நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன் : சசிகலா புஷ்பா பகீர் தகவல்!!

Sasikala

முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் நாயைப் போல் அடைத்து வைக்கப்பட்டேன் என ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

அதிமுக அடிப்படை உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா அளித்துள்ள பேட்டியில், சென்னை போயஸ் தோட்டத்தில் ஒரு நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன்.

வெளியில் இருந்து என்னுடைய குடும்பத்தினருடன் கூட பேச அனுமதிக்கவில்லை, வீட்டுக்கு செல்லவும் என்னை அனுமதிக்கவில்லை.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது, நான் சுதந்திரமாக செயல்படுவேன்.எனக்காக குரல் கொடுத்த திமுக, பாஜக, காங்கிரசுக்கு நன்றி.

இதனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது, கடந்த இரண்டு மாதங்களாகவே என்னை ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

வேறு யாருக்கோ எம்பி பதவியை தர திட்டமிட்டுள்ளேன், பதவியை விட்டுக்கொடு என ஜெயலலிதா என்னிடம் கேட்டிருந்தால் நானே விட்டுக்கொடுத்திருப்பேன். ஆனால் அவர்கள் என்னை நடத்திய விதம்தான் ராஜினாமா செய்ய நான் மறுப்பதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

அந்தரத்தில் மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன் : ஏன் என்று தெரியுமா?

625.0.560.350.160.300.053.800.668.160.90

தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டும் என்றுதான் எல்லா மணமக்களும் ஆசைப்படுவார்கள்.ஆனால், இந்த மணமக்கள் போன்று வித்தியாசமாக சிந்திப்பது இதுவே முதல் முறை, மாகாராஷ்டிரா மாநிலம் Kolhapur நகரை சேர்ந்த Zehdir, Reshma ஆகிய இருவரும், Ropeway போக்குவரத்தின் உயரத்தில் (தரையிலிருந்து சுமார் 90 மீற்றர்) தொங்கி கொண்டு திருமணம் செய்துள்ளனர்.

இவர்கள் எதற்காக இவ்வாறு ஒரு முடிவை எடுத்தார்கள் என்றால், ropeway போக்குவரத்தில் சந்தித்துக்கொண்ட இவர்கள், அங்குதான் காதலில் விழுந்துள்ளார்கள். அதன் காரணத்தினாலேயே , இவர்கள் இருவரும் இவ்வாறு திருமணம் செய்துகொண்டனர், இவர்கள் திருமணத்திற்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை, எவ்வித பிரச்சனையும் இன்றி காதல் ஒன்று கூடிய இடத்திலேயே கல்யாணத்தையும் நடத்தியுள்ளனர்.

1 2 3

ரித்திகா சிங் மீது கோபத்தில் ஹன்சிகா!!

672795

இறுதிச்சுற்று என்ற ஒரே படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் ரித்திகா சிங். இவர் நடிப்பில் அடுத்து ஆண்டவன் கட்டளை படம் திரைக்கு வரவுள்ளது.மேலும், பி.வாசு இயக்கும் சிவலிங்கா படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்,

முதலில் இந்த படத்தில் நடிக்க ஹன்சிகாவை தான் முடிவு செய்தார்களாம்.ஆனால், தற்போது ரித்திகா சிங்கை கமிட் செய்தது ஹன்சிகாவிற்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

பிரபல நடிகருடன் நெருக்கம் காட்டிய ஐஸ்வர்யா ராய்- கோபத்தில் அபிஷேக்!!

30aish

பொலிவுட் திரையுலகில் எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராஜ் ஜோடி பற்றி தான் இந்த வாரம் தகவல் .வட இந்தியா முன்னணி பத்திரிக்கை ஒன்று ஒரு செய்தியை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது, இதில் ‘ஐஸ்வர்யா ராய் தற்போது ரன்பீர் கபூருடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இருவருக்கும் கொஞ்சம் நெருக்கமான காட்சி இருக்கிறதாம், இதில் நடித்ததற்காக அபிஷேக், ஐஸ்வர்யா மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறாராம்.இது மட்டுமின்றி சில மாதங்களுக்கு முன் அபிஷேக் பொது இடத்தில் ஐஸ்வர்யாவை அவமானப்படுத்தும் விதமாக நடந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

பூஜையின் போது கண் திறந்த அம்மன் சிலை- வியப்பில் மக்கள்!!

