தாதிய சகோதரி சேவையிலிருந்து ஒய்வு பெற்ற வசந்தாதேவி திருக்கேதீஸ்வரன் அவர்களின் பிரிவு உபசாரம் வவுனியா வைத்தியசாலை மாநாட்டு மண்டபத்தில் தாதிய பரிபாலகர் ம.பாலநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ம.அகிலேந்திரன், பொது வைத்திய நிபுணர் ம.சிவராமன், பொது வைத்திய அதிகாரி திருமதி.அருட்செல்வம், பொது வைத்திய நிபுணர் நிசாந்தினி மற்றும் தாதிய கல்லூரி அதிபர் மருத்துவத்துறை உத்தியோகத்தர்கள் தாதியரகள் கலந்து கொண்டு சேவை நலன் பாராட்டை வாழ்த்தினர்.
அமெரிக்காவின் நியூயோர்க் பகுதியில் உள்ள மன்ஹட்டானில் பயங்கர குண்டுவெடித்துள்ளது.
நேற்று இரவு நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக நியூயோர்க் தீயணைப்புதுறை தெரிவித்துள்ளது. அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் லோயர் மன்ஹாட்டன் பகுதியில் ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் நேற்று (17.09.2016) மாலை 3.30 மணியளவில் வவுனியா – பாலமோட்டை தனியார் பேரூந்து பெண் சாரதியினை கேவலமான முறையில் இலங்கை போக்குவரத்துச் சபை நடத்துனர் பேசியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் பல வருடங்களாக தமிழ் பெண் ஒருவர் தனியார் பேரூந்து ஒன்றில் சாரதியாக பணியாற்றி வருகின்றார். அவரது கணவரும் அதே பேரூந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகின்றார்.
புதுமைப் பெண் என பலரால் பேசப்படும் இப் பெண், பெண்களாலும் இவ்வாறு பணிபுரியமுடியும் என்பதுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றார்.
நேற்று (17.09.2016) மாலை வவுனியா ஹோரவப்பத்தானை வீதியில் பயணிகளை ஏற்றுவதற்காக தரிந்து நின்ற வவுனியா- பாலமோட்டை தனியார் பேரூந்தின் சாரதி ( பெண்) மீது அதே பாதையில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தின் நடத்துனர் தகாத முறையில் பேசியது மட்டுமின்றி அவரை புகைப்படமும் எடுத்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் தனியார் பேரூந்தின் சாரதி ( பெண்) மற்றும் பயணிகள் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
திரிஷா நடிப்பில் வெளியான பேய் படம் நாயகி. இது தமிழ் நாட்டில் வெளியிடப்படுவது குறித்து திரிஷா எந்தவித கருத்தும் சொல்லவில்லை. இதனால் படத்தின் முடிவு திரிஷாவுக்கு தெரிந்து விட்டது. இதனால்தான் அவர் எதுவும் சொல்லவில்லை என்று ரசிகர்கள் விமர்சித்தனர்.
இதற்கு திரிஷா அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் ஒரு படம் பற்றி பேசாமல், அதை விளம்பரப்படுத்தாமல் இருந்தால் அதற்கு காரணம் இருக்கும். எனவே இதுபற்றி கேட்கும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் விளக்கம் அளிப்பேன். உங்கள் அன்புக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
வவுனியா சாள்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு பதினொருவர் கொண்ட 10 ஓவர்கள் கிரிக்கெட்போட்டி நாளை (18.09.2016) ஞாற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் மகாறம்பைக்குளம் சாள்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
எனவே பங்குபற்ற விரும்பும் விளையாட்டுக் கழகங்கள் கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு உங்கள் கழகங்களை பதிந்து கொள்ளமுடியும்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கண்ணாடி மாதிரி. அவர்கள் செய்வதை தான் குழந்தைகள் அப்படியே பிரதிபலிப்பார்கள். தாய், தந்தை மற்றும் குடும்ப சூழலை பொருத்தே குழந்தைகளின் எதிர்காலமும், மன பக்குவமும் அமைகிறது.
