உங்கள் சருமத்தை ஜொலிக்கச் செய்யும் பழங்கள்!!

Facepack

மென்மையான சருமம் வேண்டும் என்பது எல்லா பெண்களின் ஆசை. நீங்கள் வீட்டில் சருமத்தை தவறாமல் பராமரிக்கும்போது, சருமத்தின் இயல்பு மாறி மென்மையாகிவிடும்.

சருமத்தை க்ரீம்கள் போட்டு, மென்மையாக்க முயலாதீர்கள். அவை நல்ல விளைவுகளை தருபவை அல்ல. உங்கள் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு உங்களை தேவதையாக மாற்ற முயற்சிக்கலாம்.

அவகாடோவின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடல் யோகர்ட் கலந்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள் 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்விரண்டிலும் விட்டமின் ஈ உள்ளது. சருமத்தில் சுருக்கங்களை போக்கும். மென்மையாக சருமத்தை வைத்திடும். இதை வாரம் 3 முறை செய்யலாம்.

வாழைப்பழம், யோகட், தேன் இந்த மூன்றுமே சருமத்தில் அழகினை கொண்டு வந்து சேர்க்கும் கலையை பெற்றிருக்கின்றன. மூன்றையும் கலந்து முகத்தில் பேக் போட்டு 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். குழந்தையின் சருமத்தை போன்றே மென்மையாக அப்போதே உணர்வீர்கள்.

வாழைப்பழம் கொலாஜன் உற்பத்தியை சருமத்தில் தூண்டும். இவை சருமத்தில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தி, மென்மையாக்கிவிடுகிறது. சருமம் பூசியது போல் காண்பிக்கும்.

பப்பாளிப்பழத்தில் விட்டமின் ஏ, சி மற்றும் ஃபைடோ நியூட்ரியன்ஸ் உள்ளது. இது சருமத்தின் பாதிப்புகளை சரிபடுத்துகிறது. முதுமை அடைவதை தள்ளிப்போடச் செய்யும். பப்பாளிப்பழத்தின் சதைப்பகுதியை மசித்து, சருமத்தில் போட்டு சிறிது நேரம் மசாஸ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவிடலாம். மிக மென்மையான சருமத்தை பெறுவீர்கள்.

குறட்டையைத் தடுக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு!!

health_news_images

தூக்கம் மனிதனுக்கு மிகவும் அவசியமானது. வாழ்நாளில் ஒவ்வொருவரும் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறோம். நன்றாகத் தூங்கினால்தான் மனம் புத்துணர்ச்சி அடையும். உடலின் வளர் சிதை மாற்றம் நன்றாக நடைபெறும். செல்கள் புத்துணர்ச்சி பெறும். தூக்கமில்லாவிட்டால் உடலின் செயல்பாடுகள் நன்றாக நடைபெறாது. பலவிதமான நோய்கள் நம்மைத் தாக்கும். இதெல்லாம் சரி தூங்கும் போது பக்கத்தில் உறங்கியிருப்பவர் குறட்டை விட்டால் மற்றவர்கள் எப்படி தூங்குவது என்று கேட்கிறீர்களா?

இப்போது குறட்டையை குணப்படுத்தவும், குறட்டையை ஒலியை இல்லாமல் ஆக்கவும் நவீன கருவி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த கருவியின் பயன்பாட்டைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

குறட்டையால் அதிகளவில் பாதிக்கப்படுகிறவர்கள், அவர்களால் உடல் எடையை குறைக்கமுடியாமல் இருந்தாலோ அல்லது குறட்டையால் இரத்த அழுத்தம் அதிகரித்து அதனால் மூச்சு திணறல் ஏற்பட்டாலோ மருத்துவர்களை சந்தித்து இதற்கான கருவியை பொருத்திக் கொண்டு உடனடியாக நிவாரணமும், சத்திர சிகிச்சை அல்லது இந்த நவீன கருவியுடன் உதவியும் நாள்களை கடத்துதல் என எந்த சிகிச்சை பொருத்தமாக இருக்கிறதோ அதனை பின்பற்றலாம்.

