உப்புவௌியில் சிறுவனும் சிறுமியும் மாயம்!!

missing

உப்புவெளி பகுதியில் இரு சிறுவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போனவர்கள் திருகோணமலை – உப்புவௌி பகுதியின் மிஹிதுபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதன்படி, 9 வயதான சிறுமி மற்றும் 11 வயதான சிறுவன் ஒருவரும் நேற்று மாலை முதல் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

மாடியில் இருந்து விழுந்து பலியான நோயாளி!!

dead

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் 3வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

80 வயதான இவர், மனநோய் காரணமாகவே குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மேலும் இவர் மாடியில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு–2016 அறிவித்தல்

வவுனியா புளியங்குளம்  கண்டிவீதி (A9)  அமைந்துள்ள  அருள்மிகு  ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின்  நூதன பிரதிஸ்டா  சப்த தச (17) குண்டபக்க்ஷஅஷ்ட பந்தன  மகா கும்பாபிசேக திரு குடமுழுக்கு பெருஞ்சாந்திப்  பெருவிழா  எதிர்வரும் 15.09.2016 வியாழகிழமை   காலை 6.50 முதல்  8.15 வரையான  சுப முகூர்த்த வேளையில்

ஆலய பிரதமகுரு மகோற்சவ குரு   ஆலய ஸ்தானிகர் சிவாகம சேகரர் சிவஸ்ரீ கே .பி . நந்தகுமார குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது .

மேற்படி கும்பாபிசேகத்தில்
11/09/2016 – ஞாயிற்றுக்கிழமை  கிரியாராம்பமும்
14/09/2016 – புதன்கிழமை யன்று எண்ணைக் காப்பு வைபவமும்
15/09/2016 – வியாழக்கிழமை  மகா கும்பாபிஷேக நிகழ்வுமும்  இடம்பெறுகிறது .

14237717_294270327611085_3479636244321493781_n 14285591_1303272059692744_182753088_o 14285751_1303271883026095_508905594_o 14302859_1303271916359425_1587681096_n 14322406_294270360944415_4587341508557779332_n 14348677_1303272153026068_591496044_n

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிம்மர் ஆலய தேர்த்திருவிழா!!(படங்கள்,வீடியோ)

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிம்மர் ஆலய மகோற்சவ பெருவிழா இன்று (04.09.2016) ஞாற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

9ம் நாளான இன்று திங்கட்கிழமை (12.09) காலை 8.30 மணிக்கு வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று 10.30 மணியளவில் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிம்மப் பெருமான் தேரில் வலம் வந்தார்.

இத் தேர்த் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்ததுடன் பெருமளவிலான இளைஞர்களும் கலந்துகொண்டனர்.

மேற்படி தேர்த்திருவிழாவின்   காவடியாட்டம்  கோலாட்டம்  என்பனவும் இடம்பெற்றன.

தொடர்ந்து 10ம் நாளான நாளை (13.09) செவ்வாய்கிழமை தீர்த்தோற்சவமும்1008 சங்காபிசேகமும் இடம்பெறவுள்ளது.

படங்கள்:சுகுமார்,கஜன்

வீடியோ:கஜன்

14238097_645377995636959_557104407576482578_n 14291733_645377942303631_7663081425203977727_n-1 14291733_645377942303631_7663081425203977727_n 14317571_645377788970313_3022009652639861550_n 14348767_645280342313391_1142357642_n

IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF

dsc07514

 

 

 

யாழில் விளையாட்டு வினையான சம்பவம்!!

hang-death

யாழ்ப்பாணம்-நெல்லியடி புன்னாலை பிரதேசத்தில் 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவியின் தந்தை உயிரிழந்துள்ள நிலையில் தாய் வெளிநாட்டில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவி கடந்த 9ஆம் திகதி பாடசாலை விட்டு வீடு வந்தவுடன் தனது தங்கமாலையை கழற்றி கட்டில் மேல் வைத்து விட்டு குளிப்பதற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து இவரது இளைய சகோதரி விளையாட்டுக்காக தனது அக்காவின் தங்கமாலையை எடுத்து ஒளித்துள்ளார்.

