பரா ஒலிம்பிக்கில் தமிழக வீரர் தங்கப்பதக்கம் வென்று சாதனை!!

m1

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

31 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகின்றன.

நேற்று காலை நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய போட்டியாளர் வருண் சிங் பாட்டி வெண்கலம் வென்றுள்ளார்.

தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் தாண்டிய உயரம் 1.89 மீட்டர் ஆகும். அவருடன் போட்டியில் பங்கேற்ற சக போட்டியாளர் வருண் சிங் பாட்டி தாண்டிய உயரம் 1.86 மீட்டர் ஆகும். அமெரிக்காவைச் சேர்ந்த சாம் க்ரிவ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

m2 m3

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்‌தின் வருடாந்த பொதுக்கூட்டம்!!

poonthottam

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்‌தின் வருடாந்த பொதுக்கூட்டம் நாளை (11.09.2016) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இப்பொதுக்கூட்டத்தில் அனைத்து பழைய மாணவர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு பாடசாலையின் அதிபர் வேண்டுகோள் விடுக்கின்றார்.

ஹட்டன் பகுதியில் கோர விபத்து : ஒருவர் பலி!!

h1

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து லிந்துலை நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டி, வீதியை விட்டு விலகி புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த இருவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

h2 h3 h4

ரசிகர்களை ஏமாற்றிய டில்ஷான் : ஒரு ஓட்டத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார்!!

Sri Lanka's Tillakaratne Dilshan acknowledges the crowd at the end of the last match of his career, played in a Twenty20 cricket match against Australia in Colombo, Sri Lanka, Friday, Sept. 9, 2016. (AP Photo/Eranga Jayawardena)

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்த இலங்கை அணியின் சீனியர் வீரர் டில்ஷான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.

1999ம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய டில்ஷான் 16 ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிறந்த பங்களிப்பு அளித்துள்ளார்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டி20 போட்டியோடும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறப் போவதாக தெரிவித்திருந்தார்.

இதன்படி நேற்று கொழும்பில் நடக்கும் 2வது T20 போட்டியில் தொடக்க வீரராக களமிங்கிய டில்ஷான், தான் சந்தித்த 3 பந்துகளில் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

கடைசிப் போட்டியில் டில்ஷான் அதிரடியில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 1 ஓட்டத்தோடு கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

39 வயதாகும் டில்ஷான் 330 ஒருநாள் போட்டிகளில் 10,290 ஓட்டங்களும், 79 T20 போட்டிகளில் 1,888 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

3 4

Sri Lankan cricketers form an arch of bats as teammate Tillakaratne Dilshan enters the ground to play the final match of his career, during the second Twenty20 cricket match against Australia in Colombo, Sri Lanka, Friday, Sept. 9, 2016. (AP Photo/Eranga Jayawardena)

6

Sri Lanka's Tillakaratne Dilshan acknowledges the crowd at the end of the last match of his career, played in a Twenty20 cricket match between Sri Lanka and Australia at the R. Premadasa Cricket Stadium in Colombo on September 9, 2016. / AFP / ISHARA S.KODIKARA (Photo credit should read ISHARA S.KODIKARA/AFP/Getty Images)

மனைவின் தலையை துண்டித்த கணவன் : தலையின்றிக் கிடந்த உடலால் பரபரப்பு!!

wife

நெல்லையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் தனது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையை அடுத்த வெள்ளாளன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 47). இவர் பஞ்சாயத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜமுனா (வயது 45). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

முத்துராஜூக்கு மது குடிக்கு பழக்கம் இருப்பதால், அவர் அடிக்கடி மனைவி ஜமுனாவிடம் தகராறு செய்து வந்தார். தவிர, தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலையிலே மது குடித்த முத்துராஜூக்கு மனைவி மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் மனைவியை கொலை செய்ய முடிவெடுத்தார்.

