அமெரிக்க நாட்டில் 4 வயது குழந்தையை பலாத்காரம் செய்த முன்னாள் மேயர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஹப்பார்ட் நகர மேயராக ரிச்சார்ட் கீனம் என்பவர் கடந்த 2010 முதல் 2011 வரை பதவி வகித்துள்ளார். இந்நிலையில், இவரது வீட்டில் தங்கியிருந்து 4 வயது பெண் குழந்தையை இவர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
குழந்தையின் 4 வயது முதல் 7 வயது வரை தொடர்ந்து பாலியல் சித்ரவதைகளை செய்து வந்துள்ளார். ரிச்சார்ட்டின் சித்ரவதையை தாங்காத அச்சிறுமி அவரது மனைவியிடம் புகார் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்ட்டதும், விவகாரம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
எனினும், ‘சிறுமி தான் தன்னை பலாத்காரம் செய்ய தூண்டியதாகவும், தன்னை முழுக்க முழுக்க ஏசுநாதரிடம் ஒப்படைத்துள்ளதாக்வும்’ ரிச்சார்ட் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால், ரிச்சார்ட்டின் மனைவி மூலம் அனைத்து உண்மைகளும் வெளியில் வந்ததை தொடர்ந்து அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டது.
தற்போது ரிச்சார்ட் நீதிமன்றத்தில் 75,000 டொலர் செலுத்தி பினையில் விடுதலை செய்யப்பட்டார்.
சில வாரங்களில் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது ரிச்சார்ட்டிற்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபஞ்சத்தின் பால்வெளியில் கோள்களுக்கு மத்தியில் விண்கற்கள் அங்குமிங்கும் வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கின்றன. இவற்றில் சில கற்கள் பூமியிலும் ஏனைய கிரகங்களிலும் விழுவதுண்டு.
அப்படி விழும் விண்கற்கள் எரிந்து சம்பலாகி விடுவதுண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாரிய விண்கற்கள் பூமியில் விழுந்துள்ளன.
இதனால் பூமி பரப்பில் வாழ்ந்த டைனோசர் போன்ற உயிரினங்கள் அழிந்து போயின.
இந்த நிலையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் விழுந்த மிகப் பெரிய விண்கல் ஆர்ஜன்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய விண்கல் இதுவாகும்.
30 டொன் எடை கொண்ட இந்த விண்கல் மண்ணில் புதையுண்டு காணப்பட்டது. இயந்திரம் ஒன்றின் உதவியுடன் விண்கல் அகழ்ந்து எடுக்கப்பட்டது.
இந்த விண்கல் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் விழுந்திருக்கலாம் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் சோமு (வயது 52). டெய்லர். இவருடைய மனைவி சாரதா. இவர்களது மகள் தன்யா(23). இவர் பி.எஸ்.சி (ஐ.டி) படித்து விட்டு பொங்கலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சகீர் (30). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சோமுவின் பக்கத்து வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்து, அன்னூர் ரோட்டில் உள்ள தனது சித்தப்பா பேக்கரியில் வேலை செய்து வந்தார்.அப்போது தன்யா பள்ளியில் படித்து வந்தார்.
அப்போது தன்யாவிடம், சகீர் அடிக்கடி பேசுவது வழக்கம். பக்கத்து வீட்டை சேர்ந்தவர் என்பதால், சோமுவின் குடும்பத்தினரும் இதனை கண்டு கொள்ளவில்லை.பேசுவதை நிறுத்தினார்இந்த பேச்சும், பழக்கமும், சகீரின் மனதில் ஒருதலைக் காதலாக உருவெடுத்தது.
இந்த காதல் எண்ணங்களை அறிந்து கொள்ளாமல், தன்யாவும் அவருடன் பேசுவது உண்டு. ஆனால் இந்த பேச்சும், பழக்கமும் விபரீதம் ஆகிவிடக்கூடாது என்று, தன்யாவின் பெற்றோர், மகளிடம் அறிவுரை கூறினர்.இதனால் தன்யாவும், பெற்றோர் சொல்லை கேட்டு, சகீரிடம் பேசுவதை நிறுத்தி கொண்டார்.
சந்தர்ப்பம் பார்த்து ஒருநாள், தன்யாவை வழிமறித்து தனது காதலை சொல்லி உள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத தன்யா, தயவு செய்து என்னை மறந்து விடு. உன்னை பற்றிய எண்ணம் என்னிடம் துளிகூட இல்லை. நீ நினைத்தாலும், எனது பெற்றோர் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள். ஏனெனில் நீ வேறு மதம், நாங்கள் வேறு மதம் என்று கூறி விட்டு சென்று விட்டார்.
