Galaxy Note 7 கைப்பேசிகளை மாற்றிக்கொடுக்க தயாராகும் சாம்சுங்!!

note7rumor
சாம்சுங் நிறுவனம் அண்மையில் புதிதாக அறிமுகம் செய்திருந்த Galaxy Note 7 கைப்பேசி அந்நிறுவனத்திற்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. சார்ஜ் செய்யும்போது அவற்றின் மின்கலங்கள் வெடித்து சிதறியமையே பிரதான காரணம் ஆகும்.

இதனால் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான 2.5 மில்லியன் கைப்பேசிகளை அந்நிறுவனம் மீளப் பெற்றிருந்தது.இந்நிலையில் இவற்றில் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன்படி சாம்சுங் நிறுவனத்தின் தாய் நாடான தென் கொரியாவில் இச்செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 21ம் திகதி அமெரிக்காவிலும் இந் செயன்முறை மேற்கெள்ளப்படவுள்ளது. மேலும் ஏனைய நாடுகளில் இம் மாத இறுதியில் மீள் விற்பனை இடம்பெறவுள்ளது.இத்தகவலை சாம்சுங் நிறுவனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்னை பற்றி ஏதாவது சொல்லுங்கப்பா- விக்ரம் செய்த கிண்டல்!!

vikram
விக்ரம் மிகவும் ஜாலியான மனிதர். எந்த விழாக்களுக்கும் சென்றாலும் எல்லோரையும் பாராட்டி தான் இவருக்கு பழக்கம், முதலில் விழாவை தொகுத்து வழங்குபவரை பாராட்டி தான் பேசவே தொடங்குவார்.சமீபத்தில் இருமுகன் படத்தை வாங்கியவர்கள் சிலர் விக்ரமை சந்தித்து படம் சூப்பர், போட்ட பணம் 3 நாளில் வந்துவிட்டது என கூறியுள்ளனர்.

இவரை வந்து பார்க்கும் அனைத்து விநியோகஸ்தர்களும் இப்படியே கூற, விக்ரம் ஒரு கட்டத்தில் ‘என்னை பற்றியும் கொஞ்சம் பேசுங்கள்.இந்த படத்தில் நான் கஷ்டப்பட்டு நடிச்சுருக்கேன்பா’ என கிண்டலாக கூறியுள்ளார், இதை ஒரு தெலுங்கு சேனலில் விக்ரம் தெரிவித்தார்.

அமலாபாலை கேவலமாக விமர்சித்த ரசிகர் : தக்க பதிலடி கொடுத்த நடிகை!!

amala-paul-wiki
தமிழ் சினிமாவில் வெற்றிநடை போட்டு வரும் நடிகைகளில் ஒருவர் அமலாபால்.இடையில் இவர் தன்னுடைய கணவர் விஜய்யை விவாகரத்து செய்ய இருப்பது பெரிய பிரச்சனையாக பேசப்பட்டது.அண்மையில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அமலாபால் எடுத்த புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் அமலாபாலின் புகைப்படத்தை பார்த்து மோசமாக கமெண்ட் செய்ய, அதற்கு அவர் நச் விளக்கம் கொடுத்துள்ளார்.

இலங்கையிலுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு ஓர் அறிவித்தல்!!

case-of-the-pregnant-lady

சீகா வைரஸ் (Zika) தொற்றுள்ள நாடுகளுக்கு பயணிப்பதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. மேலும், சீகா வைரஸ் மற்றும் சிக்கன்கூனியா போன்ற தொற்றுக்களைத் தடுக்கும் நோக்குடன் இலங்கையின் பிரதான விமான நிலையங்கள் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகியன அதி அவதானத்திற்குரிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

சிங்கப்பூர், மலேஷியா, பிரேசில் மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த சீகா வைரசின் தொற்று அதிகமாக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

காதலியை கொடூரமாக 100 முறை கத்தியால் குத்திய காதலன் : காரணம் என்ன?

murder

இங்கிலாந்தில் ஒரு கிளாஸ் தண்ணி கேட்டு தராத காதலியை 100 முறை கத்தியால் குத்திய காதலனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தின் பிரிங்டான் பகுதியில் காதலன், காதலி அவர்களுடைய 2 வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளனர். காதலன் வேலைக்கு போகாமல் வீட்டிலே இருக்கும் காரணத்தினால், கணவன்- மனைவி இருவருக்கும் மத்தியில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.இதற்கிடையே சம்பவதினத்தன்று, காதலன் தன் காதலியிடம் ஒரு கிளாஸ் தண்ணீர் கொண்டு வா என்று கூறியுள்ளார்.

