வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் நேற்று முன்தினம்31.08.2016புதன்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது .
அதிகாலை கிரியைகள் மகோற்சவ குரு சிவஸ்ரீ நாகரத்ன கலாதர சிவாச்சாரியார் தலைமையில் ஆரம்பமாகி காலை 9.00 மணியளவில் வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து ரதோற்சவம் இடம்பெற்றது .
மேற்படி ஆலயத்தின் மகோற்சவம் பத்து தினங்கள் இடம்பெறுகின்றது. இரதோற்சவ நிகழ்வில் பிரதேசவாசிகள் மாணவர்கள் ஆசிரியர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஆணவக் கொலை செய்ய ஊர் கூட்டத்தில் முடிவு செய்து கொலை செய்ய போவதாக மிரட்டல் விட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் பூலாங்குலத்துப்பட்டி செட்டியூரணிப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த முருகன் என்பவரது மகள் உமா(23).
இவர் நேற்று திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் குறிப்பிட்டிருந்ததாவது, நான் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதுகலை பட்டயபடிப்பு (M.com) முதலாமாண்டு படித்து வருகிறேன்.
நானும் மணிகண்டம் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறோம்.
இந்நிலையில், எனது காதலர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எங்கள் வீட்டில் எனது காதலை ஏற்க மறுத்துவிட்டனர்.
இதனால் கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி நானும் எனது காதலரும் வீட்டைவிட்டு வெளியேறி கோவை மருதமலை கோயிலில் திருமணம் செய்து கொண்டோம்.
இதையறிந்த எனது பெற்றோர் ஊர் கூட்டம் நடத்தி எங்களை கொலை செய்து விட ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், எங்களை ஆணவக் கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுக்கின்றனர்.
எனவே எனது ஊர் காரர்களிடமிருந்தும், எனது பெற்றோரிடமிருந்தும் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாதி கொலை வழக்கில் சிலரை தமிழக போலீஸார் திட்டமிட்டு தப்பிக்க வைப்பதாகவும் தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எழுதி வந்தவர் திலீபன் மகேந்திரன்.
கடந்த சில மாதங்களுக்கு முன், தேசியக் கொடியை எரித்த சர்ச்சையில் சிக்கிய திலீபன், போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், சென்னை துறைமுகப் பொறுப்புக் கழக இயக்குனரும், பி.ஜே.பி-யின் மாநிலத் துணைத் தலைவருமான கருப்பு முருகானந்தம் மீது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக திருவாரூர் போலீஸார், கடந்த 25-ம் தேதி, திலீபன் மகேந்திரனை கைதுசெய்தனர்.
பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்ட திலீபன் மகேந்திரனை, வரும் செப்டம்பர் 9 வரை திருச்சி மத்திய சிறையில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், கைது செய்யப்பட்ட மறுநாளே திருவாரூர் நீதிமன்றத்தில் திலீபனுக்கு ஜாமீன் கிடைத்தும்கூட சில சட்ட நடைமுறைகளால் அவர் வெளியே வருவதில் தாமதம் ஆகிறது.
இதுகுறித்து வழக்கறிஞர் கம்ருதீன், ‘‘சுவாதி கொலை செய்யப்பட்ட நாளில் இருந்தே திலீபன் மகேந்திரன், தமிழச்சி போன்றவர்கள் போலீஸார் உண்மைக் குற்றவாளிகளை தப்ப விடுவதாக சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
திலீபன் தனது பேஸ்புக் பக்கத்தில் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு, சுவாதி கொலையில் அவர்களுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறியுள்ளார்.
கருப்பு முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில், ஆகஸ்ட் 25 மதியம், சென்னை அம்பத்தூர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார் திலீபன்.
ஆனால், போலீஸார் அவரை வேளாங்கண்ணியில் கைது செய்ததாகச் சொல்லி வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.
சிறையில் இருக்கும் அவருக்கு, சட்ட உதவிகள் வழங்குமாறு நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரை கடந்த சனிக்கிழமை சிறையில் சந்தித்து விட்டு வந்தேன்.
அப்போது அவர், ‘என்னை கைதுசெய்வதற்கு சில நாட்களுக்கு முன் ராம்குமார், தாயார் புஷ்பம், வழக்கறிஞர்களை சந்தித்து சில தகவல்களை விளக்கி கூறியதோடு இந்த வழக்கை காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை என சொல்லிவிட்டு வந்தேன்.
அதன்பிறகுதான் ராம்குமார் தாயார் தரப்பில் சி.பி.ஐ விசாரணை கோரி வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த நிலையில்தான் என்னையும் கைது செய்துள்ளார்கள்’ எனக் கூறினார்.
