ஜனாதிபதி இணையத்தில் ஊடுருவிய மாணவனுக்கு அடித்த அதிஷ்டம்!!

hack

குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் சைபர் குற்றங்களுக்கு தண்டனை வழங்க புதிய சட்டம் கொண்டு வரவுள்ளதாக, அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தில் பாதுகாப்பு குறைவுள்ளதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அமைச்சர் ஹரின் இதன்போது கூறியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவியதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள 17 வயது சிறுவன் கல்வியில் சிறந்து விளங்கும் ஒருவர் என்பதால் அவருக்கு புலமைப் பரிசில் வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இவ்வாறு இடம்பெற்றிருப்பின் வௌ்ளை வேன் வந்திருக்கும் என சுட்டிக்காட்டிய அவர், ஆனால் நாம் அந்த மாணவனுக்கு புலமைப் பரிசில் வழங்குவது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இணையத்தை முடக்கியவருக்கு வேலைவாய்ப்பு

ஜனாதிபதியின் இணையத்தை முடக்கிய இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக BOUNTY LAB INTERNATIONAL PVT LTD அறிவித்துள்ளது.

hack1

ஐக்கிய இராச்சியத்தில் தலைமையகத்தை கொண்டுள்ள குறித்த நிறுவனம் தற்பொழுது இலங்கையிலும் செயற்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் ஜனாதிபதியின் இணையத்ததை ஹேக் செய்த இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

இவ்வாறான இளைஞர்கள் உலக அளவில் குறைவாகவே இருக்கின்றனர், இவர்களை நம் நாட்டிற்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும், இவர்களை பண்படுத்தவும் வேண்டும். நெறிமுறைகளை சொல்லிக் கொடுத்து வளப்படுத்த வேண்டும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜனாதிபதியின் வெற்றிப்பாதைக்கு வழி செய்த இணைய கம்பனிகளில் ஒன்றான எமது நிறுவனம் என்ற அடிப்படையில் அந்த இளைஞனை உடனடியாக விடுவித்து நல்லதொரு பாதைக்கு இட்டுச் செல்ல வழியமைத்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரிலிருந்து வெளியேறினார் மத்தியூஸ்!!

Mathews

நேற்று ரங்கிரி தம்புள்ள மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய வேளையில் இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ்.

பின்கால் தசை உபாதையால் அவதிப்பட்டு போட்டியின் நடுவில் Retired hurt முறையில் மைதானத்தை விட்டு வெளியேறினார். பின் இலங்கை போட்டியில் விக்கட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டு இருக்கும் போது அந்த உபாதையோடு அணிக்காக இறுதி நேரத்தில் வந்து 12 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

ஆனாலும் அந்த ஓட்டங்கள் இலங்கை அணியை வெற்றிக்கு எடுத்துச் செல்ல முடியமால் போனது. எது எவ்வாறாயினும் உபாதையோடு மீண்டும் வந்து துடுப்பாடியது பாராட்டத்தக்க விடயமே.

இந்த நிலையில் தற்போது அஞ்சலோ மத்தியூஸ் பின்கால் தசை உபாதையால் அவுஸ்திரேலிய தொடரில் இருந்து வெளியேறி இன்று கொழும்பு நோக்கி வந்து CT ஸ்கேனிற்கு உட்படுத்தப்பட உள்ளார்.

இதனால் இறுதி ஒருநாள் போட்டி மற்றும் திலகரத்ன டில்ஷான் இலங்கை அணிக்காக விளையாட உள்ள கடைசி 2 டி20 சர்வதேசப் போட்டிகளிலும் அஞ்சலோ மத்தியூஸ் பங்கு கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் இன்னும் அஞ்சலோ மத்தியூசுக்குப் பதிலாக இன்னுமொரு வீரரை அணிக்கு அழைக்கவில்லை. அத்தோடு அணியின் தலைமைப் பதவி உப தலைவர் தினேஷ் சந்திமாலிற்கு வழங்கப்பட்டுள்ளது.

தினேஷ் சந்திமால் நேற்று போட்டியின் பின் செய்தியாளர் மாநாட்டில் பேசும் போது, அஞ்சலோ மத்தியூசின் உபாதை மிக மோசமான நிலையில் உள்ளதால் அநேகமாக அவுஸ்திரேலிய தொடரில் இருந்து வெளியேறுவார்” என்று கூறி இருந்தார்.