குளித்து விட்டு வந்து தனது மாலையை தேடிய குறித்த மாணவி அதைக் காணாததால் மிகவும் பயத்துடன் இருந்துள்ள நிலையில், தங்கமாலையை எடுத்து ஒளித்து வைத்த தங்கை வெளிநாட்டில் உள்ள தனது தாய்க்கு அழைப்பை ஏற்படுத்தி அக்கா மாலையை தொலைத்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர்களது தாய் குறித்த மாணவியை திட்டியதை அடுத்து குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வட பகுதியை எனது இரண்டாவது ஊராக கருதுகின்றேன் : பொலிஸ் மா அதிபர்!!

poojitha

வடபகுதியை நான் எனது இரண்டாவது ஊராக கருதுகின்றேன். இங்கு இடம்பெறும் குற்றச் செயல்களை தடுக்க தமிழில் முறைப்பாடு செய்யக் கூடிய விசேட செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதிபொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் தமிழ் மொழி மூலம் தொலைபேசியில் முறைப்பாடு செய்யும் திட்டத்தை வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்து வைத்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடபகுதியை நான் எனது இரண்டாவது ஊராக கருதுகின்றேன். நாங்கள் தமிழ், முஸ்லிம் மக்களை மிகவும் நேசிக்கின்றோம்.

தமிழ் மொழியில் முறைப்பாடு செய்யும் இந்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அதாவது இந்த சேவையின் மூலம் நீங்கள் உங்கள் பிரச்சினைகளை பொலிஸ் மா அதிபருக்கு உங்கள் தாய் மொழியான தமிழ் மொழியிலேயே முன்வைக்கலாம்.

எதிர்வரும் காலங்களில் இத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தவுள்ளோம். உங்களது பிரச்சினையை தீர்க்க எனது உதவி தேவைப்பட்டால் எனது தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும்.

உதவி வழங்க நான் எவ்வேளையிலும் தயாராக இருக்கின்றேன். வடபகுதியில் சட்டவிரோத, சமூக விரோத, குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையின் ஊடாக உங்கள் பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை தெரியப்படுத்துமிடத்து உடனடியாக அவை தொடர்பில் நாம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்போம்.

இதன்மூலம் குற்றச் செயல்களையும், சமூக விரோதச் செயல்களையும் கட்டுப்படுத்த முடியும். இது தவிர கடத்த காலத்தில் பொலிசாருக்கும், மக்களுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் அமைதி, நல்லிணக்கம், சகவாழ்வு என்பவற்றை ஏற்படுத்தக் கூடியதாகவும், பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் நட்புறவை ஏற்படுத்தக் கூடியதாகவும் இது அமையும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, இத்திட்டத்தின் மூலம் வவுனியா மாவட்ட பொதுமக்கள் 0766224949 என்ற இலக்கத்துடனும் மன்னார் மாவட்ட பொதுமக்கள் 0766226363 என்ற இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு 24 மணிநேரமும் தமிழ் மொழியில் உதவிகளையும் முறைப்பாடுகளையும் செய்து கொள்ள முடியும்.

புகையிரதத்திற்கு கல்லெறிந்த சிறுவன் கைது!!

train

மருதானை- கறுப்பு பாலத்திற்கு அருகில் புகையிரத்திற்கு கல்லெறிந்த சிறுவன் ஒருவன் இன்று கைது செய்யப்பட்டுள்ளான்.

கொழும்பு கோட்டையிலிருந்து மீரிகம நோக்கி சென்ற புகையிரதத்தின் மீதே சிறுவன் கல்லெறிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த தாக்குதலினால் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று புகையிரத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசீர்வாதம் மிக்க ஹஜ் பண்டிகையாக அமையட்டும் : ஜனாதிபதி வாழ்த்து!!

maithiri

ஆசீர்வாதம் மிக்க ஹஜ் பண்டிகையாக அமையட்டம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஹஜ் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும்,

இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஆசீர்வாதம் மிக்க ஹஜ் பண்டிகையாக அமையட்டும்.

அன்னியோன்ய மரியாதை ஊடாக மானுட சகோதரத்துவத்தின் உன்னதத்தை இதயத்தை நிறுத்திக் கொண்டு அதன் ஊடாக சகவாழ்வின் புதிய உயிர்ப்பு உருவாக்கும் ஹஜ் பண்டிகையாக அமையட்டும்.

