11 மாத பச்சிளம் குழந்தையை துஸ்பிரயோகப்படுத்திய காமுகன் கைது!!

abuse1

11 மாத குழந்தையை துஸ்பிரயோகப்படுத்திய 42 வயது காமுகன் ஒருவன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளான்.

டில்லியின் பொலிஸ் குடியிருப்புக்கு அண்மையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த குழந்தையின் பெற்றோர் கட்டிட தொழிலாளிகள் என்பதுடன் இவர்கள் பொலிஸ் குடியிருப்பு பகுதியில் குடிசை வீடொன்றில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை இரவு தூங்கிக் கொண்டிருந்த போது அவரது தாய் அருகில் உள்ள தனது பெற்றோருடன் கதைத்துக் கொண்டிந்துள்ளார்.

பின்னர் வீடு வந்து பார்க்கும் போது படுக்கையில் கிடந்த அவரது குழந்தை காணாமல் போயுள்ளது.

இதனையடுத்து குழந்தையின் தாய் அயலவர்களின் உதவியுடன், பொலிஸாருடன் இணைந்து உடனேயே குழந்தையை தேடியுள்ளனர்.

இதன்போது குழந்தை பாழடைந்த இடத்தில் இருந்து அதிகாலை 2 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தையை கடத்திய 42 வயது சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த குழந்தையை இரண்டு மணித்தியாலங்கள் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியுள்ளதாக சந்தேகநபர் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

இக்கட்டான தருணத்தில் அடுத்த கைப்பேசியை அறிமுகம் செய்ய தயாராகும் சம்சுங்!!

galaxy-a8

அப்பிள் நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக திகழும் சம்சுங் நிறுவனம் அண்மையில் பாரிய பிரச்சினை ஒன்றிற்கு முகம் கொடுத்திருந்தது.

அதாவது மிக்கலவடுக்கு வெடிப்பு சம்பவங்கள் காரணமாக தான் புதிதாக அறிமுகம் செய்த லட்சக்கணக்கான Galaxy Note 7 கைப்பேசிகளை மீளப் பெற்றிருந்தது.

இக் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதன் பிரதான நோக்கம் அப்பிளின் அறிமுகம் செய்துள்ள புதிய கைப்பேசிகள் மீதான பார்வையை குறைப்பதாகும்.

இந்த எதிர்பார்ப்பில் இடி விழுந்துள்ள நிலையில் உடனடியாக Galaxy A8 எனும் மற்றுமொரு கைப்பேசியினை அறிமுகம் செய்ய அந் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இப் புதிய கைப்பேசியானது 1080 Pixel கொண்ட தொடுதிரையினைக் கொண்டதாகவும், Exynos 7420 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகத்தினை கொண்டுள்ளது.

இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மனைவி சடலத்துடன் நடந்த நபருக்கு பஹ்ரைன் பிரதமர் அளித்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா?

h1

ஒடிசாவில் மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து 12 கிலோ மீற்றர் தொலைவு நடந்த தானா மஜ்கிக்கு பஹ்ரைன் பிரதமர் 9 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

ஒடிசாவில் கலாகண்டி மாவட்டத்தில் மெல்கர் கிராமத்தை சேர்ந்தவர் தானா மஜ்கி. இவரது மனைவி அமாங் தை (42) காசநேயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த ஆகஸ்ட் 23ம் திகதி அமாங் தையின் உடல் நிலை மோசமடைந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் கடன் வாங்கவே யாரும் இல்லாத நிலையில், மருத்துவமனையில் இருந்தும் போதிய உதவி கிடைக்காமல் தனது மனைவியின் உடலை 12 கி.மீ தொலைவு நடந்தே எடுத்து வந்துள்ளார்.

இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இதுகுறித்து கேள்வியுற்ற பஹ்ரைன் பிரதமர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா, மஜ்கியின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக அந்த நாட்டு தூதரகம் வழியாக விபரம் கேட்டிருந்தார்.