படித்துக் கொண்டிருந்த தனது மகளை சிறிது நேரம் வீட்டில் இருந்து வெளியில் செல்லுமாறு கூறிய முத்து ராஜ், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி ஜமுனாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ஜமுனா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அதன் பிறகும் ஆத்திரம் தீராத முத்துராஜ் மனைவி ஜமுனாவின் தலையை துண்டாக வெட்டி எடுத்து தெருவில் நடந்து சென்றார்.

இதைத் பார்த்த ஊர்மக்கள் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் முத்துராஜ் எந்த பதட்டமும் இல்லாமல் மனைவியின் தலையை ஊருக்கு வெளியே உள்ள கோவில் முன்பு வைத்துவிட்டு சீதபற்பநல்லூர் பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் ரத்தவெள்ளத்தில் தலையின்றி கிடந்த ஜமுனாவின் உடலை கைப்பற்றினர்.

நடத்தை சந்தேகத்தால் பெண் ஒருவர் அவரது கணவரால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருதலைக் காதலால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

girl

இளைஞர் தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி தொல்லை கொடுத்ததால் செவிலியர் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதாச்சலம் மாவட்டம் பூதாமூர் ஏனாதிபேட்டை ஊரை சேர்ந்தவர் செல்லமுத்து. கூலி தொழிலாளியான இவரின் மகள் புஷ்பலதா அதே ஊரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த தனசேகர் புஷ்பலதாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மேலும், தன்னை காதலிக்குமாறு தினமும் புஷ்பலதாவை பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 31 ஆம் திகதி வீட்டிற்கு சென்று கொண்டிருந்த புஷ்பலதாவை தனசேகர் ஊரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகில் வழிமறித்து தன்னை காதலிக்குமாறு மீண்டும் வலியுறித்தினார்.

இதனை புஷ்பலதா ஏற்காததால் கோபம் தலைக்கேறிய தனசேகர், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவரின் சுடிதார் துப்பட்டாவை வைத்து புஷ்பலதா கழுத்தை நெரித்துள்ளார்.

அவனிடம் இருந்து எப்படியோ தப்பித்த அவர் அழுது கொண்டே வீட்டை அடைந்ததுடன் வீட்டின் பின்னால் உள்ள மரத்தில் துப்பட்டாவால் தூக்கிலிட்டு கொண்டார்.

அவர் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

9 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கு காரணமான தனசேகரை பொலிசார் கைது செய்து பின்னர் நீதிமன்ற உத்தரவுடன் அவனை கடலூர் சிறையில் அடைத்தனர்.

தொப்புள் கொடியுடன் குழிதோண்டி புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை!!

baby

கோவையில் பச்சிளம் குழந்தை தொப்புள் கொடியுடன் குழி தோண்டி புதைக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை தொண்டாமுத்தூரை அடுத்த தாளியூரில் ராஜேந்திரன் என்பவரது தென்னை மரத் தோப்பு உள்ளது. இந்த தோப்பில் நேற்று தொழிலாளர்கள் தோட்டவேலை செய்து கொண்டிருந்த பொழுது திடீரென்று குழந்தை அழுகும் குரல் கேட்டுள்ளது. உடனடியாக வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அனவைவரும் ஓடிப்போய் பார்த்துள்ளனர்.

அங்கிருந்த ஒரு குழிக்குள், ஓலை வைத்து தொப்புள் கொடி உடலில் சுற்றப்பட்ட நிலையில் எறும்புகள் மொய்த்த நிலையில் பச்சிளம் குழந்தை கிடந்துள்ளது. இதைப்பார்த்த தொழிலாளர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் குழந்தையை மீட்டு தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது.

