பசியால் தவிக்கும் என்னை அனாதை இல்லத்தில் சேருங்கள் : ரயில் நிலையத்தில் கதறிய பெண்!!

lady

வயதான பெண் ஒருவர் கவனிக்க யாரும் இல்லாததால் பசியால் தவிக்கும் என்னை அனாதை இல்லத்தில் சேருங்கள் என்று ஈரோடு ரெயில்வே பொலிசாரிடம் கதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு ரெயில் நிலையத்தில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. அங்குள்ள 3-வது பிளாட் பாரத்தில் படுத்து இருந்த வயதான ஒரு பெண் அழுதபடி இருந்துள்ளார். அந்த வழியாக இவரை கடந்து சென்ற யாருமே கண்டு கொள்ளவில்லை.

அப்போது அந்த வழியாக ரெயில்வே பொலிசார் ரோந்து சென்றுள்ளனர். அவர்கள் பிளாட்பாரத்தில் அழுதபடி படுத்திருந்த அந்த மூதாட்டியிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது அவர் ‘தன்னை கவனிக்க யாருமே இல்லை என்றும். தாம் அனாதையாகி விட்டதாகவும், இந்த வயதான காலத்தில் தினமும் பசியால் துடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எவரேனும் தன்னை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேருங்கள். அங்கு சென்றாலாவது தனக்கு வயிறார சாப்பாடு கிடைக்கும்’ என்று அழுதபடியே கூறியுள்ளார்.

அந்த மூதாட்டியின் பேச்சில் பரிதாபப்பட்ட பொலிசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அவரிடம் மேலும் விசாரித்துள்ளனர்.

அப்போது அவர், தனது பெயர் பவானி (70) எனவும், சிதம்பரம் கவரப் பேட்டையை சேர்ந்த சம்பந்தம் என்பரின் மனைவி எனவும் தெரிவித்துள்ளார்.

தமக்கு குழந்தைகள் இல்லை என்பதால் தனது கணவர் வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார் எனவும், தற்போது கணவர் இறந்த நிலையில் 2-வது மனைவியின் மகன்கள் தன்னை கவனிக்க வில்லை என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து பொலிசார் அந்த மூதாட்டிக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளனர். முதியோர் இல்லத்தில் சேர்க்கவும் ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

காதலனைப் பழிவாங்குதற்குத் காதலி செய்த காரியம்!!

c1

தனது காத­லனை பழி­வாங்­கு­வ­தற்­காக காத­லனின் காரை தீக்­கி­ரை­யாக்­கு­வ­தற்கு தீர்­மா­னித்த யுவதி ஒருவர் தவ­று­த­லாக மற்­றொ­ரு­வரின் காருக்குத் தீ வைத்த சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்பெற்­றுள்­ளது.

புளோ­ரிடா மாநி­லத்தைச் சேர்ந்த 19 வய­தான கார்மேன் சாம்ப்ளீ எனும் இந்த யுவதி கடந்த மாதம் வீதியில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த கார் ஒன்­றுக்குத் தீ மூட்­டினார்.

அக் ­காரின் உரி­மை­யா­ள­ரான தோமஸ் ஜென்னிங்ஸ் என்­ப­வ­ருக்கு அவ­ருடன் ஒரே அறையில் வசிக்கும் நபர் ஒருவர் மூலம் இத்­ த­கவல் தெரி­விக்­கப்­பட்­டது. அவர்கள் இரு­வரும் ஓடிச்­சென்று தீயை அணைக்க முற்­பட்­ட­போதும் உட­ன­டி­யாக அது சாத்­தி­ய­மா­க­வில்லை.

கண்­கா­ணிப்புக் கம­ராக்­களை ஆராய்ந்­த­போது யுவதி ஒருவர் காருக்குத் தீவைத்­து­விட்டு சைக்கிளில் தப்­பிச்­செல்­வது தெரி­ய­வந்­தது.

