வவுனியாவில் திருட்டில் ஈடுபட்ட ஆறுபேர் கைது!!

 
வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புபட்ட ஆறு பேரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்த பெறுமதியான நகைகளையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியாவில் பல்வேறு பகுதிகளிலுள்ள வீட்டில் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஆறு பேரை பொலிசார் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து திருடிய பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 5ம் திகதியிலிருந்து 10ம் திகதிவரை குறித்த ஆறு பேரினால் திருடப்பட்ட 12பவுண் தங்க நகைகளையும் பொலிசார் இவர்களிடமிருந்து மீட்டுள்ளனர்.

திருடப்பட்ட தங்க நகைகளை மன்னார், வவுனியா, குருணாகல் போன்ற பகுதிகளில் விற்பனை செய்தபோது குறித்த இரண்டு நபரைக் கைது செய்து மேற்கொண்ட விசாரணையின் பின்னர் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 14நாள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நால்வரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தள்ளனர்.

குறித்த நபர்கள் தோணிக்கல், மதவுவைத்தகுளம் போன்ற பகுதிகளில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

குறித்த நபர்களை கைது செய்வதற்கு வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு தேசபந்து தென்னக்கோன் தலைமையில் சிறப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டதுடன் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்ணாண்டோ, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிசிற குமார, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி ஆலோசனையில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி செனரத் தலைமையிலான சாஜன் ஜேசுதாசன் 42521, அபேரத்தினா 50955, எஸ். ஜ. ரத்ணாயக்கா, சிசில் குமார 23298, அடங்கிய குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இவர்களைக் கைது செய்ய முடிந்துள்ளதாகவும் தெரிவித்தள்ளனர்.

1 media-share-0-02-01-2a4e04adc8eace70074c86e85b98df0af560c1252ca0e4028ee05e181b78f332-65f2fe01-1136-4774-8199-8f5ceea2ca1b media-share-0-02-01-3d1351b181c4c668ccd1cb6025ea52fd7f79d09957e1e48c773211eeb168e054-e635f77d-f865-47af-b3ed-67d03afdea02 media-share-0-02-01-74b9d2249203c623e6f792ba2632ad6fa3959de19295af2055368f47128fb83b-a88f0f32-b435-4194-8cfb-c920aea864b4 media-share-0-02-01-408c0319768110fc1ace11235f7d85822a2428ef5ffc6ce488b2cf8da4de7da4-f8f6277a-05c8-4591-94c1-2c9ece3ab124 media-share-0-02-01-8091eae3bd18b8bd729243699d7c276c5a748bd70c01a8245fb4a456117d38d3-975a99ad-81f9-4d06-af63-e6a0b122fda24 media-share-0-02-01-706551020785728eee1fcb3e97d30faf11414a2ac086837126434df64af1f7ef-e26fcfd1-f6aa-4427-9161-fce8de431813

வவுனியா பொலிஸ் நிலையத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வு!!

 
இன்று காலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் (17.09.2016) 8.30 மணியளவில் சத்தியபிரமாண நிகழ்வு உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதான பொலிஸ் பரிசோதகர் சோமரத்ன விஜயமுனி மற்றும் வவுனியா பொலிசார், விஷேட அதிரடி படையினர் போன்ற பலரும் கலந்து கொண்டனர்.

img_0639 img_0641 img_0643

வவுனியாவில் கா.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான விசேட பயிற்சி நிகழ்வு!!

 
வவுனியா மாவட்ட கா.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான விசேட கல்வி பயிற்ச்சி நிகழ்வு ஒன்று நேற்று (16.09.2016)காலை 10.00 மணிக்கு வவுனியா சிந்தாமணி பிள்ளையார் போவில் மண்டபத்தில் கலாநிதி கரதடியன குணரத்தின தேரர் தலைமையில் நடைபெற்று நடைபெற்றது.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் பங்கு பெறும் இவ் பயிற்ச்சி நிகழ்வினை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வன்னி மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் ஆங்கிலம்,கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பயிற்ச்சி வகுப்பிற்கு மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

