வவுனியாவில் விவசாய அமைச்சரால் விவசாய உபகரணங்கள் வழங்கல்!!

 
வவுனியா விவசாயப் பண்ணையில் நேற்று(13.09.2016) காலை வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண விவசாயத்துறை, நீர்ப்பாசனத்துறை, கால்நடை, உணவு வழங்கல், அமைச்சர் பொ. ஜங்கரநேசன் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, செ.மயூரன், ஜெயதிலக, கமநல அபிவிருத்தி ஆணையாளர் திரு.விஜயகுமார், விவசாயப் பணிப்பாளர் , நீர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட விவசாய பயணாளிகள் 425 பேருக்கு 8.35மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

1 dsc_0171 dsc_0172 dsc_0174 dsc_0175 dsc_0176 dsc_0178 dsc_0180 dsc_0182 dsc_0183 dsc_0184 dsc_0185 dsc_0191 dsc_0192 dsc_0194 dsc_0200 dsc_0201 dsc_0203 dsc_0204 dsc_0209 dsc_0210 dsc_0211 dsc_0213 dsc_0216 dsc_0221 dsc_0223 dsc_0226 dsc_0227 dsc_0228 dsc_0229 dsc_0231 dsc_0237 dsc_0238 dsc_0239 dsc_0240 dsc_0242 dsc_0243

வவுனியாவில் பாராதியாரின் 95வது நினைவு தின நிகழ்வுகள்!!

 
வவுனியா குருமன்காடு சந்தியிலிருக்கும் மகாகவி பாரதியாரின் திருவுருவச்சிலைக்கு முன்னால் நேற்று(13.09.2016) காலை 9 மணியளவில் அன்னாரின் 95வது நினைவு தின நிகழ்வுகளை வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலருமான எஸ்.சந்திரகுமார் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.

அன்னாரின் நினைவுரையினை வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், நிகழ்த்தியதுடன், வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய பாடசாலை அதிபர் றம்சீன் சிறப்புரையினையும் பாடசாலை மாணவர்கள் புகழுரையினையும், நிகழ்த்தியதுடன் அன்னாரின் திருவுருவச்சலைக்கு வவுனியா நகரசபை முன்னாள் உப பிதா சந்திரகுலசிங்கம், ஓய்வு நிலை கிராம உத்தியோகத்தர் திரு.வேலுப்பிள்ளை, சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர் விக்னா, பாபு, மற்றும் சமூக சேவையாளர்கள், மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

1 dsc_0142 dsc_0144 dsc_0146 dsc_0147 dsc_0148 dsc_0149 dsc_0151 dsc_0153 dsc_0155 dsc_0156 dsc_0158 dsc_0159 dsc_0160 dsc_0161 dsc_0162 dsc_0164 dsc_0166 dsc_0169

வவுனியாவில் இளைஞன் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை முயற்சி!!

sucide

வவுனியா மணிபுரத்தில் நேற்று முன்தினம்(12.09.2016) இரவு 9.00 மணியளவில் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

வவுனியா மணியபுரம் பழைய வீட்டுத்திட்டத்தில் குடும்பத்தகராறு காரணமாக 21 வயது இளைஞனே நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

எனினும் அயலவரின் உதவியுடன் இவ் இளைஞன் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் இப்படியும் ஓர் சம்பவம்!!

hospital

நேற்று(13.09.2016) காலை வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற நபர் ஒருவர் பொலிசாரின் அவசர தொலைபேசி அழைப்புக்கு தொடர்பை ஏற்படுத்தி வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் நோயாளருடன் அதிக நேரம் உரையாடிக்கொண்டிருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து அங்கு சென்ற பொலிசார் வைத்தியசாலை பொலிசாருடன் தொடர்புகொண்டு வினவியதுடன் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர்களிடம் பொலிசார் சம்பவத்தினை தெரிவித்துள்ளனர்.

வைத்தியர்கள் தொடர்பை ஏற்படுத்திய நபர் யார் எனத் தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர். எனினும் விசாரணையினை மேற்கொள்வதாக தெரிவித்துவிட்டு பொலிசார் அங்கிருந்து அகன்றுவிட்டனர்.

இச்சம்பவம் அங்கு பணிபுரியும் வைத்தியர்களை மேலும் உளவியல் ரீதியாக பாதித்துள்ளதாகவும் நோயாளருடன் வைத்தியர்கள் அதிக நேரம் செலவு செய்தே அவர்களின் நோய்க்கு வைத்தியம் செய்யவேண்டும், எனவே வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு தீர்வினைப் பெற்றுக்கொள்ளுமாறு வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

மாங்குளம் பகுதியில் கோர விபத்து : தாய் பலி!!