அதை­ய­டுத்து மேற்­படி யுவ­தியை பொலிஸார் கைது செய்­தனர். கார்மேன் சாம்ப்ளீ (19) எனும் இந்த யுவ­தி ­யிடம் இது தொடர்­பாக விசா­ரித்­த­போது, தன க்கும் காத­லனுக்கும் இடையில் ஏற்­பட்ட மோத­லை­ய­டுத்து, காதலனை பழி­வாங்­கு­வ­தற்­காக அவரின் காரை தீக்­கி­ரை­யாக்­கு­வ­தற்கு தான் தீர்­மா­னித்­த­தாக கூறினார்.

மற்றவர்களின் சொத்துகளை தீக்கிரையாக்கிய குற்றச்சாட்டில் கார்மேன் சாம்ப்ளீ விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 667 பேர் மேன்முறையீடு!!

thookku

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 667 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசாந்த தனசிங்க சிங்கள ஊடகமொன்றுக்கு நேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொத்த மரண தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை 1017 என அவர் தெரிவித்துள்ளார்.

மனித படுகொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நீதிமன்றினால் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை கைதிகள் நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் உடற் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவர் எனவும், கிரிக்கெட் அல்லது வேறும் ஏதேனும் விளையாட்டு உடற்பயிற்சியில் ஈடுபடவும், உடற் பயிற்சியில் ஈடுபடாமல் இருப்பதற்கும் அனுமதியுண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு, வாரத்தில் ஒரு நாள் தமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்க இடமளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1977ம் ஆண்டின் பின்னர் இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு மாதங்களில் 500 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டி போக்கிமோன் கோ சாதனை!!

pokemon_go_soft_launch

கண்ணெதிரே காணும் உலகை கைபேசி வாயிலாக அதே மாதிரி காட்டி, நிஜத்தில் கண்ணுக்கு தென்படாத கதாபாத்திரங்களையும், உருவங்களையும் கைபேசி திரைகளில் மாயமாக தோன்றவைத்து, அவற்றை வேட்டையாடும் வேட்கையை தூண்டிவிடும் ’போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான கைபேசி விளையாட்டாக திகழ்ந்து வருகிறது.

கடந்த மாதம் ஜப்பானில் தொடங்கப்பட்ட போக்கிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர்.

இதனால் 15 நாடுகளில் இந்த விளையாட்டைத் தடை செய்துள்ளனர் உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா, ஈரான், மற்றும் கொரியா போன்ற நாடுகளில் போக்கிமோன் கோவுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

உலக அளவில் போக்கிமோன் கோ பல சாதனைகளைப் புரிந்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வாரத்தில் ஆகக்கூடுதலாக டவுன்லோட் செய்யப்பட்டு, கூகிள் பிளேயின் ஊடாக 50 மில்லியன் தடவைகள் இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலி என்ற பெருமை இதற்குக் கிடைக்கிறது.

இது தவிர, மிகவும் வேகமாக 500 மில்லியன் டொலர்களை ஈட்டிய விளையாட்டாகவும் போக்கிமேன்-கோ அமைந்துள்ளது.

இந்த விளையாட்டு கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது, இது 60 நாட்களுக்குள் சாதனைக்குரிய வருமானத்தை ஈட்டியிருப்பதாக ஆப் அன்னி என்ற ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

போக்கிமேன்-கோ வை நையான்ரிக் நிறுவனம் வடிவமைத்தது. இது ஐ.ஓ.எஸ் அன்ட்ரொயிட் இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன் முதலான கருவிகளில் விளையாடக்கூடியதாகும்.