இக்கல்வி பயிற்சி நெறிக்கான அனுசரணையை சிங்கப்பூரை சேர்ந்த ‘புத்த மகா கருண அறக்கட்டளை’ நிறுவனம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

img_8648 img_8652 img_8653 img_8658 img_8690 img_8699 img_8704 img_8707 img_8708 img_8717 img_8719 img_8724 img_8729

சென்னையில் பிச்சை எடுத்தவர் இன்று கேம்பிரிட்ஜ் பட்டதாரி : நெகிழ்ச்சி சம்பவம்!!

chennai-street-begger-in-cambridge-university

வாழ்கையில் அதிர்ஷ்டம் பலமுறை வந்தாலும் அதற்கான தக்க முயற்சிகளை சரியான சந்தர்ப்பத்தில் எடுக்காவிடின் ஒருபோதும் வெற்றி பெறாது.

ஓர் காலகட்டத்தில் சென்னை தெருக்களில் பிச்சை எடுத்த ஓர் இளைஞர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக சென்னை வந்த ஜெயவேல் என்ற இளைஞர் வேலை ஏதும் கிடைக்காததால் வறுமையின் பொருட்டு தனது பெற்றோருடன் பிச்சை எடுத்து வந்துள்ளார்.

அப்போது தெருவோரம் வசிப்போரின் வாழ்க்கையை ஆவணப்படமாக பதிவு செய்ய வந்த உமா – முத்துராமன் தம்பதி ஜெயவேலை தத்தெடுத்து படிக்க வைத்துள்ளனர்.

அவர்கள் ஜெயவேலுவிற்கு கொடுத்த ஊக்கத்தால் நன்றாக படித்த ஜெயவேல் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றார்.

ஜெயவேலிற்கு மேற்படிப்பு படிக்க சில ஆர்வலர்கள் முன் வந்தனர். உலகத்தரம் வாய்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நுழைவுத்தேர்வில் தகுதிபெற்று அந்தப்பல்கலைக்கழகத்தில் கார்களின் செயல்திறனை மேம்படுத்துவது தொடர்பான பட்டப்படிப்பை முடித்தார்.

தற்போது இத்தாலியில் உள்ள டுரின் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்து வரும் ஜெயவேலின் படிப்பு செலவுக்காக உமா – முத்துராமன் தம்பதியினர் ரூ. 25 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். தான் தாய்நாடு திரும்பியதும் இந்த தம்பதியினருக்கு கடனை கொடுத்துவிட்டு தன்னால் இயன்ற உதவிகளை எல்லோருக்கும் செய்வேன் என ஜெயவேல் கூறியுள்ளார்.

chennai-street-begger-in-cambridge-university chennai1

கணவர் திருட்டு வழக்கில் சிக்கியதால் 3 மகள்களுடன் தூக்கில் தொங்கிய மனைவி!!

hang

தூத்துக்குடி மாவட்டத்தில் கணவர் திருட்டு வழக்கில் சிக்கியதால் தனது மூன்று மகள்களுடன் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (53). இவர் ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் மின் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயா (50). மகள்கள் சக்திமாலா தேவி (25). பி.இ., படித்துள்ளார். கலைவாணி (20). ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளார். காயத்ரி (17). ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், தமிழ்செல்வனுக்கு உடன் தற்காலிக பணியாளராக பணியாற்றும் ரேவதி என்பவருடன் கள்ளதொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. ரேவதிக்கும், சுதீஷ்ராஜா என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன் பின்னர் சுதீஷ்ராஜா மும்பையில் வேலை பார்த்து வருகிறார்.

இதை தொடர்ந்து, மும்பையில், ஒரு வீட்டில் 80 பவுன் நகை காணாமல் போன வழக்கில் சுதிஷ்ராஜாவிற்கு தொடர்பு உள்ளது என சுதிஷ்ராஜாவை மும்பை பொலிசார் ஆழ்வார்திருநகரிக்கு தேடி வந்துள்ளனர். வீட்டில் அவர் இல்லாத காரணத்தால் அவரது மனைவி ரேவதியிடம் விசாரித்துள்ளனர். ஆனால் பொலிசார் விசாரணைக்கு ரேவதி முரண்பாடாக பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், ரேவதி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு ஆசாரியிடம் விற்று பணமாக மாற்றிவிட்டதாக மும்பை போலீசுக்கு தகவல் கிடைள்ளது. உடனடியாக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு ஆசாரியிடம் விற்று பணமாக மாற்றிவிட்டதாக மும்பை போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

