இலங்கை கிரிக்கெட் அணியின் துணைத்தலைவர் தினேஷ் சந்திமால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது சந்திமாலுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே சந்திமால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திமாலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேலும் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், பரிசோதனைக்கு பின்னரே அவரது உடல்நலம் குறித்து கருத்து கூற முடியும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் வரதட்சணை கேட்டு மனைவியின் மூக்கை வெட்டிய கணவரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உத்திர பிரதேச மாநிலம் ஹாக்ஜாகன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் ரத்தோர் (27). இவர் சில வருடங்களுக்கு முன்னர் கமலேஷ் (25) என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், திருமணமான தினத்திலிருந்தே சஞ்சீவ் வரதட்சணை கேட்டு கமலேஷிடம் தகராறு செய்து வந்துள்ளதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி சஞ்சீவ் தனது மனைவி கமலேஷிடம் விட்டில் இருந்து ரூ.50,000 வாங்கி கொண்டு வருமாறு கேட்டுள்ளார். ஆனால் கமலேஷ் தன் தாயார் குடும்பம் மிகவும் கஷ்ட நிலையில் உள்ளது பணம் இல்லை எனக் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சஞ்சீவ் அருகிலிருந்த கத்தியை எடுத்து தனது தாயாரின் உதவியுடன் கமலேஷின் மூக்கினை வெட்டிவிட்டு தாயாருடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
கமலேஷின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் வெட்டப்பட்ட மூக்குடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர், ஆனால் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூக்கை ஒட்ட வைக்க முடியாது என்று கூறிவிட்ட நிலையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையறிந்த பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் கமலேஷின் 6 வயது மகள் தான் நேரில் பார்த்ததாக உண்மையை கூறியுள்ளார்.
இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்த பொலிசார் தலைமறைவாகியுள்ள சஞ்சீவ் மற்றும் அவரது தாயாரையும் தேடி வருகின்றனர்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும் விட்டல்(30), மனிஷா ஷம்பாஜி(22) ஆகிய தம்பதிகளின் 5 மாத குழந்தை பிறக்கும் போதே லட்சத்தில் ஒருவருக்கு வரும் Werewolf Syndrome என்னும் விசித்திர நோயுடன் பிறந்தது.
கை, கால் மற்றும் உடல் முழுவதும் இயற்கைக்கு எதிராக அதிக அளவில் கருப்பு நிற முடி வளர்ந்துள்ளது.
இது பரம்பரை நோயாக கருதபடும் வேளையில், இந்த விசித்திர நோய் அந்த குழந்தையின் தாய், மற்றும் அவரின் இரண்டு சகோதரிகளுக்கும் பிறப்பிலிருந்தே இருந்து வருகிறது.
இது பற்றி மனிஷா ஷம்பாஜி கூறுகையில், சிறுவயதிலிருந்து என் முகத்தை கண்ணாடியில் பார்க்க எனக்கே வெறுப்பாக இருக்கும்.
என்னையும் என் சகோதரிகளையும் சிறுவயதிலிருந்தே எல்லாரும் பேய், கரடி, குரங்கு என கிண்டல் செய்வார்கள்.
என் குழந்தை வளர்ந்த பின்னர் அவனும் அந்த மாதிரி கேலி, கிண்டலுக்கு ஆளாவானோ என நினைத்தால் கவலையாக இருக்கிறது.
மேலும், தன் கணவர் தனக்கும் குழந்தைக்கும் ஆதரவாக இருப்பதாகவும், குழந்தையை மாமியார் அதிகம் வெறுப்பதாகவும் சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்த நோயை குணப்படுத்த சரியான மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கவுண்டமணி நலமாக உள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சிரிப்புக்கு மறு உருவம் கொடுத்து, நகைச்சுவையை தன் வசப்படுத்தி கடந்த 39 வருடங்களுக்கும் மேலாக காமெடி ஜாம்பவனாக திகந்து வருபவர் கவுண்டமணி. இவர் தற்போது சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறது. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, ‘வாய்மை’ ஆகிய படங்கள் இவருக்கு சரியான ரீ-என்ட்ரி படங்களாக அமைந்தன.