இதுகுறித்து பொலிசார் கூறியதாவது, தோட்டத்தில் வேலை பார்ப்பவர்களில் ஒடிசா, உத்திர பிரதேசம், பீகார் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். இவர்களில் நிறைமாத கர்ப்பினி யாராவது தான் இந்த நாச வேலையில் ஈடுபட்டிருக்க கூடும். மேலும், குழந்தையை யாருக்கும் தத்து கொடுப்பதாக இல்லை, குழந்தையின் தாயாரை தேடி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

தமிழ் பெண்ணின் செயலால் மனமுருகிய ஒபாமாவின் மனைவி!!

obama

கவிதைகள் எழுதும் திறமையை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் சிறுவர், சிறுமியர்களுக்கான நிகழ்ச்சி 2011ல் இருந்து வருடம் தவறாமல் நடந்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. அதில் எல்லோரும் தங்கள் படைப்புகளை வாசித்து கொண்டிருக்கையில், சென்னை வாசியாக இருந்து பின்னர் அமெரிக்காவில் குடிபெயர்ந்த ஒரு தமிழ் தம்பதியரின் மகளான மாயா ஈஸ்வரன் (17) தன் கவிதையை ஆங்கிலத்தில் வாசித்தார்.

அந்த கவிதை ஒபாமா மனைவி மிச்சேல் மற்றும் அந்த சபையில் கூடியிருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்யும் வகையில் இருந்தது.

அந்த கவிதையானது, என் இத்தனை வருட வாழ்வில் நான் இழந்ததை விட, முக்கியமான ஒன்றை நான் இழந்திருக்கிறேன்.

என் தலை முடி உதிர்வதை போல, என் இனத்தின் அடையாளமான என் தமிழை உதிர்த்து இழந்து கொண்டிருக்கிறேன்.

என் தாய்மொழியை நான் பேசியே மூன்றாண்டுகள் ஆகிறது. என் தலைமுடி முழுதும் உதிர்வதை போல், என் தமிழை நான் முழுவதும் மறந்து விடுவேனோ என பயப்படுகிறேன்.

இதை அவர் வாசித்து முடிப்பதற்குள் அரங்கிலிருந்த மிச்சேல் மற்றும் அனைவரும் உணர்ச்சி வசத்தில், உற்சாகத்தோடு கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

நீ கவிதையை இயற்றிய விதமும், அதை வெளிப்படுத்திய தன்மையும் சிறப்பாக இருந்தது என மிச்சேல் அவர்கள் மாயாவை மனம் மகிழ பாராட்டினார்.

வவுனியா, மன்னாரில் இன்றுமுதல் அவசர அழைப்பு தமிழில்!!

 
இன்றுமுதல் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உங்களுக்கு அருகாமையில் ஏற்படும் தகவல்களை அல்லது பொலிஸாரிடம் தமிழில் முறைப்பாடு செய்யவேண்டுமானால் கீழுள்ள இலக்கத்திற்கு அழையுங்கள்.

வவுனியா- 0766224949
மன்னார்-0766226363

நேற்று இரவு 09.30 மணியளவில் வவுனியா பிரதி பொலிஸ்மாஅதிபர் காரியாலயத்தில் பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் நிகழ்ந்த இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக இலங்கையின் பொலிஸ்மா அதிபர் கௌரவ பூஜித ஜெயசுந்தர கலந்து கொண்டு இந்நிழ்வை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட உதவி அரச அதிபர் திரு.திரேஷ்குமார், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடக்கு மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கிஷோர் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபை செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர் உட்பட வவுனியாவின் பிரபல வர்தகரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தருமான திரு.செந்தில் ஆகியோருடன் பல சமூக ஆர்வலர்கள், பிரபல வர்த்தகர்கள், பிரஜைகள் குழுவினர் என பலரும் சமூகமளித்திருந்தனர்.

1 img_0285 img_0294 img_0302 img_0309 img_0318 img_0320 img_0322 img_0323 img_0333 img_0336 img_0343 img_0348

ஆசிய நாடுகளிலேயே மோசமான விமான நிலையங்களில் கட்டுநாயக்க விமான நிலையம் பத்தாவது இடம்!!

airport

ஆசிய நாடு­க­ளி­லேயே மிகவும் மோச­மான விமான நிலை­யங்­களின் தரப்­ப­டுத்­தலில் இலங்­கையின் கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலையம் பத்­தா­வது இடத்தைப் பிடித்­துள்­ளது.

