திண்டுக்கல் லியோனி சாலை விபத்தில் மரணம்?

Lioni

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியை தெரியாதவர்கள் யாரும் இல்லை. இவரின் நகைச்சுவையான பேச்சுக்கு பலரும் ரசிகர்கள். இதுமட்டுமின்றி கங்கா கௌரி என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் இவர் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தவிட்டதாக ஒரு செய்தி உலா வந்தது.

அவருக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லையாம், நன்றாக தான் இருக்கிறாராம். மேலும், வேண்டுமென்றே இப்படி தகவல்களை ஒரு சிலர் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள் என லியோனியே புகார் தெரிவித்துள்ளார்.

லியோனி ஆளுங்கட்சியை பல மேடைகளில் ரைடு விடுவார், இதை அந்த கட்சி ஆதரவாளர்கள் தாங்க முடியாமல் தான் இப்படிப்பட்ட வேலைகளை செய்கிறார்கள் என அவர் தரப்பில் கூறப்படுகின்றது.

காட்டு யானைகளின் உயிரிழப்பை தடுக்க புதிய திட்டம்!!

Elephant

காட்டு யானைகளின் உயிரிழப்புபை தடுக்கும் நோக்கில் வீதிகளூடாக யானைகள் கடக்குமிடங்களில் பொலிஸ் அரண்களை அமைப்பதற்கு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாக வனஜீவராசிகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வேகமாக பயணிக்கும் வாகனங்களை தொடர் சோதணைகளுக்கு உட்படுத்துவதனூடாக காட்டு யானைகள் மோதி உயிரிழப்பதை குறைத்துக் கொள்ள முடியும் என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார் .

இவ்வாறான ஒரு சில பாதைகளே காணப்படுவதால் அது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் கவனம் செலுத்துதல் இலகுவானது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

சொந்தமாக விளையாட்டு நிறுவனம் தொடங்கிய சச்சின்!!

Sachin

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவனாக இருந்தவர் சச்சின் தெண்டுல்கர். சுமார் 24 வருடங்கள் சர்வதேச அணிக்காக விளையாடிய அவர், தற்போது எஸ்.ஆர்.டி. ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் விளையாட்டு மேலாண்மை நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனத்திற்கு மிரின்மோய் முகர்ஜி என்பவரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளார். இவர் டாடா குழுமத்தின் முன்னாள் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியாவார்.

24 வருட எனது கிரிக்கெட் வாழ்க்கையில், என்னுடைய முழு கவனத்தையும் கிரிக்கெட்டின் மீதே வைத்திருந்தேன். தற்போது ஓய்வு பெற்ற பிறகு, என்னுடைய நிறுவனத்தில் உள்ளவர்கள் அர்ப்பணிப்பால் நான் ஏராளமான முயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களின் சிறப்பான பணிகளால் கிடைத்த பலன்களை நான் ஏற்கனவே பார்த்துள்ளேன். மேலும், அற்புதமான முயற்சிகளை எதிர்நோக்கியிருக்கிறேன்.

நானும் என்னிடம் 16 ஆண்டுகளாக முகாமையாளராக இருந்த வினோத் நாயுடுவும் இணக்கமாகவே பிரிந்தோம். அவர் உலக ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் (WSG) பொது முகாமையாளராக இருக்கிறார். அவர் எனது நிறுவனத்தில் இணையும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால், அந்த வாய்ப்பை அவர் மறுத்து விட்டார்’’ என்றார் சச்சின்.

பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்!!

Poomi

பூமிக்கு மிக நெருக்கமாக ராட்சத விண்கல் ஒன்று நெருங்கி வந்து கொண்டிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் இதுவரை விஞ்ஞானிகளின் ஆய்வு எல்லைக்குள் தென்படவில்லை எனவும், தற்போது திடீரென்று பூமிக்கு மிக அருகில் வந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கத்துக்கு மாறாக பூமியை நெருங்கி செல்லவுள்ள இந்த விண்கல் ஆனது 35 மீட்டர் நீளமுடையதாக காணப்படுகின்றது. இந்த விண்கல்லினால் பூமியிலிருப்பவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும், பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தின் கால் மடங்கு தூரத்தில் பூமியிலிருந்து விலகிச் செல்லும் என கணிக்கபட்டு உள்ளது.