மனிதம், ஈகை கொடையின் புனித பண்புகளை பறைசாற்றும் ஓர் பண்டிகையாக ஹஜ் பண்டிகை காணப்படுகின்றது.

சமய பக்தி பற்றிய அர்ப்பணிப்பினை எடுத்துக் காட்டும் ஓர் பண்டிகையாக ஹஜ் பண்டிகை அமைந்துள்ளது என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

விரைவில் வருவேன் : நன்றாக விளையாட முடியும் : லசித் மலிங்க!!

malinga

காயம் காரணமாக இலங்கை அணியில் இருந்து விலகியிருந்தார் லசித் மலிங்க. தற்போது பரிபூரண குணம் பெற்று வருகிறார்.

பொதுவாக எதிரணி கிரிக்கெட் வீரரகள், அணிக்குள் நிலவும் அரசியல், ஸ்லெட்ஜிங் என எதைப்பற்றியும் விமர்சிக்க மாட்டார் மலிங்க.

இந்நிலையில் சிலோன் டுடே நாளிதழுக்கு மனம் திறந்த பேட்டி ஒன்றை சமீபத்தில் அளித்திருந்தார். அதில் சில துளிகள்:-

காயம் இப்போதைக்கு வேகமாக ஆறி வருகிறது. நெட்டில் பவுலிங் செய்ய ஆரம்பித்து விட்டேன். விரைவில் அணிக்குள் வருவேன் என நினைக்கிறேன்.

என்னுடைய உடல் தகுதியை வைத்து பார்க்கும்போது இன்னும் 2-3 ஆண்டுகள் நன்றாக விளையாட முடியும் என நினைக்கிறேன் என பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் நடத்த டி-20 தொடரில் இலங்கையை அவுஸ்திரேலியா எளிதாக பந்தாடியது குறித்த கேள்விக்கு கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் மலிங்க.

அணியில் உள்ள வீரர்களை குறை சொல்லிப் பயன் கிடையாது. அவுஸ்திரேலிய அணியை எடுத்துக்கொண்டால் அவர்கள் அணியில் உள்ள பத்து பேராவது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு டி20 லீக் போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்றுள்ளனர்.

டி -20 ஐ பொறுத்தவரை சர்வதேச தரத்திலான வீரர்களுடன் விளையாடி அனுபவம் பெற வேண்டியது அவசியம். அதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் உருப்படியான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

மலிங்கா பொதுவாக பணத்துக்காக ஆடுகிறார், நாட்டுக்காக ஆடுவது இல்லை என்பது போன்ற விமர்சனங்களை பலர் தொடர்ந்து முன் வைத்து வரும் வேளையில் முதன் முறையாக இது குறித்து வாயைத் திறந்திருக்கிறார்.

நான் எப்படி நாட்டுப்பற்றுள்ளவன் என நிரூபிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என தெரியவில்லை.

ஒரு நாள் போட்டிகளை எடுத்துக்கொண்டால் தற்போது அணியில் உள்ள வீரர்களில் அதிக விக்கெட் எடுத்ததே நான் தான்.

மூன்று உலகக்கோப்பை விளையாடியிருக்கிறேன், உலக கோப்பையில் ஹாட்ரிக் எடுத்து பெருமை சேர்த்திருக்கிறேன்.

எனது தலைமையில் இலங்கை அணி டி 20 கோப்பையை ஜெயித்திருக்கிறது,

வேகப்பந்து வீச்சாளர்களில் சமிந்த வாசுக்கு பிறகு இலங்கை அணி சார்பாக விளையாடி அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ளதும் நான் தான்.

என் வாழ்க்கையில் இது வரை ஒரு முறை கூட களத்தில் தவறாக நடந்து கொண்டு ஐ.சி.சி யிடம் அபராதம் செலுத்தியது கிடையாது.

ஜென்டில்மேன் கிரிக்கெட்டைத் தான் ஆடியிருக்கிறேன். இதற்கு மேல் நான் என்ன நிரூபிக்க வேண்டும் என தெரியவில்லை என புலம்பியிருக்கிறார்.