இணையத்தள குற்றச்செயல்கள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் பதிவு!!

crime

இணையத்தள குற்றச்செயல்கள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் பதிவு
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இணையத்தளம் தொடர்பான குற்றச்செயல்கள் தொடர்பில் 1570 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணணி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணணி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியிலாளர் ரொஷான் சந்திகுப்த குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் வேறொருவரின் நிழற்படங்கள் மற்றும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலி கணக்குகள் மூலம் அதிக முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பேஸ்புக் கணக்கை தொடர்ந்தும் பயன்படுத்துவதாயின், தேவையான நிழற்படங்களை மாத்திரம் பதிவேற்றுமாறும் அதனை, நண்பர்கள் மாத்திரம் பார்வையிடும் வகையில் செயற்படுத்திக் கொள்ளுமாறும் இலங்கை கணணி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியிலாளர் மேலும் கூறியுள்ளார்.

வவுனியாவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!!

 
வவுனியா மரக்காரம்பளை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மணிபுரம் கிராமத்தில் நேற்று காலை ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் காணமல்போன மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் புஷ்பராசா(36) என்பவர் நேற்று (11.09.2016) காலை வவுனியா மணிபுரத்தில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த திடீர் மரண வீசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சடலத்திற்கு அருகாமையில் கையடக்கதொலைபேசி , மதுபான போத்தல்களும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 img_0477 img_0478 img_0479 img_0483 img_0484 img_0492

உலக மக்களை பதைபதைக்க வைத்த புகைப்படம் : சர்ச்சையை ஏற்படுத்திய பேஸ்புக் நிறுவனம்!!

facebook

வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை நீக்கிய பேஸ்புக் தற்போது பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

வியட்நாம் போரின்போது தென் வியட்நாமில் உள்ள சய்கோன் நகருக்கு அருகிலிருந்த ட்ராங் பேங் கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் தவறுதலாக வீசப்பட்ட நாபாம் குண்டினால் காயமடைந்த சிறுமி பான் தி கிம் ஃப்யூக் (Phan Thi Kim Phuc) தன் சகோதரர்கள் மற்றும் உறவுக்கார சிறுவர்களுடன் ஓடி வந்தாள்.

ஆடைகளை கழற்றியெறிந்து கதறியபடி ஓடி வந்த காட்சி உலக மக்கள் அனைவரின் மனதையும் பதைபதைக்கச் செய்தது.

இந்நிலையில், நோர்வே எழுத்தாளர் ஒருவர் தன்னுடைய பேஸ்புக் கணக்கில் இந்த புகைப்படத்தை பயன்படுத்தியதை தொடர்ந்து அவரது பதிவு நீக்கப்பட்டது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு, குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களுக்கும், வரலாற்று புகைப்படங்களுக்கும் உள்ள வேறுபாட்டை வேறுபடுத்தி புரிந்து கொள்ள இயலாமை காரணமாக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக நார்வே செய்தித்தாள் நிறுவனமான ஆப்டென்போஸ்டென் கருத்து தெரிவித்ததையடுத்து, இந்த பதிவினை மீண்டும் மீள்பதிவு செய்த பேஸ்பக் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

உலகின் மிக உயரமான பாலம் : சாதனை படைக்கவிருக்கும் சீனா!!

bridge

உலகின் மிக உயரமான பாலத்தின் கட்டுமான பணிகளை சீனா முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவில் சமீப காலமாக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் கண்ணாடிகளால் ஆன பாலம் முதல் பல்வேறு வேறுபட்ட திட்டங்களை செயல்படுத்தி அசத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது உலகின் மிக உயரமான பாலம் ஒன்றை கட்டி முடித்துள்ளனர். இந்த பாலமானது சீனாவின் யூனன் மாகாணத்திற்கும் கியூஷு மாகாணத்திற்கும் இடையே அமைந்துள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவிருக்கும் இந்த பாலமானது Nizhu ஆற்றின் மீது சுமார் 565 மீற்றர்கள் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து கட்டுமானத்தில் இருந்த இந்த பாலமானது சுமார் 1000 பொறியாளர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

Beipanjiang என்றழைக்கப்படும் இந்த புதிய பாலமானது இதுவரை உலகின் மிகவும் உயரமான பாலம் என அறியப்பட்டுவந்த சீனாவின் Sidu ஆற்றுப் பாலத்தை முறியடித்துள்ளது.

