பெற்றோருக்கு என்ன பதில் சொல்வேன் : ராம்குமாரின் வழக்கறிஞர் வருத்தம்!!

ramraj-with-ramkumar

ராம்குமாரை என்னுடைய மூத்த பிள்ளையைப் போல பார்த்துக்கொள்வதாக அவர்களின் பெற்றோரிடம் கூறியிருந்தேன். இனி என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை என்று அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் கூறியுள்ளார்.

பிணை கிடைத்த பின்னர் கொலையில் உள்ள முக்கியத்தடயங்களை வெளியே சொல்வதாக சொன்னார். அதற்குள் அவரை கொன்று விட்டனர் என்றும் ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மின் கம்பியை கடித்து அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கொண்டு சென்ற பிறகு மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக உறுதி செய்தனர்.

இந்நிலையில் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பார்க்க வந்த அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நேற்று காலை 11.30 மணி முதல் 1 மணிவரை ராம்குமாரை அவர் சந்தித்துள்ளார். ராம்குமாரின் பாதுகாப்பு பற்றி கேட்டதற்கு தான் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் நேற்று சிறை காவலர் விஜயகுமார் என்பவர் இட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளதால், திட்டமிட்டு ராம்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று வழக்கறிஞர் ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.

பார்வையற்றவர்களுக்கு பேசும் பதக்கங்கள்!!

11

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து பாராலிம்பிக் போட்டிகள் மிக சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த ஓர் சந்தர்பத்தையும் இது வழங்கி வருகின்றது.

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்கள் தங்களது பதக்கங்களை பற்களால் கடிப்பது சதாரணமான விடயம். இதன் மூலம் வீரர்கள் தங்கத்தை சோதனை செய்வதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போதைய பாராலிம்பிக் போட்டிகளில் பார்வையற்ற வீரர்கள் தங்களது பதக்கத்தை காதருகில் கொண்டு செல்வது வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள். இதற்கான விளக்கம் தற்போது ஒலிம்பிக் சம்மேளத்தினால் விபரிக்கபட்டுள்ளது.

இதன் மூலம் அவர்கள் தங்களின் பதக்கத்தை பார்க்க முடியாவிட்டாலும், அதை கேட்க முடியுமாக உள்ளது.

மேலும் இதற்காக பிரத்யேக முறையில் தயாரிக்கபட்ட வெண்கலப்பதக்கத்தில் 16 இரும்பு குட்டி பந்துகளும் வெள்ளிப்பதக்கத்தில் 20 பந்துகளும், தங்கப்பதக்கத்தில் 28 பந்துக்களம் காணப்படுகின்றது.

இதன்மூலம் சத்தங்கள் கூடிகுறையும் சந்தர்பத்தில் வீரர்கள் பதக்கங்களை கேட்டு அறியலாம் என கூறப்படுகின்றது.

12 13

பாரீஸில் ஈபிள் கோபுரத்தின் கீழ் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்!!

download

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் கீழ் இளம்பெண் ஒருவரை 3 புலம்பெயர்ந்தவர்கள் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரீஸ் நகரில் பெயர் வெளியிடப்படாத 19 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார்.

சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் 17 வயதான அல்ஜீரியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவருடன் இளம்பெண் பழகியுள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் கீழ் சந்திக்கலாம் என அந்த வாலிபர் பெண்ணை அழைத்துள்ளார்.

நடக்கவிருக்கும் விபரீதத்தை அறியாமல் அவரும் இளைஞர் அழைத்த இடத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, இளைஞர் மற்றும் மறைந்திருந்த மற்ற இருவர் என மூவரும் சேர்ந்து அப்பெண்ணை கட்டி தூக்கிச்சென்றுள்ளனர்.

ஈபுள் கோபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு பற்றையில் அவர்கள் ஏற்கனவே போர்வை போன்ற ஒரு ஆடையை தயாராக வைத்துள்ளனர்.

