குரு பெயர்ச்சிப் பலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக!!

Kuru Peyarchi

நடப்பு துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் திகதி (02.08.2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம் 27ம் திகதி (11.08.2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது.

குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குருபகவானை பற்றி தெரிந்து கொள்வோம்.

வியாழன் குரு பொன்னவன் ஆங்கீரசன் ஜீவன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் தனகாரகன் புத்திரகாரகன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜீவன கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும்.

ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது. குரு பெயர்ச்சி பற்றி சொல்லும் பொழுது ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும் தீதிலாதொரு முன்றிலே துரியோதனன் படைமாண்டதும் இன்மை யெட்டினில் வாலி பட்டமிழந்ததும் ஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும் தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனதும் சத்தியமாமுனி யாறிலே இருக்கையில் தளை பூண்டதும் வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டில் விழ்ந்ததும் என்பது பழம் பாடல்.

மேற்கண்ட பலன்கள் அப்படியே நடக்கும் என்பது உறுதியில்லை. ஜாதகத்தில் குரு இருக்கும் ராசி.லக்னம் ஆகியவை பொருத்தும் ஜன்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார் அதே நடக்கும் தசா நாதனை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும்.

கோசாரத்தில் சுற்றி வரும் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் பொழுதும் யோகத்தையே செய்யும். அதே போல கோசார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை குரு தொடர்பு கொள்ளும் பொழுது குருபகவானால் நன்மையே நடக்கும்.

திருமணம், புத்திரபாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வணங்குவதற்கு திருச்செந்தூர் செல்வது சிறப்பைத் தரும். தொழில் உத்தியோக விருத்திக்கு செங்கோட்டை அருகில் புளியரை என்ற ஸ்தலத்தில் அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

mesha

மேஷம் :  மேஷம் ராசி நண்பர்களே இது வரை ஐந்தாம் வீட்டில் இருந்த குருபகவான் இவ்வருடம் ஆறாம் பாவமான அடிமைத்தொழில், தாய்மாமன், நோய், கடன் எதிரி ஆகியவற்றை குறிக்கும் பாவத்திற்கு வருகிறார். சுபகிரகம் ஆறில் வந்தால் அசுப பலன்கள் குறையும் என்பது ஜோதிட விதி.

ஆறில் குரு ஊரேல்லாம் பகை என்பது பழமொழி. உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதியும் விரையாதிபதியுமான குரு 6ல் வருவது ஒரு வகையில் நன்மையே. அவர் பார்வை தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மாற்றம் முன்னேற்றம் அன்னிய தேச பயணங்கள் வரலாம்.

இதுவரை படித்து வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அஷ்டமத்து சனியால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் தடை நீங்கி நல்லவிதத்தில் நடக்கும்.திறமை அறிவுக்கு ஏற்ற அதிகமான வருமானங்கள் வரும் ஆனால் சுபவிரயமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

12 ஆம் பாவத்தை அந்த பாவாதிபதியே குரு பார்ப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். பிசியாக உழைத்து ஊர் ஊராக சுற்ற வேண்டியிருக்கும். தேவைகேற்ற பணம் வந்தாலும் கையில் காசு பணம் தங்காது. சுபவிரயமாக மாற்ற வீடு, மனை வாங்கும் வாய்ப்பும் வரும். வருகின்ற வருமானம் எல்லாம் நல்ல விடயத்தில் செலவு செய்ய நேரிடும். உற்றார் உறவினர்களிடம் சற்று விலகி இருப்பது நல்லது.

இது வரை தடைப்பட்ட கிரகபிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும். தாங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தை தனகாரகன் குருவே அந்த ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். அஷ்டமத்து சனியால் கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியினர் ஓன்று சேருவார்கள்.

சிலருக்கு நீதிமன்றம் வரை சென்ற வழக்குகள் சாதகமாகும். வாக்கு நாணயத்தை காப்பாற்றி விடலாம்.குடும்ப தேவைக்காக புதிய பொருட்கள் வாங்கவும் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மொத்தத்தில் 60 சதவிகிதம் நன்மைகள் நடக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமை சித்தர்கள் ஜிவசாமதிகளில் தரிசனம் செய்வது நல்லது. பெருமாளும் முருகப்பெருமானும் சேர்ந்து அருள்பாவிக்கும் கோயில்களில் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்வது நல்லது.

rishabam

ரிஷபம்: ரிஷப ராசி நண்பர்களே கடந்த இரண்டு ஆண்டுகளாக பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது கொடுத்ததை வாங்க முடியல வாங்கியதை கொடுக்க முடியவில்லை என்ற குழப்பத்துடனே காலத்தை ஓட்டிய உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஜந்தாம் இடமான புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் என்ற ஸ்தானத்திற்கு வருகிறார் ஏற்கனவே 9க்கும் 10க்கும் அதிபதி ராசியை பார்த்ததால் உண்ண உணவு உடுக்க உடை இருக்க இடத்துடன் காலத்தை ஓட்டினீர்கள். புது காரியங்கள் தொட்டது துலங்கவில்லை.

ராசிக்கு அட்டாமாதிபதி குரு சுக ஸ்தானமான 4ல் இருந்ததால் உடலும் மனதும் வருத்தியது. போகாத கோயில் இல்லை. பார்க்காத வைத்தியம் இல்லை. இந்த குருபெயர்ச்சியில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். குருவின் பார்வை 9ஆம் இடத்தை பார்ப்பதால் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும். கடைசி நேரத்தில் நின்று போன திருமணம், திருமணத்தடை உண்டான ஜாதகருக்கு எல்லாம் திருமணம் நடக்கும்.

திருமணாமாகியும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். 11ம் பாவத்தை அந்த பாவாதிபதி குருவே பார்ப்பதால் வழக்குகளில் சிக்கி இருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவார்கள். சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம். பூர்வீக சொத்துகள் மூலம் அனுகூலம் ஆதாயம் பெறலாம். சொத்து விசயத்தில் கடன் பட்டவர்கள் கடனை அடைத்து நிம்மதி பெறலாம்.

ராசியை 9ம் பார்வையாக குரு பார்ப்பதால் புகழ் கீர்த்தி அந்தஸ்து பெறலாம். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் புது வீடுகட்டி குடிபோகலாம். பாதியிலே நின்று போன வீட்டு வேலைகள் பூர்த்தியாகி சுபகாரியம் நடக்கும். பிள்ளைகளால் பெருமை. பிள்ளைகள் விருப்பப்படி படிப்பும் அமையும். வசதி வாய்ப்பு பெருகி நிம்மதியான சூழ்நிலை கூடும்.

எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். நீங்கள் செய்த நற்செயல்களுக்கெல்லாம் பலன் இப்பொழுது தான் கிடைக்க போகிறது. கன்னி ராசியில் குரு பகை என்பார்கள். ராசிநாதன் புதன் தான் பகையே தவிர அதில் உள்ள முன்று நட்சத்திரங்களுக்குறிய அதிபதிகளான சூரியன் சந்திரன் செவ்வாய் மூவருமே குருவுக்கு நட்பே. அதனால் உயர்வான முன்னேற்றத்தை தரும்.

தற்சமயம் நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் வேலையை விட்டு வேறு வேலை தேடாதிர்கள். நல்ல வேலை கிடைத்தவுடன் பழைய வேலையை விட்டுவிடுங்கள். கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது அந்த காலம் ஆடி 18க்குமேல் வருகிறது.13 மாதமும் நன்மையே. 80 சதவிதம் நன்மையே நடக்கும்.

பரிகாரம்: புதன் பெருமாள் அம்சம் அவருடைய வீட்டில் குரு இருப்பதால் சிவன் கோயிலில் பெருமாள் சந்நிதி இருக்கும் கோயிலில் உள்ள மேதா தெட்சினாமூர்த்தியை வணங்கவும்.

mithunam

மிதுனம்: மிதுனம் ராசி நண்பர்களே! இதுவரை முன்றாம் பாவத்தில் மறைந்த குருபகவான் ஆடி மாதம் முதல் தாங்கள் ராசி நாதன் வீட்டிற்க்கு வருகிறார். தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனது என்பது பாடல் அதுபடி இந்த குருபெயர்ச்சி அமையுமா? இது பொதுவானது தான். ராசிக்கு 4 ல் வரும் குருபகவான் 8, 10, 12, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் 8 ஆம் பாவம் அபகீர்த்தி ஸ்தானம் என்று பெயர்.

அந்த ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உங்களை அவதூறு செய்தவர்கள், உங்களை வைத்து பணமோசடி செய்தவர்கள் எல்லாம் தங்களை நாடி வரும் காலம். பாதகாதிபதி கேந்திரத்தில் வரும் பொழுது மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் தரும். புது நண்பர்கள் ஆதரவு அனுகூலம் ஆதாயம் கிடைக்கும் மனைவி வகையில் சிறுசிறு வைத்திய செலவுகள் வரலாம். சில ஜாதகர்கள் கல்யாணம் ஆகியவுடன் தாம் சம்பாதிக்கும் பணத்தை மனைவி வீிட்டாருக்கு செலவழித்து தங்களுடைய தாய் தந்தை சகோதரிகளிடம் பகையை பெறுவார்கள். ஏழாம் அதிபதி குரு பாதகாதிபதி ஆவதால் அவ்வாறு பிரச்சனைகள் வரலாம்.