வெளி­நாட்டு இணை­யத்­த­ள­மொன்று வெளி­யிட்­டுள்ள இந்த தரப்­ப­டுத்­தலில் நேபா­ளத்தின் காத்மண்டு ட்ரிபுவான் சர்­வ­தேச விமான நிலை­ய­மா­னது முத­லிடம் வகிக்­கி­றது.

இப்­பட்­டி­யலில் உஸ்­பெ­கிஸ்­தானின் டாஸ்கெண்ட் சர்­வ­தேச விமா­ன­நி­லையம் இரண்டாம் இடத்தையும் ஆப்­கா­னிஸ்­தானின் காபுல் ஹமீட் கர்சாய் சர்­வ­தேச விமான நிலையம் மூன்றாம் இடத்­தையும் வகிக்­கின்­ற­ன.

விமான நிலை­யத்தில் காணப்­படும் பல்­வேறு கார­ணி­களை கருத்திற்கொண்டு இவ்­ வரிசைப்படுத்தல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. விமா­னப்­ப­ய­ண­க­ளுக்கு வழங்­கப்­படும் வச­திகள் மற்றும் உணவு உப­ச­ரிப்­புகள் தொடர்­பிலும் இதன்­போது கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக அந்த இணை­யத்­தளம் தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன் விமா­னப்­ப­ய­ணி­களின் பய­ணப்­பொ­திகள் தொடர்பில் பொறுப்புக் கூறலும் இதில் கவனத்தில் கொள்­ளப்­பட்­டுள்­ளது. அதே­வேளை, கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தின் பல்­வேறு குறைப்­பா­டு­களை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

விமான நிலைய வளாகம் கழிவுப் பொருட்­களால் சூழ்ந்­துள்­ளமை, மல­ச­லக்­கூட கட்­ட­மைப்பு சுகாதா­ர­மான முறையில் காணப்­ப­டாமை போன்­ற­வற்­றினை குறித்த இணை­யத்­தளம் குறைபாடாக குறிப்­பிட்­டுள்­ள­துடன் விமான நிலைய ஊழி­யர்­களின் திற­மை­யற்ற செயற்பாட்டினையும் குறை­பா­டு­களில் ஒன்­றாக உள்­ள­டக்­கி­யுள்­ளது.

எனினும், கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்­தினுள் உள்­நாட்டு தொலைபேசி நிறு­வ­னங்­களின் சிம் அட்­டை­களை பெற்றுக் கொள்­வ­த­ற­கான வச­தி­களை ஏற்­ப­டுத்தி கொடுக்கப்­பட்­டுள்­ளமை மிகவும் அனு­கூ­ல­மான விட­ய­மொன்­றாகும் என அவ்­வி­ணை­யத்­தம் குறிப்பிட்டுள்ளது.

மனைவியுடன் வசிப்பதைத் தவிர்த்து சிறை செல்வதற்காக வங்கியில் கொள்ளையடித்த 70 வயது நபர்!!

man

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனை­வி­யுடன் வீட்டில் வசிப்­ப­தற்கு விரும்­பாமல், சிறையில் தங்­கு­வ­தற்­காக வங்­கி­யொன்றில் கொள்­ளைய­டித்­துள்ளார்.

கான்சாஸ் மாநி­லத்தைச் சேர்ந்த லோரன்ஸ் ரிப்பிள் எனும் 70 வய­தான இந் ­நபர், தனது மனைவியுடன் ஏற்­பட்ட மோத­லை­ய­டுத்து, ‘இவ் ­வீட்டில் இருப்­ப­தை­விட சிறையில் இருக்­கலாம்’ எனக் கூறினார் என நீதி­மன்றில் கடந்த செவ்­வாய்க்கி­ழமை வெளிப்­ப­டுத்­தப்­பட்ட ஆவ­ணங்­களில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மனை­வி­யு­ட­னான மோதலின் பின், கான்சாஸ் சிட்டி வங்கிக் கிளை­யொன்­று க்குச் சென்ற லோரன்ஸ், தன்­னிடம் துப்­பாக்கி இருப்­ப­தா­கவும் தனக்குப் பணம் வழங்­கு­மாறும் எழு­தப்­பட்ட கடதாசிக் குறிப்­பொன்றை காசா­ள­ரிடம் கொடுத்தார்.