ஸீபேப் (CPAP) எனப்படும் அந்த கருவியை மூக்கில் பொருத்திக் கொள்ளவேண்டும். உறங்கும் போது இதனை இயக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் இது தன் பணியைச் செய்யத் தொடங்கும். இந்தக் கருவி, ஒவ்வொருவருக்கும் எந்த அளவுக்கு காற்றழுத்தம் தேவையோ, அந்த அளவு அழுத்தத்துடன் மூச்சுப் பாதைக்குள் காற்றை அனுப்பி வைக்கிறது. இதனால், உடலுக்குத் தேவையான காற்று கிடைக்கிறது. எனவே குறட்டைவிடாமல், எந்தத் தடங்கலுமில்லாமல் நன்றாகத் தூங்க ஆரம்பிக்கிறார்கள்.

குறட்டை விட்டு இவ்வளவு நாட்கள் தூங்கியதால் உடலுக்கு ஏற்பட்ட பல பாதிப்புகள் குணமாக ஆரம்பிக்கின்றன. இந்த கருவியை ஒரு சிலர் அவர்களின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி ஆயுள் முழுவதும் பயன்படுத்தவேண்டியதிருக்கும். ஒரு சிலருக்கு இதனை பயன்படுத்தத் தொடங்கியவுடன், உடலில் குறட்டையினால் பாதிக்கப்பட்ட ஆரோக்கிய கேடு மீட்கப்படும். அதன் பின்னர் நாளடைவில் இக்கருவியின் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள இயலும். அதன் பின்னர் பொருத்தமான தருணத்தில் சத்திர சிகிச்சை செய்தும் இதனை முழுமையாக குணப்படுத்தலாம்.

இதனை தவிர்த்தாலோ அல்லது அலட்சியப்படுத்தினாலோ உங்களுக்கு புற்று நோய் வரக்கூடிய ஆபத்தும் உண்டு என்பதை அறிந்துகொள்ளலாம். எப்படியென்றால்,குறட்டைவிடும்போது உடலுக்குத் தேவையான அளவு காற்று கிடைக்காது. இதனால் செல்களுக்குப் போதுமான ஓக்ஸிஜன் கிடைப்பதில்லை. செல்கள் தோன்றுவது, அழிவது, வளர்வது போன்றவற்றில் பிரச்னை ஏற்படுகிறது. புற்றுநோய் ஏற்பட இதுவும் ஒரு காரணமாகிவிடுகிறது. எனவே குறட்டைவிட்டுத் தூங்குவதை ஒரு நோய் என்றுதான் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

எனவே குறட்டையை வரவிடாமல் தடுக்க வேண்டும் என்றால், உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, உடல் எடைகுறைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும். கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருட்களை தவிர்க்கவேண்டும். மது, புகைப்பழக்கம் மற்றும் உறக்கத்திற்கான தூக்க மாத்திரை சாப்பிடுவதை ஆகியவற்றை முற்றாகத் தவிர்க்கவேண்டும்.

25,000 அடி உயரத்திலிருந்து பரசூட் இன்றி குதித்து அமெரிக்க நபர் சாதனை!!

skydiving_without_parachute

பரசூட் பயன்படுத்தாமல் 25,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்து குதித்திருக்கும் முதல் நபர் என்ற சாதனையை அமெரிக்காவைச் சேர்ந்த வீரர் ஒருவர் படைத்திருக்கிறார்.

கலிபோர்னியாவின் சிமி பள்ளத்தாக்கில் லூக் அய்கின்ஸ் என்பவர் இந்த சாதனைப் பதிவை நிகழ்த்தி இருக்கிறார்.

அதிக உயரம் என்பதால் ஒட்சிசன் சுவாசிக்கும் முகமூடியை அணிந்த வண்ணம் அவர் குதித்தார்.

குதித்த நேரத்திலிருந்து கீழே தரைக்கு மேலே 60 மீட்டருக்கு மேல் கட்டப்பட்டிருந்ததாக வலையின் மேல் அவர் பின்புறம் படும் வகையில் விழுவது வரை இரண்டு நிமிடம் ஆகியுள்ளது.

26 ஆண்டுகளாக வானிலிருந்து குதிக்கும் சாகச வீரராக இருக்கும் அய்கின்ஸ் 18,000 முறை வானிலிருந்து குதித்திருக்கிறார்.

6 வயதுச் சிறுமியை திருமணம் செய்த 60 வயது மதகுரு கைது!!