 
முல்லைத்தீவு, மாங்குளம் – மல்லாவி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாங்குளத்தில் உள்ள பாடசாலைக்கு மகனை விடுவதற்காக வந்தவேளை வீதியின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனத்தில் மோதியே குறித்த தாய் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் 4ஆம் கட்டை அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான 38 வயதுடைய இரவிக்குமார் இன்பமலர் ஆவர்.

உயிரிழந்தவரின் மகனான 14 வயதுடைய இரவிக்குமார் சங்கீதன் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவில் இருந்து அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

a1 a2 a3

கிளிநொச்சியில் சடலம் மீட்பு : கொலையா தற்கொலையா என குழப்பத்தில் பொலிஸ்!!

body

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில், இனந்தெரியாத ஆண்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

குறித்த பகுதிக்கு மாடு கட்டச் சென்ற பெண் ஒருவர் வழங்கிய தகவலின்பிரகாரம், குறித்தசடலம் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சடலம் அடையாளம் காண முடியாதஅளவிற்கு உருக்குலைந்துள்ளதாக தெரிவித்துள்ள கிளிநொச்சி பொலிஸார், கொலையாஅல்லது தற்கொலையா என பல கோணங்களில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

காவிரிக்காக குரல் கொடுக்கும் சிம்பு!!

simbu

காவிரி விவகாரம் தொடர்பாக அரசியல் ரீதியில் அறிக்கைகளை விட்டு, இரு மாநிலங்களிலும் அமைதி இல்லாத நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் விளம்பரம் தேடும் ஆள் அல்ல என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

“தற்போது நான் தாய்லாந்து நாட்டில், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் இருக்கிறேன். காவேரி விவகாரம் தொடர்பாக நான் ஏதோ கூறியதாக வந்த செய்திகள் குறித்து எனது நலவிரும்பிகளும், எனது தந்தையும் என்னிடம் கூறினர். இந்தியாவின் பொறுப்புள்ள குடிமகனாக, எனது பங்கும், எனது எல்லைகளும் என்னவென்று எனக்குத் தெரியும். காவேரி விவகாரம் குறித்து எந்த அறிக்கையும் நான் வெளியிடவில்லை. இது இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவும் சர்ச்சை. இது கலைஞர்கள் மேடையேறி பிரச்சாரம் செய்வதற்கான விடயம் அல்ல.

சட்டத்தின் துணையோடு இரு மாநிலத் தலைவர்களும் இதற்கான தீர்வை எட்டுவார்கள். நம்மால் முடிந்தது, நன்றாக பருவமழை இரு மாநிலங்களிலும் அமைதியும் வளமும் செழிக்க வேண்டும் என பிரார்த்திப்பதே. அதே போல, நாம் அண்டை மாநில மக்களாக சுமுகமாக வாழ்ந்துள்ளோம். ஆனால் இந்த விவகாரத்தினால் எக்காரணம் கொண்டும் இரு மாநில மக்களிடையே இருக்கும் உறவில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என விரும்புகிறேன்.

இந்த பிரச்சினையைக் கூடிய விரைவில் கடப்போம் என நம்புகிறேன். இந்த விவாகரம் தொடர்பாக அரசியல் ரீதியில் அறிக்கைகளை விட்டு, இரு மாநிலங்களிலும் அமைதி இல்லாத நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் விளம்பரம் தேடும் ஆள் அல்ல நான் என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ்வுடனான பிணக்கு தீர்ந்தபிறகு பாடல் காட்சி ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிள் விபத்தால் 50 சதவீதமானோர் உயிரிழப்பு!!

accident

நாட்டில் கடந்த ஏழு மாதங்களில் இடம்பெற்ற விபத்துகளில் 50 சதவீதமானவர்கள் மோட்டார் சைக்கிள் விபத்துகளால் உயிரிழந்துள்ளனர் என வீதி பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனை வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிசிர கொடகொட தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் 666 பேர் மோட்டார் சைக்கிள் விபத்தினால் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்துகளில் பகல் வேளைகளில் இடம்பெற்ற விபத்துகளில் 355 பேர் உயிரிழந்துள்ளதுடன், இரவு வேளைகளில் இடம்பெற்ற விபத்துகளில் 311 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இதேவேளை இரவு வேளைகளில் விபத்து ஏற்படுவதற்கன பிரதான காரணம் மது பாவனை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை மோட்டார் சைக்கிள் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு மற்றுமொரு பிரதான காரணியாக தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் 20,000 கி.மீ. புல்லட் ரயில் பாதை : உலகிலே மிகவும் நீளமானது!!

train

உலகிலே நீளமான அதிவேக ரயில் (புல்லட்) பாதைகளைக் கொண்ட நாடாக சீனா உருவெடுத்துள்ளது. அந்நாட்டில் உள்ள புல்லட் ரயில் பாதையின் நீளம் 20,000 கிலோ மீட்டரைத் தாண்டியுள்ளது.

நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தின் ஜெங்சூ நகரையும் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் சுசூ நகரையும் இணைக்கும் வகையில் புதிய பாதை அமைக்கப்பட்டது. இது நேற்று பயன்பாட்டுக்கு வந்தது.

360 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாதை, மிக முக்கியமான வடக்கு-தெற்கு பாதைகளை இணைக்கிறது. இதன்மூலம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கிடையிலான பயண நேரம் கணிசமாகக் குறைகிறது.

குறிப்பாக, ஜியான் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் 11 மணியிலிருந்து 6 மணியாகக் குறையும். மொத்தம் 9 ரயில் நிலையங்களைக் கொண்ட இந்த வழித்தடத்தில் மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் ரயில் செல்லும்.

இதன்மூலம், சீனாவில் உள்ள அதிவேக ரயில் பாதையின் மொத்த நீளம் 20 ஆயிரம் கிலோ மீட்டரைத் தாண்டி உள்ளது. இதனால் உலகின் நீளமான அதிவேக ரயில் பாதையைக் கொண்ட நாடு என்ற பெருமை சீனாவுக்கு கிடைத் துள்ளது.

பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ருமானா புதிய சாதனை!!

bang

மகளிர் சர்­வ­தேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்­களா தேஷ் சார்­பாக முத­லா­வது ஹட்-ரிக்கை பதிவு செய்த பெருமை ருமானா அஹ­ம­துக்கு சொந்­த­மா­கி­யுள்­ளது.

அயர்­லாந்­துக்கு எதி­ராக பெல்ஃ­பாஸ்ட்டில் நடை­பெற்ற மூன்றா­வது மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் ருமானா ஹட்-ரிக் முறையில் விக்கெட்­களை சரித்­ததன் மூலம் 10 ஓட்டங்களால் பங்­க­ளாதேஷ் வெற்­றி­பெற்­றது.

மூன்று போட்­டிகள் கொண்ட இந்தத் தொடரின் முத­லி­ரண்டு போட்­டிகள் மழை­யினால் தடைப்பட்டதால் பங்­க­ளாதேஷ் 1–0 என தொடரை வென்­றது.

பங்­க­ளாதேஷ் மகளிர் அணி­யினால் நிர்­ண­யிக்­கப்­பட்ட சுமா­ரான 107 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய அயர்­லாந்து மகளிர் அணி ஒரு கட்­டத்தில் 4 விக்கெட்­களை மாத்­திரம் இழந்து 84 ஓட்­டங்­களைப் பெற்று வலு­வான நிலையில் இருந்­தது.

ஆனால், இட­துகை சுழல்­பந்­து ­வீச்­சா­ள­ரான ருமானா அஹ்மத் அடுத்­த­டுத்து மூன்று பந்­து­களில் கிம் கார்த், க்ளயார் ஷிலிங்டன், மேரி வோல்ட்ரன் ஆகி­யோரை ஒரே வித­மாக எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்­ட­மி­ழக்கச் செய்து தனது அணிக்கு சாதகத் தன்­மையை ஏற்­ப­டுத்­தினார்.

அயர்­லாந்து மகளிர் அணியின் கடைசி 6 விக்கெட்கள் வெறும் 12 ஓட்­டங்­க­ளுக்கு சரிக்­கப்­பட்­டமை விசேட அம்­ச­மாகும்.

எண்­ணிக்கை சுருக்கம்
பங்­க­ளாதேஷ் மகளிர் 40.1 ஓவர்­களில் சக­லரும் ஆட்­ட­மி­ழந்து 106 (சஞ்­சிதா இஸ்லாம் 33, உதி­ரிகள் 26, அமி கெனீலி 32–4 விக்.)

அயர்­லாந்து மகளிர் 37.5 ஓவர்­களில் சகலரும் ஆட்ட மிழந்து 96 (சிசிலியா ஜொய்ஸ் 35, லோரா டிலனி 28, மெக் கெண்டால் 23, ருமானா அஹ்மத் 20 க்கு 3 விக்.)