இந்நிலையில், கவுண்டமணி மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக நேற்று முதல் ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வந்தது. இதையடுத்து கோலிவுட் உலகம் பரபரப்பானது. இந்த செய்தி உண்மைதானா? என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. இந்நிலையில், இந்த செய்திக்கு விளக்கம் அளிக்கும் கவுண்டமணியின் செய்தி தொடர்பாளர் விஜய் முரளி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அவ்வப்போது கவுண்டமணி குறித்து இது மாதிரி புரளிகளை கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால், அவர்களுக்கு என்ன பலன் என்றும் புரியவில்லை. சமீபத்தில்கூட புன்னகை அரசி கே.ஆர்.விஜயா குறித்து இதேபோல் வதந்திகளை பரப்பினார்கள். அவர் அறிக்கை தந்ததும் வதந்திகள் புஸ் ஆனது.
சற்று முன்புதான் அவரை சந்தித்தேன். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கிறேன். புதிய படம் ஒன்றின் கதையை கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் நான் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளிவரும். அந்தப் படத்தின் ஆரம்ப விழாவில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன் என்று கூறினார். இந்தியா முழுவதும் அவரது ரசிகர்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம். அவர் மிகவும் நலமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
சம்பூர் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டதால் நாட்டின் மின்சாரத் துறையில் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்படக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
திருகோணமலை சம்பூர் அனல் மின்நிலையத்தினை நிறுத்த கோரி சம்பூர் மக்கள் தொடர்ந்தும் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்த நிலையில் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய குறித்த திட்டத்தை அரசாங்கம் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மக்களின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதால் இலங்கை மின்சாரசபைக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை கைவிட்டமைக்கு பின்ணணியில் பல்வேறு காரணங்கள் உள்ளது.
ஆனால் குறித்த பிரச்சினை அனைத்தையும் ஆராய்ந்த பின்னரே இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது என மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தார்.
இதனால் நாட்டுக்கு கிடைக்கவிருந்த 500 மெகாவோல்ட் மின்சாரம் கிடைக்காமல் போகுமேன சுட்டிக்காட்டிய மின்சார சபை, இந்தத் திட்டத்திற்கு அரசு மாற்று வழிமுறைகளை இதுவரை முன்னெடுக்காமல் உள்ளது.
இந்த நிலையில் பிரதமரினால் குழுவொன்று நியமிக்கபட்டு சம்பூரை தவிர்ந்த ஏனைய இடங்களில் இந்த திட்டத்தினை அமைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஆனால் இந்த சம்பூர் அனல் மின் நிலையம் வேறு இடங்களில் அமைத்தாலும் கூட அதிகளவில் பாதிக்கப்படப்போவது மக்கள் தான். இதனால் இந்த அனல் மின் நிலையத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் முழு நாட்டிலும் தடை செய்யப்பட வேண்டும்.
மின் உற்பத்திக்கு அனல்மின் நிலையத்தை தவிற வேறு வழிமுறைகளை அரசு கையாள வேண்டும் என்பதே மக்களது ஏகோபித்த கோரிக்கையாகும்.
இவ்வாறு புது திட்டங்களை நாட்டில் அறிமுகம் செய்வதற்கு காலதாமதம் ஏற்படும் என்பது சாதாரணமான ஒன்று. ஆனால் தாமதமாகும் காலப்பகுதி நீடித்து கொண்டே போகுமிடத்து நாடும் பாரிய இருளை நோக்கித் தள்ளப்படும் என்பது மறுக்கமுடியாத ஒன்று.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார்.
இவர் இன்று மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறையிலிருந்த ராம்குமார் இன்று திடீரென மின்கம்பியை கடித்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்று இந்திய தரப்பு பொலிஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
குறித்த செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் போதே ராம்குமார் உயிரிழந்துவிட்டார் என்றும் உடல் ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜுன் மாதம் 24ஆம் திகதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து ஐ.டி பொறியியலாளர் சுவாதி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமாரை நீண்ட நாட்களுக்கு பின்னர் பொலிஸார் கைது செய்தனர்.
