இத்தாலிய கோடீஸ்வர கணவரிடமிருந்து தப்பிச்சென்ற யுக்ரைனிய முன்னாள் அழகுராணி!!

193571

யுக்ரைனிய முன்னாள் அழகுராணி ஒருவர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், தான் அமெரிக்காவில் உள்ளதாக தெரிவி த்துள்ளார்.

அனா ஸெயாச்கிவ்ஸ்கா எனும் இந்த யுவதி 2013 ஆம் ஆண்டு மிஸ் யுக்ரைன் அழகுராணி போட்டியில் முதலிடம் பெற்று மிஸ் வேர்ல்ட் யுக்ரைன் 2013 அழகுராணியாக தெரிவானவர்.

அவ் வருடம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற உலக அழகுராணி போட்டியில் யுக்ரைன் சார்பாக இவர் பங்குபற்றியிருந்தார். பின்னர் இத்தாலிய கோடீஸ் வரரான ஜியான்லுகா சேர்வேராவை அனா ஸெயாச்கிவ்ஸ்கா திருமணம் செய்தார். இவர்கள் இத்தாலியில் வசித்து வந்தனர். எனினும், இவர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டதால் கணவர் ஜியான்லுகாவிடமிருந்து அனா பிரிந்து சென்றார்.

இதையடுத்து தனது மனைவி அனா ஸெயாச்கிவ்ஸ்கா காணாமல் போய் விட்டார் என கடந்த ஜூலை மாதம் சேர்வேர ஜியான்லுகா முறைப்பாடு செய்திருந்தார்.

அதன்பின், மற்றொரு ஆணுடன் அனா ஸெயாச்கிவ்ஸ்கா காணப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருப்பதை சேர்வேரா அறிந்துகொண்டார். இதையடுத்து, அனாவுக்கு எதிராக ஜியாலுன்கா வழக்குத் தொடுத்தார். தன்னி டமிருந்து பிரிந்து சென்றதன் மூலம், திருமணத்துக்கு முன்னர் தம் இருவருக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அனா மீறிவிட்டார் என இவ்வழக்கில் ஜியான்லுன்கா குற்றம் சுமத்தியிருந்தார்.

7000 அமெரிக்க டொலர்களையும் (10 இலட்சம் ரூபா) செல்லிடத் தொலை பேசியையும் அனா திருடிச் சென்றுவிட்டதாகவும் சேர்வேரா முறைப்பாடு செய்துள்ளர்.

‘புதிய காற்று வாங்குவதற்காக’ தான் செல்வதாக தன்னிடம் அனா கூறினார் எனவும் ஆனால், அவர் மீண்டும் திரும்பி வரவில்லை எனவும் இத்தாலி அதிகாரிகளிடம் 45 வயதான சேர்வேரா ஜியலுன்கா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது கணவர் ஜியாலுன்காவிடமிருந்து தான் தப்பி வந்து ள்ளதாக 24 வயதான அனா ஸெயாச்கிவ்ஸ்கா கூறியுள்ளார். நியூயோர்க் வீதிகளில் நடக்கும்போது தான் நிம்மதியை உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனா ஸெயாச்கிவ்ஸ்கா காணாமல் போய்விட்டார் என சேர்வேரா செய்த முறைப்பாடு குறித்து அனா பரிகாசம் செய்துள்ளார். ‘நான் எங்கே இருக்கிறேன் என்பது அவருக்குத் தெரியும்’ என அனா தெரிவித்துள்ளார்.

anna-zaiachkivska

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்ட மகளை பொறாமை காரணமாக கொலை செய்த நபர்!!

SYRACUSE, N.Y. -- A New York man has pleaded guilty to killing his toddler daughter with a wooden baseball bat before burning her body and dumping her remains in an upstate waterway. Twenty-five-year-old Ryan Lawrence pleaded guilty Thursday to first-degree murder in a plea deal with Onondaga County prosecutors. Lawrence admitted beating to death his 21-month-old daughter Maddox outside Syracuse in February. Authorities say he burned the girl's body in a fire pit, then tied the remains to a cinder block that he dumped in Onondaga Creek in Syracuse. The child's body was found by police divers about 36 hours after an Amber Alert was issued for the missing child. Onondaga County District Attorney Bill Fitzpatrick told CBS affiliate WRGB the young girl had battled and beaten cancer in her short life, describing her as a fighter. Fitzpatrick said Lawrence alluded to jealousy over the attention his daughter was getting as a possible motive in the murder. Prosecutors say the baby's family agreed to the plea d

 

பிரிட்­டனைச் சேர்ந்த நபர் ஒருவர் 21 மாத வய­தான தனது மகளை பேஸ்போல் மட்டையால் அடித்துக் கொலை செய்­துள்ளார்.