இந்த நிலையில், பஹ்ரைன் பிரதமர் சார்பில் மஜ்கிக்கு 9 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பஹ்ரைன் தூதரகம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று காசோலையை மஜ்கிக்கு வழங்கியுள்ளது.

இதற்கிடையே புவனேஷ்வர் நகரைச் சேர்ந்த கலீஙகா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் நிறுவனம், மஜ்கியின் மகள் சாந்தினி, சோனி, பிரமிளா ஆகியோருக்கு இலவசக் கல்வி வழங்க முன்வந்தது. மஜ்கியின் மகள்கள் தற்போது அங்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

2

இப்படியும் ஒரு பாலமா? ஆற்றின் குறுக்கே அந்தரத்தில் அவலப் பயணம்!!

bridge

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் ஒற்றை கயிற்றில் அந்தரத்தில் பயணம் செய்யும் அவலநிலை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா மாவட்டத்தின் கிராமத்தின் ஒரு பகுதியில் ஓடும் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் ஆற்றை கடப்பது மிகவும் சிரமமாக உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஆற்றைக் கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கிராம மக்களே தங்கள் முயற்சியில் ஆற்றின் இரு கரைகளில் உள்ள மரங்களின் குறுக்கே ஒற்றைக் கயிற்றைக் கட்டி தாற்காலிக பாலம் அமைத்துள்ளனர்.

இந்நிலையில், மிகவும் ஆபத்தான நிலையில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட அனைவரும் மரத்தின் மீது ஏறி ஒற்றைக் கயிற்றிலியே பயணித்து ஆற்றின் மறுபக்கத்திற்கு செல்கின்றனர். இதனால் அங்கு பாலம் கட்ட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மலேசிய விமானத்தின் இறக்கையை கண்டுபிடித்த அதிகாரிகள்!!

mh

மாயமான மலேசிய எம்.எச்.370 விமானத்தினுடைய இறக்கை தான்சானியா தீவு ஒன்றில் கரையொதுங்கியுள்ளதாக அவுஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்தில் தான்சானியாவின் பெம்பா தீவுகளில் கடற்கரையில் ஒதுங்கிய இந்த உதிரிப்பாகத்தை அருகிலிருந்த குடியிருப்பு வாசிகள் அடையாளம் கண்டனர்.

இந்நிலையில் அங்கு விரைந்து ஆராய்ச்சிக்கு உட்படுத்திய அவுஸ்ரேலியா போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள், இந்த பாகம் எம்.எச்.370 விமானத்தினுடையதே என உறுதிப்படுத்தினர்.

கடந்த 2014, மார்ச் மாதம் 8ம் திகதி உலகை உலுக்கிய அன்றைய தினத்திலிருந்து இந்தியப் பெருங்கடலின் பல்வேறு கடற்கரைகளில் சில பாகங்கள் ஒதுங்கியது. அவை மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கலாம் என்று சந்தேக அளவில் இருந்து வருகிறது.

எனினும் அவை எதுவும் இதுவரை உறுதியாக மலேசிய விமானத்தின் பாகம் தானா என்று கூற முடியவில்லை.

இந்நிலையில் தற்போது மீட்கப்பட்ட இந்த இறக்கை உதிரிபாகத்துடன் சேர்த்து மொத்தம் 5 உதிரிபாகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த ஆண்டு மடகாஸ்கர் ரீயூனியன் தீவுகளில் ஒதுங்கிய இன்னொரு இறக்கை போன்ற பாகம் எம்.எச். 370 விமானத்தைச் சேர்ந்தது என்று பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதைப் போன்று இன்று மீட்டு இருக்கும் இந்த புதிய உதிரிபாகம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. எவ்வாறெனினும் மலேசிய விமானம் மாயனமான விடையம் இன்னமும் மக்கள் மனதில் புதிறாகவே மாறிப்போயிருக்கின்றன.