மீண்டும், மீண்டும் தொந்தரவுதன்யாவின் பேச்சில் நிலை குலைந்துபோன சகீர், வாழ்ந்தால் உன்னோடு தான் வாழ்வேன் என்று வைராக்கியத்துடன் மீண்டும், மீண்டும் தன்யாவை தொந்தரவு செய்துள்ளார். இது பற்றி அறிந்த தன்யாவின் பெற்றோர் சகீரை கண்டித்து உள்ளனர்.
இருந்த போதிலும் தன்யாவின் பெற்றோர், இந்த பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் அவளுக்கு, நல்ல மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் முடித்து விட வேண்டியது தான் என்று நினைத்தனர். அதன்படி அன்னூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தவரை தன்யாவுக்கு திருமணம் பேசி முடித்து நிச்சயம் செய்தனர்.
திருமணம் அடுத்த மாதம் நடப்பதற்கு தேதி குறித்து, திருமணத்துக்கு தடபுடலாக ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று தன்யாவின் பெற்றோர், தன்யாவை வீட்டில் இருக்க சொல்லி விட்டு, உறவினர் வீட்டுக்கு சென்றனர். வீட்டில் தன்யாவை தனியாக விட்டு விட்டு செல்வதால், அப்போது சகீர் வந்து பிரச்சினை செய்து விடுவானோ? என்று பயந்து வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு சென்று விட்ட னர். ஆனால் சகீர் இந்த விஷயத்தை எப்படியோ? தெரிந்து கொண்டார். வீட்டின் முன் புறத்தில் பூட்டப்பட்டு இருப்பதை அறிந்து, பின்புறமாக சென்று கதவை தட்டி உள்ளார்.
குத்திக்கொலை
இந்த நிலையில் தனது பெற்றோர் தான் வந்து கதவை தட்டுகிறார்கள் என்று அறிந்து, கதவை திறந்து உள்ளார். அப்போது சகீர் கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன்யாவை மாறிமாறி குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில், தன்யா கீழே சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இதைத்தொடர்ந்து சகீர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் வீட்டுக்கு வந்து பார்த்த தன்யாவின் பெற்றோர், மகள் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை அறிந்து கண்ணீர் விட்டு கதறினர்.
இது குறித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து சகீரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஒருதலை காதலால் படு கொலை செய்யப்பட்ட சென்னை சுவாதி, கரூர் மாணவி சோனாலி, தூத்துக்குடி ஆசிரியை பிரான்சினா, வரிசையில் தன்யாவின் பெயரும் சேர்ந்த துயரம் நிகழ்ந்துள்ளது.
முன்னாள் மேலதிக மன்றாடியார் அதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி சிதம்பரன்பிள்ளை துரைராஜா புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பல மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட சமூகவலைத் தளங்கள் வரிசையில் டுவிட்டரும் ஒன்றாகும்.
எனினும் இதில் தரப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் காரணமாக தொடர்ச்சியாக பாவிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கின்றது.
இதனைக் கவனத்தில் கொண்ட அந்நிறுவனம் அதிரடி மாற்றம் ஒன்றினை செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. அதாவது இதுவரை டுவிட் செய்யப்படும் கருத்துக்கள் 140 எழுத்துக்கள் என்ற வரையறை இருந்தது.
இவ்வரையறைக்குள் இணைய இணைப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தது.
எனவே இதனை மாற்றி இனி 140 எழுத்துக்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படவுள்ளதுடன், வீடியோ, புகைப்படங்கள், இணைய இணைப்புக்கள் என்பன கருத்தில் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய மாற்றமானது இம்மாதம் 19ம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது.
ரஷ்யா நாட்டில் ஆபாச இணையத்தளங்களை முடக்கி அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ரஷ்யாவில் ஆபாச இணையத்தளங்களை முடக்கும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு அடிக்கடி மேற்கொண்டு வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு குறிப்பிட்ட சில ஆபாச இணையத்தளங்களை முடக்கியது.
இதனை தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் உலகளவில் பிரபமான ஆபாச இணையத்தளங்களான Pornhub மற்றும் YouPorn என்ற இரண்டு தளங்களை அரசு அதிரடியாக முடக்கியுள்ளது.