4 வருடங்களுக்கு முன், பின்கால் தசை உபாதை காரணமாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற கொமன்வெல்த் பேங்க் முத்தரப்பு போட்டித் தொடரின் இறுதி போட்டிகள் மற்றும் பங்களாதேஷில் நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகளிலும் மத்தியூஸ் பங்குகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கிளிநொச்சியில் குடும்பப் பெண் சடலமாக மீட்பு!!

Kilinochchi

கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வட்டக்கச்சி பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து, 2 பிள்ளைகளின் தாயான 50 வயதுடைய சிறிஸ்கந்தராசா சந்திரபாரதி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன், வட்டக்கச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இக் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Kilinochchi1

வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் 36வது நினைவு தினம்!!

 
வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகிலிருக்கும் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தூபிக்கு முன்னால் இன்று(01.09.2016) காலை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு.சந்திரகுமார் (கண்ணன்) தலைமையில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் நகரசபை உபபிதா சந்திரகுலசிங்கம் (மோகன்), முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், மற்றும் சமூகசேவையாளர்கள், பொது மக்கள், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆசிரியர், மாணவர்கள், தனிநாயகம் அடிகளாரின் சிலையினை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அனிதா தொலைத் தொடர்பாக உரிமையாளர் கலந்து கொண்டதுடன் சமூக சேவைகள் உத்தியோகத்தரினால் அன்னாரின் நினைவுப் பேருரையினை வழங்கியதையடுத்து அன்னாரின் திருவருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1 IMG_0013_1 IMG_0015_1 IMG_0016_1 IMG_0019_1 IMG_0021_1 IMG_0022_1 IMG_0023_1 IMG_0027_1 IMG_0030_1 IMG_0038_1 IMG_0040_1

வவுனியா நகரில் துர்நாற்றம் வீசும் கால்வாய் : மக்கள் விசனம்!!

 
வவுனியா நகரின் மத்தியிலிருக்கும் கால்வாயிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அவ்வீதியூடாக போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா நகர் மத்தியிலிருக்கும் இக் கால்வாயில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் டெங்கு நுளம்பு பெருக்கெடுக்க வாய்ப்புக்கள் இருப்பதால் வவுனியா நகரசபையினர் இவ்விடயத்தில் கவனம் எடுத்து இக்கால்வாயினை சுத்தப்படுத்தித்தருமாறும் பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

IMG_0032 IMG_0033 IMG_0034 IMG_0036 IMG_0041 IMG_0042

வவுனியா இளைஞன் மலேசியாவில் உயிரிழப்பு!!

{"total_effects_actions":0,"total_draw_time":0,"layers_used":0,"effects_tried":0,"total_draw_actions":0,"total_editor_actions":{"border":0,"frame":0,"mask":0,"lensflare":0,"clipart":0,"text":0,"square_fit":0,"shape_mask":0,"callout":0},"effects_applied":0,"uid":"B1C8A7AF-1829-4957-9AD8-C48F4E938E7A_1472708325020","width":347,"photos_added":1,"total_effects_time":0,"tools_used":{"tilt_shift":0,"resize":0,"adjust":0,"curves":0,"motion":0,"perspective":0,"clone":0,"crop":1,"enhance":0,"selection":0,"free_crop":0,"flip_rotate":0,"shape_crop":0,"stretch":0},"sources":[],"source":"editor","origin":"gallery","height":532,"subsource":"done_button","total_editor_time":136,"brushes_used":0}

வவுனியாவிலிருந்து மலேசியாவிற்கு தொழிலின் நிமித்தம் சென்ற ரதீசன் என்ற 23 வயதுடைய வவுனியா கொந்தரன்குளம் (கற்பகபுரம்) பகுதியில் வசித்தவந்த இளைஞன் கடந்த ஐந்து வருடங்களுக்க முன்னர் தொழில் வாய்ப்பினைப் பெற்று மலேசியா சென்றிருந்தார்.

எனினும் கடந்த 25ஆம் திகதி குறித்த இளைஞன் இறந்தவிட்டதாக வவுனியாவிலிருக்கம் வீட்டாரிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை வவுனியாவிற்கு எடுத்துவரப்பட்ட குறித்த இளைஞனின் உடல் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை.

மலேசியாவில் உறவினர் ஒருவரே உடலினைப் பொறுப்பேற்றுள்ளதாக தெரியவருகின்றது.

வவுனியா கனகராயன்குளத்தில் குழவிகொட்டி 6 பேர் வைத்தியசாலையில்!!