அக் ­கா­சாளர் 3,000 டொலர்­களை லோரன்­ஸிடம் கொடு­த்தார். ஆனால், பணத்தை வாங்­கிக்­கொண்டு அவர் தப்­பிச்­செல்­ல­வில்லை. மாறாக பொலிஸார் வரும்­வரை காத்­தி­ருந்தார்.

மனை­வி­யுடன் வீட்டில் வசிப்­ப­தற்கு தான் விரும்பவில்லை என பொலிஸாரி டம் லோரன்ஸ் கூறினார் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்தில் காணாமற்போன 4 வயது பிள்ளை பொலிஸாரால் மீட்பு!!

kidnapping

புத்தளம் வான வீதி பகுதியில் காணாமற் போயிருந்த நான்கு வயது பிள்ளையை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வண்ணாத்திவில்லு பகுதியிலிருந்து முச்சக்கர வண்டி மூலம் பிள்ளையை புத்தளத்திற்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த போதே மீட்டெடுத்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்திய பிரஜை ஒருவரே இந்த பிள்ளையை அழைத்துச் சென்றுள்ளார்.

குறிப்பிட்ட இந்திய பிரஜை உட்பட பிள்ளையை அழைத்துச் சென்ற இரண்டு பெண்களும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய முச்சக்கர வண்டி சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களான பெண்கள் இருவரும், இந்திய பிரஜையும் வண்ணாத்திவில்லு பகுதியில் பிள்ளையை மறைத்து வைத்திருந்தமை ஆரம்பக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரதேசத்திலுள்ள பெண்ணொருவரால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் சந்தேகநபரான இரண்டு பெண்களையும் முதலில் கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர்களான இரண்டு பெண்களில் ஒருவரது கணவரான இந்திய பிரஜை, முச்சக்கர வண்டி மூலம் பிள்ளையை புத்தளத்திற்கு கொண்டுசென்றுள்ளார்.

இந்த சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பாதுகாப்புடன் மீட்கப்பட்ட பிள்ளை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மது போதையில் மரம் கைது!!

tree

பிரித்தானிய இராணுவ அதிகாரியொருவர் மது அருந்திய நிலையில், மரமொன்றை கைது செய்ய உத்தரவிட்டமையால் குறித்த மரம் 118 வருடங்களாக சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. குறித்த மரம் பாகிஸ்தானில் காணப்படுகின்றது.

பிரித்தானிய ஆட்சியில் இந்தியா இருந்த காலத்தில், 1898 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஸ்குய்ட் எனும் பிரித்தானிய இராணுவ அதிகாரியே அம்மரத்தினை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதிக மதுபோதையில் காணப்பட்ட குறித்த இராணுவ அதிகாரி மரம் நகர்ந்து செல்வதாக கூறி அம்மரத்தினை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதையடுத்து, அம்மரம் தரையுடன் சங்கிலியால் தரையுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

குறித்த மரம் இன்னும் தரையுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டவாறு காணப்படுகின்றது.

மன்னிப்பு கோரியது கூகுள்!!

google-products-services

கூகுள் அனல்டிக்ஸ் சேவை நேற்று முதல் பாதிப்படைந்துள்ளது. இணையத்தளங்களுக்கு வருகை தரும் பயனாளிகளின் புள்ளிவிபரங்களை வழங்குவதை தமது சேவையாக இது கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூகுள் அனல்டிக்ஸ் இது தொடர்பாக தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமது கூகுள் அனல்டிக்ஸில் ஏற்பட்ட தடங்களிற்கு மன்னிப்பு கோரியுள்ளது.