நிச்சயம் குழந்தைகள் முன்னர் பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள் :
குழந்தைகள் எதிரில் கணவன் மனைவி இருவரும் சண்டை போடவே கூடாது. இது அவர்கள் மனதை பாதிக்கும் முக்கிய விஷமாகும். மேலும் பெற்றோர்கள் மீது குழந்தைகளுக்கு ஒரு வித வெறுப்பை உண்டாக்கவும் வாய்ப்புகள் அதிகம்.
குழந்தைகள் முன்னிலையில் யாரையும் தவறாக பேசக் கூடாது. இது அவர்கள் மேல் குழந்தைகளுக்கு தவறான எண்ணத்தை உருவாக்குவதுடன், அவர்கள் எதிரிலேயே பெற்றோர்கள் அந்த நபரை பற்றி சொன்ன வார்த்தைகளை குழந்தைகள் சொல்லி விடுவார்கள்.
மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்களையும், தீய வார்த்தைகளையும் குழந்தைகள் முன்பு செய்யவே கூடாது. இதெல்லாம் பின்னர் அவர்களையும் செய்ய தூண்டும் என்பதை பெற்றோர்கள் மறக்க கூடாது.
உன் பிரண்டு எவ்ளோ மார்க் எடுத்துருக்கான் பாரு நீயும் இருக்கியே போன்று நம் குழந்தைகளை பிறருடன் ஒப்பிட்டு மட்டமாக பேசக் கூடாது. இது அவர்களுக்கு ஒரு வித தாழ்வு மனப்பான்மையை மனதில் ஏற்படுத்திவிடும்.
குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றாலோ, தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றாலோ அவர்களை திட்டாமல் அவர்கள் பிரச்சனை கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து அவர்களுக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
உலகிலேயே பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்து குடிமக்கள் மகிழ்ச்சியாக உள்ள நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சமுதாய உதவி, சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் அற்ற அரசு, வன்முறை இல்லாத சமுதாயம் மற்றும் நோய்கள் இல்லாத சூழல் போன்ற சிறப்பு அம்சங்களின் அடிப்படையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
உலகம் முழுவதும் 157 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் முதல் இடம் பிடித்துள்ளது.
உலகளவில் மகிழ்ச்சியான 10 நாடுகளின் பட்டியல்
டென்மார்க்
சுவிட்சர்லாந்து
ஐஸ்லாந்து
நோர்வே
பின்லாந்து
கனடா
நெதர்லாந்து
நியூசிலாந்து
அவுஸ்ரேலியா
சுவீடன்
இதே பட்டியலில் அமெரிக்கா – 13, ஜேர்மனி – 16, பிரித்தானியா – 23, பிரான்ஸ் – 32, ரஷ்யா – 56 ஆகிய இடங்களை பிடித்துள்ளது.
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஆசிய நாடுகளான இலங்கை 117- வது இடத்திலும் இந்தியா 118-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் உள்ள அப்பிள் நிறுவனத்தின் iTunes பிரிவுக்கு, 118 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த iTunes பிரிவு, ஜப்பானியப் பயனீட்டாளர்கள் செலுத்தும் கட்டணத்திலிருந்து கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியை, அதன் அயர்லாந்து கிளைக்கு அனுப்புகின்றது. அதற்கான வரி ஜப்பானில் செலுத்தப்படாத காரணத்தினாலேயே இவ் அபராதம் அறவிடப்பட்டுள்ளது.
மேலும் இவ்அபராததொகை தற்போது அப்பிள் நிறுவனத்தினால் செலுத்தபட்டுள்ளதுடன் வரி செலுத்துவதன் தொடர்பில், அண்மைய நாட்களாக அப்பிள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் உலக அரசாங்கங்களின் நெருக்குதலுக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட நடிகையான டாப்ஸி தான் நிஜவாழ்க்கையில் மேற்கொண்ட துன்புறுத்தல்கள் பற்றி கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் பிற மொழிகளில் நடித்து வரும் நடிகை டாப்ஸி, அவ்வப்போது தன் வாழ்வில் நடந்த முக்கியமான சம்பவங்களை பகிர்ந்து வருகிறார்.