கடந்த 48 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழப்பு 40 பேர் காயம்!!

acc

சாரதிகளின் நித்திரை கலக்கமே அதிக வாகன விபத்துக்களுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 48 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாக வாகன போக்குவரத்து பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித பெர்ணான்டோ தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று அதிகாலை கிளிநொச்சி பளை – தர்மங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்திற்கும் சாரதியின் நித்திரை கலக்கமே காரணம் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் ஐவர் உயிரழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையை கடந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

ac

14332945_1462658970418091_8175648161340718741_n 14333197_1462658527084802_368961942835969952_n 14344243_1462657990418189_8747027591376490540_n 14359114_1462659150418073_1061322964500845077_n 14364806_1462658630418125_5215236538439027143_n 14368870_1462658147084840_1388954507359821118_n 14368927_1462658747084780_3117479338649862061_n

தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் சிங்க தம்பதிக்கு மூன்று குட்டிகள் பிரசவம்!!

lion

தெஹி­வளை தேசிய மிரு­கக்­ காட்­சி­சா­லையில் மூன்று சிங்­கக்­ குட்­டி கள் பிறந்துள்ளன. விலங்கு பரி­மாற்ற திட்­டத்தின் கீழ் ஜேர்­ம­னியின் ஹெகன்பெக் மிரு­கக்­ காட்­சி­சாலை மற்றும் தென்­ கொ­ரி­யாவின் ஷியோல் மிரு­கக்­ காட்­சி­சாலை ஆகியவற்றினால் இரு சிங்­கங்கள் தெஹி­வளை மிரு­கக்­ காட்­சி­சா­லைக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தன.

இவ்­வாறு பெறப்­பட்ட தாய் சிங்­கத்­துக்கு சகீனா எனவும் தந்தை சிங்­கத்­துக்கு தோர் எனவும் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. இந்த சிங்க தம்­ப­திக்கே இம்­ மூன்று சிங்­கக்­குட்­டி­களும் பிறந்­துள்­ளன.

ஆகஸ்ட் 28ஆம் திகதி பிறந்த இந்த மூன்று சிங்­கக் ­குட்­டி­களும் சிறந்த தேகாரோக்கியத்­துடன் காணப்­ப­டு­வ­தாக தேசிய மிரு­கக் ­காட்­சி­சாலை திணைக்களத்தின் பதில் பணிப்­பாளர் நாயகம் தம்­மிகா மல்­சிங்க தெரி­வித்­துள்ளார்.

மேலும் இதற்கு முன்பு இத்­ தம்­ப­திக்கு பிறந்த சிங்­கக்­ குட்­டிக்கு அதன் தாய் பாலூட்டுதற்கு மறுப்பு தெரி­வித்து வந்­தி­ருந்­த­தா­கவும் ஆனால், தற்­போது பிறந்­துள்ள குட்டிகளுக்கு தாய் சிங்கம் விருப்பத்துடன் பாலூட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

160 கி.மீ. தூரம் காரை செலுத்திச் சென்ற 12 வயதுச் சிறுவன்!!

Boy aged 9 sits in driver's seat of parked car and imagines he's driving.

12 வய­தான சிறுவன் ஒருவன் சுமார் 160 கிலோ­மீற்றர் தூரம் காரை செலுத்திச் சென்ற சம்­பவம் ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றுள்­ளது. ஜேர்­ம­னியின் லிம்­பபாச் ஃப்ரோஹ்னோ நகரில் வசிக்கும் இச்­ சி­று­வ­னையும் 13 வய­தான அவனின் நண்­ப­னையும் காண­வில்லை என பொலி­ஸா­ரிடம் இச்­ சி­று­வனின் பெற்றோர் முறைப்­பாடு செய்­தி­ருந்­தனர்.

அதன்பின் மேற்­கொண்ட விசா­ர­ணை­யின்­போது, தனது தாத்தா, பாட்­டியின் வீட்டை அச்­ சி­று­வனும் அவனின் நண்­பனும் சென்­ற­டைந்­தமை தெரி­ய­வந்­தது.