இதேவேளை நாசா நிறுவனத்தின் ஆய்வில் பூமிக்கு அருகில் உள்ள பொருட்களில் 90 சதவீதமானவை 1 கிலோ மீட்டர் அளவிலும் பெரியவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் 30 சதவீதமான விண் பொருட்கள் 160 மீட்டர் நீளமுடையவையாகவும், ஒரு சதவீதமான பொருட்களே 30 மீட்டர்கள் நீளமுடையவையாகவும் காணப்படுகின்றன.

இந்த ஒரு சதவீதமான பொருட்களில் அடங்கும் விண்கல் ஒன்றே இவ்வாறு பூமியை நெருங்கி பயணிக்கவுள்ளது.

பேருந்து, வான் மோதி விபத்து : நால்வர் பலி!!

Accident

தம்புள்ளை கலேவெல பகுதியில் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் மோதி விபத்திற்க்குள்ளாகியுள்ளது. இந்த அசம்பாவிதத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நடுவானில் விமானங்கள் மோதி பயங்கர விபத்து!!

Flight

அமெரிக்காவில் இரண்டு குட்டி விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெத்தேலுக்கு வடக்கே 60 மைல்கள் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள் அலாஸ்கா மாநிலத்தில் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

விபத்து பற்றித் தகவல் அறிந்ததும், மருத்துவர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் ஹெலிகொப்டரில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், ஒருவரும் உயிர்பிழைக்கவில்லை, இரண்டு விமானங்களிலும் பயணம் செய்த 5 பேரும் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விசாரணை நடத்துவதற்காக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் சார்பில் மூன்று அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்பு வல்லுநர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தரப்பிலும் விசாரணை நடத்தப்படுவதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கலியுகத்தில் இப்படி ஒரு சம்பவமா : நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சி!!

Dog

நெதர்லாந்து நாட்டில் சேன் மார்டின் என்ற நகரத்தில் நாய் ஒன்று உணவைத் தேடும் சந்தர்ப்பத்தில் தவறுதலாக கால்வாயில் சிக்கியுள்ளது. இதனை பார்த்த அயலவர்கள் மிகுந்த சிரமத்தின் பின் அந்நாயை விடுவித்துள்ளனர்.

இது வீடியோவாக இணையத்தில் வைரலாக தற்போது பரவி வருகின்றது. பார்ப்பவர் மனதை மிகவும் நெகிழச்செய்கின்றது. அவர்களின் மனிதாபிமானம் உண்மையாகவே பாராட்டப்படத்தக்கது.

கலியுகத்தில் மனிதரை மனிதரே கவனிக்காத காலத்தில் இப்படியானதொரு சம்பவம் புதினம் தான்.

நடுக்கடலில் தத்தளித்து பலியான 2726 அகதிகள் : அதிர்ச்சித் தகவல்!!

Accident

உள்நாட்டுப் போர், வன்முறை மற்றும் வறுமை போன்ற காரணங்களால் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

படகுகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றிக்கொண்டு வருவதால் படகு நடுக் கடலில் கவிழ்ந்து நடக்கும் விபத்துக்களும் அடிக்கடி நடக்கிறது.

மத்திய தரைக்கடல் வழியாக வரும் அகதிகள் படகுகள் இது போன்ற விபத்துக்களை அதிகம் சந்திக்கின்றன. அவ்வாறு நடுக்கடலில் தத்தளிக்கும் அகதிகளை இத்தாலி கடலோர காவல் படையினர் மீட்டு வருகின்றனர்.