பத்தாம் வீட்டை அந்த பாவாதிபதி குருவே பத்தாம் பாவத்தை பார்ப்பதால் இது வரை நலிவுற்ற தொழில் வளர்ச்சி அடையும். இதுவரை முடங்கிய லாபம் எல்லாம் வரும். உத்யோக உயர்வு பதவி முன்னேற்றம் வெளிநாட்டு தொடர்பு. வேலை கிடைக்கலாம். மாற்றம் முன்னேற்றத்தை தரும். 12 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் இதுவரை தூக்கம் இல்லாமல் நிம்மதியை இழந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

பயணங்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். இதுவரை தடைப்பட்ட சுபகாரியம் எல்லாம் இனிதே நடக்கும். கேந்திரத்தில் சுபகிரகம் வரும் கேந்திராதிபதி தோஷத்தை தானே தர வேண்டும் சந்தேகம் வரலாம். 4 ஆம் பாவம் மட்டுமே ஸ்தான பலம் இழக்கும். அதாவது வண்டி வாகன விரைய செலவுகள்.

சிலருக்கு சொந்த வீடு சொகுசாக இருக்கும். பணி நிமித்தம் காரணமாக வாடகை வீட்டிற்கு போவது இதுதான் பாதக பலன்.

பரிகாரம்: இன்பத்தில் துன்பம்,துன்பத்தில் இன்பம் மாறிமாறி வரும் நவகிரக சன்னதியில் உள்ள குருவுக்கு வியாழக்கிழமை அர்ச்சனை செய்யவும். பெருமாள் வழிபாடு புதன்கிழமை செய்வது நல்லது.

katakam

கடகம்: கடகம் ராசி நண்பர்களே! இது வரை இரண்டாம் பாவத்தில் சஞ்சரித்த குரு பகவான் ஆடி மாதம் முதல் முன்றாம் பாவமான தைரியம் சகோதரம் வீரம் எழுத்தறிவு விளையாட்டுத்துறை என்று சொல்லப்படும் பாவகத்துக்கு மாறுகிறார் ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான். ராசிக்கு 6 க்கும் 9க்கும் உடையவர். எப்பொழுதும் குரு மாறும் பொழுது யோகத்தை செய்வார். பாக்கிய ஸ்தானத்தை பாக்கியாதிபதி பார்த்தால் சகல பாக்கியமும் சேரும்.

இரண்டுல குரு என்று எல்லா காரியத்திலும் இறங்கி எல்லாமே விட்ட குறை தொட்ட குறை என்று பாதியிலே நின்று மன உளைச்சல் தந்தது. குருவின் பார்வை படும் 7, 9, 11, பாவங்களால் யோகத்தை அனுபவிக்கப் போகின்றீர்கள். திருமணம் தாமதமாகி நிற்பவர்கள் இனிதே திருமணம் நடக்கும். திருமணம் ஆகி நீதிமன்ற வழக்கில் இருந்தவர்கள் ஒன்று சேருவார்கள் அல்லது மறுவாழ்க்கை அமையும்.

கூட்டுத் தொழில் வெளிநாட்டு பயணம் நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை வாய்ப்பு விடயத்தில் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பாக்கியதிபதி பாக்கிய ஸ்தானத்தை பார்க்கப் போவதால் இது நாள் வரை கோயில் குளம் சுற்றி உங்கள் கோரிக்கைகளை வைத்து அதில் ஏமாற்றம் அடைந்த உங்களுக்கு நீண்ட நாட்களாக நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த பதவி பட்டங்கள் பூர்வீக சொத்து பரிமாற்றம் புது முயற்சிகள் கைகூடும் லாப ஸ்தானத்தை ஓன்பதாம் அதிபதி பார்க்கப் போவதால் பொருளாதார நிலை திருப்தி தரும்.

சிலர் பண கொடுக்கல் வாங்கலில் சிக்கியிருந்தால் அந்த பிரச்சனைகள் முடிவு பெற்று தனவரவு ஆதாயம் கிடைக்கும்.தொழில் வளர்ச்சி மாற்றம் முன்னேற்தை தரும். குரு 6 பாவத்துக்கு 6 ஆம் பாவமான 11ஆம் வீட்டை பார்க்கப் போவதால் ஆரோக்கியம் நோய் நொடி தொந்தரவுகள் நீங்கும். மாற்று மருந்தால் நோய் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி பொங்கும். புனித யாத்திரை செல்விர்கள்.

பரிகாரம்: கடக ராசி லக்னத்தில் பிறந்தவர்கள் அம்பாள் அனுகிரகம் பெற்றவர்கள் திங்கட் கிழமைகளில் அம்பாள் வழிபாடும் குருபகவானை தரிசிப்பதும் நல்லது. பௌர்ணமி விரதம் இருப்பதும் நன்று. கடகராசி லக்னத்தில் பிறப்பவர்கள் ஓரு முறையாவது கொல்லூர் மூகாம்பிகையை தரிசிப்பது நல்லது.

simmam

சிம்மம்: சிம்மம் ராசி நண்பர்களே இது வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்த குருபகவான் ஆடி மாதம் முதல் குடும்பம், பணம், கண்கள், வாக்கு, நாணயம் ஆகியவற்றை குறிக்கும் 2 ஆம் பாவத்துக்கு வருகிறார். தனகாரகன் குரு தனஸ்தானத்தில் வரும் பொழுது தனஸ்தானம் பலம் குறையுமே என எண்ண வேண்டாம். பொதுவாக கடகம் மற்றும் சிம்ம ராசிக்கு குரு யோகாதிபதி எனவே குருவால் பாதகம் வராது.

அதே சமயம் செலவுகள்கூடும் ஆனால் வருமானமும் வந்து கொண்டே இருக்கும். அவரின் பார்வை 6, 8, 10 ஆகிய வீடுகளை பார்க்கப் போவதால் வரும் பிரச்சனைகள் பெரிதாக தெரியும். ஆனால் சூரியனை கண்ட பனிபோல மறைந்து விடும்.வாக்கு ஸ்தானத்தில் குரு வருவதால் குடும்பத்தில் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும். செல்வ நிலை திருப்தி தரும். திருமணம் சுபகாரியம் புது முயற்சிகள் கைகூடும்.

தொழில் வேலை வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும். அதே போல் நோய் நொடி பிணி கேடுகள் மறையும் கடன் தொல்லைகள் குறையும். புது தொழில்கள் தொடங்கள் நல்ல காலம் இப்பொழுது. இது வரை படித்து தகுதிகேற்ற வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை உத்தியோகம் முன்னேற்றம் மாற்றமும் வரும். சிலருக்கு நீண்ட காலமாக இருந்த நீதிமன்ற வம்பு வழக்குகள் சாதகமாகும். மொத்ததில் 80 சதவிதம் நன்மைகள் நடைபெறும்.

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் சிவனையும் குருவையும் தரிசிப்பது நல்லது. சிம்ம ராசிக்காரர்கள் பிரதோச வழிபாடு செய்வது நல்லது.

kanni

கன்னி: கன்னி ராசி நண்பர்களே இதுவரை 12 ஆம் பாவத்தில் இருந்த குருபகவான் ஓருவரின் புகழ் கௌரவம் அந்தஸ்து தேகபலம் ஆயுள் ஆகியவற்றை குறிக்கும் ஜென்ம ராசிக்கு வருகிறார். ‘ஜென்ம ராமர் வனத்திலே’ என்று பாடல் ஜென்ம ராசி என்பது புகழ் கிர்த்தி ஸ்தானம் என்று பெயர் 4 க்கும் 7க்கும் அதிபதியான குரு ராசிக்குள் வரும்பொழுது புது முயற்சிகள் கைகூடும்.தொட்டது துலங்கும்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இருந்த சூழ்நிலை மாறும். கடந்த காலங்களில் வருமானம் தடை கடுமையான செலவுகள் வீண் விரையம் ஆகியவை கடும் மனக் கஷ்டத்தைக் கொடுத்தது. குருவின் பார்வை படும் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது.

ஜந்தாம் பாவத்தை கோசார குரு பார்த்தால் உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும், ஆண் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும்.

குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். அதே போல் 7 ஆம் இடத்தை குரு பார்க்கப்போவதால்.கூட்டு தொழில் நண்பர்கள் ஆதரவு வெளிநாட்டு பயணம் தடைப்பட்ட திருமணம் ஆகியவை எல்லாம் இனிதே நடக்கும். ஜென்ம ராசிக்குள் குருவந்தால் சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

வேலைப் பளு காரணமாக சரியான நேரத்தில் உணவு உண்ணாமல்,சரியாக தூக்கமும் இருக்காது எனவே உணவு உறக்கம் இவற்றில் எல்லாம் விழிப்புணர்வுடன் இருங்கள்.

என்ன தான் முயற்சி செய்தும் என்ன தான் உருண்டு புரண்டு பாடுபட்டாலும் இது வரை கருனை செய்யாத தெய்வம் இப்பொழுது கருணை மழை காட்டப்போகிறது அது 9ம் வீட்டை குருபார்த்த பலன் சகல பாக்கியத்தையும் நீங்க அடையப்போவது உறுதி.