12 வய­தான இச் ­சி­றுவன் ஒரு­வ­ரி­டமும் கூறாமல் தனது பெற்­றோரின் காரை சுமார் 160 கிலோ­மீற்றர் (100 மைல்) தூரம் காரை செலுத்திச் சென்­றதை அறிந்து பலரும் அதிர்ச்சிய­டைந்­தனர்.

வேகக் கட்­டுப்­பாடு எதுவும் இல்­லாத அதி­வேக நெடுஞ்­சா­லை­யொன்­றுக்­கூ­டா­கவும் இச்­ சி­றுவன் வெற்­றி­க­ர­மாக வாக­னத்தை செலுத்­தி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதிர்ஷ்­ட­வ­ச­மாக மோச­மான சம்பவம் எதுவும் நடை­பெ­ற­வில்லை என பொலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறி­யுள்ளார். இச் ­சிறுவன் 14 வய­துக்­குட்­பட்­டவன் என்­பதால், ஜேர்மனிய சட்டவிதிகளின் படி அவனுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

11,000 பேரின் ஆர்ப்பாட்டப் பேரணியை தனியாக தடுக்க முயன்ற சிறுவன்!!

boy

மெக்­ஸிக்­கோவில் நடை­பெற்ற ஓரினச் சேர்க்­கை­யா­ளர்­க­ளுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்டப் பேர­ணியில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் திரண்டு வந்­த­போது, 12 வய­தான சிறுவனொருவன் தனி­யாக வீதியில் நின்று அவர்­களை தடுக்க முயற்­சித்­துள்ளான்.

செலேயா நகரில் நடை­பெற்ற இப்­ பே­ர­ணியில் சுமார் 11,000 பேர் கலந்­து­கொண்­டனர். அப்­போது மேற்­படி சிறுவன் வீதியின் மத்­தியில் நின்­று­கொண்டு ஆர்ப்­பாட்­டத்தை நிறுத்­து­மாறு கோரினான்.

இச் ­சி­று­வனின் உற­வினர் ஒரு­வரும் ஓரினச் சேர்க்­கை­யாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சீனத் தாங்கி மனி­தரை இச்
சி­றுவன் நினை­வு­ப­டுத்­து­வ­தாக பலர் தெரி­வி­த்துள்­ளனர்.

1989 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நக­ரி­லுள்ள திய­னமென் சதுக்­கத்தில் ஆர்ப்பாட்ட­மொன்றை அடக்க வந்த இரா­ணுவத் தாங்­கி­க­ளுக்கு குறுக்­காக நபர் ஒருவர் தனி­யாக நின்று எதிர்ப்புத் தெரி­வித்தார்.

“தாங்கி மனிதர்” எனக் குறிப்­பி­டப்­படும் அந் நபர் யார் என்பதோ அவருக்கு என்ன நடந்தது என்பதோ இதுவரைத் தெரியவில்லை.

ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை!!

abuse

நுகே­கொ­டை­யி­லுள்ள ஆத­ர­வற்றோர் இல்­லத்தில் வளர்ந்து தற்­போது நலன்புரி நிலையமொன்றில் பணி­யாறும் பெண் ஒரு­வரை திரு­மணம் செய்து கொள்வ­தாக ஏமாற்றி அவரை பாலியல் துஷ்பிர­ யோகம் செய்த பின்னர் தப்பிச் சென்ற சந்­தேக நபர் ஒரு­வரை கைது செய்யும் நோக்கில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக நுகேகொடை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

சிறு வய­தி­லேயே பெற்­றோரை இழந்த குறித்த பெண் மீது போலி­யாக காதல் கொண்டதோடு அவரை திரு­மணம் செய்து கொள்­வ­தா­கவும் நப­ரொ­ருவர் உறுதியளித்­துள்ளார்.