பொலிசார் உடனடியாக அந்த ஆசாரியை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தமிழ்ச்செல்வனும், ரேவதியும் 80 பவுன் நகைகளை விற்று பணம் பெற்றது உறுதிபட தெரிய வந்துள்ளது. பின்பு, பொலிசார் தமிழ்செல்வனையும், ரேவதியையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்செல்வனின் மனைவிக்கு இந்த விடயம் தெரிய வரவே உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் மத்தியில் கவுரவமாக வாழ்ந்த தமிழ்ச்செல்வன் திருட்டு நகையை விற்ற வழக்கில் சிக்கி விட்டாரே என மனைவி ஜெயா, மகள்கள் சக்திமாலாதேவி, கலைவாணி, காயத்ரி ஆகியோர் மனம் உடைந்து அழுதனர். இனி மானத்தோடு உயிர் வாழ முடியாது என நினைத்தனர். இதையடுத்து தாய் ஜெயா, மகள்கள் சக்திமாலாதேவி, கலைவாணி, காயத்ரி ஆகிய 4 பேரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் 4 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயும், 3 மகள்களும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆழ்வார் திருநகரியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

hang1

விவாகரத்து செய்தி : உண்மையை போட்டுடைத்த ரஜினியின் மகள்!!

rajani1

விவாகரத்து பற்றிய செய்தி உண்மையானதே என சௌந்தர்யா அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்கள் இருவருமே குடும்பத்தை அழகிய முறையில் நடத்தும் சிறந்த குடும்ப பெண்கள் தான்.

இந்நிலையில், ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா அஸ்வின் 2010ல் தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த நான்கு மாதங்களாக இருவர்களுக்குமிடயே உறவில் கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இவர்களுக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், அவ்வாறு வெளியான செய்தி உண்மைதான் எனவும், இது எங்கள் சொந்த வாழ்க்கை பிரச்சனை தயவு செய்து இதற்கு மரியாதை கொடுங்கள் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவினை வெளியிட்டுள்ளார்.

rajani

பிறந்தநாளை கின்னசில் இடம்பெற செய்ய மோடியின் இரண்டாவது முயற்சி!!

modi

பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17) தனது 66வது பிறந்த தினத்தை குஜராத்தில் கொண்டாடுகிறார்.

இந்நிலையில், இவரது பிறந்த நாளை கின்னஸ் சாதனை முயற்சிகளுடன் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் தனது 66வது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

இதைத் தொடர்ந்து, குஜராத் அரசு சார்பில் நவசாரி எனும் இடத்தில் 11,223 மாற்று திறனாளிகளுக்கு, ரூ.7.5 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிக நல திட்டங்கள் வழங்கியதாக இந்நிகழ்வு கின்னஸ் சாதனையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகள் ஒரே நேரத்தில் ஆயிரம் எண்ணெய் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைக்க உள்ளனர்.

இதற்கிடையில், 1000 பேருக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் காது கேட்கும் கருவி வழங்கி கின்னஸ் சாதனையில் இடம்பெற திட்டமிட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் வாரணாசி தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 10,200 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டு கின்னஸ் சாதனைக்கு அனுப்பட்டது. ஆனால் புகைப்படம், வீடியோ போன்ற உரிய ஆதாரங்கள் இல்லாததால் கின்னஸ் சாதனைக்கு ஏற்றதாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்கா விமானநிலையம் செல்பவர்களுக்கு எச்சரிக்கை!!

kuttu

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தமது விமானங்களில் சாம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் பாவனைக்கு முற்றாகத் தடை விதித்துள்ளது.

இந்த தடை இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மின் வலுவேற்றும் போது கைபேசிகள் வெடித்துள்ளதாக 10 இற்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்து, சாம்சுங் நிறுவனம் தனது தற்போதைய வெளியீடான சம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் விற்பனையை தடைசெய்துள்ளது.