பின்னர், பெண்ணின் வாயை துணியால் கட்டிய அவர்கள் மூவரும் கூட்டாக அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு பிறகு பெண் மயக்கமாகியுள்ளார். மறுநாள் அதிகாலையில் நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பலாத்காரம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார் பாரீஸில் உள்ள 18 வது வட்டத்தில் மூவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், மூவரும் ஜேர்மனி நாட்டிற்கு தப்புவதற்கு தயாராக இருந்ததும், அவர்கள் மூவரிடமும் சட்டப்பூர்வமான ஆவணங்கள் எதுவும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

மூவரையும் சிறையில் அடைத்துள்ள பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய்லாந்தில் பயங்கரம் : 100 பேருடன் பயணித்த படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்து!!

accident

தாய்லாந்தில் 100 பேருடன் பயணித்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகி ஆற்றில் கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தாய்லாந்தின் வடக்கு பாங்காங்கில் இருந்து 80 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சுற்றுலா நகரான ஆயுத்தயா நகரில் ஓடும் ஜௌபிரயா ஆற்றிலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சுமார் 100 பேரை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று சென்று கொண்டிருந்த போது மற்றொரு படகின் மீது மோதிக் கொள்ளாமல் இருப்பதற்காக படகு ஓட்டுநர் திடீரென படகை திருப்பியுள்ளார்.

அப்போது படகு அருகில் இருந்த பாலத்தின் கான்கீரட் பில்லர் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளாகி ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐந்து உயிர்களை பலிவாங்கிய ஒரு மாணவியின் செல்பி : மனதை உருக வைக்கும் சம்பவம்!!

dead

தெலுங்கானாவில் விபத்துக்குள்ளான ஒரு மாணவியை காப்பாற்ற இரண்டு மாணவிகள் உட்பட ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாரங்கல் மாவட்டத்திலுள்ள தர்மசகர் ஏரியிலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவம் குறித்து பொலிசார் அளித்துள்ள தகவலில், Vaagdevi பொறியியல் கல்லுாரியை சேர்ந்த ஆறு மாணவர்கள் தர்மசகர் ஏரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இதன்போது, ரம்யா பிரத்யுஷா என்ற மாணவி செல்பி எடுக்கும் போது விபத்துக்குள்ளாகி ஏரியில் விழுந்துள்ளார். பிரத்யுஷாவை காப்பாற்ற உடன் இருந்த ஐந்து பேர் ஒருவர் பின் ஒருவராக ஏரியில் குதித்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து ரம்யா பிரத்யுஷா மட்டும் தட்டு தடுமாறி கரை சேர்ந்துள்ளார். மற்றவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.

ஷ்ரவ்யா ரெட்டி, பொலினேனி விணுத்தன, கார்னே சிவசாய், சிவசாய்கிருஷ்ணன், ஸ்ரீநிதி ஆகியோர் நீரில் மூழ்கியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

சுவாதி படுகொலை : உண்மை குற்றவாளிகளின் விபரத்தை வெளியிட்டார் தமிழச்சி!!

swathi

சுவாதி படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மரணமடைந்ததை அடுத்து உண்மை குற்றவாளிகளின் பெயர் மற்றும் விலாசத்தை வெளியிட்டுள்ளார் தமிழச்சி

இதுகுறித்து தமிழச்சி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி:

சுவாதி படுகொலை விசாரணையில் இன்னும் பல கொலைகள் தொடரும். அது ராம்குமாரோடு முடியாது!

சுவாதி படுகொலை செய்யப்பட்ட சில தினங்களில் வீடியோவில் பதிவான ஒரு மர்ம நபர் குறித்த காட்சியை பத்திரிகைகள் வெளியிட்டன. அதற்கு பிறகே இன்னொரு வீடியோவில் ராம்குமார் நடந்து செல்வதாக கூறி மற்றொரு வீடியோ காட்சி காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டது.

முதலில் காட்டிய மர்ம நபர் யார்? அவரை குறித்து தமிழக காவல்துறை ஏன் விசாரணை நடத்தவில்லை? என்கிற கேள்வியை யாருமே எழுப்பவில்லை. இரண்டு காட்சியில் இருப்பவர்களும் ராம்குமார் தான் என்று மக்களை நம்ப வைத்துவிட்டார்கள்.