muthumariamman-01-1470020429

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் பூசாரி பூஜை நடத்திக் கொண்டிருக்கும் போது அம்மன் சிலை கண் திறந்ததாக கூறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 3வது செக்கடி தெருவில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு கோவிலில் திருவிழா கடந்த 29ஆம் திகதி தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இரவு 08.30 மணியளவில் கோவில் பூசாரி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அம்மன் திடீரென்று கண் திறந்து பார்த்ததாக பூசாரி கூறவே அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் சென்று அந்த அழகிய காட்சியை கண்டு பரவசம் அடைந்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் விரைவாக பரவியது. இதை தொடர்ந்து, அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பெண்கள் அனைவரும் அங்கேயே உட்கார்ந்து பக்தி பாடல்கள் பாடியும், குலவை போட்டவாறும் வழிபட ஆரம்பித்தனர்.இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

கபாலிக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

rajini-story_647_050116035810

ரஜனி நடித்த கபாலி படம் ஒரு வாரத்தில் சுமார் ரூ. 250 கோடி அளவிற்கு வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இன்னும் காதலிக்காக பல திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருப்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்திற்காக ரஜனி எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்று கேட்டால் உங்கள் தலை சுற்றிவிடும். படத்தில் நடித்தபோது 35 கோடி ரூபாய் சம்பளமாக பெற்ற அவர்,

படத்தின் லாபத்தில் 45 கோடி ரூபாய் அளவிற்கு பங்கு வாங்கியுள்ளார்.ஆக மொத்தம் 80 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமாக வாங்கியுள்ள ரஜினிக்கு, இதன்மூலம் இந்தியாவின் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமை கிடைத்துள்ளது.

போலிப் பெயர்களில் பல்வேறு இடங்களில் திருமண மோசடி! ஆசாமிக்கு விளக்கமறியல்!!

Engaged-Couple-Hands-With-Rings-Engagement-Wishes

போலியான பெயர்களை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் திருமண மோசடி செய்து வந்த ஆசாமியொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடவத்தை கிரில்லவல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் பத்திரிகைகளில் வெளியாகும் மணமகன் தேவை விளம்பரங்கள் மூலம் வசதியான பெண்களை தொடர்பு கொண்டு திருமணம் செய்வதாக வாக்களித்து ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இதன்போது பெண்களை துஷ்பிரயோகம் செய்வதுடன், அவர்களிடமிருந்து நகை, பணம் போன்றவற்றையும் தந்திரமான முறையில் பறித்துக் கொண்டுள்ளார். ஹிமால் சஜீவன என்ற பெயரைக்கொண்ட குறித்த நபர் இதற்காக பல்வேறு போலிப் பெயர்களில் தயாரிக்கப்பட்ட மோசடி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளார்.இவர் குறித்து நீர்கொழும்பு, மாத்தறை, கந்தரை போன்ற பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடவத்தை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து போலி அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.மஹர நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மதுபோதையில் சுயநினைவின்றிக் கிடந்த பாடசாலை மாணவி!!

drugabuse-shutterstock225802219-woman-passed-out-overdose-concurrent-alcohol-xanax

அதிக மதுபோதையில் சுயநினைவின்றி இருந்த பாடசாலை மாணவி ஒருவர், அநுராதபுரம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய இவரை அநுராதபுரம் வித்தியாலய மாவத்தையில் இருந்து மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறித்த மாணவி நேற்றைய தினம் தனக்கு பிரத்தியேக வகுப்பு இருப்பதாக கூறி தனது காதலருடன் இணைந்து சென்றுள்ளதாகவும், இதன்போது அவரது காதலன் மதுவுடன் போதை மாத்திரை ஏதாவது கலந்து பருகக் கொடுத்த பின்னர் மாணவியை துஸ்பிரயோக படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் குறித்த இடத்திலிருந்து மாணவியின் காதலன் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த மாணவி இன்று காலை வரை சுயநினைவுக்கு வராததால் இவரிடம் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இராணுவ சிப்பாயை வல்லுறவுக்குட்படுத்திய மதகுரு கைது!!

arrest (1)
இராணுவ சிப்பாய் ஒருவரை தொடர்ந்து மூன்று நாட்களாக பாலியல்வல்லுறவுக்குட்படுத்திய மதகுருவை மாதம்ப பொலிஸார் கைது செய்துள்ளனர்.மாதம்பை சத்சிரிகம விகாரையை சேர்ந்த 25 வயதுடைய மதகுருவையே பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் ஹிக்கடுவையை சேர்ந்தவர் எனவும், வவுனியாவில்உள்ள கனகராயன்குளம் இராணுவ முகாமில் உள்ளவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் .குறித்த மதகுரு இராணுவ சிப்பாயுடன் முகப்புத்தகம் மூலம் நட்பு கொண்டிருந்தார்என சமூக ஊடக வலைத்தளம் மூலம் தெரியவந்துள்ளது.

