காதலிக்காக தொடர்ந்து 10 நாட்கள் விமான நிலையத்தில் காத்திருந்த காதலன்!!

11

நெதர்லாந்தைச் சேந்த நபர் ஒருவர் தனது காதலிக்காக தொடர்ந்து 10 நாட்கள் விமான நிலையத்தில் காத்திருந்த நெகிழ்ச்சியான சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் பீட்டர் (41),சீனாவை சேர்ந்த ஜாங்(26) என்பவருக்கும் பேஸ்புக் பக்கத்தின் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.
இது பின்னடைவில் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது. பேஸ்புக்கில் பேசிவந்த அலெக்ஸ்சாண்டர் தனது காதலியை காண முடிவு செய்து சீனா விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

மேலும் தான் சீனா விமான நிலையத்திற்கு வருவதாக ஜாங்கிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஜாங் கோ அவரை காண விமான நிலையத்திற்கு வரவில்லை.

அலெக்ஸாண்டர் தன் காதலி தன்னை காண வருவாள் என்று தொடர்ந்து விமான நிலையத்தில் தங்கி வந்துள்ளார். ஆனால் அவரது உடல் நிலையோ அவருக்கு ஒத்துழைப்பு தரவில்லை.

அலெக்ஸாண்டர் உடல் நிலை மோசமாவதை அறிந்த விமான நிலைய உழியர்கள், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர்.

இது குறித்து அலெக்ஸாண்டர் காதலி ஜாங் கூறியதாவது, அலெக்ஸாண்டர் சீனா வருவதாகவும், அதற்கான விமானத்தின் பயணசீட்டை தனக்கு புகைப்படம் எடுத்து அனுப்பினார். ஆனால் அதன் பின் தன்னை தொடர்பு கொள்ளவில்லை.

மேலும் அறுவை சிகிச்சைக்காக வேறொரு இடத்தில் இருப்பதாகவும், இதன் காரணமாக தன் தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அலெக்ஸாண்டர் தன் காதலி தன்னை விரைவில் வந்து சந்திப்பாள் என்ற நம்பிக்கையுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

12 13

4,600 அடி உயரத்தில் கண்ணாடி நடைபாதை : திகிலூட்டும் சீனா!!

Glass Road

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு திகிலூட்டும் வகையில் 4600 அடி உயரத்தில் நடைபாதை ஒன்றை கண்ணாடியில் வடிவமைத்துள்ளது அங்குள்ள சுற்றுலாத்துறை.

ஹூனான் மாகாணத்தில் அமைந்துள்ள Tianmen மலை மீது இந்த திகிலூட்டும் கண்ணாடி நடைபாதையை சீனா அரசு அமைத்துள்ளது.

இந்த மலையில் சுமார் 100 மீற்றர் தூரம் சுற்றுலாப்பயணிகள் கண்ணாடி நடைபாதை வழியாக நடந்து வரலாம். இந்த கண்ணாடி நடைபாதை தரையில் இருந்து 1402 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

துணிச்சல் மிக்க சுற்றுலாப்பயணிகள் இந்த கண்ணாடி நடைபாதையில் வலம் வருவது மட்டுமின்றி மலை மீதிருந்து சுற்றுவட்டார அழகை கண்டு களிக்கலாம். கடல் மட்டத்திற்கு மேல் இருந்து பார்க்கையில் இயற்கை அதிர்ச்சியூட்டுவதாகவும் மிகவும் திகிலூட்டுவதகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

திங்கள்கிழமை முதற்கொண்டு இந்த கண்ணாடி நடைபாதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளனர். பார்வையாளர்கள் இங்கிருந்தும் இனி செல்பி எடுத்துக் கொள்ளலாம்.

கண்ணாடியிலான உலகின் மிகப்பெரிய பாலம் ஒன்றை சீனாவின் Zhangjiajie Grand Canyon பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது தரையில் இருந்து 980 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த பாலம் திறக்கப்படவில்லை.

மட்டுமின்றி ஹூனான் மாகாணத்தில் அமைந்துள்ள இன்னொரு கண்ணாடி பாலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு விரிசல் விழுந்துள்ளதை சுற்றுலாப்பயணி ஒருவர் நிர்வாகத்திடம் தெரிவித்ததை அடுத்து அதில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1

நாடு தற்போது 9000 மில்லியன் ரூபா கடன் சுமையில்!!

Maithripala-Sirisena

மேடைகளிலும் பாதைகளிலும் விதவிதமாக பேசிச் சென்றாலும், கடந்த அரசாங்கத்தினால் நாட்டிற்குள் இழுத்துப் போடப்பட்ட பொருளாதார நெருக்கடியின் சுமையை தற்போது பொதுமக்கள் தாங்க வேண்டி இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார்.