பரிகாரம்: புதன் கிழமை பெருமாள் கோயிலுக்கு துளசி மாலை சாற்றுங்கள். அதே போல் ஹயக்ரீவரையும் வழிபாடு செய்யலாம். 70 சதவிதம் நன்மையை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

thula

துலாம்: துலாம் ராசி நண்பர்களே இது வரை லாபஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் ஆடி மாதம் முதல் 12 ஆம் பாவமான விரையம் மோட்சம் வெளிநாட்டு பயணம் சொந்த வீடு தூக்கம் போகம் ஆகிய காரகத்துவங்களை குறிப்பிடும் வீட்டுக்கு வருகிறார்.

பொதுவாக துலாம் ராசி துலாம் லக்னத்துக்கு குரு வலுபெறக்கூடாது குரு பகவான் 3க்கும் 6 க்கும் இருமறைவு ஸ்தானதிபதியாவர் 6க்குடையன் 12 ல் மறைவதால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ ஜோகம் என்ற விதியில் யோகத்தை செய்யும் பொதுவாக மீனம் தனுசுக்கு சுக்கிரன் நன்மை செய்ய மாட்டார்.

அதே போல துலாம் ரிஷபம் ஆகிய ராசிக்கு குரு நன்மையை செய்யமாட்டார் அப்படி நன்மை செய்யாத கிரகம் மறைந்தால் நன்மையை அதிகமாக எதிர்பார்க்கலாம்.

குருவின் பார்வை நாலாம் வீட்டை பார்க்கிறது நாலாம் பாவம் சுக ஸ்தானம் என்று பெயர். வீடு மனை தாயார் வாகன சுகம் ஆகியவற்றை பார்ப்பதால் வீடு மனை வாங்கும் யோகம் அசையா சொத்துகளால் நீதிமன்ற வம்பு வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். வாகனம் மாற்றம் வரும் வீடு விஸ்தரிப்பு செய்வதுடன் வீட்டை புதுப்பித்துக் கட்டக்கூடிய வாய்ப்பு வரும்.

6ஆம் இடத்தை பார்க்கப் போவதால் ஏழரை சனியால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியமால் தடுமாறி தலைமறைவாகிய உங்களுக்கு கடன்கள் அடைபட போதுமான வருமானம் வரும். முடங்கிய தொழில்கள் லாபம் தரும். 6 ஆம் பாவம் உத்யோக ஸ்தானத்துக்கு 9 ஆம் பாவமாவதால் செய்யும் வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஊதிய உயர்வு போன்றவை தேடி வரும்.

இது வரை இருந்த நோய், நொடி,சீக்கு பிணி கேடுகள் மறையும். மருந்து மாத்திரை மருத்துவமனை செலவுகள் விலகும். உத்தியோகம் சம்பந்தமாக நீதிமன்ற வழக்குகள் இருந்தால் சாதகமாக தீர்ப்பால் இதுவரை கிடைக்க வேண்டிய பணங்கள் கைக்கு வரும். இதுவரை பகையாக இருந்தவர்கள் நட்பாக மாறுவார்கள்.

8 ஆம் வீட்டை குருபார்ப்பதால் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் ஏன் என்றால் 7 ஆம் வீட்டுக்கு 2 ஆம் வீடு 8ம் இடம். கூட்டுத் தொழில் தொழில் வளர்ச்சி அடையும் வியாபார விஸ்தரிப்பு வெளிநாட்டு பயணம் ஏற்படும்.

நன்றாக சம்பாதித்து அசையா சொத்துகள் வாங்கும் நேரம். பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலைமாறி கையிருப்பு அதிகமாக சேரும். மொத்தத்தில் 70 சதவிதம் நன்மைகள் நடக்கும்.

பரிகாரம்: பெருமாள் கோயில் அர்ச்சகர்களுக்கு பச்சரிசி தானமாக கொடுப்பது நல்லது. யானைக்கு வாழைப்பழம் வாங்கி கொடுத்து ஆசிர்வாதம் வாங்குவது நல்லது. வியாழக்கிழமை பெருமாள் வழிபாடும் முருகப்பெருமான் வழிபாடு செய்வதும் நல்லது.

viruchikam

விருச்சிகம்: விருச்சிக ராசி நண்பர்களே! ஆடி மாதம் முதல் லாப ஸ்தானம் என்று சொல்லப்படும் மூத்த சகோதரம், லாபம், ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும் 11ம் பாவத்திற்க்கு மாறுகிறார். ஏற்கனவே கர்ம ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் கர்ம காரகன் சனியின் பார்வையில் இருந்ததால் சில ஜாதகர்கள் பெற்றோர்களுக்கு கருமம் வைத்திய செலவுகளை செய்ய வைத்தது.

அதுவும் தகப்பன் காரகன் சூரியன் தை மாதம் மகரத்தில் வந்தபொழுது சனியின் முன்றாம் பார்வை பெற்றவுடன் பலர் பெற்றோருக்கு கருமம் செய்தார்கள். உங்கள் ராசிக்கு 2க்கும் 5க்கும் உடைய குரு உங்க ராசிக்கு முழுமையான சுபராவார். அவர் லாப ஸ்தானம் ஏறி. 3, 5, 7, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் ஜாதகத்தில் முன்றாம் பாவம் சகோதரம் சகாயம் தைரியம் வீரம் முயற்சி ஸ்தானம் என்று பெயர்.

உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு அப்பா அம்மா இருந்து செய்ய வேண்டியதை சகோதரன் முன்னிலையில் இருந்து செய்வார்கள். சிலருக்கு சொத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். அது நல்ல மாற்றமாக இருக்கும். பூர்வபூண்ணிய ஸ்தானம் என்ற 5 ஆம் பாவத்தை பாவாதிபதி குருவே பார்க்கிறார்.

ஜாதகத்தில் எவ்வளவு யோகம் இருந்தாலும் 5 ம் பாவமும் 5 ஆம் அதிபதியும் பலம் பெறவேண்டும். உங்களுக்கு பொறுப்புகள் கூடும் பதவிகள் தேடி வரும் கனவுகள் பூர்த்தியாகும். திருமணமாகியும் நிண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும். எது எல்லாம் விதிக்கப்பட்டுள்ளதோ அதை எல்லாம் அனுபவிப்பிர்கள். நன்மையான விடயங்களை மட்டும் அதிகமாக அனுபவிப்பீர்கள்.

நல்ல வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை ஊதிய உயர்வு தலைமை பொறுப்பு தேடி வரலாம். பிள்ளைகள் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கஷ்டபட்டு படிக்க வைத்து நல்ல வேலை அமையாமல் வருத்தப்பட்ட பெற்றோர்களின் கவலைகள் நீங்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாதித்து பெற்றோர்கள் கையில் கொடுப்பார்கள்.

அடுத்தது ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பார்க்கிறார். களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும்.ஓரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு ரத்தவழி சம்பந்தபட்ட உறவில் திருமணம் நடக்கும். சொந்த தொழில் கூட்டு தொழில் லாபம்தரும். குலதெய்வ அனுகிரகம் கிட்டும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தரும். இது வரை கஷ்டப்படுத்திக் கொண்டிருந்த முதுகுவலி. இடுப்புவலி, முட்டுவலி போன்ற நோய்கள் விலகும்.

பரிகாரம்: முருகப்பெருமானையும் தெட்சிணாமுர்த்தியையும் வணங்குவது நல்லது. மொத்தத்தில் 80 சதவிதம் நன்மைகள் கிடைக்கும்.

thanusu

தனுசு: தனுசு ராசி நண்பர்களே கடந்த ஓரு வருஷமாக பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் ஆடி மாதம் முதல் பத்தாம் பாவமான தொழில், கங்கா ஸ்தானம், மாமியார் வீடு கர்மா ஸ்தானம் என்ற இடத்திற்க்கு பெயர்ச்சி ஆகிறார்.

ராசிநாதன் குரு கோசாரத்தில் பத்தில் வந்தால் பாதகமா, சாதகமா?. என்றால் 9 ல் இருந்த குரு சாதகமான நன்மைகளை செய்தார் என்றால் 75 சதவிதம் பேர் நன்மைகளை அடைந்து இருப்பார்கள். கோசாரத்தில் ஏழரை சனி இருப்பதால் கடந்த காலங்களில் ஏமாற்றம் சஞ்சலம் விரக்தி வேதனை அனுபவித்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சாதகமாக நல்ல பலனை தரும்.

குரு பத்தில் வந்தால் பதவி நாசம் என்பார்கள். ஜாதகத்தில் தனகாரகன் குரு தனஸ்தானத்திற்கு 9 ல் வருகிறார். குருவின் பார்வை 2, 4, 6, ஆகிய ஸ்தானத்தை பார்க்கிறார்.குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொல்லும் செயலும் நிறைவேறும்.