கடைசியாக, உங்கள் வாழ்நாளில் உங்களை அச்சுறுத்திய பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு சற்றும் தயங்காமல் பதிலளித்தார்.

நியூசிலாந்து அணியைச் சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம், இந்திய அணியைச் சேர்ந்த விராட் கோஹ்லி ஆகிய இருவரும் கடும் சவால் தந்தனர்.

அதிலும் இலங்கை அணிக்கு எதிராக ஆடிய ஆட்டம் ஒன்றில் 40 ஓவரில் 320 ரன்களை சேர்க்க வேண்டும் என்ற சூழ்நிலையில் விராட் ஆடிய ஆட்டம் மெச்சத்தக்கது.

அந்த போட்டியில் எனது ஒரே ஓவரில் 24 ரன்கள் எடுத்தார். எல்லாருக்கும் அந்த ஒரு ஓவர் ஞாபகம் இருக்கிறது. அதைப் பற்றியே பேசுகிறார்கள், அதைப் பற்றியே எல்லா இடத்திலும் கேள்வி கேட்கிறார்கள், விமர்சிக்கிறார்கள்.

ஆனால் நான் 12 ஆண்டுகளாக இலங்கை அணிக்காக ஆடிய ஆட்டத்தை மறந்து விட்டார்கள் என சற்றே கடுப்புடன் சொல்லியிருக்கிறார் மலிங்க.

-விகடன்-

நிர்வாணப் புகைப்படம் : பேஸ்புக்கிற்கு எதிராக வழக்குத் தொடுத்த சிறுமி!!

facebook

வட அயர்லாந்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார்.

இந்த சிறுமியின் நிர்வாணப் புகைப்படம் பேஸ்புக்கில் இடப்பட்டதைத் தொடர்ந்து சட்டத்தரணிகள் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்கள்.

சிறுமியை அச்சுறுத்தி புகைப்படத்தைப் பெற்ற நபர், அதனை பல தடவைகள் பேஸ்புக்கில் இட்டதாக சட்டத்தரணிகள் தெரிவித்தார்கள்.

இந்த நபருக்கும், பேஸ்புக் நிறுவனத்திற்கும் எதிராக சிறுமி வழக்குத் தொடுக்கிறார். இத்தகைய வழக்கொன்று தாக்கல் செய்யப்படுவது இதுவே முதற்தடவையெனத் தெரிகிறது.

பெல்பாஸ்ட் மேல் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி, இந்தப் புகைப்படம் மீளவும் சேர்க்கப்பட்டதை பேஸ்புக் நிறுவனம் தடுத்திருக்கலாம் என்றார்.

கடல் நீர் ஏன் உப்புகரிக்கின்றது என்று தெரியுமா?

sea

கடல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் தாகம் எடுக்குதே என்று கடல் நீரை குடித்தால் குமட்டுகிற அளவுக்கு உப்பின் தன்மை அதிகமாக இருக்கும். உலகின் அனைத்து கடல்களிலும் உப்பின் தன்மை ஒரே அளவில் இருக்காது.

கடல் எப்படி உருவானது?

ஆதி காலத்தில் பூமி உருவான போது, நிலப்பரப்புகள் மிகுந்த வெப்பத்தால் சூடாக காணப்பட்டது. அந்த நேரத்தில் நீராவிப்படலமானது பூமியின் நிலப்பரப்பு முழுவதும் சூழ்ந்திருந்தது.

பூமியானது எப்போது குளிர்ச்சி தன்மை அடைகிறதோ அப்பொழுதெல்லம் அங்குள்ள நீராவியும் குளிர்ந்து, பெரும் மழை பொழிவுகள் பூமியில் உண்டானது.

இந்த மழைப் பொழிவுகள் காரணமாக பெரிய பள்ளங்கள் மற்றும் நீர்கள் நிறைந்தது. நாளடைவில் இது பெரிய அளவில் உருவாகி கடலாக தோற்றமளித்தது.

கடல் நீர் ஏன் உப்பு கரிக்கிறது?

நீர் சுழற்சி காரணமாக நதிகளில் உள்ள நீர்கள் கடலில் வந்து மோதுவதால், பாறைகள் நொறுங்கப்பட்டு அதிலுள்ள உப்புகள் கடல் நீரில் கலக்கின்றன.