நெல்லையில் உள்ள அவரது வீட்டில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில்தான் பொலிஸார் ராம்குமாரை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
காவிரி கலவரத்தில் பெங்களூரில் கேபிஎன் பஸ்களை தீயிட்டு கொளுத்திய சம்பவத்திற்கு காரணமாக பெண்ணை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடந்த 12ம் திகதி காவிரி விவகாரம் தொடர்பாக பெங்களூரில் நடைபெற்ற வன்முறையில் பெங்களூர் டிசோசா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 42 பஸ்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக 7 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கலவர பின்னணியில் ஒரு பெண் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போட்டுப் பார்த்த பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் ஒரு பெண் பெட்ரோல், டீசல் போன்றவற்றை சப்ளை செய்து பஸ்களை கொளுத்த உதவியுள்ளார்.
இதனையடுத்து அப் பகுதியில் பொலிசார் தீவிர விசாரணை நடத்திய போது அருகேயுள்ள யசோதா நகர் பகுதியை சேர்ந்த பாக்யஸ்ரீ என்ற 22 வயது பெண்தான், கலவரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பாக்யஸ்ரீ என அந்த பெண் வட கர்நாடகாவின் யாதகிரி மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 2 வருடங்கள் முன்பு தனது தாய், தந்தையோடு பிழைப்பு தேடி பெங்களூர் வந்துள்ளார்.
சம்பவத்தன்று, டிவியில் தமிழகத்துக்கு எதிராக போராட்டம் நடைபெறும் செய்தியை பார்த்து கன்னட கொடியை பிடித்து வரும் இளைஞர்களை தமிழகத்தை சேர்ந்த கேபிஎன் நிறுவன பஸ்களை கொளுத்த தூண்டியதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
பாக்யஸ்ரீ மீது கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகளில் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருகோணமலை – மூதூர் இருதயபுரம் பகுதியிலுள்ள வீட்டிலிருந்து மயக்கமுற்ற நிலையில் நேற்று சனிக்கிழமை பெண்ணொருவர் மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த பெண் சிகிச்சைக்காக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.
அதே இடத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான அரியநாயகம் வனிதாதேவி (32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
குறித்த பெண்ணைக் காணவில்லையென அவரது வீட்டுக்கு சென்ற அயலவர்கள், அவர் மயக்க முற்ற நிலையில் கிடப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் அவரை மூதூர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
விஷம் அருந்திய காரணத்தினாலேயே இவர் மரணமடைந்திருக்கலாம் என வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மூதூர் தள வைத்தியசாலை பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2017 ஜனவரி மாதம் முதலாம் திகதி கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற பொது அமைப்பு பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
2016ம் ஆண்டுக்குள் தீர்வு என வலியுறுத்தியே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் வாக்கினைப் பெற்றுக் கொண்டது. அதற்காக நாம் உழைக்க வேண்டும்.
அவ்வாறு இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைக்காது விட்டால் 2017 ஜனவரி முதலாம் திகதி விடிகின்ற போது கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்.
தனியே சம்மந்தன் ஐயாவின் கருத்தாக அதனை கருத முடியாது. கூட்டமைப்பின் அனைவரும் அதற்கு பொறுப்பு கூற வேண்டும். யாராவது அப்படி இல்லை என எதிர்த்தார்களா?
பிரபாகரன், சிறி சபாரத்தினம், பத்மநாபா, உமா மகேஸ்வரன் இந்த நான்கு பேரும் தான் உண்மையாக செயற்பட்டார்கள். இவர்களைத் தவிர இங்கு இருக்கின்ற எவருமே உண்மையாக செயற்படவில்லை. இது தான் உண்மை.
நாங்கள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். ஆறாவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. நாங்கள் தனிநாடு கேட்க முடியாது. தனி நாடு கேட்க உதவி செய்ய முடியாது. மற்றும் நிதி உதவி வழங்க முடியாது.
அதனால் தான் அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த அண்ணன் அமிர்தலிங்கம் உட்பட்ட சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு போனார்கள்.
அதற்கு பிறகு 6 வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு எம்.பியாக இருந்து கொண்டு தான் மேடைகளில் பலதைக் கதைக்கின்றோம்.