பொறாமை கார­ண­மா­கவே இக்­கொ­டூரக் கொலையை செய்­த­தா­கவும் ரையன் லோரன்ஸ் எனும் 25 வய­தான நபர் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

இக் ­கு­ழந்­தையின் கண்ணில் புற்­று நோய் ஏற்­பட்­டி­ருந்­தது. எனினும் இக்­ கு­ழந்தை குண­ம­டைந்­த­வுடன் இக் ­கு­ழந்தை பலரின் கவ­னத்­தையும் ஈர்த்­தமை தனக்குப் பொறா­மையை ஏற்­ப­டுத்­தி­ய­தாக அவர் கூறி­யுள்ளார். கடந்த பெப்­ர­வரி மாதம் இக் ­கொலை இடம்­பெற்­றது.

இக் ­கு­ழந்­தையை தான் பேஸ்போல் மட்­டையால் அடித்துக் கொலை செய்­தபின் அதன் உடலை தீக்­கி­ரை­யாக்­கி­ய­தா­கவும் அவர் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

ரையன் லோரன்­ஸுக்­கான தண்­டனை அடுத்த மாதம் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது. குறைந்த பட்சம் 25 வருட சிறைத் தண்டனையை அவர் எதிர்நோக்குகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நியூயோர்க் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் இனங்காணப்பட்டார்!!

newyork

கடந்த சனிக்கிழமை மென்ஹேடன் ச்செல்சி பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரை நியூயோர்க் அதிகாரிகள் இனங்கண்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் வம்சாவளி அமெரிக்க பிரஜையான 28 வயதுடைய அஹமட் கான் ரஹாமி என்பவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் புகைப்படத்தை அமெரிக்க பொலிஸ் திணைக்களம் வௌியிட்டுள்ளது.

இதேவேளை எலிசபேத்தில் நியூஜேர்சி பொலிஸாரால் வெடி பொருள் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

நியூ ஜேர்சி ரயில் நிலையத்திற்கு அருகில் கண்டறியப்ட்ட சந்தேக பொருளை ரோபோவின் உதவியுடன் பரிசோதிக்க முற்பட்ட வேளையில் அது வெடித்து சிதறியதாக அந்த பகுதிக்கான மேயர் கிறிஸ்டியன் பொல்வாக் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அமெரி்க்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தெருவோர கமராக்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2015 உயர்தரப் பரீட்சையின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வௌியாகும்!!

ugc

2015 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சையின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வௌியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இதனடிப்படையில் வெட்டுப்புள்ளிகள் இன்று முற்பகல் வௌியிடப்படவுள்ளதாக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் பீ எஸ் எம் குணரத்ன குறிப்பிட்டார்.

வவுனியா இளைஞன் சவுதியில் தற்கொலை : காரணம் என்ன?

sucide1

வவுனியா 1ம் ஒழுங்கை விநாயகபுரம் பாரதிபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரகுமார் சதீஸ் என்பவரே சவுதியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வவுனியா விநாயகபுரம் பாரதிபுரத்தைச் சொத்த இடமாகக்கொண்ட சதீஸ் என்பவர் வயது(24) கடந்த ஆண்டில் இருந்து சவுதிஅரேபியாவின் ரியாத் என்னும் இடத்தில் சாரதியாக கடமையாற்றிவந்தார்.

இந்நிலையில் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.09.2016)அன்று இலங்கை நேரம் அதிகாலை 5.30 மணியளவில் அவர் தங்கியிருந்த அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் இவரது சடலத்தை இலங்கைக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் முகநூல் காதல் விவகாரத்தால் இவ் இளைஞன் தற்கொலை செய்துகொண்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

fullsizerender

நாடு கடத்தப்படுவாரா தமிழச்சி?

tamil

சுவாதி படுகொலை சம்பவத்தையடுத்து அனைவராலும் அறியப்பட்டவராக இருக்கும் தமிழச்சி, குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார்.