Abuse

ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தில் ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ததாக 60 வயது மதகுருவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் நகரில் வசித்துவந்த அந்த சிறுமிக்கு மேலதிக வகுப்பு ஆசிரியராக இருந்த கரீம் (60) என்பவர் தங்களது மகளை கடத்திச் சென்று விட்டதாக அந்த பெண்ணின் பெற்றோர் கூறுகின்றனர்.

ஆனால் கடந்த ரம்ஜான் பண்டிகையன்று அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் கரீம் என்ற மதகுருவோ ‘நான் அந்த பெண்ணை கடத்தி வரவில்லை. எங்களுக்குள் நிச்சயதார்த்தம் நடந்தது. இவளை எங்கள் அன்பளிப்பாக உங்களிடம் ஒப்படைக்கிறோம். நீங்கள் எங்கே வேண்டுமானாலும் அவளை அழைத்து செல்லலாம்’ என அவளது பெற்றோர் கூறியதால் நான் எனது ஊருக்கு அழைத்து வந்தேன்’ என கூறுகிறார்.

இந்நிலையில், அந்த மதகுருவை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். மீட்கப்பட்ட சிறுமி அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பொலிஸாரின் விசாரணைக்கு ஆஜராவதற்காக ஹேரட் நகரில் வசித்துவரும் சிறுமியின் பெற்றோர் கோர் மாகாணத்துக்கு சென்றுள்ளனர்.

உலகிலேயே அதிக கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை இது தான்!!

Jail

பிலிப்பைன்ஸ் நாட்டில் தலைநகர் மணிலாவில் குயேஷான் புறநகர் பகுதி உள்ளது. அங்கு மத்திய சிறைச்சாலை உள்ளது. உலகிலேயே அதிக கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை என அழைக்கப்படுகிறது.

இங்கு மொத்தம் 3800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு 800 கைதிகளை அடைக்க மட்டுமே கட்டப்பட்டது. இது 4 அடுக்கு மாடிகளை கொண்டது.

தற்போது அங்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஏராளமானவர்கள் அடைக்கப்படுகின்றனர். இங்குள்ள 130 கைதிகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கழிவறைகள் உள்ளன.

இரவு நேரத்தில் கைதிகள் நிம்மதியாக தூங்க முடியாது. அவர்கள் சிறை வளாகத்துக்குள் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் உடைந்து குண்டும் குழியுமாக கிடக்கும் தரையில்தான் உறங்க வேண்டும். அதுவும் ஷிப்ட் முறையில்தான் தூங்க முடியும். மழை பெய்தால் கேட்கவே வேண்டாம். அன்று இரவு முழுவதும் கைதிகளின் தூக்கம் அம்பேல்தான்.

இங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தலா 1.10 டொலர் (160) மதிப்புள்ள உணவு மற்றும் மருந்து வழங்கப்படுகிறது. எனவே கைதிகளின் கோரிக்கைக்கு இணங்க தற்போது சிறையில் சில புனரமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது பிலிப்பைன்சின் புதிய அதிபராக ரோட்ரிகோ டுடரேட் பதவி ஏற்றுள்ளார். அவர் போதை மருந்து கும்பலை வேரறுக்க சபதம் மேற்கொண்டுள்ளார். அதனால் அக்கும்பலை சேர்ந்தவர்கள் வேட்டையாடப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். அதனால் அங்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இன்று முதல் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு!!

Bus

தனியார் மற்றும் அரச பேருந்துக் கட்டணங்களை இன்று முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு கூறியுள்ளது.

இதற்கமைய இம்முறை பேருந்துக் கட்டணங்கள் 6% அதிகரிக்கப்படவுள்ளன.

வருடாந்த பேருந்துக் கட்டண அதிகரிப்பு ஜூலை மாதம் முதலாம் திகதி இடம்பெறும். எனினும் இம்முறை இடம்பெற்ற சர்ச்சை காரணமாக ஆகஸ்ட் மாதம் வரை இந்த நடவடிக்கை தாமதமடைந்திருந்தது.

