இந்தியாவில் உள்ள ஜப்பானின் நிசான் நிறுவனத்தின் கிளை நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட “டட்சுன் ரெட் – கோ” கார் இலங்கை சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் நிசான் நிறுவனத்தின் குறித்த கிளை நிறுவனமானது இதுவரை 100 நாடுகளின் சந்தைகளில் குறித்த காரினை அறிமுகப்படுத்தியுள்ளது.
எனினும், அந்த நிறுவனமானது சுமார் 59 வருடங்களுக்குப் பிறகு தமது வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையுடன் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த மாதம் முதல் குறித்த கார் இலங்கையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த காரின் விலை இந்திய ரூபாயின் படி 260,783 தொடக்கம் 364,208 ரூபாய் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள போதிலும் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட அவர், ஐந்து லட்சம் ரூபா ரொக்கப் பிணையுடன், தலா ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு அரச ஊழியர்களின் சரீரப் பிணையிலும் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
எனினும், சரீரப் பிணை வழங்குபவர்களை நீதிமன்றம் நேரில் பார்வையிட வேண்டும் என தெரிவித்த வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி, பிணை வழங்குபவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதுவரையில் தயா மாஸ்டரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று நீதிமன்றில் தயா மாஸ்டர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணை வழங்குபவர்களும் வருகை தந்திருந்தனர்.
பிணை வழங்குபவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மூவரை ஏற்றுக் கொண்டதுடன் ஒருவரது விண்ணப்பத்தை நிராகரித்தார். இதனால் அரச பிணை வழங்குபவர் உடனடியாக கிடைக்காமையால் மீண்டும் தயா மாஸ்டர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களான ஜோர்ஜ் மாஸ்டர் மற்றும் தயா மாஸ்டர் ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்திருந்தனர்.
பின்னர் இருவரையும் பிணையில் செல்ல நீதிமன்றத்தின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ஜோர்ஜ் மாஸ்டருக்கு எதிரான வழக்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையிலேயே தயா மாஸ்டருக்கு எதிராக வவுனியா மேல்நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அறிவுத்திறனில் தலைசிறந்த விஞ்ஞானிகளான , ஸ்டீபன் ஹாக்கின்ஸ், ஐஸ்டீன் ஆகியோரை, இந்திய வம்சாவளி சிறுவன் வென்று சாதனை படைத்துள்ளார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பார்க்கிங்சைப் என்ற நகரில் புல்வுட் பள்ளி படித்து வரும் இந்திய வம்சாவளி தருவ் 10, இவரது தந்தை வங்கி அதிகாரியாக உள்ளார். தாயார் ஆசிரியர். லண்டனில் மென்சா அறிவுத்திறன் சொசைட்டி என்ற அமைப்பு உள்ளது. இந்த சொசைட்டியில் உலகின் அதிக அறிவுத்திறன் வாய்ந்தோர் குழு உள்ளது.
இதில் உலகம் முழுவதும் 1 லட்சத்து 10 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இக்குழுவில் தருவ் இணைந்துள்ளார். இந்த சொசைட்டி சார்பில் கடந்த ஜூலை மாதம் நடந்த மென்சாவின் கேட் ( Cattell III B Paper) தேர்வில் கலந்து கொண்டார்.
இத்தேர்வில் அதிகப்படியாக 162 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.உலகில் அறிவுத்திறனில் (I.Q) -ல் புகழ்பெற்ற விஞ்ஞானிகளான ஸ்டீபன் ஹாக்கின்ஸ், ஆல்பர்ட் ஐஸ்டீன் ஆகியோரின் அறிவுத்திறன் 160 என கூறப்படுகிறது.
இவர்களை வென்று 162 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.இது குறித்து தருவ் கூறுகையில், தேர்வு கடினமாக இல்லை எனினும் கொடுக்கப்பட்ட நேரம் குறைவாக இருந்ததால் விரைவாக பதில் அளிப்பதற்கு கடினமாக இருந்தது என்றார்.
பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை – வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட ரொட்டவெவ பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவருக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த புதன் கிழமை மாலை பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த அழைப்புக்கு அமைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, குறித்த மாணவி வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
பிரான்சில் விமானத்திலிருந்து குதித்த 17 வயது வீரர், நடுவானில் பாராசூட் திறக்காததால் தரையில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து Mimizan நகர மேயர் Christian Plantier வெளியிட்டுள்ள தகவலில், Pyrenees-Atlantiques நகரை சேர்ந்த 17 வயது சிறுவன், Mimizan விமானத்தளத்தில், கடந்த எட்டு நாட்களாகப் பாராசூட்டில் இருந்து குதிக்கும் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று அவர் விமானத்திலிருந்து குதித்தபோது, நடுவானில் பாராசூட்டோ அல்லது பாதுகாப்பிற்காக இருக்கும் இரண்டாவது பாராசூட்டோ திறக்கவில்லை.
இதனால், சிறுவன் நிலத்தில் மோதி உயிரிழந்ததாக அவர் தெரிவித்துள்ளார். சிறுவனின் உடலை Mimizan விமானத்தளத்திற்கு அருகிலிருக்கும் சிறிய காட்டிலிருந்து மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். சிறுவன் மறைவுக்கு மேயர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து தகவல் கிடைத்த உடன் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாத்தா, பாட்டி சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்திற்க்கான காரணம் குறித்து அறிய தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மாலியா பொது இடத்தில் புகை பிடிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி பரவி உள்ளது.
குறித்த வீடியோவில், அமெரிக்காவில் நடைபெற்ற லோலபலோசா (Lollapalooza) இசை திருவிழாவிற்கு தனது தோழிகளுடன், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மாலியா சென்றுள்ளார்.
அங்கு கூட்டத்தினருக்கு மத்தியில் நின்று கொண்டு, தனது உடலை வளைத்து, சற்று ஆபாசமான முறையில் நடனம் ஆடுகிறார்.
மேலும், தன்னுடைய தோழிகள் கையில் வைத்துள்ள ஸ்மார்ட்போனில் வீடியோ எடுத்துக்கொண்டும், புகைப்படத்திற்கும் ஆபாசமான முறையில் போஸ் கொடுத்தும் கும்மாளமிட்டுள்ளார்.
அதே வீடியோவில் அவர் புகைபிடிக்கும் காட்சியும் இடம் பெற்று உள்ளன. அவர் MARIJUANA என்னும் ஒரு வகையான சிகரெட் பிடித்ததாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் இதனை பார்த்த பலரும், பொது இடத்தில் வைத்து மாலியா, இப்படி ஒழுக்கமின்றி நடந்தகொண்டுள்ளாரே என விமர்சனம் செய்து உள்ளனர்.
வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் பிறந்து குலம் தழைக்கவும், அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கவும் வேண்டி சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள்.
வரலட்சுமி விரதத்தன்று வரலட்சுமி தாயாரை மனதால் வேண்டினால், ஆதி லட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, வித்யா லட்சுமி, வீர லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி ஆகிய அஷ்டலட்சுமிகளையும் வேண்டிய பலன் ஒரு சேரக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இவர்கள் அனைவரும் வரலட்சுமி விரதத்தன்று ஒரே தாயாரான வரலட்சுமியில் ஐக்கியம் ஆவதாக நம்பிக்கை.
இந்த விரத வழிபாடு எவ்வாறு உருவானது என்பது குறித்து பல கதைகள் கூறப்படுகிறது, ஆனால் ரத்தின சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் நித்திய சுமங்கலியான மகாலட்சுமி பொறுமையே வடிவானவள், கணவரின் இதயத்தில் குடியிருக்கும் இவள், பெண்களை துன்பங்களில் இருந்து காப்பவள்.
அவ்வாறு பெண்களை காப்பதற்காகவே, இந்த வரலட்சுமி விரதத்தன்று தன்னை வழிபடும் பெண்களின் வீட்டிற்கு சென்று குடிகொள்கிறாள்.
முன்னொரு காலத்தில் மகத ராஜ்யம், குணதினபுரம் என்ற நகரத்தில் வசித்து வந்து சாருமதி என்ற பெண், தனது கணவன் மற்றும் குடும்பத்தினரை அன்போடு கவனித்து வந்தாள், அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை அளித்தது.