இலங்கை தற்போது 9000 மில்லியன் ரூபா கடனை தாங்கி நிற்பதால், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் அனைத்து தரப்பினரும் பொருளாதார நெருக்கடி நிலமையை புரிந்து செயற்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும் இதுபோன்ற நெருக்கடியில் இருந்தாலும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களில் குறைகள் ஏற்படாது என்று அவர் கூறுகின்றார்.

நாட்டின் அபிவிருத்திக்காக அரச மற்றும் தனியார் துறையினர் ஒன்றிணைந்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற பொருளாதார மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

பொரலஸ்கமுவவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு!!

Shoot

பொரலஸ்கமுவ, கட்டுவாவ விகாரைக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 30 வயதுடைய ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறைமாதக் குழந்தைகள் பிறக்கக் காரணம் என்ன?

Baby

கர்ப்ப காலத்தில் தாய்க்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது கர்ப்ப கால நீரிழிவு, பனிக்குடம் உடைந்து கர்ப்ப வாய் திறந்து கொள்ளுதல், நோய் தொற்று ஏற்படுதல், கர்ப்பத்தில் இரட்டை குழந்தைகள் இருத்தல், செயற்கை முறையில் கருத்தரிப்புக்குள்ளான குழந்தைகள், குறைமாத குழந்தைகளாக பிறக்கின்றன.

முதல் பிரசவத்தில் தாய்க்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுதல் ஆகியவற்றால் இரண்டாவது பிரசவம் குறைபிரசவமாக வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, கருவை சுமந்திருக்கும் தாய், அவரது தாயின் வயிற்றில் வளர்ந்தபோது ஏதாவது கோளாறுகள் இருந்திருந்தாலும், குறைபிரவத்திற்கு வாய்ப்புண்டு.

முதல் பிரசவத்தில் குறைமாத குழந்தை பிறந்திருந்தால் இரண்டாவது பிரசவமும், அதேபோல் இருக்க வாய்ப்புகள் அதிகம். எனினும் காரணமே இல்லாமல் குறைமாதத்தில் குழந்தைகள் பிறப்பதுதான் அதிகமாக நடக்கிறது. குறைபிரசவத்தை எளிதில் தடுக்க முடியாது.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவை கட்டுக்குள் வைப்பதால் பிரசவ நாட்களை தள்ளிப்போட முடியும். குழந்தை குறைமாதத்தில் பிறந்தாலும் சரியான சிகிக்சையளித்தால் பெரும்பாலான குழந்தைகளை காப்பாற்ற முடியும்.

நுரையீரல் முதிர்ச்சியடையாமை, நோய்கிருமித் தாக்கம், மூளையில் ரத்த கசிவு, போன்றவையே, குறைமாத பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் இறக்க காரணமாகின்றன.

250,000 டொலர்கள் கட்டணத்துடன் விண்வெளிக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் விமானம்!!

VSS_Unity_Roll

விண்வெளிக்கு பயணிகளை அழைத்துச் செல்வதற்கான உரிமத்தை வெர்ஜின் கெலக்ட்டிக் (Virgin Galactic) நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான அனுமதியை அமெரிக்க விமான நிர்வாகத்துறை வழங்கியுள்ளது.

பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் இவ்விமானத்தில் 6 பேர் பயணிக்கலாம். ஒரு முறை விண்வெளிக்குச் சென்று வர 250,000 டொலர்கள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

விண்வெளிக்கு செல்வதற்காக இதுவரை 700 பேர் முன்பதிவு செய்துள்ளனர். விண்வெளி வாகனம் மேலும் சில சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அது அடுத்த ஆண்டு சேவையைத் தொடங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரம் வரை இந்த விண்வெளி வாகனம் செல்லும். இதற்குள் இருக்கும் பயணிகள் புவி ஈர்ப்பு விசை மாற்றத்தை உணரமுடியும்.

வவுனியா கோவில்குளம் அமிர்தவர்சினி தீர்த்தகரையில் இடம்பெற்ற ஆடி அமாவசை உற்சவம்!(படங்கள்)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில்  அமைந்துள்ள அமிர்தவர்சினி தீர்த்த  கரையில்   ஆடி அமாவசை  விரத தினமான  நேற்று தந்தையிழந்தவர்கள்  விரதமிருந்து  தங்களது பிதிர்கடன்களை  நிறைவேற்றும்  நிகழ்வு இடம்பெற்றது .