இது தொடர்பாக அரசு அதிகாரிகள் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து ‘இந்த இணையத்தளங்களுக்கு பதிலாக மற்ற ஆபாச தளங்களை முடக்கமாமல் விடுவிக்கலாமே?’ என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு ‘இணையத்தளம் மூலமாக இதுபோன்ற காட்சிகளை பார்ப்பதை விட நிஜ வாழ்க்கையில் பார்க்க முயற்சி செய்யுங்கள்’ என அதிரடியாக பதிலளித்துள்ளனர்.
நடிகர் விக்ரம் நடித்த படத்திற்காக சென்னையிலிருந்து ஜேர்மனி செல்லும் விமான பயணத்தின் போது இசையமைத்ததாக ருசிகர தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,
எம்முடைய நண்பர் ஒளிப்பதிவாளர் ராஜசேகரின் பரிந்துரையின் பேரில் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கிய அரிமா நம்பி என்ற படத்தை பார்த்தேன். அப்போதே இயக்குநர் மீது எமக்கு ஒரு புரிதல் இருந்தது. அதனையடுத்து அதே ராஜசேகரின் சிபாரிசில் தயாரிப்பாளர் தமீன்ஸ் எம்மை சந்தித்தார்.
அவர் எம்மைச் சந்திக்கும் போது கடும் நெருக்கடியில் இருந்தார். அப்போது நான் அவரிடம் நீங்கள் இப்போது தான் இப்படி உணர்கிறீர்கள். இருமுகன் என்ற இந்த படம் முடிவடைந்து வெளியாகும் தருவாயில் நீங்கள் சந்தோஷமாக உணர்வீர்கள் என்று நம்பிக்கையுடன் பேசினேன். பேசிவிட்டு எம்முடைய பணிகளை கவனிக்கத் தொடங்கினேன்.
பிறகு இரண்டு நாள் கழித்து நான் எம்முடைய இசைக்குழுவிற்காக இசைக்கருவினை வாங்குவதற்காக ஜேர்மனி செல்ல தீர்மானித்து விமான நிலையத்திற்கு பயணமாவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தேன் அப்போது இயக்குநர் ஆனந்த் சங்கரும், தயாரிப்பாளர் தமீன்ஸும் எம்மை தொடர்பு கொண்டு சார் ஒரு டீஸர் வெளியிடவேண்டும்.
ஒத்துழைப்பு கொடுங்கள் என்று கேட்க, நான் மறுக்க, அவர் எம்மிடமே எம்முடைய வார்த்தைகளை திருப்பி சொல்ல, வேறு வழியில்லாமல் விமானத்திலேயே அந்த டீஸருக்கான பணிகளை மேற்கொண்டேன். ஏறத்தாழ பத்தரை மணி நேர உழைப்பில் அந்த டீஸர் தயாரானது. இதுவரை யாரும் ஒரு படத்திற்காக ஆகாயத்தில் பறந்த படியே பணியாற்றியிருக்கமாட்டார்கள். இதை நான் இருமுகனுக்காக செய்தேன். என்றார்.
இருமுகன் வெளியான முதல் வாரத்தில் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் 60 கோடி ரூபாய் மேல் வசூலாகியுள்ளதாக படத்தை வெளியிட்ட நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி, கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி கல்விபயிலும் ஜே. அனித்தா என்ற மாணவியே இலங்கை கோலூன்றிப் பாய்தலுக்கான சாதனையை புதுப்பித்துள்ளார்.
இவர் 3.35 மீற்றர் உயரத்திற்கு கோலூன்றிப் பாய்ந்து ஏற்கனவே இருந்த சாதனை புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இப் போட்டியிலேயே குறித்த சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்கள் அரசு விடுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் நகர்ப்புறங்களில் வேலை பார்த்த பலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். விடுமுறை முடிந்து நேற்று அவர்கள் பணிக்கு திரும்பியதால் அனைத்து பகையிரதங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில், கராச்சி நகருக்கு சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் முல்தான் அருகே இன்று அதிகாலையில் சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் மீது சரக்கு ரெயில் மோதி இறந்ததையடுத்து சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போதுதான் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் இரண்டு ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு ஒன்றன் மீது ஒன்று விழுந்தன.
தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் ரயில்வே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இவ்விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 150 இற்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சரக்கு ரயில் நிறுத்தப்பட்டதும் சிவப்பு சமிஞ்ஞை போடப்பட்டிருந்தது. பயணிகள் ரயில் சாரதி சமிஞ்ஞையை சரியாக கவனிக்காமல் சென்றதால் இவ்விபத்து நேர்ந்ததாக கூறப்படுகின்றது.
நான்கு மாத குழந்தை ஒன்றை கொலை செய்த சம்பவம் ஒன்று பலாங்கொடை பகுதியில் பதிவாகியுள்ளது.
பலாங்கொடை – பித்தலவல , அடவக்வல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் நேற்று தனது 4 மாத பெண் குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரழந்த குழந்தையின் சடலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குழந்தையின் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த பெண்ணை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவர் தொடர்பான மருத்துவ அறிக்கையை சம்ர்ப்பிக்குமாறும் பலாங்கொடை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வைத்தியசாலைக்கு சென்று முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து பலாங்கொடை பதில் நீதவான தேசபந்து சூரியபடபெந்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குழந்தை கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் தெரிவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹம்பாந்தோட்டை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது காணாமற்போயிருந்ததாகக் கூறப்பட்ட இளைஞர், பிக்கு ஒருவர் ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்த இளைஞர் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் நடைபெறும் ஊடக சந்திப்பில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
நெல்லைத் திருடியமைக்காக ஜி.ஜி.கயாசான் எனும் இளைஞர் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது காணாமற்போயிருந்தார்.
இந்த சம்பவத்தில் பொலிஸார் தவறிழைக்காத போதிலும், குறைபாடுகள் நிலவியுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்.வடமராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று வியாழக்கிழமை(15.09.2016) காலை விசேட அபிஷேக பூஜைகளுடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.
காலை- 8 மணிக்கு வேற்பெருமான், விநாயகப் பெருமான், ஆறுமுகப் பெருமான் ஆகிய முத்தெய்வங்களும் உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து காலை- 08.45 மணியளவில் விநாயகப் பெருமான், அதனைத் தொடர்ந்து ஆறுமுகப் பெருமான், வேற் பெருமான் ஆகிய முத் தெய்வங்களும் சித்திரத் தேரில் ஆரோகணம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பஞ்ச தீபாராதனை இடம்பெற்று வேற்பெருமானின் சித்திரத் தேரிற்கு முன்பாக மலை போல குவித்து வைக்கப்பட்டிருந்த சிதறுதேங்காய் அடியவர்களால் உடைக்கப்பட்டது.
பின்னர் சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு ஓதப்பட்டதைத் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க, ஆலயத்தின் காண்டாமணி ஓசை ஓம்…ஓம்… என ஒலிக்க முற்பகல்-09.45 மணியளவில் இரதபவனி ஆரம்பமாகியது. அடியவர்கள் எம்பெருமானின் வடத்தைப் பிடித்து எல்லாம் வல்ல சந்நிதி வேற்பெருமானின் திருவருளைப் பெறுவதற்கு முண்டியடித்ததைக் காண முடிந்தது.
தேர் பவனி இடம்பெற்ற போது பல அடியவர்கள் தம்மை மறந்த நிலையில் ஆடியும், பாடியும் எம்பெருமானை மெய்யுருக வழிப்பட்டனர். நூற்றுக் கணக்கான ஆண் அடியவர்கள் பறவைக் காவடி, செதில் காவடிகள் முதலான காவடிகள் எடுத்தும், அங்கப் பிரதட்சணம் செய்தும், அடியளித்தும் எம்பெருமானைப் பக்திப் பெருக்குடன் வழிபட்டனர்.
முத் தேர்களும் முற்பகல்-10.30 மணிக்கு இருப்பிடத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து பக்தர்கள் வரிசையில் காத்திருந்து எம்பெருமானை அர்ச்சித்து வழிபாடாற்றினர்.
ஆலயத்தின் தேர், தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் , பக்தர்களின் பாதுகாப்புக் கருதி 50 இற்கும் மேற்பட்ட பொலிஸாரும், சாரணர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்துடன் ஆலயச் சுற்றாடலிலுள்ள சந்நிதியான் ஆச்சிரமம் உட்பட 14 அன்னதான மண்டபங்களிலும் அன்னதானமும், ஆலய சுற்றாடலிலும், ஆலயத்திற்குச் செல்லும் வீதிகள் தோறும் தாக்க சாந்தி நிலையங்களும் அமைக்கப்பட்டு அடியவர்களின் தாகம் தீர்க்கும் கைங்கரியமும் இடம்பெற்றது.