வவுனியா ஆச்சிபுரம் கிராம மக்கள் நிரந்தர வீடுகள் இன்றி தவிப்பு!!

aachipuram

யுத்தத்திற்கு பின்னரான காலப் பகுதியில் வடமாகாணத்தின் மீள்நிர்மாணப் பணிகளுக்காக பெருந்தொகை பணம் செலவிடப்பட்ட போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதன் பலன் சென்றடைந்ததா என்ற கேள்வி எழுவதற்கான காரணங்களோ ஏராளம்.

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தின் குடியிருப்புப் பிரச்சினையும் இந்தக் கேள்விக்கு வித்திடுகின்றது.

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் நிரந்தர வீடுகள் இன்றி 300 க்கும் அதிகமான குடும்பங்கங்கள் கொட்டகை வீடுகளில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கிராமத்திற்காக வீட்டுத் திட்டம் வழங்கப்படாத நிலையில் இவர்கள் சுமார் 15 வருடங்களாக பெரும் நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளனர்.

தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை பொய்த்துப்போக ஆச்சிப்புரம் கிராம மக்கள் எதிர்காலம் தொடர்பிலான அச்சத்திற்கு மத்தியில் நாட்களை நகர்த்துகின்றனர்.

இந்தியாவிலிருந்து 90 அகதிகள் இன்று தாயகம் திரும்பவுள்ளனர்!!

srilankan-refugees-return-from-india_ci-720x480

யுத்த வடுக்களை சுமந்தபடி நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தவர்களில் சுமார் 90 பேர் இன்று தாயகம் திரும்புகின்றனர்.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் வசதிப்படுத்தலின் கீழ் இவர்கள் தாயகம் திரும்புவதாக மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

45 ஆண்களும், 45 பெண்களும் தங்களின் சுய விருப்பின் பேரில் நாடு திரும்புவதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானஜோதி தெரிவித்துள்ளார்.

திருச்சியிலிருந்து 54 அகதிகள், இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் – 132 இலக்க விமானத்தில் இன்று நாடு திரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, 36 அகதிகள் சென்னையிலிருந்து யூ.எல். – 122 இல்க விமானத்தினூடாக இன்று நண்பகல் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.

நாடு திரும்பும் அகதிகளுக்கு இலவச விமான பயணச் சீட்டு வழங்கப்படுவதுடன், வாழ்வாதாரத்திற்கான தேவையான ஆரம்ப கொடுப்பனவு வழங்கப்படுவதாக மீள்குடிறே்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அகதிகளின் சொத்துக்கள் அழிவடைந்திருப்பின் அதனை உரிய முறையில் மீள பெற்றுக் கொடுப்பதற்கும் மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையை அடுத்து, தமிழகத்திலிருந்து 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் இதுவரையான காலப்பகுதிக்குள் 4945 அகதிகள் தாயகம் திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இந்தியாவிலுள்ள 150 அகதிகள் முகாம்களில் 65000 இற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் வாழ்வதுடன், பலர் தங்களின் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரக மண் அரிப்பு புகைப்படங்கள் வெளியானது!!

mars

பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம். செவ்வாய் கிரகம் நமது பூமி கிரகத்தைப் போன்றதாகும். இது நுண்ணுயிரிகள் வாழ ஏற்ற கிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த செவ்வாய் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சியை பல நாடுகள் மேற்கொண்டுள்ளன. இந்தியாவும் ‘மங்கள்யான்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் களம் இறக்கி உள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது.இந்த விண்கலம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ந்தேதி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறங்கியது.2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ந்தேதியில் இருந்து புகைப்படம் எடுத்து அனுப்ப தொடங்கியது.செவ்வாய் கிரகத்தில் பல்வேறு படங்களை அனுப்பி உள்ளது

தற்போது விஞ்ஞானிகள் எதிர்பாராத வகையில் முதன் முறையாக மலைக் குன்று ஒன்றினையும், அங்கு சிதைவடைந்திருக்கும் பாறைகளையும் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

கடந்த செப்டம்பர் 8ம் தேதி மலைக் குன்றின் அடிவாரத்தில் இருந்து இப்புகைப்படங்ளை ரோவர் விண்கலம் எடுத்துள்ளது. இக்குன்றுகள் செவ்வாய் கிரகத்தின் தென்மேற்கு பகுதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவை 2 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றி இருக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

எவ்வாறெனினும் இப்பாறைகள் சிதைவடைந்துள்ள நிலையை பார்க்கும்போது காலநிலை மாற்றங்கள் உட்பட மண் அரிப்பும் காரணமாக இருக்கலாம் என ஊகம் வெளியிட்டுள்ளனர். இவ்வாறு மண் அரிப்பு ஏற்படுவதற்கு நீர் முக்கிய காரணமாக இருந்துக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு நிகழ்வால் நடிகர் சங்கம் உடைந்ததா?

act

நடிகர்களையும், அரசியலையும் என்றுமே பிரிக்க முடியாது. அப்படித்தான் இந்த நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலும் இருந்தது.