இந்த வகையில் சிசிலி ஜலசந்தியில் நேற்று மட்டும் 30 இடங்களில் நடைபெற்ற மீட்பு பணியில் சுமார் 3000 அகதிகளை இத்தாலி கடலோர காவல் படையினர் காப்பாற்றியுள்ளனர்.

இதேபோல் இதற்கு முந்தைய 2 தினங்களில் 7600 பேரும் நடுகடலில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியில் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு இத்தாலிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் பேர் அகதிகளாக வந்திருப்பதாகவும், அவர்களில் பலர் லிபியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், இது போன்ற ஆபத்தான கடல் பயணத்தின் போது 2726 பேர் பலியாகியிருப்பதாக குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடுரோட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த நபர் : கண்டுகொள்ளாமல் சென்ற மக்கள்!!

Sucide

மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பரபரப்பான சாலையில் நபர் ஒருவர், மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுபற்றி தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நபரை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து அப்பகுதியில் சாலையில் குழி தோண்டிக் கொண்டிருந்தவர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களும் தங்களது பணியில் மும்முரமாக இருந்ததால் நாங்கள் பார்க்கவில்லை என கூறியுள்ளனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்டவர் குறித்து எந்த தகவலும் தெரியாததால் அப்பகுதி மக்களிடம் அவரது படத்தை காட்டி விசாரித்து வருவதாக மண்டல துணை ஆணையர் மனோஜ் சர்மா தலைமையில் மும்பை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தை அப்பகுதி வழியாக சென்ற மக்கள் அனைவரும் பார்த்தும் பார்க்காமல் சென்றுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உயிருக்கு போராடிய மாணவிகளை காப்பாற்றிய 10 வயதுச் சிறுவன்!!

B1

பீகாரின் Jehanabad பகுதியில் 10 வயது சிறுவன் தன் உயிரை பணயம் வைத்து நீரில் மூழ்கிய நான்கு பள்ளி மாணவிகளை காப்பாற்றியுள்ளான்.

கோபால்பூர் கிராமத்தை சேர்ந்த மாணவிகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஆற்றைக் கடந்தபோது எதிர்பாராத விதமாக தடுமாறி ஆற்றில் விழுந்துள்ளனர்.

ஆற்றில் நீரின் ஓட்டம் வேகமாக இருந்ததால், அவர்கள் உயிருக்கு ராடியுள்ளனர். அசம்பாவிதத்தை கண்ட அங்கிருந்த 10 வயது சிறுவன் தன் உயிரை பற்றி கவலைப்படாமல் ஆற்றில் குதித்து ஒவ்வொரு மாணவியாக மீட்டு கரை சேர்த்துள்ளார்.

இதில் இரண்டு மாணவிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர், துணிச்சலுடன் செயல்பட்ட சிறுவன் நான்கு மாணவிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

உயிரை காப்பாற்றிய சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், அவரது வீரத்தை அங்கீகாரிக்கும் வகையில் அரசாங்கம் சிறுவனுக்கு தேசிய வீரதீர விருது வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

B2

காதல் விளையாட்டு வினையானது!!

hickey-death-in-mexico

மெக்சிகோவில் காதலி ஒருவர் தன்னுடைய காதலனுடைய கழுத்தில் செல்லமாக கடித்ததில் காதலன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

17 வயதான ஜூலியோ மகியாஸ் என்ற இளைஞன் 24 வயதான பெண் ஒருவரை காதலித்து வந்தார். இந்நிலையில் அந்த இளைஞன் தன்னுடைய வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு தன்னுடைய காதலியை அழைத்துள்ளார்.