அதற்கு காதலி தண்ணீர் தர மறுத்துவிட்டதால், கோபம் அடைந்த காதலன், அருகில் இருந்த கத்தியை எடுத்து தன்னுடைய காதலியை சரமாரியாக 100 இடங்களில் குத்தி காயப்படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.உயிரை கையில் பிடித்துக் கொண்டு வந்த காதலி, பேருந்து நிலையம் சென்றதுடன் பேருந்தில் ஏறி மயங்கி விழுந்துள்ளார்.இதை பார்த்த ஓட்டுநர் உடனடியாக பொலிசுக்கு தகவல் அளித்துள்ளார், விரைந்து வந்த அதிகாரிகள் குறித்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர், அவரின் கழுத்து பகுதியில் கத்தியின் சிறு நுணிப்பகுதி உடைந்து ஒட்டியுள்ளதாகவும், இரண்டு நுரையீரலும் சேதமடைந்துள்ளதால் சுமார் 500 தையல் போட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதனைதொடர்ந்து குறித்த பெண் அளித்த தகவலின் பேரில் காதலனை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், இவருக்கு நீதிபதி 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

 

வவுனியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா!!(படங்கள்)

 
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா வவுனியாவில் நேற்று (18.09.2016) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

வவுனியா ஓமந்தையிலிருந்து ஆரம்பமான சைக்கிள் ஓட்டப் போட்டியை வடமாகாண சுகாதார அமைச்சர் ஆரம்பித்து வைத்திருந்தார்.

நேற்று காலைமுதல் ஆரம்பமான விளையாட்டு விழா வவுனியா நகர சபை மைதானத்தில் பிற்பகல் வரை சிறப்பாக இடம்பெற்றது.

உயிரிழை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விளையாட்டு விழாவானது உடற்பாதிப்புகுட்பட்ட, உளப்பாதிப்புக்குட்பட்ட பல வகைப்பட்ட மாற்றுத் திறனாளிகள் இந்த விழாவில் களமிறங்கியிருந்தனர்.

இந்தப் போட்டிகளில், வட மாகாணத்தில் வாழும் மாற்றுத் திறனாளிகள் பெரும் ஆர்வத்தோடு கலந்துகொண்டதுடன், அவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றமையும் ஆண் பெண் மற்றும் வயது வேறுபாடின்றி ஆர்வத்துடன் மாற்று திறனாளிகள் பங்குபற்றியதுடன் இவர்களுக்கு ஆதரவாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ்மாற்று திறனாளிகளும் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

14264978_1284913934886159_7586102754934770760_n 14292530_1789720907939645_191745964827007167_n 14316870_1284912408219645_2041901606523904355_n 14316966_1789720574606345_5921715565340172835_n 14317375_1284912631552956_7340835396578160971_n 14317558_1789720431273026_2312689498398194446_n 14322310_1789720427939693_5391259547477502846_n 14333214_1789720857939650_9099462916180087844_n 14344332_1284938874883665_1486789285834171812_n 14344340_1284938384883714_3767893086697597186_n 14344783_1285237891520430_3545993986943972633_n 14344802_1789720581273011_1258693537189051140_n 14344831_1789720384606364_593716380501055744_n 14344833_1284966944880858_999416463608273651_n 14352614_512374135618809_8356421387092684591_o 14354896_1285238141520405_7756228693182750369_n 14358700_1284966424880910_392310404682704626_n 14368699_1284913664886186_3845843929129540434_n 14369887_1284912464886306_281813692800613911_n 14369900_1284937624883790_3906959893193240931_n 14370149_1284966841547535_4374710583666023982_n 14370152_1284938998216986_1905989514045715082_n 14372323_512374148952141_4316668806964760314_o 14391004_1789720641273005_5335297189444682868_n dsc07784 dsc07793 dsc07798 dsc07800 dsc07804 dsc07805 dsc07815 dsc07824 dsc07834 dsc07838 dsc07843 dsc07845 dsc07870 dsc07873 dsc07875 dsc07893 dsc07928 dsc07932 dsc07948 dsc07956 dsc07959 dsc07962 dsc07965 dsc07968 dsc07976 dsc07982 dsc07983 dsc07999

இரு மகன்களும் கடலில் மூழ்கி மரணம் : பிரிவைத் தாங்க முடியாத பெற்றோர் தற்கொலை!!