கடந்த திங்கட்கிழமை மாலை, சிறையில் திலீபனை சந்தித்தேன். அப்போது, அவர், ‘கடந்த சனிக்கிழமை இரவிலிருந்து தன்னை மனநிலை சரியில்லாதவர்களை அடைக்கும் பிளாக்கில் அடைத்து வைத்திருப்பதாகவும் இராத்திரி பகலாக தனிமைச் சிறையில் வைத்திருப்பதாகவும் அங்கே காற்று வசதியோ, மின் விசிறியோ, மின் விளக்கோ இல்லை எனவும் போர்த்திக்கொள்ள போர்வை கூட கொடுக்கவில்லை எனவும் திலீபன் கூறினார்.
இதுகுறித்து சிறை அலுவலரிடம் கேட்டபோது, ‘மனநல ஆலோசகரின் அறிக்கைப்படிதான், திலீபனின் பாதுகாப்புக்காக இப்படி அடைத்து வைத்திருப்பதாக சொன்னார்கள்.
இவர்கள் செயல் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. தனிமைச் சிறையில் அடைத்திருப்பது மிக மோசமான மனித உரிமை மீறல்.திலீபன் போட்ட பதிவுகள் குறித்து தமிழக போலீஸாரோ, விசாரணை அதிகாரிகளோ ஏதும் மறுப்பு சொல்லாத நிலையில் குற்றச்சாட்டு எழுப்பிய ஒருவரை கைதுசெய்து சிறையில் அடைப்பதை பார்த்தால் போலீஸார் எதையோ மறைக்கப் பார்க்கிறார்கள் எனத் தெரிகிறது என்றார்.
திலீபன் மகேந்திரன் சிறையில் மனநோயாளிகள் செல்லில் அடைக்கப்பட்டிருக்கிறார் என எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரனிடம் கேட்டோம்.
வழக்கமாக சிறைக்குள் கொண்டுவரப்படும் எந்த கைதிக்கும் சிறையில் இருக்கும் மனநல ஆலோசகர் பரிசோதனை செய்வார். அவர்கள் அறிக்கைப்படி, பதற்றமான சூழலில் உள்ளவர்களைத் தனிமை சிறையில் வைத்திருப்போம். அடுத்தடுத்த கண்காணிப்புகளுக்குப் பிறகு அவர்களை வழக்கமான பிளாக்குக்கு மாற்றுவோம். இதுதான் நடைமுறை.
எப்போதும் அந்த பிளாக்கில் 30-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள். அப்படித்தான் திலீபன் மகேந்திரனை ஆய்வு செய்த டாக்டர், அவர் இயல்பான நிலையில் இல்லை. பதற்றமாக இருந்தார். வார்த்தைகள் இயல்பான நிலையில் இல்லை. அதனால் அவரை அப்படி தங்க வைக்க வேண்டியது அவசியமானது’ எனச் சான்றளித்தார்.
இப்போது திலீபன் இயல்பாக இருக்கிறார். பிரச்சினை எதுவும் இல்லை என்றார்.
பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் கடந்த 24ஆம் திகதி மூழ்கி உயிரிழந்த ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதிக்கிரியைகள் லண்டனில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் நான்காம் திகதி, காலை 6 மணி முதல் பத்துமணி வரை Winn’s Common Park, King’s High Way, Plumstead Common, London, SE18 2LN என்னும் இடத்தில் இறுதி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் இறுதிக் கிரியை நிகழ்வானது, கடல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நிகழ்வாகவும் அமையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் கடந்த 24ஆம் திகதி ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தமை புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த அனர்த்தத்தில் கெனூஜன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துஷன் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் குருசாந்த் ஸ்ரீதவராஜா ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
மக்கள் அதிகமாகக்கூடும் பிரித்தானிய கடற்கரைகளில் உயிர்காப்பு பணியாளர்களின் பற்றாக்குறை குறித்த வாதப்பிரதிவாதங்களையும் இந்தச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிரித்தானிய வாழ் தமிழ் மக்களை இந்த இறுதிக் கிரியையில் கலந்து கொண்டு இறந்த இளைஞர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்குமாறு இறுதிக்கிரியை ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இருபத்து மூன்று நாட்கள் விசேட பூஜை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 24ஆம் நாளாகிய நேற்று தேர்த் திருவிழா நடைபெற்றதுடன், தீர்த்தோற்சவத் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிலையில், மணல் சிற்ப கலைஞர் ஒருவர் இன்று நல்லூர் ஆலய முன்றலில் நல்லூர் கந்தனை பிரமாண்டமான முறையில் வடிவமைத்திருந்தார். இதனை இங்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தமை குறிப்பிடத்தக்கது.