ஆனால், முதல் காட்சியில் உள்ள மர்ம நபரை காப்பாற்றத்தான் அரசு அதிகார அமைப்புகள் ராம்குமாரை குற்றவாளியாக்க முற்பட்டது.

காவல்துறை வெளியிட்ட முதல் படத்தில் இருப்பவர் பெயர் மணி. இவருடைய அப்பா பெயர் இசக்கி, ஆட்டோ டிரைவராக இருக்கிறார். அம்மா மாரி.

“தேவர் பேரணி மாடசாமி பிலட்டிங் காண்ரக்டர் இல் மணி வேலை செய்கிறார். இவர் கருப்பு முருகானந்தம் கூலிப்படைகளில் ஒருவர். இவருடைய சொந்த ஊர் முத்தூர் (சிவந்திப்பட்டி) நெல்லை மாவட்டம்.

சுவாதியை படுகொலை செய்தவர்களில் இவரும் இருந்தார். கொலை நடந்த பின் தன் ஊருக்கு 2 மாதங்களாக செல்லாமல் தலைமறைவாக இருந்த மணி 10 நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அதுவும் மொட்டை தலையோடு.

இச்செய்தியை நான் ஏன் பதிவு செய்யவில்லை என்றால் இத்தகவல் அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். அல்லது கருப்பானந்தம் கூலிப்படைகள் அவரையும் கொன்றுவிடக் கூடும். இல்லாவிட்டால் மீண்டும் இவர் தலைமறைவாகி விடுவார் என்று கவனமாக இருந்தேன்.

நாளை 19 செப்டம்பர் ராம்குமார் ஜாமீன் மனு விசாரணைக்கு பின் ராம்குமார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகே சுவாதி படுகொலை தொடர்பான நபர்கள் குறித்து பேச நினைத்திருந்தேன். ராம்குமார் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டு விட்டார். படுகொலைக்கு தொடர்பற்ற அவரே படுகொலை செய்யப்பட்டு விட்டார்.

முத்தூர் வாசிகளே!

உங்கள் ஊரைச் சேர்ந்த மணி இன்னும் சில மணி நேரங்களில் கொல்லப்படலாம். ஆனால் அது தற்கொலை என்றே சொல்லப்படும். அல்லது மணி தலைமறைவாகலாம். 2 மாதத்திற்கு பிறகு வந்தவன் 2 வருடங்களுக்கு பிறகு வரலாம். அல்லது வராமலேயே போகலாம். ஏனென்றால் சேர்ந்த இடம் அப்படி.

ஒருவேளை இவனெல்லாம் ‘அப்ருவர்’ ஆனால் கூட காவல்துறையே தற்கொலை செய்துவிடும். பொதுமக்கள் செய்தால் தான்டா கொலை. அதையே காவல்துறை செய்தால் தற்கொலைடா. இதுதாண்டா தற்போதைய தமிழ்நாட்டு போலிஸ் பாணி. இந்த அரசியல் புரியலன்னா உன் மரணமும் தற்கொலையில் தான்டா முடியும்!

(பி.கு: இப்படி ஒரு நபர் அந்த ஊரிலேயே இல்லை என்றும் செய்திகள் வரும். அதையும் நாம் பார்ப்போம்) என கூறியுள்ளார்.

பதற்றத்தில் பெங்களூர் : மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் காவிரி பிரச்சனை!!

bangalor

காவிரி பிரச்சனையால் கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் மீண்டும் போராட்டங்களை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காவிரி பிரச்னையால் எழுந்த போராட்டங்கள் முடிந்து அமைதி திரும்பும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இச்செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட செழுவழி அமைப்பினர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நாளை பெங்களூரில் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளனர். இதில் கன்னட வேதிகே, ஜெய் கன்னட அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் பங்கேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இப்பிரச்னையின் காரணமாக, தமிழகம்-கர்நாடகா இடையே, இன்று 13வது நாளாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் போராட்டம் தீவிரமடைவதால் இரு மாநில எல்லையிலும் துணை ராணுவத்தினர், பொலிசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஓஸ்கார் தமிழன் ஏ.ஆர் ரகுமானுக்கு ஜப்பானில் விருது!!

