ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் விழிகாட்டலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணியை பலப்படுத்தும் நோக்கில் வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திரத்திலுள்ள வாழவைத்த குளம், ஆண்டியாபுளியன்குளம், புதுக்குளம், போன்ற கிராமங்களிலும் நேற்று இந்த செயற்த்திட்டம் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த பகுதிகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ,முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும் SAJ Relief Foundation ஸ்தாபகருமான எம்.எம்.சாஜிதீனால் மரங்கள் நாட்டப்பட்டன.
வவுனியா மாவட்டத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள கல்நாட்டியகுளம் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும், வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினருமாகிய டாக்டர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள கல்நாட்டியகுளம் மிகப்பழைய கிராமமாகும். இற்றைக்கு 300 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த கிராமாகும். வவுனியா மாவட்டத்தின் தெற்கு எல்லையில் இருக்கும் இந்த கிராமமானது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 1977 களிலும், அதனை தொடர்ந்து 1983 காலப்பகுதியிலும் பேரழிவுகளை சந்தித்த கிராமமாகும்.
விவசாயத்தை ஜீவனோபாயமாக கொண்டுள்ள இந்தக்கிராமத்தை சேர்ந்தவர்கள் 1983 காலப்பகுதியில் தமது கிராமத்தை விட்டு முற்றாக வெளியேறினர். அதன் பின்னர் அருகிலுள்ள வேப்பங்குளம் மற்றும் கல்நாட்டியகுளத்தின் உள்பகுதியில் குடியேறியுள்ளபோதும் எல்லைப் பகுதியிலிலுள்ள பாரம்பரிய பழைய கிராமத்தில் மக்கள் இதுவரை குடியேறவில்லை.
இந்தநிலையில் மேற்படி விடயம் தொடர்பாக மத்திய மீள்குடியேற்ற அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு இந்தவிடயம் என்னால் கொண்டுசெல்லப்பட்டது. கடந்தமாதம் சிதம்பரநகர் நிகழ்வுக்கு வருகை தந்த மீள்குடியேற்ற அமைச்சரை மேற்படி கிராமத்திற்கு அழைத்து சென்று மக்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மக்களால் தமது தேவைகள் தொடர்பில் கோரிக்கை மனு அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
தற்போது மீள்குடியேறவுள்ள மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சினால் மாவட்ட அரசாங்க அதிபர் கோரப்பட்டுள்ளார். அறிக்கை சமர்பிக்கப்பட்டதும் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத்தில் ஒரு பக்கம் அமானுஷ்யம், பேய் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை என்ற கூட்டம் இருக்கத் தான் செய்கின்றனர். பேய் இருக்கா? இல்லையா? பார்த்திருக்காங்களா? இல்லையா?
இப்படியான கேள்விக்கு பதில் என்னவென்று கேட்டால் யாரி்டமும் இல்லை என்றே கூறலாம். ஒருசில மனிதர்கள் பேய் இருக்கிறது என்றும் சிலர் இல்லையென்றும் கூறுகின்றனர். ஆனால் இணையத்தில் அவ்வப்போது வரும் காணொளிகளை சற்று நம்பியே ஆக வேண்டியுள்ளது. அம்மாதிரியான காணொளித் தொகுப்பே இதுவாகும். பேய் இல்லைன்னு சொல்றவங்களா நீங்க அப்போ கட்டாயம் பாருங்கள்.
நமது இதிகாசம், புராணங்களில் ஒருவர் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது. எப்படி வாழ்ந்தால் ஒருவரது எதிர்காலம் எப்படி இருக்கும், கர்மா என்றால் என்ன? எதனால் அடுத்த பிறவி எடுக்கிறார்கள், மறுபிறவி என ஒன்று இருக்கிறதா? என பலவன கூறப்பட்டுள்ளன.
இவை எல்லாம் உண்மையா? பொய்யா? கட்டுக்கதையா? வெறும் கதையா? என இன்றளவும் பல மேடைகளில் தலைப்பாக கொண்டு பேசப்படுகின்றன. 50:50 இதை உண்மை என்றும் பொய் என்றும் கூறி தான் வருகிறார்கள்.