நாம் இன்று இப்புவியில் வாழ்வதற்கு சூரியனை தவிர வேறு எந்த சக்தியும் பிரதானம் இல்லை என்று பயமில்லாமல் கூறலாம். (கடவுளை தவிர) காரணம் அதன் முக்கியத்துவம் நாம் அனைவரும் அறிந்ததே,
ஆனால் இச்சூரியன் அழியப் போகின்றது என கூறினால் நம்பமுடிகின்றதா? ஆம் இந்த சூரியனின் அளவும் வெப்பமும் கூடிகொண்டே போகின்றது. இதனால் சூரியன் ஓர் சிவப்பு அரக்கனாக மாறும்.
இவ்விளைவினால் முதலாவதாக உலக வெப்பமாயமாதல் கூடி தாவரங்கள் அழியும். மேலும் தாவரத்தை உணவாக உட்கொள்ளும் விலங்குகள் இறப்பதோடு மட்டுமல்லாமல் பிராண வாயு அதாவது “ஓட்சிசனும்” தடைப்படும்.
மேலும் இதன் பின் மனிதர்கள் அனைவருமே இறந்துவிடுவர் என்பதிலும் எவ்விதமான சந்தேகமும் இல்லை ஆனால் இது அனைத்தும் கட்டாயம் நிகழும் என்பதையும் யாரும் மறுக்கமுடியாது.
இதற்கான ஒரே வழி நாம் இவ்வுலகை விட்டுவிட்டு வேறு ஓரு வேற்றுகிரகத்தை தேடிச்செல்வது தான்.
இறுதியாக ஓரே ஓரு சுவாரசியமான விடயத்தை கூறிக் கொள்கின்றேன். இவ் அனைத்தும் நிகழ இன்னும் 500 கோடி வருடங்கள் உண்டு என்பதை ஆராய்ச்சியாளர்கள் தமது ஆய்வின் மூலம் வெளியிட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமானின் படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கொலையுடன் பலர் தொடர்புப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சந்தேகத்திற்குரியவர்கள் இன்னும் சில தினங்களில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கிரேன்ட்பாஸ் மற்றும் ஆட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சி.சி.டி.வி காணொளிகளின் காட்சிகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்ப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சுலைமான் கடந்த 21ஆம் திகதி இரவு அவரது வீட்டிற்கு அருகாமையில் வைத்து கடத்தப்பட்டார்.
இந்நிலையில், மாவனெல்ல, ஹெம்மாதகம பிரதேசத்தில் இருந்து கடந்த 24ஆம் திகதி அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் நாய் ஊளையிடுவது இயல்பான ஒன்று. பொதுவாகவே நாய்கள் மனிதனிடம் பாசமாக இருக்கின்ற விலங்காகும். இரவில் நாம எல்லோரும் தூங்கிய பின்பு நாய்கள் தனியாக இருக்கின்ற நினைப்பில் கவலை படுகிறதாம்.
ஆதலால் நமது கவனத்தினை ஈர்ப்பதற்காக கத்தவும், அழுகவும் செய்கிறதாம். அவ்வாறு நாய்கள் ஊளையிடும் நேரத்தில் நாம் சிறிது நேரம் அதன் அருகில் நின்று, அதனுடன் பேச்சு கொடுத்தால் அது அமைதி ஆகிவிடுமாம்.
அதுமட்டுமின்றி நாய்கள் ஊளையிட்டால் மரணம் வரும் என்று பொதுவாக மூடநம்பிக்கை நம்மில் இருந்து வருகிறது. டெக்னாலஜி இவ்ளோ வளர்ந்த இந்த காலத்துல இன்னும் இதெல்லாம் நம்பிட்டு, விழிப்புணர்வு இல்லாம இருக்கறது ரொம்ப கஷ்டம் தான்.
அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும்.
நால்வருக்கு உதவ வேண்டும் என்பதில்லை, யாருடைய உதவியும் இன்றி வாழ்வது என்பதே ஓர் பெரிய கெளரவம் தான்.
உலகம் சுற்றும் வாலிபன்
குறைந்தபட்சம் சிங்கபூர், மலேசியாவாவது சென்று வந்துவிட வேண்டும். புது இடம், புதிய கலாச்சாரம் உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள, புத்துணர்ச்சி அடைய பெருமளவு உதவும்.
பேரார்வம்
பேரார்வம் என்பது உங்கள் வேலையை குறிப்பது. ஆரம்பத்தில், வேலை வேண்டும் என்பதற்காக ஏதாவது வேலையில் சேர்ந்திருக்கலாம். ஆனால், 30 வயதுக்குள்ளாவது உங்களுக்கு பிடித்த துறை / தொழில் / வேலையில் சேர்ந்துவிட வேண்டும்.