Kulavi

வவுனியா கனகராயன்குளம் ஆரம்பப் பாடசாலையில் காணப்பட்ட குழவிக்கூடு கலைந்து வந்து கொண்டியதில் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா கனகராயன்குளம் ஆரம்பப் பாடசாலை இரண்டாம் தவணை முடிவின் பின் நேற்று ஆரம்பமானது. இந்நிலையில் பாடசாலைக்கு அருகே காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து வந்து அதிபர், ஆசிரியர் உட்பட ஆறு பேரை தாக்கியுள்ளது.

குளவிக்கொட்டுக்கு இலக்கான ஆறு பேர் புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பாடசாலை அதிபர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய காலவகாசம்!!

MC

சட்டப்படியான ஆவணங்களற்ற மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு நான்கு மாத காலவகாசத்தை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூலம் இதுவரை பதிவுசெய்யப்படாத மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு அரசு அவதானம் செலுத்தியுள்ளது.

இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்படாததால் அரசுக்கு வருடாந்தம் பாரிய இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே உரிய சட்டரீதியான ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிள்களை பரிசோதித்த பின் அவற்றுக்கான பதிவுகளை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுலைமான் படுகொலை : சடலத்தை கொண்டுச் சென்றவர்கள் தொடர்பில் தகவல் வெளியானது!!

Sulaiman

பம்பலப்பிட்டியில் வசித்துவந்த கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமானின் படுகொலை தொடர்பில் சேதாவக்க மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசங்களில் வசிக்கும் இருவர் தொடர்பில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சுலைமானை படுகொலை செய்து சடலத்தை மாவனெல்லைக்கு கொண்டுச் செல்வதற்கு இவர்கள் இருவரும் உதவியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவர்களிடம் பொலிஸார் பல தடவைகள் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும், மேலும் பல சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, மொஹமட் சுலைமானின் படுகொலை, பல மாதங்களாக திட்டமிடப்பட்ட ஒன்றென தெரியவந்துள்ளது.

சுலைமானை கொலை செய்தவர்கள், ஆதாரங்களை அழித்துள்ளதாகவும் அவர்களை கண்டறிவதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 4 தொடக்கம் கொழும்பு 6 வரையும் கொழும்பு 4 தொடக்கம் 3 வரையும், கேகாலை தொடக்கம் மாவனெல்ல மற்றும் ஹெம்மாத்தகம பகுதி வரையும் பொருத்தப்பட்டுள்ள 200 சி.சி.ரி.வி காணொளிகளை தற்போது ஆய்வு செய்துவருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கொலையாளிகளை அடையாளம் காணும் வகையில் இதுவரை சுமார் 75 பேரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொஹமட் சுலைமான் கொலை செய்யப்பட்டு, பத்து நாட்கள் கடந்துள்ள போதிலும் பொலிஸாரால் இதுவரை கொலையாளிகள் அடையாளம் காணப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மொஹமட் சுலைமான் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சுமார் 20 பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மலேசிய முருகன் ஆலயத்தில் தாக்குதல் நடத்த திட்டம் : 3 தீவிரவாதிகள் கைது!!

Lord-Murugan-Temple-malaysia

மலேசிய சுதந்திர தின நிகழ்வை சீர்குலைக்கும் நோக்கில், அங்குள்ள உலகப் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ் தீவரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மூவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு பொலிஸ் துறை அதிகாரி காலித் அபு பக்கர், மலேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுதந்திர தினம் அமைதியாகக் கொண்டாடப்பட்டது.

சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது, பத்துமலை முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய மூவரை சில தினங்களுக்கு முன்னர் கைது செய்துள்ளோம்.

குறித்த மூவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை செலாங்கர் நகரில் சந்தேகத்தின் பேரில் கடந்த 27ஆம் திகதி கைது செய்தோம்.

அவரிடம், துப்பாக்கிகள் இருந்தன. அதேபோல் கடந்த 29ஆம் திகதி மேலும் 2 பேரைக் கைது செய்துள்ளோம். மலேசியாவில் தாக்குதல் நடத்திவிட்டு, சிரியாவுக்கு தப்பிச் செல்ல குறித்த மூவரும் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த மூவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்துகொள்வதற்காக சிரியா செல்ல திட்டமிருந்த 68 பேரின் கடவுச்சீட்டுகளை மலேசிய அரசு கடந்த மாதம் மீளப்பெற்றுக்கொண்டது.

