சென்னையில் கபாலி திரைப்படம் பார்த்த மத்யூ ஹைடன்!!

hydan

தற்போது தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாக மக்கள் மத்தியில் பரவி கொண்டிருக்கும் ஒரு பெயர் மத்யூ ஹைடன்.

தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் ‘தமிழ்நாடு பிரீமியர் லீக்’ போட்டியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் மத்யூ ஹைடனுக்கும், தமிழக மக்களுக்கும் எப்போதுமே ஒரு இனம் புரியாத அன்பு இருந்து வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தன்னுடைய மங்கூஸ் எனப்படும் பிரத்யேக மட்டையால் பந்தை அரங்கத்திற்கு வெளியே இவர் பல முறை அடித்ததே அதற்கு முக்கிய காரணம்.

திருநெல்வேலியின் பிரசித்தி பெற்ற இருட்டுக் கடை அல்வா, தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளமாக திகழும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என தமிழ்நாட்டை வலம் வந்து கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் மத்யூ ஹைடன், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தை சென்னையில் உள்ள அல்பர்ட் திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறார்.

கபாலி படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பை பார்த்து வியந்து போன மத்யூ ஹைடன் திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் ரசிகர்களை நோக்கி “மகிழ்ச்சி…” என்று கூற, ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் ஆர்ப்பரித்தனர்.

மனைவி உயிரிழந்த 20 நிமிடங்களில் கணவரும் உயிரிழப்பு : அறையிலிருந்த கடிகாரமும் நின்றது!!

12

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மனைவி உயிரிழந்த 20 நிமிடங்களில் கணவரும் உயிரிழந்த நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

இருவரும் உயிரிழந்த அறையில் இருந்த கடிகாரமும் நின்று போனது தான் ஆச்சரியமான விடயமாக உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி மற்றும் ஜெனட் தம்பதிகளுக்குத் திருமணமாகி 63 வருடங்கள் ஆகின்றன.

கடந்த சில வருடங்களாக மறதி நோயால் அவதிப்பட்டு வந்த ஜெனட், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்.

தனது மனைவியை தினந்தோறும் மருத்துவமனையில் சென்று பார்ப்பதை 86 வயதான ஹென்றி வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில், ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹென்றி, தனது மனைவி இருக்கும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூலை 31 ஆம் திகதி தம்பதிகள் இருவருக்கும் உடல்நிலை மோசமடைந்தது.

அன்று அதிகாலை 5.10 மணியளவில் ஜெனட் மரணமடைந்தார். அவரைத் தொடர்ந்து 20 நிமிடங்கள் கழித்து ஹென்றியும் உயிரும் பிரிந்தது.

இருவரும் சிகிச்சை பெற்று வந்த அறையில் இருந்த கடிகாரம் ஹென்றி இறந்த நேரமான 5.30 மணிக்கு மேல் ஓடாமல் அப்படியே நின்றுவிட்டதாக அவருடைய மகன் தெரிவித்தார்.

63 வருட தாம்பத்திய வாழ்க்கையில் இணைபிரியாத கணவன், மனைவியாக இருந்த ஹென்றி-ஜெனட் தம்பதியினர் மரணத்திலும் இணைபிரியாதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

11

மணிக்கு 1200 கிமீ வேகம் : ஹைப்பர்லூப் போக்குவரத்துக் கட்டமைப்பை உருவாக்குகின்றது துபாய்!!

hyperloop

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டமைப்பில் உள்ள முக்கிய நகரமான ஃபியூஜைராவிற்கு ஹைப்பர்லூப் போக்குவரத்துக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆய்வுகளில் துபாய் இறங்கியிருக்கிறது.

துபாய் – ஃபியூஜைரா நகருக்கு இடையிலான 105 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 10 நிமிடங்களில் கடப்பதற்கு ஏதுவாக இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த துபாய் ஆர்வம் கொண்டுள்ளது.