இதுவரை கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றி விடலாம். பணம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். மனவருத்தங்களால் பிரிந்த தம்பதியினர் ஓன்றுகூடுவார்கள். வர வேண்டிய நிலுவையில் வந்துசேரும். புது முயற்சிகள் கைகூடும். தன்னுடைய ஏழாம் பார்வையால் சுகஸ்தானம் என்ற நாலாம் பாவத்தை பார்க்கிறார். தாயார் வீடு வாகனம் ஆகிய ஸ்தானத்தை பார்ப்பதால் புது வீடு கட்டி குடிபோகலாம்.

வாகனம் வாங்கும் யோகமும், நீண்ட நாளாக வாட்டி வதைத்த நோய் நொடிகள் நீங்கி நலமும் உண்டாகும். நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும். தன்னுடைய 9 ஆம் பார்வையாக ஆறாம் பாவத்தை பார்ப்பதால் எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள்.

கடன்கள் நீதிமன்ற வழக்குகள் முற்றிலும் அகலும். புது முயற்சிகள் கை கூடும்.தொழில் அபிவிருத்தி ஏற்படும். செய்தொழில் வளர்ச்சி பெறும் 60 சதவிதம் நன்மையே நடைபெறும்.

பரிகாரம்: சிவன்கோயிலில் உள்ள தெட்சிணாமுர்த்தி,மற்றும் நவகிரக சன்னிதியில் உள்ள குருபகவானை வியாழக்கிழமை தரிசிப்பது நல்லது.

makaram

மகரம்: மகரம் ராசி நண்பர்களே இது வரை அஷ்டமத்து ராசியில் சஞ்சரித்த குருபகவான் ஆடி மாதம் முதல் ஒன்பதாம் பாவமான தெய்வ அருள் தந்தை. தீர்த்தயாத்திரை தனம் செல்வம் நிம்மதி ஓழுக்கம் இன்பங்கள் ஆகிய ஸ்தானங்களுக்கு வருகிறார். பொதுவாக ராசிக்கு 3, 12, க்குடையவர் குரு. ராசிக்கு நன்மை செய்யாத கிரகம் குரு.

இவர் மறைவு ஸ்தானத்தில் வரும்பொழுது நன்மைகளை செய்வார் திருகோணத்தில் வரும் பொழுது நன்மையை செய்வாரா?. நல்லதையும் செய்வார் கெடுதலையும் செய்வார். ஜந்தாம் பார்வையாக ராசியை பார்க்கிறார் ஜாதகத்தில் ராசி என்பது புகழ் கிர்த்தி அந்தஸ்து மதிப்பை தரும் ஸ்தானம். ‘ஓடிப்போனவனுக்கு ஓன்பதுல குரு’ என்பது பழமொழி. எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் முழுமையாக விடுபடலாம்.

ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை தரும். நீண்டகாலமாக வாட்டி வதைத்த நோய்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். புது முயற்சிகள் கைகூடும். இதுவரை தடைப்பட்ட காரியங்கள் சித்தியாகும். முன்றாம் பாவத்திற்கு பாவாதிபதி குருவே பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறப்புகளால் நிலவிவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கூட்டு தொழில் பாக பிரிவினை சர்ச்சைகள் இருந்தால் விலகும். மன ஆழுத்தம் அச்ச உணர்வு ஆகியவை நீங்கும்.

அடுத்தது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக ஆண் வாரிசுக்கு ஏங்கியவர்களுக்கு எல்லாம் ஆண் வாரிசு யோகம் வரும். உற்றார் உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும் பொருளாதார நிலை மேம்படும். பணம் நிறைய இருக்கின்றது என்று உறவினர்கள் குழைவார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். மற்றபடி கவலைப்பட வேண்டாம். 75 சதவிதம் நன்மைகள் நடக்கும்

பரிகாரம்: பெருமாள் கோயில் வழிபாடு நன்மை தரும்.சனிக்கிழமை குரு வழிபாடு செய்வது நல்லது.

kumbam

கும்பம்: கும்ப ராசி நண்பர்களே! கும்ப ராசிக்கு இதுவரை ஏழாம் பாவத்தில் இருந்த குரு ஆடி மாதம் முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம்தானே யோகத்தை அனுபவித்தவர்கள் எத்தனை பேர் என்று பார்த்தால் 75 சதவிதம் இருக்கும் சிலருக்கு கடந்த காலங்களில் கிணற்றுக்குள் போட்ட கல்லைப் போல செயற்பாடுகள் முடங்கி தான் இருந்தது.

கும்பத்திற்கு 8 ல் வரும் பொழுது குருபகவான் கெடுதலை செய்ய மாட்டார். கன்னி ராசியில் இருக்கும் குரு 12 ஆம் பாவத்தை பார்க்க போவதால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் விரைந்து நடக்கும். அதே நேரத்தில் தன ஸ்தானத்தை தனாதிபதி குருவே பார்ப்பதால் பொருளாதார நிலை உயரும் வரவுகள் கூடும். சேமிப்புகள் கூடும் குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் மறையும். வரவேண்டிய பணவரவுகள் கைக்கு வரும்.

பூர்வீக சொத்துக்களை விற்பதன் முலமாக அல்லது வாங்கிய சொத்துகள் நல்ல விலைக்கு விற்பதால் லாபம் வரும். பணத்தால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் அகலும். கணவன் மனைவி உறவு பலப்படும். 4ம் பாவத்தை குரு பார்ப்பதால் சிலர் அசையா சொத்து வாங்குவார்கள்.

புது வீடுகட்டி குடிபோவார்கள். சிலருக்கு மனைவி வகையிலும் சொத்து வசதி வாய்ப்புகள் சேரும். சிலருக்கு கடந்த காலங்களில் கடனால் அவதிப்பட்டவர்கள் ஏதாவது சொத்தை விற்று முழு கடனையும் அடைப்பார்கள் புது முயற்சிகள் கைகூடும். தொழில் லாபம் கூடும் தற்சமயம் வேலையில் முன்னேற்றம் வரும். 8ல் உள்ள குரு உத்தியோகத்தில் அலைச்சல் காரணமாக சற்று உடல்நிலை பாதிப்பை தருவார் கவனம் தேவை.

பரிகாரம்: வியாழக்கிழமை முருகப்பெருமானையும் கூடிய குருபகவானையும் வணங்கலாம். மொத்ததில் 70 சதவிதம் நல்லது நடக்கும்.

meenam

மீனம்: மீன ராசி நண்பர்களே! கடந்த ஆண்டு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் ஏழாம் பாவமான திருமணம், கூட்டு தொழில், வாழ்க்கை துணை, வெளிநாட்டு வாழ்க்கை, காதல் ஆகிய காரகங்களைக் குறிப்பிடும் ஸ்தானத்தில் இருந்து ராசியைப் பார்க்கின்றார்.

அஷ்டமத்து சனியில்கூட இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வில்லை. ஆனால் கடந்த ஆண்டு பட்டபாடு சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனையை உருவாக்கி விட்டது. பொதுவாக ராசி நாதனோ தசா நாதனோ உச்ச ராசியை நோக்கிப் போனால் ஆரோகணம் பலன்களை செய்யும். அதே போல் அவரோகணம் அதாவது நீச வீட்டை நோக்கி போனால் கடுமையான கஷ்டங்களைத் தரும்.

ஆனால் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும் நல்ல நேரம் வந்து விட்டது. குரு தன்னுடைய ஜந்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்க்கப் போகிறது. குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீரும்.பல வருடங்களாக முயற்சி செய்த விடயங்களை எளிதில் முடிப்பீர்கள். முன்னேற்றமான வேலை தொழில் சம்பாதித்தியம் அமையும்.

வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அமையும் சம்பாதிக்கும் பணம் சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும். பகைமைகள் மாறும். உடன்பிறப்பால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். ராசிக்கு அதிபதி கேந்திர திரிகோணத்தில் வந்தால் நிச்சயமாக நல்ல பலனை தான் செய்வார். பகை வீட்டில் அமரும் குரு கேந்திராதிபதி தோஷத்தை கொடுக்க மாட்டார் சுபகாரியம் திருமணம் கூட்டு தொழில் போன்ற நன்மைகளை செய்வார்.

பொதுவாக ராசி லக்னத்தை குரு பார்த்தால் தேகபலம், மனோபலம் பணபலம் ஆகிய முன்றும் கிடைக்கும். முயற்சி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். வரவேண்டிய பாக்கிகள் வரும் கடன்கள் அடைப்படும்.சேமிப்புகள் சேரும் மொத்தத்தில் 80 சதவிதம் நன்மைகள் நடக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமை குரு வழிபாடு செய்வது நல்லது.பிரதோஷ காலங்களில் நந்திக்கு சந்தனம் வாங்கி கொடுப்பது நல்லது.

பேஸ்புக்கின் வருமானம் எவ்வளவு தெரியுமா?

FB

தற்போதைய இணைய உலகை மட்டுமின்றி மக்களையும் ஆட்டிப் படைக்கும் உலகின் மிகப் பெரிய சமூக வலைத்தளமாக பேஸ்புக் காணப்படுகின்றது.