எனினும் குறித்த தொலைபேசியை பயணத்தின் போது கொண்டு செல்பவர்கள் தொடர்பினை நிறுத்தி (switch off) தமது பையில் கொண்டு செல்லுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தடை பற்றி விமான நிலையங்களிலும், விமானத்தினுள்ளும் பயணிகளுக்கு அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வானில் தோன்றிய தேவ தூதர்!!

 
அமெரிக்கா நியூயோர்க் நகரில் அமைந்துள்ள உலக வர்த்தக மையம் வளாகத்திலிருந்து வான் பரப்பை நோக்கி செலுத்தப்பட்ட ஒளிக்கீற்றையின் நுனியில் “தேவ தூதரின்” உருவம் ஒன்று தோன்றியுள்ளது.

இந்த அதிசய சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை ரிஷ் மெக்கோர்மெக் என்ற புகைப்படக் கலைஞர் புகைப்படமெடுத்துள்ளார்.

ஒளிக்கீற்றையின் இறுதி நுனியில், தேவ தூதரின் உருவம் தெரிந்ததாகவும், அதனை தான் புகைப்படமெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அன்றைய தினம் தான் எடுத்து அனைத்துப் புகைப்படங்களிலும், “தேவ தூதரின்” காட்சி இருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

31 32

அப்பிள் 7 ற்கு வந்த நிலை!!

 
அப்பிள் 7 கையடக்கதத்தொலை பேசியை வாங்குவதற்காக உலகிலுள்ள பல நாடுகளில் அப்பிள் அபிமானிகள் நீண்ட நேரம் காத்திருந்து வாங்கியுள்ளனர்.

குறிப்பாக இரண்டு நாட்கள் வரிசையில் தவம் இருந்து அப்பிள் 7 கையடக்கத் தொலைபேசியை பெற்றுள்ளனர்.

01 02 2 3 4 5 6 7 8 9 10 11 13 14 15

இலங்கை சந்தைகளில் அறிமுகமாகியுள்ள புதிய முச்சக்கர வண்டி!!

auto

இலங்கை சந்தைகளில் புதிய ரக முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபல தனியார் மோட்டார் வாகன இறக்குமதி நிறுவனம் ஒன்று இந்த முச்சக்கர வண்டியை இறக்குமதி செய்துள்ளது.

கவர்ச்சி கரமான முறையில் வடிவமைக்கபட்டுள்ள குறித்த முச்சக்கரவண்டி சொகுசு பயணத்திற்கு ஏற்ற வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த முச்சரக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என இறக்குமதி உரிமையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்து : ஒருவர் பலி!!

accident

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

ஷகிப் அல் ஹசன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை விளம்பர படப்பிடிப்பில் இறக்கிவிட்ட பின்னர் டாக்கா நோக்கி பயணித்த குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹெலிகொப்டரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக விபத்து விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து ஷகிப் அல் ஹசன் தரையிறங்கிய இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீற்றர் தூரத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஷகிப் அல் ஹசன் தான் நலமாக இருப்பதாகவும், விபத்து தனக்கு அதிர்ச்சி தந்துள்ளதாகவும் தெரிவித்ததோடு, விபத்து தொடர்பில் பேச முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு உலக சாதனைகளுடன் தங்கங்கள்!!

ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெற்றுவரும் பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பெரிய பிரித்தானியாவின் கதீனா கொக்ஸ் இரண்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றதுடன், அந்த இரண்டு போட்டிகளிலும் உலக சாதனைகளை நிலைநாட்டி பெருமை தேடிக் கொண்டார்.

11
ரி 38 – 400மீற்றரில்

மாற்றுத்திறன் கொண்ட வீராங்கனைகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே இரண்டு வகையான விளையாட்டுக்களில் உலக சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

25 வயதுடைய கதீனா, ஒலிம்பிக் விளையாட்டரங்கில் புதனன்று நடைபெற்ற ரி 38 பிரிவு பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை ஒரு நிமிடம் 00.71 செக்கன்களில் நிறைவு செய்து உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