கடந்த மாதம் 20 ஆம் திகதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்ட உலகின் மிக நீளமான கண்ணாடியாலான பாலமும் சீனாவில் தான் அமைந்துள்ளது.

இந்த பாலத்தினை காண பொதுமக்களின் வருகை பெருமளவு உயர்ந்ததால் பாதுகாப்பு கருதி தற்போது கண்ணாடி பாலத்தினை மூடி வைத்துள்ளனர்.

நான் அப்படி சொல்லவே இல்லை : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுஹாசினி!!

suhasini

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு நடிகை சுகாசினி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு அங்குள்ள கர்நாடக நடிகைகள், நடிகர்கள் உட்பட அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் பிரபல இளம் கன்னட நடிகையான ராகினி திவேதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக பேசி வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகை சுகாசினி கர்நாடக மாநிலத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

இந்த தகவல் சர்ச்சையை கிளப்பிய நிலையில், சுகாசினி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

நான் காவிரி பிரச்னையில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும், இது குறித்து நான் ஊடகங்களுக்கு எந்த பேட்டியும் அளிக்கவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

9 வயதில் சாதனை படைத்த குடிசைவாழ் சிறுமி!!

girl

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் படிப்பறிவற்ற சிறுவர்களுக்கு சிறுவயதிலேயே கல்வித் தொண்டாற்றி வரும் 9 வயது சிறுமிக்கு மத்திய அரசு விருது வழங்கி கெளரவிக்க உள்ளது.

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள அரேரா குன்று அருகேயுள்ள குடிசைப்பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமி முஸ்கான் அஹ்ரிவார். மூன்றாம் வகுப்பு படிக்கும் முஸ்கான், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், வீட்டின் வாசலில் நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை கடைவிரித்து, அப்பகுதியில் உள்ள எழுத்தறிவில்லாத குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

அப்பகுதியில் உள்ள பிரபல பள்ளிக்கூடம் நன்கொடையாக அளித்த 25 புத்தகங்களை கொண்டு தனது வீட்டின் வாசலில் கடந்த ஆண்டு ஒரு சிறிய நூலகத்தை முஸ்கான் ஆரம்பித்தார்.

அந்த புத்தகங்களில் உள்ள ராஜா-ராணி கதைகள் மற்றும் நமது நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை கதை வடிவில் படிப்பறிவில்லாத அப்பகுதி குழந்தைகளுக்கு கற்பிக்கும் முஸ்கானிடம் தற்போது நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன.

படிக்க தெரிந்த சில சிறுவர் – சிறுமியர் இந்த கட்டணமில்லாத நூலகத்தில் இருந்து புத்தகங்களை எடுத்துச் சென்று, வாசித்துவிட்டு, மறுநாள் கொண்டுவந்து திருப்பி தந்துவிட்டு, வேறு புத்தகங்களை கொண்டு செல்கின்றனர்.

நன்றாக படித்து, எதிர்காலத்தில் மருத்துவராக வேண்டும் என்பதுதான் தனது எதிர்கால லட்சியம் என்று கூறும் முஸ்கானின் கல்வித் தொண்டை பாராட்டி மத்திய அரசின் நிதி ஆயோக் திட்டத்தின்கீழ் விரைவில் ‘சிந்தனை தலைவர்’ பட்டம் வழங்கப்படவுள்ளது.

இந்த சிறு வயதிலேயே சமூக மாற்றத்துக்காக பாடுபடும் முஸ்கானின் சேவை எங்களை பெருமைப்படுத்தியுள்ளது என இவரது தாயார் மாயா கூறுகிறார்.