இதேவேளை, அதிவேக வீதியில் பயணிக்கும் பேருந்துகளுக்கான கட்டணங்களும் இதன்படி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே, காலி – கண்டிக்கு இடையிலான பேருந்துகளுக்கான புதிய கட்டணங்கள் 390 ரூபாவாகவும், கண்டி – மாத்தறைக்கான பேருந்துகளின் புதிய கட்டணம் 470 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடுவளை மற்றும் மாத்தறைக்கு இடையிலான பேருந்துகளுக்கு புதிய கட்டணமாக 490 ரூபாய் அறிவிடப்படவுள்ளது.

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் அம்பாள் உற்சவத்தின் ஐந்தாம் நாள்!!(படங்கள்)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேதஅகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின்ஐந்தாம்நாளானநேற்று(31.07.2016)காலைமுதல்அபிசேகங்கள்மூலஸ்தான பூசை, யாகபூசை, கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினொரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதிவலம்வந்து  மயில் வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வுஇடம்பெற்றது.


மாலையில்  பிரதோஷ  பூஜையை தொடர்ந்து ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அம்பாள் மயில்  வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.

IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF

வவுனியா தமிழ் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும்!!

VTMV1

வவுனியா தமிழ் மத்திய மகாவித்திலாய பழைய மாணவர்கள் சங்க வருடாந்த பொதுக் கூட்டம் இன்று (31.07.2016) காலை ஐயாத்துரை மண்டபத்தில் இடம்பெற்றது.

இன்றைய கூட்டத்தில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் ரி.அமிர்தலிங்கம் பழைய மாணவர் சங்கத் தலைவராகவும, எஸ்.சுஜன் செயலாளராகவும், ஆ.அம்பிகைபாகன் பொருளாலராகவும் மேலும் பத்து நிர்வாக சபை உறுப்பினர்களும் இன்றைய வருடாந்தக் கூட்டத்தில் பழைய மாணவர்களினால் தெரிவு செய்யப்பட்டனர்.

உப செயலாளராக ரி.ஜெயகுமாரன், உபதலைவராக ஜி.சபேசன், உபபொருளாலராக எஸ்.ஜனார்த்தனன், மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களாக, கே.மோகனகுமார், எஸ். திருச்செந்தூரன், எஸ்.சுதர்சன், எஸ். கிருபானந்தகுமாரன், என்.சுந்தரதாசன், எஸ்.திரிசேதுகாவலர், ஆர்.கௌதமன், ஆகியோர் நிர்வாக சபை உறுப்பினர்களாக இன்று நடைபெற்ற பழையமாணவர் சங்க பொதுக்கூட்டத்தில் புதிய உறுப்பினர்களாக தெரிவு செய்யபட்டுள்ளனர்.

செல்பி மோகத்தால் பரிதாபமாக உயிரிழந்த தடகள வீராங்கனை!!

Selfi

மத்திய பிரதேச மாநிலத்தில் தடகள வீராங்கனை செல்பி எடுக்க முயற்சித்த போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பூஜாகுமாரி,தேசிய தடகள ஒட்டப்பந்தய வீராங்கனையான இவர் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது,விளையாட்டு மேம்பாட்டு ஆணையக் கட்டிடத்திலிருந்து தனது சக வீரர்களுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அருகிலுள்ள குளத்தில் தவறி விழுந்தார்,பூஜா குமாரிக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து விளையாட்டு மேம்பாட்டு அதிகாரிகள் கூறியதாவது: பூஜா குமாரி குளத்தில் விழுந்தவுடன்,அவருடன் இருந்த சக வீரர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவரை காப்பாற்ற இயலவில்லை.

மேலும் உதவிக்கு விடுதியில் இருந்து சிலர் வருவதற்குள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறினார்.

பூஜா குமாரி இறந்த சம்பவம் அங்கிருந்த விளையாட்டு வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபாசப் படம் பார்த்த அண்ணனை தட்டிக்கேட்ட தங்கையை கொலை செய்த அண்ணன்!!

Girl Murder

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் அருகே கையடக்கதொலைபேசியில் ஆபாச படம் பார்த்த அண்ணனை, தங்கை தட்டிக்கேட்டதால் கோபமடைந்த அண்ணன் அவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுபாளையத்தை அடுத்து மோத்தேபாளையத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (16) என்பவர் வாழை தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் குமார் என்பவர் தான் கொலை செய்ததாகக் கூறி ஊராட்சி கவுன்சிலரிடம் சரணடைந்தார்.