குறித்த கொலை சம்பவம் தொடர்பில் இவ்வளவு விடயங்களை தெரிந்து வைத்துள்ள தமிழச்சிக்கு இன்னும் முழுமையான விடங்கள் தெரியக் கூடும்.

இந்நிலையில், தமிழச்சி முறைப்படி பிரான்ஸ் பொலிஸாரிடமோ அல்லது பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்தியத் தூதுவராலயத்திலோ இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்திருக்க வேண்டும்.

மாறாக அவர், இவர் சமூக வலைதளங்களில் இது குறித்த கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார். இந்த விடயம் குறித்து பிரான்ஸ் பொலிஸார் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தமிழச்சியின் பின்னணியில் இயங்கும் அனைவரும் விசாரணை வலயத்தில் இருப்பதாக பிரான்ஸில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழகத்துக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், தமிழக பொலிஸாரை சந்தேக வட்டத்துக்குள் கொண்டு வந்துள்ள தமிழச்சி நாடுகடத்தப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.

தங்கம் எப்படி உருவானது என்று உங்களுக்குத் தெரியுமா?

gold

தங்கம் என்பது பெரும் மதிப்பு வாய்ந்த தனிமங்கள். திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பெண்களை அலங்கரிப்பது தங்கம் தான்.

அப்படிப்பட்ட தங்கம் எப்படி உருவானது என்று உங்களுக்கு தெரியுமா?

நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பழமையான படிமங்களை ஆராய்ச்சி செய்த போது, காமா கதிர்வீச்சு வெடிப்புகள் காரணமாக பெரிய நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டதால் தான் தங்கம் உருவானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதல்களினால் ஏற்பட்ட தங்கத்தின் எடையானது, 10 நிலவுகளின் எடைக்குச் சமமானது என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சியின் மூலம் கூறுகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் வீரர் நுவான் குலசேகர கைது!!

nuwan

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான நுவான் குலசேகர, சற்றுமுன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கொழும்பு, கடவத்தையில் இடம்பெற்ற வாகன விபத்தின் காரணமாகவே நுவான் குலசேகர கைதானார்.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த நுவான் குலசேகரவின் வாகனம், மோட்டார் சைக்களுடன் மோதி விபத்தை ஏற்படுத்திய நிலையில் 28 வயதானவர் பலியானார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குலசேகர,மஹர நீதிவான நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

உலகில் சிறந்த ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு!!

maithiri

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலகில் சிறந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக பேரவை கடந்த 17ம் திகதி வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரப்படுத்தலை மேற்கொண்ட சர்வதேச சிவில் சேவைகள் அமைப்பின் தொழிற்நுட்பக் குழுவின் நிபுணர்கள், 2015ம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்ற காலத்தில் இருந்து அவர் முன்னெடுத்த நடவடிக்கைகள் ஆராய்ந்து அவரை சிறந்த ஜனாதிபதியாக அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி பதவியேற்ற நாளில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் துரிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளை பலர் வரவேற்றுள்ளனர்.

நாடு மற்றும் ஜனாதிபதி தொடர்பான அரசியல், பொருளாதார மற்றும் சமூக குறியீடுகளுக்கு அமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உலக தலைவர்கள் அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும் இலங்கையின் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் அனைத்து நகர்வுகளையும் விமர்சித்து வருகின்றன.

தன்னை உலகில் சிறந்த ஜனாதிபதியாக தெரிவு செய்தமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, இது போன்ற ஒரு மதிப்பு மிக்க அங்கீகாரம் கிடைத்தமை குறித்து பெருமையடைகின்றேன்.

எனது அரசாங்கத்தின் கடின உழைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஊடாக இந்த சாதனை பெறப்பட்டதாக நான் நம்புகிறேன்.

