வவுனியாவில் பிரசித்திபெற்ற கிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான இராஜகோபுரம் அமைப்பதற்கான சங்கு ஸ்தாபன நிகழ்வு (அடிக்கல் நாட்டல்) நேற்று (16.09.2016) இடம்பெற்றது.
பழம் பெரும் ஆலயமான இக்கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா சிறப்புற இடம்பெற்று வருகின்றமை சிறப்பம்சமாகும். இந்த நிலையில் அக்கிராமத்தவர்கள் ஒன்று திரண்டு இராஜகோபுரததிற்கான அடிக்கல்லினை நாட்டினர்.
விசேட வழிபாடுகளை தொடர்ந்து இராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. வட மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலின் அனுசரணையின் கீழ் இயங்கும் சிவன் முதியோரர் இல்லத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத் தொகுதி இன்று 16.09.2016 வெள்ளிகிழமை காலை 10.00 மணியளவில் திறந்து வைக்கபட்டது.
மேற்படி புதிய கட்டிடமானது படுக்கையில் உள்ள முதியவர்களை பராமரிப்பதற்கென விசேடமாக அமைக்கபட்டதாகும்.
மேற்படி கட்டிடத்திறப்பு விழா காலை விருந்தினர் வரவேற்புடன் ஆரம்பமாகி புதிய கட்டிட தொகுதியை திருமதி. நளாயினி இன்பராஜ் ( பணிப்பாளர் -வடமாகாண சமூகசேவைகள் திணைக்களம் ) அவர்களால் திறந்து வைக்கபட்டது.
தொடர்ந்து நிகழ்வுகள் வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலின் அனுசரணையின் கீழ் இயங்கும் அருளக சிறுமிகளின் வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து திரு.ஆ.நவரத்தினராசா அவர்களது தலைமையுரை இடம்பெற்றதுடன் தொடர்ந்து வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ் .எஸ். வாசன் அவர்களின் உரை,வவுனியா மாவட்ட முதியோர்சங்க தலைவர் Dr.K.இராமச்சந்திரன் அவர்களின் உரையும் அதனை தொடர்ந்து வவுனியா சட்டத்தரணி தயாபரன் அவர்களும் உரையாற்றினர் .
தொடர்ந்து பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட திருமதி திருமதி. நளாயினி இன்பராஜ் அவர்களது உரையும் இடம்பெற்றது .இறுதியில் வவுனியா கோவில்குளம் கோவிலின் பொருளாளர் திரு ஆ. உமாதேவன் அவர்களின் நன்றியுரையும் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் பிரதீபன் (கலாசார உத்தியோகத்தர் ),மா.சுரேந்திரன் (சமளங்குளம் கிராம சேவை உத்தியோகத்தர்) திருமதி.பிறேமினி விமலேந்திரன் (சமூக சேவை உத்தியோகத்தர்-நெடுங்கேணி) தனுஷா பாலேந்திரன்(மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ) பிரகாசினி அஜந்தன் (முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் )செல்வி .சோபனா (சமூகசேவை உத்தியோகத்தர் )திருமதி .யசோதரா தேவி (தொழிநுட்ப உத்தியோகத்தர் ) DR.சூரியகுமார்(சிதம்பரபுரம் வைத்தியசாலை ) ,Dr.சி.சிவதாஸ்(மனநல மருத்துவர் வவுனியா பொது வைத்தியசாலை ) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்திய டென்னிஸ் வீரர் சகெத் மைனெனி தனது நீண்ட கால தோழி ஸ்ரீலட்சுமிடம் தனது திருமண விருப்பத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நேற்று முன் தினம் டேவிஸ் கிண்ணம் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் இந்திய டென்னிஸ் வீரர் சகெத் மைனெனி தனது தோழி ஸ்ரீலட்சுமியுடன் கலந்து கொண்டார்.
அப்போது திடீரென சகெத் மைனெனி தனது நீண்ட கால தோழி ஸ்ரீலட்சுமியிடம், திருமணம் செய்து கொள்ளலாமா? என்று ரோஜாப்பூ கொடுத்து கேட்க, அதை அவர் புன்னகை ததும்ப ஏற்றுக்கொண்டார்.
பின்னர் இருவரும் கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த ஆண்டு இறுதிக்குள் தங்களது திருமணம் நடக்கவிருப்பதாக மைனெனி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பேரணியின் போது தீக்குளித்து உயிரிழந்த அக்கட்சியின் தொண்டர் விக்னேஷ் நேற்று முன்தினமே தனது தற்கொலை முயற்சி பற்றி சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை எழும்பூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பேரணி நடைபெற்றது.
ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து புறப்பட்ட பேரணி எழும்பூரில் முடிவடைய இருந்தது. புதுப்பேட்டை அருகே பேரணி வந்து கொண்டிருந்தபோது விக்னேஷ்குமார் தீக்குளிக்க முயன்றார்.