ஜெயலலிதா கைவிட்ட ஒரே காரணத்தால் சரத்குமார் அணி தோல்வியடைந்தது, ஆனால், மீண்டும் பொறுப்பேற்ற விஷால், நாசர் அணியும் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படுவதாக ஒரு கிசுகிசு எழுந்துள்ளது.

அதை நிரூபிக்கும் பொருட்டு நடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டியை எதிர்கட்சி தொலைக்காட்சிக்கு விற்றனர், இதன் காரணமாகவே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மற்றும் நடிகர் சங்க துணை தலைவர் நடிகர் கருணாஸ் சில நாட்களாக அதிருப்தியில் உள்ளாராம்.

மேலும், தன் நடிகர் சங்க துணை தலைவர் பதவியை கூட ராஜினாமா செய்துள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் என்னவெல்லாம் நடக்கும் என்று.

6 வயதுச் சிறுவன் பெயரில் 18 டிரைவிங் லைசென்ஸ்!!

dl

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மங்களம் குண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா. இவரது மகன் பாபையா (வயது 6). இவனது ஆதார் எண்ணை ரே‌ஷன் கார்டில் பதிவு செய்தனர்.

சிறுவன் பாபையாவின் ஆதார் எண்ணை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பாபையாவின் ஆதார் எண்ணை பயன்படுத்தி வெவ்வேறு முகவரிகளில் 18 டிரைவிங் லைசென்ஸ் மோசடியாக பெறப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இவை அனைத்தும் இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான டிரைவிங் லைசென்சுகள் ஆகும். அனைத்து லைசென்ஸ்களிலும் வெவ்வேறு புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த டிரைவிங் லைசென்சுகளை யார்-யார் எடுத்தது என்பதை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 6 வயது உள்ளவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்குவது இல்லை. ஆனால் 18 லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த லைசென்ஸ்களை வழங்கிய அதிகாரிகள் யார் என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

பெங்களூருவில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை உச்சகட்டம் : 65 பேருந்துகள், 27 லொரிகள் எரிப்பு!!(வீடியோ)

1

பெங்களூருவில் உள்ள மைசூர் சாலையில் தனியார் பனிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த கே.பி.என், எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான 65 பேருந்துகளை தீ வைத்து கொளுத்தினர் கன்னடர்கள். இந்த கொடூர சம்பவத்தில் 45 பேருந்துகள் முற்றிலும் எரிந்து சேதமாகின. ஒரே நிறுவனத்திற்கு சொந்தமான 38 பேருந்துகள் எரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சேலத்தை மையமாகக்கொண்டு செயல்படுகிறது கே.பி.என். நிறுவனம். தனது நிறுவன பேருந்துகள் எரிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார் கே.பி.என் நிறுவனர் நடராஜன்.

மைசூர் சாலையில் லொரிகள் நிறுத்திவைக்கப்படும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 27 தமிழக லொரிகள் தீவைத்து எரித்தனர் கன்னடர்கள். இந்த சம்பவத்தில் லொரிகளில் இருந்த பல கோடி ரூபாய் பொருட்களும் சேதமடைந்தன.

காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டதைக் கண்டித்து பெங்களூர் முழுவதும் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக இல்லாததால் இந்த பேராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

பெங்களூரில் வசிக்கும் தமிழக மக்களின் கடைகள் மற்றும் வீடுகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி வருகின்றனர். தமிழக பதிவெண் கொண்ட வாகனங்ககள் தாக்கப்பட்டு தீ வைக்கப்படுகின்றன.

மைசூரில் தமிழ்நாடு காய்கறி லாரிக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தமிழ்நாடு பதிவெண் கொண்ட கார்கள் முழுவதுமாக அடித்து நொறுக்கப்பட்டன. தமிழர்களுக்கு சொந்தமான ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், வன்முறையாட்டத்தின் உச்சகட்டமாக பனிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 65 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

3