12
கதீனா கொக்ஸ்

ரியோ ஒலிம்பிக் வெலோட்ரோமில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சி 4 – 5 பிரிவு பெண்களுக்கான 500 மீற்றர் நேரக் கணிப்பு சைக்கிளோட்டப் போட்டி யிலும் கதீனா கொக்ஸ் உலக சாதனையுடன் (34.598 செக்.) தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

அத்துடன் ரியோ பராலிம்பிக் விளையாட்டு விழாவில் ரீ 38 பிரிவு பெண்களு க்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் (13.01 செக்.) இவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஜப்பானில் தொடரும் கொடூர டொல்பின் வேட்டை!!(படங்கள்)

1

ஜப்பானின் மிகப்பிரபலமான டொல்பின் வேட்டை டைஜியில் நடத்தப்படுகிறது. இங்குள்ள மலைக் குகைப் பகுதியில் நூற்றுக்கணக்கான டொல்பின்கள் தினமும் வேட்டையாடப்படுகின்றன.

செப்டம்பர் முதல் பெப்ரவரி வரை 6 மாதங்கள் டொல்பின் வேட்டை தொடர்கிறது. ஒவ்வொரு பருவத்திற்கும் 2000 டொல்பின்கள் கொல்லப்படுகின்றன.

அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பே மோட்டார் படகுகளில் மலைக்குகைக்கு வந்து, வலை விரித்துக் காத்திருக்கிறார்கள் வேட்டைக்காரர்கள்.

இடப்பெயற்சி செய்யும் டொல்பின்கள் கூட்டமாக அந்தப் பகுதியைக் கடக்க முயலும்போது, வலையால் தடுக்கப்பட்டு, வேட்டையாளர்களின் ஈட்டிகளுக்குப் பலியாகின்றன. கூர்மையான உலோகக் கம்பிகளை வைத்து, டொல்பின் உடலில் பலமுறை குத்துகிறார்கள்.

அந்தப் பகுதி நீரே சிவப்பாக மாறிவிடுகிறது. இப்படிச் செய்வதால் டொல்பின்களின் உளவியல் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள்.
குட்டிகளையும் இளம் டொல்பின்களையும் கொல்லாமல் விட்டுவிட்டாலும் அவை மன அழுத்தத்தில் விரைவில் மரணத்தைச் சந்தித்துவிடுகின்றன. ஏனென்றால், டொல்பின்கள் கூட்டமாக வசிக்கக்கூடியவை. மிக அன்பாகப் பழகக்கூடியவை.

கண் முன்னே தங்கள் உறவினர்கள் கொல்லப்படும் காட்சியைப் பார்க்கும் டொல்பின்கள், மனிதர்களைப் போலவே துன்பமடைகின்றன. டைஜி டொல்பின் வேட்டையை லூயி பிசியோஸ் ஆவணப்படமாக எடுத்து வெளியிட்டார்.

அதற்குப் பிறகு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. விலங்குகள் நல ஆர்வலர்களும் வேட்டையைத் தடுக்கப் போராடினர். ஆனாலும் தடுக்க இயலவில்லை.

பல கோடி பணம் புழங்கும் தொழிலாக மாறிவிட்டதும் ஜப்பானிய அரசாங்கம் ஆதரவு அளிப்பதும் தான் இதற்குக் காரணம்.
உடலுக்குத் தீங்கிழைக்கும் இரசாயனங்கள் கலக்கப்பட்ட டொல்பின் இறைச்சியைச் சாப்பிட வேண்டாம் என்று தொடர்ந்து செய்துவந்த விழிப்புணர்வு மூலம், ஜப்பானிய மக்களிடம் டொல்பின் இறைச்சிக்கான ஆர்வம் குறைந்து வருகிறது.

ஆனால், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டைஜி டொல்பின் இறைச்சிகளை வாங்கத் தயாராக இருக்கிறார்கள்.

2 3 4 5

ரயில் நிலையத்தின் பெயர்ப்பலகைகளில் உள்ள தமிழ் பிழைகளைத் திருத்துமாறு மனோ கணேசன் பணிப்புரை!!

mano-ganesan

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர், மனோ கணேசன் நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது ரயில் நிலையத்தில் உள்ள பெயர்ப்பலகைகள் மற்றும் தமிழ் அறிவித்தலில் உள்ள பிழைகளை அவதானித்து அதனைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மனோ கணேசன் அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.