மரணம் என்பது யாரும் விரும்பாத ஒன்று. ஆனால், பிறக்கும் போதே மரணம் நிச்சயம் என்பது எழுதப்படாத நியதி. ஆனால், அந்த மரணம் எப்போது வரும் யாராலும் கணிக்க முடியாது.
அப்படிப்பட்ட மரணம் நிகழ போகிறது என சிவ புராணத்தில் கூறப்பட்டிருக்கும் 11 அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்…
* வாய், காது மற்றும் கண் போன்ற உடல் உறுப்புகள் செயலிழப்பு அல்லது செயலிழந்து வருகிறது எனில், ஆறு மாதங்களில் இறப்பு நேரிடும் என் சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
* திடீரென உடல் வெள்ளை / மஞ்சளாக நிறம் மாற துவங்குகிறது. உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் தென்படுகின்றன என்றால் அடுத்த ஆறு மாதத்தில் அந்த நபர் உயிரிழக்க நேரிடலாம்.
* தொண்டை மற்றும் நாக்கு ஒருவருக்கு விடாமல் வறட்சி அடைந்துக் கொண்டே இருக்கிறது எனில், அந்த நபர் விரைவில் இறந்துவிடுவார் என்று அர்த்தம்.
* ஒருவரது இடது கை அச்சம் அல்லது பதட்டத்தின் காரணமாக நடுங்கிக் கொண்டே இருக்கிறது / நாவில் வறட்சி ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என்றால், அந்த நபர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவர்.
* ஒருவரால் கருப்பு அல்லது சிவப்பு நிற வட்டத்தை நிலா மற்றும் சூரியனில் பார்க்க முடிகிறது என்றால் அவர் 15 நாட்களுக்குள் இறந்துவிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
* ஒருவரால் நிலா மற்றும் நட்சத்திரங்களை பார்க்க முடியவில்லை / மிக மந்தமாக தான் தெரிகிறது எனில், அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
* ஒருவர் திடீரென நீல ஈக்களால் சூழப்படுகிறார் என்றால் அவர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவார் என்று அர்த்தமாம்.
* கருடன், காகம், கழுகு / புறா ஒருவரது தலையில் வந்து அமர்வது மரணத்தின் அறிகுறி என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* ஒருவர் தனது நிழலில் தனது தலைப் பகுதியை காண முடியவில்லை என்பது மற்றுமொரு மரணத்தின் சமிக்ஞை என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* எதையும் சரியாக பார்க்க முடியாமல் போவது / நெருப்பை தெளிவாக பார்க்க முடியாமல் போவது மரணம் உங்களை எட்டிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் சமிக்ஞை.
* எண்ணெய், தண்ணீர் போன்றவறில் ஒருவரது பிரதிபலிப்பை பார்க்க முடியாவிட்டால் ஆறு மாதத்தில் அவர் இறந்துவிடுவார் என சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
– See more at: http://www.manithan.com/news/20160801120959#sthash.V0H3grqu.dpuf
பாபநாசம், ஜில்லா படங்களில் கலக்கியவர் நிவேதா தோமஸ். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த தெலுங்குப்படம் ஜெண்டில் மேன் செம்ம ஹிட் அடித்துள்ளது.இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவர் சில வருடங்களுக்கு முன் ஒரு தெலுங்குப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இதன் படப்பிடிப்பில் இவர் கலந்துக்கொள்வது இல்லையாம், இதனால், கோபமான படக்குழு இவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க, நிவேதா படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்படும் என கூறியுள்ளனர்.
கபாலி படத்துக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மீறி வலைதளங்களில் படம் வெளியாகி இருந்தது. இதுகுறித்து தாணு தொடர்ந்திருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது பேசிய நீதிபதி கிருபாகரன், நீதிமன்ற உத்தரவு மீறி இணையதளங்களில் படம் வெளியானது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார். மேலும், கபாலி படம் பற்றியும் சில கருத்துக்களை கூறினார்.
