது சீனாவுக்கு கடத்தப்படுகிறது.

பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை மருந்துகள் தயாரிக்க சீனாவில் பயன்படுத்துகின்றனர். இதனால் பாம்பு விஷத்துக்கு சர்வதேச சந்தையில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் நல்ல பாம்பு விஷத்தை கடத்தி சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சிலிகுரியில் ஹொட்டல் ஒன்றில் நல்ல பாம்பு விஷத்துடன் நான்கு பேர் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் வியாபாரிகள் போல் நாடகமாடி அவர்களுடன் பேரம் பேசினர்.

அப்போது அவர்கள் நான்கு பேரையும் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ‘பிரான்ஸ் நாட்டில் இருந்து, வங்கதேசம் வழியாக, பாம்பு விஷம் இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

விஷம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து குறித்த நபர்கள் நான்கு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடும் வறட்சிக்கு பின்னர் தம்புளையில் மீன் மழை!!

 
நான்கு மாதங்களாக நிலவிய கடும் வறட்சிக்கு பின்னர் தம்புளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்றிரவு கடுமையான மழை பெய்துள்ளது.

சுமார் 3 மணித்தியாலங்களாக தொடர்ந்து அந்த பகுதிகளில் மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தம்புளை – சாலுவபுல்லன கிராமத்தில் நுழையும் வீதியில் கிட்டத்தட்ட 100 சிறிய மீன்கள் வானில் இருந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மீன்கள் நேற்று இரவு பெய்த மழையுடன் வானில் இருந்து விழுந்ததாக கூறப்படுகின்றது.

f1 f2

அமெரிக்க குடியுரிமை வேண்டுமா : இதோ அறிய வாய்ப்பு!!

dv

அமெரிக்காவில் 2018ஆம் ஆண்டிற்கான நிரந்தர குடியுரிமை கோரும் விண்ணப்பங்களை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வரவேற்றுள்ளது.

குறித்த நிகழ்வுக்கான ஆன்லைன் பதிவானது இம்மாதம் 4ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

குறிப்பிட்ட நிகழ்வில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து தோராயமாக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களை நிரந்தர குடியுரிமைக்கான நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர்.

இந்த ஆண்டு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களை அடுத்த ஆண்டு குறித்த நாளில் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு, தெரிவாகும் விண்ணப்பத்தாரர்களுக்கு 2018ஆம் ஆண்டு முதல் நிரந்த குடியுரிமை வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

குறித்த நிகழ்வானது அக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைத்தீவு மக்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

விண்ணப்பத்தாரர்கள் ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரே பெயரில் பல முறை விண்ணப்பிப்பது நிராகரிக்கப்பட வாய்ப்பு உண்டு.

நிரந்தர குடியுரிமை பெற தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் அடுத்த ஆண்டு மே மாத துவக்கத்தில் தங்களின் விண்ணப்பம் குறித்து இணையத்தில் சரிபார்த்துக்கொள்ளவும்.

அதில் தெரிவாகி இருப்பவர்கள் மேலதிக ஆவணங்களை குறித்த அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தெரிவாகியிருக்கும் நபர்களுக்கு அதன் பின்னர் நேர்முக தேர்வுக்கான தகவல்கள் தெரிவிக்கப்படும்.

இது குறித்த மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு lk.usembassy.gov அல்லது Electronic Diversity Visa Lottery என்ற இணைப்பிற்கு செல்லவும்

முதல் போட்டியிலேயே தங்க பதக்கம் : யாழ். மாணவன் சாதனை!!

medal

32ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில், யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ.புவிதரன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

17 வயதிற்குட்பட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் அவருக்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான விளையாட்டு விழாவில் 04வது நாளாக இன்றும் போட்டிகள் இடம்பெற்றன.

இதன் போது யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ.புவிதரன் 17 வயதிற்குட்பட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 3.80 மீற்றர் தூரம் பாய்ந்து முதலாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, முதன் முறையாக கோலூன்றிப் பாய்தலில் கலந்து கொண்ட அவர் தங்க பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Miss Intercontinental 2016 பட்டத்தை வென்றார் ஹெலிமா ரொசாரியோ : 2ம் இடம் இலங்கைக்கு!!

miss-intercontinental-2016

Miss Intercontinental 2016 இறுதிப்போட்டியில் பொயடோ ரிக்கோவின் ஹெலிமா ரொசாரியோ முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

இந்த போட்டியின் 2 ஆம் இடத்தை இலங்கை சுவிகரித்து. இந்த மாபெரும் இறுதிப்போட்டி ஸ்டைன் கலையகத் தொகுதியில் இடம்பெற்றது.

சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த Miss Intercontinental போட்டிமுதல் தடவையாக இம்முறை இலங்கையில் நடைபெற்றன.

45 ஆவது Miss Intercontinental போட்டியில் 60 நாடுகளை சேர்ந்த அழகு ராணிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த போட்டியாளர்களில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஐவரில் இலங்கையின் ட்ரேசி டி சில்வாவும் அடங்கியுள்ளார்.

3ஆம் இடத்தை கானாவின் சில்வியா கொமடோ பெற்றுகொண்டார்.

ஏனையோர் இத்தாலி, வெனிசுவேலா, கானா ஆகிய நாடுகளை சேர்ந்நதவர்கள் ஆவர்.

பிரபல நடிகை விபத்தில் மரணம் : வீடியோ வௌியானது!!

kaveesha-ayeshani

நுகேகொடை பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பிரபல சிங்கள நடிகை கவீஷா அயேஷானி உயிரிழந்துள்ளார்.

கவீஷா பயணித்த கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றின் மீது மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். இவருக்கு வயது 24 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வௌியாகியுள்ளன.

இன்று முதல் 2 மணித்தியாலங்கள் மின்சாரத் தடை!!

Sun sets behind a power tower near a building in New Delhi February 4, 2006. REUTERS/Kamal Kishore/Files

கொழும்பு அல்லாத நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் ஒவ்வொரு மணித்தியாலங்கள் மின் விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இடம்பெற்ற தொழிநுட்ப பிரச்சினையினால் அந்த மின் உற்பத்தி நிலையத்தின் ஊடான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதனாலேயே இந்த மின்சார விநியோகத் தடை ஏற்படுத்தப்படுத்தப்படுவதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

சாரதி இல்லா ட்ராக்டர் : விவசாயத்தில் புதிய புரட்சி!!(வீடியோ)

trakter

பிரிட்டனின் நிறுவனம் ஒன்று ஓட்டுநர் இல்லா ட்ராக்டர்களை முதல் முறையாக உருவாக்கியுள்ளது. இதை பிரிட்டனில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

எந்த பொருளிடமிருந்தும் ஒரே ஒரு அங்குலம் வரை நெருங்கிச் செல்லும் அளவுக்கு மிகத்துல்லியமாக இவை பயணிக்கவல்லவை.

பிரிட்டனில் உள்ள எல்லா விவசாயிகளும் இவற்றை பயன்படுத்தினால் பிரிட்டனில் மட்டும் மேலதிகமாக ஒரு லட்சத்து அறுபதாயிரம் ஏக்கர் நிலத்தை கூடுதலாக விளைநிலங்களாக மாற்றலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

அதிகரிக்கும் மக்கள் தொகைக்குத் தேவையான உணவுப்பொருட்களை இருக்கும் நிலத்திற்குள்ளாகவே உருவாக்க வேண்டிய நெருக்கடிக்கு இதுபோன்ற உபகரணங்கள் புதிய தீர்வுகளை உருவாக்கும் என்கிறார்கள் இதனை உருவாக்கியவர்கள்.

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய 10 பேர் : காரணம் என்ன?

ja-bus

யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் நுழைந்த 10 பேரினால், அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். கச்சேரி ஏ9 பிரதான வீதியில் கச்சேரி மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த 10 பேரும் பேரூந்தினை சேதப்படுத்தியதுடன், பேரூந்து நடத்துனரிடமிருந்த பயண சீட்டு புத்தகம் மற்றும் பணத்தையும் பறித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் பேரூந்தை சிறிய லொறி ஒன்றில் வந்த 10 பேர் வழி மறித்து இவ்வாறு நாசவேளையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பயணிகள் தெரிவிக்கையில் பேரூந்தில் நுழைந்த 10 பேரும் அதிக மது போதையில் இருந்ததாக தெரிவித்துள்ளனர.

இதேவேளை, அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தில் பல இடங்களில் பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெறுவதுடன், போதைப் பொருள் பாவனையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.