உற­வி­னர்கள் யாரு­மில்­லாமல் ஆத­ர­வற்றோர் இல்­லத்தில் வளர்ந்த தன்­மீது அக்­கறை செலுத்த ஒருவர் கிடைத்து விட்­ட­தாக எண்ணி இப்­பெண்ணும் திரு­ம­ணத்­துக்கு சம்மதம் தெரி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து சந்­தேக நபர் அப்­பெண்ணை அழைத்துக் கொண்டு ஆலயம் ஒன்றுக்குச் சென்று பூஜை வழி­பா­டு­களில் ஈடு­பட்­டுள்ளார் பின்னர் சந்­தேக நப­ரான காதலன் அரு­கி­லுள்ள விடு­தி­யொன்­றுக்கு சென்று சற்று இளைப்­பாறி விட்­டு­வ­ருவோம் என அப்பெண் அழைத்து சென்று அவரை துஷ்­பி­ர­யோகம் செய்­துள்ளார்.

அதன்­பின்னர் குறித்த பெண் உறக்­கத்­தி­லி­ருந்த நேரம் பார்த்து சந்­தேக நபர் விடுதியில் இருந்த தப்­பிச்­சென்­றுள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது.

செய்­வ­த­றி­யாத பாதிக்­கப்­பட்ட பெண் இச்­சம்­பவம் தொடர்பில் நுகேகொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததனையடுத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆபாசக் காட்சிகளால் அதிர்ச்சியடைந்த ராதிகா ஆப்தே!!

radhika-apte

பிரகாஷ் ராஜ் ஜோடியாக ‘தோனி,’ கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. சமீபத்தில் வெளியான ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து இருந்தார். இந்தி, தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். கவர்ச்சி காட்சிகளில் ராதிகா ஆப்தே துணிச்சலாக நடிக்கிறார். அவரது ஆபாச படங்கள் இணையதளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு ஆடையில்லாமல் அவர் குளிப்பது போன்ற படங்கள் வந்தன. ஆடையை விலக்குவதுபோல் இன்னொரு ஆபாச படமும் வந்தது. ஹாலிவுட் படத்தில் நிர்வாணமாக நடித்த காட்சிகளும் வெளி வந்தன. கதைக்கு தேவைப்பட்டதால் அந்த காட்சியில் நடித்தேன் என்றும் இந்தியாவில் அதை நீக்கி விட்டு படத்தை திரையிடுவார்கள் என்றும் அவர் கூறினார். அந்த சர்ச்சை அடங்கும் முன் அனுராக் கஷ்யப் இயக்கிய குறும்படத்தில் அவர் நிர்வாணமாக நடித்த காட்சிகள் படம் திரைக்கு வருவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்தது. 20 நிமிடங்கள் அந்த ஆபாச படம் ஓடியது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரோ இந்த காட்சிகளை திருடி வெளியிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் அனுராக் காஷ்யப் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் ‘பார்ச்டு’ என்ற படத்தில் அவர் நடித்துள்ள இன்னொரு செக்ஸ் காட்சியும் இணையதளங்களில் பரவி உள்ளது. இதனை பலர் பதிவிறக்கம் செய்து பார்க்கிறார்கள். வாட்ஸ் அப்களிலும் அனுப்புகின்றனர்.

ராதிகா ஆப்தேவின் செக்ஸ் படம் என்ற பெயரில் அவர் நடித்ததாக வெளி வந்த ஆபாச காட்சிகளை தொகுத்து சி.டி. மற்றும் டி.வி.டிக்களாக மும்பையில் பலர் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த சி.டி.க்கள் அமோகமாக விற்பனையாவதாக கூறப்படுகிறது.

இதனால் ராதிகா ஆப்தே அதிர்ச்சி அடைந்து உள்ளார். தனது பெயரில் போலியாக அந்த செக்ஸ் சி.டிக்கள் விற்பனை செய்யப்படுவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

தங்கத்தினால் உருவாக்கப்பட்ட கழிப்பறை பொதுமக்கள் பாவனைக்காக திறப்பு!!

gold-toilet

நியூயோர்க் நகரின் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டுள்ள தங்கக் கழிப்பறை பொதுமக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது.