dead

கடலில் குளிக்கச்சென்ற தமது பிள்ளைகள் இருவரும் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன தகவலை கேள்வியுற்ற  பெற்றோர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமொன்று மட்டக்களப்பு கல்குடா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கல்குடா பட்டியடிச்சேனை கிராமத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்குடா கடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த குறித்த இளைஞர்களின் பெற்றோர்களான சண்முகம் மற்றும் அவரது மனைவி யோகேஸ்வரி சண்முகம் ஆகியோர் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பட்டியடிச்சேனை கல்குடாவினைச் சேர்ந்த 20 வயதான சண்முகம் சதீஸ்குமார் மற்றும் 18 வயதான அவரது சகோதரர் சண்முகம் சுரேஸ் ஆகிய இரு இளைஞர்களும் கடலில் குளிக்கச் சென்ற நிலையில் காணமால்போயுள்ளனர்.

அவர்களுடன் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கிய மேலும் இரண்டு இளைஞர்களை பிரதேச மீனவர்களும் பொலிஸாரும் மீட்டு, வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் நீரில் மூழ்கி காணாமல் போன ஏனைய இரண்டு இளைஞர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சடலம் தற்கொலை செய்துகொண்டுள்ள பெற்றோரது மூத்த புதல்வரான சதீஷ்குமாரது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இரண்டாவது மகனது சடலத்தை தேடும் பணியில் கல்குடா கடற்படையினர் மற்றும் பிரதேச மீனவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1

இலங்கையை அச்சுறுத்தும் புதிய நோய், இருவர் பலி : மக்களுக்கு எச்சரிக்கை!!

A sick boy has his temperature taken; Shutterstock ID 7089490; PO: aol; Job: production; Client: drone

இந்தியா சென்று இலங்கை திரும்பிய பின்னர் காய்ச்சல் மற்றும் சுவாசம் தொடர்பான நோய் நிலைமை ஏற்பட்டால், உடனடியாக அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு, மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்தியாவுக்கு சென்று நாடு திரும்பிய இரு தாய்மார் உயிரிழந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக சிலாபம் வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நோய் காரணமாக பாதிக்கப்பட்ட சிலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்கள் தொடர் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நோயின் தொற்று தொடர்பில் ஆராய்வதற்காக அதன் மாதிரிகளை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த நோய் நிலைமை H1N1 இன்ஃபுளூவன்ஸா வைரஸ் இல்லை எனவும் இது கண்டுபிடிக்கப்படாத வைரஸ் எனவும் வைத்தியர் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

வனப்பகுதியில் வைத்து 12 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம் : சந்தேகநபர் கைது!!

A little girl poses for photographs to illustrate the topic of child abuse in Canberra, Monday, Oct. 28, 2013. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

12 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமியின் வீட்டில் கூலிக்கு வேலை செய்துள்ள ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர், சிறுமியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சந்தேகநபர் சிறுமியை ஏமாற்றி அடர்ந்த வனப்பகுதிக்கு அழைத்து சென்று இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சந்தேகநபரை மொரவக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ராம்குமாரை கொலை செய்தது பொலிஸாரே : காரணம் கூறும் தமிழச்சி!!

2

சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமாரை பொலிஸாரே திட்டமிட்டு கொலை செய்துள்ளதாக பிரான்ஸ் தமிழச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அதிரடி கருத்துக்களை வெளியிட்டு வரும் தமிழச்சி, ராம் குமார் மரணம் குறித்தும் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

ராம்குமார் நேற்று தற்கொலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, தமிழச்ச்சி தனது பேஸ்புக் பக்கத்தில், ‘சிறையில் ராம்குமாரை காவல்துறை கொலை செய்துள்ளது’ என்ற தலைப்பில் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுவாதி கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் இன்று 1 மணி நேரத்திற்கு முன்பு சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது காவல்துறை நடத்திய திட்டமிட்ட படுகொலை. நாளை ஜாமீன் மனு விசாரணையில் நிச்சயம் விடுதலை செய்யப்படுவான் என்ற தகவல் காவல்துறையினருக்கு கிடைத்ததும் இல்லாமல் பெரியார் இயக்க தொண்டர் படையினர் 150 பேர்களுக்கு மேல் தயாராக ராம்குமாரை பாதுகாக்க போகிறார்கள் என்ற தகவல்களை முன்கூட்டியே கிடைத்ததால் அதன் ஆபத்தை உணர்ந்து கொண்டு காவல்துறை ராம்குமாரை கொன்றுவிட்டது.