மகாலட்சுமி சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள்புரிந்தார். ‘என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வசிப்பேன்’ என்று அருளிய மகாலட்சுமி, சாருமதிக்கு வரலட்சுமி நோன்பு இருப்பதன் வழிமுறையைக் கூறி, அதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதன்படியே, ஒவ்வொரு பெண்களும் தங்களது வீட்டில் வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்க ஆரம்பித்தனர்.
வரலட்சுமி விரதத்தை ஆடி அல்லது ஆவணி மாதம் பவுர்ணமிக்கு முன் வருகிற வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும்.
இந்நாளில் பூஜை அறையை சுத்தம் செய்து வரலட்சுமியின் புகைப்படத்தை வைத்து, அதன் முன்னர், ஒரு வாழை இலைபோட்டு அதில் பச்சரிசியை பரப்ப வேண்டும்.
அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள் ஆகிய வற்றை வைத்து, லட்சுமிக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும்.
ஒரு கலசத்தை எடுத்து அதன்மேல் முழுத்தேங்காயை வைக்க வேண்டும். கலசத்தை சுற்றி மஞ்சள் நிறக்கயிற்றை இணைத்துக் கட்ட வேண்டும். தேங்காயின் மேல் குங்குமம் இட வேண்டும். அதை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.
அதன்பின்னர், முதற்கடவுளான விநாயகருக்கு பூஜை செய்துவிட்டு, வரலட்சுமிக்கு தேவாரம் பாடி, அஷ்ட லட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை இலையின் மீது தூவி பூஜை செய்து தூப தீபங்கள் காட்ட வேண்டும்.
அன்னம், பாயாசம், பழ வகைகள், நிவேதனம் செய்ய வேண்டும். ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். பின்னர் வரலட்சுமியின் முன் வைத்திருந்த நோன்புச்சரட்டை மஞ்சள் குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.
பூஜையின் போது அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகா லட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்க வேண்டும். பின் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம்.
வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் சேரும். கன்னிப்பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும். வரலட்சுமியின் அருளால் விரும்பிய நலன்கள் அனைத்தும் கிடைத்து வாழ்க்கை வளமாகும்.
தமிழகத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய காதலனை பொலிசில் சிக்க வைக்க காதலி நாடகம் நடத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது.
நாகர்கோவிலின் ராமன் புதூரை சேர்ந்த மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இவரும், ஜோ என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர், ஒன்றாக பல இடங்களுக்கு ஊர் சுற்றியுள்ளனர். சம்பவத்தன்று படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற போது உல்லாசமாக இருந்துள்ளனர்.
படம் முடிந்து வெளியே வந்த போது, மாணவியை தனியாக விட்டு விட்டு ஜோ சென்றதாக தெரிகிறது. வெகு நேரம் ஆகியும் ஜோவை காணவில்லை, தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் போனை எடுக்கவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண், பெற்றோருக்கு போன் செய்து கல்லூரியில் இருந்து வரும் வழியில், தனக்கு மயக்கு மருந்து கொடுத்து நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து விரைந்து வந்த அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதுடன் பொலிசில் புகார் அளித்தனர்.
விசாரணையில் அப்பெண் காதலித்து ஏமாற்றப்பட்டதாகவும், காதலனை பிடிப்பதற்காகவே பாலியல் பலாத்காரம் நாடகம் நடத்தியது பொலிசாருக்கு தெரியவந்தது.
அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி காதலன் ஜோ வை தேடி வருவதாக கூறப்படுகிறது.
3 ஆண்டுகளாக வெற்றி நாயகியாக வலம் வந்த நயன்தாராவின் திருநாள் படம் தற்போது தோல்வியடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் நயன்தாரா வெற்றி நாயகியாக வலம் வந்தார். வந்தாரா என்று கேட்டால் ஆம் என்பதே பதில். அதற்கு காரணம் உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் அவர் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 10 படங்களில் நடித்தார். அந்த 10 இ ல் 8 படங்கள் ஹிட் மற்ற 2 படங்கள் ஓடிவிட்டன.