ar-rahman

1990ம் ஆண்டு முதல் ஜப்பான் நாட்டின் புகுவோகா நகரில் ஆசிய கலாசாரத்தை பாதுகாப்பவர்களுக்கும், உருவாக்குபவர்களுக்கும் யோகோபோடியா அமைப்பு சார்பாக அகாடமிக், கிராண்ட், கலை, கலாசாரம் ஆகிய பிரிவுகளில் Fukuoka Award வழங்கபடுகிறது.

இந்நிலையில் 2016ம் ஆண்டுக்கான இந்த விருது இசைத்துறையில் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த சேவையை பாராட்டி அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதை இதற்கு முன் இசை கலைஞர் ரவி சங்கர், நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், சரத் மாஸ்திரோ கலைஞர் அஜ்மத் அலி, ஓவிய கலைஞர் நளினி மாலினி ஆகியோர் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரறிவாளன் மீது தாக்குதல், ராம்குமார் தற்கொலை கேள்விக் குறியாகும் சிறைப் பாதுகாப்பு!!

jail

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் சக கைதியால் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் வைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

அடுத்தடுத்து சிறைகளில் நடைபெறும் இந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது சிறைச்சாலைகளில் உள்ள பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக வேலூர் சிறையில் உள்ளார் பேரறிவாளன்.

இவர் ஒரு ஆசிரியர் போல் அங்குள்ள சக கைதிகளுக்கு பாடம் கற்பித்து கொண்டிருந்த நிலையில், சக கைதியான ராஜேஷ் கண்ணா இரும்பு கம்பியால் தலையில் அடித்து தாக்கியுள்ளார்.

இதனால் பேரறிவாளனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 6 தையல்கள் போடப்பட்டுள்ளன. பேரறிவாளன் ஏன் தாக்கப்பட்டார்.

ராஜேஷ் கண்ணா யார்? அவர் கையில் இரும்பு கம்பி எப்படி கிடைத்தது? இப்படி பல கேள்விகளுக்கு சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும் பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில், மற்றொரு முக்கிய வழக்கான சுவாதி கொலை வழக்கில் சிறையில் வைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறை அறையில் இருந்த மின்கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசாரால் சொல்லப்படுகிறது.

எப்படி ஒரு சிறை அறையில் உள்ள மின்கம்பியை ஒரு கைதி கடித்து தற்கொலை செய்து கொள்ள முடியும்? அப்படி முடியும் என்றால் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவிற்கு பலவீனமாக இருக்கிறது?

சிறையில் பாதுகாப்பு பணியில் போலீசார் எவ்வளவு அலட்சியமாக இருக்கின்றனர் என்பது பற்றி எல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன.

பாராலிம்பிக்கில் கலந்து கொண்ட வீரர் பஹ்மான் பரிதாபமாக பலி!!

para-olympic

மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு பாராலிம்பிக் வீரர் சராப்ரஸ் பஹ்மான் கோல்பர்னெஸாத் (48) திடீர் மாரடைப்பால் காலமானார்.

ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில் கரடுமுரடானதும், வளைவுகள் நிறைந்ததுமான மலைப்பாதையில் நேற்று சைக்கிள் ஓட்டும் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு பாராலிம்பிக் வீரர் சராப்ரஸ் பஹ்மான் கோல்பர்னெஸாத் பங்கேற்று இதர நாட்டு வீரர்களுக்கு போட்டியாக தனது சைக்கிளை வேகமாக மிதித்தபடி சென்றார். ஒரு குறுகிய வளைவில், எதிர்பாராதவிதமாக இன்னொரு சைக்கிள் மீது அவரது சைக்கிள் மோதியது.