இவ்வாலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த- 01 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ச்சியாக 15 தினங்கள் இடம்பெற்று வருவதுடன் நாளை-16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-08 மணிக்குத் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.
வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் (07.09.2016) அன்று சிவஸ்ரீ .நடராஜா ராஜாராம் குருக்கள் தலமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.பத்து நாட்கள் இடம்பெறும் இத் திருவிழாவில் இன்று 15.09.2016 வியாழக்கிழமை தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா ஒமந்தையில் இன்று(15.09.2016) காலை இடம்பெற்ற டிப்பர் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் இன்று (15.09.2016) காலை ஒமந்தை நொச்சிமோட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிசேகம் 26 வருடங்களின் பின்னர்இன்று காலை 15.09.2016 வியாழக்கிழமை 6.30 முதல் 8.30 வரையான சுப வேளையில் நூற்றுகணக்கான அடியவர்களின் அரகரோகரா முழக்கத்தின் மத்தியில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கே .பி. நந்தகுமார குருக்கள் தலைமையில் இடம்பெற்றது .
அதிகாலை முதல் கும்பாபிசேக கிரியைகள் ஆரம்பமாகி காலை எட்டுமணியளவில் கும்பாபிசேகம் இடம்பெற்றதோடு தொடர்ந்து திருக்கதவு திறந்து அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றது ..
கோவில் பற்றிய அறிமுகம்
கடந்த மூன்று தசாப்த காலத்தில் நாட்டில் நிலவிய அசாதாரண நிலைமை மற்றும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் இடப்பெயர்வுகள் என்பவற்றுக்கப்பால் ஆலய நிர்மாண வேலைகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிசேகம் இடம்பெறுகிறது .
A9 வீதியால் பிரயாணம் செய்யும் அனைவரது காதுகளிலும் கேட்டுபழகிய திருப்பணி நிதி சேகரிக்கும் புளியங்குளத்தை சேர்ந்த இராமநாதனின் இந்த வார்த்தைகள் அந்த ஆலயத்தை உங்கள் ஞாபகத்துக்கு கொண்டுவரும் .
சில்லறை இல்லாவிட்டால் பரவாயில்லை தாளாகவும் ஏற்றுகொள்ளப்படும்!
இந்த வார்த்தைகள் தான் புளியங்குளம் முத்துமாரியம்மன் ஆலயத்தை உங்கள் நினைவுக்கு கொண்டுவரும்.
இந்த முத்துமாரியம்மன் ஆலய திருப்பணியில் புளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த அடியார்கள் மட்டுமன்றி இலங்கை மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வடபகுதி நோக்கி பயணம் செய்யும் தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் வெள்ளையர்கள் என வேறுபாடின்றி அனைவரது பூரண ஒத்துழைப்புடனும் வாகன சாரதிகளின் தாராளமான பங்களிப்புடனும் ஆலயத்துக்குரிய திருப்பணி நிதியை இரவு பகல் பாராது தொடர்ச்சியாக தொண்டர்கள் ஒவ்வொரு பேருந்துகள் மற்றும் கண்டி வீதி வழியாக பயணம் செய்யும் அனைத்து வாகனங்களையும் மறித்து முத்துமாரி அம்பாளது விபூதி பிரசாதம் முதலியவற்றை வழங்கி பயணிகள் சாரதிகளிடம் திருப்பணி நிதியினை சேகரித்து இன்று அனைவரது பங்களிப்புடன் மிக அழகானதொரு ஆலயமாக வடிவமைக்கபட்டுள்ளது உண்மையிலே பாராட்டுதலுக்குரியது .
இலங்கையின் வரலாற்றில் முருகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அடுத்தபடியாக அனைத்து இன மத பேதமின்று அனைவரின் பங்களிப்புடன் அமைக்கபட்ட ஒரேயொரு கோவிலாக வவுனியாவின் புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் திருக்கோவில் விளங்குவது பெருமைக்குரிய விடயமாகும்.
தமிழ் நாட்டை சேர்ந்த சிற்பகலைஞர்களால் மிக அழகாக அமைக்கபட்டுள்ள இந்த ஆலயத்தை இனிவரும் காலங்களில் அனைவரும் தரிசித்து செல்லமுடியும்.
மேற்படி ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் சிவஸ்ரீ .நந்தகுமார குருக்கள் தலைமையில் இடம்பெறுகிறது.