தற்போது இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் இரண்டு மணி நேரமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் ஹைப்பர்லூப் அல்லது மணிக்கு 1,200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதற்கான போக்குவரத்து கட்டமைப்பை செயற்பாட்டிற்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது துபாய்.

நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் இந்த ஹைப்பர்லூப் கட்டமைப்பு பாதிக்கப்படாது எனவும் அனைத்து செயற்பாடுகளும் தானியங்கி முறையில் நடக்கும் எனவும் இதனால், மனிதத் தவறால் ஏற்படும் விபத்துக்கள் தவிர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரழகன் திரைப்பட இயக்குனர் சசி சங்கர் திடீர் மரணம்!!

Sasi Shangar

சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த பேரழகன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சசி சங்கர் இன்று கேரளாவில் காலமானார்.

57 வயதான அவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோலஞ்சேரி என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சசி சங்கருக்கு சர்க்கரை வியாதி இருந்துள்ளது. இன்று காலை வீட்டில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மலையாள திரைப்பட உலகில் முன்னணி இயக்குனரான சசி சங்கர், 1993ல் இயக்கிய நாரயம் என்ற திரைப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. திலீப்பை கூன் விழுந்தவராக வைத்து மலையாளத்தில் இவர் இயக்கிய குஞ்ஞி கூனன் திரைப்படத்தைதான் பின்னர் சூர்யாவை வைத்து தமிழில் பேரழகன் என்ற பெயரில் இயக்கினார்.

பகடை பகடை என்ற தமிழ் திரைப் படத்தையும், மலையாளத்தில் 10 திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். மரணம் அடைந்த சசி சங்கருக்கு பீனா என்ற மனைவியும் விஷ்ணு என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.

வவுனியாவில் கடத்திக் கொலை செய்த நபருக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை!!

Vavuniya-Court

வவுனியாவில் ஒருவரைக் கடத்தி கொலை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டிற்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி 20 வருடகால கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் லெட்சுமணன் குலராசா என்பவரை கடத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஆறுமுகம் சசிகுமார், காளிமுத்து சுரேஸ் ஆகிய இருவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் 2013ம் ஆண்டு சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பாக நிஷாந்த நாகரட்ணம் வழக்குத் தொடுநர் தரப்பில் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார். வழக்கு விளக்கம் இடம்பெற்று வழக்கின் இரண்டாம் எதிரியான காளிமுத்து சுரேஸ் என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு சாட்சிகள் இல்லாத காரணத்தினால் இவ் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

முதலாம் எதிரியான ஆறுமுகம் சசிகுமார், லெட்சுமணன் குலராசா என்பவரை கடத்திச் சென்ற குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாக காணப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடத்திய குற்றத்திற்கு குற்றவாளியாகக் காணப்பட்ட ஆறுமுகம் சசிகுமார் கொலை செய்யப்பட்டவர் கடுமையான சித்திரவதைக்குட்பட்டுத்தப்பட்டார் என்று சட்டவைத்திய அதிகாரி மன்றிற்குத் தெரியப்படுத்தியதையடுத்து 20 வருடகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்தார்.

வவுனியாவில் அரசியல் கைதியின் குடும்பத்துக்கு சாந்தநாயகி நற்பணி மன்றம் மூலம் உதவி!!

 
சுமார் 10 வருடங்களுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் அரசியல் கைதியான சு.செந்தூரன் அவர்களின் குடும்பம்.

யாப்பாணத்தில் இருந்து 1990 இல் இடம் பெயர்ந்து வவுனியா நாகர்இலுப்பை குளத்தில் தட் காலிகமாக வசித்து வரும் நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தால் ஓமந்தை கள்ளிகுளத்தில் அவரின் குடும்பத்துக்கு ஒரு ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது .

அவரின் தந்தையான பெருமாள் சுப்பிரமணியம், தாய் தங்கமணி, தங்கை காயத்திரி, தம்பி ஆரூரன், ஜெயரூபன் என அவரது குடும்பத்தின் மூத்த பிள்ளையான செந்தூரன் 2006.07.13 இல் கைது செய்யப்பட்டு பிணை வழங்க முடியாது என மறுக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் ஒருவர்.

மகனின் பிரிவால் மனம் பாதிக்கப்பட்டுள்ள தந்தை, இளைய மகன் ஆருரனின் உழைப்பில் அன்றாட வாழ்வுக்கே சிரமமான நிலையில் வழங்கப்பட்டுள்ள காணியில் ஒரு குடிசை போட உதவுமாறு தமிழ் விருட்சம் ஊடாக சாந்தநாயகி நற்பணி மன்றத்திடம் வேண்டுகோளை விடுத்து இருந்த நிலையில் சாந்தநாயகி நற்பணி மன்றம் 20 000 பெறுமதியான தகரம், கிடுகு, மணல், சீமெந்து உட்பட்ட பொருட்களை நேற்று முன்தினம் (09.08.2016) வழங்கியது.

சாந்தநாயகி நற்பணி மன்றத்தின் இந்த உதவிகளை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்க ஜெகன் ஆகியோர் செந்தூரனின் தாயார் தங்கமணியிடம் கையளித்தனர்.

1 13932089_1248920238485529_1733930572_o 13932116_1248920448485508_792465045_o 13932117_1248920281818858_718754518_o 13932156_1248920615152158_1308435603_o 13932244_1248999601810926_1053786613_o 13939987_1248920608485492_1533521821_o 13950699_1248999808477572_1844318590_o 13950816_1248920385152181_929477679_o 13950942_1248920408485512_1926327551_o 13978045_1250389101671976_87138229_o 13978268_1248920845152135_1358699844_o 13978402_1248920475152172_1633786009_o 13987915_1248920355152184_439814888_o 14001704_1248920771818809_1752183714_o

யாழ்ப்பாணத்தை சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது : நீதிபதி இளஞ்செழியன்!!

Ilancheliyan

அமைதியாக உள்ள யாழ்ப்பாணத்தை சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 141 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக்கோரி மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் தொடர்பான விசாரணை வவுனியா மேல் நீதிமன்றத்தில் 10ம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது, அந்தப் பிணை மனு விண்ணப்பத்திற்குப் பிணை வழங்கக் கூடாது என அரச சட்டத்தரணி ஸக்கி இஸ்மாயில் ஆட்சேபனை தெரிவித்து வாதாடினார். இதனையடுத்து அந்தப் பிணை மனுவை நிராகரித்த நீதிபதி இளஞ்செழியன் மேலும்தெரிவித்ததாவது:

யாழ்ப்பாணம் தற்சமயம் அமைதியாக உள்ளது. குற்றச் செயல்கள் குறைவடைந்து காணப்படுகின்றன. கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது. இந்தப் பரீட்சைக்காக மாணவர்கள் தம்மைத் தயார் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன் லட்சக்கணக்கான மக்கள் நல்லூர் திருவிழாவுக்காக படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். நாட்டின் வெளிப் பிரதேசங்களில் இருந்து வருபவர்களும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுமாக யாழ்ப்பாணம் விருந்தினர்களால் நிரம்பி வழிகின்றது.

இந்த வழக்கில் பெருந்தொகையான 141 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 80 லட்ச ரூபா என மதிப்பிடப்படுகின்றது.

கைது செய்யப்படாதிருந்தால் அந்த சந்தேக நபர் லட்சாதிபதியாகியிருக்கக் கூடும். கைது செய்யப்பட்டமையால்அவர் இப்போது சிறைக் கைதியாகியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் போதைப் பொருள் குற்றசாட்டுக்கு உள்ளான நபர்களை பிணையில் விடுவது ஆபத்தான நிலைமையையே ஏற்படுத்தும்.