இதையடுத்து, தரையில் சாய்ந்த சராப்ரஸ் பஹ்மான் கோல்பர்னெஸாத், திடீரென நெஞ்சு வலியால் துடித்தார். சம்பவ இடத்திலேயே அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 1960ம் ஆண்டில் தொடங்கிய பாராலிம்பிக் போட்டி வரலாற்றில் தற்போது முதன்முறையாக ஏற்பட்ட இந்த அதிர்ச்சிகரமான விபத்து தொடர்பாக ஈரான் நாட்டு பாராலிம்பிக் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

சராப்ரஸ் பஹ்மான் கோல்பர்னெஸாத் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஈரான் ஒலிம்பிக் கிராமத்தில் அந்நாட்டின் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச் சபை கூட்டம் இன்று ஆரம்பம்!!

un

ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச் சபை கூட்டம் இன்று தொடக்கம் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை அமெரிக்க, நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.

இந்த பொதுச்சபை கூட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இம்முறை ஐக்கியநாடுகள் பொதுச்சபை கூட்டம் மூன்று விடயங்களால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமொரிக்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான மாநாடு.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் உரையாற்றவுள்ள இறுதிச்சந்தர்ப்பம்.

மற்றும் கடந்த 10 வருடங்காளாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக பதவி வகித்த பான் கீ மூன் இம்முறை நடைபெறவுள்ள அமர்வுகளின் பின்னர் ஓய்வு பெறவுள்ளார் ஆகிய மூன்று விடயங்களாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச் சபை கூட்டத்தில், எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார்.

மகன்களின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர் தற்கொலை!!

hang

தமது பிள்ளைகளின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

18 வயது மற்றும் 21 வயதான இரண்டு பிள்ளைகளும் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தனர். மட்டக்களப்பு கல்குடாவில் கடலில் குளிக்கச் சென்ற போது இவர்கள் காணாமல் போயுள்ளனர்.

இரண்டு சகோதரர்களும் காணாமல் போனதாகவும் இவர்கள் இருவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த செய்தியைக் கேள்வியுற்ற பெற்றோர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இன்று அதிகாலை குறித்த சகோதரர்களின் பெற்றோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போன இளைஞர்களின் சடலங்கள் இதுவரையில் மீடகப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குறித்த பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்திமால் மருத்துவமனையில் அனுமதி!!

AFP_FG6BI

இலங்கை கிரிக்கெட் அணியின் துணைத்தலைவர் தினேஷ் சந்திமால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது சந்திமாலுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே சந்திமால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திமாலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேலும் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், பரிசோதனைக்கு பின்னரே அவரது உடல்நலம் குறித்து கருத்து கூற முடியும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

வரதட்சணை கொடுமை : மனைவியின் மூக்கை வெட்டிய கணவர்!!

nose

உத்திரபிரதேச மாநிலத்தில் வரதட்சணை கேட்டு மனைவியின் மூக்கை வெட்டிய கணவரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உத்திர பிரதேச மாநிலம் ஹாக்ஜாகன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் ரத்தோர் (27). இவர் சில வருடங்களுக்கு முன்னர் கமலேஷ் (25) என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், திருமணமான தினத்திலிருந்தே சஞ்சீவ் வரதட்சணை கேட்டு கமலேஷிடம் தகராறு செய்து வந்துள்ளதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி சஞ்சீவ் தனது மனைவி கமலேஷிடம் விட்டில் இருந்து ரூ.50,000 வாங்கி கொண்டு வருமாறு கேட்டுள்ளார். ஆனால் கமலேஷ் தன் தாயார் குடும்பம் மிகவும் கஷ்ட நிலையில் உள்ளது பணம் இல்லை எனக் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சஞ்சீவ் அருகிலிருந்த கத்தியை எடுத்து தனது தாயாரின் உதவியுடன் கமலேஷின் மூக்கினை வெட்டிவிட்டு தாயாருடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

கமலேஷின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் வெட்டப்பட்ட மூக்குடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர், ஆனால் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூக்கை ஒட்ட வைக்க முடியாது என்று கூறிவிட்ட நிலையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையறிந்த பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் கமலேஷின் 6 வயது மகள் தான் நேரில் பார்த்ததாக உண்மையை கூறியுள்ளார்.

இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்த பொலிசார் தலைமறைவாகியுள்ள சஞ்சீவ் மற்றும் அவரது தாயாரையும் தேடி வருகின்றனர்.

உடல் முழுவதும் முடியுடன் பிறந்த வினோத குழந்தை : அதிர்ச்சி புகைப்படங்கள்!!

3

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும் விட்டல்(30), மனிஷா ஷம்பாஜி(22) ஆகிய தம்பதிகளின் 5 மாத குழந்தை பிறக்கும் போதே லட்சத்தில் ஒருவருக்கு வரும் Werewolf Syndrome என்னும் விசித்திர நோயுடன் பிறந்தது.

கை, கால் மற்றும் உடல் முழுவதும் இயற்கைக்கு எதிராக அதிக அளவில் கருப்பு நிற முடி வளர்ந்துள்ளது.

இது பரம்பரை நோயாக கருதபடும் வேளையில், இந்த விசித்திர நோய் அந்த குழந்தையின் தாய், மற்றும் அவரின் இரண்டு சகோதரிகளுக்கும் பிறப்பிலிருந்தே இருந்து வருகிறது.

இது பற்றி மனிஷா ஷம்பாஜி கூறுகையில், சிறுவயதிலிருந்து என் முகத்தை கண்ணாடியில் பார்க்க எனக்கே வெறுப்பாக இருக்கும்.

என்னையும் என் சகோதரிகளையும் சிறுவயதிலிருந்தே எல்லாரும் பேய், கரடி, குரங்கு என கிண்டல் செய்வார்கள்.

என் குழந்தை வளர்ந்த பின்னர் அவனும் அந்த மாதிரி கேலி, கிண்டலுக்கு ஆளாவானோ என நினைத்தால் கவலையாக இருக்கிறது.

மேலும், தன் கணவர் தனக்கும் குழந்தைக்கும் ஆதரவாக இருப்பதாகவும், குழந்தையை மாமியார் அதிகம் வெறுப்பதாகவும் சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த நோயை குணப்படுத்த சரியான மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Cover Asia Press / Faisal Magray

4 5

வட்ஸ் அப் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கவுண்டமணி!!

kowndamani

கவுண்டமணி நலமாக உள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சிரிப்புக்கு மறு உருவம் கொடுத்து, நகைச்சுவையை தன் வசப்படுத்தி கடந்த 39 வருடங்களுக்கும் மேலாக காமெடி ஜாம்பவனாக திகந்து வருபவர் கவுண்டமணி. இவர் தற்போது சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறது. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, ‘வாய்மை’ ஆகிய படங்கள் இவருக்கு சரியான ரீ-என்ட்ரி படங்களாக அமைந்தன.

இந்நிலையில், கவுண்டமணி மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக நேற்று முதல் ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வந்தது. இதையடுத்து கோலிவுட் உலகம் பரபரப்பானது. இந்த செய்தி உண்மைதானா? என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. இந்நிலையில், இந்த செய்திக்கு விளக்கம் அளிக்கும் கவுண்டமணியின் செய்தி தொடர்பாளர் விஜய் முரளி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அவ்வப்போது கவுண்டமணி குறித்து இது மாதிரி புரளிகளை கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால், அவர்களுக்கு என்ன பலன் என்றும் புரியவில்லை. சமீபத்தில்கூட புன்னகை அரசி கே.ஆர்.விஜயா குறித்து இதேபோல் வதந்திகளை பரப்பினார்கள். அவர் அறிக்கை தந்ததும் வதந்திகள் புஸ் ஆனது.

சற்று முன்புதான் அவரை சந்தித்தேன். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கிறேன். புதிய படம் ஒன்றின் கதையை கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் நான் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளிவரும். அந்தப் படத்தின் ஆரம்ப விழாவில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன் என்று கூறினார். இந்தியா முழுவதும் அவரது ரசிகர்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம். அவர் மிகவும் நலமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.