மக்களாகிய நீங்களும் தனித்து வாக்களித்து விட்டு இருக்க முடியாது. நீங்கள் பிரதிநிதிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் ஆகிய எம்முடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
அதைவிடுத்து ஒரு தடவை வாக்களித்து விட்டு ஐந்து வருடமாக எம்மை பேசக் கூடாது. எங்களிடம் கதைத்தால் தான் எமக்கு எதையும் செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
தனது கிரகநிலை மிகவும் மோசமாக இருப்பதாக சில ஜோதிடர்கள் கூறியிருந்தாலும் அவற்றை கூறி என்னை பயமுறுத்த முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொட பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர், அமைச்சர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
இன்னும் 5 மாதங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிச்சயம் இறந்து விடுவார் என ஜோதிடரான விஜித் ரோஹன விஜேமுனி வெளியிட்டிருந்த ஆருடம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“ரோஹன விஜேமுனிக்கு விசர் பிடித்துள்ளது. எனது கிரக நிலை மிக மோசமாக இருப்பதாக அவர் சில இணையத்தளங்களில் கூறியுள்ளார். எனது கிரக நிலை அந்த அளவுக்கு மோசமாக இருக்குமாயின் நான் எப்படி நாட்டின் தலைவராக இருப்பேன். இவ்வாறானவற்றை கூறி என்னை பயமுறுத்த முடியாது” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
விலங்குகள் நல வாரியத்தின் தூதுவராக நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
விலங்குகள் நல வாரியம் தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுவுக்கு மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த அமைப்பு தமிழர்களின் கலாசாரத்தை அழிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா விலங்குகள் நல வாரியத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஜல்லிக்கட்டை எதிர்க்கும் அந்த அமைப்பின் தூதுவர் பதவியில் இருந்து உடனே செளந்தர்யா விலக வேண்டும் என தமிழர் வீர விளையாட்டுப் பேரவையின் தலைவர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இல்லையெனில் எதிர்வரும் திங்கள்கிழமை முதல் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த கிரிஷ் – மைக்கேல் தம்பதிகளுக்கு திருமணமாகி பல வருடம் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினால், வாடகை தாய் மூலம் குழந்தை பெற அவர்கள் முடிவு செய்தார்கள்.
ஆனால் பிரித்தானியாவில் இதற்கு கடுமையான சட்டம் உள்ளதால் அதற்கு கால தாமதம் ஆகும் என்பதால், இந்தியாவில் உள்ள மும்பைக்கு சென்று குழந்தையை பெற அவர்கள் முடிவு செய்தனர்.
ஒரு வருடத்திற்கு பிரித்தானியாவை சேர்ந்த 1000 பேர், இந்தியாவுக்கு சென்று வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர்.
இதற்கென்று பல ஏஜென்ஸிகள் செயல்பட்டு வருகிறது. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்த அந்த தம்பதி ஒரு பெண்ணை வாடகை தாயாக முடிவு செய்தார்கள்.
25 வயதான அந்த இளம் பெண்ணுக்கு 19,000 பவுண்ட் சம்பளம் தரப்பட்டது. பின்னர் அந்த பெண்ணின் கருமுட்டையும் , கிரிஷ் விந்து இரண்டும் சேர்க்கப்பட்டு அதன் மூலம் அந்த வாடகை தாய் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.
அதற்கு லில்லி என அவர்கள் பெயர் வைத்தார்கள். பின்னர் குழந்தையுடன் பிரித்தானியாவுக்கு செல்ல அந்த தம்பதி முடிவு செய்தார்கள். ஆனால் குழந்தைக்கு மெடிக்கல் விசா கிடைக்கவில்லை.
இதனால் அவர்கள் குழந்தையை இந்தியாவில் விட்டு விட்டு பிரித்தானியா செல்லும் சூழல் ஏற்ப்ட்டது. இங்கு யாரும் இல்லாததால் குழந்தையை அனாதை ஆசிரமத்தில் விட்டு செல்லும் நிலைக்கு அவர்கள் தள்ளபட்டார்கள்.