பொது நலனும், சமூக நலனும் பாதிக்கப்படும். ஆகவே இந்த நீதிமன்றம் இந்தப் பிணை மனுவை நிராகரிக்கின்றது என்றார் நீதிபதி இளஞ்செழியன்.

வவுனியாவில் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் பாடசாலை அதிபருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை!!

Vavuniya-Court

வவுனியா கண்ணாட்டிக்கணேசபுரம் பாடசாலையில் தரம் 1ல் கல்வி கற்ற மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கும் செயலில் ஈடுபட்ட பாடசாலை அதிபர் ஆனந்தன் தர்மசீலன் (வயது 51) என்பவருக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன தீர்ப்பு வழங்கினார்.

2011ம் ஆண்டு இடம்பெற்ற குற்றச் செயலுக்கு நீதவான் நீதிமன்றில் ஆரம்ப விசாரணைகளை அடுத்து 2014ம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்ட்டிருந்த வழக்கை அரச சட்டவாதி நிஷாந் நாகரட்ணம் நெறிப்படுத்தியிருந்தார்.

இவ் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு அப்பால் நீரூபிக்கப்பட்டமையால் எதிரியைக் குற்றவாளியாகக்கண்டு மேற்படி தீர்ப்பை மேல் நீதிமன்ற நீதிபதி வழங்கினார்

தண்டப்பணமாக 5000 ரூபாவும் நஷ்டஈடாக குறித்த சிறுமிக்கு 200 000 ரூபா வழங்குமாறும் வழங்கத்தவறினால் மேலும் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிர்தப்பியவருக்கு 6.5 கோடி பரிசு!!

Indian

விமான விபத்தில் உயிர்தப்பிய கேரளாவை சேர்ந்த ஊழியருக்கு துபாய் லாட்டரியில் 6.5 கோடி பரிசாக கிடைத்துள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு கடந்த 3ம் திகதி துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கிய எமிரேட்ஸ் விமானம் விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. இதில் பயணம் செய்த 282 பயணிகள் உள்பட மொத்தம் 300 பேர் உயிர்தப்பினார்கள். இவர்களில் ஒருவர் முகம்மது பஷீர் அப்துல் காதர் (வயது 62). கேரளாவை சேர்ந்த இவர் துபாயில் ஒரு கார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

அவர் ரம்ஜான் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு குடும்பத்தினருடன் சென்றபோது துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ´டூட்டி பிரீ´ கடையில் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கி இருந்தார். அந்த லாட்டரிக்கான குலுக்கல் தற்போது நடைபெற்றது.

அந்த குலுக்கலில் முகம்மது பஷீர் அப்துல் காதர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு இந்திய மதிப்பில் சுமார் 6.5 கோடி பரிசு கிடைத்துள்ளது. இன்னும் 4 மாதங்களில் ஓய்வுபெற இருக்கும் அவர், விமான விபத்தில் உயிர்தப்பியது, லாட்டரியில் பரிசு கிடைத்தது என இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “37 வருடங்களாக துபாயில் பணிபுரிந்து வருகிறேன். மிகவும் எளிமையாகவே எனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளேன். இறைவன் எனக்கு இரண்டாவது வாழ்க்கையை தற்போது அளித்துள்ளதாகவே உணருகிறேன்.

இறைவன் என் மீது கருணை கொண்டு இந்த பணத்தை வழங்கியுள்ளான். அதனை நற்காரியங்களுக்காக பயன்படுத்துவேன். எனது பணி ஓய்வுக்கு பின்னர் சொந்த ஊருக்கு செல்ல இருக்கிறேன்” என்றார்.

ஒலிம்பிக்கில் பளு தூக்கிய போது ஆர்மேனிய வீரரின் கை முறிந்த சோகம்!!(அதிர்ச்சி வீடியோ)

1

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஆர்மேனிய பளுதூக்கு வீரருக்கு போட்டியின் போது இடது கை முறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் 77 கிலோ எடை பிரிவினருக்கான பளுதூக்கும் தகுதி போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்ற ஆர்மேனிய வீரர் ஆண்ட்ரானிக் கராபெட்யன் 195 கிலோ எடையை தூக்க முயன்ற போது அவரின் இடது முழங்கை முறிந்ததால், வலியில் துடிதுடித்தார்.