கபாலி படம் பல நூறு கோடிக்கு மேல் வசூலை அள்ளி குவித்துள்ளது என்கின்றனர். இந்த படத்தின் மூலம் கிடைத்த வருவாயில், ஒரு பகுதியை அந்த நிறுவனம் சமுதாய நலனுக்காக செலவு செய்யவேண்டும். இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றால், பிறப்பிக்க தயாராக உள்ளேன் என்று கருத்து தெரிவித்தார்.அதற்கு தாணுவின் வக்கீல், ஏற்கெனவே மனுதாரர் பல உதவிகளை செய்து வருகிறார். கபாலி படத்தின் மூலம் கிடைத்த வருவாயிலும் ஒரு பகுதியை அதேபோல சமுதாய நலனுக்கு செலவு செய்வார் என்று கூறினார்.
இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பல்லேகலையில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதற்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹேரத்தும் முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் 49 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அவர், 2-வது இன்னிங்சில் 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
9 விக்கெட்டுக்கள் கைப்பற்றியதால் ஹேரத் ஐ.சி.சி.யின் தரவரிசையி்ல 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். தற்போது அவர் 749 புள்ளிகளுடன் அந்த இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர் அஸ்வின் 876 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆண்டர்சன் 875 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும், பிராட் 852 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும் உள்ளனர். பேட்டிங்கில் 176 ஓட்டங்கள் சேர்த்த குசால் மெண்டிஸ் 21-வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து வீரர் டெய்லர் ஜிம்பாப்வே அணிக்கெதிராக 173 ஓட்டங்கள் சேர்த்ததால் 12-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் சொதப்பிய வார்னர், ஜோ பர்ன்ஸ், உஸ்மான் கவாஜா தரவரிசையில் பின்தங்கியுள்ளனர். ஸ்டீவன் ஸ்மித் அரைசதம் அடித்தன்மூலம் பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறார். ஜோ ரூட் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.
பரீட்சை மண்டபத்துக்கு மேற்பார்வையாளர் ஒருவர், தாமதமாக கடமைக்கு வந்தமையால், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இன்று நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்தநிலையில், களனி – ஹேனேகம மத்திய மகா வித்தியாலயத்தின் (பரீட்சை மத்திய நிலையம் இலக்கம் 340) மண்டப இலக்கம் 1 இன் மேற்பார்வையாளர் தாமதமாக கடமைக்கு வந்ததாக தெரியவந்துள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், பரீட்சார்த்திகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், காலை 11.00 மணிக்கு நிறைவடைய வேண்டிய வினாப் பத்திரத்திற்காக மதியம் 12.30 வரை காலம் வழங்கப்பட்டதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.
எனினும், சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எட்டு மற்றும் ஒன்பது வயதான இரு சிறுவர்களை ஒரு மாதமளவில் அடிக்கடி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும், இளைஞர் ஒருவர் வென்னப்புவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வென்னப்பு – தோப்புதோட்ட பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களாவர். இதேவேளை, சந்தேகநபர் குறித்த இரு சிறுவர்களுக்கும் ரெஸ்லின் இறுவெட்டை காண்பிப்பதாக கூறி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கு நீலப்பட காணொளியை காண்பித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு பலமுறை அந்த சிறுவர்களை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக, பாதிக்கப்பட்டவர்களின் தாய் வென்னப்புவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளதோடு அவரை மாரவில மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் நீதிமன்றத்திற்கு வந்த பெண் குற்றவாளி ஒருவர் காற்சட்டை அணியாமல் வந்தது நீதிபதியை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. அங்காடிகளில் திருடிய குற்றதிற்காக பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைகளில் பெண் கைதிகளுக்கு வழங்கப்படும் Jumpsuit ஆடை இவருக்கு வழங்கப்படவில்லை, அதனால் இவர் தனது சொந்த ஆடையை பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் மீதான வழக்கு விசாரணை, Louisville நகரில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்திற்கு வந்த இந்த பெண் கைதி, காற்சட்டை அணியாமல் வந்துள்ளார். இதனைப்பார்த்த நீதிபதி Amber Wolf கோபம் கொண்டு இது நீதிமன்றம், இவ்வாறு காற்சட்டை இன்றி எவ்வாறு நீங்கள் வரலாம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அப்பெண்மணி, நான் கடந்த 4 நாட்களாக சீருடை தருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என கூறி நாட்களை கடத்தினர். அதனால் தான் நீதிமன்றத்திற்கு இவ்வாறு வந்துள்ளேன் என விளக்கம் அளித்துள்ளார். இதனைக்கேட்ட நீதிபதி, உடனடியாக தொலைபேசி வாயிலாக சிறை உயர் அதிகாரியை தொடர்புகொண்டு, இந்த தவறுக்காக விளக்கம் கேட்டுள்ளார். சிறை உயர் அதிகாரியும் இதுபோன்று நடந்துள்ளது எனது கவனத்திற்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.