பல வருடங்களாக இதே போன்றான நீர் சுழற்சி நடப்பதால், கடலில் உப்பின் தன்மை அதிகமாக காணப்படுகிறது.

மேலும் கடலில் இருந்து நீர் வெளியில் செல்வதற்கான ஒரே வழி, சூரிய வெப்பம் காரணமாக நீர் ஆவியாதல் தான்.

இவ்வாறு நடைபெறும் போது கடலில் உள்ள நீர்கள் மட்டும் தான் ஆவியாகி மேலே செல்கின்றன. நீரில் உள்ள உப்புகள் மட்டும் கடலிலே தங்கி விடுகின்றன.

எனவே கடலில் உப்பின் தன்மை மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது.

குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றோம் : தங்கம் வென்ற மாரியப்பனின் தாயார்!!

maariyappan

ரியோ நகரில் நடைபெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தனது 5வது வயதில் ஏற்பட்ட லாரி விபத்தில் மாரியப்பன் தனது வலது காலை இழந்தார். இருப்பினும் முடங்கி விடாமல் தற்போது தங்கம் வென்று சரித்திரம் படைத்திருக்கிறார்.

இந்த நிலையில் வறுமை காரணமாக குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றதாக மாரியப்பனின் தாயார் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக மாரியப்பன் தாயார் சரோஜா கூறுகையில், எனக்கு ஒரு மகளும், 3 மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில் எனது மூத்த மகன் மாரியப்பனுக்கு 5 வயது இருக்கும் போது நடந்த விபத்தில் வலது கால் பாதம் முழுவதும் சேதமடைந்து விட்டது.

உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்து குணமாக்கினோம். வடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற போது தன்னை யாரும் விளையாட சேர்த்துக் கொள்ளவில்லை என்று மாரியப்பன் வருத்தினார்.

பின்னர் அவரது விளையாட்டு ஆர்வத்தை பார்த்த ஆசியர்கள் அவரை உயரம் தாண்டுதலில் ஊக்குவித்தனர்.

மாரியப்பன் சிறுவனாக இருந்த போதே அவரது தந்தை பிரிந்து சென்றுவிட்டார். குடும்ப வறுமையை தாங்கிக் கொள்ள முடியாமல் நாங்கள் தற்கொலை செய்ய முயன்றோம். ஆனால் எங்களை தடுத்து நிறுத்திய மாரியப்பன் வறுமை சூழல் ஒருநாள் கண்டிப்பாக மாறும் என்று தேற்றினார்.

அவர் தான் பள்ளி விடுமுறை நாட்களில் கூலிவேலைக்கு சென்று அதன் மூலம் தனக்கான செலவையும் குடும்பத்திற்கும் வழங்கினார் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

வட கொரியாவை பூண்டோடு அழித்து விடுவோம் : தென் கொரியா அதிரடி எச்சரிக்கை!!

korea

எதிர்வரும் காலங்களில் வட கொரியா அணு குண்டு தாக்குதல் நடத்த முன்வந்தால் அந்நாட்டின் தலைநகரை பூண்டோடு அழித்துவிடுவோம் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வட கொரியா தொடர் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வந்ததால் கடந்த 2006ம் ஆண்டு ‘இனி எவ்வித அணுகுண்டு பரிசோதனைகளை நடத்தக்கூடாது’ என ஐ.நா சபை தடை விதித்தது.

இதுமட்டுமில்லாமல், வட கொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்து ஐ.நா உத்தரவிட்டது. எனினும், ஐ.நா சபையின் உத்தரவை மீறி வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.

நேற்று முன் தினம் 5வது அணுகுண்டு பரிசோதனையை வட கொரியா வெற்றிகரமாக நிறைவேற்றி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வட கொரியாவின் இந்நடவடிக்கைக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தென் கொரியா இன்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், அணுகுண்டு தாக்குதல் நடத்த வட கொரியா முயற்சி செய்தால், அடுத்த நிமிடமே அந்நாட்டின் தலைநகரான பியோங்யாங்கை முற்றிலுமாக அணுகுண்டு வீசி அழித்து விடுவோம்.