விளையாட்டு வீரர்களுக்கு வலி ஏற்படுவது வழக்கம், அதிலும் பளு தூக்கும் வீரர்கள் தனக்கு ஏற்படும் வலியோடு எடை தூக்கி சாகசம் நிகழ்த்துகின்றனர்.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் பிரான்ஸ் ஜிம்னாஸ்டிக் வீரர் சமீர் அயிட், ஜிம்னாஸ்டிக் போட்டிக்கான தகுதி சுற்றில் பங்கேற்ற போது அவரது இடது கால் முறிந்தது.

பெண்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நெதர்லாந்தை சேர்ந்த வீராங்கனை அன்னெமிக் வான் விலுடின் விபத்தில் சிக்கி காயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 3

வவுனியாவில் புதையல் தோண்டிய நால்வர் கைது!!

Puthiyal

வவுனியா செட்டிகுளத்தில் புதையல் தோண்டிய நால்வர் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

செட்டிக்குளம் அரசடிக்குளம் பகுதியில் நேற்று (10.08.2016) அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அநூராதபுரம், முதலியார்குளம், நேரியகுளம் ஆகிய பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து புதையல் தோண்ட பயன்படுத்திய ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

600 அடி உயரத்தில் நடைபெற்ற திருமணம்!!

 
சீனாவில் இளம் ஜோடி ஒன்று அங்குள்ள கண்ணாடி பாலத்தின் அடியில் அந்தரத்தில் தொங்கியபடி திருமணம் செய்துகொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகில் வேறுபட்ட சூழலில் திருமணம் செய்து கொள்வது மாறுதலை விரும்பும் இளம் தலைமுறையினருக்கு பிடித்தமான ஒன்றாக அமைந்து வருகிறது.

அந்த வகையில் சீனாவின் இளம் ஜோடி ஒன்று தங்களது திருமணத்தை அங்குள்ள கண்ணாடி பாலத்தின் அடியில், அந்தரத்தில் தொங்கியபடியே நடத்திக்கொள்ள முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

அதன் ஒருபகுதியாக தனியார் நிறுவனம் ஒன்றை அணுகிய அந்த மணமகன், அவர்களின் ஏற்பாடின்படி, சீனாவின் Shiniuzhai தேசிய பூங்காவில் அமைந்துள்ள கண்ணாடி பாலத்தின் அடியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

நிலத்தில் இருந்து 590 அடி உயரத்தில், அந்தரத்தில் மிதந்தபடி இந்த நிகழ்வு நடந்துள்ளது. துணிவு மிகுந்த அந்த மணமகன் முதலில் தகுந்த ஏற்பாடுடன் கீழே தொங்கவிடப்பட்டிருந்த சிவப்பு நிற மேடை ஒன்றில் இறங்கி, பின்னர் தமது வருங்கால மனைவியையும் அதில் இறங்க வைத்து, அந்த மிதக்கும் மேடையில் மோதிரம் மாற்றியுள்ளனர்.

சிவப்பு உடையில் மணமகனும் பாரம்பரியமான நீண்ட வெள்ளை உடையில் மணமளும் அந்த மிதக்கும் மேடையில் அமர்ந்தபடி மோதிரம் மாற்றிக்கொண்டது, அங்கிருந்த சுற்றுலாப்பயணிகளை வியப்பில் ஆழ்த்தியது மட்டுமின்றி, பயம் கலர்ந்த உணர்வையும் வெளிப்படுத்தியது.