அதில் ஒரு பகுதியாக, தனது கல்லூரி காலத்தில் தனக்கு ஏற்பட்ட துன்பங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.அதில், நான் டெல்லியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் படித்து வந்தேன்.
கல்லூரிக்கு செல்வதற்காக பேருந்தில் பயணம் செய்யும் போது ஆண்கள் பலர் கிண்டல் செய்ததுடன், தன்னை கண்ட இடங்களில் தொட்டு சில்மிஷம் செய்தனர் என கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னை ஒரு ரசிகர் பின் தொடர்ந்து வருவதாகவும், அவர் மீது பொலிசில் புகார் கொடுக்கப்போவதாகவும் டாப்ஸி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பூமிக்கு அருகாமையில் ஆபத்து ஒன்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பூமிக்கு அருகில் இன்று பயணிக்கும் பாரிய விண்கல் ஏதாவதொரு சமயத்தில் பூமி மீது மோதுண்டால், பாரிய அழிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த விண்கல்லின் நீளம் 200 அடி நீளம் கொண்டதென கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் அவ்வாறான வாய்ப்புகள் மிகவும் குறைவு என துறைசார் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல் பூமியில் மோத வாய்ப்பில்லை என இலங்கை வானியல் ஆராய்ச்சியாளர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் அது பூமியில் மோதினால், பூமியின் சுற்றுப்பாதையில் சாய்தல் அல்லது நில பகுதியில் உரசுப்பட்டால் வானத்தில் தூசி மென்படலம் உருவாகி, சூரிய ஒளி இல்லாமல் போய்விடும். இதனால் பூமியிலுள்ள உயிரினங்கள் அழிந்து போகும் பேராபத்து உள்ளது.
விண்கல் கடலில் விழுந்தால் 800 மீட்டர் அளவிலான பாரிய சுனாமி அலை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
குறித்த விண்கல் மணிக்கு 5000 கிலோ மீற்றர் வேகத்தில் பூமிக்கு அருகில் பயணிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி இளைஞர் விக்னேஷ் தற்கொலைக்கு தன்னுடைய மேடைப் பேச்சுக்கள் காரணமில்லை என அக்கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பிரச்சனை காரணமாக, காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 15 ஆம் திகதி பேரணி நடத்தப்பட்டது .
இதில் அக்கட்சியை சேர்ந்த மன்னார்குடி இளைஞர் விக்னேஷ் என்பவர் பேரணிக்கு மத்தியில் தீக்குளித்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கு சீமானின் முறுக்கேற்றும் மேடைப்பேச்சுக்களே காரணம் என பலர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு பதிலளிக்கு வகையில் சீமான், நாங்கள் யரையும் தீக்குளித்து சாக சொல்லைவில்லை எனவும், தீக்குளிப்பு என்பது உணர்ச்சிவசப்பட்டு நிகழ்கின்ற ஒன்று அதற்கு யாரும் யாரையும் குறிப்பிட முடியாது என கூறினார்.
அப்படி தற்கொலைக்கு தன்னுடைய முறுக்கேற்றும் பேச்சுத் தான் காரணம் என்றால் ஜெயலலிதா ஊழல் வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்ட போது 100 தமிழர்கள் தற்கொலை செய்து கொண்டார்களே? அதற்கு ஜெயலலிதாவின் முறுக்கேற்றும் பேச்சுத்தான் காரணமா?
இதை அவரிடம் சென்று கேட்க முடியுமா? என ஆவேசமாக சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி நீர் திறப்பு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களில் ஏற்பட்ட வன்முறையைத் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதா? என்று இரு மாநில அரசுகளுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) கண்டனம் தெரிவித்தது.
காவிரி விவகாரத்தால் ஏற்பட்ட வன்முறை குறித்து ஆணையத்தின் உறுப்பினரும் நீதிபதியுமான டி.முருகேசன் பரிந்துரையின் பேரில், வன்முறையின் போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மனித உரிமை மீறல்களாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் கருதியது.
இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் இந்த நடவடிக்கையை ஆணையம் மேற்கொண்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆணையம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பெங்களூருவில் காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மிகவும் தீவிரமாக அரங்கேறிய வன்முறையில் அரசு, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சிவில், காவல் துறைகள் சரியான முறையில் செயல்படவில்லை. குண்டர்களின் சட்டவிரோதமான வன்முறைச் செயல்களை முன்கூட்டியே அனுமானித்து அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.
இரு மாநிலங்களிடையிலான நீர்ப் பங்கீடு விவகாரத்தால் வன்முறை மிகவும் தீவிரம் அடைந்த பிறகுதான் அரசு, காவல் அமைப்புகள் விழித்துக் கொண்டுள்ளன. வன்முறை சம்பவங்களுக்குப் பிறகு சில இடங்களில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மருத்துவமனைகளுக்கும், பிற அவசரத் தேவைகளுக்கும் நகருக்குள் பொதுமக்கள் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு நடமாட முடியாமல் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.
மக்களின் வாழ்க்கை, பாதுகாப்புக்கு பொறுப்பு வகிக்கும் அரசுப் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தங்கள் பணிகளை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டியுள்ளனர். இதை மிகவும் தீவிர கவனத்துடன் ஆணையம் கருத்தில் கொண்டு கண்டனம் தெரிவிக்கிறது.
இரு மாநிலங்களிலும் எவ்வளவு பேர் வன்முறையால் காயம் அடைந்தனர்? அரசு மற்றும் தனியார் சொத்துகள் எவ்வளவு சேதம் அடைந்தன? காவல் துறை, அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநில அரசுகளின் தலைமைச் செயலர்கள், காவல் துறைத் தலைமை இயக்குநர்கள் அறிக்கை அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூரிய ஆயுதங்களால் தாக்கி தனது தந்தையை கொலை செய்த சந்தேகத்தில் 16 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிபோதையில் வந்த தந்தை, தாயை அடித்து துன்புறுத்தியதால் கோபமுற்ற மகன் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹாலிஎல, ருகதென்ன வத்தை பழைய பிரிவில் வசிக்கும் 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் பொழும்பில் தொழில் புரியக் கூடியவர் என்பதுடன், ஊரில் உள்ள கோவிலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சில தினங்களுக்கு முன்னர் வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கோவில் விழா நடந்து கொண்டிருக்கும் போது தந்தை தனது தாயை அடிப்பதாக சகொதரி மூலம் தெரிந்து கொண்ட மகன் வீட்டிற்கு சென்று தந்தையை கூரிய ஆயுதங்களினால் தாக்கியுள்ளார்.
சந்தேகநபர் இன்று (17) பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் எதிர்வரும் 25.09.2016 ஞாற்றுக்கிழமை அன்று காலை 7.30 – 12.30 மணிவரை மாபெரும் சிரமதானம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச் சிரமதானத்தில் சகல பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கலந்து கொண்டு பாடசாலையினையும் சுற்றுப்புறங்களையும் எழில் பெறசெய்ய ஒத்துழைக்குமாறு பழையமாணவர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மேலும் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து மண்வெட்டி, குப்பைவாரி, கோடரி, அளவாங்கு, புல்வெட்டும் இயந்திரம் போன்ற உபகரணங்களையும் எதிர்பார்க்கின்றனர்.
ஹெப்பிட்டிக்கொலாவ பகுதியில் தனது வீட்டிலிருந்த மரத்தில் ஏறிய இராணுவ வீரர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,
காலியில் கடமையாற்றி வந்த இராணுவ வீரர் விடுமுறையில் ஹொறவப்பொத்தான பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தவேளையில் வீட்டிலிருந்த தனது வளவில் உள்ள வேப்பமரத்தில் தனது வீட்டு தேவைக்காக மரக்கிளைகளை வெட்டியவேளை தவறுதலாக கீழே விழுந்துள்ளார்.
தலையிலும் உடலிலும் பலமாக அடிபட்ட நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 10நாட்கள் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 34 வயதுடைய மூன்று பிள்ளையில் தந்தை இன்று வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ள கடற்படை வீரர் ஆவார்.