ஊருக்கு சென்ற அவர்கள் குழந்தை நினைப்பிலேயே சரியாக சாப்பிடாமல், தூங்காமல் அவதிப்படுகின்றனர்.
பாஸ்போட், விசா பிரச்சனை முடிவுக்கு வரும் நிலையில் உள்ளதால் சீக்கிரம் தங்கள் குழந்தை தங்கள் கையில் தவழும் என்ற நம்பிக்கையில் பிரித்தானிய தம்பதி ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
புருனே நாட்டு இளவரசி, நடிகர் அஜித்தை சந்திக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரான அரண்மனை புருனேவில்தான் உள்ளது. புருனே மன்னர்களும் இளவரசர்களும் ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள்.
கடந்த வாரம், அந்த அரண்மனையில் வெளிநாட்டு வைர முதலாளிகளுக்கு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பல நாட்டைச் சேர்ந்த குத்து பாடல்கள் இசைக்கப்பட்டு எல்லோரும் நடனமாடியுள்ளார்கள்.
அப்போது வேதாளம் படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா’ பாடல் இசைக்கப்பட்டது. அதைக்கேட்டு அனைவரும் உற்சாகமாக நடனமாடியுள்ளார்கள்.
அந்தப் பாடலைக் கேட்டு அசந்து போன புருனே இளவரசி, தனது மெய்க்காப்பாளர்களை அழைத்து, அந்தப் பாடல் பற்றிய விபரங்களைக் கேட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, அஜித்தின் விபரங்கள், புகைப்படங்கள் மற்றும் அவர் நடித்த திரைப்படங்களை சேகரித்து அவரிடம் கொடுத்துள்ளனர்.
அதையெல்லாம் பார்த்து அசந்துபோன இளவரசி, ”என்ன அழகு.. என்ன கம்பீரம்.. சிரிக்கும் போது மனதை அள்ளுகிறார்.. அவரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்று உருகினாராம்.
சமீபத்தில் கிரிக்கெட் வீரர் பிரெட்லீ, அஜித்தை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற பிடியாணையின் பிரகாரம் கைது செய்யப்பட்டு புசல்லாவை பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபர் குற்றச் செயல் ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டு, வழக்கு தாக்கல் செய்யபட்டு நீதிமன்றுக்கு அழைக்கபட்டிருந்தார். அவ்வழக்கிற்கு குறித்த நேரத்திற்கு சமூகம் தராததால், நீதிமன்றினால் பிடி ஆணை பிறப்பிக்கபட்டிருந்தது.
அதன்படி, குறித்த சந்தேகநபர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், 28 வயதான ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிசந்திரன் பொலிஸ் காவலில் இருந்த நிலையில் தனது மேற்சட்டையால் கழுத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்போது, சந்தேகநபரின் சடலம் புசல்லாவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பாக புசல்லாவை பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர், வானத்திலிருந்து வந்த 2 கிலோகிராம் எடையுள்ள மீன் ஒன்று தனது முகத்தில் வீழ்ந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
பென்சில்வேனியா மாநிலத்தின் பிலடெல்பியா நகரைச் சேர்ந்த லிசா லொப்றீ எனும் இந்த யுவதிக்கே இந்த விசித்திர அனுபவம் ஏற்பட்டுள்ளது. பூங்கா ஒன்றில் தான் நடந்து கொண்டிருந்தபோது, கெட்பிஷ் ரகத்தைச் சேர்ந்த சுமார் 5 இறாத்தல் (2.2 கிலோகிராம்) எடையுள்ள மீனொன்று திடீரென தனது முகத்தில் வந்து விழுந்ததாக லிசா தெரிவித்துள்ளார்.
“இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது எனத் தெரியவில்லை. இச் சம்பவம் எனக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது” என அவர் கூறியுள்ளார்.
காற்றினால் அள்ளு ண்டு செல்லப்பட்ட சிறிய அளவிலான மீன் கள் மழையுடன் வானத்திலிருந்து வீழ்ந்த சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெற்றுள்ளன.
ஆனால், சுமார் 5 கிலோ எடையுள்ள இந்த மீன் பறவையொன்றினால் கொண்டு செல்லப்பட்ட நிலையில் விழுந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.