இந்த நிறுவனமானது ஒவ்வொரு வருடத்தினதும் ஒவ்வொரு காலாண்டுப் பகுதியின் வருமானத்தினை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் 2016ஆம் ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டுப் பகுதிக்கான வருமானத்தை தற்போது வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுமார் 6.44 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் வருமானம் ஆனது கடந்த வருடம் இதே காலப் பகுதியில் ஈட்டப்பட்ட வருமானத்திலும் பார்க்க 59 சதவீதம் அதிகமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தவிர தற்போது மொபைல் சாதனங்கள் ஊடாகவே அதிக பயனர்கள் பேஸ்புக்கினை பயன்படுத்தி வருவதாகவும், இவ் எண்ணிக்கையானது கடந்த ஆண்டை விடவும் 76 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு பயப்படாத சசிகலா புஷ்பா சரிந்த கதை!!

Jeya

தமிழ்நாட்டின் மானம் டெல்லியில் சந்தி சிரித்தது கடந்த 30ம் திகதி. தி.மு.கவைச் சேர்ந்த எம்.பி திருச்சி சிவாவும், அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பாவும் சென்னை செல்ல டெல்லி விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறு தொடர்பாக சிவாவிடம் கருணாநிதியும், சசிகலா புஷ்பாவிடம் ஜெயலலிதாவும் விசாரணை நடத்தினர்.

இதன்பிறகு, சசிகலா புஷ்பா அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அரசியலில் பொது ஒழுக்கம் சிதைந்து போனதன் அடையாளமாகத் தெரிகிறது இந்தக் காட்சி.

ஜூலை 30ம் திகதி சிவாவின் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றுப் பேசிய சிவா, ‘டெல்லியில் நடப்பது சென்னையில் உள்ள உங்க அம்மாவுக்குத் தெரியாது. நேரில் இருந்துகொண்டு எதற்காக போனில் பேசுகிறாய்?’ என்று சொன்னார்.

அப்போது, சசிகலா புஷ்பா வேகமாக வந்து சிவாவின் சட்டையைப் பிடித்து கன்னத்தில் பளார் பளார் என்று நான்கு முறை அறைந்தார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

தொடர்ந்து அங்குள்ள விமான நிலையப் பாதுகாவலர்களும், பயணிகளும் சசிகலா புஷ்பாவை விலக்கிவிட்டனர். பிறகு, இருவரும் பயணத்தை ரத்து செய்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

இதற்கிடையில், டெல்லியில் நாடாளுமன்றம் அருகில் உள்ள 135, நோர்த் அவென்யூவில் இருக்கும் சசிகலா புஷ்பாவின் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டது.

ஜூலை 31ம் திகதி, சென்னைக்கு வந்த சசிகலா புஷ்பாவை, உடனடியாக போயஸ் கார்டனுக்கு வரச் சொல்லி அழைப்பு வந்தது. அங்கு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவருடன் தம்பித்துரை மட்டும் இருந்துள்ளார்.

சசிகலா புஷ்பாவுக்கு டோஸ் விழுந்தது. அவரிடமிருந்து இரண்டு கடிதங்கள் வாங்கப்பட்டன. தம்பித்துரையிடம் போனில் பேசிய ஜெயலலிதா, ‘டெல்லியில் நடக்கும் எல்லா விஷயங்களும் எனக்குத் தெரியும். நீங்கள் என்னிடம் எதையும் மறைக்க முடியாது. அ.தி.மு.க அரசை கிண்டல் செய்ததற்காக அடித்தார் என சசிகலா புஷ்பா சொல்வது உண்மையல்ல. ஏற்கெனவே அவர் மீது வந்த புகார்களுக்கு அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. இனிமேலும் இதுபோல நடந்தால் அவ்வளவுதான்’ என்று சொல்லி இருக்கிறார்.

திருச்சி சிவாவுக்கு, சசிகலா புஷ்பா பணம் கொடுத்து உள்ளதாகவும் அதைத் திரும்பக் கேட்டபோதுதான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தகவல் உலவுகிறது என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

ஏர்போர்ட் சம்பவம் நடந்தவுடன் சசிகலா புஷ்பாவிடம் போனில் பேசியபோது, டெல்லி விமான நிலையத்தில் காத்திருந்தபோது, அம்மாவையும் (ஜெயலலிதா) தமிழக அரசையும் சிவா கிண்டலடித்துக்கொண்டு இருந்தார்.

அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவரது கன்னத்தில் நான்கு முறை அறைந்தேன். இதனால் டெல்லியில் உள்ள என் வீட்டை தி.மு.க-வினர் அடித்து நொறுக்கியுள்ளனர்.

அவர்களுக்குப் பதிலடி கொடுக்க சென்னை பயணத்தை ரத்து செய்துவிட்டு வீட்டுக்குச் செல்கிறேன் என்றார் ஆவேசமாக.

சசிகலா புஷ்பா குறித்து விசாரித்த போது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமாக இருந்தன. படிக்கும் காலத்திலேயே அவரது நடவடிக்கைகள் வித்தியாசமாகவே இருந்துள்ளன.

தூத்துக்குடியில் மேயராக இருந்த போது இரண்டு பெண் கவுன்சிலர்களை கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்ற பயணம் சர்ச்சையைக் கிளப்பியது.

அடுத்து, தூத்துக்குடி தொழிலதிபரிடம் போனில் பேசிய ஓடியோ, வட்ஸ்அப்பில் வைரலாக பரவியது. இதனால், அவரது மகளிர் அணிச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

அடுத்து, திருச்சி சிவாவுடன் சசிகலா புஷ்பா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வைரலாகின. அதை மார்ஃபிங் என்று சசிகலா புஷ்பா தரப்பு சொல்லியதுடன் சசிகலா புஷ்பாவும், அவரது கணவரும் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார்கள்.

கட்சி பாகுபாடில்லாமல் சசிகலா புஷ்பாவுக்கு எல்லோரிடமும் பழக்கம் உள்ளது. சசிகலா புஷ்பாவின் அரசியல் லிஃப்ட் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரால் ஏற்பட்டது. அவர் மூலமே குறுகிய காலத்தில் ஜெட் வேகத்தில் அரசியலில் வளர்ச்சியடைந்தார்.

நாடாளுமன்றத்தில் தன் தனித்த செயல்பாடுகளால் பலமுறை முத்திரை பதித்தவர் திருச்சி சிவா. 45 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் திருநங்கைகளுக்காக, சிவா கொண்டு வந்த தனிநபர் மசோதா நிறைவேறியது. அப்போது, அவரைக் கட்சிப் பேதமின்றி அனைவரும் பாராட்டினார்கள்.

ஆனால், அவர் தனிப்பட்ட வாழ்க்கையை, பெருமைக்குரியதாக அமைத்துக் கொள்ளவில்லை என்கின்றன டெல்லி வட்டாரங்கள். சசிகலா புஷ்பாவுடன் சிவாவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் ரொம்ப நாட்களாக இருந்து வருகிறது. இது பண விவகாரம்தான்.

ஒரு கட்டத்தில், சசிகலா புஷ்பாவின் தொலைபேசி அழைப்பை சிவா எடுக்கவில்லையாம். இது சசிகலா புஷ்பாவுக்குக் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

பல நாட்களுக்குப் பிறகு, ஏர்போர்ட்டில் நேருக்கு நேராகச் சந்தித்தபோது, எரிச்சல் அதிகமாகி, ‘என் பணமும் போனது என்னையும் மதிக்கவில்லை உன்னால் கட்சியிலும் குடும்பத்திலும் எனக்குக் கெட்ட பெயர்’ என்கிற கோபத்தை வெளிக்காட்டும் வகையில், சிவாவை கன்னத்தில் அறைந்துள்ளார் என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.

சிவா – சசிகலா புஷ்பா விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க, அறிவாலயம் சென்றார் சிவா. மு.க.ஸ்டாலின் சிவாவை சந்திப்பதைத் தவிர்த்து விட்டார். அதனால், கருணாநிதியை மட்டும் சிவா சந்தித்துள்ளார்.

அப்போது, சிவாவிடம், டெல்லி கிளைமேட் எப்படி இருக்கிறது என்று கேட்டாராம் கருணாநிதி. என்ன சொல்வதென்றே தெரியாமல் தவித்த சிவாவிடம், ஸ்டாலினிடம் பேசிய பிறகுதான் என்னால் முடிவு சொல்ல முடியும். போய்ட்டு வா என்றாராம்.

டெல்லி ஏர்போர்ட் விவகாரத்துக்கு அடுத்த நாள் தம்பிதுரை மூலம் கார்டனுக்கு வரவழைக்கப் பட்டார் சசிகலா புஷ்பா. அம்மாவிடம் பாராட்டு கிடைக்கும் எனப் போனவருக்கு குட்டுதான் விழுந்தது. அன்றைய தினமே ப்ளைட் பிடித்து டெல்லி பறந்தார்.

ஆகஸ்ட் 1ம் திகதி காலையில் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த அவரை ராஜ்யசபா அ.தி.மு.க குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன் மறித்து, எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அம்மா சொன்னாங்க எனச் சொல்ல… அதை, சட்டை செய்யாமல் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார்.

அங்கேதான், தலைவி என்னை அடித்தார் என தைரியமாகத் திரி கொளுத்திப் போட்டார். தன்னைப் பேச அனுமதிக்குமாறு துணை சபாநாயகர் குரியனிடம் கேட்டார். சசிகலா புஷ்பா பேசத் தொடங்கிய உடன் அனல் வீசியது.