இது வெறும் அச்சுறுத்தல் அல்ல. வட கொரியா அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் அந்நாட்டின் தலைநகர் உலக வரைப்படத்தில் இருந்து முற்றிலுமாக அழிக்கப்படும்’ என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மகளின் பிணத்தை வைத்து பிச்சை எடுத்த தந்தை : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

begging

மகளின் சடலத்தை ஊருக்கு கொண்டு செல்ல பணம் இல்லாததால், சடலத்தை வைத்து தந்தை பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி மாவட்டத்தில் உள்ள சுவட்டாலி என்னும் பகுதியில் வசித்து வந்த ஒருவரின் மகளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடனே தன் மகளை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைகாக அனுமதித்துள்ளார்.

சிகிச்சை பலனளிக்காமல் அவர் மகள் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழக்க, சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல நினைத்த அவர் அதற்காக இலவச அவசர ஊர்தி வாகனத்தை மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் தர மறுத்து விட்டனர். கையில் பணம் இல்லாததால் செய்வதறியாது திகைத்த அவர், தன் மகளின் சடலத்தை சாலையோர நடைபாதையில் போட்டு வாகன செலவுக்காக பிச்சை எடுத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் ஒடிசாவில் அவசர ஊர்தி மறுக்கபட்டதால் தன் மனைவி சடலத்தை கணவன் தோளில் சுமந்து சென்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

காவிரியை விட போட்டி தான் முக்கியமா? நடிகர் ஆவேசம்!!

act

காவிரியை விட பட்மிண்டன் லீக் போட்டி முக்கியமில்லை என பிரபல நடிகரும், டிஸ்கோ சாந்தியின் தம்பியுமான அருண்மொழி வர்மன் ஆவேசமாக கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது நடிகரும், டிஸ்கோசாந்தியின் தம்பியுமான அருண்மொழி வர்மன், வரும் 18 ஆம் திகதி சென்னையில் செலிபிரிட்டி பட்மிண்டன் லீக் போட்டி தொடங்க உள்ளது.

இதில் கன்னட நடிகர்களும் விளையாட உள்ளனர். தற்போது உள்ள சூழ்நிலையில், அவர்கள் இங்கு வந்து விளையாடினால் பிரச்சனைகள் ஏற்படும்.

தமிழக இளைஞர் ஒருவரை அடித்துள்ளனர். தமிழக வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். உணர்ச்சிப்பூர்வான இப்போரட்டத்திற்கு, நாம் அனைவரும் ஒன்றினைந்து குரல் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மாட்டு இறைச்சி சாப்பிட்டதற்காக இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம்! பரபரப்பு வீடியோ!!

haryana-beef-rape

ஹரியானா மாநிலம் மேவாத் நகரில் மாட்டு இறைச்சி சாப்பிட்டதற்காக இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரண்டு பெண்களும் 2 வாரத்திற்கு முன்பு ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் அந்தப் பெண்களில் ஒருவர், தாங்கள் மாட்டு இறைச்சி சாப்பிட்டதற்காகவே பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் அப்பெண்கள் சமூக சேவகர் ஷப்னம் ஹஸ்மி முன்னிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தங்களுக்கு நடந்த கொடுமை குறித்து விவரித்தனர்.

ஒரு பெண் கூறுகையில், எங்களிடம் அந்தக் கும்பல் நீங்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுவீர்களா என்று கேட்டது. அதற்கு நாங்கள் இல்லை என்று கூறினோம்.

ஆனால் அவர்கள், இல்லை பொய் சொல்கிறீர்கள். நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்று கூறி அதற்குத் தண்டனைதான் இது என்று கூறி பலாத்காரம் செய்தனர் என கூறியுள்ளார்.

ஆனால், முதலில் கொடுத்த புகாரில் இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவிக்கவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவருக்கு வயது 14, இன்னொருவருக்கு 20 ஆகிறது. ஆகஸ்ட் 24ம் திகதி மோத் நகரில் உள்ள அவர்களது வீட்டில் இந்த கொடுமைக்குள்ளாகி உள்ளனர்.

சம்பவத்தின்போது இவர்களது அத்தையும், மாமாவும் அந்தக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யபப்பட்டுள்ளனர்.