கோலிவூட்டில் தொடர்ந்து பிளாப் கொடுத்து வந்த ஜீவா, வெற்றி தாரகையான நயன்தாராவுடன் சேர்ந்து ‘திருநாள்’ படத்தில் நடித்தார். நயன்தாராவின் ராசிக்காவது இந்த படம் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
‘திருநாள்’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படத்தை பார்த்தவர்கள் நயன்தாரா அசத்திவிட்டார் என்றார்கள். ஆனால் படம் கல்லாகட்டாமல் போயுள்ளது. பாவம் ஜீவாவுக்கு இதுவும் தோல்வி படமாக அமைந்துள்ளது.
தொடர்ந்து வெற்றிப் படங்களை அளித்த பெருமையுடன் தில்லாக ரூ.4 கோடி சம்பளம் கேட்ட நயன்தாராவுக்கு கடந்த 3 ஆண்டுகளில் முதல் தோல்விப் படமாக ‘திருநாள்’ அமைந்துள்ளது.
திருநாள் ஊத்திக் கொண்ட கவலையில் இருக்கும் நயன்தாரா வெங்கடேஷுடன் சேர்ந்து நடித்த பாபு பங்காரம் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். பாபு பங்காரம் நாளை வெளியாகிறது.
தெலுங்கு படமான பாபு பங்காரம் தமிழில் டப் செய்யப்பட்டு செல்வி என்ற பெயரில் வெளியாகிறது.
தண்ணீர் குறைவாக குடிப்பதும் தவறு, அளவுக்கு அதிகமாக குடிப்பதும் தவறு. மேலும், அவரவர் உடல் எடை, வயது, உடல்நலம், வேலைபாடு குறித்து நீரின் அளவு வேறுபாடும். அளவுக்கு குறைவாய் தண்ணீர் பருகவதால் உடலில் நீர்வறட்சி ஏற்படுகிறது.
நீர்வறட்சி உடல் பாகங்களில் செயற்திறன் குறைபாடு ஏற்பட காரணமாகிறது. முக்கியமாக சிறுநீரகத்தின் செயல்பாட்டை இது குறைக்கிறது.
கற்றாழை ஜீஸ் பருகுவது உடல் நலனுக்கு நல்லது என்பார்கள். உண்மை தான் செரிமானம், உடல் எடை குறைக்க, நோய் எதிர்ப்பை அதிகரிக்க இது ஊக்குவிக்கிறது. ஆனால், அளவுக்கு மீறினால் தசை பிடிப்புகள், கல்சியம் குறைபாடு போன்றவை உண்டாகும் அபாயமும் இருக்கிறது.
பால் உணவுகளில் இருக்கும் கால்சியம் நமது எலும்புகளின் வலிமையை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் இது அதிகமாக பால் உணவுகள் எடுத்துக் கொள்வது, உடலில் இருக்கும் இரும்புச்சத்து குறைய காரணமாகி விடுகிறது. மேலும், இது இரத்தசோகை ஏற்படவும் காரணியாக அமைகிறது.
நட்ஸ் அளவாக சாப்பிடுவது உடற்திறனை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்க உதவுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக நட்ஸ் உட்கொள்வது உடல் எடை அதிகரிக்க காரணியாக அமைகிறது. ஏனெனில், இவற்றால் கலோரிகள் அதிகம்.
நார்சத்து மிகுதியாக உள்ள ஓட்ஸ் செரிமானத்தை ஊக்குவித்து, உடல் எடை குறைக்கவும் சீராக பயனளிக்கிறது. மேலும் இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் கூட வெகுவாக உதவுகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக ஓட்ஸ் உண்பதால், குமட்டல், வாயுப் பிரச்சனைகள் உண்டாக காரணியாகிவிடுகிறது.
ஆண்கள் இந்த உணவுகளை தவிர்த்து விடுவது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இலங்கையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த 187 கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பாராளுமன்றம் கூடிய போது, ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர் ஜயந்த சமரவிர எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் வழங்கிய அமைச்சர் கயந்த கருனாத்திலக இதனை தெரிவித்தார்.
சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கு நீதி அமைச்சரினால் ஓய்வுபெற்ற உச்சமன்ற நீதிபதிகள் இருவரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய 2015-ஆம் ஆண்டு 117 கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் கருனாத்திலக, 2016ம் ஆண்டில் இதுவரை 70 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தயா மாஸ்டர் எண்டு அழைக்கப்படும் தயாநிதிக்கு 4 அரச அலுவலர்களின் பிணையில் வீடு செல்லலாம் என வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று அனுமதியளித்திருந்த நிலையில் இன்று 4 பிணையாளர்கள் இல்லாமையால் தயாநிதி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரின் மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 4 அரச ஊழியர்களின் சரீரப் பிணையிலும் செல்ல சந்தேக நபரான தயாநிதிக்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.
ஆயினும் பிணையாளர்களை நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவிற்கமைய தகுதியான 4 பிணையாளர்களை நீதிமன்றத்தில் நிறுத்த முடியாத நிலை சந்தேகநபரான தயாநிதிக்கு ஏற்பட்டதனையடுத்து தயாநிதியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நபர்களது பணம், இணையங்கள் ஊடாக கொள்ளையிட்டு வங்கிகளில் வைப்பிலிடும் வியாபாரம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை கணினி அவசரப்பிரிவுக்கு இது தொடர்பில் முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையங்கள் ஊடாக பொருட்களை பதிவு செய்யும் நபர்கள் இந்த மோசடிக்குள் சிக்கியுள்ளதாக கணினி அவசரப்பிரிவின் ஊடகப் பேச்சாளரும், பொறியியலாளருமான ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
பொருட்களை தருவிக்கும் நபர்களின் இணையங்கள் ஊடாக பலவந்தமாக உள்நுழையும் கொள்ளையர்கள், பொருட்களை பதிவு செய்யும் நபர்களின் வங்கி கணக்குகளில் மாற்றங்களை செய்துள்ளதாக அறிவித்து, அதனூடாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணங்களை வைப்பிலிடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பணம் கொள்ளை தொடர்பில் இந்த வருடத்தில் இதுவரை 10 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழர்களுக்கு இதுவரை எந்த ஒரு பதக்கமும் கிடைக்காமல் போனது ஏமாற்றத்தைத் தருகின்றது.
ஒலிம்பிக் வரலாற்றிலேயே 100க்கும் அதிகமான இந்தியர்கள் முதல் முறையாக தற்போதுதான் பங்கேற்றுள்ளனர்.
மொத்தம் 15 விளையாட்டுகளில் 66 பிரிவுகளில் இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.
இவர்களில் 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், தடகளம் கணபதி, ஆரோக்கிய ராஜீவ் என மொத்தம் 7 பேர்.
இவர்கள் அல்லாமல் ஈழத் தமிழரான துளசி தருமலிங்கம், கட்டார் நாட்டுக்காக குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்றார். இதில் நேற்று ஒரே நாளில் 2 தமிழர்கள் தோல்வியைத் தழுவியது ஏமாற்றத்தைத் தந்தது.
ஆண்கள் 77 கிலோ பளுத்தூக்கும் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் 4ம் இடம் பிடித்து தோல்வியடைந்தார். இதேபோல் குத்துச்சண்டையில் மங்கோலிய வீரரிடம் கட்டார் அணிக்காக களமிறங்கிய ஈழத் தமிழர் துளசி தருமலிங்கமும் தோல்வியைத் தழுவினார்.
இளம் பெண் சுவாதி படுகொலை ஜாதிக்காக நடத்தப்பட்ட ஆணவக் கொலை. அவரைக் கொன்ற உண்மையான நபர் முத்துக்குமார். அவர் தஞ்சாவூரில் பாதுகாப்பாக இருக்கிறார் என்று தமிழச்சி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சுவாதி படுகொலை சாதிக்காக நடத்தப்பட்ட ஆணவக்கொலை என்ற தலைப்பில் இந்த தமிழச்சி தனது பேஸ்புக் பதிவில் இதுகுறித்துக் குறிப்பிட்டுள்ளார். இவர் வெளிநாடு ஒன்றில் வசித்து வருபவர் ஆவார். இந்த பதிவில் அவர் பல பரபரப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.
அதிலிருந்து சில.. சுவாதி படுகொலை செய்யப்பட்ட அன்றைய பரபரப்பான தினத்திலேயே ‘சுவாதியை கொன்றது பிலால் என்ற இஸ்லாமிய இளைஞர்’ என்று பொது ஊடகங்களில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சிலரால் ஏற்படுத்தப்பட்ட வதந்தி என்பது போகிற போக்கில் ‘உளறுவாயன்கள்’ பேசிய பேச்சல்ல. இஸ்லாமிய வெறுப்பு அரசியல் சாதாரணமாக நடந்தவையல்ல. அனைத்தும் திட்டமிட்டே இந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டவை.