தோல்வி
தோல்வியில் கற்காத பாடத்தை நீங்கள், வேறு எங்கும் கற்க முடியாது. தோல்வி உங்களை ஒழுங்குப்படுத்தும் ஆசான்.
ஓர் தோல்வியையாவது நீங்கள் சந்தித்துவிட வேண்டும். இல்லையேல், 30 வயதை கடந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை கையாள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படலாம்.
முதலீடு
சம்பாதித்த பணத்தை, வருமானம் ஈட்டும் வகையில் எதிலாவது முதலீடு செய்து வைத்துவிட வேண்டும். அதை செலவு செய்யாமல், வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டும்.
தீய பழக்கம்
ஏதேனும் ஒரு கெட்டப் பழக்கத்தையாவது 30 வயதுக்குள் நிப்பாட்டி விட வேண்டும். புகை, மது, கெட்ட வார்த்தை பேசுதல், பெண்மையை கொச்சையாக எண்ணுதல் என எதையாவது ஒன்றையாவது.
எந்த கெட்டப் பழக்கமும் இல்லையா?. நீங்களே உங்களுக்கு ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், தூய நல்லவர்களை இந்த உலகம் கேலி கிண்டல் தான் செய்யும்.
உண்மையான நட்பு
எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும், உங்கள் அருகில் நின்று தோள் கொடுக்க ஓர் தோழமை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான தோழமை அமைத்துக் கொள்ள வேண்டும்.
பிடிக்காவிடில் பிரிவு
ஓர் நபருடன் பழகுவது பிடிக்கவில்லையா, உங்கள் சுற்றதிர்காகவும், அலுவலக நண்பர்களுக்காகவும் விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்களா?. வேண்டவே வேண்டாம். முற்றிலுமாக பிரிந்துவிடுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நல்லது நினைக்கும் நபர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு இனி நீங்கள் பயணம் செய்வது தான் நல்லது.
சேமிப்பு
பெரும்பாலும் 30 வயதை கடக்கும் போது, சிலர் திருமணம் ஆகியும், சிலர் குழந்தை குட்டி என இருப்பார்கள். எனவே, அடுத்த தலைமுறைக்கான சேமிப்பை அளவிற்கு குறையாமல் எடுத்து வைக்க வேண்டும். இது உங்களுடைய கடமை.
கைதேர்ந்தவர்
நீங்கள் செய்யும் பணியில் நீங்கள் கைதேர்ந்தவர் என்ற நற்பெயருடன் விளங்க வேண்டும். அட, அவரு கிட்ட இந்த வேலைய கொடுங்க, சரியா செய்வார் என நால்வர் கூற வேண்டும்.
ஆராய்ந்து செயல்படுதல்
கனிமங்களை ஆராய தெரிந்தவர்கள் தான் ஆராய்ச்சியாளர்கள் என்றில்லை. மனிதர்களை ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
நேரம் பொன் போன்றது
நேரத்தை அளந்து செலவு செய்ய வேண்டும். 30 வயதுக்கு மேல் நேரத்தை வீண் விரயம் செய்வது, உங்கள் வாழ்க்கையில் பெரும் இழப்பாக அமையும்.
நீங்களாக இருங்கள்
மற்றவர்களுக்காக உங்களை மாற்றி அமைத்துக் கொண்டு வாழ தேவையில்லை. நீங்கள் நீங்களாக வாழ வேண்டிய தருணம் இது.
படிப்பில் உயரம்
உங்கள் துறை சார்ந்த படிப்பில், முழுமை அடைந்திருக்க வேண்டும். பி.எச்.டி முடித்தால் முழுமை என்றில்லை. இன்றைய அப்டேட் என்ன என்று அறிந்து வைத்திருந்தாலே போதுமானது.
தமிழக அகதிகள் முகாமில் இருந்து கடல் வழியாக சட்ட விரோதமாக படகு மூலம் இலங்கைக்குச் செல்ல முயன்ற தம்பதிக்கு 7வது முறையாகவும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி வரை குறித்த தம்பதியினரை விளக்கமறியலில் வைக்குமாறு வேதாரண்யம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் துஷ்வந்த் மற்றும் இவரது மனைவி துவாரகா. இவர்களது ஒன்றரை வயது குழந்தை சகிதா.
குறித்த மூவரும் கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி நாகை மாவட்டம், கோடியக்கரையிலிருந்து 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் கண்ணாடி இழைப் படகு ஒன்றில் தவித்தபோது மீனவர்களால் மீட்கப்பட்டனர்.