சரணடைந்த தினேஷ் குமார் கொலை செய்யப்பட்ட ஜெயஸ்ரீக்கு அண்ணன் முறையாகும். பொலிஸாரின் விசாரணையில் தினேஷ் குமார் கூறியபோது, கடந்த 22 ஆம் திகதி வாழை தோட்டத்தில் கையடக்கதொலைபேசியில் ஆபாச படம் பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது அந்த வழியில் சென்ற ஜெயஸ்ரீ என்னை கண்டதும், இதுகுறித்து என் பெற்றோரிடம் கூறுகிறேன் என்றார். நான் அவரை கண்டித்ததோடு, அவரை உறவுக்கு அழைத்தேன்.

உடனே அவர் ஆபாசப் படம் பார்த்ததே தவறு, அதோடு என்னை அழைப்பது இன்னும் அசிங்கமானது. இதை கட்டாயம் உன் பெற்றோரிடம் கூறுகிறேன் என்றார். நான் எங்கே வீட்டில் சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் அவரை தாக்கி, கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டேன், என்று கூறினார். பொலிஸார் ஜெயஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வவுனியா CCTMS பாடசாலையிலிருந்து தேசிய மட்டத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்கள்!!

 
வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில்(CCTMS) இருந்து தேசியமட்டம்வரை சென்று தேசியமட்டத்தில் நடாத்தப்பட்ட நடன நிகழ்ச்சியில் பங்குபற்றி தேசிய ரீதியில் 2ம் இடத்தை பெற்று தங்களுக்கும் தங்களது பாடசாலைக்கும் பெருமை சேர்த்ததையிட்டு மட்டற்ற மகிழ்சி அடைகின்றேன்.

தங்களாலும் சாதிக்கமுடியும் என்பதை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும், மாணவர்களை நெறிப்படுத்திய அதிபர் ஆசிரியைகளுக்கும் இவ் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை மாணவர்களுக்கும் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா ஆகிய நான் என் சார்பாகவும் வடமாகாணசபை சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நன்றி

மக்கள்சேவையில்
மயில்வாகனம் தியாகராசா
வடமாகாணசபை உறுப்பினர்
வவுனியா மாவட்டம்

1 IMG_6011 IMG_6024 IMG_6027 IMG_6050 IMG_6064 IMG_6067 IMG_6075 IMG_6093 IMG_6108

வவுனியாவில் கிரீடா சக்தி அபிவிருத்தி நிகழ்ச்சி!!

 
வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று (30.07) கிரிடா சக்தி அபிவிருத்தி நிகழ்ச்சி வவுனியா மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் க.தனுராஜ் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் நடத்தப்படும் மேற்படி கிரிடா சக்தி விழையாட்டு அபிவிருத்தி நிகழ்ச்சிக்கு 15 வகையான விழையாட்டுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி விளையாட்டுக்களுக்கு தகுதியான வீரர்களை இனங்காணும் தெரிவு நிகழ்வுகள் நேற்று நடைபெற்றது.

நிகழ்வில் 14 வயது தொடக்கம் 18 வயது வரையான விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர். இவர்களில் தகுதியான விளையாட்டு வீரர்கள் இணைக்கப்பட்ட மாவட்ட விளையாட்டுக்குழு உருவாக்கப்பட்டு இக்குழுவிலுள்ள அனைத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவாக மாதாந்தம் 1440 ரூபா வழங்கப்படும் என மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் தனுராஜ் தெரிவித்தார்.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், பிரதேச செயலாளர் கா.உதயராசா, வட மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

1 IMG_6110 IMG_6113 IMG_6117 IMG_6121 IMG_6130 IMG_6134 IMG_6138 IMG_6142 IMG_6144

வவுனியா வைத்தியசாலையில் 40 மில்லியன் செலவில் சிறுநீரக சிகிச்சைப் பிரிவு!!

K.Akilendran

வவுனியா பொது வைத்தியசாலையில் 40 மில்லியன் ரூபா செலவில் சிறுநீரக சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்திலும் அதனை சூழவுள்ள மாவட்டங்களிலும் சிறுநீரக நோயாளிகள் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. இதன் நிமிர்த்தம் வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோய்ககான சிகிச்சை நிலையமொன்றினை அமைக்க மத்திய சுகாதார அமைச்சின் ஊடாக நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த வகையில் சிறுநீரக சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டடத்தொகுதியொன்று அமைக்கப்படவுள்ளதுடன் சிறுநீரக நோய் பிரிவுக்கான உபகரண தொகுதிகளும் பொருத்தப்படவுள்ளது.