ஜூலியோ மகியாஸ் தன்னுடைய காதலி மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து உணவு உண்ணும் நேரத்தில் வலிப்பு வந்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற ஜூலியோ அங்கு உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்திற்கு காரணம், கழுத்து பகுதியில் ஏற்பட்ட இரத்த உறைவால் இரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பு என அவரை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்தார். மேலும் அவரது கழுத்தில் யாரோ கடித்திருக்கிறார் எனவும் ஹிக்கி என்னும் காதல் விளையாட்டால் இப்படி நடந்திருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

இதனால் ஜூலியோவின் குடும்பத்தினர் அவரது காதலியை கோபமாக பார்த்தனர். விஷயத்தை புரிந்து கொண்ட அந்த பெண் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

மேற்கத்திய நாடுகளில் ஹிக்கி என்னும் காதல் கடித்தல் பிரபலமானது. காதல் ஜோடிகள் ஒருவருக்கொருவர் கழுத்தில் கடித்து கடித்து விளையாடும் காதல் விளையாட்டு இந்த ஹிக்கி என்பது குறிப்பிடத்தக்கது.

பாடசாலையில் 6 வயது சிறுமியை பாலியில் வல்லுறவுக்குட்படுத்திய 12 வயதுச் சிறுவர்கள்!!

abuse

அவுஸ்திரேலிய சிட்னி நகரில் ஆரம்பப் பாடசாலையொன்றில் 6 வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் இரு 12 வயது சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டள்ளனர்.

நொதர்ன் பீச்சஸ் பிராந்தியத்திலுள்ள பாடசாலையில் இடம்பெற்ற இந்த பாலியல் துஷ்பிரயோகத்தையடுத்து கைதுசெய்யப்பட்ட இரு சிறுவர்களும் இன்று சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

10 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுமி மீது மிக மோசமான முறையில் பாலியல் தாக்குதலை மேற்கொண்டதாக அந்த சிறுவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்குத் தொடர்பான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

நல்லூருக்கு ஆண்களைப் போல் வேட்டி கட்டிவந்த பெண்!!

nallor

நல்லூரில் இன்று இடம்பெற்ற தீர்த்த உற்சவத்திற்கு பெண் ஒருவர் ஆண்களைப்போல வேட்டி கட்டி வந்துள்ளமை அங்கு சென்ற பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இவ்வாறு நல்லூருக்கு வருகை தந்தவர் யாழ் மாவட்ட பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்காலத்தில் பெண்கள் ஆண்களின் உடைகளை அணிவது சகஜமான ஒன்று, ஆனால் வேட்டி அணிந்து செல்வது குறைவான சம்பவம்.

இவ்வாறிருக்க நல்லூர் ஆலயத்திற்கு ஆண்களைப் போன்று வேட்டி சட்டை அணிந்த வந்துள்ளார் இந்தப் பெண்.

பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை நிரூபிப்பதைப் போன்று உள்ளது இந்த சம்பவம்.

இதேவேளையில் நேற்றும் கூட வெளிநாட்டு பெண் ஒருவர் இந்து கலாச்சார உடையில் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 2

2008 பீஜீங் ஒலிம்பிக்கில் பங்குபற்றிய 6 வீரர்களின் பதக்கங்களை மீளப்பெறத் தீர்மானம்!!

Olympic

2008 பீஜீங் ஒலிம்பிக்கில் பங்குபற்றிய 6 விளையாட்டு வீரர்களின் பதக்கங்களை மீளப்பெற சர்வதேச ஒலிம்பிக் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

8 வருடங்களுக்கு முன்னர் குறித்த வீரர்களிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்திய பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 6 வீரர்களும் ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளமை ஆய்வுகளின் பின்னர் உறுதியாகியுள்ளது.

அத்துடன், இதற்கு முன்னர் கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் போது பெறப்பட்ட இரத்த மாதிரிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தன. இதன் போது பீஜீங் மற்றும் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடிய 55 வீரர்கள் தகுதி இழக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவாதி கொலைச் சம்பவம் திரைப்படமாக வெளிவரவுள்ளது!!

Kutrame Thandannai

சுவாதி கொலைச் சம்பவத்தை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. விதார்த், பூஜா தேவாரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம், குற்றமே தண்டனை, நாசர், ரவிமரியா, மாரிமுத்து ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றார்கள்.