இராணுவ சிப்பாய் கொத்மலையில் உள்ள பயிற்சி நிலையம் ஒன்றிற்கு வருகைதந்திருந்தார். அந்த நிலையில் மதகுருவின் விகாரையிலேயே தங்கியுள்ளார்.அதன் பின்னர் குறித்த சிப்பாய் சுகயீனம் காரணமாகவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதன் போதே சிப்பாய்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் மதகுருவை கைது செய்ததாகவும், சிலாபம் நீதிமன்றில்முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இருப்பினும் சம்பவம் தொடர்பில் மாதம்ப பொலிஸார் மேலதிக விசாரணைகள்முன்னெடுத்து வருகின்றனர்.

நிதி நகரமாக அறிவிக்கப்படும் கொழும்பு துறைமுக நகரம்!!

Port-City
கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகரை ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் நிதி நகரமாக மாற்றும் அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெறும் 12ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக இன்று அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.இதனால், குறித்த அமைச்சரவை பத்திரத்தை நாளைய தினம் அமைச்சரவையில் தாக்கல் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், இந்தியாவின் சென்னை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான நிதி நகரமாக கொழும்பு துறைமுக நகரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், முதல் முறையாக இவ்வாறான நிதி நகரம் அறிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மதுபோதையில் சுயநினைவின்றிக் கிடந்த பாடசாலை மாணவி!!

drugabuse-shutterstock225802219-woman-passed-out-overdose-concurrent-alcohol-xanax

அதிக மதுபோதையில் சுயநினைவின்றி இருந்த பாடசாலை மாணவி ஒருவர், அநுராதபுரம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய இவரை அநுராதபுரம் வித்தியாலய மாவத்தையில் இருந்து மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறித்த மாணவி நேற்றைய தினம் தனக்கு பிரத்தியேக வகுப்பு இருப்பதாக கூறி தனது காதலருடன் இணைந்து சென்றுள்ளதாகவும், இதன்போது அவரது காதலன் மதுவுடன் போதை மாத்திரை ஏதாவது கலந்து பருகக் கொடுத்த பின்னர் மாணவியை துஸ்பிரயோக படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் குறித்த இடத்திலிருந்து மாணவியின் காதலன் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த மாணவி இன்று காலை வரை சுயநினைவுக்கு வராததால் இவரிடம் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தலா ரூ.25 லட்சம் உதவித் தொகையுடன் இலங்கை அகதிகளை திருப்பியனுப்ப அவுஸ்திரேலியா முயற்சி!!

020920-boat
தலா ரூ.13 லட்சம் உதவித் தொகையுடன் அகதிகளை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப அவுஸ்திரேலியா முயற்சி மேற்கொண்டுள்ளது.உள் நாட்டு போர் நடை பெறும் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து பலர் அகதிகளாக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர்.

தங்களுக்கு தஞ்சம் வழங்க வேண்டும் என அந்நாட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.ஆனால் அவர்கள் மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.பல ஆண்டுகளாக இவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதற்கு பப்புவா நியூ கினியா சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் கண்டனம் தெரிவித்துள்ளது.

அகதிகளை அடைத்து வைத்திருப்பது சட்ட விரோதம். எனவே அந்த முகாம்களை மூட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.இதனால் அகதிகளை அவர்களது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப அவுஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது.இதற்கு முன்பு ரூ.6½ லட்சம் உதவி தொகை வழங்கி அவர்களை அனுப்ப இருப்பதாக அவுஸ்திரேலியா தெரிவித்தது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு தற்போது இந்திய ரூ.13 லட்சம் வழங்கி அவர்களை அனுப்ப முயற்சி மேற் கொண்டுள்ளது.அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அதற்காக அகதிகள் நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விளம்பர தூதுவராக ஜக்குலின் பெர்னாண்டஸ்!!

jacqueline-fernandez

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

இதற்கான உடன்படிக்கை நேற்று கையெழுத்தானது. இதற்கான கடிதப்பரிமாறல்கள், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தலைவர் அஜித் டயஸ் ஆகியோருக்கு இடையில் மும்பாயில் வைத்து பரிமாறிக்கொள்ளப்பட்டது.
இந்த உடன்படிக்கையின் கீழ் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இந்தியா பிரசன்னம் வலுப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள ஜாக்குலின், சிறுவயதில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பயணம் செய்யும் தமது நாட்டின் விமானசேவையில் தூதுவராக நியமிக்கப்பட்டமை பெருமையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

மனைவியை வேறு ஒருவரைக்கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்திய கணவருக்கு சிறைத்தண்டனை!!