தமது ஜனாதிபதியாக எனது கடமைகளை செய்ய இலங்கை மக்கள் சிறந்த சூழலை உருவாக்கி கொடுத்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ராம்குமார் மரணம் தற்கொலை அல்ல படுகொலை : ஆதாரம் இதோ!!

tamilachi

சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று தற்கொலை செய்துக்கொண்டதாக சிறை காவலர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் குற்றவாளி இல்லை என்று கூறி வந்த தமிழச்சி, ராம்குமார் தற்கொலை செய்தி குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவேற்றியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,

“சுவாதி படுகொலை மற்றும் ராம்குமார் படுகொலை என்பவற்றுக்கு சிபிஐ விசாரணை வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட ராம்குமார் உடலை பரிசோதித்து விட்டு இராயபேட்டை அரசு மருத்துவர் அளித்த மருத்துவச் சான்றிதழில், “ராம்குமாரின் இடது கண்ணில் காயம், இடது மார்பில் காயம், இடது கையில் காயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காயத்தின் அடையாளம் மற்றவரின் தாக்குதல் காரணமாகவே ஏற்படுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘ராம்குமார் மரணம் தற்கொலை அல்ல படுகொலை’ என்பதற்கு அரசு மருத்துவர் சான்றிதழ் வலுவான ஆதாரமாக மாற்றப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணைக்கு சமூக ஆர்வலர்கள் உட்பட அனைவரும் வலியுறுத்த வேண்டும்.” என்று தமிழச்சி பதிவிட்டுள்ளார்.

– Web Dunia-

சுவாதியை எனக்கு தெரியாது : இறக்கும் முன்னர் ராம்குமார் கைப்பட எழுதிய கடிதம்!!

1474263186-6781

சுவாதி படுகொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று சிறையில் மரணமடைந்தார்.

ராம்குமாரின் இந்த மரணம் தற்கொலை என்று பொலிஸாரும் சிறைத்துறையின் தரப்பிலும் கூறப்படுகின்றது. ஆனால் இது கொலை என பலரும் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று கடந்த 10ஆம் திகதி சிறையில் உள்ள ராம்குமாருக்கு அவரது வழக்கறிஞர் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி ராம்குமாரின் பதில் கடிதத்தையும் பெற்றுள்ளது.

தற்போது ராம்குமார் இறந்துவிட்டதால், சிறையில் இருந்து ராம்குமார் அனுப்பிய அந்த கடிதத்தை குறித்த தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் உள்ள தகவல்களால் பொலிஸ் தரப்பு கிலியில் உள்ளது. அந்த கடிதத்தில் ராம்குமார் தெரிவித்திருப்பதாவது,

“சுவாதி என்ற பெண்ணை யாரென்றே எனக்கு தெரியாது. நான் சுவாதியை ஒரு தலையாக காதலித்தேன் என்று கூறுவதில் உண்மை இல்லை. இந்த விஷயத்தில் என்னை எதற்காக கைது செய்தனர் என்பது எனக்கு தெரியாது, ஆனால் இந்த விவகாரத்தில் பெரிய தலைகள் சம்பந்தப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“சுவாதியின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் யாரையும் எனக்கு முன்னதாக தெரியாது, சுவாதியை நான் பின் தொடர்ந்து செல்லவில்லை, இந்த வழக்கில் சாட்சியமாக இருக்கும் பிலாலையும் எனக்கு தெரியாது.”

“உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே என்னை குற்றவாளியாக்க பொலிசார் முடிவு செய்துள்ளனர். மேலும் என்னை கைது செய்ய வந்தபோது பொலிசாரே எனது கழுத்தை அறுத்தனர். இந்த கொலையின் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்.”

என பல்வேறு பரபரப்பு தகவல்களை ராம்குமார் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

letter

சுவாதி படுகொலை மேலும் சில அதிர்ச்சித் தகவல்கள்!!

swathi

சுவாதி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக வட்ஸ் அப்பில் செய்தி உலா வருகிறது.

அதில், பாஜக தலைவர்களை கொன்று சிறுபான்மை சமூகம் மீது பழி சுமத்துவதற்கும் அதை வைத்து ஒரு மாபெரும் கலவரத்தை ஏற்படுத்தவும் சங்பரிவாரால் நியமிக்கப்பட்டவர் தான் பாஜக-வை சேர்ந்த கருப்பு முருகானந்தம், அதில் முதல் பலி ஆடு ஆடிட்டர் ரமேஷ், கருப்புவின் கூலிப்படை ஆட்கள் மீனாட்சி புரத்தை சேர்ந்த மூன்று பேர் கறுப்பு கொடுக்கும் அசைன்மெண்டை கச்சிதசமாக முடிப்பதில் வல்லவர்கள், இவர்கள் மூலம் தான் ஆடிட்டரை வெற்றிகரமாக கொலை செய்து அதை இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்தி வெற்றியும் கண்டனர்.