புதிய கட்சியின் பெயரை வெளியிட்ட மஹிந்த!!

mahida

விரைவில் நாட்டில் ஸ்ரீலங்கா ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி எனும் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து இந்த புதிய கட்சியினை அமைக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹோமாகம நகரில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

அது போலவே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு விழா ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

குறித்த இரு கட்சிகளையும் கலைத்து விட்டு ஒரு கட்சி அமைத்தால் சிறந்தது என எனக்கு எவரோ கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

அவ்வாறு அமைக்கப்படும் அந்தக் கட்சிக்கு எவ்வாறு பெயர் அமையவுள்ளது எனவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவ்வாறு கட்சி ஒன்று அமைக்கப்பட்டால், மிகச் சரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எம்முடன் இருப்பதை காணலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகை உழுக்கிய செப்டம்பர் 11 தாக்குதலுக்கு இன்று வயது 15!!

september-11

இன்றைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னார் இதே நாளில் பயங்கரவாதத்தின் கோர தாண்டவத்தை முழு உலகம் அறிந்துகொண்ட நாளாக அமைந்தது.

ஆம் அமெரிக்காவின் நியூயோர்க் நகில் கம்பீரமாக எழுந்து நின்ற உயரமான இரட்டை கோபுரங்கள், பயங்கரவாத அமைப்பான அல்-குவைதா தீவிரவாதிகளினால் அழிக்கப்பட்டது.

கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி காலை 8:46 மணிக்கு, 19 பேர் கொண்ட அல்-குவைதா தீவிரவாதிகள் அமெரிக்காவுக்கு சொந்தமான, நான்கு பயணிகள் விமானங்களை கடத்தினர்.

அவ்வாறு கடத்திய முதல் இரண்டு விமானங்களையும் நியூயோர்க் உலக வர்த்தக மையத்தின், இரட்டை கோபுர கட்டடங்களின் மீது அடுத்தடுத்து மோத செய்து முழு உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

இந்த தாக்குதல் இடம்பெற்று 1 மணி 42 நிமிடத்துக்குள், தலா 110 மாடிகள் கொண்ட அந்த உயர்ந்த இரண்டு கட்டடங்களும் தரைமட்டமாகின.

இந்த தாக்குதலின் போது விமானங்களில் இருந்த பயணிகள் 147 பேருடன், கட்டடத்தில் இருந்த 2,606 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடத்தப்பட்ட மூன்றாவது விமானத்தை அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான, பென்டகன் மீது மோதச் செய்து மற்றுமொரு தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்த தாக்குதலின் போது விமானத்தில் இருந்த 59 பேரும், பென்டகனில் இருந்த 125 இராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

மேலும், நான்காவது விமானம் சாங்ஸ்வில் என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகியதில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

முழு உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்-குவைதா பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியிருந்தது.

இதையடுத்து பின்லேடனையும், அல்-குவைதா பயங்கரவாத அமைப்பையும் அடியோடு ஒழித்துக்கட்ட தீர்மானித்த அமெரிக்கா ‘பயங்கரவாதிகள் மீது போர்’ என்ற நடவடிக்கையை ஆரம்பித்தது.

இந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து உலக நாடுகள் பலவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் 9 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதலின் முடிவில் 2011ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி ஒசாமா பின்லேடன் கொள்ளப்பட்டார்.

தனது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பழிக்கு பழி வாக்கும் முயற்சிக்கு அமெரிக்கா பல ஆயிரம் கோடி ரூபாயை செலவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல, இரட்டை கோபுரம் இருந்த இடத்தில், ஒரு வர்த்தக மைய கட்டிடம் கட்டப்பட்டு 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி திறக்கப்பட்டது.

மேலும் ‘நெஷனல் செப்டம்பர 11 மெமோரியல் என்ட மியூசியம்’ என்ற நினைவு மையம் மற்றும் பென்டகன் மற்றும் சாங்ஸ்வில் பகுதியிலும் நினைவு மையம் என்பன திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணியில் முக்கிய பிரச்சினையாக அது உள்ளது : மனம் திறந்த டில்ஷான்!!