´அமெரிக்கா´ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த முழுமையாக இயங்கும் 18 காரட் தங்கத்திலானா கழிப்பறையை இத்தாலியக் கலைஞரும் சிற்பியுமான மௌரிஸியோ கேட்டெலான் உருவாக்கியுள்ளார்.

குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் குளியலறைகள் ஒன்றினில் வைக்கப்பட்டிருக்கும் இந்த தங்கக் கழிப்பறை முழுமையாக பயன்படுத்தப்படக்கூடியதே என்று நியு யார்க்கர் சஞ்சிகை கூறுகிறது.

இந்தப் படைப்பை “துணிச்சலான, மதிக்காத” படைப்பு என்று வர்ணிக்கிறது இந்த அருங்காட்சியகம்.

இதை பார்வையாளர்கள் தனிப்பட்ட முறையிலும், அந்தரங்கமான வகையிலும் பயன்படுத்த முடிவது என்பது ஒரு கலைப் படைப்பை முன்னெப்போதும் கண்டிரத வகையில் மிகவும் நெருக்கமாக பார்க்கும் அனுபவத்தைப் பார்வையாளர்களுக்குத் தரும் , என்கிறது குகென்ஹெய்ம் அருங்காட்சியகம்.

இத்தாலியில் மிலன் நகரில் வசிக்கும் கலைஞரும், ஒரு ட்ரக் ஓட்டுநரின் மகனுமான , கேட்டலான், இந்தப் படைப்பு பொருளாதார சமத்துவமின்மையால் உந்தப்பட்டது என்று இந்த ஆண்டு முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் காட்சிப் படைப்பு, 1917ல் , மார்சல் டுஷாம்ப் என்ற கலைஞர் அவரது பரிசோதனைப் படைப்பான “பவுண்டன்” என்ற பெயரிடப்பட்ட பீங்கானால் செய்யப்பட்ட சிறுநீர்க் கழிப்பிடத்தைக் காட்சிக்கு வைத்த போது ஏற்பட்ட பரபரப்புடன் ஒப்புமை காட்டி பேசப்படுகிறது.

இந்த தங்கக் கழிப்பிடத்தை உருவாக்கிய கலைஞர் கேட்டலானுக்கு 55 வயது. போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பால் விண்கல் ஒன்றால் தாக்கப்பட்டு விழுவது போன்ற ஒரு காட்சியைக் காட்டும் ” லா நோனா ஒரா” ( ஒன்பதாவது மணி நேரம்) போன்ற சர்ச்சைக்குரிய சிற்பங்களை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

t1

தொலைபேசி, இணையம் மீதான வரி அதிகரிப்பினால் மக்கள் பாதிப்பு!!

vat

தொலைபேசி மற்றும் இணையப் பாவனைகள் மீதான வரி அதிகரிக்கப்பட்டதனால் இளைஞர் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சோசலிச இளைஞர் ஒன்றியம் கூறியுள்ளது. அந்த சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

தொலைபேசி மற்றும் இணையப் பயன்பாடானது நாட்டு மக்களின் அத்தியவசிய தேவையாக மாறியுள்ளது என்று அந்த சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தொலைபேசி மற்றும் இணையத்தின் மீதான கட்டணத்துக்கு, நூற்றுக்கு 50 வீத அளவான வரி அதிகரிப்பினால் நாட்டின் இளம் சமூகத்தினர் உட்பட பொதுமக்களும் பெரும் பாதிப்படைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அசாதாரண வரி அதிகரிப்பை உடனடியாக நீக்க வேண்டும் என்று சோசலிச இளைஞர் ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வடமாகாண அவசர அம்புலன்ஸ் சேவையை சர்வதேச தரத்தற்கு உயர்த்த நடவடிக்கை!!