அத்துடன், புசாங் நகரில் உள்ள இரவுவிடுதி ஒன்றில் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நல்லூரில் மக்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்த வெள்ளைக்கார பெண்!!

N

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா தற்போது மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இருபத்து மூன்று நாட்கள் விசேட பூசை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 24 ஆம் நாளாகிய இன்று இரதோற்சவத் திருவிழா இடம்பெற்றது.

இந்த நிலையில் உள் நாட்டின் பல பாகங்களில் இருந்து அநேகமான மக்கள் இங்கு வருகைதந்திருந்தனர். இவ்வாறு இருக்கையில் தமிழரின் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் வகையில் வெளிநாட்டு பெண் ஒருவர் வந்தமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

N2

புதிய மாற்றம் காணும் பேஸ்புக்கின் மற்றுமொரு வசதி!!

Facebook

நாளுக்கு நாள் புதிய பயனர்களை உள்வாங்கி 2 பில்லியன் பயனர்கள் எண்ணிக்கையை நோக்கி நகர்ந்து கொண்டிக்கும் சமூகவலைத்தளமாக பேஸ்புக் காணப்படுகின்றது.

இத்தளமானது புதிய பயனர்களைக் கவர்வதற்காகவும், ஏனைய பனர்களை தக்கவைப்பதற்காககவும் பல்வேறு புதிய வசதிகளையும், மாற்றங்களையும் வழங்கி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக ட்ரெண்டிங் ரொபிக்ஸ் (Trending Topics) வசதியில் அதிரடி மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய ரீதியில் உள்ள பேஸ்புக் பயனர்களால் அதிகம் தேடப்படும், அல்லது பயன்படுத்தப்படும் சொல் அல்லது சொற் தொடரே Trending Topics ஆகும்.

இவ் வசதியில் இதுவரை காலமும் குறித்த சொல் அல்லது சொற் தொடர் உட்பட அதன் உப தலைப்பும் இடம்பெற்றிருந்தது.

ஆனால் புதிய வசதியின் அடிப்படையில் ரெண்டிங் ஆகும் சொல் அல்லது சொற் தொடருடன், அச் சொற் தொடரினை எத்தனை பயனர்கள் பயன்படுத்துகின்றனர் என காண்பிக்கப்படவுள்ளது.

இதனால் இனி வரும் காலங்களில் ட்ரெண்டிங் ஆனது ஏட்டிக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாணவியை அடித்து கொன்றது ஏன் : கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!!

Killed

என்னையும், எனது காதலையும் மதிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மாணவி சோனாலியை அடித்துக்கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள கொலையாளி உதயகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.

கரூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு சிவில் பாடம் படித்து வருகிறார் சோனாலி. இவர் வழக்கம்போல் நேற்று வகுப்பறைக்கு சென்று அங்கு அமர்ந்துள்ளார்.

அப்போது திடீரென வகுப்பறைக்குள் புகுந்த உதயகுமார் என்ற மாணவன், கட்டையால் சோனாலியை தாக்கியுள்ளார். இதில், வலி தாங்க முடியாத சோனாலி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இதனைத்தொடர்ந்து கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், அதன் பின்னர் மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஆனால், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சோனாலி உயிரிழந்தார். மாணவியை தாக்கிய உதயகுமார் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர் ஆவார்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் கல்லூரிக்குள் புகுந்த இவர் இந்த வெறிச்செயலை நிகழ்த்தியுள்ளார்.

பின்னர் கல்லூரி அருகே உள்ள மண்மங்கலத்தில் பதுங்கி இருந்த உதயகுமாரை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர். உதயகுமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.

அவரிடம் கரூர் டவுன் பொலிஸ் நிலையத்தில் வைத்து நேற்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவியை கொன்றது தொடர்பாக உதயகுமார் வாக்குமூலம் அளித்துள்ளான்.

“சோனாலி அமைதியாகவும், அழகாகவும் இருப்பார். இதனால் அவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தேன். சோனாலி என்னிடமும் போனில் பேசி வந்தார்.

இதற்கிடையில் என்னை நடத்தை சரியில்லை என்று கல்லூரி நிர்வாகம் நீக்கியதால் என்னிடம் பேசுவதை சோனாலி தவிர்த்து விட்டார்.

நான் அவரிடம் பேசுவதற்கு எவ்வளவோ முயன்றும் என்னால் முடியவில்லை. என்னையும், எனது காதலையும் மதிக்கவில்லையே என்று வேதனைப்பட்டேன். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால் ஒரு முடிவுடன் கல்லூரிக்கு வந்தேன். அவர் இருக்கும் வகுப்பறைக்குள் ஆத்திரத்துடன் நுழைந்தேன். இருவருக்கும் இடையே அப்போது தகராறு ஏற்பட்டது.