இத் திரைப்படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார். இவர் காக்கா முட்டை படத்தை இயக்கி பிரபலமானவர். குற்றமே தண்டனை திரைப்படம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகியுள்ளது. இதில் சுவாதி வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

ஒரு தலைக்காதலால் ஒரு பெண் கொலை செய்யப்படுகின்றார். அந்த கொலையை சுற்றி நடக்கும் நிகழ்வுகளே கதை. இந்த படம் குறித்து இயக்குனர் மணிகண்டன் பின்வருமாறு தெரிவித்தார்..

சுவாதி கொலைச் சம்பவத்துக்குள் விடை தெரியாத பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. குற்றமே தண்டனை திரைப்படத்திலும் அதுபோன்ற ஒரு கொலை நடக்கின்றது. இக் கொலையை பார்த்தவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற உளவியல் ரீதியான விடயங்களை இதில் காட்சிப்படுத்தியுள்ளேன். ஐந்து கதாபாத்திரங்களை சுற்றி கதை நகரும். எனது படங்களில் சில உண்மை சம்பவங்கள் கலந்து இருக்கும். இந்த படத்திலும் அது இருக்கின்றது.

விதார்த், கடன் அட்டை பயன்படுத்துவோரிடம் பணம் வசூலிக்கும் கதாபாத்திரத்தில் வருகிறார். எனது படங்களை அதிக செலவில் எடுப்பது இல்லை. எனவே தயாரிப்பாளர்களுக்கு அவை நஷ்டத்தை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. கதாபாத்திரங்களுக்கு பொருந்தாத பாடல்களை படங்களில் திணிப்பதும் எனக்குப் பிடிக்காது.

குற்றமே தண்டனை படத்தை பாடல்கள் இல்லாமலேயே எடுத்து இருக்கின்றேன். இந்த திகில் படத்துக்கு இளையராஜா சிறப்பாக இசையமைத்து இருக்கின்றார். ஹரிஹர நாகநாதன், முத்து, காளஸ்வரன் ஆகியோர் தயாரித்து உள்ளனர் என்று தெரிவித்தார்.

நடிகர் விதார்த் கூறும்போது, மைனாவுக்குப் பின்னர் எனக்கு சிறந்த படமாக குற்றமே தண்டனை அமைந்துள்ளது. இந்த படம் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றுள்ளது.

ஒரு கொலையை நேரில் பார்க்கும் இளைஞனுக்குள் ஏற்படும் உளவியல் ரீதியான மாற்றங்களே கதை. ரசிகர்களுக்கு இது புதுமையான திரைப்படமாக அமையும் என்று தெரிவித்தார்.

படப்பிடிப்பின் கீழே விழுந்ததால் பெயரை மாற்றிய நடிகை!!

Gayathiri

குளோபல் வுட்ஸ் மூவிஸ் சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரித்து அறிமுக இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி இயக்கி இருக்கும் படம் மியாவ். இதில் கதாநாயகியாக நடித்து வரும் காயத்ரி தனது பெயரை ஊர்மிளா காயத்ரி என்று மாற்றி இருக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது..

மியாவ் படத்தில் நான் ஒரு தைரியமான விளம்பர மொடலாக நடிக்கிறேன். இந்த படத்தில் இரண்டு பாடல்களுக்கு நான் நடனம் ஆடுவதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு நடந்த ஒரு சிறிய விபத்தால் அந்த பாடல்களுக்கு என்னால் நடனம் ஆட முடியவில்லை. அந்த விபத்து என்னுடைய பெயரையே மாற்றிவிட்டது.

பாடல்களுக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி நான் கீழே விழுந்தேன். இதில் என்னுடைய முழங்கை, முழங்கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதுவரை காயத்ரி என்ற பெயரோடு இருந்த நான் அந்த விபத்துக்கு பின் ஊர்மிளா காயத்ரி என்று மாற்றிக்கொண்டேன். நிச்சயமாக இந்த பெயர் மாற்றம் என்னுடயை வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என நம்புகிறேன் என்றார்.