மேற்படி  நிகழ்வில் காலை முதல் பிற்பகல் வரையில்  நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தங்களது பிதிர்கடன்களை நிறைவேற்றியிருந்தனர்.

IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயம் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம்  ஈழத்து பழனி  முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று 02.08.2016 செவ்வாய்கிழமையன்று  ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ.வை.சிவசங்கரக்குருக்கள் தலைமையில்  கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியுள்ளது!

 

பத்து நாட்கள் அலங்கார  திருவிழாவாக  இடம்பெறும் மகோற்சவநிகழ்வுகள் தொடர்பாக அறிவதற்கு தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்!

13935102_1243591539018399_340422443961839978_n

1461000_1376160439305252_2057252807_n 13876343_1243591782351708_5100128480582989622_n 13882305_1243591735685046_7506806636815299987_n 13892045_1243591479018405_971900197718768692_n 13901410_1243591612351725_4922855045751805767_n 13902823_1243591672351719_5577123869625612303_n 13920682_1243591812351705_5753187899287809085_n 13921026_1243591942351692_1388208465738119234_n 13921119_1243591905685029_3633720331490094109_n 13932875_1243591869018366_8339984769331376586_n

வவுனியா தவசிகுளம் ஸ்ரீ பாலவிநாயகர் ஆலயத்தின் இரதோற்சவம் -(படங்கள்)

வவுனியா தவசிகுளத்தில்  அமைந்துள்ள   ஸ்ரீ பால விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா  நேற்றுமுன்தினம் 01.08.2016  திங்கட்கிழமையன்று இடம்பெற்றது.

மேற்படி தேர்த்திருவிழாவில் நூறுக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டதுடன் காவடி,கற்பூரசட்டி மற்றும் அடியடித்தல், அங்கபிரதட்சினம் என்பவற்றை செய்து பக்தர்கள் தங்களது நேர்த்திகடன்களை  நிறைவு  செய்திருந்தனர்.

13876388_1223824454303195_5188784667319761708_n

13876308_1223824560969851_8550158689109506440_n 13876308_1223824637636510_2353809832328499685_n 13876362_1223824517636522_4198558982525166260_n 13876388_1223824454303195_5188784667319761708_n 13882317_1223824404303200_2934484792202634387_n 13891999_1223824287636545_3388501114031681917_n 13892075_1223824330969874_3343059117382832546_n 13906913_1223824587636515_3737108825200967810_n 13912692_1223824697636504_4270480129279107511_n

 

வவுனியா‬ ‪கோவில்குளம்‬ ‪‬ அகிலாண்டேஸ்வரி அம்பாள்‬ ரூபாய் நோட்டு அலங்காரத்தில் ஆறாம் நாள் உற்சவம்!!(படங்கள்)

வவுனியா ‪கோவில்குளம் ‪அருள்மிகு ஸ்ரீ‪அகிலாண்டேஸ்வரி சமேத‪அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் ‪அம்பாள் உற்சவத்தின்‪‎ஆறாம்நாளான(01.08.2016)காலைமுதல்அபிசேகங்கள்‪‎மூலஸ்தான பூசை, ‪‎யாகபூசை, ‪‎கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினொரு  மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம்வந்து‪‎   சர்ப்ப வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.

மாலையில்   ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று  ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கபட்ட அகிலாண்டேஸ்வரி அம்பாள்‪‎ சர்ப்ப   வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.

IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF

வவுனியாவில் உயிருக்குப் போராடும் இளைஞன் : உறவுகளே உதவுங்கள்!!(அதிர்ச்சிக் காணொளி)

 
வவுனியா கணேசபுரத்தை வதிவிடமாக கொண்ட கணேசமூர்த்தி பரதன் என்பவர் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றார்.

நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான இவரை இவரது தாயார் மிகவும் வறுமையான நிலையிலும் கூலி வேலை செய்து படிக்கவைத்துள்ளார்.

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு அவசரமாக ஒரு சிறுநீரகத்தையாவது மாற்ற வேண்டிய நிலையுள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இம் மாற்றத்திற்கு இருபது லட்சம் (20,000,00) ரூபா பணம் தேவைப்படுகின்றது. அன்றாடம் கூலிவேலை செய்து வாழ்ந்துவரும் இவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். எனவே நல்லுள்ளம் கொண்டவர்கள் இவரது உயிர்காக்க உதவி செய்யுங்கள்.

பெயர் – க.நித்தியலட்சுமி
கணக்கிலக்கம்.- இலங்கை வங்கி வவுனியா கிளை : 8893380

தொலைபேசி இலக்கம் – 0776540354 , 0769467713

1 2 3 4 5 6 7

புகையிரதத்துடன் மோதி இளைஞன் பலி!!