ராம்குமார் வெளியே வந்தால் காவல்துறையினர்தான் தன் கழுத்தை அறுத்தது என்கிற உண்மையை அறிவித்து விடுவான் என்ற பதற்றமே காவல்துறை சாகடிக்க காரணமாகவும் இருக்கிறது’ என அவர் தனது பேஸ்புக் பதில் தெரிவித்துள்ளார்.

tamilachi

கிளிநொச்சி பொது சந்தைத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் எவ்வளவு நஷ்டம் தெரியுமா?

fire

கிளிநொச்சி பொது சந்தைத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்தன இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகர சபையினால் நிருவகிக்கப்பட்டு வரும் இந்த சந்தைத் தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. இதில் 57 கடைகள் முழுமையாக தீயினால் அழிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், பொலிஸார், இராணுவம், விமானப் படை மற்றும் பிரதேச மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்பினால் இந்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

எனினும், வேகமான காற்றினால் தீ கட்டுப்பாட்டை இழந்து சென்றதனால் 57 கடைகள் முற்றாக அழிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகில் அதிகமாக இணைய பயன்பாடு உள்ள நாடுகளில் 86வது இடத்தில் இலங்கை!!

internet

உலகளாவிய ரீதியில் இணையத்தை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

உலக நாடுகளில் இணையம் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் வெளியான புதிய ஆய்வினை ஒப்பிடும் போதும், அதிக இணைய பயன்பாட்டாளர்களை கொண்ட நாடுகளில் 86வது இடம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

196 நாடுகளிலேயே இலங்கைக்கு 86வது இடம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாட்டில் இணையத்துடன் இணைந்துள்ள நபர்களின் எண்ணிக்கை 19 வீதமாகும். கையடக்க தொலைப்பேசிகளில் இணையத்தை பயன்படுத்துபவர்களும் இந்த பட்டியலுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

உலகின் நிலையான வீட்டு இணைய இணைப்புக்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 115வது இடம் கிடைத்துள்ளது.

இலங்கையிலுள்ள மக்கள் தொகையில் நூற்றுக்கு 3.1 வீதமானோர் நிலையான இணைய இணைப்பினை கொண்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

தொலைப்பேசி மூலம் இணையத்தளம் பயன்படுத்தும் எண்ணிக்கை 16 வீதமாகும். இதில் இலங்கைக்கு 135வது இடம் கிடைத்துள்ளது.

உலகின் அதிகமாக இணையம் பயன்படுத்தும் நாடுகளில் முதல் இடத்தை தென் கொரியா பிடித்துள்ளது. அங்கு 98 வீதம் இணைய பயன்பாடு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்கு பதிலாக இலத்திரனியல் அனுமதிச்சீட்டு!!

ticket

தற்போது நடைமுறையில் உள்ள புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்குப் பதிலாகஇலத்திரனியல் அனுமதிச்சீட்டினை அறிமுகப்படுத்த இலங்கைப் புகையிரத திணைக்களம்தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் புகையிரத நிலையங்களின் சேவைகளை இலகுவாக்க முடியும் என புகையிரதபொதுநிர்வாக அதிகாரி ஏ.பீ.ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த இலத்திரனியல் அனுமதிச்சீட்டுகளின் நிமித்தம் புகையிரத நிலையங்களுக்குஇரண்டு இயந்திரங்கள் வீதம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஒரு இயந்திரம் புகையிரத நிலையங்களின் அலுவலகங்கள் ஊடாக பயணிகளுக்குஅனுமதிச் சீட்டுகளை வழங்கவும், மற்றைய இயந்திரம் பயணிகள் தாமாகவே பணத்தினைசெலுத்தி அனுமதிச்சீட்டுகளைப் பெறுவதற்காக வழங்கப்படவுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

இன்னும் 6 மாதங்களுக்குள் இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது நடைமுறையில் உள்ள அனுமதிச் சீட்டுகளினால் புகையிரதநிலையங்களுக்கு கிடைக்கும் வருமானங்களை கணக்கிடுவதற்கு ஒரு மாதத்திற்கு மேலானகாலம் எடுப்பதாகவும், குறித்த இலத்திரனியல் இயந்திரப் பாவனையால் அதுஇலகுவாக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெற்றோருக்கு என்ன பதில் சொல்வேன் : ராம்குமாரின் வழக்கறிஞர் வருத்தம்!!

ramraj-with-ramkumar

ராம்குமாரை என்னுடைய மூத்த பிள்ளையைப் போல பார்த்துக்கொள்வதாக அவர்களின் பெற்றோரிடம் கூறியிருந்தேன். இனி என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை என்று அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் கூறியுள்ளார்.