உடனடியாக அருகில் இருந்த கட்சியினர் தண்ணீர் மற்றும் வேப்பம் இலை கொண்டும் தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விக்னேஷ்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்நிலையில் அவர் நேற்றே தனது தற்கொலை முயற்சி பற்றி சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், நாளை நடைபெறும் போராட்டத்தில் தற்கொலை போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.
ஊடகங்கள் தங்கள் டி.ஆர்.பி ரேட்டை உயர்த்திக் கொள்ள பேரணியை நேரடியாக ஒளிபரப்புச் செய்ய வேண்டுகிறேன்.
அப்போதாவது மானத் தமிழ் இனம் கொதித் தெழட்டும். மாணவர் போராட்டம் இம்மண்ணில் வெடிக்கட்டும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார். இதே போல் அவர் கைப்பட எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று (16.09) இரவு 10.24 முதல் நாளை அதிகாலை 2.23 மணி வரையில் சந்திரகிரகணம் தென்படும் என இலங்கை கோள்கள் மண்டலம் தெரிவித்துள்ளது.
முழு சந்திர கிரகண நிகழ்வு நள்ளிரவு 12.24 மணிக்கு தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெறவுள்ள சந்திர கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் எனவும், கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் இலங்கை கோள்கள் மண்டலம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கிரகணத்தின் போது சந்திரனில் ஏற்படும் வர்ண மாற்றங்களை அவதானிக்கும் சந்தர்ப்பம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்சீமை அமுனதோவ பிரதேசத்தில் தன்னுடைய தாயுடன் தோட்டத்துக்குச் சென்ற 4 வயது சிறுவன், கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் இன்று (16) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் தேவராஜ் சஜீவன் என தெரியவந்துள்ளது.
கிணற்றில் விழுந்து கிடந்த தோடம்பழத்தை எடுப்பதற்காகச் சென்ற போதே சிறுவன் கிணற்றில் தவறி விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் மெதியத்தென்ன பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மடுல்சீமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக வளாத்தினுள் இன்று (16.09.2016) மாலை 4.00 மணியளவில் திடீரென தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக வாளகத்தினுள் இன்று மாலை 4.00 மணியளவில் தீ விபத்தென்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபை தீயணைப்பு படையினருக்கு அறிவித்தமைக்கு அமைய தற்போது தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக சம்பவ இடத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா பாலமோட்டை ஊறாக்குளம் பகுதியில் விஷம் அருந்திய குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று (15.09.2016) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா பாலமோட்டை, ஊறாக்குளம் பகுதியில் வசித்துவந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான அந்தோணி பரமேஸ்வரன் (வயது 41) மேசன் தொழிலாளி. தினமும் மதுபோதையில் வரும் அவர் அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். பிள்ளைகள் மீதும் தாக்குதல் நடாத்தி வந்துள்ளார்.
கடந்த 04.09.2016 அன்று மனைவி இருவருடன் சண்டையில் ஈடுபட்டதுடன் வீட்டைவிட்டு வெளியேறி தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். எனினும் தாயார் கணவனுடன் போய் இருக்குமாறு தெரிவித்துள்ளார். இதை ஏற்றுக் கொள்ளாத மனைவி ஆச்சிபுரம் பகுதியில் தனது சகோதரியின் வீட்டிற்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் ஒரு பிள்ளையுடன் சென்று தங்கியுள்ளார்.
14.09.2016 அன்று கணவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருமாறு மனைவியிடம் கோரியுள்ளார். மறுநாள் 4.30 மணிக்கு வீட்டிற்கு வருவதாக மனைவி தெரிவித்துள்ளார். எனினும் மறுநாள் 15.09.2016 மாலை 3.30 மணிக்கு தொலைபேசியில் குறித்த நபர் தனது தாயின் தமபியுடன் தொடர்பு கொண்டு தான் விஷம் அருந்திவிட்டதாகவும் தன்னை காப்பாற்றுமாறும் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து இவரை பல இடங்களுக்குச் சென்று தேடியபோது கிடைக்கவில்லை பின்னர் சுந்தரபுரம் செல்லும் வீதியில் மதுபோதையில் காணப்பட்ட இவரை உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் குறித்த நபர் வரும் வழியில் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் மரண விசாரணையினை மேற்கொண்டதுடன் மதுவுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துடன் சடலத்தினை மனைவியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
காவிரி நதி நீர் பிரச்சினையில் கர்நாடகா மாநிலம் முழுவதும் கலவர பூமியாக மாறியுள்ளது. இதன் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பலான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மீண்டும் கர்நாடக மாநிலத்தில் கலவரம் ஏற்படகூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
நாள் தோறும் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை கண்டித்து கர்நாடகா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்பின் பிரகாரம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை தண்ணீர் திறந்து விட வேண்டும்.