சுவாதி இஸ்லாமியரை காதலிக்கிறார் என்ற உண்மை தெரிந்தவுடன் விஸ்வ ஹிந்து பரிஷத் யை சேர்ந்த சுவாதியின் சித்தப்பா கருப்புவின் துணையை நாடுகிறார், சுவாதி கருப்புவின் ஆட்களால் பலமுறை மிரட்ட படுகிறார் ஒரு கட்டத்தில் கருப்புவின் ஆட்களால் சுவாதி கொலை செய்யப்படுகிறார்.

கொலை செய்யப்பட போகும் நாள் அன்று ராம்குமார் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அவருடைய ஊர் காரர்களான கொலையாளிகளை ஏதேச்சயாக சந்திக்கிறார், ஊர் காரர்கள் என்ற பாசத்தால் நிலைமை தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறர்

தமிழச்சி சொன்ன கொலையாளிகள் மூன்று பேரும் ராம்குமாரும் பேசி கொண்டு இருக்கும் பொழுதே சுவாதி அங்கு வர கொலையாளிகளால் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டது போன்று அதே முறையில் வெட்டி கொலை செய்யப்படுகிரார் சுவாதி, இதை சற்றும் எதிர்பாராத ராம் குமார் தலை தெறித்து எதிர் பக்கமாக ஓடுகிறார் அது தான் நாம் பார்த்த வீடியோ.

முறையாக புலன் விசாரணையை ஆரம்பித்த போலீஸ் அதிகாரிகளுக்கு உண்மை நிலவரம் தெரியவர இதை அறிந்து கொண்ட சங்பரிவார் தலைவர்கள் பொதுமக்கள் மத்தியில் பிலால் தான் கொலைகாரன் என்று உண்மைக்கு புறம்பான தவறான தகல்வல்களை பரப்புகின்றனர்.

போலீஸ் தரப்பில் என்ன விசாரணை செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக பாஜகவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற வக்கீலை வேவு பார்க்க அனுப்புகின்றனர்.

மேலும் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி அரசு அதிகாரிகளும், சங்பரிவார் கூட்டு சேர்ந்து எங்கே ராம்குமார் ஜாமீனில் வெளிவந்து உண்மையை கூறிவிட்டால் பிரச்சினை ஆகிவிடும் என்று ராம் குமார்கதை முடிக்கப்பட்டு விட்டது.

உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் ஆடிட்டர் கொலை சம்பந்தப்பட்ட செய்தியும் வெளியே வரும். அதில் போலியாக கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்கள் விடுதலை பெறுவார்கள், காவிகளின் உண்மைமுகம் மக்கள் மத்தியில் தெரியவரும் என்ற காரணத்தினால் காவிகளின் மேலிடத்தில் இருந்து அழுத்தம் வரவே இன்று ராம் குமார் கதை முடிக்கப்பட்டு சுவாதி கொலை வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு பாஜக-வின் துறைமுக கழக பொறுப்பாளர் மற்றும் கூலிப்படை தலைவன் கருப்பு முருகானந்தம் காப்பற்றப்பட்டு இருக்கிறான்.

கர்நாடகாவில் மீண்டும் ஒரு தமிழர் மீது தாக்குதல் : அதிர்ச்சி வீடியோ!!

attack

கர்நாடகாவில் மீண்டும் தமிழக லொறி டிரைவர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டதை கண்டித்து கர்நாடகாவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மாநிலம் முழுவதுமே போர்க்களம் போல் காட்சியளித்த நிலையில், காவல்துறை மற்றும் பாதுகாப்பு துறையினரின் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் மீண்டும் தமிழகத்தைச் சேர்ந்த லொறி டிரைவர் ஒருவர் தாக்கப்படுவதை போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் இயல்புவாழ்க்கை திரும்பும் நிலையில் தமிழர் ஒருவர் தாக்கப்பட்டிருப்பது மேலும் வன்முறைகள் தூண்டுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

காணொளியைக் காண

ரேஷ்மி – பாபி சிம்ஹா விவாகரத்தா?