திருச்சி சிவா நல்ல மனிதர். அவரிடமும், தி.மு.க தலைவர்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. நான், கட்சித் தலைமை மீது நன்மதிப்பு வைத்திருக்கிறேன். ஆனால், அவர்களிடமிருந்து எனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனக்கு இந்தப் பதவியைக் கொடுத்தது கட்சித் தலைமைதான். ஆனால், அந்தத் தலைமையே என் பதவியை ராஜினாமா செய்யுமாறு மிரட்டுகிறது. நான் ராஜினாமா செய்ய மாட்டேன்.

பெண்களுக்குப் பாதுகாப்பு எங்கே இருக்கிறது. என்னைக் கட்சித் தலைவி அடித்தார். என்னை ராஜினாமா செய்ய தம்பித்துரை இங்கு அழைத்து வந்துள்ளார். என் குடும்பத்தைக்கூட நான் பார்க்க முடியவில்லை என்றார்.

அவருடைய பேச்சுக்கு நவநீதகிருஷ்ணன் உட்பட அ.தி.மு.க எம்.பி-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

அ.தி.மு.க வரலாற்றில் யாருமே சொல்லத் துணியாத விஷயத்தை சசிகலா புஷ்பா சொன்னது அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.
ஜெயலலிதாவை தைரியசாலி என்பார்கள். அவருக்கே பயப்படாத சசிகலா புஷ்பாவை பார்த்து கார்டன் வட்டாரமே அதிர்ந்து கிடக்கிறது.

மேயர், மகளிர் அணிச் செயலாளர், எம்.பி என உச்சத்துக்குப் போய் பள்ளத்தில் சரிந்து நிற்கிறார் சசிகலா புஷ்பா.

இது குறித்து திருச்சி சிவா கூறியதாவது, டெல்லியில் இருந்து சென்னை வர டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றேன். எனக்கு ஒரு வேலை இருந்தது. மீண்டும் திரும்பி எக்சிட் ஸ்கேனிங் வழியாக வந்தேன்.

அப்போது சசிகலா புஷ்பா, செக் இன் ஸ்கேனிங் வழியாக உள்ளே வந்தார். அவரை செக்யூரிட்டி செக்கிங் செய்து கொண்டிருந்தனர். அங்கிருந்து ஓடி வேகமாக வந்தவர், ‘நானும் எம்.பி-தான் அவருக்கு மட்டும் ஏன் மரியாதை அதிகமாகக் கொடுக்கிறீர்கள்’ என்றவர் என்னை அடித்துவிட்டார்.

பொது இடம் என்பதாலும் பெண் என்பதாலும் நான் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதற்குள் அங்கிருந்த காவலர்களும், ‘நீங்கள் போங்க சார்’ என்று அனுப்பிவிட்டனர். பிறகு, நான் வந்துவிட்டேன்.’

இதுகுறித்து தி.மு.க தலைமை தரப்பில் ஏதும் பேசினார்களா விஷயத்தைத் தெரிவித்தேன். அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

ஏற்கெனவே உங்களையும் அவர்களையும் இணைத்துப் புகைப்படங்கள் வந்ததே அதைக் கேட்க வேண்டாம். அது, எனக்குப் பெரிய இழுக்கு. இதற்கான காரணங்களைக் கூற விரும்பவில்லை. காரணங்களைச் சொல்லி என்னை நான் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. விரும்பத்தகாத நிகழ்வுகள் என்னுடைய தகுதிக்கும், இயல்புக்கும் பொருந்தாத நிகழ்வுகள்.

அடுத்தகட்டமாக என்ன செய்யப் போகிறீர்கள் தலைமையிடம் என் விளக்கத்தைக் கூறியுள்ளேன்.

-விகடன்-

குளிர்பான போத்தல்களில் சீனியின் அளவை குறிக்கும் உத்தரவு அமுலுக்கு வருகின்றது!!

Soft-Drink

குளிர்பான போத்தல்களில் அடங்கியுள்ள சீனியின் அளவை குறிக்கும் வர்ண குறியீடுகள் வெளியிடும் உத்தரவை மீறும் வர்த்தகர்களை தேடி இன்று முதல் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் கூறியுள்ளது.

1986ம் ஆண்டு 26ம் இலக்க உணவு சட்டத்தின் கீழ் குளிர்பான போத்தல்களில் அடங்கியுள்ள சீனியின் அளவை குறிக்கும் வர்ண குறியீடுகள் வெளியிடும் உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

குறித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக குளிர்பான தயாரிப்பாளர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் கடந்த தினங்களில் அறிவுறுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

அதன்படி அந்த உத்தரவை மீறும் வர்த்தகர்களை தேடி ற்றிவளைப்புக்கள் மேற்கொள்ள சுகாதார அமைச்சின் ஊடாக நாடு பூராகவும் உள்ள பொது சுகாதார பரிசோதகர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் பாழடைந்த கிணற்றில் இருந்து மனித எச்சங்கள் மீட்பு!!

mannar

மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதியிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் சில உறுப்புக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த கிணறு தோண்டப்பட்ட போதே இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் 96 மனித எச்சங்கள் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டன. அந்தப் பகுதிக்கு அருகிலேயே இந்த பாழடைந்த கிணறும் இருந்துள்ளது

மேலும், குறித்த கிணற்றைத் தோண்டும் பணிகள் இன்றும் தொடரவுள்ளன.

வவுனியாவில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுக்கள் மாகாண சுகாதார அமைச்சரால் அங்குரார்ப்பணம்!!

 
வவுனியா மாவட்டத்தில் இயங்குகின்ற அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளுக்குமான அபிவிருத்திக்குழுக்களின் அங்குரார்ப்பணக்கூட்டம் நேற்று (01.08.2016) வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நடைபெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி பசுபதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்போது கருத்துரைத்த சுகாதார அமைச்சர்,

வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை கடந்த இரண்டு வருடங்களில் பாரிய அபிவிருத்தி கண்டுள்ளது. குறிப்பாக வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை பலதுறைகளிலும் அபிவிருத்தி கண்டுள்ளது.

புதிய சிகிச்சைப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது பலமில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன்கூடிய அவசர விபத்துச்சேவை பிரிவொன்றிற்கான நிர்மாணப்பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதுவரை காலமும் அபிவிருத்தி திட்டங்களை திட்டமிடும்போது பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிவதில்லை. அபிவிருத்தியில் மேலிருந்து கீழ்நோக்கிய முறைமையே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

ஆனாலும் தற்போது மாகாண நியதிச்சட்டம் இயற்றப்பட்டு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் சட்டபூர்வமாக வைத்தியசாலைகளுக்கான அபிவிருத்திக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் மூன்று வகையானவர்கள் அங்கம் வகிக்கின்றனர். பதவிவழி நியமனம் பெறும் அரச அதிகாரிகள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் அமைச்சரின் சிபார்சுடன் செயலாளரால் நியமனம் செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளடங்கலாக மொத்தம் 14 பேர் குழுவில் அங்கம் வகிப்பர்.

ஆகவே வைத்தியசாலையில் காணப்படும் குற்றங்களை மட்டும் குறைகண்டு தெரிவிப்பவர்களாக இல்லாது அதனை நிவரத்திசெய்யக்கூடிய வகையிலான ஆலோசனைகளையும் முன்வைப்பதற்கு உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியே இந்தக்குழுவின் தலைவராக இருப்பார். அத்துடன் குழுவின் செயலாளராக நியமனம் பெற்றவர்களில் ஒருவரை நியமிக்கலாம். வடக்கு மாகாணத்தின் சுகாதார துறை மேலும் அபிவிருத்தியடைய நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இக் கூட்டத்தில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன், உதவிச்செயலாளர் திருமதி சுஜீவா, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கேதீஸ்வரன், வவுனியா பிரதேச செயலாளர் உதயராசா, மாகாண கட்டிடங்கள் திணைக்கள பொறியிலாளர், உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள், மருத்துவ உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதேபோன்று வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 02 2 4 5

தனது பிறந்ததினத்தை போரினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுடன் கொண்டாடிய ஆதித்யன்!!

 
ஜேர்மனியில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் சி.ஆதித்தியன் தனது 10வது பிறந்தநாளை முல்லைதீவு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களின் பிள்ளைகள் இருவருக்கு ஈருளிகளை வழங்கியதன் மூலம் கொண்டாடியுள்ளார்.

முல்லைதீவு அலம்பிலை சேர்ந்த ஜன்சிகா தனது தந்தை தாய் இருவரையும் இழந்த நிலையில் உறவினருடன் இருந்து கல்வி கற்பதற்கு சிரமப்பட்ட வேளையில் இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.

மற்றும் முள்ளியவளையைச் சேர்ந்த சஞ்சியா தனது தந்தை சகோதாரி ஆகியோர் யுத்தத்தில் காணமல் போய் உள்ள நிலையில் தனது தாய் மற்றைய சகோதரிகளுடன் வாழ்ந்து வரும் இவர் பாடசாலைக்கு செல்வதற்கு சிரமப்பட்டு வந்த நிலையில் இவருக்கு இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.