இறுதியில் அக்குற்றவாளி பெண்ணுடன் வந்த சிறை அதிகாரியை கண்டித்துவிட்டு உடனடியாக ஒரு ஆடையை அப்பெண்ணுக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். அக்குற்றவாளிக்கு ஆடை வழங்கப்பட்ட பின்னர், சிறையின் அலட்சிய செயலால் நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என நீதிபதி கூறியுள்ளார்.இதனையடுத்து திருட்டில் ஈடுபட்ட குற்றத்திற்காக 100 டொலர் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்தோனேஷியாவில் திருமணத்திற்கு முன்னர் டேட்டிங் சென்ற திருமணமாகாத ஜோடிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் கசையடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் உள்ள Aceh மாகாணம், தொன்றுதொட்டு இஸ்லாமிய முறைகளை பின்பற்றி வரும் மாகாணம் ஆகும்.
இந்த மாகாணத்தில், ஓரினச்சேர்க்கை உறவு, திருமணத்திற்கு முன்னர் உறவு கொள்வது, காதலர்களாக வெளியில் சுற்றுவது என்பது மிகவும் தவறானது மட்டுமல்லாமல் அதனை இஸ்லாமிய சட்டமும் ஏற்றுக்கொள்ளாத ஒன்று, அதனையும் மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், சட்டத்தின் தண்டனையில் இருந்து இவர்கள் தப்பவே முடியாது.
இந்நிலையில், இந்த மாகாணத்தை சேர்ந்த ஜோடிகள், திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் இருவரும் சேர்ந்து ஜாலியாக டேட்டிங் சென்றுள்ளனர். இவர்களது ரகசிய டேட்டிங் வெளியில் கசிந்ததையடுத்து, Al Furqon மசூதி முன்னிலையில் வைத்து இவர்களுக்கு கசையடி கொடுக்கப்பட்டுள்ளது, முதலில் அப்பெண்ணை, இரண்டு பெண்கள் சேர்ந்து அழைத்து வந்து மசூதியின் முன்னிலையில் உள்ள மேடையில் மண்டியிடவைக்கின்றனர்.
அதன்பின்னர், நபர் ஒருவர் வந்து தான் வைத்திருக்கும் பிரம்பால், அப்பெண்ணுக்கு கசையடி கொடுக்கிறார், இதனால் வலி தாங்க முடியாத அப்பெண் கதறி அழுகிறார். இதே போன்று அந்த நபரையும் வேறொரு இடத்தில் கட்டிவைத்து அடித்துள்ளனர்.