இதனையடுத்து, வேதாரண்யம் கடலோரக் காவல் படையினர் குறித்த தம்பதியினரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த தம்பதி கோவை மாவட்டம், கோட்டூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிலிருந்து தப்பி, சட்டவிரோதமாக இலங்கைக்குச் செல்ல முயன்றமை தெரியவந்தது.
இதையடுத்து, இவர்கள் மீது இந்திய கடவுச் சீட்டு சட்டப் பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வேதாரண்யம் குற்றவியல் நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அத்துடன், கோட்டூர் பகுதியில் இடம்பெற்ற சில குற்றச் செயல்கள் மற்றும் விபத்து வழக்களில் துஷ்வந்த்துக்கு தொடர்பு இருப்பதாகத் தனிப்பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த தம்பதியினருக்கு ஏற்கனவே 6 முறை விளக்கமறியல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 7வது முறையாக விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லண்டன் நகரில் 120 மீற்றர் நீளத்தில், பலகைகளால் பாரிய சிற்பமொன்று உருவாக்கப் பட்டுள்ளது. 17 ஆம் நூற்றாண்டின் லண்டன் நகர தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் இச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
1666 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய தீயினால் லண்டனின் பெரும் பகுதி அழிந் ததை விளக்கும் வகையில் இச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
தன்னை காதலிக்க மறுத்த இளம் பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த நியூமேன் மகள் என்.பிரான்ஸினா (24). இவர் சண்முகாபுரத்தில் உள்ள ஒரு தனியார் மழலையர் பாடசாலையில் 3-ஆம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
பிரான்ஸினாவை அதே பகுதியைச் சேர்ந்த கீகன் ஜோஸ் (26) என்ற இளைஞர் ஓராண்டுக்கும் மேலாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பலமுறை பிரான்ஸினாவிடம் காதலைச் சொல்லியும் அவர் கீகனை ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தும் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார் கீகன்.
ஒருகட்டத்தில் கீகனின் தொல்லை தாங்காமல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் பிரான்ஸினா. அந்த முறைப்பாட்டின் பேரில் கீகனை வரவழைத்து பொலிஸார் எச்சரிக்கை செய்துள்ளனர்.
சிறிது காலம் தொந்தரவு கொடுக்காமல் இருந்திருக்கிறார் கீகன். இந்நிலையில்தான் பிரான்ஸினாவுக்கு வீட்டில் அவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது.
எதிர்வரும் 8ம் திகதி பிரான்ஸினாவுக்கு திருமணம் நடைபெறவிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த கீகன் கடந்த ஒரு வாரமாகவே பிரான்ஸினா செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்திருக்கிறார்.
பிரான்ஸினா ஒவ்வொரு நாளும் அருகிலிருக்கும் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்துவிட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல் நேற்றும் அவர் தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். காலை 8.30 மணியளவில் தேவாலயத்துக்குள் இருந்த பிரான்ஸினாவை கீகன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில் அவரது கழுத்து, தலை, முகம் ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. அங்கிருந்து மீட்கப்பட்ட அவர் தூத்துக்குடி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அடுத்த சில மணி நேரங்களில் அவரது உயிர் பிரிந்தது.
தேவாலயத்தில் பிரான்ஸினாவை வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற கீகன் அவரது சகோதரன் வீட்டுக்குச் சென்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாத்தறையிலிருந்து அக்குரஸ்ஸ நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் வண்டியில் பயணம் செய்த 70 வயதான வயோதிபர் ஒருவர் தமக்கு அருகில் அமர்ந்திருந்த பல்கலைக்கழக மாணவிக்கு தனது அந்தரங்கத்தைக் காண்பித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை வைத்தியசாலையில் வைத்திய முகாமுக்குச் சென்று மீண்டும் கொட்டபல பிரதேசத்தை நோக்கிச் செல்ல அக்குரஸ்ஸ பஸ் வண்டியில் ஏறிய சந்தேக நபர் அருகிலிருந்த இந்த யுவதியிடம் தனது அந்தரங்கத்தை காண்பித்துள்ளார்.
அச்சமுற்ற யுவதி கூச்சலிட்டுள்ளார். பின்னர் பஸ் நடத்துனரிடம் தெரிவித்ததையடுத்து பஸ் அக்குரஸ்ஸ பஸ்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருகோணமலை- தெவனிபியவர பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட சண்டையின் போது மண்வெட்டியால் பெண் ஒருவருவரைத் தாக்கியதாக கூறப்படும் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த போது அதனைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணே மண் வெட்டியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மஹதில்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.