Sri Lankan cricket player Tillakaratne Dilshan speaks during pre-tournament media interaction ahead of their ICC World Twenty20 2016 cricket tournament in Mumbai, India, Wednesday, March 9, 2016.(AP Photo/Rajanish Kakade)

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான திலகரட்ன டில்ஷான் தனது அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுத்துள்ளார்.

கடந்த 1999ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான அவர் நேற்று முன்தினம் சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுத்துள்ளார்.

இந்நிலையில் தனது 17 வருட கால கிரிக்கெட் வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் எதிர்கால இலங்கை கிரிக்கெட் அணி குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் கடந்த போட்டிகளில் வெற்றி பெற முயற்சித்தோம் எனினும் முடியாமல் போனது. நேற்றைய போட்டியில் இன்னும் 20 ஓட்டங்களை பெற்றிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.

தோல்வியுடன் விடைபெறுவது கவலையாகத்தான் உள்ளது. எனினும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் எதிரணிக்கு சவாலளித்தே தோல்வியைத் தழுவினோம். இதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

தனஞ்சய டி சில்வா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் சிறப்பாக செயற்படுகின்றனர். தனஞ்சய டி சில்வாவுக்கு நல்ல திறமை உள்ளது.

தேர்வுக் குழு எவ்விதத்திலும் அழுத்தம் கொடுக்கவில்லை. எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் எவ்வித சர்வதேச போட்டிகளும் இல்லை. எனவே தான் தற்போது ஓய்வு பெறமுடிவெடுத்தேன்.

எஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான தேசிய அணி இளம் வீரர்களைக் கொண்டே காணப்படுகின்றது. அணியை முன்னெடுத்து செல்வது ஏஞ்சலோவுக்கு பாரிய சவாலாகும்.

இந்நிலையில், சிரேஷஷ்ட வீரர்கள் யாரும் அணியில் தற்போது இல்லை. சந்திமால் மாத்திரமே அனுபவ வீரராக உள்ளார்.

இலங்கை அணி தனது பின்னடைவில் இருந்து மீண்டு எழுவதற்கு சிறிது காலம் எடுக்கும். இலங்கையில் பிரிமியர் லீக் போன்ற இருபது20 போட்டிகளை நடத்தினால் திறமையான வீரர்களை இனம் கண்டு கொள்ள முடியும்.

அணி வீரர்கள் தவறுகள் செய்யும் போது அவர்கள் மீது கோபம் கொள்ளாது உற்சாகப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும். இதன் மூலம் வீரர்கள் தமது திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள்.

எமது அணியில் முக்கிய பிரச்சினை ஒன்று உள்ளது. அணியில் அடித்து ஆடுமளவிற்கு எந்த வீரர்களும் இல்லை.

அடித்து ஆடுவதற்கு பலம் தேவை. ஏனைய நாட்டு அணிகளிலும் இந்த பிரச்சினை உள்ளது.

இதேவேளை, அரசியல் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. அரசியல் தெரியாமல் அதற்குள் காலடி எடுத்து வைத்து துன்பத்துக்குள்ளானவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

இனம் மதம், பேதம் இல்லாமல் எனக்கு ஆதரவு உள்ளது. இதை இல்லாமல் செய்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை. அரசியல்வாதி என்ற பெயர் இல்லாமல் கூட என்னால் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்கும் சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி!!

bala

பாலா இயக்கவிருக்கும் புதிய படத்தில் நாயகனாக யுவனும், நாயகியாக பிரகதியும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

தாரை தப்பட்டை படத்தைத் தொடர்ந்து தனது படத்தில் கவனம் செலுத்தி வந்தார் இயக்குநர் பாலா, வேல.ராமமூர்த்தி எழுதிய புத்தக்கத்திலிருந்து சிறுபகுதியை எடுத்து திரைக்கதையை அமைத்து படமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா உள்ளிட்டவர்களைக் கொண்டு இப்படம் தொடங்கவிருப்பதாக பாலா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார் இந்நிலையில், அப்படத்துக்கு முன்பாக முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டார் பாலா.

இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது, இறுதியில் படத்தின் நாயகனாக சாட்டை படத்தில் நடித்த யுவன் நடிக்க உள்ளார், நாயகியாக பிரகதி குருபிரசாத் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் பிரகதி, அவரை பரதேசி படத்தின் மூலமாக பாடகராகவும் அறிமுகப்படுத்திய பாலா, தற்போது நாயகியாகவும் அறிமுகப்படுத்துகிறார்.

சம்சுங் கலக்ஸி நோட்7 செல்பேசியை இந்திய விமானங்களில் பயன்படுத்தத் தடை!!

NEW YORK, NY - AUGUST 13:  Guests demo the new Galaxy S6 edge+ and Galaxy Note5 at Samsung Unpacked 2015 on August 13, 2015 in New York City.  (Photo by Ilya S. Savenok/Getty Images for Samsung)

 

புதிய சம்சுங் கலக்ஸி நோட்7 செல்பேசியை இந்தியாவின் அனைத்து விமானங்களிலும் பயன்படுத்துவதற்கு இந்திய விமானப் போக்குவரத்துத்துறை தடை விதித்துள்ளது.

பல நாட்டு விமான நிறுவனங்கள் இந்தத் தடையை ஏற்கனவே விதித்திருக்கும் நிலையில், தற்போது இந்தியாவும் தடை விதித்துள்ளது.

விமானத்தில் பயணிக்கும்போது, சம்சுங் கலக்ஸி நோட் 7 செல்பேசியை இயங்கும் நிலையில் வைத்திருக்கவோ அல்லது மின்னூட்டம் ஏற்படுத்தவோ வேண்டாம் என்று முன்னதாக அமெரிக்க அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.

பயணிகள் எடுத்துச்செல்லும் பைகளில் அதனை வைக்காமல் இருக்க அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.

மின்னூட்டம் அளிக்கும்போது அல்லது அதற்கு பின்னர் இந்த செல்பேசி வெடித்து எரிந்து விடுவதாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், விற்பனை செய்த அனைத்து செல்பேசிகளையும் திரும்பப் பெறுவதாக சம்சுங் நிறுவனம் அறிவித்தது.

மேலும் ஜப்பான், கான்டாஸ் மற்றும் வெர்ஜின் அவுஸ்திரேலிய விமான நிறுவனங்களும் விமானத்தில் பயணிக்கின்றபோது இந்த செல்பேசியை பயன்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளன.

இந்தியாவின் தடை குறித்து, சம்சுங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சம்சுங் கலக்ஸி நோட் 7 செல்பேசி விற்பனை தொடங்கப்படவில்லை என்றும் சம்சுங் நிறுவனம் பாதுகாப்பு தொடர்பான கவனங்களை போக்குவதற்காகவே இந்தியாவில் விற்பனையை தள்ளிப்போட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களை குறைக்கக்கூடிய வகையில், மிக விரைவாக கேலக்ஸி நோட் 7 செல்பேசிகளை புதிதாக அனுப்ப இருப்பதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் வெளியான இந்த செல்பேசி வாடிக்கையாளர்களிடம் பொதுவாக மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதுவரை 25 இலட்சம் கேலக்ஸி நோட் 7 சாதனங்கள், உலக அளவில் விற்பனையாகியுள்ளன.

எதிர்காலத்தில் தொழில்சார் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை : திலகரட்ன டில்ஷான்!!

dilshan

எதிர்காலத்தில் தொழில்சார் கிரிக்கெட் போட்டிகளில் தாம் பங்கேற்கப் போவதில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார்.

17 வருடங்களாக கிரிக்கெட் மைதானத்தில் இலங்கையின் பெயரை நிலைநிறுத்திய சிறந்த வீரரான, திலகரட்ன டில்ஷான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நேற்று ஓய்வுபெற்றார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியை அடுத்து அவர் ஓய்வுபெற்றார்.

டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே விடைபெற்ற டில்ஷான், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (09) கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுத்தார்.