பீகாரில் தலித் பெண் ஒருவரை கொடுமைப்படுத்தி நிர்வாணப்படுத்தியதுடன் சிறுநீரை குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் பிப்ரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அஜய் பாஸ்வன், கூலித் தொழிலாளி. இவரின் வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் இவரின் மனைவியை நிர்வாணப்படுத்தி சிறுநீரை குடிக்க வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி அவருடைய தந்தை விட்டு சென்றதாக தெரிகிறது, இதுதொடர்பாக பொலிசிலும் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, பிப்ரா கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது, இதற்கு குறித்த தலித் பெண் சூனியம் வைத்தது தான் காரணம் என நம்பியுள்ளனர். இதற்காக அந்த பெண்ணை நான்கு நபர்கள் சேர்ந்து நிர்வாணப்படுத்தியதுடன் அடித்து உதைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயர்தரப்பரீட்சைகள் நடைபெறும் அநேக மத்திய நிலையங்களில் டெங்கு நுளம்புகள் அதிகம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த பாடசாலைகளின் அதிபர்களும், கல்வி அமைச்சும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் டெங்குவின் தாக்கம் அதிகம் உள்ள மத்தியநிலையங்களுக்கு பரீட்சைகள் ஆரம்பிப்பதற்கு முன்பு புகை விசிறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பாடசாலைகளுக்கு புகை விசிறும் நடவடிக்கையானது பாடசாலைகள் 3ஆம் தவணைக்காக ஆரம்பிப்பதற்கு முதல் மேற்கொள்ளப்படும் எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வருடத்தின் கடந்த 7 மாதங்களில் 30,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் நாடுபூராகவும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் பிரசீலா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாணந்துறை-பொல்கொட குளம் ஒன்றில் இருந்து விமான படையை சேர்ந்த சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிப்பாய் இரத்மலானை விமான படை முகாமை சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த விமான படை சிப்பாய் 38 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து உயிரிழந்தவர் மற்றும் அவரது மனைவியின் அடையாள அட்டைகளும் மீட்கப்பட்டதாகபொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துவருகின்றனர்.
பலாலி விமான நிலைய சீரமைப்புக்கான மாதிரி வரைபடம் தயாரிப்பதற்கு இலங்கை மதிப்பில் இரண்டு கோடி ரூபா கோரப்பட்டுள்ளதாக, இந்திய தூதரக வட்டாரங்கள்தெரிவித்தன. பலாலி விமான நிலையத்தைப் பிராந்திய விமான நிலையமாகச் சீரமைப்பதற்கு முடிவுசெய்யப்பட்டது.
சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, இந்திய அதிகாரிகள் குழு கடந்த மார்ச்17ம் திகதி பலாலி விமான நிலையத்தைப் பார்வையிட்டது. இந்தக் குழுவினர், பலாலி விமான நிலையத்தின் சீரமைப்புத் தொடர்பான மதிப்பீடு மேற்கொள்வதற்கு, வரைபடம் தயாரிப்பதற்கு ஓர் நிறுவனத்தை அணுகியுள்ளனர்.
பலாலியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பான மாதிரி வரைபடங்கள்தயாரிப்பதற்கு மாத்திரம் இலங்கை மதிப்பில் இரண்டு கோடி ரூபா வரையில் செலவாகும்என்று தெரிவிக்கப்பட்டது.
சவூதி அரேபியாவானது பொருளாதார சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளதால் அங்கு பணிபுரியும் இலங்கையர் பலர் தொழில்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்காரணமாக தற்போது சவூதியில் பணிபுரிந்த 12 பேர் தொழில்வாய்ப்பை இழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் உபுல் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும் சவூதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவினால் அங்குள்ள பல நிறுவனங்கள் மூடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அல்சா சா என்ற நிறுவனம் ஒன்றில் 10 வருடமாக தொழில்புரிந்து வந்த 12பேர் தொழில்வாய்ப்பை இழந்துள்ளதாகவும், ரியாத்தில் உள்ள நிறுவனம் ஒன்றும் நட்டத்தில் இயங்குவதாகவும் இதில் 100 இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்டுள்ள குறித்த இலங்கையர்களின் நாளாந்த உணவு தேவைகளுக்காக வேண்டிய பணத்தை வழங்குமாறு இலங்கை தூதுவராலயத்தை பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.