பற்றி எரிந்த கிளிநொச்சி பொதுச்ச ந்தை : பலகோடிகள் நாசம்!!

fire

கிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்று வெள்ளிக்கிழமை (16.08.2016) இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது

இன்று இரவு எட்டு முப்பதுக்கும் ஒன்பது மணிக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து பழக் கடைகளும், 60க்கு மேற்பட்ட புடவை கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளது. இதனால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளும் தீயில் எரிந்து நாகமாகியுள்ளது.

தீ பிடித்து எரிய தொடங்கிய நிலையில் வேகமாக வீசிய காற்று காரணமாக படிப்படியாக எல்லாக் கடைகளுக்கும் தீ வேகமாக பரவி பெரும் சுவாலை விட்டு எரிந்துகொண்டிருந்த நிலையில் உடனடியாக பொலீஸ் நீர்த்தாங்கி மூலம் தீ அனைக்கும் முயற்சி மேற்க்கொள்ளப்பட்டது.

இருந்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்தும் தீ சுவாலை விட்டு எரிந்து வேகமாக பரவியது. பின்னர் இராணுவத்தின் நீர்த்தாங்களும் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டனர் இருந்தும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இதனையடுத்து கொக்காவில் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தின் தீ அணைக்கும் வாகனமும் கொண்டுவரப்பட்டு கடும் பேராட்டத்திற்கு மத்தியில் தீ தொடர்ந்தும் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையில் ஏற்பட்ட தீ 60 க்கு மேற்பட்ட புடவை கடைகளையும், அனைத்து பழக்கடைகளையும் எரித்து அழித்துள்ளது. தீயை அணைக்குமும் முயற்சியில் ஈடுப்பட்ட இராணுவத்தினரில் ஜந்து மேற்பட்டவர்கள் தீக் காயங்களுக்குள்ளும் உள்ளாகியுள்ளனர்

எற்கனவே யுத்தத்தால் அனைத்தையும் இழந்த கிளிநொச்சி சந்தை வியாபாரிகள் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மீள்குடியேற்றத்திற்கு பின்னர் அம்பாள்குளம் பகுதியில் சந்தை ஆரம்பிக்கப்பட்ட போது சில காலம் அங்கு போதியளவு வியாபாரம் இன்றி வியாபாரிகள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த வேளை தாங்கள் 2009 க்கு முன் சந்தை இயங்கிய (தறபோது சந்தை உள்ள பிரதேசம்) பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தற்போது சந்தை பகுதி மீட்கப்பட்டு மீன் மற்றும் மரக்கறி வியாபாரத்திற்கு நிரந்தர கட்டடிம் அமைக்கப்பட்டு வழங்க்கபட்ட நிலையில் ஏனைய வியாபார துறைகளுக்கு தற்காலிக தகர கொட்டில்கள் அமைத்து வழங்க்கப்பட்டது.

இந்த குறித்த தற்காலிக கொட்டில்களே தீ பிடித்து எரிந்து அழிந்துள்ளது.

கிளிநொச்சி நகரத்தில் சில வருடங்களுக்கு முன் தனியார் புடவை கடை ஒன்று தீயினால் எரிந்து அழிந்த போது கரைச்சி பிரதேச சபையினரிடம் தீ அணைப்பு படை ஒன்றின் அவசியம் குறித்து பல தரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டது ஆனால் அவர்கள் அதனை கருத்தில் எடுக்கவில்லை.

கிளிநொச்சி நகரத்தில் ஒரு தீ அணைப்பு படை இருந்திருக்குமாயின் ஒரு சில கடைகள் எரிந்த நிலையில் தீயை கட்டுப்படுத்தியிருக்க முடிந்திருக்கும் என வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் ஒரு வருடதிற்கு என வழங்கப்பட்ட குறித்த தற்காலி கொட்டில்களில் வியாபாரிகள் மூன்று வருடங்களுக்கு மேல் வியாபாரம் செய்து வருகின்ற நிலையில் கடந்த மாதம் தங்களுக்கு நிரந்தர கட்டடம் அமைத்து தருமாறு பல தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5 6 7 8 9 10 1112131415