இச் சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சிறுநீரக நோயாளர்கள் தமக்கான முழுமையான சிகிக்சையை வவுனியா பொது வைத்தியாசலையில் பெற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேபாளத்தின் ICL சர்வதேச மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான்!!

 
உலக சமாதான அமையத்தினதும், நேபாள நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களின் சமாதான பேரவையின் அனுசரனையிலும் “இடரார்ந்த தற்கால சவால்களை வெல்வதற்கான அரச நிறுவனங்கள் ,சிவில்-சமூக அமைப்புகள் மற்றும் நம்பிக்கைமிகு அரசார்பற்ற நிறுவனங்களின் வகிபங்கு” என்ற தொனிப்பொருளில் சர்வதேச தலைமைத்துவ மகாநாடு-2016 (International Leadership Conference-2016) கடந்த 28ம் திகதி தொடக்கம் (30.07) வரை நேபாள நாட்டின் தலைநகரான காத்மன்டுவில் நடைபெற்றது.

குறித்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட அதேவேளை, சிறுபான்மை மக்கள் எதிர் நோக்கும் சவால்களை தெளிவுறுத்துவதற்கான ஒரு முஸ்லிம் பிரதிநிதியாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு

1 2 3

வவுனியா தமிழ்ச் சங்கம் நடாத்தும் நூல் வெளியீட்டு விழா!!

Vavuniya Tamil Sangam

வவுனியாத் தமிழ்ச்சங்கம் நடத்தும், ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு (திரு மாஸ்டர்) அவர்கள் எழுதிய, இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்புவரை 1931 – 2016) நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் 06 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலய கலாமண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வவுனியா தமிழ்ச்சங்கத்தின் ஸ்தாபகர், தமிழருவி.த.சிவகுமாரன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா, திருமதி.அனந்தி சசிதரன், மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகியோரும் கலந்துகொள்வர்.

நிகழ்ச்சிகளின் வரிசையில் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தை திருமதி.பராசக்தி ஜெகநாதனும் வரவேற்புரையை சிவ.கஜேந்திரகுமாரும் தொடக்கவுரையை தமிழ்மணி மேழிக்குமரனும் நிகழ்த்துவர்.

தலைமையுரையினையடுத்து அறிமுக உரையினை மூத்த பத்திரிகையாளர் ச.யோகரட்ணமும் (ராதையன்) வழங்குவார். பிரதம விருந்தினர் நூலினை வெளியிட்டுவைக்க முதற்பிரதியை பிரித்தானியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் கலாநிதி இரவீந்திரநாதனும் பொருளியல் ஆசிரியர் செ.சுதாகரனும் பெறுவார்கள்.

சிறப்பு பிரதிகள் வழங்கலைத் தொடர்ந்து நூலாய்வினை பத்தி எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான நிலாந்தன் நிகழ்த்துவார். சிறப்புரையை சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான சி.அ.ஜோதிலிங்கம் வழங்குவார். சிறப்பு விருந்தினர், கௌரவ விருந்தினர் உரைகளைத் தொடர்ந்து நன்றியுரையை வவுனியா தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் கி.உதயகுமார் நிகழ்த்துவார்.

A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

 
A9 வீதி பனிக்கன்குளத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பாகாயமடைந்துள்ளார்.

வீதியோரமாக துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவரை பின்னால் வந்த கன்டர் ரக வாகனம் மோதியதிலேயே மேற்ப்படி விபத்து இடம்பெற்றுள்ளது. வாகனத்தின் சாரதி நித்திரை கொண்டமையினாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாக தொிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் பனிக்கன்குளத்தை சேர்ந்த செல்லையா இராசரத்தினம் வயது 47 என்பவரே காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

அண்மை நாட்களாக சாரதிகளின் கவனக்குறைவால் (நித்திரை கொள்வதால்) விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையும் இதனால் உயிரிழப்புக்கள் உடமை இழப்புக்கள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன.

1-85-300x169 2-76-300x169 3-67-300x169 4-63-300x169