அடக்க முடியாத ஆத்திரத்தில் வகுப்பறையில் இருந்த கட்டையை எடுத்து அவள் தலை மீது தாக்கினேன். என்னை தடுக்க வந்தவர்களையும் தாக்க முயன்றேன். இதனால் அவர்கள் பயந்து ஓடிவிட்டனர்.

இதன் பின்னர் நான் தப்பிவிட்டேன் என்று கூறியுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாயின் சடலத்தை 12 கி.மீ மோட்டார் சைக்கிலில் கொண்டு சென்ற மகன் : தொடரும் ஆவலங்கள்!!

Dead2

நாட்டையே மனம் உருக வைத்த ஒடிசா சம்பவத்தை போல் மத்தியபிரதேசத்தில் மகன், தாயின் சடலத்தை 12 கி.மீ பைக்கில் கொண்டு சென்ற அவல சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஒடிசாவில் இறந்த தனது மனைவின் உடலை ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் கணவன் தோளில் சுமந்து சென்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதேபோல மற்றொரு சம்பவம் மத்திய பிரதேசத்தின் உலாட் கிராமத்தில் அரங்கிகேறியுள்ளது.

மத்திய பிரதேசம் உலாட் கிராமத்தை சேர்ந்த பர்வதா பாய் என்ற 70 வயது பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது மகன் ஆம்புலன்சை பலமுறை அழைத்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் வரவில்லை. தொடர்ந்து அவர் முயற்சி செய்த போது ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வரமறுத்துள்ளனர்.

இதனால் 2 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அந்த பெண்ணை நடுவில் உட்காரவைத்து 12 கி.மீ தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த பெண் உயிர் இழந்துள்ளார்.

உடனடியாக மீண்டும் 12 கி.மீ தூரத்திற்கு அந்த பெண்ணின் உடலை இளைஞர்கள் மோட்டார் சைக்கிளிலேயே கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீனவர் வலையில் சிக்கிய டொல்பின்!!

Dolphin

யாழ்.மதாகல் குசுமந்தர கடற்பரப்பில் 7 அடி நீளமான டொல்பின் மீன் தற்செயலாக இறந்த நிலையில் மீனவரின் வலையில் அகப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரி தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை காலை குறித்த மீனவர் மீன் பிடிப்பதற்காக கடலில் வலை வீசியிருந்த போது, அவரின் வலைக்கு இந்த டொல்பின் மீன் அகப்பட்டுள்ளது.

மீனவர் உடனடியாக கடற்படையினருக்கு தகவல் வழங்கியதன் பிரகாரம், கடற்றொழில் நீரியல் வளத்துறையினருக்கு அறிவித்ததன் பின்னர் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று மீனை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அந்தப் பகுதியிலே மீனை வெட்டி புதைத்துள்ளனர். இது சுமார் 7 அடி நீளமான 100 கிலோவிற்கும் அதிகமான எடையுடைய டொல்பின் மீன் என்று கூறப்படுகிறது.

இரவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் இறக்கும் வாய்ப்பு அதிகம் : ஆய்வில் தகவல்!!

operation

இரவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் போது நோயாளிகள் இறக்கும் வாய்ப்பு இரு மடங்கு அதிகம் என கனடா நாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொது மருத்துவமனையொன்றில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெற்ற அறுவை சிகிச்சைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

அந்த அறுவை சிகிச்சைகள் நடைபெற்ற நேரம், காலை 7 மணியிலிருந்து மாலை 3.29 வரையிலும் ஒரு பிரிவாகவும், மாலை 3.30 முதல் இரவு 11.29 வரை ஒரு பிரிவாகவும், இரவு 11.30 முதல் காலை 7.29 வரை மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டது.

5 ஆண்டு காலகட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட, மருத்துவமனையில் தங்கியிருந்த 40,044 நோயாளிகளில் 33,942 பேருக்கு 41,716 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த அறுவை சிகிச்சைகளில், 352 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அவர்களில், பகல் நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்களைவிட, இரவு நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்கள் 2.17 மடங்கு அதிகமான அளவில் உயிரிழந்தனர்.

மேலும், பகலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களைவிட, மாலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் இறக்கும் வாய்ப்பு 1.43 மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்தது.