ஆனால் முகத்தில் மாறாத புன்னகையுடம் மணமக்கள் இருவரும் அந்த நிகழ்வு முடியும்வரை புகைப்படத்திற்கு போஸ் அளித்துள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்னர், இதுபோன்ற 5 ஜோடிகள் இந்த பாலத்தின் மத்தியில் நின்றபடி தங்கள் திருமண வாக்குறுதியை எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mandatory Credit: Photo by Top Photo Corporation/REX/Shutterstock (5826088a) Newlyweds take wedding photos hanging from bridge Newlyweds take wedding photos hanging from bridge, Yueyang, Hunan province, China - 09 Aug 2016

12

Mandatory Credit: Photo by Top Photo Corporation/REX/Shutterstock (5826088b) Newlyweds take wedding photos hanging from bridge Newlyweds take wedding photos hanging from bridge, Yueyang, Hunan province, China - 09 Aug 2016

மாணவியை துஷ்பிரயோகம் : ஆசிரியர் கைது!!

Arrested

திருகோணமலை-வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட ரொட்டவெவ பிரதேசத்திலுள்ள பிரபல முஸ்லிம் பாடசாலை ஒன்றில் 11ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியரொருவர் நேற்று புதன்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா-ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, டி.சபீர்கான் (வயது 33) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக பொலிஸ் அவசர அழைப்புக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட மொறவெவ பொலிஸார், குறித்த நபரை கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.

மாணவி சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட ஆசிரியரை, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

சுற்றுலா வந்த 8 வயது சிறுமி கூடாரத்தில் வைத்து பாலியல் வன்புணர்வு : அதிர்ச்சியில் மக்கள்!!

Ab

பிரான்சுக்கு சுற்றுலா வந்த எட்டு வயது சிறுமி கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு பிரான்சின் Ardeche பகுதியிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியின் Saint-Alban-Auriolles பகுதி பெருமளவான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் இடமாகும்.

இங்கு வருடத்துக்கு 2,70,000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.

டச்சு நாட்டைச் சேர்ந்த 8 வயது சிறுமி தனது பெற்றொருடன் Saint-Alban-Auriolles பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இரவு வேளையில் சிறுமிக்கு தனி கூடாரம் அமைத்து அதில் உறங்க வைத்திருக்கிறார்கள். அதன்போதே இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் தெரவித்துள்ளனர். இதை தொடர்ந்து குற்றவாளியை பிடிக்க பொலிசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, சில வருடங்களுக்கு முன் இதே பகுதியில் கூடாரத்தில் தங்கும் பெண்களை, ஒருவன் தொடர் பாலியல் வன்புணர்வு செய்தான் என்பது நினைவு குறத்தக்கது.

மேலும், குற்றவாளியை கைது செய்யும் வரை கூடாரத்தில் தங்குபவர்களை பாதுகாப்புடன் இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

தற்போது இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தின் மூலம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் 81 பௌத்த பிக்குகள் விளக்க மறியலில்!!

Mongs

கடந்த 15 மாதங்களில் 81 பௌத்த பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நீதிமன்றறை அவமரியாதை செய்த குற்றச்சாட்டுக்கு இலக்கான 8 பௌத்த பிக்குகளும் யானைக் குட்டியொன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு ஒருவரும் இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டனர்.

துஸ்பிரயோகங்கள், புதையல் தோண்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த எழுப்பிய வாய்மொழி மூல கேள்விக்கு பதிலளித்த போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்கள் தங்கியுள்ள நவ்ருவில் பாலியல் துன்புறுத்தல்கள்!!

nawru

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்க வைக்கப்படும் நவுரு தீவு முகாம்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சுமார் 2000 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அங்கு இடம்பெற்றுள்ளதாக அல் ஜெசீரா செய்திச் சேவை தெரிவித்துள்ளது

இதேவேளை சிறுவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர் என ஐக்கிய நாடுகள் அமைப்பும், மனித உரிமைகள் அமைப்புக்களும் குற்றம் சுமத்தியுள்ளன.

இதேவேளை, சித்திரவதைகள் காரணமாக சில புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள உந்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.