jail

மனைவியை வேறு ஒர் நபரைக் கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கணவர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சட்ட ரீதியாக திருமணம் செய்துகொண்ட மனைவியை, தனது எதிரிலேயே வேறு ஒருவரைக் கொண்டு கடுமையான பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கி திருப்தி அடைந்த நபருக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வேறு ஒர் நபர் ஆயுதம் ஒன்றை காண்பித்து அச்சுறுத்தி மனைவி பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாவதனை குறித்த கணவர் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட கணவர் மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் ஆகியோருக்கு நீதிமன்றம் 22 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனையும் தலா இருபதாயிரம் ரூபா அபராதமும், குற்றவாளிகள் தலா 150,000 ரூபா நட்டஈடு வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேகாலை உயர் நீதிமன்ற நீதவான் தம்மிக்க கனேபொல இந்த தண்டனையை அண்மையில் விதித்துள்ளார்.

2012ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கேகாலை பல்லேகனுகல அமிதிரிகல என்னம் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தண்டனை அறிவிக்கப்பட்டபோது பாதிக்கப்பட்ட பெண் இரு கரங்களையும் கூப்பி நீதவானுக்க நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பியர் குடித்தால் 43 லட்சம் ரூபாய் சம்பளம்!!

Toasting of Beer

அமெரிக்காவில் பியர் குடித்து அதன் சுவை அறிந்து விமர்சித்து கட்டுரை எழுதுபவர்களுக்கு 43 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக அமெரிக்க தேசிய அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள தேசிய அருங்காட்சியகம் வேலைக்கான ஒரு பணியிடத்தை அறிவித்தது.

இதில் அமெரிக்கா என்ற தனி நாடு உருவாவதற்கு முன்னர் இருந்த பியர் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் ஆகியவை தொடர்பாக நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அமெரிக்கா முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு அதன் ஆலைகளில் தயாரிக்கப்படும் பியர் வகைகளை சுவைத்து அது தொடர்பாக ஆய்வு கட்டுரைகளை சமர்பிக்க மூன்றாண்டுகள் குத்தகை அடிப்படையில் ஆட்கள் தேவை என தேசிய அருங்காட்சியகம் அறிவித்தது.

இவ்வேலையில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு, ஆண்டு ஒன்றுக்கு 64,650 டொலர்கள் தரப்படும் என அறிவித்தது.

இதனால் லட்சக்கணக்கானோர் இவ்வேலைக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.மேலும் வரும் ஆகஸ்ட் 10 ம் திகதி தான் கடைசி நாள் என்பதால் இன்னும் பல லட்சவிண்ணப்பங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அந்த இணையதளத்தின் Sever CRASH ஆகிப்போனதாக கூறப்படுகிறது.

சுவாதியை வெட்டிய அரிவாளில் 2 பேரின் ரத்தம் : கொலை வழக்கில் திடீர் திருப்பம்!!

Swathi

சுவாதியை வெட்டப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் அரிவாளில் இரண்டு பேரின் ரத்தம் இருப்பதாக தெரிய வந்துள்ளதால் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராம்குமாரை நேற்று காலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பொலிசார் ரகசியமாக அழைத்து வந்தனர். அங்கு சிறைக்கைதிகள் வார்டில் அவரது ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டது.

முன்னதாக பொலிசார் கைது செய்தபோது ராம்குமார் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்ததாகக் கூறப்பட்டது. இதனால் ஏற்பட்ட காயத்திற்கு நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது ராம்குமாருக்கு தொண்டை வலி இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே நேற்று ராயப்பேட்டை மருத்துவமனையில் அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதோடு, தையல் போட்ட இடத்தில் வலி இருப்பதாக கூறியதால், அவருக்கு மருந்துகளும் தரப்பட்டன.

இதற்கிடையே, ராம்குமாரின் ரத்த மாதிரி எதற்காக சேகரிக்கப்பட்டது என்பது குறித்து பொலிஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகையில், சுவாதியை வெட்ட பயன்படுத்திய அரிவாளில் 2 பேரின் ரத்தம் படிந்துள்ளது.

அதில் ஒன்று சுவாதியின் ரத்தம் என்று தெரியவந்துள்ளது. எனவே, அந்த இன்னொரு ரத்தம் ராம்குமாருடையது தானா என்பதை உறுதிபடுத்துவதற்காக அவரது ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது என்றனர்.

இந்தத் தகவலால் சுவாதி வழக்கில் மேலும் குழப்பம் அதிகரித்துள்ளது. இதுவரை ராம்குமார் கூறியதாக வெளியான வாக்குமூலத்தில், சுவாதியை வெட்டி விட்டு தப்பி வரும்போது தனக்கோ அல்லது வேறு யாருக்கோ அதே அரிவாளால் காயம் ஏதும் ஏற்பட்டதாகக் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.