12

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதுண்டு 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார் .
இந்த விபத்து மட்டக்களப்பில் இன்று அதிகாலை 4 மணியளவில் நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – புன்ன சோலையை சேர்ந்த இளைஞனே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார் .

உயிரிழந்தவரின் சடலம் பிரேதபரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

11

சிரியாவில் ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது : ஐவர் உயிரிழப்பு!!

russia

சிரியாவில் ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்ய இராணுவத்திற்கு சொந்தமான MI8 போக்குவரத்து ஹெலிகொப்டர், சிரியாவின் அலெப்போ நகரில் நிவாரணப் பொருட்களை விநியோகித்துவிட்டு திங்கட்கிழமை திரும்பிக் கொண்டிருந்த போது இத்லிப் மாகாணத்தில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

அதிலிருந்த 3 பணியாளர்களும், இரு இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் ஹெலிகொப்டர் வீழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக மிகவும் கவனமுடன் செயற்பட்டு குறித்த 5 பேரும் உயிர்த் தியாகம் செய்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார்.

வாய்க்காலில் ஆணொருவர் சடலமாக மீட்பு!!

Body

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அல்லிமுல்லை வயல் பகுதி வாய்க்கால் ஒன்றில் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நிந்தவூர் முதலாம் பிரிவை சேர்ந்த எல்.அஷ்ரப் (வயது- 42) என்பவரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவருக்கு அருகில் அவர் பயணித்த சென்ற VBI-2070 எனும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைத்தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

மிகவும் வேகமாக பயணித்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாக்கியதன் காரணமாகவே இவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மரணத்திலும் பிரியாத தோழிகள் தீமூட்டி தற்கொலை : காரணம் காதல்!!

Sucide

பதுளை – மடுல்சீமை – ரோபேரிவத்தை பகுதியில் உடலுக்கு தீ வைத்துக் கொண்டதாக கூறப்படும் இரு உறவுக்கார சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 17 வயதான இரு சிறுமிகளே பலியாகியுள்ளனர்.

இவர்களில் ஒருவர் இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பை பேணியுள்ளார். இந்த விடயம் அவரது தந்தைக்கு தெரியவர, அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதுவே, இவர்கள் தீக்குளிக்கக் காரணம் என தெரியவந்துள்ளதோடு, இதன்போது கடுமையான தீக்காயங்களுக்குள்ளான சிறுமி நேற்றே உயிரிழந்துள்ளார். மற்றையவர் இன்று காலை மரணமடைந்ததாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, இவர்களது சடலங்களின் பாகங்கள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. அத்துடன் மடுல்சீமை பொலிஸார் சம்பவம் குறித்து விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியாவில் நிர்மாணிக்கப்படும் சுற்றுலா மையங்களை பார்வையிட்ட மாகாண சுகாதார அமைச்சர்!!

 
வடக்கு மாகாண சபையின் சுற்றுலா மற்றும் கலாசார அபிவிருத்திக்கான நிதியில் வவுனியா மாவட்டத்தில் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இன்று (02.08) நேரடியாக சென்று பார்வையிட்டார்.

வவுனியா ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவிலுள்ள கல்நாட்டினகுளம் பகுதியில் அமைக்கப்படுகின்ற மருதநிலம் சுற்றுலா மையம் மற்றும் சிதம்பரபுரம் திருப்பழனி ஆலய யாத்திரிகர் ஓய்வு மண்டபம் மற்றும் கழிவறை கட்டுமானங்களின் முன்னேற்றம் தொடர்பில் களவிஜயத்தை மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டார்.

சுகாதார அமைச்சரின் வேண்டுகோளுக்கமைய 2015ம் ஆண்டில் மாகாண முதலமைச்சரினால் கல்நாட்டினகுளம் பகுதியில் காணப்படும் இயற்கையான கல்லுமலைப்பகுதியில் மருதமநிலம் எனும் சுற்றுலாமையத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகளுக்கு 2.0 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் ஆரப்பிக்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக இவ்வருட நிதியொதுக்கீட்டில் 5.1 மில்லியன் ரூபா செலவில் மேலதிக கட்டுமாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதே போன்று சிதம்பரபுரம் திருப்பழனி ஆலயத்திற்கு வருகைதரும் யாத்திரிகளின் நன்மைகருதி 1.2 மில்லியன் ரூபா செலவில் யாத்தரிகர் ஓய்வு மண்டபம் மற்றும் கழிவறைகள் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 tr-1 tr-3 tr4