சி.ஆதித்தியன் அவர்களின் விருப்பத்திற்க்கு இணங்க ஜேர்மனி உதவும் இதயங்கள் ஊடாக வழங்கப்பட்ட இவ் உதவியினை தாயக செய்பாட்டாளர் ச.சஜீவன் நேரில் சென்று வழங்கியுள்ளார்.

சி.ஆதித்தியன் பல்கலையும் கற்று பல்லான்டு காலம் வாழ நாங்களும் வாழ்த்துவோம். இதே போன்று புலம் பெயர் உறவுகளும் தொடர்ந்து தாயக மக்களுக்கு உதவி வழங்க முன்வர வேண்டும்.

1 2 3 4 5

கிரிக்கட் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி மறுத்த பெற்றோர், தற்கொலை செய்துகொண்ட மாணவன்!!

Death

கிரிக்கட் போட்டியொன்றில் கலந்து கொள்ள பெற்றோர் அனுமதியளிக்க மறுத்த காரணத்தால் பாடசாலை மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 16 வயதான மாணவன் ஒருவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

குறித்த மாணவன் தன் பெற்றோரிடம் கிரிக்கட் போட்டியொன்றுக்குச் செல்ல அனுமதி கோரியுள்ள நிலையில் பெற்றோர் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து தனது அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்ட மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

மாணவனின் உடல் அம்பலாங்கொடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரி இலங்கை அகதிகள் சென்னையில் அமைதிப் பேரணி!!

Srilankan Refugees in chennai

தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரியும், நாடு திரும்ப விரும்புவோருக்கான தண்டப்பணத்தை குறைக்க கோரியும் இலங்கை தமிழ் அகதிகள் சென்னையில் அமைதிப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

சுமார் 600 இலங்கைத் தமிழ் அகதிகள் பங்கேற்றிருந்த இந்தப் பேரணியின் முடிவில், தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை முதலமைச்சர் பணியகத்தில் கையளித்தனர்.

அந்த மனுவில், தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், முகாம்களுக்கு வெளியே வசிக்கும் அகதிகள் நாடு திரும்பும் போது செலுத்த வேண்டிய தண்டப்பணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்தப் பேரணியில் பங்கேற்ற ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் செயலாளர் ஞானராஜ் கருத்து தெரிவிக்கையில்,

முகாம்களுக்கு வெளியில் உள்ள அகதிகள் நாடு திரும்பும் போது, இந்தியாவில் தங்கியிருந்த காலம் தொடக்கம் ஆண்டு ஒன்றுக்கு 3600 ரூபாவைத் தண்டப்பணமாகவும், நுழைவிசைவுக் கட்டணமாக 13,500 ரூபாவையும் செலுத்த வேண்டியுள்ளது.

நீண்டகாலமாக இந்தியாவில் தங்கியுள்ளவர்கள் இதற்காக இலட்சக்கணக்கான ரூபாவைச் செலுத்த வேண்டியிருக்கும்.

நாடு திரும்புவதற்கு விரும்பும் பலர், தண்டப்பணம் செலுத்த வசதியில்லாததால், தமிழ்நாட்டிலேயே தங்கியிருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

எயிட்ஸ் நோய் அதிகரித்து வரும் நாடுகளின் வரிசையில் இலங்கை!!

HIV

எயிட்ஸ் நோய் அதிகரித்து வரும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தேசிய எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே நேற்று கொழும்பு ஊடகமொன்றுக்கு இந்த தகவல்களை வழங்கியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் காலங்களில் எயிட்ஸ் நோய் அதிகரிக்கக்கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் 79 நாடுகள் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

இலங்கையில் கடந்த ஏழு மாத காலப் பகுதியில் எச்.ஐ.வீ. நோய்த் தொற்று பரவிய 130 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எச்.ஐ.வீ நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட 4200 பேர் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 25 வீதமானவர்களே சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக முயற்சிக்கின்றார்கள் அவர் தெரிவித்துள்ளார்.

கடலில் தவித்த 6500 புகலிட கோரிக்கையாளர்கள் பாதுகாப்பாக மீட்பு!!

Refuees

புகலிடம் கோரி சட்டவிரோதமான முறையில் கடற்பயணம் மேற்கொண்ட 6,530 அகதிகளை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக இத்தாலி கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள கடலோர காவல் படையினர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, லிபியா, சிரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து புகலிடம் கோரி ஐரோப்பா வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பற்ற முறையில் கடற்பயணம் மேற்கொண்ட நிலையில், மத்தியதரைக் கடலில் தத்தளித்த 1,100 அகதிகள் நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.

நடுக்கடலிலிருந்து மீட்கப்பட்ட அகதிகளைக் கரை சேர்க்கும் நடவடிக்கைகளை கடலோரக் காவல் படை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருக்கின்றது.

மீட்கப்பட்ட அனைவரும், தாற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன்,அவர்களின் விபரங்களைப் பதிவு செய்ய உதவி வருகிறோம்.

இந்நிலையில், அகதிகள் படகு ஒன்று விபத்துக்குள்ளன நிலையில் உயிருக்குப் போராடிய மூவரை இத்தாலி கடற்படைக் கப்பல் “வேகா’ மீட்டுள்ளது.

அத்துடன், கடல் நீர் புகுந்து நீரில் மூழ்கும் நிலையில் இருந்த படகிலிருந்து 130 அகதிகளை ஜேர்மனியைச் சேர்ந்த உதவிக் குழு மீட்டுள்ளது.

இதனிடையே, மத்தியதரைக் கடலில் கடந்த வியாழக்கிழமை முதல் 6,530 அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலிய கடலோரக் காவல் படை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பின் விபரங்களின்படி, இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் சிரியா, லிபியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பாவில் தஞ்சமடைந்தனர்.

அத்துடன், பாதுகாப்பற்ற படகுகள் நடுக்கடலில் விபத்துக்குள்ளானதில் இந்த ஆண்டு மாத்திரம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலியுடன் விளையாடிய நபர் : கூண்டுக்குள் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

Tiger

சவுதி அரேபியாவில் நண்பரின் புலி ஒன்றுடன் விளையாட்டு காட்டிய நபரை அந்த புலி கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் நபர் ஒருவர் தமது வீட்டில் புலி ஒன்றை வளர்ப்பு மிருகமாக வளர்த்து வந்தார். அந்த புலிக்கு தனியாக கூண்டு ஒன்றையும் அமைத்து அசம்பாவித சம்பவம் எதுவும் எவருக்கும் நேர்ந்துவிடாத வகையில் பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது நண்பரின் அனுமதியுடன் இவர் கூண்டுக்குள் சென்று புலியுடன் விளையாட்டு காட்டியுள்ளார். இந்த சம்பவத்தை புலியின் உரிமையாளரான நண்பர் தமது கமராவில் பதிவு செய்து வந்துள்ளார்.

இதனிடையே அந்த நபரின் விளையாட்டில் கோபமடைந்த புலி திடீரென்று அவரை தாக்கியுள்ளது. முதலில் அதை கருத்தில் கொள்ளாத அந்த நபர் அந்த மிருகத்திடம் போக்கு காடுவதை போல கூண்டுக்குள் ஓடி நின்றுள்ளார். ஆனால் புலி மூர்க்கத்தனமாக தாக்கத்துவங்கியுள்ளது.

அந்த நபரின் காலை கவ்விக்கொண்டு அது மறைவிடத்திற்கு அவரை இழுத்து சென்றுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் உயிருக்கு பயந்து அலறியுள்ளார். ஆனால் இதை பொருட்படுத்தாத அதன் உரிமையாளர் சிரித்துக்கொண்டே கமராவில் படம் எடுத்து வந்துள்ளார்.

இதனிடையே புலிக்கு பயிற்சி அளிக்கும் நபர் சுதாரித்துக்கொண்டு தடி ஒன்றால் புலியிடம் இருந்து அந்த நபரை விடுவிக்க முயற்சி எடுத்துள்ளார். பின்னர் ஒருவழியாக புலியிடம் இருந்து அந்த நபர் விடுபட்டு தப்பி கூண்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

சவுதி மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளில் இதுபோன்ற காட்டு விலங்குகளை வீட்டில் வளர்ப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம் சீனாவில் விலங்கியல் பூங்கா ஒன்றில் சுற்றுலா சென்ற பயணி ஒருவரை காரில் இருந்தே புலி ஒன்று இழுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதில் காப்பாற்ற சென்ற பெண்மணி உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு விதிகளை மீறிய 62 விமானிகள் இடைநீக்கம்!!

Piots

கடந்த 6 மாதங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக 62 விமானிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து 29 பேருடன் புறப்பட்டு சென்று மாயமான இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் ஒருவார காலம் ஆகியும் இ்ன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த சூழலில், விமானத்தில் பணிபுரியும் விமானிகள் முறையாக பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்கின்றனரா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய விமானக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ள பதிலில், கடந்த 6 மாதத்தில் மட்டும் பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடிக்காத 62 விமானிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டில் 93 விமானிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. மாதம்தோறும் 8 பேர் வரை பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

2016ல் இந்த சராசரி 10 ஆக உயர்ந்துள்ளது. விமானிகள் மேற்கொள்ளும் தவறுகள் மற்றும் குற்றங்களை பொறுத்து தண்டனை காலம் நிர்ணயம் செய்யப்படும்.