 
வடமாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் சுகாதார திணைக்களத்தால் அவசர அம்புலன்ஸ் சேவையொன்று நடாத்தப்பட்டு வருகின்றது. இச்சேவையின் கீழ் வடமாகாணத்தில் எப்பிரதேசத்திலும் 24 மணிநேரமும் விபத்துக்களின்போதும் அவசர மருத்துவ நிலைகளின் போதும் வைத்தியசாலைக்கு செல்வதற்கு அவசர அம்புலன்ஸ் சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

இத்திட்டத்தின் கீழ் 100 வைத்தியசாலைகளைச் சேர்ந்த அம்புலன்ஸ் வண்டிகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. இதனை சர்வதேச தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்ட்டுள்ள இலவச அம்புலன்ஸ் சேவையை மேலும் தரமுயர்த்த இலண்டன் அம்புலன்ஸ் சேவையின் உதவியை கோரியிருந்தேன். இதற்கமைவாக இச்சேவையை மேலும் வினைத்திறனுடைய சேவையாக மாற்றும் நோக்குடன் இச்சேவையில் ஈடுபடும் அம்புலன்ஸ் சாரதிகளுக்கும் உதவியாளர்களுக்கும் உயிர்காப்பு முதலுதவி சம்பந்தமான பயிற்சிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இதன் முதல் கட்டமாக ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் அம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்த இரண்டு வளவாளர்கள் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 12 வைத்திய அதிகாரிகளுக்கு 29.08.2016 முதல் ஒருவாரகால பயிற்சியை வழங்கினார்கள். அடுத்த கட்டமாக பயிற்சியை நிறைவு செய்த வைத்திய அதிகாரிகளினால் கடந்த 05.09.2016 முதல் ஒரு வாரகாலத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதல் தொகுதி அம்புலன்ஸ் சாரதிகளுக்கும் உதவியாளர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சகல அம்புலன்ஸ் சாரதிகளுக்கும் உதவியாளர்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்படும்.

இப்பயிற்சியை நடாத்துவதற்கான நிதி உதவியை அமெரிக்காவை தளமாகக்கொண்ட சர்வதேச மருத்துவ சுகாதாரக்கழகம் வழங்கியிருந்தது. இச்சேவை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்குடன் வடமாகாணம் முழுவதும் விளம்பர பதாதைகளை அமைப்பதற்கும் மேற்படி நிறுவனம் நிதி உதவியை வழங்கியிருந்தது என அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

amb2 amb3 amb4 amb5

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல்!!

 
இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று (15.09.2016) வவுனியா மாவட்ட செயலகத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோகண புஸ்பகுமார ஆகியோருக்கிடையில் இடம்பெற்றது .

காலை 10.00 மணிக்கு நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கை விமானப்படை ஆக்கிரமித்து வைத்திருக்கும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை பாடசாலை சமூகத்தினரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளரிடம் கே.கே.மஸ்தானால் கோரிக்கை வைத்ததற்கு அமைவாக பாடசாலைக்கு சொந்தமான அக்காணியை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதே நேரம் பாடசாலை மைதானத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் தெரிவித்தார்.

img_8099 img_8106 img_8107 img_8118 img_8120

வவுனியா செட்டிகுளம் வெடிவைத்ததுலாவல் குளம் வாய்க்கால் அணைக்கட்டு புனரமைப்பு!!

 
வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களினால் செட்டிகுளம் வெடிவைத்ததுலாவல் குளம் வாய்க்கால் அணைக்கட்டு அமைப்பு.

வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியின் கீழ் செட்டிகுளம் வெடிவைத்ததுலாவல் குளத்திற்கான வாய்க்கால் அணைக்கட்டு.(முறிப்புகட்டுதல்) அமைக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலம் நீர் பாய்வதற்கான வசதிகள் செய்யப்படாத நிலையில் வெள்ளத்தினால் பல ஏக்கர் நிலங்கள் அழிவுக்குட்பட்டு வருவதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்த முறைப்பாட்டை அடுத்து இவ்வாய்க்கால் புனரமைப்புப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பணியை நிறைவேற்றுவதற்கு நீர்பாசனப் பணிமனையினர் மற்றும் இப்பிரதேச கமக்காரர்களின் பூரண ஒத்துழைப்புக் கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

1 2 03 3 4