மேலும், நாளை முதல் தமது சேவை வழமைக்கு திரும்பும் என தெரிவித்துள்ளது.

goglel

ஒரு வருடத்தில் 777 கொலைகள் : அதிக கூடிய கொலைகள் இடம்பெற்ற மாகாணம் எதுவென தெரியுமா?

murder

2015 ஆம் ஆண்டு முதல் கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் 777 கொலைகள் இடம்பெற்றுள்ளதோடு மேல் மாகாணத்தில் 218 கொலைகளும் வடக்கு கிழக்கில் 96 கொலைகளும் பதிவாகியுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐ.ம.சு.முவின் ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எம்.பி. எழுப்பிய கேள்வி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி வரையிலான காலப்பகுதியில் 443 கொலைகள் இடம்பெற்றுள்ளன. இதில் 128 கொலைகள் மேல் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன.

அதேநேரம் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி முதல் 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி வரை நாட்டில் 334 கொலைகள் இடம்பெற்றுள்ளன. இதில் மேல்மாகாணத்தில் 90 கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவை இடம்பெற்ற பிரதேச ரீதியாக பார்க்கையில், அநுராதபுரத்தில் 32, அம்பாறையில் 24, பதுளையில் 14, மட்டக்களப்பில் 18, பண்டாரவளையில் 15, சிலாபம் 18, வடகொழும்பு 13, தென்கொழும்பு 9, மத்திய கொழும்பு 9, எம்பிலிப்பிட்டிய 51, காலி 30, கம்பளை 5, அட்டன் 2, யாழ்ப்பாணம் 16, களுத்துறை 27, கண்டி 20, கந்தளாய் 3, களனி 25, கேகாலை 15, சீதாவக்கை 10, குருநாகல் 18, குளியாப்பிட்டிய 22, மாத்தளை 18, மாத்தறை 33, கல்கிசை 19, மொனராகலை 21, நீர்கொழும்பு 18, நுகேகொட 37, நுவரெலியா 8, நிக்கவரெட்டிய 11, பாணந்துறை 19, பொலன்னறுவை 19, இரத்தினபுரி 46, தங்காலை 37, திருகோணமலை 8, வவுனியா 9, புத்தளம் 16, காங்கேசன்துறை 3, மன்னார் 1, கிளிநொச்சி 9, முல்லைத்தீவு 05, குற்றப்புலனாய்வு திணைக்களம் 1 என பதிவாகியுள்ளன.

மொத்தமாக பதிவாகிய 777 தொகைகளில் 43 கொலைகள் வடக்கிலும், 53 கொலைகள் கிழக்கிலும் பதிவாகியுள்ளன. இந்த 777 கொலைச் சம்பவங்களில் 82 கொலைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதேவேளை 2013, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளின் முதல் 8 மாதகாலப்பகுதியில் முறையே 402, 391, 30 என்றவாறு கொலைகள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை 2015.01.01 திகதி முதல் 2016.08.01 திகதி வரையிலான காலப்பகுதியில் 267 கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. 2015 ஜனவரி முதலாம் திகதி முதல் 2016 ஆகஸ்ட் முதலாம் திகதி வரையில் இடம்பெற்ற கொலை முயற்சிகள் கொலைகளின் 156 சம்பவங்களில் சுடுவிசைக்கலன்கள் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

நடிகையால் விஜய் வாங்கிய திட்டு!!

vijay

இளைய தளபதி விஜய் தனக்கென்று மாஸ் ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். அவரை யாராவது திட்ட முடியுமா அப்படி திட்டினால் அவருடைய ரசிகர்கள் விடுவார்களா வெளுத்து வாங்கிவிடுவார்கள்.

அந்த வகையில் விஜய்யின் திரைப்பயணத்தில் ஆரம்ப காலத்தில் அவருடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் சங்கவி.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் விஜய் சாருடன் இணைந்து நடித்த போது ஆற்றில் இறங்குவது போல் ஒரு காட்சி.

அதில் நான் வேகமாக இறங்கிவிட்டேன், விஜய் இறங்கவில்லை, அதற்கு அந்த படத்தின் இயக்குனர், “ஏன் உன்னால் இறங்க முடியாதா?” என கோபமாக கேட்டார், அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தான்’ என கூறியுள்ளார்.