இடை நீக்கம் ஆனவர்களில் 45 சதவீதம் பேர் மீது அல்கஹோல் பரிசோதனை செய்யாதது, 30 சதவீதம் பேர் ஓடுதள விதிமுறைகளை மீறியது. 20 சதவீதம் பேர் பணி நேர விதிமீறல், 4 சதவீதம் பேர் இதர தவறுகள் புரிந்திருப்பதாக ஆணையத்தின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் மகேஷ் சர்மா கடந்த மே மாதம் பாராளுமன்றத்தில் அளித்த தகவலில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் விமானிகள் மீது 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலும் அல்கஹோல் சோதனைகளுக்கு உட்படத் தவறி குற்றச்சாட்டுதான் என தெரிவித்திருந்தார்.

கடந்த 2012ம் ஆண்டு 109 விமானிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவே 2013ல் 89 ஆக குறைந்தது. கடந்த 2014ல் 92 பேர், 2015ல் 93 பேர் என மீண்டும் விதிகளை மீறியவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முப்பது வயதிற்கு மேல் இளமையாக ஜொலிக்க சில டிப்ஸ்!!

Tips

முப்பது வயதுகளில்தான் சுருக்கங்களும், சருமம் தொய்வடைவதும், கண்களுக்கு அடியில் பை தொங்குவதும் ஆரம்பிக்கும். அதனை ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால் எளிதில் முதுமை தோற்றம் வராது. முன்பு போலில்லாமல் முப்பது வயதுகளிலும் பெண்கள் இருபது வயது போலத்தான் தோற்றம் கொண்டுள்ளனர்.

உதற்கு காரணம் சரும பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வே காரணம். நல்ல ஆரோக்கியமான உணவுடன், அழகையும் பராமரித்துவந்தால் இளமையாக இருக்கலாம்.

இளமையாக இருப்பவர்களிடன் போய் சோதித்துப் பாருங்கள். அவர்கள் நிறைய நீர் குடிப்பவர்களாகத்தான் இருப்பார்கள்.

ஒருவகையில் உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களும், இறந்த செல்களுமே வயதான தோற்றத்தை தரும். அவற்றை தினமும் வெளியேற்றிவிட்டால் சருமம் இளமையாகவே இருக்கும்.

வீட்டிலேயே இயற்கை முறையில் பப்பாளி, முட்டை, தேன் என பயன்படுத்தினால் சருமத்தில் சுருக்கங்கள் இல்லாமல், இறுக்கமான சருமத்தைப் பெற்று தொய்வடைவதிலிருந்து பாதுகாக்க முடியும். வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை இதனை செய்தால் போதும்.

சர்க்கரை, கடலை மாவு, பயிற்றம் மாவு போன்ற இயற்கையான ஸ்கர்ப்பினால் சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை அகற்றுங்கள். இவை சருமத்தை முதிர்ச்சி அடையாமல் காக்கும்.

என்ன உணவு சாப்பிடுகிறீர்களோ அதை பொறுத்துதான் உறுப்புக்கள் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் இருக்கும். ஆகவே இரண்டு வகையிலும் பயன் தரும் சருமத்தை ஆரோக்கியமான உணவினாலும் உங்கள் அழகை வெளிக் கொண்டு வர முடியும். ஆகவே நல்ல உணவுகள் உடற்பயிற்சியை தவறாமல் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்தை பாதிக்கும் முதுமை அடையச் செய்யும். ஆகவே சன் ஸ்க்ரீன் லோஷன் இல்லாமல் வெளியே போக வேண்டாம். இயற்கையான ஹேர்பல் சன் ஸ்க்ரீன் லோஷன் நல்லது.

இரவுகளில் சருமத்திற்கு போஷாக்கு தரும் க்ரீம்களை தடவலாம். க்ரீம்தான் தடவ வேண்டுமென்பது இல்லை. ஒலிவ் எண்ணெய், பால் க்ரீம், தேங்காய் என்ணெய் ஆகியவற்றை தடவினால் இரவில் வெகு நேரம் எண்ணெய் சருமத்தில் ஊடுருவி, மெருகூட்டும்

முப்பதுகளில் சருமத்தில் வறட்சி தோன்ற ஆரம்பிக்கும். ஆகவே சருமம் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். நிறைய நீர் குடித்தும் மாய்ஸ்ரைசரை உபயோகித்தும் சருமத்தில் வறட்சி ஏற்படுத்தாமல் காத்திட வேண்டுவது முக்கியம்.

வீட்டில் இருக்கும், பால், தேன், பாதாம் ஆகியவை சருமத்திற்கு போஷாக்கு அளித்து, ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

எனது சகோதரியை தேடித் தாருங்கள் : ஒரு தங்கையின் அழுகுரல்!!

Saudi

வீட்டுப் பணிப்பெண் தொழில் நிமித்தம் சவுதி அரேபியாவிற்குச் சென்ற பெண் ஒருவர் 3 வருடங்களான போதிலும் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை என குறித்த பெண்ணின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு, புன்னைச்சோலை, காளிகோயில் வீதியைச் சேர்ந்த கந்தையா ரஞ்சிதமேரி (29) என்ற யுவதி கடந்த 2013ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19ஆம் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் ஊடாக வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில்வாய்ப்புப் பெற்று சவுதி அரேபியாவின் தமாமிற்கு சென்றுள்ளார்.

எனினும் குறித்த பெண் தொடர்பில் இது வரையிலும் தகவல்கள் தெரிவிக்கப்படாது, மறைக்கப்படுவதாக அவரது குடும்பத்தார் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவரது சகோதரி கந்தையா நிரோஜினி (26) கருத்து தெரிவிக்கையில்,

வீட்டுப் பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவுக்குச் சென்ற எனது சகோதரி கடந்த 3 வருடங்களாகியும் திரும்பி வரவுமில்லை. இரண்டு வருடங்களுக்கு மேலாக எதுவித தொடர்புகளும் இல்லை.

அங்கு தடுத்து வைக்கப்பட்டு மன உளைச்சலுக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எனது சகோதரியை எப்படியாவது மீட்டுத் தாருங்கள்.

அவர் தொழிலுக்கு சென்று 3 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் மாதாந்த சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 6 மாதங்களுக்கான சம்பளம் மாத்திரமே வழங்கப்பட்டது.

எனது சகோதரி சொந்தமாக தொலைபேசி பாவிப்பதை அவள் பணியாற்றும் வீட்டு எஜமானர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அதனால் போய்ச் சேர்ந்து 6 மாதங்கள் மட்டும் வீட்டு எஜமானர்களுக்குத் தெரியாமல் அவ்வப்போது எங்களுடன் தொடர்பு கொண்டார்.

ஆனால் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக எனது சகோதரியுடனான எந்தத் தொடர்புகளும் இல்லை. சகோதரி பணிபுரியும் வீட்டுத் தொலைபேசிக்கு தொடர்புகொள்ளும் போது எந்த தகவலையும் அவர்கள் தருவது இல்லை.

இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில் எஜமானர்களுக்குத் தெரியாமல் எங்களுடன் தொலைபேசியில் பேசும்போது தன்னை சவுதி அரேபியாவிலிருந்து நாட்டுக்கு திரும்ப வரவழைக்குமாறு எங்களிடம் சொல்லி அழுதாள்.

இது தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, தன்னார்வ தொண்டர் நிறுவனம், மற்றும் ஜனாதிபதிக்கும் அறிவித்துள்ளோம்.

ஆனால் எமது சகோதரியை மீட்டுத் தருவதற்கான முயற்சியை எவரும் மேற்கொண்டுள்ளதாக தெரியவில்லை.

எமது குடும்பம் 1990ஆம் ஆண்டு கலவரத்தினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக இடம்பெயர்ந்து பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளது. எமது பெற்றோர் வயோதிபர்களாக உள்ள அதேவேளை சகோதரிகளில் இருவர் நோயாளிகள்.

எனவே, எமது குடும்பத்தின் கஷ்ட நிலையைக் கருத்திற்கொண்டு வறுமை காரணமாக வாழ்வாதாரம் தேடிச் சென்று சவுதி அரேபியாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள எமது சகோதரியை மீட்டுத் தாருங்கள் என்று குறித்த பெண்ணின் சகோதரி மிகுந்த கவலையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0776390527 என்ற தொலைபேசி இலக்கத்தினை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றும் நெகிழ்ச்சியான தருணம்!!(காணொளி)

resque

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான வீடுகளின் தரைத்தளம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரிலிருந்து பெண் ஒருவரை காப்பாற்றும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் காரின் உள்ளே சிக்கி கொண்ட பெண் வெளியே வரமுடியாமல் பரிதவிக்கிறார்.

சில நிமிடங்களில் மிகவும் கஷ்டப்பட்டு வெளியே வரும் பெண்ணை நீரின் வேகத்தையும் கூட பொருட்படுத்தாது நான்கு பேர் சேர்ந்து மனித சங்கிலி அமைத்து காப்பாற்றியுள்ளனர்.

இதுவரையில் கனமழைக்கு இரண்டு பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.