bobby-simha

கோலிவுட்டில் தற்போது விவாகரத்து சீசன் போலும். அமலாபால் தனது காதல் கணவர் ஏ.எல்.விஜய்யை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து தற்போது கோர்ட் படியேறி இருக்கிறது. லிசி – பிரியதர்ஷன் விவாகரத்து விவாகரம் நீண்ட நாட்களாக நடைபெற்று தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா தனது கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். விரைவில் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படி தொடர்ந்து கோலிவுட்டில் அடுத்தடுத்து விவாகரத்து சம்பவங்கள் நடைபெற்று வருகிற நிலையில், சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட பாபி சிம்ஹாவும் – ரேஷ்மி மேனனும் பிரிந்துவிட்டதாகவும், விரைவில் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்தி பரவியது.

இந்த செய்தி கோலிவுட்டில் தீயாய் பரவிக்கொண்டிருக்க, இதை அறிந்ததும் சுதாரித்துக் கொண்ட பாபி சிம்ஹா உடனடியாக தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், வதந்தி குறித்து நான் இங்கு எதுவும் கருத்து கூற விரும்பவில்லை. எங்களைப் பற்றிய வெளிவந்த செய்திகளை நினைத்து கவலைப்பட்டு எங்களுக்கு போன் செய்பவர்களுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் சந்தோஷமாக உள்ளோம். நாங்கள் பிரிப்பது பீட்சாவை மட்டும்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹட்ரிக் சாதனை படைத்த பந்துவீச்சாளர்!!

cricket

தூத்துக்குடி இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கணேஷ் மூர்த்தி, ஒரே ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் தலைவன் சற்குணம், கோபிநாத், சதீஷ், சசிதேவ் ஆகியோரின் விக்கெட்டுகளை சூறையாடி மிரள வைத்தார்.

இதில் மூன்று விக்கெட்டுகளை தொடர்ச்சியாக (ஹாட்ரிக்) வீழ்த்தியதும் அடங்கும். தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாய்த்த 2-வது பந்து வீச்சாளர் கணேஷ் மூர்த்தி ஆவார். ஏற்கனவே கோவை கிங்ஸ் வீரர் சிவகுமார் தூத்துக்குடிக்கு எதிராக ´ஹாட்ரிக்´ சாதனை படைத்திருந்தார்.

இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் தலைவர் தினேஷ் கார்த்திக்கின் அரைசதத்தின் உதவியுடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை தோற்கடித்த தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி இறுதிப்போட்டியிலும் இதே போன்று தினேஷ் கார்த்திக்கின் அரைசதத்தின் துணையுடன் வாகை சூடியிருக்கிறது.

நேற்றைய ஆட்டத்தை காண 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் சர்வதேச போட்டியில் விளையாடிய வீரர்கள் யாரும் கிடையாது. அப்படி இருந்தும் இறுதி சுற்று வரை முன்னேறி வியப்பூட்டியது. 2-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 60 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

cricket1

முடி உதிர்வை தடுக்கும் சில வழிமுறைகள்!!

making_hair_grow_faster
முடி கொட்டுபவர்களுக்கு என்னதான் முடிக்கு பராமரிப்பு செய்தாலும் உள்ளே உட்கொள்ளும் சத்தான முக்கியமாக இரும்பு சத்துள்ள உணவுகள் மூலமாகவே நல்ல பலன்கள் கிடைக்கும். என்னதான் முடி வளர பரம்பரை ஒரு காரணம் என்றாலும், நாம் முயன்றால் கொஞ்சம் வளர்ச்சியை கொண்டு வரலாம் அல்லது இருப்பதையாவது காப்பாத்தலாம்.

பிரச்சனைகளில்லாத கூந்தல் யாருக்கும் அமைவதில்லை. முடி உதிர்தல், இளநரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக் கூந்தலைப் பாதிக்கும் பிரச்சனைகள் ஏராளம். இரும்பு சத்துள்ள உணவு சாப்பிடுவது மிக அவசியம். ஒரு நாளைக்கு ஒரு கட்டு கீரையை தனியாக நீங்கள் மட்டும் சாப்பிடுங்கள்.

இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. அது முற்றிலும் தவறு. தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.

எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். சிறிது நல்ல எண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும், முடி உதிர்வதையும் தடுக்கலாம்.

கறிவேப்பில்லை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து, ஒருநாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.