ராம்குமார் கழுத்தை அறுத்தது பொலிஸாருடன் வந்திருந்திருந்த அடியாட்கள் என்பது பொது ஊடகங்களில் மக்கள் நலம் விரும்பிகளால் அம்பலப்படுத்தப்பட்டதும் சுவாதியின் கொலை விசாரணை தடுமாற ஆரம்பித்தது.
அவசர அவசரமாக இந்துத்துவ அமைப்பு ராம்குமாரை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் சார்ந்த வக்கிலை அனுப்பி அதுவும் பல விவாதங்களால் முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் பிலாலிடம் காவல்துறை விசாரணை நடத்தி அவர் என்ன சொன்னார் என்பதை வெளியிட மறுத்தது. தற்போதைக்கு ராம்குமார்தான் குற்றவாளி என்பதை நிருபித்து விசாரணையை முடித்து இந்துத்துவவாதிகளை காப்பாற்ற சில முக்கிய அரசியல்வாதிகளால் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.
சுவாதியை கொலை செய்தவர் பெயர் முத்துக்குமார். தற்போது தஞ்சாவூரில் சுவாதியின் சித்தப்பா பாதுகாப்பில் இருக்கிறார்.
சுவாதி கொலையில் தொடர்புடையவர்கள் 4 பேர்கள். இவர்களை பாதுகாப்பது சந்தான கோபலகிருஷ்ணனும் அவருடைய தம்பியும். அவர்கள் திட்டங்களுக்கு உடந்தையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சிலர்.
இத்தனையும் தவறு. தமிழச்சி என்பவர் எங்களை குறித்து அநாகரிகமாகவும், தவறாகவும், கண்ணியமின்மை இன்றி தொடர்ச்சியாக பொய் குற்றச்சாட்டுக்களை வைத்துக் கொண்டிருக்கிறார் என்று என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்ட ரீதியாக சந்தான கோபலகிருஷ்ணனும் அல்லது அவருடைய தம்பியும் புகார் கொடுப்பார்களானால் எனது வழக்கறிஞர் மூலமாக அனைத்து ஆதாரங்களையும் இந்திய நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன். இதற்கு சந்தான கோபலகிருஷ்ணனும் அல்லது அவருடைய தம்பியும் தயாரா?
தமிழச்சி இதுதான் தமிழச்சியின் பதிவு. தன்னிடம் முத்துக்குமார்தான் குற்றவாளி என்பதற்கான ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் தமிழச்சி. அப்படியானால் அதுதொடர்பானதை நீதிமன்றில் சமர்ப்பித்து தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரைக் காப்பாற்ற அவர் முனைவாரா என்ற கேள்வியை பலர் எழுப்பியுள்ளனர்.
கபாலி திரைப்படம் திரைக்கு வந்த பின்னர் உலகம் முழுவதும் ரஜினியைப் பற்றி அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இன் நிலையில் ரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக ரஜினியின் இளையமகளும் இயக்குனருமான சௌந்தர்யா ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சாதாரண பஸ் நடத்துனராக இருந்த ரஜினி, அவரது தீவிர முயற்சியாலும், கடின உழைப்பாலும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அவரது வாழ்க்கை பலருக்கு முன்மாதிரியாக இருக்கும். அவரைப் பற்றி மற்றவர்களை விட எங்களுக்கு நன்றாகத் தெரியும் அவரை நான் மிகவும் நேசிக்கின்றேன். எனவே அவரைப் பற்றிய திரைப்படம் சிறப்பாக அமையும். என்று தெரிவித்துள்ளார்.
இது தவிர ரஜினியின் மூத்தமகள் ஐஸ்வர்யா தனது தந்தையின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகத்தைஎழுதி வருகின்றார். இதில் இளம் வயது முதல் இன்றுவரை உள்ள ரஜினியின் பல்வேறு தகவல்கள் இடம்பெற இருக்கிறன்து. இத் தகவலையும் சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.