பிணை கிடைத்த பின்னர் கொலையில் உள்ள முக்கியத்தடயங்களை வெளியே சொல்வதாக சொன்னார். அதற்குள் அவரை கொன்று விட்டனர் என்றும் ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மின் கம்பியை கடித்து அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கொண்டு சென்ற பிறகு மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக உறுதி செய்தனர்.

இந்நிலையில் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பார்க்க வந்த அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நேற்று காலை 11.30 மணி முதல் 1 மணிவரை ராம்குமாரை அவர் சந்தித்துள்ளார். ராம்குமாரின் பாதுகாப்பு பற்றி கேட்டதற்கு தான் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் நேற்று சிறை காவலர் விஜயகுமார் என்பவர் இட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளதால், திட்டமிட்டு ராம்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று வழக்கறிஞர் ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.

பார்வையற்றவர்களுக்கு பேசும் பதக்கங்கள்!!

11

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து பாராலிம்பிக் போட்டிகள் மிக சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த ஓர் சந்தர்பத்தையும் இது வழங்கி வருகின்றது.

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்கள் தங்களது பதக்கங்களை பற்களால் கடிப்பது சதாரணமான விடயம். இதன் மூலம் வீரர்கள் தங்கத்தை சோதனை செய்வதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போதைய பாராலிம்பிக் போட்டிகளில் பார்வையற்ற வீரர்கள் தங்களது பதக்கத்தை காதருகில் கொண்டு செல்வது வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள். இதற்கான விளக்கம் தற்போது ஒலிம்பிக் சம்மேளத்தினால் விபரிக்கபட்டுள்ளது.

இதன் மூலம் அவர்கள் தங்களின் பதக்கத்தை பார்க்க முடியாவிட்டாலும், அதை கேட்க முடியுமாக உள்ளது.

மேலும் இதற்காக பிரத்யேக முறையில் தயாரிக்கபட்ட வெண்கலப்பதக்கத்தில் 16 இரும்பு குட்டி பந்துகளும் வெள்ளிப்பதக்கத்தில் 20 பந்துகளும், தங்கப்பதக்கத்தில் 28 பந்துக்களம் காணப்படுகின்றது.

இதன்மூலம் சத்தங்கள் கூடிகுறையும் சந்தர்பத்தில் வீரர்கள் பதக்கங்களை கேட்டு அறியலாம் என கூறப்படுகின்றது.

12 13

பாரீஸில் ஈபிள் கோபுரத்தின் கீழ் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்!!

download

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் கீழ் இளம்பெண் ஒருவரை 3 புலம்பெயர்ந்தவர்கள் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரீஸ் நகரில் பெயர் வெளியிடப்படாத 19 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார்.

சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் 17 வயதான அல்ஜீரியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவருடன் இளம்பெண் பழகியுள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் கீழ் சந்திக்கலாம் என அந்த வாலிபர் பெண்ணை அழைத்துள்ளார்.

நடக்கவிருக்கும் விபரீதத்தை அறியாமல் அவரும் இளைஞர் அழைத்த இடத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, இளைஞர் மற்றும் மறைந்திருந்த மற்ற இருவர் என மூவரும் சேர்ந்து அப்பெண்ணை கட்டி தூக்கிச்சென்றுள்ளனர்.

ஈபுள் கோபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு பற்றையில் அவர்கள் ஏற்கனவே போர்வை போன்ற ஒரு ஆடையை தயாராக வைத்துள்ளனர்.

பின்னர், பெண்ணின் வாயை துணியால் கட்டிய அவர்கள் மூவரும் கூட்டாக அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு பிறகு பெண் மயக்கமாகியுள்ளார். மறுநாள் அதிகாலையில் நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பலாத்காரம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார் பாரீஸில் உள்ள 18 வது வட்டத்தில் மூவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், மூவரும் ஜேர்மனி நாட்டிற்கு தப்புவதற்கு தயாராக இருந்ததும், அவர்கள் மூவரிடமும் சட்டப்பூர்வமான ஆவணங்கள் எதுவும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

மூவரையும் சிறையில் அடைத்துள்ள பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.