இந்நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி காவிரி நதி நீர் குறித்து மீண்டும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. அதற்கு முன்னதாக 19ஆம் திகதி காவிரி மேலாண்மை வாரிய கூட்டம் நடைபெற உள்ளது.
குறித்த தினத்தில் முக்கியமான சில தீர்மானங்கள் எடுக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஒன்று தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்படலாம் அல்லது கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற தீர்ப்பு கூறப்படலாம்.
ஒருவேளை, கர்நாடகாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் மீண்டும் கர்நாடகாவில் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, மீண்டும் கலவரம் ஏற்படாமல் தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பதட்டமான பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் உளவுத்துறை கூறியுள்ளது.
குறிப்பாக தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீலாமுனைப்பகுதியில் நேற்று (15.09) இரவு இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளார்.
மாமாங்கம் பகுதியை சேர்ந்த விஜித் சோமசிறி என்னும் இளைஞனே இவ்வாறு வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்றவரை பின்தொடர்ந்த இருவர், இவரை சரமாரியாக வெட்டி கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
மொனராகல பிரதேசத்தில் ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. நீண்ட காலமாக மழையின்றி வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த மொனராகலயின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது.
மொனராகல சியம்பலாண்டுவ முத்துகண்டிய என்னும் பிரதேசத்தில் ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. கடுமையான காற்றுடன் இவ்வாறு ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு கிலோவுக்கு 0.25 சதமாக இருந்த சீனிக்கான விசேட இறக்குமதி தீர்வை, 1.75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி புதிய தீர்வை 2 ரூபாவாக இருக்கும். இதேவேளை, சிவப்பு சீனிக்கான இறக்குமதி தீர்வை, கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவாக இருக்கும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது கடந்த புதன்கிழமை இரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தேவைக்கு 10 வீதம் குறைவான வீதத்திலேயே சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்படுகிறது.
இதன்படி இலங்கையில் வருடம் ஒன்றுக்கு 50ஆயிரம் மெற்றிக்தொன் சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்படுகிறது.
இதேவேளை இறக்குமதி தீர்வை அதிகரிக்கப்பட்டாலும் சீனியின் சந்தை விற்பனை விலையில் மாற்றம் இருக்காது என்றும் தொடர்ந்தும் சீனி கிலோ ஒன்று 95ரூபாவாகவே இருக்கும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
சாப்பிட உணவகத்துக்கு போகும் போது கூட நமக்கு பிடித்த உணவு இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்புடன் போகும் மனிதர்கள் ஏராளம். வாழ்க்கையிலும் பல விடயங்களில் பல எதிர்ப்பார்ப்பு எல்லாருக்கும் உள்ளது.
குறிப்பாக தனக்கு வரப்போகும் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும், அவர் குணாதிசயம் எப்படிபட்டதாக இருக்க வேண்டும் என பெரிய எதிர்ப்பார்புடன் பெண்கள் இருப்பார்கள்.
நகைச்சுவை உணர்வு (Humor Sense) உள்ள ஆண்களை பெண்களுக்கு அதிகம் பிடிக்கும். சாதாரணமாக பேசும் விடயத்தை கூட நகைச்சுவை கலந்து பேசினால் பெண்களை எளிதில் கவரலாம்.
ஒரு தேனீரோ, பிரியாணியோ எதை மனைவி சமைத்து தந்தாலும் அதை கணவன் புன்னகையுடன் பாரட்ட வேண்டும். இது நம்மை நம் கணவர் பாராட்டுகிறாரே என்ற மகிழ்ச்சியை பெண்ணுக்கு தரும்.
மனைவி எது செய்தாலும் அதில் கணவன் தப்பு கண்டுபிடிக்க கூடாது, பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு எப்போதும் ஆண் மதிப்பளிக்க வேண்டும்.
மனைவிக்கு ஏதேனும் விடயத்தில் தோல்வி ஏற்பட்டால் அவருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் ஊக்கப்படுத்தி பேச வேண்டும்.
பெண்கள் மென்மையையே எதிர்பார்ப்பார்கள். அவர்களிடம் ஆண்கள் தன் கம்பீரம், திமிறு போன்ற விடயத்தை வெளிக்காட்ட கூடாது.
எதற்கெடுத்தாலும் பெண்களை சந்தேகப்படும் ஆண்களை அவர்களுக்கு பிடிக்காது. மனைவியை கணவன் முழுதாக நம்ப வேண்டும்.
மனைவிக்கு சர்ப்ரைஸ் ஆக பரிசு பொருட்கள் வாங்கி தரலாம். இது அவர்களை அதிகம் ஈர்க்கும்.